Saturday, August 24, 2019

நபில் தொழுகைகள்


ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்


தொடர்:12

நபில் தொழுகைகள்

தஹஜ்ஜுத் தொழுகை

தஹஜ்ஜுத் தொழுகை, நபிலான தொழுகைகளில் அதிகப்படியான முக்கியத்துவமும் சிறப்பும் பெறுகிறது.
அபூஹுரைரா (ரளி) அவர்களின் அறிவிப்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்;

افضل الصلاة بعد الفريضة صلاة الليل

கடமையான தொழுகைகளில் அனைத்து விட சிறந்தது தஹஜ்ஜுத் எனும் இரவுத்தொழுகையாகும்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/99 பாடம்:باب ما جاء فی صلوة الليل )

இதனின் சிறப்பு குறித்து ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் அறிவிப்பு

قال رسول الله ﷺ انّ فی الجنة غرفًا تری ظهورهَا من بطونهَا و بطونهَا من ظهورهَا فقام اعرابيّ فقال لمن هي يا رسول الله ﷺ فقال لمن اطاب الكلام و اطعم الطعام و ادام الصيام و صلّٰی بالليل و الناس نيام

சுவனத்தில் உள்ளே உள்ளவை வெளியேயும்,வெளியில் உள்ளவை உள்ளேயும் காட்சியளிக்கக் கூடிய மாடங்கள் உள்ளன என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் ஒரு கிராமப்புற அரபி எழுந்து நின்று கேட்டார்.யா ரசூலுல்லாஹ்! இந்த மாடங்கள் யாருக்குரியது? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நல்லதை பேசுபவர், (ஏழைகளுக்கு)உணவு அளிப்பவர்,எப்பொழுதும் நோன்பு நோற்பவர்,மக்கள் தூங்கும் சமயம் இரவுத்தொழுபவர்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 2/19,தலைப்பு:باب مَا جاء فی قول المعروف)

தஹஜ்ஜுத் நேரம்

தஹஜ்ஜுத் நேரம் இரவின் பாதியிலிருந்து ஆரம்பமாகிறது.சுன்னத்தான முறையானது; இஷா தொழுது விட்டு உறங்கி எழுந்து தஹஜ்ஜுத் தொழவேண்டும். இவ்வாறுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரவுத்தொழுகையை குறித்து ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்;

كَانَ يَنَامُ اَوَّلهُ و يقوم اٰخرهُ فيُصلّیْ ثُمَّ يَرْجِعُ الی فراشه

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் ஆரம்ப பகுதியில் உறங்குவார்கள்.இரவின் கடைசியில் எழுந்து நின்று வணங்குவார்கள்.பிறகு படுக்கைக்கு திரும்புவார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/154,தலைப்பு:باب من نَام اول الليل و احي اٰخره ,ஸஹீஹ் முஸ்லிம் 1/255,தலைப்பு:باب صلوة الليل و عدد ركعات النبي ﷺ)

தஹஜ்ஜுத் தொழுகையின் எண்ணிக்கை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கத்தின் படி தஹஜ்ஜுத் தொழுகையின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடுகள் உள்ளது.நான்கு,ஆறு,எட்டு,
பத்துவரை அறிவிப்புகள் வந்துள்ளது.

عن عبد الله بن ابی قيس قال ساَلْتُ عائشة رضي الله عنها بكم كان رسول الله ﷺ يوتر قالت باربع و ثلاث و ست و ثلاث و ثمان و ثلاث ولم يكن يوتر باكثر من ثلاث عشرة ولا انقص من سبع

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் அவர்கள் கூறுகிறார்கள் நான் ஆயிஷா (ரளி) அவர்களிடத்தில் கேட்டேன்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை ரக்அத் வித்ர் (இரவுத்தொழுகை) தொழுவார்கள்? அன்னை அவர்கள் கூறினார்கள்; நான்கு மூன்றுடன்,ஆறு மூன்றுடன்,எட்டு மூன்றுடன் மேலும் அண்ணலாரின் வித்ரின் ரக்அத்துகள் (தஹஜ்ஜுத்துடன்)
பதின்மூன்றை விட அதிகமாகவும்,ஏழு விட குறைவாகவும் இருக்காது.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/200,தலைப்பு:باب فی صلوة الليل)

عن عائشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ يصلی من الليل تسع ركعات فيهنّ الوتر

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் ஒன்பது ரக்அத் தொழுவார்கள்.வித்ரும் அதில் உண்டு.

(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு ஹுஜைமா 1/577,ஹதீஸ் இலக்கம்:1167)

ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

انَّ رسول الله ﷺ  صلی بعد العتمة ثلاث عشرة ركعة

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷா தொழுகைக்கு பிறகு பதின்மூன்று ரக்அத்துகள் தொழுது கொண்டிருந்தார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு ஹுஜைமா1/576,
ஹதீஸ் இலக்கம்:1165)

குறிப்பு:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்சொன்ன ரக்அத்துகள் பலநேரங்களில் தொழுதது.
ஆனால் வழக்கம் எட்டு ரக்அத்துகள் தஹஜ்ஜுத் தொழுகையாக இருந்தது.


ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் நவின்றார்கள்;

مَا كان رسول الله ﷺ يزيد فی رمضان و لا فی غيره علی احدی عشرة ركعة

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானில், ரமளான் அல்லாத காலத்தில் பதினொன்று ரக்அத்துகளை விட அதிகமாக தொழவில்லை.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/154,தலைப்பு:باب قيام النبي ﷺ بالليل فی رمضان و غير ه ,ஸஹீஹ் முஸ்லிம் 1/254,தலைப்பு:باب صلوة الليل و عدد ركعات النبي ﷺ ,ஸுனனுன் நஸாயி 1/248,தலைப்பு:باب كيف الوتر بثلاث )

இஷ்ராக் தொழுகை


இஷ்ராக் தொழுகையின் நேரம் சூரியன் உதயமாகி பதினைந்து, இருபது நிமிடம் கழிந்த பிறகு ஆரம்பமாகும்.இரண்டு அல்லது நான்கு ரக்அத் தொழப்படும்.இதனின் நன்மை ஒரு ஹஜ் உம்ராவிற்கு சமமானது.

عن انس رضي الله عنه قال قال رسول الله ﷺ من صلی الفجر فی جماعة ثم قعد يذكر الله حتی تطلع الشمس ثم صلی ركعتين كانت له كاَجر حجة و عمرة قال قال رسول الله ﷺ تامّة تامة تامة

அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவர் பஜ்ரு தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுத பிறகு அல்லாஹ்வை திக்ரு செய்தவாறு சூரியன் உதயமாகும் வரை அமர்ந்துவிடுகிறார்.பிறகு இரண்டு ரக்அத் தொழுகிறார்.அவருக்கு ஒரு ஹஜ், உம்ராவின் நன்மைக்கு நிகரானவை உண்டு.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பூர்த்தியான' என்ற வார்த்தையை மூன்று தடவை நவின்றார்கள்.

(ஆதாரம்:ஸுனனுத்திர்மிதி 1/130,தலைப்பு:باب ما ذكر مما يستحب من الجلوس فی المسجد الخ ,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/178,தலைப்பு:الترغيب فی جلوس المرء فی مصلاه )




عن حسن بن عليّ رضي الله عنه قال قال رسول الله ﷺ من صلّی الفجر ثم قعد فی مجلسه يذكر الله عز وجلّ حتّی تطلع الشمس ثم قال فصلّی ركعتين حرّم الله علی النَّار ان تلحفه او تطعمه

ஹஸன் இப்னு அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் எவர் பஜ்ரு தொழுது தனது இடத்தில் சூரியன் உதயமாகும் வரை அமர்ந்து அல்லாஹ்வை திக்ரு செய்கிறார்.பிறகு அவர் இரண்டு ரக்அத் தொழுதால் நெருப்பு அவரை கரிப்பதை அல்லாஹ் தடைசெய்துவிட்டான்.

(ஆதாரம்:ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ 3/85, பிரிவு:فصلی  مشی الی المساجد ஹதீஸ் இலக்கம்:2958,ஜாமிஉல் அஹாதீஸ் லிஸ்ஸுயூத்தி 20/494,ஹதீஸ் இலக்கம்:22717)

ஹஜ்ரத் அபுஉமாமா (ரளி) அவர்கள் இதே கருத்தில் அறிவிக்கிறார்கள்

 ثم صلى  ركعتين و اربع ركعات

பிறகு அவர் இரண்டு ரக்அத் அல்லது நான்கு ரக்அத் தொழுதார்.

(ஆதாரம்:அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/178,الترغيب فی جلوس المرء فی مصلاه الخ )

லுஹா தொழுகை

லுஹா தொழுகையின் சிறப்பு


عن ابی الدرداء رضي الله عنه قال  قال رسول الله ﷺ من صلی الضحٰی ركعتين لم يكتب من الغافلين و من صلی اربعا كتب من العابدين و من صلی ستا كفي  ذلك اليوم و من صلی ثمانيا كتبه الله من القانتين و من صلی ثنتي عشرة بنی الله له بيتا فی الجنة

ஹள்ரத் அபுத்தர்தா (ரளி) கூறுகிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: லுஹா தொழுகை இரண்டு ரக்அத் தொழுதால், அவரின் பெயர் மறதியாளர்களில் எழுதப்படாது.நான்கு ரக்அத் தொழுதால், அவரின் பெயர் வணக்கசாலியில் எழுதப்படும்.ஆறு ரக்அத் தொழுதால்,அன்றைய நாள் அவருக்கு போதுமாக்கப்படும்.எட்டுரக்அத் தொழுதால்,வழிப்படுபவர்களில் அவரை அல்லாஹ் எழுதுகிறான்.பன்னிரெண்டு ரக்அத் தொழுதால் அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் வீட்டை கட்டுகிறான்.

(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் லில்ஹைஸமி 2/494,தலைப்பு:باب صلوة الضحٰی ,ஹதீஸ் இலக்கம்:3419)

عن بريدة رضي  الله عنه قال انّ  رسول الله ﷺ يَقُولُ: فِي اْلإِنْسَانِ ثَلثُمِائَةٍ وَسِتُّونَ مَفْصِلاً، فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهُ بِصَدَقَةٍ قَالُوا: وَمَنْ يُطِيقُ ذلِكَ يَانَبِيَّ اللهِ؟ قَالَ: النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ تَدْفِنُهَا، وَالشَّيْءُ تُنَحِّيهِ عَنِ الطَّرِيقِ، فَإِنْ لَمْ تَجِدْ فَرَكْعَتَا الضُّحَي تُجْزِئُكَ.


மனிதனுடைய உடம்பில் முந்நூற்று அறுபது இணைப்புகள் உள்ளன, ஒவ்வோர் இணைப்பும் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு தருமம் செய்வது அவன் மீது கடமை'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸூலல்லாஹ், இவ்வளவு தர்மம் யாரால் செய்ய இயலும்?' என்று ஸஹாபாக்கள் வினவினர். பள்ளிவாசலில் எச்சில் இருக்கக் கண்டால், அதை மண்ணில் புதைப்பது தர்மம். இடர் தரும் பொருட்களை வழியிலிருந்து அகற்றுவது தர்மம். இந்த காரியங்களைச் செய்யச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், ளுஹாவுடைய இரண்டு ரக்அத் தொழுவது இந்த தர்மங்கள் யாவற்றுக்கும் பகரமாக உமக்குப் போதுமாகிவிடும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஆதாரம்:அபூதாவூத்,தலைப்பு:باب اماطة الاذی فی الطريق , இலக்கம்:52)

லுஹா தொழுகையின் நேரம்

சூரியன் உதயமாகி ஒரு ஈட்டியின்  அளவு உயர்ந்தது முதல் லுஹா தொழலாம்.எனினும்,சிறந்தது பகல் பொழுதின் நான்கில் ஒரு பகுதி (மூன்றுமணி நேரம்) சென்ற பிறகு தொழுவது சிறந்தது.இவ்வாறுதான் ஹள்ரத் ஜைத் இப்னு அர்கம் (ரளி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்ட்டுள்ளது.

صلوة الاوّابين حين ترمض الفصال

ஜைத் இப்னு அர்கம் (ரளி) அவர்கள் லுஹா தொழுது கொண்டிருந்த ஒரு கூட்டாத்தாரைக் கண்டார்கள்.அப்போது இந்தத் தொழுகையை இந்நேரத்தில் அல்லாமல் வேறு நேரத்தில் தொழுவது சிறந்தது என இவர்கள் அறியவேண்டாமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுடுமணலில் ஒட்டகக்குட்டியின் கால் குழம்புகள் கரிந்துவிடும் நேரமே அவ்வாபீன் தொழுகையின் நேரமாகும் எனக் கூறினார்கள்.

(ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிம் 1/257,தலைப்பு:باب صلوة الليل و عدد ركعات النبي ﷺ الخ )

முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை கொண்டு பகலில் நான்கில் ஒரு பகுதியில் ஆரம்பமாகிறது என கூறுகிறார்கள்.

குறிப்பு:இந்த ஹதீஸின் மூலம் லுஹா தொழுகைக்கு அவ்வாபீன் என்றும் சொல்லப்படும் என அறியமுடிகிறது.


அவ்வாபீன் தொழுகை

மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு

ரக்அத் தொழுவது. ஹதீஸ்களில் இதற்கு அளப்பரிய நன்மை வந்துள்ளது.

عن ابي هريرة رضي الله عنه قال قال رسول اللهﷺ من صلی بعد المغرب ست ركعات لم يتكلم فيما فيهنَّ بسوء عدلن له بعبادة ثنتي عشرة سنة

அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் எவர் மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு ரக்அத் தொழுது அதற்கு மத்தியில் எந்த ஒரு தீமையை செய்யவில்லையோ அவருக்கு பன்னிரெண்டு வருடங்களின் வணக்கத்தின் நன்மை கிடைக்கும்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி1/98,
தலைப்பு:باب ما جاء فی فضل التطوع ست ركعات بعد المغرب ,இப்னு மாஜா 1/98 ,باب ما جاء فی الصلاة بين المغرب و العشاء , அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/227,الترغيب فی الصلوة بين المغرب و العشاء )

ஹள்ரத் அம்மார் இப்னு யாஸிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

رايت حبيب رسول الله ﷺ يصلی بعد المغرب ست ركعات و قال من صلی بعد المغرب ست ركعات غفرت له ذنوبه و ان كان مثل زبد البحر

நான் எனது ஹபீப் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்தேன்.மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு ரக்அத்துகள் தொழுவார்கள்.மேலும் கூறினார்கள்; யார் மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு ரக்அத்துகள் தொழுகிறாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்.

இந்த தொழுகைக்கும் அவ்வாபீன் என்று சொல்லப்படும்.இவ்வாறுதான் ஸஹாபாக்களின் வழிமுறையிலிருந்து  நிரூபணமாகியுள்ளது.

عن عبد الله بن عمر رضي الله عنه قال صلاة الاوابين ما بين ان ينكفت اهل المغرب الی ان يثوب الی العشاء

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது;
ஸலாதுல் அவ்வாபீன் நேரமானது மஃரிப் தொழுகையை முடித்த பிறகு இஷா வரையிலாகும்.

عن ابن عباس رضي الله عنه قال انَّ الملائكة لتحف بالذين يصلون بين المغرب الی العشاء و هي صلوة الاوبين

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; மஃரிப் இஷாவிற்கு மத்தியில் தொழுபவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றார்கள்.இது ஸலாதுல் அவ்வாபீன்

தஸ்பீஹ் தொழுகை

தஸ்பீஹ் தொழுகை மிகவும் முக்கியத்திற்குரியது.ஒரு ஸலாமுடன் நான்கு ரக்அத்துகளாகும்.ஒவ்வொரு ரக்அத்திலும் எழுபத்தைந்து தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று ஓதவேண்டும்.இதன் வழிமுறை ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது.

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ  لِلْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ يَا عَبَّاسُ يَا عَمَّاهُ : أَلَا أُعْطِيكَ ، أَلَا أَمْنَحُكَ ، أَلَا أَحْبُوكَ ، أَلَا أَفْعَلُ بِكَ ، عَشْرَ خِصَالٍ إِذَا أَنْتَ فَعَلْتَ ذَلِكَ ، غَفَرَ اللَّهُ لَكَ ذَنْبَكَ أَوَّلَهُ وَآخِرَهُ قَدِيمَهُ وَحَدِيثَهُ خَطَأَهُ وَعَمْدَهُ صَغِيرَهُ وَكَبِيرَهُ سِرَّهُ وَعَلَانِيَتَهُ ، عَشْرَ خِصَالٍ أَنْ تُصَلِّيَ أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ فَاتِحَةَ الْكِتَابِ وَسُورَةً ، فَإِذَا فَرَغْتَ مِنْ الْقِرَاءَةِ فِي أَوَّلِ رَكْعَةٍ ، وَأَنْتَ قَائِمٌ قُلْتَ : سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ خَمْسَ عَشْرَةَ مَرَّةً ، ثُمَّ تَرْكَعُ ، فَتَقُولُهَا وَأَنْتَ رَاكِعٌ عَشْرًا ، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ مِنْ الرُّكُوعِ ، فَتَقُولُهَا عَشْرًا ، ثُمَّ تَهْوِي سَاجِدًا ، فَتَقُولُهَا وَأَنْتَ سَاجِدٌ عَشْرًا ، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ مِنْ السُّجُودِ ، فَتَقُولُهَا عَشْرًا ، ثُمَّ تَسْجُدُ فَتَقُولُهَا عَشْرًا ، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ ، فَتَقُولُهَا عَشْرًا ، فَذَلِكَ خَمْسٌ وَسَبْعُونَ فِي كُلِّ رَكْعَةٍ ، تَفْعَلُ ذَلِكَ فِي أَرْبَعِ رَكَعَاتٍ ، إِنْ اسْتَطَعْتَ أَنْ تُصَلِّيَهَا فِي كُلِّ يَوْمٍ مَرَّةً ، فَافْعَلْ فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ جُمُعَةٍ مَرَّةً ، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ شَهْرٍ مَرَّةً ، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ سَنَةٍ مَرَّةً ، فَإِنْ لَمْ تَفْعَلْ ، فَفِي عُمُرِكَ مَرَّةً


அப்பாஸ் (ரளி) அவர்களை நோக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எனது பெரிய தந்தையே! உங்களைச்சேர்த்து நடக்கட்டுமா? உங்களுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்குப் பிரயோசனம் அளிக்கட்டுமா? எனக் கேட்டார்கள். ஆம் அழ்ழாஹ்வின் தூதரே! என கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் எனது பெரிய தந்தையே! நான்கு ரக்அத்துக்கள் தொழுங்கள். ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாதிஹாவையும், மற்றொரு ஸூராவையும் ஓதிக்கொள்ளுங்கள். ஓதல் முடிந்ததும் அல்லாஹு அக்பர், வல்ஹம்துலில்லாஹ், வஸுப்ஹானல்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ் என ருகூஃ செய்வதற்கு முன்னர் பதினைந்து முறை கூறுங்கள், பின்னர் ருகூஃ செய்து அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் ஸுஜுது
 செய்து அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனைப் பத்துமுறை கூறுங்கள், பின்னர் இரண்டாம் முறை ஸுஜூது செய்து அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் உங்களது தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னர் அதனைப் பத்து முறை கூறுங்கள். அது ஒவ்வொரு ரக்அத்திலும் எழுபத்தி ஐந்து விடுத்தமாகும். அது நான்கு ரக்அத்துக்களில் முன்நூறு விடுத்தமாகும். உங்களது பாவம் அடர்ந்த மணலினளவு இருந்தாலும் அவற்றை அல்லாஹ் உங்களுக்கு மன்னித்துவிடுவான் எனக் கூறினார்கள். (அதற்கு அப்பாஸ் (ரளி) அவர்கள் ஒரு நாளையிலே அவற்றைச் செய்ய யாருக்குத்தான் முடியும்? எனக் கேட்டார்கள். (அதற்கவர்கள்) ஒவ்வொரு நாளும் உங்களால் செய்ய முடியாவிட்டால் வெள்ளிக் கிழமையில் ஒருமுறை செய்யுங்கள், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உங்களால் செய்யமுடியாவிட்டால் மாதத்தில் ஒரு முறை செய்யுங்கள்,
வருடத்தில் ஒரு முறையாவது செய்யுங்கள் எனும் அளவுவரை அதனைக் கூறிக்கொண்டே இருந்தார்கள்.

(ஆதாரம்: அபூதாவூத் 1/190 பாடம்:باب صلوة التسبيح ,ஜாமித்திர்மிதி 1/109,பாடம்:باب ماجاءَ فی صلوة التسبيح ,ஸுனன் இப்னுமாஜா 1/99,பாடம்:باب مَا جاء فی صلوة التسبيح ,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/268,الترغيب فی صلوة التسبيح )

தஸ்பீஹ் தொழுகையின் மற்றொரு வழிமுறையும் அறிவிப்பில் உள்ளது.ஸனாவிற்கு பிறகு பதினைந்து தடவை தஸ்பீஹ் ஓதவேண்டும்.பிறகு ருகூவிற்கு முன்பாக,முதல் ருகூவின் நிலையில், ருகூவிற்கு பிறகு,முதல் ஸஜ்தாவில்,ஸஜ்தாவிற்கு பிறகு அமரும் போது,பிறகு இரண்டாவது ஸஜ்தாவில் பத்து பத்து தடவை பிறகு இரண்டாவது ஸஜ்தாவிற்கு அமராமல் எழுந்துவிடவேண்டும்.மீதி அதே முறையில்தான்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/109,பாடம்:مَا جاء فی صلوة التسبيح ,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/269,الترغيب فی صلوة التسبيح )

இரண்டு முறையில் எதனை வேண்டுமானாலும் அமல் செய்யலாம்.எனினும்,ஒவ்வொரு ரக்அத்தில் எழுபத்தைந்து முறை தஸ்பீஹ் ஓதவேண்டும் என்பதை கவனித்தில் கொள்ளவேண்டும்.

ஸலாதுல் ஹாஜத் (தேவை நிறைவேற தொழுகை)

அடியானுக்கு அவசிய தேவை வந்தால், நல்ல முறையில் உளுச்செய்து,அவர் இரண்டு ரக்அத் தொழுகவேண்டும்.பிறகு, அல்லாஹ்வை புகழ்ந்து,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதி,அடக்கத்துடன் இயலாமையை வெளிப்படுத்தி மனஓர்மையுடன் துஆ செய்தால் அல்லாஹ் நிச்சயம் நமது தேவையை நிறைவேற்றுவான்.

ஹதீஸ்களில் வந்துள்ளது

عبد الله بن أبي أوفى أن النبي صلى الله عليه وسلم قال: من كانت له حاجة إلى الله تعالى أو إلى أحد من بنى آدم فليتوضأ وليحسن وضوءه ثم ليصل ركعتين ثم ليثن على الله تعالى ويصل على النبي صلى الله عليه وسلم وليقل: (لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين. أسالك موجبات رحمتك وعزائم مغفرتك والعصمة من كل ذنب والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنباً إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين)

அப்துல்லாஹ் இப்னு அபீஅவ்ஃபா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, "லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வஅஸாயிம மக்ஃபிரதிக. வல்கனீமத மின் குல்லி பிர்ரின் வஸ்ஸலாமத்த மின் குல்லி இஸ்மின் லாததஃலீ தன்பன் இல்லா கஃபர்தஹு வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா யா அர்ஹமர் ராஹிமீன்' என்று கூறட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி,1/108,பாடம்:باب مَا جَاء صلوة الحَاجة ,ஸுனன் இப்னுமாஜா 1/98,பாடம்:باب مَا جاء فی صلوة الحَاجة அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில் முன்திர் 1/273,الترغيب فی صلوة الحَاجة و دعائها )

ஹள்ரத் அபுத்தர்தா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

اني سمعت رسول الله ﷺ يقول من توضا فاسبغ الوضوء ثم صلی ركعتين يتمهما اعطاه الله ما سال معجلا او مؤخرا

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறுவதை கேட்டேன்; எவர் நல்ல முறையில் உளூச்செய்து பிறகு உள்ளச்சத்துடன் பணிவுடன் இருரக்அத்துகள் தொழுதால் அல்லாஹுதஆலா அவரின் வேண்டுதலை விரைவாகவோ அல்லது தாமதமாகவோ நிறைவேற்றுவான்.

(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல் 18/568,ஹதீஸ் எண் 27370,ஙாயதுல் மக்ஸத் ஃபீ ஜவாயிதில் முஸ்னத் லில்ஹைஸமி 1/1362,பாடம்:صلوة الحَاجة )

தஹிய்யத்துல் உளூ

தஹிய்யத்துல் உளூ இரண்டு ரக்அத்துகளாகும்.உளுவிற்கு பிறகு தொழவேண்டும்.ஹதீஸ்களில் இது குறித்து ஏராளமான சிறப்புகள் வந்துள்ளது.

عن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : " أَنَّ النَّب

ِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ عِنْدَ صَلاَةِ الفَجْرِ  يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ  قَالَ: " مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي : أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا ، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ " .
دف نعليك : يعني حركة نعليك وصوتهما في الأرض .

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

   ஒரு நாள் பஜ்ருத் தொழுகை நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களிடம், பிலால்! நீர் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து அதிகமான நன்மை கிடைக்குமென எந்த அமலின் மீது ஆதரவு வைக்கிறீர்? ஏனேனில், சுவர்க்கத்தில் எனக்கு முன்னால் உமது பாத அணிகலன்களின் சப்தத்தை நேற்றிரவு கனவில் நான் கேட்டேன்'' என்று கேட்டதற்கு எனது அமல்களில் அதிக நன்மைகளுக்குரியது என நான் ஆதரவு வைப்பது, இரவிலோ, பகலிலோ எப்பொழுது உளூச் செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு அந்த நேரத்தில் அல்லாஹ் நல்லுதவி செய்யுமளவு தவறாமல் தஹியத்துல் உளூ இரண்டு ரக்அத் தொழுதுவிடுவேன் இதுதான் என்னுடைய அமல்களில் அதிக ஆதரவு கொள்ளத் தக்கது'', என்று ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/154,பாடம்:باب فضل الطهور بالليل و النهار ,ஸஹீஹ் முஸ்லிம் 2/292,பாடம்:باب من فضائل ام سليم ام انس بن مالك و بلال ,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில் முன்திரி 1/106,الترغيب فی ركعتين بعد الوضوء)

عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله ﷺ  مامن مسلم يتوضا فيحسن وضوءه ثم يقوم فيصلی ركعتين مقبل عليهما بقلبه و وجهه الا وجبت له الجنة


உக்பதுப்னு ஆமிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;           ஒரு முஸ்லிம் நல்லமுறையில் உளூச்செய்து  அகத்தையும்,முகத்தையும் ஒருமுகப்படுத்தி,முழுமையான கவனத்துடன் இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவனம் கட்டாயம் கிடைக்கும்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/122,பாடம்:باب الذكر المستحب عقب الوضوء ,ஸுனன் நஸாயி 1/36,பாடம்:باب ثواب من احسن الوضوء ثم صلی ركعتين )

عن زيد بن خالد الجهنيّ رضي الله عنه ان النبي ﷺ قال من توضا فاحسن وضوءه ثم صلی ركعتين لا يسهو فيهما غفر له ما تقدم من ذنبه

ஜைத் இப்னு காலிதில் ஜுஹைனி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;   யார் நல்லமுறையில் உளூச்செய்து பிறகு கவனக்குறைவின்றி இரண்டு ரக்அத் தொழுதால் அவரின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/138,பாடம்:باب الكراهية الوسوسة و حديث النفس فی الصلوة ,ஷரஹுஸ்ஸுன்னா லில்பஙவி 2/524,பாடம்:باب فضل من تطهر فصلی عليه ,ஹதீஸ் இலக்கம்:1008,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/106,الترغيب فی ركعتين بعد الوضوء )

தஹிய்யத்துல் மஸ்ஜித்

முஸ்லிம் மஸ்ஜிதில் நுழைந்தால் அமர்வதற்கு முன்பாக இரண்டு ரக்அத் தொழுவது விரும்பத்தக்கது.எனினும், மக்ரூஹான நேரமாக இருக்ககூடாது.

عن ابي قتادة السلمي رضي الله عنه انّ رسول الله ﷺ قال اذا دخل احدكم المسجد فليركع ركعتين قبل ان يجلس

அபூகதாதா அஸ்ஸலமி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்; உங்களில் ஒருவர் மஸ்ஜிதில் நுழைந்தால் அமர்வதற்கு முன்பாக இரண்டு ரக்அத் தொழட்டும்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/63,பாடம்:باب اذا دخل احدكم المسجد فليركع ركعتين ,ஸஹீஹ் முஸ்லிம் 1/248,பாடம்:باب استحباب تحية المسجد بركعتين )

இஸ்திகாரா தொழுகை

ஏதேனும் காரியம் வருகிறது.அதனை செய்வது, விடுவதில் தடுமாற்றம் ஏற்படுகிறது.அல்லது அதனை செய்யலாமா? அல்லது வேண்டாமா? என முடிவு எடுக்கமுடியவில்லை.விரைவாக செய்யலாமா? அல்லது தாமதப்படுத்தி செய்யலாமா? அவர் இரண்டு ரக்அத் தொழுது, இஸ்திகாரா துஆ செய்த பிறகு அவரின் உள்ளம் எதன்பக்கம் சாய்கிறதோ அதனையே தேர்ந்தெடுக்கவும்.

عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا الاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنْ الْقُرْآنِ يَقُولُ : إذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلْ :

( اللَّهُمَّ إنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ , وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ , وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلا أَقْدِرُ , وَتَعْلَمُ وَلا أَعْلَمُ , وَأَنْتَ عَلامُ الْغُيُوبِ , اللَّهُمَّ إنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ (هنا تسمي حاجتك ) خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ : عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ , فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ , اللَّهُمَّ وَ

إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ (هنا تسمي حاجتك ) شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ : عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ , فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ ارْضِنِي بِهِ . وَيُسَمِّي حَاجَتَهُ  وَفِي رواية  ثُمَّ رَضِّنِي بِهِ

ஜாபிர் (ரளி) அவர்கள் கூறியதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனில் உள்ள சூராக்களை கற்றுக்கொடுப்பது போன்று அனைத்து காரியங்களில் இஸ்திகாரா கற்றுக்கொடுத்தார்கள்.உங்களில்  எவரேனும் காரியம் செய்ய நாடினால் இரண்டு ரக்அத் (இஸ்திகாரா) தொழுங்கள் பிறகு துஆ செய்யுங்கள்
பொருள்:

யா அல்லாஹ்! உன்னுடைய அறிவின் பொருட்டால் நான் உன்னிடம் நன்மையை வேண்டுகிறேன். உனது ஆற்றலின் பொருட்டால் உன்னி;டம் ஆற்றலைத் தேடுகிறேன்.உன்னுடைய மகாத்தான அருளிலிருந்து உன்னிடம் நான் கேட்கிறேன். நிச்சயமாக நீ(எல்லாப் பொருட்களின் மீதும்) ஆற்றல் பெறுவாய். நான் (எதற்கும்) ஆற்றல் பெற மாட்டேன். நீ (அனைத்தையும்) அறிந்துள்ளாய். நான் (எதனையும்) அறிய மாட்டேன். நீ மறைவானவற்றை நன்கு அறிந்தவனாய் இருக்கிறாய். யா அல்லாஹ்! இந்த செயல் எனக்கு என்'னுடைய தீனிலும் என்னுடைய வாழ்விலும் என் செயலின் முடிவிலும் நன்மையாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதற்கு எனக்கு நீ ஆற்றலளித்து அதனை எனக்கு எளிதாக்கி வைத்து, பிறகு அதில் எனக்கு நீ பரக்கத்துச் செய்வாயாக!  இந்தச் செயல் எனக்கு என்னுடைய தீனிலும் என்னுடைய வாழ்விலும் என் செயலின் முடிவிலும் தீமையாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதனை என்னை விட்டும் நீ திருப்பிவிடுவாயாக! என்னையும் அதனை விட்டும் திருப்பி விடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதனைச் செய்ய எனக்கு ஆற்றலளிப்பாயாக! பிறகு அதனைக் கொண்டு என்னைப் பொருந்திக் கொள்ளச் செய்வாயாக!

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/155 தலைப்பு:باب مَا جاء فی التطوع مثنی مثنی ,ஸுனன் அபூதாவூத் 1/222,தலைப்பு:باب فی الاستخارة ,ஜாமிஉத்திர்மிதி 1/109,தலைப்பு:باب ما جاء فی صلوة الاستحارة )

தவ்பா தொழுகை

எவரேனும் பாவம் செய்துவிட்டால் அவர் நல்லமுறையில் உளூசெய்து இரண்டு ரக்அத் தொழுது தவ்பா செய்யவேண்டும்.மேலும் அல்லாஹ்விடம் தனது பாவங்களை மன்னிக்கும்படி வேண்ட வேண்டும்.

عن أبي بَكْرٍ الصديق رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا فَيُحْسِنُ الطُّهُورَ ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ ، ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ ، ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَةَ : "وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை கேட்டதாக ஹள்ரத் அபூபக்கர் ஸித்திக் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் எவரேனும் அடியானிடத்தில் பாவம் வெளிப்பட்டால் அவர் உளூசெய்து (இரண்டு ரக்அத்) தொழுது அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடினால் அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னிப்பான்.பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வசனத்தை ஓதினார்கள் அதனின் பொருள் இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டால்,அல்லது தமக்குதாமே அநியாயம் செய்து கொண்டால்,உடனே அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூர்ந்து,தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புத் தேடிக்கொள்வார்கள்;
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் அறிந்து கொண்டே தாம் செய்திட்ட (பாவத்)தின் மீது நிலைத்திருக்கமாட்டார்கள்.
(ஆல இம்ரான் 135)

(ஆதாரம்: ஜாமிஉத்திர்மிதி 1/92,பாடம்:باب مَا جاء فی الصلوة عند التوبة ,சுனன் இப்னு மாஜா 1/100,பாடம்:باب مَا جاء فی ان الصلوة كفارة)

பிரயாண தொழுகை

பிரயாணம் புறப்படும் நேரத்திலும் திரும்பி வரும் போது இரண்டு ரக்அத் தொழுவது முஸ்தஹப்.

عن المطعم ابن المقدام رضي الله عنه قال قال رسول الله ﷺ مَا خلف عبد علی اهله افضل من الركعتين يركعهما عندهم حين يريد السفر

ஹள்ரத் முத்இம் இப்னு மிக்தாம் ( ரளி) அவர்கள்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை கூறுகிறார்கள்; அடியான் பிரயாணத்தை நாடும் பொழுது இரண்டு ரக்அத் தொழுவதானது அவனின் குடும்பத்தாரிடம் அதனை விட சிறந்த ஒன்றை விட்டு செல்லவில்லை.

(ஆதாரம்:முஸன்னஃப் இப்னு அபீஷைபா 3/552,553, الرجل يريد السفر الخ இலக்கம்:4914)

عن علي رضي الله عنه قال اذا خرجت فصل ركعتين

அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; பிரயாணத்திற்கு புறப்படும் பொழுது இரண்டு ரக்அத் தொழுங்கள்

(ஆதாரம்:முஸன்னஃப் இப்னு அபீஷைபா 3/553,الرجل يريد السفر ,இலக்கம்:4915)

عن ابن مسعود رضي الله عنه قال جاء رجل الی النبي ﷺ فقال يا رسول الله اني اريد ان اخرج الی البحرين فی تجارة

فقال رسول الله ﷺ صل ركعتين


இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து கூறினார் யாரசூலல்லாஹ் ﷺ வியாபாரத்திற்காக பஹ்ரைன் செல்ல நாடுகிறேன்.அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இரண்டு தொழுது கொள்ளுங்கள்

(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் 2/572,பாடம்:باب الصلوة اذا اراد سفرا,  ஹதீஸ் இலக்கம்:3684)

عن كعب بن مالك رضي الله عنه انّ رسول الله ﷺ كان لا يقدم من سفر الا نهارا فی الضحی فاذا قدم بدء بالمسجد فصلی فيه  ركعتين ثم جلس فيه

கஃப் இப்னு மாலிக் (ரளி) அவர்கள் கூறியதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கேனும் பயணம் சென்றால் முற்பகல் நேரத்தில்தான் திரும்புவார்கள்.அவ்வாறு திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுப் பிறகு பள்ளிவாசலில் அமருவார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/248,பாடம்:باب استحباب ركعتين فی المسجد لمن قدم من سفر )

عن ابی هريرة رضي الله عنه عن النبي ﷺ قال اذا دخلت منزلك فصل ركعتين تمنعانك مدخل السوء و اذا خرجت فصل ركعتين تمنعانك مخرج السوء

ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;

  உனது வீட்டில் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழுது கொள். கெடுதி நுழைவதை விட்டும் உன்னை அவை தடுக்கும்.
பயணம் புறப்பட்டால் இரண்டு ரக்அத் தொழுது கொள்
வெளியின் கெடுதியை விட்டு உன்னை அவை தடுக்கும்.

(ஆதாரம் மஜ்மஉஜ்ஜவாயித் 2/572,பாடம்:باب الصلوة اذا دخل منزله ,ஹதீஸ் இலக்கம்:3686)

மழைத்தொழுகை

மழை பெய்யவில்லையெனில் இரண்டு ரக்அத் மழைத்தொழுகை தொழவேண்டும்.சில சமயங்களில் துஆ மட்டும் கேட்கலாம்.ஹதீஸ்களில் இரண்டு வழிமுறைகளும் வந்துள்ளது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ  ، قَالَ : أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ  النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَبَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي يَوْمِ جُمُعَةٍ قَامَ أَعْرَابِيٌّ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ فَادْعُ اللَّهَ لَنَا ، "  فَرَفَعَ يَدَيْهِ وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً فَوَالَّذِي  نَفْسِي بِيَدِهِ مَا وَضَعَهَا حَتَّى ثَارَ السَّحَابُ أَمْثَالَ الْجِبَالِ ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ وَمِنَ الْغَدِ وَبَعْدَ الْغَدِ وَالَّذِي يَلِيهِ حَتَّى الْجُمُعَةِ الْأُخْرَى وَقَامَ ذَلِكَ الْأَعْرَابِيُّ أَوْ قَالَ غَيْرُهُ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ فَادْعُ اللَّهَ لَنَا ، فَرَفَعَ يَدَيْهِ فَقَالَ : اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا ، فَمَا يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّحَابِ إِلَّا انْفَرَجَتْ وَصَارَتْ الْمَدِينَةُ مِثْلَ الْجَوْبَةِ وَسَالَ الْوَادِي قَنَاةُ شَهْرًا وَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلَّا حَدَّثَ بِالْجَوْدِ "

ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ‘ தாருல்களா’ என்ற வாசல் வழியாக ஒருவர் பள்ளியினுள்; வந்தார். நின்;றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, ‘ இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ஸல்ஃ எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது). அப்போது அம்மலைக் குப் பின்புற மிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்க வில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன, பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப் புறங் களில் (இம் மழையைப் பொழியச் செய்வா யாக!), எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம் மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/138,தலைப்பு:باب الاستسقاء علی المنبر ,ஸஹீஹ் முஸ்லிம் 1/293,பாடம்:كتاب صلوة الاستسقاء )




عن عباد ابن تميم عن عمه (عبد الله بن زيد ) قال خرج النبي ﷺ الی المصلی يستسقي و استقبل القبلة فصلی ركعتين و قلب ردائه

அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மளைத்தொழுகைக்காக ஈத்காஹ் திடலுக்கு செல்வார்கள்.கிப்லாவின் பக்கம் முன்னோக்குவார்கள்.இரண்டு ரக்அத் தொழுகை நடத்தினார்கள்.தனது போர்வையை புரட்டிப்போடுவார்கள்.(கருத்து:வலது புறத்தை இடது தோள்புஜத்தின் மீதும் இடது புறத்தை வலது தோள்புஜத்தின் மீது மாற்றுவார்கள்)

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/140,பாடம்:باب الاستسقاء فی المصلی, ஸஹீஹ் முஸ்லிம் 1/293,صلوة الاستسقاء)

Wednesday, August 7, 2019

இரு பெருநாட்கள் தொழுகை முறை


ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்

தொடர்:11

                      இரு பெருநாட்கள்

இரு பெருநாட்களின் தொழுகை முஸ்லிம்களுக்கு சந்தோஷத்தை மகிழ்ச்சியை அளிக்க பரிசுத்தமான மார்க்கம் இரு பெருநாட்களை மார்க்கமாக்கியுள்ளது.ரமளானுக்கு பிறகு ஈதுல் பித்ர்,துல்ஹஜ் 10 ஆம் நாளன்று ஈதுல் அள்ஹா இந்த இரு சந்தர்ப்பங்களிலும் ஈத் தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் முஸ்லிம்கள் சந்தோஷம் கவலையில் அல்லாஹ்வை மறந்துவிடக்கூடாது.

ஈத் தொழுகையின் வழிமுறை 

   இரு பெருநாட்களில் இரு ரக்அத்தில் அதிகப்படியான ஆறு தக்பீருகளுடன் தொழுகை நிறைவேறப்படும்.முதல் ரக்அத்தில் ஸனாவிற்கு பிறகு கிராஅத்திற்கு முன்பாக மூன்று தக்பீர்கள்,இரண்டாவது ரக்அத்தில் கிராஅத்திற்கு பிறகு மூன்று தக்பீர்கள்.

 முதல் ரக்அத்தில் அதிகப்படியான தக்பீர்கள் கூறும் போது கைகளை காதுவரை உயர்த்தி விட்டுவிடவேண்டும்.மூன்றாவது தக்பீருக்கு பிறகு கைகளை  கட்டிக்கொள்ளவேண்டும்.
இரண்டாவது ரக்அத்தில் பாத்திஹா துணைசூராவிற்கு பிறகு  மூன்று அதிகப்படியான தக்பீருடன்  நான்காவது தக்பீர் கூறி ருகூவிற்கு செல்லவேண்டும்.

முதல் ரக்அத்தில் தக்பீர் தஹ்ரீமாவுடன்  அதிகப்படியான தக்பீர் சேர்த்து நான்கு தக்பீர்களாகும்.இரண்டாவது ரக்அத்தில் மூன்று அதிகப்படியான தக்பீர்களுடன் ருகூவின் தக்பீரையும் சேர்த்து நான்கு தக்பீர்களாகும்.

ان سعيد بن العاص رضي الله عنه سال اباموسی الاشعري و حذيفة بن اليمان رضي الله عنه كيف كان رسول الله ﷺ يكبر فی الاضحی و الفطر فقال ابوموسی رضي الله عنه كان يكبر اربعا تكبيرة علی الجنائز فقال حذيفة رضي الله عنه صدق فقال ابوموسی كذلك كنت اكبر فی البصرة حيث كنت عليهم


ஹள்ரத் ஸயீத் இப்னுல் ஆஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;

   அபூமூஸா (ரளி)மற்றும் ஹுதைஃபதுல் யமான் (ரளி) அவர்களிடத்தில் கேட்டேன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈதுல் பித்ர் ஈதுல் அள்ஹா இரு பெருநாட்களிலும் எத்தனை தக்பீர்கள் கூறினார்கள்? அதற்கு ஹள்ரத் அபூமூஸா (ரளி) அவர்கள் பதிலளித்தார்கள் ஜனாஸாவின் தக்பீரை போன்று  நான்கு தக்பீர். ஹள்ரத் ஹுதைஃபா (ரளி) அவர்கள் அதனை உண்மைப்படுத்தினார்.ஹள்ரத் அபூமூஸா (ரளி) அவர்கள் கூறினார்கள்  நான் பஸராவின் கவர்னராக இருந்தபோது அங்கும் இவ்வாறுதான் தக்பீர் கூறிக்கொண்டு இருந்தேன்.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/170 , தலைப்பு: باب التكبير فی العيدين, அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 3/289, தலைப்பு:باب ذكر الخبر الذی روی فی التكبير اربعا )

عن القاسم ابی عبد الرحمن قال حدثني بعض اصحاب  رسول الله ﷺ قال صلی بنا النبي ﷺ يوم عيد فكبر اربعا و اربعا ثم اقبل علينا بوجهه حين انصرف فقال لا تنسوا كتكبير الجنائز و اشار باصبعه و قبض ابهامه


அபூஅப்துர்ரஹ்மான் காஸிம் அவர்கள் கூறினார்கள்;

   எனக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் சிலர் கூறினார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஈத்தொழவைத்து நான்கு நான்கு தக்பீர் கூறினார்கள்.தொழுகையை முடித்த போது எங்களின் பக்கம் முன்னோக்கி கூறினார்கள் மறந்துவிடாதீர்கள் ஜனாஸா தொழுகையை போன்று தக்பீர்களாகும்.அன்னார் அவர்கள் தனது விரல்களால் சுட்டிகாட்டினார்கள். கட்டைவிரலை மூடிக்கொண்டார்கள்.

(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 2/371, தலைப்பு:باب صلوة العيدين كيف التكبير فيها)

ஹஜ்ரத் உமர் (ரளி) அவர்களின் ஆட்சிகாலத்தில் ஜனாஸாவின் தக்பீர் எண்ணிக்கை குறித்து கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டது.நான்கு,ஐந்து,ஏழு அன்னார் அவர்கள் அனைத்து ஸஹாபாக்களையும் ஒன்றுதிரட்டி ஒருமித்த கருத்தை எடுத்தனர்.


فاجمعوا امرهم علی ان يجعلوا التكبير علی الجنائز مثل التكبير فی الاضحی و الفطر اربع تكبيرات فاجمع امرهم علی ذلك

இரு பெருநாட்களின் தக்பீர்களை போன்று ஜனாஸாவின் தக்பீர்களும் நான்கு என்பதாக அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்தை எடுத்தார்கள்.

(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/319, தலைப்பு:باب التكبير علی الجنائز کم هو )


عن علقمة و الاسود بن يزيد قالا كان ابن مسعود رضي الله عنه جالسا و عنده حذيفة و ابوموسی رضي الله عنه فسالهم سعيد بن العاص رضي الله عنه عن التكبير فی الصلوة يوم الفطر و الاضحی .......  قال له حذيفة رضي الله عنه سل هذا لعبد الله بن مسعود رضي الله عنه فساله فقال ابن مسعود رضي الله عنه يكبر اربعا ثم يقرا ثم يكبر فيركع ثم يكبر فی الثانية فيقرا ثم يكبر اربعا بعد القراءة


அல்கமா,அஸ்வத் இப்னு யஜீத் அவர்கள் கூறுகிறார்கள்;

   அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.அவர்களுக்கு அருகில் ஹுதைபா (ரளி), அபூமூஸா (ரளி)  அவர்கள் இருவரும் இருந்தார்கள்.ஸயீத் இப்னுல் ஆஸ் (ரளி) அவர்கள் ஈதுல் பித்ர் ஈதுல் அள்ஹா தொழுகையின் தக்பீர் குறித்து அவர்களிடத்தில் கேட்டார்கள்.அதற்கு ஹள்ரத் ஹுதைபா (ரளி) அவர்கள்   இதனை குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்களிடத்தில் கேளுங்கள் என்றார்கள். அவர்கள் அன்னாரிடத்தில் கேட்டார்கள்.அதற்கு இப்னு மஸ்ஊத் (ரளி) கூறினார்கள்; நான்கு தக்பீர் கூறட்டும்! பிறகு கிராஅத் ஓதட்டும் பிறகு தக்பீர் கூறி ருகூஉ செய்யட்டும் பிறகு அடுத்த ரக்அத்தில் தக்பீர் கூறி கிராஅத்

ஓதி பிறகு கிராஅத்திற்கு பிறகு நான்கு தக்பீர் கூறவேண்டும்.

(ஆதாரம்:அல்முஃஜமுத்தப்ரானி லித்தப்ரானி 4/593, ஹதீஸ் இலக்கம்:9402, முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக் 3/167,தலைப்பு:باب التكبير فی الصلوة يوم العيد ஹதீஸ் இலக்கம்:5704)

ஈத் தொழுகையில் இரு குத்பாக்கள்

عن عامر بن سعد عن ابيه ان النبي ﷺ صلی العيد بغير اذان و لا اقامة و كان يخطب خطبتين قائما يفصل بينهما بجلسة

ஹள்ரத் ஆமிர் இப்னு ஸஃத் அவர்கள் தனது தந்தை ஹள்ரத் காலித் இப்னு வலீத் (ரளி) அறிவிக்கிறார்கள்;

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈத் தொழுகைக்கு பாங்கு இகாமத் இன்றி தொழவைத்தார்கள்.அன்னார் அவர்கள் நின்ற நிலையில் இரு குத்பாக்கள் செய்தார்கள்.அவைகளுக்கு மத்தியில் சிறு இருப்பு இருப்பார்கள்.

(ஆதாரம்:முஸ்னதுல் பஜ்ஜார் 3/321,ஹதீஸ் இலக்கம்:1116,மஜ்மஉஜ்ஜவாயித் லில்ஹைஸமி 2/439,ஹதீஸ் இலக்கம்:3239)

 ஈத் தொழுகைக்கு பிறகு குத்பா


عن عبد الله ابن عمر رضي الله عنه ان رسول الله ﷺ كان يصلی فی الاضحی و الفطر و يخطب بعد الصلوة


ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

  ஈதுல் அள்ஹா ஈதுல் பித்ர் நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுவார்கள் தொழுகைக்கு பிறகு குத்பா செய்வார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/131,தலைப்பு:باب المشي و الركوب الی العيد ஹதீஸ் இலக்கம்:3239)

ஈத் தொழுகைக்கு பிறகு கூட்டுதுஆ


عن ام عطية رضي الله عنها قالت كنا نؤمر ان نخرج يوم العيد حتی نخرج البكر من خدرها حتی نخرج الحيض فيكن خلف الناس فيكبرن بتكبيرهم و يدعون بدعائهم يرجون بركة ذلك اليوم طهرته


இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்கு) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அன்றைய நாளின் பரக்கத்தையும் தூய்மையையும் ஆசைகொண்டவர்களாக இருக்கவேண்டுமென்றும்  கட்டளையிடப்பட்டோம். என்று நபி அவர்கள் பதிலளித்தார்கள்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/132,தலைப்பு:باب التكبير ايام منی )

இந்த ஹதீஸில் உள்ள துஆ என்பது குத்பா (பிரசங்கம்) இல்லை.ஏனெனில் குத்பா என்பது இமாம் மட்டும் செய்வார்.பின்தொடர்பவர்கள் செய்வதில்லை.மாதவிடாய் பெண்கள் இரு ஈத் பெருநாட்களிலும் ஆண்களுக்கு பின்னால் நிற்பார்கள்.ஆண்களின் தக்பீருடன் தக்பீர் சொல்வார்கள்.அவர்களின் துஆவுடன் பிரார்த்தனை புரிவார்கள்.ஆக இதன் மூலம் ஆண்கள் பெண்கள் அனைவரும் கூட்டாக பிரார்த்தனை புரிவது இந்த ஹதீஸின் மூலம் நிரூபணமாகியுள்ளது.


பெண்கள்  ஈத்காஹ்விற்கு வருவது கூடாது


இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மார்க்கத்தின் அடிப்படைகளை, சட்டதிட்டங்களை, ஒழுக்கங்களை, தீர்வுகளை அறிந்துகொள்வதற்கு கூட்டான வணக்கங்களில் கலந்து கொள்வதற்கு அனுமதியிருந்தது.இந்த தேவை பூர்த்தியான போது கூட்டான வணக்கங்களை விட்டு தடுக்கப்பட்டார்கள்.

இதனை உறுதிப்படுத்தும் அறிவிப்புகள்

عن عائشة رضي الله عنها قالت لو ادرك رسول الله ﷺ ما احدث النساء لمنعهن المسجد كما منعت نساء بني اسرائیل

ஆயிஷா ரளி அவர்கள் கூறுகிறார்கள்;

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்று பெண்கள் ஏற்படுத்திய குழப்பத்தை பார்த்திருந்தால்  பனூஇஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டதை போன்று இவர்களையும் மஸ்ஜிதுகளை விட்டும் தடுத்திருப்பார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/120,தலைப்பு:باب خروج النساء اي المسجد ,ஸஹீஹ் முஸ்லிம் 1/183,தலைப்பு:باب خروج النساء الی المساجد )

عن ابن عمر رضي الله عنه انه كان لا يخرج نساءه فی العيدين

இப்னு உமர் (ரளி) அவர்கள் துணைவிகள்  இரு ஈத் தொழுகைக்கு செல்லமாட்டார்கள்.

(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீஷைபா 4/234,தலைப்பு:باب من كره خروج النساء الی العيدين ,ஹதீஸ் இலக்கம்:5845)

عن هشام بن عروة عن ابيه انه كان لا يدع امراة من اهله تخرج الی فطر و لا اضحی


ஹிஷாம் இப்னு உர்வா (ரளி) அவர்கள் தனது தந்தை (உர்வா இப்னு ஜுபைர் இப்னு அவ்வாம்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்;

  அன்னார் தனது குடும்பத்தில் எந்த ஒரு பெண்ணையும் ஈதுல்பித்ர்,ஈதுல் அள்ஹா தொழுகைக்கு செல்வதை அனுமதிக்கமாட்டார்கள்.

(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீஷைபா 4/234,தலைப்பு:باب من كره خروج النساء الی العيدين, இலக்கம்:5846)

عن عبد الرحمن بن القاسم قال كان القاسم اشد شئی علی العوائق لا يدعهن يخرجن فی الفطر و لا الاضحی 

ஹஜ்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு காஸிம் அவர்கள் கூறுகிறார்கள்;
  காஸிம் இப்னு முஹம்மத் இப்னு அபூபக்கர் சித்திக் (ரஹ்) அவர்கள் தனது குடும்ப பெண்கள் ஈதுல்பித்ர் ஈதுல் அள்ஹா செல்லக்கூடாது என்பதில் கடுமையாக நடப்பார்கள்.

(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீஷைபா 4/234,தலைப்பு:باب من كره خروج النساء الی العيدين,இலக்கம்:5847)

عن ابراهيم قال يكره خروج النساء فی العيدين

ஹள்ரத் இப்ராஹீம் இப்னு நகயீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;

  பெண்கள் ஈத் தொழுகைக்கு செல்வது வெறுக்கத்தக்கதாகும்.

(ஆதாரம்: முஸன்னப் இப்னு அபீஷைபா 4/234,தலைப்பு:باب من كره خروج النساء الی العيدين,இலக்கம்:5844)