Sunday, August 29, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/தொடர்:14



கருத்து வேறுபாடுகளும் மத்ஹபுகளும் பகுதி:2 

கருத்துவேறுபாடுகள் என்பது மார்க்கத்தில் அனுதிக்கப்பட்ட ஒன்றாகும்.இதனால்தான் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏராளமான கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளது.ஒரே மஸ்அலாவில் மாறுப்பட்ட தீர்ப்புகள் தரப்பட்டுள்ளது.இதனால் ஒருவர் மற்றொருவரை விமர்சனம் செய்யவில்லை.கண்டிக்கவில்லை.
இதனை குறித்து விரிவாக இனி பார்ப்போம்! 

ஆதாரம்:1 

21:78 وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَـرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِ‌ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْن ‏ . 

இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம். 

21:79 فَفَهَّمْنٰهَا سُلَيْمٰنَ‌‌ۚ وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًا‌ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ‌ ؕ وَكُنَّا فٰعِلِيْنَ‏ 
 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம். இந்த வசனத்தின் பின்னணியில் வரும் நிகழ்வு

 وقال حماد بن سلمة ، عن علي بن زيد ، حدثنا خليفة ، عن ابن عباس قال : فحكم داود بالغنم لأصحاب الحرث ، فخرج الرعاء معهم الكلاب ، فقال لهم سليمان : كيف قضى بينكم؟ فأخبروه ، فقال : لو وليت أمركم لقضيت بغير هذا! فأخبر بذلك داود ، فدعاه فقال : كيف تقضي بينهم؟ قال أدفع الغنم إلى صاحب الحرث ، فيكون له أولادها وألبانها وسلاؤها ومنافعها ويبذر أصحاب الغنم لأهل الحرث مثل حرثهم ، فإذا بلغ الحرث الذي كان عليه أخذ أصحاب الحرث الحرث وردوا الغنم إلى أصحابها 
ஒருநாள் தாவூத் நபியின் அரசவைக்கு ஒரு புதிய பிரச்சனை வந்தது. ஒரு கூட்டத்தினர் விவசாயிகள். மற்றொரு கூட்டத்தினர் ஆடு மேய்ப்பவர்கள். விவசாயிகள் விவசாயம் செய்து பயிர் நன்றாக வளர்ந்திருந்தது. பார்க்கப் பசுமையாக இருந்தது. இந்நிலையில் இடையர்களின் ஆடுகள் அந்த விவசாய நிலங்களை மேய்ந்து அழித்துவிட்டன. இந்த முறைப்பாட்டுடன் இரு தரப்பாரும் தாவூத் நபியின் அரசவைக்கு வந்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பயிர்களாகும். இடையர்களின் வாழ்வாதாரம் ஆடுகளாகும். அவர்களின் வாழ்வாதாரத்தை இவர்களின் வாழ்வாதாரம் அழித்துள்ளது. எனவே “இடையர்கள் தங்களது ஆடுகளை விவசாயிகளிடம் கொடுத்துவிட வேண்டும். ஆடு விவசாயிகளுக்குரியது” என்று தீர்ப்புக் கூறினார்கள். இந்தத் தீர்ப்பு இடையர்களுக்கு பெரும் இடியாக இருந்தது. அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக அடிபட்டுவிட்டதை உணர்ந்தார்கள். இதனை அறிந்த சுலைமான் நபி, “இதற்கு நான் தீர்ப்புக் கூறி இருந்தால் எனது தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும்” என்று கூறினார்கள். தாவூத் நபி, “அந்தத் தீர்ப்பு என்ன? ” என்று கேட்டார்கள். சுலைமான் நபியின் தீர்ப்பு இப்படி இருந்தது. “இடையர்கள் தமது ஆடுகளை விவசாயிகளிடம் கொடுக்க வேண்டும், விவசாயிகள் தமது விளை நிலத்தை இடையர்களிடம் கொடுக்க வேண்டும். இடையர்கள் பயிரிட்டு அதைப் பாதுகாக்க வேண்டும். பயிர்களை ஆடுகள் உண்ணும் போது இருந்த அளவுக்கு வரும்வரை நீர் பாய்ச்சிப் பயிரைப் பாதுகாக்க வேண்டும். பின்னர் விவசாய நிலத்தை விவசாயிகளிடம் கையளிக்க வேண்டும். அதுவரை விவசாயிகள் இவர்களது ஆடுகளைப் பராமரிக்க வேண்டும். விவசாயிகளைப் பொறுத்தவரை இவர்கள் ஆடுகளைப் பராமரிப்பது என்பது மேலதிக வேலை. அத்துடன் அவர்களின் அறுவடையும் இவர்களின் ஆடுகள் உண்டதனால் தாமதமாகும். எனவே இதற்குப் பகரமாக தாம் பராமரிக்கும் காலப் பகுதியில் அந்த ஆடுகளிடமிருந்து அவர்கள் பால் கறந்து கொள்வார்கள். இடையர்கள் விவசாய நிலத்தை விவசாயிகளிடம் கையளித்த பின்னர் விவசாயிகள் ஆடுகளை இடையர்களிடம் கையளிக்க வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார். இந்தத் தீர்ப்பை இருதரப்பும் மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொண்டனர்.தாவூத் மற்றும் சுலைமான் இருவருக்கும் அல்லாஹ் ஞானத்தைக் கொடுத்ததாகவும் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை சுலைமானுக்கு அல்லாஹ்வே புரிய வைத்ததாகவும் கூறுகின்றான்.(ஆதாரம்:தப்ஸீர் இப்னு கஸீர்) இரு நபிமார்களின் தீர்ப்புகள் வெளிப்படையில் ஒன்று மற்றொன்றுக்கு எதிரானது.எனினும் இருவரை குறித்தும் அல்லாஹ் கூறுகிறான் وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًا‌ மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; எனவே இரு நபிமார்களும் ஒரே மஸ்அலாவில் மாறுப்பட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.இவ்வாறுதான் மத்ஹப் அறிஞர்களுக்கு மத்தியிலும் அவர்களின் ஆய்விற்கு ஏற்ப கருத்துவேறுபாடுகள் ஏற்படுகிறது. 
ஆதாரம்:2 

وقال كانت امرأتان معهما ابناهما جاء الذئب فذهب بابن إحداهما فقالت صاحبتها إنما ذهب بابنك وقالت الأخرى إنما ذهب بابنك فتحاكمتا إلى داود فقضى به للكبرى فخرجتا على سليمان بن داود فأخبرتاه فقال ائتوني بالسكين أشقه بينهما فقالت الصغرى لا تفعل يرحمك الله هو ابنها فقضى به للصغرى قال أبو هريرة والله إن سمعت بالسكين إلا يومئذ وما كنا نقول إلا المدية 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் - அலை - அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், 'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது' என்று கூற, மற்றொருத்தி அவளிடம், 'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது' என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான்(அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், 'என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்' என்று கூறினார்கள். அப்போது இளையவள், 'அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்' என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் 'அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது' என்று தீர்ப்பளித்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்று தான் (கத்திக்கு) 'சிக்கீன்' என்னும் சொல்லைச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) 'முத்யா என்னும் சொல்லைத் தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம்' என்று கூறுகிறார்கள்.(ஆதாரம்:புகாரி,ஹதீஸ் எண்:3427) இரு நபிமார்கள் ஒரே நிகழ்வில் அளித்த தீர்ப்பு ஒன்று மற்றொன்றுக்கு எதிராக உள்ளது என்பதை புரிய முடிகிறது.நபிமார்களின் ஆய்வில் கருத்துவேறுபாடு ஏற்படும் போது இமாம்களின் ஆய்வில் கருத்துவேறுபாடு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். 
ஆதாரம்:3 
قال سمعت أبا هريرة يقول قال رسول الله صلى الله عليه وسلم احتج آدم وموسى فقال موسى يا آدم أنت أبونا خيبتنا وأخرجتنا من الجنة فقال له آدم أنت موسى اصطفاك الله بكلامه وخط لك بيده أتلومني على أمر قدره الله علي قبل أن يخلقني بأربعين سنة فقال النبي صلى الله عليه وسلم فحج آدم موسى فحج آدم موسى 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து, உங்களுக்குள் தனது உயிரை ஊதி, தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து, உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச்செய்த ஆதம் நீங்கள்தானே! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்றல்களான) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்துவிட்டீர்கள்" என்று கூறினார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளை தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூசா நீர்தானே! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர்?" என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்" என்று பதிலளித்தார்கள். "அதில், ஆதம் தம் இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே, அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா?" என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், "ஆம்" என்றார்கள். "அவ்வாறாயின், என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எதை நான் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கிவிட்டானோ அதைச் செய்ததற்காக என்னை நீங்கள் பழிக்கிறீரா?" என்று ஆதம் (அலை) அவர்கள் கேட்டார்கள். (இந்தக் கேள்வியின் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்:5159) நபிமார்களுக்கு மத்தியில் கூட புரிதலில் இரண்டு கருத்துக்கள் உண்டு என்பதற்கு வலுவான ஆதாரமாக உள்ளது.

 ஆதாரம்:4
 أن النبي ﷺ استأذنه إنسان في التقبيل فأذن له، واستأذنه آخر فلم يأذن له، فإذا الذي أذن له شيخ كبير، والذي لم يؤذن له شاب 
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நோன்பாளி (மனைவியை) முத்தமிடுவது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி (ஸல்) அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) (நூல்: அபூதாவூத்) ஒரே மஸ்அலாவில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மாறுப்பட்ட தீர்ப்பை நிலைகளுக்கு ஏற்ப அளித்துள்ளார்கள் என்பதை புரிய முடிகிறது. 

ஆதாரம்:5
 عن أبي سعيد الخدري قال خرج رجلان في سفر فحضرت الصلاة وليس معهما ماء فتيمما صعيدا طيبا فصليا ثم وجدا الماء في الوقت فأعاد أحدهما الصلاة والوضوء ولم يعد الآخر ثم أتيا رسول الله صلى الله عليه وسلم فذكرا ذلك له فقال للذي لم يعد أصبت السنة وأجزأتك صلاتك وقال للذي توضأ وأعاد لك الأجر مرتين 
ஹள்ரத் அபூஸயீத் குத்ரி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இருதோழர்கள் பிரயாணம் சென்றிருந்தனர்.தொழகை நேரம் வந்தது.உளுசெய்வதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை.இருவரும் தயம்மம் செய்து தொழுதனர்.பிறகு தொழுகை நேரம் இருந்தபோது தண்ணீர் கிடைத்துவிட்டது.ஒருவர் உளுசெய்து,திரும்பவும் தொழுதார்.மற்றொருவர், திரும்பவும் தொழவில்லை.பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து போது நடந்ததை கூறினர்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திரும்ப தொழாத நபரிடத்தில் கூறினார்கள் أصبت السنة و اجزءتك صلوتك சுன்னத்திற்கு ஏற்ப அமல் செய்துள்ளீர்.உனது தொழுகை கூடிவிட்டது. பிறகு உளு செய்து திரும்பவும் தொழுத நபரிடத்தில் கூறினார்கள்لك الاجر مرتين உனக்கு இருகூலிகள் உண்டு.(ஆதாரம்:அபூதாவூத் 1/55,நஸாயி 1,75) இருவரின் அமலும் வெவ்வேறானது.எனினும்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இருவரையும் பாராட்டியுள்ளார்கள்.ஒருவர் சுன்னத்திற்கு ஏற்ப அமல் செய்த போது,அதற்கு எதிரில் மற்றவரின் செயலுக்கு இருமடங்கு கூலி எவ்வாறு கிடைக்கும்? இதைப்போன்று தான்.ஒரு மத்ஹபில் ஒரு செயல் சுன்னத்தாக இருக்கலாம்.மற்றொரு மத்ஹபில் சுன்னத்தாக இல்லாமல் இருக்கலாம்.
 
ஆதாரம்:6
 قال: إني رأيت في الجد رأيا فإن رأيتم أن تتبعوه فقال عثمان إن نتبع رأيك فهو رشد وإن نتبع رأي الشيخ قبلك فنعم ذو الرأي 
ஹள்ரத் உயர் (ரளி) அவர்கள் காயமுற்ற சமயத்தில் கூறினார்கள்:பாட்டனாரின் சொத்தில் பாகப்பிரிவினை குறித்து சிந்தனை தோன்றியுள்ளத.அதனை நீர் ஏற்கலாம்.ஹள்ரத் உஸ்மான் (ரளி) அவர்கள் கூறினார்கள் فقال عثمان أن نتبع رايك فهو رشدو أن نتبع راي الشيخ قبلك فنعم ذو الرأي "உங்களின் கருத்தை ஏற்பது சரியானது.நேர்வழியாகும்.மேலும் நமக்கு முன்னால் சென்றுவிட்ட மூத்தவரின் (அபூபக்கர் ரளி)கருத்தை ஏற்பதும் சரியானது.அவர் சிறந்த ஆய்வாளராக இருந்தார்." (ஆதாரம்:முஸ்தத்ரக்,பாகம்:4,பக்கம்:340) ஒருவரின் ஆய்விலும்,மற்றொருவரின் ஆய்விலும் கருத்துவேறுபாடு ஏற்படலாம் என்பதை புரியமுடிகிறது.இவ்வாறுதான் ஒரே மஸ்அலாவில் ஓர் இமாமின் ஆய்வும்,மற்றொரு இமாமின் ஆய்வும் மாறுபடுகிறது. 

ஆதாரம்:7 
சில சமயங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப சிறந்தது,உயர்ந்தது விடப்படும். 
عن عائشة رضي الله عنها، قالت:" سالت النبي صلى الله عليه وسلم عن الجدر امن البيت؟ , هو قال: نعم، قلت: فما لهم لم يدخلوه في البيت؟ , قال: إن قومك قصرت بهم النفقة، قلت: فما شان بابه مرتفعا؟ , قال: فعل ذلك قومك ليدخلوا من شاءوا ويمنعوا من شاءوا، ولولا ان قومك حديث عهدهم بالجاهلية فاخاف ان تنكر قلوبهم ان ادخل الجدر في البيت، وان الصق بابه بالارض ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, 'இது கஅபாவில் சேர்ந்ததா?' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்!' என்றார்கள். பிறகு நான் 'எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை?' எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!' என்று பதிலளித்தார்கள். நான் 'கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். 'உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்' என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்' என்று பதிலளித்தார்கள்.(ஆதாரம்:புகாரி:1/215, முஸ்லிம்:1/429) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்பாக சமூகத்தின் குழப்பத்தில்,தடுமாற்றத்தில் அகப்படும் ஆபத்தும்,அபாயம் இருந்தது.இதனால் சிறந்த,உயர்ந்தசெயலை கைவிட்டுவிட்டார்கள்.இவ்வாறுதான் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இமாம்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது.

ஆதாரம்:8 
ஒவ்வொரு நபரின் சிந்தனை ஒன்றாக இருக்காது.ஒவ்வொரு நபரின் புரிதலும் மாறுபடும். 
عن ابن عباس - رضي الله عنهما - قال: كان عمر رضي الله عنه يدخلني مع أشياخ بدر، فكأن بعضهم وجد في نفسه، فقال: لم يدخل هذا معنا ولنا أبناء مثله؟! فقال عمر: إنه من حيث علمتم! فدعاني ذات يوم فأدخلني معهم، فما رأيت أنه دعاني يومئذ إلا ليريهم، قال: ما تقولون في قول الله تعالى: ﴿ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ﴾ [النصر: 11]؟ فقال بعضهم: أمرنا نحمد الله ونستغفره إذا نصرنا وفتح علينا. وسكت بعضهم فلم يقل شيئًا. فقال لي: أكذلك تقول يا ابن عباس؟ فقلت: لا. قال: فما تقول؟ قلت: هو أجل رسول الله صلى الله عليه وسلم أعلمه له، قال: ﴿ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ﴾ [النصر: 1]، وذلك علامة أجلك: ﴿ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا ﴾ [النصر: 33] فقال عمر - رضي الله عنه - ما أعلم منها إلا ما تقول இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் உமர்(ரலி) பத்ருப்போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, 'எங்களுக்கு இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இவரை மட்டும் எங்களுடன் ஏன் அமரச்செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால் தான்' என்றார்கள். பின்னர் ஒருநாள் (எங்களை) உமர்(ரலி) (அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியினை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன். (எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர்(ரலி), 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்..' எனும் (திருக்குர்ஆன் 110:1 வது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படுமபோது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்' என்று (அவ்வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தனர். அப்போது உமர்(ரலி) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகிறீர்களா?' எனக் கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். 'அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டதைக்) குறித்து (முன்) அறிவிப்புச் செய்ததாகும். 'இறைவனின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்'.. அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்கமாகும்)' என்று பதிலளித்தேன். அப்போது உமர்(ரலி), 'நீங்கள் கூறுகிற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகிறேன்' என்று கூறினார்கள். (ஆதாரம்:புகாரி:4970)
ஆதாரம்:9
 عن ابن عمر رضي الله عنهما قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال أخبروني بشجرة تشبه أو كالرجل المسلم لا يتحات ورقها ولا ولا ولا تؤتي أكلها كل حين قال ابن عمر فوقع في نفسي أنها النخلة ورأيت أبا بكر وعمر لا يتكلمان فكرهت أن أتكلم فلما لم يقولوا شيئا قال رسول الله صلى الله عليه وسلم هي النخلة فلما قمنا قلت لعمر يا أبتاه والله لقد كان وقع في نفسي أنها النخلة فقال ما منعك أن تكلم قال لم أركم تكلمون فكرهت أن أتكلم أو أقول شيئا قال عمر لأن تكون قلتها أحب إلي من كذا وكذا இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், 'ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்' அல்லது '(அவரைப்) போன்றிருக்கும்' ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. மேலும் இப்படி.. இப்படி.. இப்படியெல்லாம் இராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கும். (அத்தகைய ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்)' என்று கூறினார்கள். அப்போது என் மனத்தில் 'இது பேரிச்ச மரம்தான்' என்று தோன்றியது. அபூ பக்ர், உமர் (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை கண்டேன். எனவே, நான் பேசவிரும்பவில்லை. (அங்கிருந்த) மக்கள் ஒன்றும் சொல்லாமலிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தாமே) 'அது பேரிச்ச மரம்' என்று கூறினார்கள். நாங்கள் (புறப்பட) எழுந்தபோது நான் உமர்(ரலி) அவர்களிடம், 'என் அன்புத் தந்தையே! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனத்தில் அது பேரிச்ச மரம் தான் என்று தோன்றியது' என்றேன். அதற்கு அவர்கள், '(அப்துல்லாஹ்!) நீ ஏன் (மனத்தில் தோன்றியதைக்) கூறாமலிருந்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'நீங்கள் பேசாமலிருப்பதைப் பார்த்தேன். எனவே, நான் பேசவோ எதுவும் சொல்லவோ விரும்பவில்லை' என்று பதிலளித்தேன். உமர்(ரலி), 'நீ அதைச் சொல்லியிருந்தால் அதுவே இன்ன இன்ன(செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமான தாய் இருந்திருக்கும்' என்று கூறினார்கள்.(ஆதாரம்:புகாரி:4698)
ஆதாரம்:10
 عن أبي سعيد الخدري رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم جلس على المِنبر فقال: (إنّ عبداً خيّره الله بين أن يؤتيه من زهرة الدنيا ما شاء، وبين ما عنده، فاختار ما عنده. فبكى أبو بكر وقال: فديناك بآبائنا وأمّهاتنا، فعجبنا له، (ஹதீஸின் சுருக்கம்) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப்பட்டிருந்த போது) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) தெரிவித்தார்கள்: "அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு அலங்காரமான இவ்வுலக வாழ்வு, அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு)வாழ்வு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடமிருப்பதையே தேர்ந்தெடுத்து விட்டார்" என்று கூறினார்கள். இதைக் கேட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் மீண்டும் மீண்டும் அழுதார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி) "தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்" என்று சொன்னார்கள்.நாங்கள் அபூ பக்ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம்.(ஆதாரம்:புகாரி:3904) 
ஆதாரம்:11
لما نزل قوله تعالى: حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ) قَالَ عَدِىُّ بْنُ حَاتِمٍ يَا رَسُولَ اللَّهِ إِنِّى أَجْعَلُ تَحْتَ وِسَادَتِى عِقَالَيْنِ عِقَالاً أَبْيَضَ وَعِقَالاً أَسْوَدَ أَعْرِفُ اللَّيْلَ مِنَ النَّهَارِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم: إِنَّ وِسَادَتَكَ لَعَرِيضٌ إِنَّمَا هُوَ سَوَادُ اللَّيْلِ وَبَيَاضُ النَّهَارِ அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார். 'கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை' என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!' என்று பதிலளித்தார்கள்.(ஆதாரம்:புகாரி,1916) வசனத்தின் அர்த்தத்தைக் குறித்து,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லை குறித்து, ஸஹாபாக்களின் புரிதலில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது இதுபோன்று தான் இமாம்களுக்கு மத்தியிலும் வசனத்தின் பொருள்களை குறிப்பாக்குவதில்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லின் நோக்கத்தை புரிவதில், கருத்துவேறுபாடு ஏற்படும் போது மஸாயில்களிலும் கருத்துவேறுபாடு ஏற்படுவது இயல்பானதுதான்.

Thursday, August 12, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/


மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர்:13

 கருத்து வேறுபாடுகளும்,

மத்ஹபுகளும் பகுதி:1

தக்லீதின் காரணமாக மத்ஹபுகள் உருவானது.மத்ஹபுகள் என்பது கருத்து வேறுபாட்டின் பின்னணியை கொண்டது.மத்ஹப் மறுப்பாளர்கள் தமிழகத்தில் இயக்கத்தை ஆரம்பித்த போது மத்ஹபின் காரணமாக தான் கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது.குர்ஆன்,ஹதீஸ் ஒன்றாக இருக்கும்போது நான்கு மத்ஹபுகள் எப்படி உருவானது? என்பதாக கண்மூடித்தனமாக விமர்சித்தனர்.வரம்பு மீறி எள்ளிநகையாடினர்.ஆனால்,இன்று மத்ஹப் மறுப்பாளர்களுக்கு மத்தியில் ஏராளமான கருத்துவேறுபாடுகள், கடுமையான விமர்சனங்கள் உருவாகிவிட்டது.நான்கு மத்ஹபுகளை களையெடுக்க களத்தில் இறங்கியவர்கள் இன்று பல்வேறு பிரிவுகளாக சிதறிக் கிடக்கின்றனர்.

ஹதீஸ்களில் வெளிப்படையான பொருளை ஏன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எடுப்பதில்லை? அவ்வாறு எடுத்தால் இமாம்களின் பிக்ஹ்,தக்லீதின் தேவை ஏற்படாது.ஓர் இமாம் இவ்வாறு கூறுகிறார்.மற்றொரு இமாம் அதற்கு முரணாக கூறுகிறார்.அதிலும் அர்த்தத்தை விளங்குவதில் குறிப்பாக நான்கு இமாம்களுக்கு மத்தியில் கூட நிலைப்பாடுகள் வேறு வேறாக உள்ளது.சில சமயங்களில் ஓர் இமாம் ஒன்றை ஹலால் என்பதாக கூறுகிறார்.மற்றொரு இமாம் ஹராம் என்பதாக கூறுகிறார் என்பதாக இயல்பாக கேள்வி எழலாம்.இதற்குரிய பதிலை இனி பார்ப்போம்!

முதலில் முன்னோட்டமாக சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.எல்லா சந்தர்ப்பங்களிலும் முரண்படுவது பெருமானாரின் வார்த்தைகளுக்கு மாறுபாடு என்பதாக கருதப்படுமா? அல்லது வார்த்தைகளின் பொருளில் ஏற்படும் முரண்பாடு என்பதாக கருதப்படுமா?ஒருவர் பெருமானாரின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு முரண்படுகிறார்.எனினும்,அதனுள் பொதிந்துள்ள கருத்துக்களை ஆய்வு செய்து பின்பற்றுகிறார்.இது முரண்பாடா? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தது அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஹராம் என்பதாக கருதப்படுமா? அல்லது சிறந்ததற்கு மாற்றமானது என கருதப்படுமா? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அனைத்து கட்டளைகளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பர்ளா?அல்லது விரும்பத்தக்கதா? அறிவுரையா? இது குறித்து ஹதீஸ்களின் ஒளியில் பார்த்தால் கருத்துவேறுபாட்டின் பின்னணியும்,மத்ஹபுகளின் நியாயமும் புரிந்து கொள்ளமுடியும்.

ஆதாரம்:1

عن ابن عمر رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم يوم الأحزاب لا يصلين أحد العصر إلا في بني قريظة فأدرك بعضهم العصر في الطريق فقال بعضهم لا نصلي حتى نأتيها وقال بعضهم بل نصلي لم يرد منا ذلك فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فلم يعنف واحدا منهم

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி(ஸல்) அவர்கள், 'பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டாம்' என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், 'பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்' என்று கூறினர். வேறு சிலர், '(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; ('வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்' என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.(ஆதாரம்:புகாரி,பாகம்:2,பக்கம்:591)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் لا يصلين أحد என்ற வாசகத்தை நன்றாக ஊன்றி கவனியுங்கள்.இதில் உள்ள நூன்  (ن) ஷத்து பெற்று வந்துள்ளது.இதனை அரபி இலக்கணத்தில் நுனே ஸகீலா (نون ثقيلة ) என்று சொல்லப்படும்.இதனின் பொருள் நிச்சயமாக,திண்ணமாக என்ற பொருள் உள்ளது.மேலும் அஹத் (ஒருவரும்) என்ற வார்த்தையானது அனைத்து நபரையும் உள்ளடக்கும் பொருள் உள்ளது.எனவே, ஹதீஸின் நேரடியான அர்த்தம் ஒருவரும் அஸர் தொழுகையை பனூகுரைளாவில் தவிர நிச்சயமாக தொழக்கூடாது.ஆனால் ஸஹாபாக்களில் ஒரு சாரார் பெருமானாரின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு மாற்றம் செய்துள்ளார்கள்.எனினும்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கவில்லை.ஸஹாபாக்களில் ஒரு சாரார் புரிந்த அர்த்தத்தை வெளிப்படையில் நம்மால் சிறிதளவு கூட புரியமுடியவில்லை.ஆனால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டையும் அங்கீகரித்துள்ளார்கள்.

وفي فتح الباري للحافظ ابن حجر: قال السهيلي وغيره: في هذا الحديث من الفقه أنه لا يعاب على من أخذ بظاهر حديث أو آية ولا على من استنبط من النص معنى يخصصه

ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இதனின் விளக்கத்தை எழுதுகிறார்கள்:இமாம் ஸுஹைலி ரஹ்,மற்றவர்களும் கூறுகிறார்கள்;இந்த ஹதீஸில் கிடைக்கும் விளக்கமானது,குர்ஆன் அல்லது ஹதீஸில் வெளிப்படையான பொருளின் பேரில் மக்கள் அமல்செய்தாலும் எந்த ஒரு குற்றமும் இல்லை.மேலும் தெளிவான விஷயத்திலிருந்து ஆய்வுசெய்து குறிப்பான விஷயத்தை புரிவதும் தவறில்லை.(ஆதாரம்:பத்ஹுல் பாரி16/67)

ஆதாரம்:2

عن أنس أن رجلا كان يتهم بأم ولد رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم لعلي اذهب فاضرب عنقه فأتاه علي فإذا هو في ركي يتبرد فيها فقال له علي اخرج فناوله يده فأخرجه فإذا هو مجبوب ليس له ذكر فكف علي عنه ثم أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إنه لمجبوب ما له ذكر

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணுடன் இணைத்து ஒரு மனிதர் அவதூறு சொல்லப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நீங்கள் சென்று அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே அலீ (ரலி) அவர்கள் சென்ற போது, அவர் (சுற்றுச்சுவர் இல்லாத) ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் அலீ (ரலி) அவர்கள், "மேலே வா" என்று தமது கையைக் கொடுத்து அவரை வெளியேற்றினார்கள்.
அப்போது அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவராக, இன உறுப்பே அற்றவராக இருந்தார். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் அவரை(க் கொல்லாமல்) விட்டுவிட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவர்; இன உறுப்பே அற்றவர் ஆவார்" என்று சொன்னார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் பாகம்:2,பக்கம்:368)


ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் அந்நபரை கொல்வதற்குரிய காரணத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை நிறைவேற்றாமல் திரும்பி வந்து,நடந்ததை கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் வருகிறது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: الشاهد يرى مايرى الغائب 
மறைவாக இருப்பவர் பார்க்காததை முன்னால் இருப்பவர் பார்த்துள்ளார்.(ஆதாரம்:அல்பிதாயா வந்நிஹாயா 5/304)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தெளிவான கட்டளை.அதுவும் குற்றவியல் சட்டம்.அதில் எந்தவித இரக்கம்,கருணைக்கு இடமில்லை என்பது அல்லாஹ்வின் உத்தரவு.எனினும்,அலி (ரளி) அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை.மேலும் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், கண்டிப்பதற்கு பதிலாக அவரின் கருத்தை ஆமோதித்தார்கள்.அலி (ரளி) அவர்கள் அண்ணலாரின் வெளிப்படையான கட்டளைக்கு மாறு செய்ததால் ஹதீஸை விட்டவர் அல்லது மாறு செய்தவர் என கூறலாமா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஆதாரம்:3

عن أبي عبد الرحمن السلمي قال خطب علي فقال يا أيها الناس أقيموا الحدود على أرقائكم من أحصن منهم ومن لم يحصن وإن أمة لرسول الله صلى الله عليه وسلم زنت فأمرني أن أجلدها فأتيتها فإذا هي حديثة عهد بنفاس فخشيت إن أنا جلدتها أن أقتلها أو قال تموت فأتيت رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال أحسنت
அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
(ஒரு நாள்) அலீ (ரலி) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! உங்கள் அடிமைகள்மீதும் குற்றவியல் தண்டனையை நிறைவேற்றுங்கள். அவர்கள் திருமணமானவர்களாக இருக்கட்டும்; திருமணமாகாதவர்களாக இருக்கட்டும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப்பெண் ஒருவர் விபச்சாரம் செய்து விட்டார். எனவே, அவருக்குச் சாட்டையடிகள் வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
ஆனால், அவருக்கு அப்போதுதான் மகப்பேறு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினால் (எங்கே) அவரை நான் கொன்றுவிடுவேனோ என அஞ்சினேன். (எனவே, தண்டனையைத் தள்ளிவைத்தேன்.) இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "நீங்கள் செய்தது சரிதான்" என்று அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:முஸ்லிம் பாகம்:2,பக்கம்:71)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வெளிப்படையான கட்டளையில் குறிப்பான விஷயமோ,நிபந்தனையோ இல்லை.எனினும்,ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் புகஹாக்களில் (மார்க்கவிற்பன்னர்) உள்ளவர்.தனது ஆய்வு, விளக்கத்தின் பேரில் புரிந்தார்.அதாவது பெருமானாரின் கட்டளையானது குறிப்பானது,நிபந்தனையின் பேரில் உள்ளது.ஏனெனில் அடிமைப்பெண் மரணித்தது விடக்கூடாது.குழந்தை பிறந்த சமயத்தில் தண்டனை அளிப்பது, அவளின் முடிவு மரணமாக அமைந்துவிடும்.எனவே தண்டனை அளிக்காமல் திரும்பி வந்தார்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அலி (ரளி) கூறியதைக் கேட்டு குற்றவாளி,பாவி என திட்டாமல், அவரின் செயலை நல்லது என்பதாக பாராட்டியுள்ளார்.இதற்கு மாற்றமாக அந்த சமயத்தில் அலி (ரளி)அவர்கள் அந்தப் பெண்ணை சாட்டையால் அடித்து வெளிப்படையான கட்டளையை நிறைவேற்றியிருந்தால்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்திருக்க வாய்ப்புண்டு. இஜ்திஹாத் (ஆய்வு),கியாஸ், (ஒப்பீடு) கிளைசட்டங்களில் சில ஹதீஸ்களின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு மாற்றமாக இருப்பது இந்த ஒரு நிகழ்வின் மூலம் தீர்வு கிடைத்துவிடும்.எனினும்,ஆய்வாளரிடத்தில் ஆய்வுத்திறன்,ஞானம் இருக்கவேண்டும் என்பது மிக அவசியமான ஒன்றாகும்.

ஆதாரம்:4

(ஹதீஸில் சுருக்கமான பகுதி)
عن البراء بن عازب رضي الله عنه قال اعتمر النبي صلى الله عليه وسلم في ذي القعدة فأبى أهل مكة أن يدعوه يدخل مكة حتى قاضاهم على أن يقيم بها ثلاثة أيام فلما كتبوا الكتاب كتبوا هذا ما قاضى عليه محمد رسول الله فقالوا لا نقر بها فلو نعلم أنك رسول الله ما منعناك لكن أنت محمد بن عبد الله قال أنا رسول الله وأنا محمد بن عبد الله ثم قال لعلي امح رسول الله قال لا والله لا أمحوك أبدا
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று எழுதாதீர்கள்' (என்று சொல்லிவிட்டு) முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி), 'நீர் அல்லாஹ்வின் தூதரக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்' என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், 'அதை அழித்து விடுங்கள்' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'நான் அதை (ஒருபோதும்) அழிக்கப் போவதில்லை' என்று கூறிவிட்டார்கள். (ஆதாரம்:புகாரி,பாகம்:1,பக்கம்:372)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அலி (ரளி) அவர்களின் பெயரை சொல்லியே கட்டளையிடுகிறார்கள்."அலியே! இந்த வார்த்தையை அழித்துவிடு"எனினும், அவர்கள் அண்ணலாரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, சத்தியமிட்டு அழிக்கமாட்டேன் என்கிறார்கள்.நேர்மையுடன் கூறுங்கள்.அலி (ரளி) அவர்களின் மீது என்ன தீர்ப்பு கூறுவது?பத்வா கொடுக்கலாமா? கூடாதா? வெளிப்படையில் அவருக்கு எதிராக தீர்ப்பு அளிக்காமல் இருப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.ஏனெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அவரின் பெயரை கூறித் தான் உத்தரவிட்டுள்ளார்.எனினும்,அலி (ரளி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கட்டளையை நிறைவேற்றாமல் பிடிவாதமாக உறுதியுடன் இருந்துள்ளார்கள்.பிறகு அவர்களுக்கு எதிராக எப்படி தீர்ப்பளிக்காமல் இருப்பது? (அல்லாஹ் பாதுகாப்பானாக)
இந்நிகழ்வின் எதார்த்தம் என்னவெனில் குரைஷியரின் ஆதாரவாளர்களுக்கு மத்தியில் ஹள்ரத் அலி ரளி அவர்கள் வெளிப்படையில் மறுத்தது, ஒழுக்கம்,பெருமானாரின் மீது கொண்ட அளவற்ற, எல்லையற்ற நேசமுமாகும். இதனால் தான் பெருமானாரின் திருப்பெயரை அழிப்பதற்கு மனம் வரவில்லை.எனினும்,பெருமானாரின் வெளிப்படையான வார்த்தையை கவனியுங்கள்  நேசம்,பிரியம் என்பதற்கு சிறிய அடையாளம் கூட ஹதீஸில் இல்லை.ஒட்டுமொத்த சமுதாயம்,  அலி (ரளி) அவர்கள் ஹதீஸை மறுப்பவர் ஹதீஸிற்கு மாற்றம் செய்பவர் என்பதாக விமர்சிக்கவில்லை.

ஆதாரம்:5

عبد الله بن عمرو رضي الله عنهما بلغ النبي صلى الله عليه وسلم أني أسرد الصوم وأصلي الليل فإما أرسل إلي وإما لقيته فقال ألم أخبر أنك تصوم ولا تفطر وتصلي فصم وأفطر وقم ونم فإن لعينك عليك حظا وإن لنفسك وأهلك عليك حظا قال إني لأقوى لذلك قال فصم صيام داود عليه السلام قال وكيف قال كان يصوم يوما ويفطر يوما ولا يفر إذا لاقى قال من لي بهذه يا نبي الله قال عطاء لا أدري كيف ذكر صيام الأبد قال النبي صلى الله عليه وسلم لا صام من صام الأبد مرتين

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 
நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா? நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி(ஸல்) அவர்கள் 'நீர் விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதைவிட்டுவிடவும் செய்வீராக! (இரவில் எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உமக்கும் உம்முடைய குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன!' என்று கூறினார்கள். நான், 'இதற்கு எனக்கு சக்தி உள்ளது!' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் 'நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக!' என்றார்கள். 'அது எவ்வாறு?' என்று கேட்டேன். 'தாவூத் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள்விட்டுவிடுவார்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்!' என்றேன். 
'காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். என்றாலும் 'காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்!' என்று நபி(ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது!)' என்று அதா(ரஹ்) கூறினார்.(ஆதாரம்:புகாரி,பாகம்:1,பக்கம்:265)


இந்த தெளிவான ஆதாரப்பூர்வமான அறிவிப்பின் மூலம் தொடர்படியாக நோன்பு வைப்பது தடை என புரியமுடிகிறது.ஆனால்,உம்மத்தில் காலமெல்லாம் நோன்பு வைத்த பெரியோர்கள் இருந்துள்ளனர்.ஹள்ரத் இமாம் ஷுஅபா இப்னுல் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள்,
ஹள்ரத் இமாம் வகீஃ இப்னுல் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இவர்கள் அனைவரும் ஹதீஸ்களை வல்லுனர்கள்.இது போன்ற ஏராளமான உதாரணங்களை கூறமுடியும்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவரின் நோன்பாகாது என்பதாக பெருமானாரின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு மாற்றமாக ஹதீஸ்கலை வல்லுனர்கள் நடந்துள்ளார்கள்.இப்போது அனைவரையும் ஹதீஸிற்கு மாற்றம் செய்தார்கள் என்பதாக கூறலாமா? அல்லது பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கம், நமது உம்மத்தின் மீது எளியதையும், பிரியத்தையும் நாடி நோன்பு நோற்பதை தடுத்துள்ளார்கள் என்பதாக கூறலாமா?  இதில் எவை பொருத்தமாக இருக்கும்? 

ஆதாரம்:6

நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இயற்கை மரபுகளை விளக்கியவாறு கூறினார்கள்: نتف الابط அக்குல் முடியை பிடிங்குவது.(ஆதாரம்:புகாரி,பாகம்:2, பக்கம் 875)

அரபி மொழியில் نتف (நத்ஃப்) என்பதற்கு முடிகளை பிடிங்குதல் என்பது பொருளாகும்.ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் அக்குல் முடியை சிரைத்தல் (حلق الابط) என்பது வரவில்லை.எனினும், பெருமானாரின் உம்மத் இதன்படி அமல் செய்யவில்லை.அதுமட்டுமின்றி மத்ஹப் மறுப்பாளர்கள் கூட அமல் செய்யமுடியவில்லை.ஹதீஸின்படி அமல்செய்ய வேண்டும் என வாதிடுபவர்கள் முடியை பிடிங்குதலை அமல் செய்யவில்லை.இப்போது அனைவரும் ஹதீஸை புறக்கணித்து விட்டார்களா?

இமாம் நவவி (ரஹ்) அவர்கள்,இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள் இதனின் விளக்கவுரையில் எழுதியுள்ளார்கள்:

والله أعلم أما نتف الإبط فسنة بالاتفاق والأفضل فيه النتف لمن قوى عليه ويحصل أيضا بالحلق وبالنورة وحكى عن يونس ابن عبد الأعلى قال دخلت على الشافعي رحمه الله وعنده المزين يحلق إبطه فقال الشافعي علمت أن السنة النتف ولكن لا أقوى على الوجع

சக்தியுள்ளவர் அக்குல் முடியை பிடிங்குவது ஒன்றுபட்ட கருத்தின்படி சுன்னத்தும், சிறந்ததுமாகும்.சிரைப்பது,மழிப்பதால் நோக்கம் நிறைவேறிவிடும்.யூனுஸ் இப்னு அப்துல் அஃலா அவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது;நான் ஷாபி (ரஹ்) அவர்களிடத்தில் சென்றிருந்தேன்.அப்போது நாவிதன் அவரின் அக்குல்முடியை சவரக்கத்தியால் தூய்மை செய்து கொண்டிருந்தார்.ஹள்ரத் இமாம் ஷாபியி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;முடியை பிடிங்குவது தான் சுன்னத் என்பதை அறிகிறேன்.எனினும் சிரமத்தை பொறுத்துக்கொள்ள இயலவில்லை.(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம்,1/129, நைலுல்அவ்தார் 2/124)

பெருமானாரின் ஹதீஸில்,ஆற்றல் உள்ளவருக்கு அக்குல் முடியை பிடிங்குவது சுன்னத் என்பதாக குறிப்பான விஷயம் இல்லை.எனினும், ஹதீஸின் விளக்கவுரையாளர்கள் ஹதீஸின் அர்த்தத்தில் நிபந்தனையை இணைத்துள்ளனர்.எனவே முழு உம்மத்தும் ஹதீஸின் வெளிப்படையான வார்த்தையின் பேரில் அமல்செய்யவில்லை என்பதால் ஹதீஸை விட்டவர்களா?மறுத்தவர்களா? இந்த ஹதீஸின் உண்மையான விஷயத்தை ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஆய்வு செய்து கூறுகிறார்கள்; எவ்வாறு செய்தாலும் சரி முடியை அகற்றுவது தான் அசலான நோக்கமாகும்.

ஆதாரம்:7

فعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :  لا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمْ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ , فَإِنْ كَانَ لا بُدَّ فَاعِلا فَلْيَقُلْ : اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي , وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!" என்று கேட்கட்டும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:புகாரி,பாகம்:2,பக்கம்:847)

இந்த ஹதீஸில் சிரமம் (ضر) என்ற வார்த்தை பொதுவாக வந்துள்ளது.எனவே உலக காரியங்கள்,தீனுடைய காரியங்கள் அனைத்தும் உள்ளடங்கும்.மரணத்தை ஆசைப்படக்கூடாது என்பதாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.எனினும்,ஹதீஸ் விரிவுரையாளர்கள், சிரமம் என்பதை உலகாரியங்கள் என்பதாக குறிப்பாக கருதுகிறார்கள்.
ஹாபிள் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ஹள்ரத் அலி (ரளி) அவர்களின் காலத்தில் உள்நாட்டு விவகாரங்களில் சிக்கல் உருவானது, குழப்பங்கள் பெருகியது,கிரிமினல் குற்றங்கள் மலிந்தது,இவர் இப்படிக் கூறினார் இவ்வாறு கூறப்பட்டது (என நினைத்ததையெல்லாம் பரப்பினர்) இது போன்ற சூழ்நிலையினால் மரணத்தை அன்னார் ஆசைப்பட்டார்கள்.

இது போன்று இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் மரணத்தை ஆதரவு வைத்தார்கள் لما اشتد عليه الحال و لقي من مخالفيه الأهوال அன்னாருக்கு நெருக்கடி ஏற்பட்டு, எதிரிகளின் மூலம் சிரமங்கள் வந்தபோது மரணத்தை ஆசைப்பட்டார்கள்.

மரணத்தை ஆசைப்படுவதை தடுத்ததின் நோக்கம்
والمراد بالضر ههنا ما يخص العبد فى بدنه من مرض و نحوه لا فى دينه ........الخ 
(ஆதாரம்:அல்பிதாயாவந்நிஹாயா பாகம்:1,பக்கம்:219)

சிரமத்தினால் (மரணத்தை ஆசைப்பக்கூடாது) என்பது மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் துன்பம் நோய் போன்றவைகளால்தான்.
தீனின் சிரமம் நோக்கம் இல்லை.(நாம் வாழ்வதில் தீனில் பாதிப்பு ஏற்படுவதை பயந்து மரணத்தை ஆசைப்படுவது தவறில்லை)

  தீன்,துன்யா சிரமம் என்பதாக ஹதீஸ் பிரித்து கூறவில்லை.ஹதீஸில் சிரமம் என்பது பொதுவாக கருதப்படுமானால் அலி (ரளி) அவர்கள்,புகாரி (ரஹ்)  போன்றவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கு மாற்றமாக செயல்பட்ட தோற்றம் தென்படுகிறது.பிரித்துக்காட்டும் காரணம் ஹதீஸ்களில் தேடினால் ஒருபோதும் கிடைக்காது.எனினும் ஹதீஸ் விரிவுரையாளர்கள்,உம்மத்தின் புகஹாக்கள் எனும் மாரக்க விற்பன்னர்கள் இதனை ஆய்வின்படி புரிந்துள்ளனர்.

ஆதாரம்:8

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்களின் அறிவிப்பு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அவரிடத்தில் எத்தனை நாட்களில் நீர் குர்ஆனை ஓதிமுடிப்பீர்? எனக்கேட்டார்கள்.அவர் கூறினார்; ஒவ்வொரு இரவிலும் குர்ஆனை ஓதி முடிப்பேன்.பிறகு அண்ணலார் கூறினார்கள்;اقرا فى كل سبع ليال مرة வாரத்தில் ஒருமுறை குர்ஆனை ஓதிமுடிப்பீராக என்றார்கள்.(ஆதாரம்:புகாரி,2/755)

மற்றோர் அறிவிப்பில் வருகிறதுفاقرا فى سبع ولا تزد على ذلك வாரத்தில் ஒருமுறை குர்ஆனை ஓதிமுடிப்பீராக!அதனைவிட அதிகப்படுத்தாதீர்!(ஆதாரம்:புகாரி,2/756)

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் பல்வேறுபட்ட அறிவிப்புகளை குறித்து கூறுகிறார்கள்;
قال بعضهم فى ثلاث وفى خمس و أكثرهن على سبع 
மூன்று நாட்கள் என்பதாக சிலரும், ஐந்து நாட்கள் என்பதாக சிலரும், ஏழு நாட்கள் என்பதாக அதிகமானவர்கள் (ஒரு முறை குர்ஆனை ஓதி முடிப்பதாக) கூறுகிறார்கள்.(ஆதாரம்:புகாரி 2/756)

ஹள்ரத் உஸ்மான் (ரளி) அவர்கள்,ஹள்ரத் தமீமுத்தாரி (ரளி) அவர்கள், ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரளி) அவர்கள் ஓர் இரவில் குர்ஆனை முழுமையாக ஓதிமுடிப்பவர்களாக இருந்துள்ளார்கள்.

இமாம்களில் ஹள்ரத் ஷாபியி (ரஹ்) அவர்கள் ரமலானில் அறுபது முறை குர்ஆனை ஓதி முடிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளார்கள்.(ஆதாரம்:தத்கிரதுல் ஹுஃப்பாள் 1/329)

இமாம் வகீஃ இப்னுல் ஜர்ராஹ் (ரஹ்)அவர்கள் ஓர் இரவில் குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்.(ஆதாரம்:பக்தாத் 13/470)

யஹ்யா இப்னு ஸயீதுல் காத்தான் (ரஹ்) அவர்கள் இருபத்துநான்கு மணிநேரத்தில் ஒருதடவை குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்.
(ஆதாரம்:பக்தாத் 14/141)

இமாம்கள் ஹதீஸிற்கு மாறுசெய்தார்கள் என்பதாக கூறவேண்டும்.(அல்லாஹ் பாதுகாப்பானாக) ஹதீஸின் வெளிப்படையான கருத்தைப் பார்த்தால் அவ்வாறு தான் புரியமுடியும்.எனினும்,பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கம் உம்மத்தின் மீதுள்ள கருணை பரிவு இரக்கத்தின் வெளிப்பாடாகும்.மாறாக,ஹராம் என்பதன் பேரில் தடுக்கவில்லை என்பதாக அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.இவ்வாறு புரிவதுதான் பொருத்தமானதாகும்.

ஆதாரம்:9

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றை தடுத்திருப்பார்கள் அதனின் தரம் என்ன? என்பதில் விளக்கம் இருக்காது.அதாவது தடை என்பது ஹராமா? அல்லது சிறந்ததற்கு மாற்றமா? ஆனால், ஆய்வாளர்கள் தங்களது மார்க்க ஞானத்திற்கு ஏற்ப,விளக்கத்திற்கு ஏற்ப தீர்ப்பளிப்பார்கள்.

نهينا عن اتباع الجنا ئز ولم يعزم علينا 
உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.(ஆதாரம்:புகாரி,பாகம்:1,பக்கம்:70)

மற்றோர் அறிவிப்பில் வருகிறது.

كنا ننهى عن اتباع الجنائز ولم يعزم علينا

உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டுகொண்டிருந்தோம்.
ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.(ஆதாரம்:முஸ்லிம்,பாகம்:1, பக்கம்:304)

ஹள்ரத் இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இதனின் விரிவுரையில் எழுதுகிறார்கள்:
معناه نهانا رسول الله صلى الله عليه وسلم عن ذلك نهى كراهة تنزيه لا نهى عزيمة و تحريم 
(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம் பாகம்:1,பக்கம்:304)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,எங்களை ஜனாஸாவில் பின்தொடர்வதை தடுத்தார்கள் என்பதின் விளக்கமானது;மக்ரூஹ் தன்ஜீஹ் (அனுமதிக்கு நெருக்கமானது) என்பதாகும்.மக்ரூஹ் தஹ்ரீம் (ஹராமிற்கு நெருக்கமானது), வலியுறுத்தி தடுக்கவில்லை.

ஹள்ரத் உம்மு அதிய்யா (ரளி) அவர்கள் தனது ஆய்வுத்திறன்,மார்க்க அறிவின் மூலம் பெருமானாரின் தடையின் சட்டத்தை கூறியுள்ளார்கள்.இந்த தடை ஹராம் என்பதல்ல.மாறாக சிறந்ததற்கு மாற்றமானது.எனினும் ஹதீஸில் பொதுவாக தடைமட்டும் தான் வருகிறது.அதில் பிரித்தறியும் வித்தியாசமில்லை.

இறுதியாக,ஹதீஸ்களின் வெளிப்படையான வார்த்தையை மட்டும் அமல் செய்பவர்களின் ஓர் உதாரணத்தை மட்டும் கூறி இந்த தலைப்பை நிறைவுசெய்கிறோம்.

جابر، عن رسول الله صلى الله عليه وسلم؛ أنه نهى أن يبال في الماء الراكد
ஜாபிர் (ரளி) அவர்கள்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை அறிவிக்கிறார்கள்:தேங்கிய தண்ணீரில் சிறுநீர் கழிப்பதை தடுத்தார்கள்.(ஆதாரம்: முஸ்லிம்,பாகம்:1,பக்கம்:138)

அனைத்து ஆய்வுத்திறன் மிகுந்த புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்கள்,ஹதீஸ்கலை வல்லுனர்களிடத்தில் இந்த ஹதீஸின் கருத்தானது;தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்பட்டதைப் போன்று மலம் கழிப்பதும் தடுக்கப்பட்டதாகும்.தடைசெய்யப்பட்ட விலங்குகளின் சிறுநீரின் சட்டமும் அவ்வாறுதான்.சிறுநீர் வழிந்தோடி தண்ணீரில் சென்றுவிடும் எனில்,அருகில் நின்று சிறுநீர் கழிப்பது கூடாது.ஏதேனும் கோப்பையில் சிறுநீர் கழித்து நீரில் ஊற்றினாலும்  தடையாகும்.ஏனெனில் அனைத்து நிலைகளிலும் தண்ணீர் அசுத்தமாகிவிடும்.எனினும்,பிரபல்யானவர் தாவூத் இப்னு அலி ளாஹிரி போன்றவர்களிடத்தில் வெளிப்படையான வார்த்தையில் அகப்பட்டு இதற்கு எதிரான கண்ணோட்டத்தை எடுத்துள்ளனர்.

இமாம் நவவி ஷாபியி (ரஹ்) அவர்கள் எழுதிகிறார்கள்:

حكي عن داود بن علي الظاهري أن النهى مختص ببول الانسان بنفسه وأن الغائط ليس كالبول وكذا إذا بال في اناء ثم صبه في الماء أو بال بقرب الماء وهذا الذي ذهب إليه خلاف اجماع  العلماء وهو أقبح ما نقل عنه في الجمود على الظاهر والله أعلم

தாவூத் இப்னு ளாஹிரிடமிருந்து சொல்லப்படுகிறது;தடையானது மனிதனின் சிறுநீருடன் குறிப்பானது.மலம் சிறுநீரின் சட்டத்தில் நுழையாது.இதே போன்று ஒருவர் பாத்திரத்தில் சிறுநீர் பிடித்து ஊற்றினால்,தண்ணீருக்கு அருகில் சிறுநீர் கழித்து வழிந்தோடி தண்ணீரில் சென்றாலும் பிரச்சனையில்லை.தாவூத் ளாஹிரியின் இந்த வழிமுறை இஜ்மாவிற்கு (ஒன்றுப்பட்டது) எதிரானது.
(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம்,பாகம்:1, பக்கம்:138)

இதே போன்று தான் நாய்,கழுதை மற்றவைகளின் சிறுநீரும் தேங்கிய தண்ணீரை அசுத்தமாக்காது என்பதாகவும் கூறுகின்றனர்.
  வெளிப்படையான வார்த்தைகளை எடுத்து மிகப்பெரிய தவற்றை செய்துள்ளனர்.ஷரீஅத்தின் உயிரோட்டத்தை எவ்விதமாக தகர்த்துள்ளனர் என்பதை இதன்மூலம் புரியமுடிகிறது.





Tuesday, August 10, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/

 

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/ தொடர்:12

ஸஹாபாக்களின் காலத்திற்கு பிறகு தக்லீத் 

மூன்றாவது நூற்றாண்டில் 
தக்லீத் அனுமதிக்கப்பட்டு இருந்திருந்தால் பொற்காலத்தில் அது நிகழ்ந்திருக்க வேண்டும்.நான்கு நூற்றாண்டிற்கு முன்பாக நடைமுறையில் இல்லை.அதன் பிறகு உருவான பித்அத்தாகும்.

பதில்
நாம் இது குறித்து சுருக்கமாக வரலாற்று நூல்களில் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்கின்றோம்.நான்கு நூற்றாண்டிற்கு முன்பாகவும் குறிப்பிட்ட இமாமை,குறிப்பிட்ட மத்ஹபை பின்பற்றும் வழமை இருந்துள்ளது.தலைசிறந்து விளங்கிய ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூட தக்லீத் செய்பவர்களாக இருந்துள்ளனர்.

1)காளி இஸ்மாயில் இப்னு நஸபி கன்தி (ரஹ்) (மரணம்:164) பிக்ஹில் இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களை பின்பற்றுபவர்.மிஸ்ரு தேசத்தின் நீதிபதியாக இருந்தார்.(அல்ஜவாஹிருல் முளீயா 1/16)

2)இமாம் லைஸ் இப்னு ஸஃத் (ரஹ்) (மரணம்:175) அதிகமான மார்க்க ஞானம்,அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவர்.பலமானவர்,
நம்பகமானவராக இருந்தார். (தஹ்தீபுத் தஹ்தீப் 8/461) அக்காலத்தில் மிஸ்ர் தேசத்தின் பெரிய முஃப்தியாக விளங்கினார்.(தஹ்தீபுல் அஸ்மா வல்லுஙாகத் 1/74) நவாப் ஸித்தீக் ஹஸன் கான் எழுதியுள்ளார்:ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்.(இத்ஹாஃப் பக்கம்:237)

3)இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) (மரணம்:181) இமாம், பேரறிஞர்,ஹதீஸ் துறையில் அல்ஹாபிழ்,இஸ்லாத்தின் ஆசான் (தத்கிரதுல் ஹுஃப்பாள் 1/353) 
என்னிடத்தில் உள்ள பிக்ஹ் எனும் மார்க்க ஞானம் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டது.(தாரீக் பக்தாத் 1/355,மனாபிக் முவஃப்பிக் 1/226)
 அல்லாமா அபுல் வலீத் பாஜி மாலிகி கூறுகிறார்:இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் தோழர்களில் முகல்லிதீன்களில் இமாம் இப்னு முபாரக் உள்ளார்.(ஷர்ஹு முஅத்தா 7/300) இமாம் ஸத்ருல் அயிம்மா மக்கி,மெளலா அஹ்மத் இப்னு முஸ்தஃபா (மரணம்:962) எழுதியுள்ளார்:ஹனபி இமாம்களில் ,இமாம் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களும் ஒருவராக இருக்கிறார்கள்.
(மனாகிப் முவஃப்பிக் 2/133,மிஃப்தாஹுஸ்ஸஆதா 2/112)

4) இமாம் வகீஃ இப்னுல் ஜர்ராஹ் (மரணம்:197) இமாம்,ஹதீஸ் துறையில் ஹாபிழ்,பலமானவர் (தத்கிரா 1/282) இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் ஆய்வின்படி தீர்ப்பளித்துக் கொண்டிருந்தார்.
(ஜாமிஉல் பயான்,2/149) 
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் சொல்லின்படி தீர்ப்பளித்தார்கள் (தத்கிரா 1/282,தஹ்தீபுத் தஹ்தீப் 11/127) சுருக்கம் என்னவெனில் இமாம் வகீஃ (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் மாணவராகவும், அன்னாரின் கருத்து,சொல்லைக் கொண்டு தீர்ப்பளிப்பவராகவும் விளங்கினார். 

5) இமாம் யஹ்யா இப்னு ஸஃத் (ரஹ்) (மரணம்:198)அவர்கள் மார்க்க கல்வியில் இமாமாக,ஹதீஸ் துறையில் ஹாபிழ்களின் தலைவராக திகழ்ந்தார்.
(தத்கிரா 1/274) அன்னார் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் சொல்லின் படி தான் தீர்ப்பளித்தார்.(தத்கிரா 1/282,தஹ்தீப் தஹ்தீப் 10/450,அல்ஜவாஹிருல் முளீயா 2/209) 
யஹ்யா இப்னு ஸயீதுனில் கத்தான் (ரஹ்) அவர்களே கூறுகிறார்:அல்லாஹ்வை (அருட்கொடைகளை) பொய்ப் படுத்துவதில்லை.இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கருத்தை விட சிறந்ததை பார்த்ததில்லை.சந்தேகமின்றி அவரிடத்திலிருந்து அதிகமான கருத்துக்களை எடுத்துள்ளேன்.
(தாரீஹ் பக்தாத் 13/354)

6)இமாம் யஹ்யா இப்னு ஜகரிய்யா இப்னு அபூஜாயிதா (ரஹ்) (மரணம்:182) ஹதீஸ் துறையில் ஹாபிழ்,உறுதிமிக்கவர்,வலுவானவர் மார்க்க விற்பன்னராகவும் திகழ்ந்தார்.(தத்கிரா 1/246),அன்னாரும் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களை பின்பற்றுபவராக இருந்தார்.ஹனபி இமாம்களில் ஒருவர்,அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மாணவர்களில் உள்ளவர்.(மிஃப்தாஹுஸ்ஸஆதா 2/119,மனாகிப் கர்தரி  2/206)

7)இமாம் யஹ்யா இப்னு மயீன் (ரஹ்) (மரணம்:233)அறிவிப்பாளர்களை தரம் பிரிக்கும் துறையில் இமாம்,நம்பிக்கையாளர் பலமானவர்.வலுவான இமாம்களில் உள்ளவர்.
(தாரீக் பக்தாத் 14/184)

ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்,அன்னாரை குறித்து எழுதியுள்ளார்:அறிவிப்பாளர்களை தரம் பிரிக்கும் துறையில் இமாம்.இவரின் ஆய்வுதான் ஹதீஸ்களில் பின்பற்றப்படும்.மேலும்  ஹதீஸ் குறித்த ஞானத்தில் படைப்புகள் அனைத்தும் திரும்பும் இடமமாக (அன்னார்) திகழ்ந்தார்.(தஹ்தீபுத்தஹ்தீப் 11/288)

 அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:இமாம் இப்னு மயீன் ஹனபி மத்ஹபை வலுவாக பின்பற்றுபவர்களில் கருதப்படுபவர்.எனினும் ஹதீஸ்கலை வல்லுனராக திகழ்ந்தார்.(அர்ருவாதுஸ்ஸிகாதில் முதகல்லம் ஃபீஹிம் பிமா லா யூஜபு  ரத்துஹும்)

இப்னு மயீன் (ரஹ்) அவர்களே கூறுகிறார்கள்;கிராஅத்தில் என்னிடத்தில் இமாம் ஹம்ஜா (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் பிக்ஹ் நம்பகமானது.அதனின் வரிசையில் மக்களை நான் பார்த்தேன்.
(தாரீக் பக்தாத் 13/347) 
அவர்கள் ஹனபி என்பது உண்மையில் தெளிவான விஷயமாகும்.
(பைஜுல் பாரி 1/169,முகத்தமா நஸபுர்ராயா 43)
மற்றோரு ஆச்சரியமான விஷயம் அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹதீஸ்கலையின் அடிப்படையாக மூன்று பெரியோர்கள் இருந்தனர்.ஹள்ரத் இமாம் யஹ்யா இப்னு ஸயீதுனில் கத்தான் (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் யஹ்யா இப்னு ஜகரிய்யா இப்னு அபூஜாயிதா (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் வகீஃ இப்னு ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் (தத்கிரா 1/327) இமாம் அலி இப்னுல் மதீனி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்;நம் காலத்தின் மார்க்க ஞானம் யஹ்யா இப்னு அபூஜாயிதாவுடன் முடிவுபெற்றது.(அஹ்பார் அபூஹனீபா வ அஸ்ஹாபுஹு,பக்கம்:150) அல்ஹம்துலில்லாஹ் இந்த மூன்று பெரியோர்களும் முகல்லித்கள்தான்.இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களை தான் பின்பற்றினார்கள்.

கலீபா ஜஃபர் இப்னு முஃதஸம் என்கிற அல்முதவக்கில் அலல்லாஹ் (மரணம்:246) 
ஹள்ரத் ஷாபியி (ரஹ்) அவர்களை தக்லீத் செய்த முதல் கலீபாவாக இருந்தார்.அன்னாரின் மத்ஹபை தேர்ந்தெடுத்தார்.
(தாரீகுல் குலஃபா பக்கம்:359)

8)இமாம் அப்துல் ஙப்பார் இப்னு தாவூத் ஹிரானி (ரஹ்)  (மரணம்:204) ஹதீஸின் இல்மில் பலமானவர், உறுதிமிக்கவர்.ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்.(தஹ்தீபுத்தஹ்தீப் 6/366)

9)இமாம் அப்துல் மலிக் இப்னு ஹபீப் (ரஹ்) (மரணம்:239) 
பெரும் பகீஹ்,மாலிக் மத்ஹப் 
(தத்கிரா 2/107)

10)இமாம் இஸ்மாயில் காளி (ரஹ்) (மரணம்:282) அல்ஹாபிழ்,அல்இமாம்,
இஸ்லாத்தின் ஆசான்,ஈராக்கில் மாலிக் மத்ஹபின் தலைமை வகிப்பவர் (ஷைகுல் மாலிகிய்யா பில்ஈராக் தத்கிரா 2/180)

11)இமாம் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் ஹகம் (ரஹ்) (மரணம்:208) இமாம்,ஹாபிள்,உம்மத்தின் இமாம். இப்னு ஹுஜைமா கூறுகிறார்:ஸஹாபாக்கள்,
தாபியீன்களின் சொல்லை அறிந்தவர்களில் 
இப்னு அப்துல் ஹகம் அவர்களை விட வேறு எவரையும் பார்த்ததில்லை.அவர்களும் கூட மாலிக் (ரஹ்) அவர்களின் மாணவர்களில் மிஸ்ர் தேசத்தின் புகஹாக்களில் ஒருவராக இருந்தார்கள்.(தத்கிரா 2/116) மேலும் மாலிக் மத்ஹபில் பிடிப்புள்ளவராக இருந்தார்கள்.
பிக்ஹ் சட்டங்களில் ஷாபியி மற்றும் ஹனபிகளுக்கு எதிராக நூல்கள் எழுதியுள்ளார்கள்.
(அத்தீபாஜில் மத்ஹப் லி இப்னு பர்ஹுன் பக்கம்:232,தத்கிரா 4/115)

12)இமாம் அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹம்மத் அஸ்ரம் (ரஹ்) (மரணம்:260) பெரும் ஹாபிள், பேரறிஞராக இருந்தார்.அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள்,அன்னாரை ஸாஹிபுல் இமாம் அஹ்மத் என்பதாக எழுதியுள்ளார்.(தத்கிரா 2/135) ஹள்ரத் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களை பின்பற்றும் முகல்லித் 

13)இமாமுல் மைமூன் அபுல் ஹஸன் அப்துல் மலிக் இப்னு அப்துல் ஹுமைத் (மரணம்:274) அல்ஹாபிள் அல்ஃபகீஹ்.ஹள்ரத் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களை பின்பற்றும் பெரியோர்களில் இருந்தார்.(தத்கிரா 2/162)
14) இமாம் ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கிர்மானி (மரணம்:280) ஹாபிழ்,பகீஹ் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களை பின்தொடர்பவர்,முகல்லித்தாக இருந்தார்.(தத்கிரா 2/170)

15)இமாம் அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹம்மத் மர்வஜி (ரஹ்) (மரணம்:275) முன்மாதிரி,பகீஹ்.இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களின் மத்ஹபின் மூத்த முகல்லித்.அஹ்மத் இப்னு ஹன்பல் மாணவர்களில் கண்ணியமிக்கவர்.(தத்கிரா 2/185)

16)இமாம் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு இப்ராஹீம் (மரணம்:290)இமாம்,ஹாபிள், பேரறிஞர்,மார்க்க விற்பன்னர் மாலிகி மத்ஹபை சேர்ந்தவர்.(தத்கிரா 2/207)

17)இமாம் மூஸா இப்னு இஸ்ஹாக் காளி (ரஹ்) (மரணம்:297) இமாம்,ஹாபிள்,ஃபகீஹ் ஷாபியி மத்ஹபை சேர்ந்தவர்.
(தத்கிரா 2/216)

18)இமாம் முஹம்மது இப்னு நள்ர் (ரஹ்) (மரணம்:291)ஹாபிள்,ஃபகீஹ்.
ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்.அன்னாரின் அனைத்து கோத்திரமும் ஹனபியாக இருந்தனர்.(தத்கிரா 2/220)

19)ஹள்ரத் இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாயில் புகாரி (ரஹ்) (மரணம்:256)
ஹதீஸில் அமீருல் முஃமினீன்.ஷைகுல் இஸ்லாம்,ஹதீஸில் ஹாபிள்களின் இமாமாக இருந்தார்.(தத்கிரா 2/122) தாஜுத்தீன் அபூநஸ்ர் அப்துல் வஹ்ஹாப் ஸுப்கி ஷாபியி அவர்கள்,அன்னாரை ஷாபியி மத்ஹபில் இணைத்துள்ளார்.(தபகாதுஷ்ஷாபியில் குப்ரா 2/1,19)

20)ஹள்ரத் இமாம் முஹம்மது இப்னு ஷுஐப் அந்நஸாயி (ரஹ்) (மரணம்:302) ஷாபியி மத்ஹபை சேர்ந்தவர்.அல்லாமா கதீப் எழுதியுள்ளார்;کان شافعى المذهب (இக்மால் பக்கம்:627)

21) இமாம்,முஹத்திஸ் அபூஅவானா (ரஹ்) (மரணம்:316) அல்ஹாபிள்,மிகவும் பலமானவர்.ஷாபியி மத்ஹபை சேர்ந்தவர்.அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:ஷாபியின் நூல்களை,மத்ஹபை ஸஃப்ராயீனில் முதலில் கொண்டு சென்றவர்.(தத்கிரா 3/3)

22)இமாம் அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்கிலால் (ரஹ்)(மரணம்:311) ஃபகீஹ், பேரறிஞர்,ஹாபிள்.அல்லாமா தஹபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:அன்னார்,இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களின் ஞானத்தை ஒரு சேர போதிக்கும் ஆசான்,கோர்வை செய்தவர்.(தத்கிரா 3/7)

23)இமாம் தஹாவி (ரஹ்) (மரணம்:321) இமாம்,அல்லாமா,ஹாபிள்,ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்.(தத்கிரா 3/28)

24)இமாம் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு உமர் (மரணம்:306) இமாம், பேரறிஞர்,ஷைகுல் இஸ்லாம்,ஷாபியி மத்ஹபின் முன்மாதிரி (தத்கிரா 3/30) இவர்களின் மூலமாக ஷாபியி மத்ஹப் பரவியது.(பக்கம்:31)

25)இமாம் அபூபக்கர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஜியாத் (மரணம்:324) ஹாபிள்,அல்லாமா,ஷாபியின் பகீஹ்.இமாம் ஹாகிம் 
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்: ஈராக்கில் அக்காலத்தில் ஷாபிகளின் இமாம்,பிக்ஹ் சட்டங்கள்,ஸஹாபாக்களின் கருத்து வேறுபாடுகளை மிக அறிந்தவர்.(தத்கிரா 3/37,38)

26)முஹத்திஸ் முஹம்மது இப்னு யூசுப் (ரஹ்) (மரணம்:330) அல்ஹாபிள்,
பலமானவர்.ஷாபியி வழிமுறையை சேர்ந்தவர்.
(தத்கிரா 3/54)

27)இமாம் அபுல்காஸிம் அம்ர் இப்னுல் ஹஸன் அல்பக்தாதி (ரஹ்) (மரணம்:334) ஹம்பலிகளின் பெரியோர்.(தத்கிரா 3/62)

28)இமாம் அபுல் அப்பாஸ் இப்னு காஸ் (ரஹ்)  (மரணம்:335) ஷாபியின் மூத்தவர்.(தத்கிரா 3/63)

வாசகர்களே! வரலாற்று நூல்களில் மத்ஹபுகளை பின்பற்றும் அறிஞர்களின் நீண்ட பட்டியல் உள்ளது.அனைவரின் பெயரையும் எழுதினால் உறுதியாக வாசிப்பில்  களைப்படைந்து விடுவோம்.எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

Thursday, August 5, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/

மத்ஹபுகளின் அவசியம் தொடர்:11

ஸஹாபாக்களின் காலத்தில் தனிநபரை பின்பற்றுதல் 
(தக்லீத் ஷஹ்ஷி) பகுதி:2

மூன்றாவது ஆதாரம்
عن معاذ بن جبل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لما أراد أن يبعث معاذا إلى اليمن قال كيف تقضي إذا عرض لك قضاء قال أقضي بكتاب الله قال فإن لم تجد في كتاب الله قال فبسنة رسول الله صلى الله عليه وسلم قال فإن لم تجد في سنة رسول الله صلى الله عليه وسلم ولا في كتاب الله قال أجتهد رأيي ولا آلو فضرب رسول الله صلى الله عليه وسلم صدره وقال الحمد لله الذي وفق رسول رسول الله لما يرضي رسول الله ஜாமிஉத்திர்மிதி,ஸுனன் அபூதாவூத் போன்ற நூல்களில் முஆத் இப்னு ஜபல் ரளி அவர்களின் அறிவிப்பு: நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரளி) அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பும் போது "உம்மிடத்தில் ஏதேனும் மஸ்அலா வந்தால் எப்படி தீர்வு செய்வீர் எனக் கேட்டார்கள்"? அல்லாஹ்வின் வேதத்திற்கு ஏற்ப தீர்ப்பு செய்வேன் என்றார்கள்.அல்லாஹ்வின் வேதத்தில் தீர்வு இல்லையெனில் என்ன செய்வீர்? அல்லாஹ்வின் தூதரின் சுன்னத்திற்கு ஏற்ப தீர்ப்பு அளிப்பேன் என்றார்கள்.அல்லாஹ்வின் வேதம்,சுன்னாவில் தீர்வு இல்லையெனில் என்ன செய்வீர்? எனது கருத்தின்படி ஆய்வு செய்வேன்.அதில் குறைவு செய்யமாட்டேன்.இதன்பேரில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (மகிழ்ச்சியில்) முஆத் (ரளி) அவர்களின் நெஞ்சில் தனது புனிதகரத்தால் அடித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் பொருந்திக் கொள்வதை தூதரின் தூதுவருக்கு (முஆத் இப்னு ஜபல்) அருள்புரிந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத்,பாடம்:كتاب الاقضية தலைப்பு:باب اجتهاد الرأي فى القضاء ) 
இந்த சம்பவத்தில் தனிநபரை தக்லீத் செய்வதற்கு பெரும் ஆதாரமாகும்.இதில் ஒரு விஷயத்தை ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமாகும்.அதாவது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் தேசத்திற்கு தனது மார்க்க ஞானம் பெற்ற ஸஹாபாக்களில் தனிச்சிறப்பு பெற்ற ஸஹாபியை அனுப்பியுள்ளார்கள்.அவரை நீதிபதியாக,ஆசிரியராக,முஜ்தஹிதாக ஆக்கி யமன்வாசிகளுக்கு அவரை பின்பற்றுவதை அவசியமாக்கினார்கள்.குர்ஆன், சுன்னாவிலிருந்து மட்டுமல்ல மாறாக,கியாஸ் (ஒப்பீடு) இஜ்திஹாதிற்கு ஏற்ப தீர்ப்பளிப்பதை அனுமதித்துள்ளார்கள்.இதன் மூலம் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் வாசிகளுக்கு அவரை பின்பற்றுவதை வலியுறுத்தியுள்ளார்கள் என்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் யமன் தேசத்திற்கு நீதிபதியாக மட்டும்வரவில்லை.மாறாக,ஆசிரியர்,
முஃப்தி (தீர்ப்பளிப்பவர்) என்ற தகுதியின் பேரில் புறப்பட்டுச் சென்றார்கள்.எனவே இந்த ஹதீஸின் கருத்தானது ஆட்சியாளர் என்பது சரியில்லை. ஸஹீஹுல் புகாரியில் வருகிற அறிவிப்பு: 
عن الأسود بن يزيد قال أتانا معاذ بن جبل باليمن معلما وأميرا فسألناه عن رجل توفي وترك ابنته وأخته فأعطى الابنة النصف والأخت النصف 
அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் யமன் நாட்டுக்கு எங்களின் போதகராகவும் ஆட்சியாளராகவும் வந்தார்கள். அன்னாரிடம் நாங்கள், தம் மகளையும் சகோதரியையும்விட்டுவிட்டு இறந்த ஒருவரைக் குறித்து (பாகப் பிரிவினை தொடர்பாக)க் கேட்டோம். அப்போது அவர்கள் (மொத்தச் சொத்தில்) மகளுக்குப் பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் அளிக்கும்படி கூறினார்கள். (ஆதாரம்:ஸஹீஹ் புகாரி,பாடம்:كتاب الفرائض தலைப்பு:باب ميراث البنات 2/997) இதில் ஹள்ரத் முஆத் இப்னு ஜபல் (ரளி) அவர்கள் முஃப்தி எனும் தகுதியின் படி தீர்ப்பளித்துள்ளார்.அதற்கு ஆதாரத்தை விளக்கவில்லை.அதனை தக்லீத் (பின்பற்றுதல்) என கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தில் முஆத் (ரளி) அவர்கள் ஆதாரத்தை கூறவில்லையென்றாலும் அவர்களின் தீர்ப்பானது குர்ஆன்,சுன்னாவின் பேரில்தான் இருந்துள்ளது. மற்றொரு பத்வாவின் தீர்ப்பானது முஆத் (ரளி) அவர்களின் ஆய்வின் பேரில் இருந்துள்ளது ஹள்ரத் அபுல் அஸ்வத் தைலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 
عن أبى الاسود الديلى قال كان معاذ باليمن فارتفعوا إليه في يهودي مات وترك أخا مسلماً، فقال معاذ: إني سمعت رسول الله عنه يقول إن الإسلام يزيد ولا ينقص فورثه முஆத் (ரளி) அவர்கள் யமனில் இருந்தார்கள்.யஹுதி,முஸ்லிம் சகோதரரை விட்டுவிட்டு மரணித்துவிட்டார்.(முஸ்லிம் சகோதரர் வாரிசாகுவாரா? இல்லையா?) என்பதை குறித்து மக்கள் அவரிடத்தில் வந்தனர்.அதற்கு ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் கூறினார்கள்; "இஸ்லாம் கூட்டவும் செய்யாது.குறைக்கவும் செய்யாது". எனவே அவர் வாரிசு சொத்தை பெறுவார் என்பதாக தீர்ப்புக்கொடுத்தார்கள். (ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் 5/230,236) இங்கு ஹள்ரத் முஆத் (ரளி) ஆய்வின் பேரில் வாரிசுரிமையுடன் சம்பந்தப்படாத ஹதீஸிலிருந்து சட்டத்தை எடுத்துள்ளார்கள்.இது அவரின் ஆய்வின் பேரில் உள்ளது.இதனை யமன்வாசிகள் ஏற்றனர். 
விளக்கம்:பெரும்பாலான ஸஹாபாக்கள்,புகஹாக்களிடத்தில் முஸ்லிம்,காபிருக்கு வாரிசாக மாட்டார்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் முஸ்லிம் காபிருக்கு வாரிசாக மாட்டார். 

முஸ்னத் அஹ்மத்,முஃஜமு தப்ரானியில் வரும் அறிவிப்பு: 
أن معاذا قدم على اليمن فلقيته امرأة من خولان ....... فقامت فسلمت على معاذ ....فقالت من أرسلك أيها الرجل قال لها معاذ أرسلني رسول الله صلى الله عليه وسلم قالت المرأة أرسلك رسول الله صلى الله عليه وسلم وأنت رسول رسول الله صلى الله عليه وسلم أفلا تخبرني يا رسول رسول الله صلى الله عليه وسلم فقال لها معاذ سليني عما شئت 
ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் யமன் தேசத்திற்கு வந்தபோது கவ்லான் பகுதியை சேர்ந்த பெண்மணி அவர்களிடத்தில் வந்தாள்.ஸலாம் கூறினாள்.மனிதரே! உம்மை யார் அனுப்பினார்கள்? ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் கூறினார்கள்;என்னை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பினார்கள்.பெண்மணி கூறினாள்;அல்லாஹ்வின் தூதர் உம்மை அனுப்பினாரா? அல்லாஹ்வின் தூதரின் தூதுவரா?நீர் எனக்கு (தீனின் விஷயங்களை)கூறமாட்டீரா? அதற்கு என்னிடத்தில் விரும்பியதை கேளுங்கள் என்று பதில் அளித்தார்கள்.(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் 4/307,308 தலைப்பு:باب حق الزوج على المرأة) ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் அதிகாரி என்பதாக மட்டும் அனுப்பப்படவில்லை.மாறாக, பெருமானாரின் தூதுவர் என்பதாகவும்,மக்களுக்கு மார்க்க சட்டங்களை போதிப்பது அவர்களின் கடமையாக இருந்தது.இதன் படி அந்தப் பெண்மணி சந்தேகங்களை கேட்டாள்.அவளின் சூழ்நிலையை புரிந்து ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் என்னிடத்தில் விரும்பியதை கேள் என்றார்கள்.இந்த ஹதீஸின் பிற்பகுதியில் வருகிற விஷயம் மனைவி, கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என அந்தப் பெண் கேட்டாள்.அதற்கு முஆத் (ரளி) அவர்கள் ஆயத்தையோ ஹதீஸையோ கூறவில்லை.மாறாக,இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு ஏற்ப பதில் அளித்தார்கள்.அதற்கு எந்த ஒரு ஆதாரமும் கூறவில்லை.அவர்கள் நீதிபதியாக மட்டும் அனுப்பப்படவில்லை.மாறாக,பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுவர் எனும் அந்தஸ்த்தில் மக்களுக்கு ஷரீஅத்தின் சட்டங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.மக்கள் அதனை தக்லீத் செய்யவேண்டும் என்பதை தவிர அவரை அனுப்பியதற்கு வேறு என்ன காரணம் இருக்கும்? பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களில் ஹலால்,ஹராம் மிக அறிந்தவர் என்பதாக சிறப்பித்துக் கூறப்பட்டவர்களில் ஹள்ரத் முஆத் இப்னு ஜபல் (ரளி) அவர்கள் குறிப்பிடதக்கவர். அன்னார் யமன்வாசிகளுக்கு மட்டுமல்ல.மற்ற ஸஹாபாக்களும் அவரை பின்பற்றினார்கள். மற்றோர் அறிவிப்பில் 
عن أبي مسلم الخولاني قال أتيت مسجد أهل دمشق فإذا حلقة فيها كهول من أصحاب النبي صلى الله عليه وسلم (و فى رواية كثير ابن هشام:فإذا فيه نحو ثلاثين كهلا من أصحاب النبي صلى عليه وسلم) وإذا شاب فيهم أكحل العين براق الثنايا كلما اختلفوا في شي ردوه إلى الفتى فتى شاب قال قلت لجليس لى من هذا؟ قال هذا معاذ بن جبل 
டமாஸ்கஸ் நகரில் ஒரு பள்ளிவாசல். ஏறக்குறைய முப்பதுபேர் கொண்ட தோழர்களின் கல்வி பயிலும் குழு ஒன்று அமர்ந்திருந்தது. அனைவரும் மூத்த தோழர்கள். அவர்களுடன் அமைதியாய் இளைஞர் (முஆத்) அமர்ந்திருந்தார். அவரின் கண்களில் சுர்மாவும்,பற்கள் பளிச்சென இருந்தன.தோழர்கள் மத்தியில் ஏதாவது ஒன்றைப் பற்றி கருத்து வேறுபாடு தோன்றும்போதெல்லாம், அவர்கள் முஆதை அணுகித் தங்களது சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். அபூ முஸ்லிம் அல்-கவ்லானி என்பவர் அப்பொழுது அந்தப் பள்ளிவாசலுக்கு வந்திருந்தார். அவருக்கு ஆச்சரியமாயிருந்தது. 'வயதில் மூத்த தோழர்களுக்கு இளைஞர் ஒருவர் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்; அவர்களும் அப்படி கவனித்துக் கேட்கிறார்கள்! யாராய் இருக்கும்?' அருகிலிருந்த ஒருவரிடம் விசாரித்தார். “அவர்தாம் நபித்தோழர் முஆத் பின் ஜபல்,“ என பதில் வந்தது. (ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் 5/236) ஏறத்தாழ முப்பது ஸஹாபாக்கள் கருத்துவேறுபாடுள்ள சட்டங்களில் ஹள்ரத் முஆத் (ரளி) அவர்களை பின்பற்றினர்.இந்த நிகழ்வில் கவனிக்க வேண்டிய விஷயம் ஓர் அறிவிப்பில் வரும் வாசகம் إذا اختلفوا فى شئ اسندوه إليه و صدروا عن رأيه ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால்,அவரை அணுகுவார்கள்.மேலும் அவரின் கருத்தை ஏற்பார்கள். சுருக்கம் என்னவெனில் முஆத் (ரளி) ஹலால்,ஹராம் குறித்து மிக அறிந்தவர்.ஸஹாபாக்கள்,அன்னாரை தக்லீத் செய்தார்கள்.இதனால் அண்ணலார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பினார்கள்.அவர்களிடத்தில் ஆட்சி,கற்பித்தல்,தீர்ப்பளித்தல் போன்ற அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டது.அனைத்து மார்க்க சட்டங்களிலும் அவரை அணுகவேண்டும் என்பதை யமன் வாசிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.இதன்பேரில் அவர்களும் செயல்பட்டனர்.இதற்கு பெயர்தான் (தக்லீத் ஷஹ்ஷி) தனிநபரை பின்பற்றுதல் என சொல்லப்படும். 
நான்காவது ஆதாரம்
عن عمرو بن ميمون الأودي قال قدم علينا معاذ بن جبل اليمن رسول رسول الله صلى الله عليه وسلم إلينا قال فسمعت تكبيره مع الفجر رجل أجش الصوت قال فألقيت عليه محبتي فما فارقته حتى دفنته بالشام ميتا ثم نظرت إلى أفقه الناس بعده فأتيت ابن مسعود فلزمته حتى مات அம்ர் இப்னு மைமூன் அதவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:முஆத் இப்னு ஜபல் (ரளி) அவர்கள் உங்களிடத்தில் யமன் தேசத்திற்கு பெருமானாரின் தூதுவராக வந்திருந்தார்கள்.நான் பஜ்ரில் அவரின் கனத்த குரலில் தக்பீர் சப்தத்தை கேட்டேன்.என் உள்ளத்தில் (அல்லாஹ்வின் புறத்திலிருந்து)அவரின் பிரியமானது பின்னிப்பிணைந்து விட்டது.அதன்பிறகு அன்னார் ஷாம் தேசத்தில் மரணித்து அடக்கம் செய்யும் வரை அவரை விட்டு பிரியவில்லை.அவருக்கு பிறகு அனைவரையும் விட பெரிய மார்க்க அறிஞர் யார்? என சிந்தித்தேன்.எனவே இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களிடம் வந்தேன்.அன்னார் மரணிக்கும் வரை அவரின் சகவாசத்தில் இருந்தேன். (ஆதாரம்: அபூதாவூத் தலைப்பு:باب إذا اخر الامام الصاوى عن الوقت 1/62) 
இந்த அறிவிப்பில் அம்ரு இப்னு மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியது முஆத் (ரளி) அவர்களின் மரணித்திற்கு பிறகு பெரிய மார்க்க விற்பன்னர் யார்? என எண்ணினேன். இதன் மூலம் அறியமுடிகிறது.முதலில் முஆத் (ரளி) பிறகு இப்னு மஸ்ஊத் (ரளி) சகவாசத்தில் இருந்தவரை அவர்களிடத்தில் மட்டும் சென்று மஸாயில்களை அறிந்து செயல்பட்டார்.எனவே ஒரே சமயத்தில் ஒரு பகீஹ் இடத்தில் (மார்க்க விற்பன்னரிடத்தில்)மட்டும் திரும்புவது தக்லீத் ஷஹ்ஷி (தனிநபரை பின்பற்றுதல்) என சொல்லப்படும். அதிகப்படியான முன்உதாரணங்கள்; இது போன்று அதிகமான ஸஹாபாக்களிடமிருந்தும் எடுத்துச்சொல்லப்பட்டு உள்ளது.ஒருவர் ஒரு ஸஹாபியை தனது முன்மாதிரியாக வைத்து அமல் செய்வார்.மற்றொருவர் வேறொரு ஸஹாபியை முன்மாதிரியாக வைத்து அமல் செய்வார். 

இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: الشعبى قال: من سره أن يأخذ بالوثيقة فى القضاء فليأخذ بقضاء عمر தீர்ப்பில் உறுதியானதை விரும்புவர் உமர் (ரளி) அவர்களின் சொல்லை எடுத்துக் கொள்ளட்டும்.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் லி இப்னுல் கைய்யிம் 1/15) 
ஹள்ரத் முஜாஹித் (ரஹ்) அவர்களின் சொல் إذا اختلف الناس فى شئ فانظروا ما صنع عمر فخذوا به மக்களுக்கு மத்தியில் எதேனும் மஸ்அலாவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் உமர் (ரளி) அவர்களின் செயலைப் பார்த்து அதனையே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் லி இப்னுல் கைய்யிம் 1/15) 
இமாம் அஃமஷ் (ரஹ்), ஹள்ரத் இப்ராஹிம் நகயி (ரஹ்) அவர்களின் விஷயத்தில் கூறுகிறார்கள்: 
قال الأعمش عن إبراهيم: إنه كان لا يعدل بقول عمر وعبد الله إذا اجتمعا . فإذا اختلفا كان قول عبد الله أعجب إليه உமர் (ரளி) அவர்கள், இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் ஏதேனும் மஸ்அலாவில் ஒன்றுப்பட்டால் ஹள்ரத் இப்ராஹிம் நகயி (ரஹ்) அவர்கள் இருவருக்கும் நிகராக எவரின் சொல்லையும் கருதமாட்டார்.இருவருக்கும் மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களின் சொல்லை தேர்ந்தெடுப்பதை விரும்புவார்கள்.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் 1/13,14) 
ஹள்ரத் அபூதமீமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: قدمنا الشام فإذا الناس مجتمعون يطيفون برجل قال قلت من هذا؟ قالوا هذا أفقه من بقى من أصحاب النبي يَةِ هذا عمرو البكالي. ஷாம் வந்த போது மக்கள் ஒருவரிடத்தில் ஒன்றுசேர்ந்து அவரை சுற்றி அமர்ந்து இருந்ததை பார்த்தோம்.அவர் யார்? எனக்கேட்டேன்.எஞ்சிய ஸஹாபாக்களில் பெரிய பகீஹ்.அவர் (பெயர்) அம்ர் பகாலி (ரளி) என்று சொன்னார்கள்.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் 1/14) 
இமாம் முஹம்மத் இப்னு ஜரீர் தப்ரி அவர்கள் கூறுகிறார்கள்: 
وقال محمَّد بن جرير: "لم يكن أحد له أصحاب معروفون حرروا فتياه ومذاهبه في الفقه غير ابن مسعود، وكان يترك مذهبه وقوله لقول عمر، وكان لا يكاد يخالفه في شيء من مذاهبه، ويرجع من قوله إلى قوله". وقال الشَّعبي: "كان عبد الله لا يقنت، وقال: ولو قنت عمر لقنت عبد الله". 
(ஸஹாபாக்களில்) இந்தளவிற்கு பிரபல்யமான மாணவர்கள்,பத்வாக்கள் மத்ஹபின் சட்டங்கள் தொகுக்கப்பட்டு, இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களுக்கு இருப்பது போன்று எவருக்கும் அமையவில்லை.இத்துணை சிறப்பு இருப்பதுடன் தனது வழிமுறை,சொல்லை உமர் (ரளி) சொல்லிற்கு எதிரில் விட்டுவிட்டார்கள்.உமர் (ரளி) பிக்ஹ் சட்டங்களில் ஏறத்தாழ எதற்கும் அவர் மாறு செய்யவில்லை.இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் குனூத் ஓதமாட்டார்கள்.ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் குனூத் ஓதினால் ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) கட்டாயம் ஓதுவார்கள்.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் 1/6) 
ஆக,இந்த அனைத்தும் தனிநபரை (தக்லீத் ஷஹ்ஷி) பின்பற்றுவதற்கு உதாரணமாகும்.எனினும்,தக்லீத் செய்பவர்களை கவனித்து பல படித்தரங்கள் உள்ளது.அவைகளுக்கு ஏற்ப சில சமயங்களில் ஒருவர் இமாமை பின்பற்றுபவராக இருப்பதுடன் சில மஸாயில்களை அவருடன் கருத்துவேறுபாடு கொண்டு இருப்பார்.எனினும், ஒட்டுமொத்தத்தை கவனித்து அவரின் தக்லீதும் ஷஹ்ஷி (தனிநபரை பின்பற்றுவது) தான்.இதனால்தான் ஏராளமான மஸாயில்களில் ஹனபிகள் இமாமின் கருத்திற்கு மாற்றமாக பத்வா கொடுத்துள்ளனர்.அப்போதும் அபூஹனீபா (ரஹ்) அவர்களை பின்பற்றுபவர்கள் என்பதாகத்தான் சொல்லப்படும்.