Saturday, March 23, 2019

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை


ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்

தொடர்:8

ஸஜ்தா ஸஹ்வு குறித்து விளக்கம்

குறைப்பது அதிகப்படுத்துவதன் பேரில் ஸஜ்தா ஸஹ்வு செய்வது

عن ابن ابی سعيد الخدري رضي الله عنه ان رسول الله ﷺ قال اذا صلی احدكم فلم يدر زاد ام نقص فليسجد سجدتين و هو قاعد

அபூஸயீத் அல்குத்ரி (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்

உங்களில் ஒருவர் தொழுகையில் குறைத்ததோ அல்லது அதிகப்படுத்தியதோ அறியவில்லையானால் (இருப்பில்) அமர்ந்தவாறு இரு ஸஜ்தா செய்யட்டும்!

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/154,தலைப்பு: باب من قال يتم علی اكثر ظنه ஸஹீஹ் முஸ்லிம் 1/211,தலைப்பு:باب النهی عن نشد الضالة فی المسجد )


ஸஜ்தா ஸஹ்வு ஸலாமிற்கு பிறகு


عنِ ابن مسعود رضي الله عنه قال: صلى النبي صلى  الله عليه وسلم -قال إبراهيم: لا أدري -زاد أو نقص- فلما سلم قيل له: يا رسول الله، أحدث في الصلاة شيء؟ قال: «وما ذاك»، قالوا: صليت خمسا فسجد سجدتين بعد ما سلم


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்
(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகை ஐந்து ரக்அத் தொழவைத்தார்கள்.(தொழுகைக்கு பிறகு) அண்ணலாரிடத்தில் கேட்கப்பட்டது தொழுகையில் (ரக்அத்துகள்)  அதிகமாக்கப்பட்டுள்ளதா? அண்ணலார் அவர்கள் 'என்ன விஷயம்?' என கேட்டார்கள் தாங்கள் ஐந்து ரக்அத் தொழவைத்தீர்கள் என ஒருவர்  கூறினார்.எனவே  ஸலாத்திற்கு பிறகு இரு ஸஜ்தா செய்தார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி  1/163,தலைப்பு:باب اذا صلی خمسا ஸுனன் நஸாயி 1/185 தலைப்பு:باب ما يفعل من صلی خمسا )

ஸஜ்தா ஸஹ்வில் இரு ஸஜ்தாக்கள்


عن ثوبان رضي الله قال سمعت رسول الله ﷺ يقول فی كل سهو سجدتان بعد ما سلم

"ஸலாமிற்கு பிறகு மறதிக்கு இரு ஸஜ்தாக்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை கேட்டதாக ஸவ்பான் (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஆதாரம்:சுனன் இப்னுமாஜா 1/85, தலைப்பு:باب ماجاء فيمن سجدهما بعد السلام،அபூதாவூத் 1/149,தலைப்பு:باب من قام اثنتين ولم ستشهد )


ஸஜ்தா ஸஹ்விற்கு முன்பாக ஒரு ஸலாம் கொடுப்பது


عن عمران بن حصين رضي الله عنه قال سلم رسول الله ﷺ فی ثلاث ركعات من العصر....... فصلی الركعة التی كان ترك ثم سلم ثم سجد سجدتي السهو ثم سلم

ஹஜ்ரத் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
ஒரு முறை அஸர் தொழுகை மூன்று ரக்அத் தொழுகை நடத்தினார்கள்.(இது குறித்து கூறப்பட்டது) விடுபட்ட ரக்அத்தை தொழுதார்கள்.பிறகு (ஒரு)
ஸலாம் கொடுத்தார்கள்.பிறகு ஸலாமிற்கு பிறகு இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 1/214,தலைப்பு:باب النهی عن نشد الضالة )

عن الحسن رحمة الله عليه أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم وأبا بكرٍ وعُمرَ كانوا يسلِّمون تسليمةً واحدةً"


ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் (ரளி) அவர்கள் உமர் (ரளி) அவர்கள் ஒரு ஸலாம் கொடுப்பார்கள்.

(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா 3/59,60 தலைப்பு:باب من كان يسلم تسليمة واحدة ஹதீஸ் இலக்கம்:3081)

தஷஹ்ஹுத் ஓதிய பிறகு
ஸஜ்தா ஸஹ்வு


عن أبي عبيدة ، عن عبد الله ، عن النبي - صلى الله عليه وسلم- قال: " إذا كنت في صلاة، فشككت في ثلاث أو أربع، وأكثر ظنك على أربع، تشهدت، ثم سجدت سجدتين، وأنت جالس قبل أن تسلم، ثم تشهدت أيضا ثم تسلم

ஹஜ்ரத் அபூஉபைதா இப்னு அப்துல்லாஹ் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நீர் தொழுகையில் இருக்கும் போது நான்கா? அல்லது மூன்றா? என சந்தேகம் ஏற்பட்டு,மிகைப்பான எண்ணம் நான்கு என தோன்றினால் தஷஹ்ஹுத் ஓதுவீராக! ஸலாமிற்கு முன்பாக அமர்ந்த நிலையில்  இரு ஸஜ்தாக்கள் செய்வீராக! பிறகு தஷஹ்ஹுத் ஓதுவீராக! பிறகு ஸலாம் கொடுப்பீராக!

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/154,தலைப்பு:باب من قال يتم علی اكبر ظنه )

                   வித்ரு தொழுகை

வித்ரு தொழுகை வாஜிப்


عن عبد الله بن عمر رضي الله عنه عن النبي ﷺ قال اجعلوا اخر صلوتكم بالليل وترا

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் வித்ரு தொழுகையை இரவின் கடைசி தொழுகையாக ஆக்கிகொள்ளுங்கள்!

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/136, தலைப்பு: باب ليجعل اخر صلوته وترا கியாமுல்லைல் லில்மர்வஜி பக்கம்:218,முஸன்னப் இப்னு அபீ ஷைபா 4/463, من قال يجعل الرجل اخر صلوته بالليل ஹதீஸ் இலக்கம்:6765)

இந்த ஹதீஸில் اجعلوا என்ற வார்த்தையானது கட்டளை வாக்கியமாக வந்துள்ளது.பிக்ஹின் பிரபல்யமான விதி

الامر للوجوب ما لم تكن قرينة خلافه
ஷரீஅத்தில் கட்டளையாக கூறப்படுபவை வாஜிப் எனும் கடமையாகும்.இதற்கு எதிரான காரணி இல்லாதவரை

(ஆதாரம்:
கவாயிதுல் ஃபிக்ஹ் லிமுஹம்மத் அமீமுல் இஹ்ஸான் பக்கம்:62,அல்அஹ்காமு லில்ஆமிதி 2/165,கஷ்புல் அஸ்ரார் லி அப்தில் அஜீஜ் புகாரி 1/173)

عن ابي ايوب الانصار رضي الله عنه مرفوعا قال الوتر حق او واجب

ஹஜ்ரத் அபூஅய்யூப் அன்ஸாரி (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை அறிவிக்கிறார்கள்;
வித்ரு கடமையாகும்.

(ஆதாரம் முஸ்னத் அபூதாவூத் தயாலிஸி பகுதி 1/314,ஹதீஸ் இலக்கம்:594,ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/204,தலைப்பு: باب الوتر ,ஸுனன் தாரகுத்னி பக்கம்:283,الوتر بخمس او بثلاث او بواحدة الخ ,ஹதீஸ் இலக்கம்:1624)


عن عبد الله بن بريدة عن ابيه قال سمعت رسول الله ﷺ يقول الوتر جق فمن لم يوتر فليس منا الوتر جق فمن لم يوتر فليس منا الوتر جق فمن لم يوتر فليس منا

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு புரைதா (ரளி) அவர்கள் அவரது தந்தையிடம்
அவரின் தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டதை அறிவிக்கிறார்கள்;

வித்ரு என்பது கடமையாகும்.வித்ரு தொழுதாவர் நம்மை சார்ந்தவர் இல்லை.வித்ரு தொழுதாவர் நம்மை சார்ந்தவர் இல்லை.வித்ரு தொழுதாவர் நம்மை சார்ந்தவர் இல்லை.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/208,தலைப்பு:باب فيمن لم يوتر முஸன்னப் இப்னு அபீஷைபா 4/505,தலைப்பு: باب من قال الوتر واجب عن ابی هريرة ஹதீஸ் இலக்கம்:6932)


عن ابي مريم قال جاء رجل الی علي رضي الله عنه فقال اني سميت و نسيت الوتر حتی طلعت الشمس فقال اذا استيقظت و ذكرت فصل

அபூமர்யம் அவர்கள் அறிவிக்கிறார்கள்; அலி (ரளி) அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்தார்.சூரியன் உதயமாகும் அளவிற்கு வித்ரு தொழுகையை மறந்து தூங்கிவிட்டேன் என்று கூறினார் அதற்கு அன்னார் அவர்கள் கூறினார்கள் விழித்து (வித்ரு) நினைவு வந்தால் தொழவேண்டும்.

(ஆதாரம்: முஸன்னப் இப்னு அபிஷைபா 4/485,باب من قال يوتر و ان اصبح و عليه قضاءه ஹதீஸ் இலக்கம்:6869)

வித்ரு தொழுகை மூன்று ரக்அத்


عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ  ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ  رَضِيَ اللَّهُ عَنْهَا : " كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ ؟ فَقَالَتْ :  مَا كَانَ يَزِيدُ فِي  رَمَضَانَ وَلَا فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً ، يُصَلِّي أَرْبَعًا ، فَلَا تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا ، فَلَا تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ، ثُمَّ يُصَلِّي ثَلَاثًا

ஹஜ்ரத் அபூஸலமா இப்னு அப்துர்ரஹ்மான் அவர்கள்
ஆயிஷா (ரளி) அவர்களிடத்தில் கேட்டார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானில் எவ்வாறு தொழுதார்கள்? அதற்கு அன்னை அவர்கள் கூறினார்கள்; ரமலான் ரமலான் அல்லாத காலங்களில் பதினொன்று ரக்அத்தை விட அதிகமாக தொழ நான் பார்த்ததில்லை.முதலில் நான்கு ரக்அத் தொழுவார்கள்.அதனின் நீளத்தையும் அழகையும் கேட்கவேண்டாம்.பிறகு நான்கு ரக்அத் தொழுதார்கள் அதனின் நீளத்தையும் அழகையும் கேட்கவேண்டாம்.பிறகு மூன்று ரக்அத் தொழுதார்கள்.

(ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1/154,தலைப்பு:باب قيام النبي صلی الله عليه و سلم باليل فی رمضان  ஸஹீஹ் முஸ்லிம் 1/254,தலைப்புصلوة الليل و عدد ركعة النبي صلی الله عليه وسلم : ஸுனன் நஸாயி 1/248,தலைப்பு:باب كيف الوتر بثلاث)

عن عائشة رضي الله عنه ان النبيﷺ كان يوتر بثلاث يقرا فی اول ركعة بسبح اسم ربك الاعلی و فی الثانية قل يايها الكافرون و فی الثانية قل هو الله احد و المعوذتين

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று ரக்அத் வித்ரு தொழுது கொண்டிருந்தார்கள்.முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம
ரப்பிகல் அஃலா' இரண்டாவது ரக்அத்தில் 'குல்யாஅய்யுஹல் காஃபிரூன்' மூன்றாவது ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு அஹத் வல் முஅவ்விததைன்' (குல்அவூது பிரப்பில் ஃபலக் குல்அவூது பிரப்பின்னாஸ்) ஓதுவார்கள்.

(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/200,தலைப்பு:باب الوتر ,ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 718, ذكر الاباحة للمرء ان يضم قراءة المعوذتين ஹதீஸ் இலக்கம் :2448,முஸன்னப் அப்துர் ரஜ்ஜாக் 2/404,தலைப்பு:باب ما يقرء فی الوتر الخ ஹதீஸ் இலக்கம்:1257)

عن ابي بن كعب رضي الله عنه ان رسول الله ﷺ كان يوتر بثلاث ركعات كان يقرء فی الاولی بسبح اسم ربك الاعلی و فی الثانية بقل يايها الكافرون و فی الثانية بقل هو الله احد و يقنت قبل الركوع

உபை இப்னு கஃப் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று ரக்அத் வித்ரு தொழுது கொண்டிருந்தார்கள்.முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம
ரப்பிகல் அஃலா' இரண்டாவது ரக்அத்தில் 'குல்யாஅய்யுஹல் காஃபிரூன்' மூன்றாவது ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு அஹத்'
மேலும் ருகூவிற்கு முன்பாக குனூத் ஓதினார்கள்.

(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/248,தலைப்பு:باب ذكر اختلاف الفاظ الناقلين لخبر ابي بن كعب  ஸுனன் இப்னு மாஜா 1/82,தலைப்பு :باب ما جاء فی ما يقرء فی الوتر  முஸன்னப் இப்னு அபீ ஷைபா 4/514,515, فی الوتر ما يقرء فيه ஹதீஸ் இலக்கம்:6960)

இந்த கருத்தில் வேறு ஹதீஸ்களும் உண்டு.

(1)ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் (ஆதாரம்: ஸுனன் நஸாயி 1/249,  ذكر الاختلاف علی ابی اسحاق فی حديث سعيد بن جبير عن ابن عباس ,முஸன்னப் இப்னு அபீஷைபா 4/512, فی الوتر ما يقرء فيه ஹதீஸ் இலக்கம்:6951)

(2)ஹஜ்ரத் இம்ரான் இப்னு ஹஸீன் (ரளி)
    (ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/204,தலைப்பு:باب الوتر மஜ்மஉஸ்ஸவாயித் 2/505,தலைப்பு:باب ما يقرء فی الوتر ஹதீஸ் இலக்கம்:3468)

(3) ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி)

(ஆதாரம்:மஜ்மஉஸ்ஸவாயித் 2/505,தலைப்பு:ما يقرء فی الوتر ஹதீஸ் இலக்கம்:3466)

(4) ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு ஸப்ரா (ரளி)

( ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் 2/505,தலைப்பு:باب ما يقرء فی الوتر ஹதீஸ் இலக்கம்:3469)

(5) ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அபிஅவ்ஃபா (ரளி) அவர்கள்

(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் 2/501,தலைப்பு:باب عدد الوتر ஹதீஸ் இலக்கம்:3452)

(6)ஹஜ்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஜா ரளி அவர்கள் (ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/205,தலைப்பு: باب الوتر கிதாபுல் ஆஸார் 1/142,தலைப்பு:باب الوتر وما يقرء فيها ,ஹதீஸ் இலக்கம்:122)

இவர்களின் அறிவிப்பில் வித்ரு மூன்று ரக்அத் என்பதாக வந்துள்ளது.

عن ابن عباس رضي الله عنه انه كان يوتر بثلاث بسبح اسم ربك الاعلی و فی الثانية قل يايها الكافرون و فی الثانية قل هو الله احد

இப்னு அப்பாஸ் ரளி அவர்கள் மூன்று ரக்அத் வித்ரு தொதார்கள்.அதில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா'  'குல்யாஅய்யுஹல் காஃபிரூன்'
'குல் ஹுவல்லாஹு அஹத்' ஓதுவார்கள்

(ஆதாரம்: முஸன்னப் இப்னு அபீஷைபா 4/512,فی الوتر وما يقرء فيه ஹதீஸ் இலக்கம்:6950)

عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله  ﷺ وتر  الليل كوتر النهار صلاة المغرب

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்
(ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்;

  இரவின் வித்ரு பகலின் வித்ரான மஃரிபை போன்று(மூன்றாகும்).

(ஆதாரம்:ஸுனன் தாரகுத்னி 285,الوتر كثلاث المغرب ஹதீஸ் இலக்கம்:1637,நஸபுர்ராயா லிஜ்ஜயீலயீ 2/116,باب صلوة الوتر )

عن ابن عمر رضي الله عنه قال قال النبي ﷺ صلوة المغرب وتر النهار فاوتروا صلاة الليل

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரளி அவர்கள் கூறுகிறார்கள்;

மஃரிப் தொழுகை பகலின் வித்ர் (போன்றாகும்) எனவே இரவில் வித்ரு தொழுங்கள்

(ஆதாரம்:முஸன்னப் அப்துர் ரஜ்ஜாக் 2/401,தலைப்பு:باب اخر صلوة الليل ஹதீஸ் இலக்கம்:4688,முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல் 4/420,ஹதீஸ் இலக்கம்:4847)

عن عائشة رضي الله عنها قالت قال رسول الله ﷺ الوتر ثلاث كثلاث المغرب

ஆயிஷா (ரளி) அவர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்;

வித்ரு மஃரிப் தொழுகையை போன்று மூன்றாகும்.

(ஆதாரம்:அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 5/232,ஹதீஸ் இலக்கம்:7170)

عن عبد الله بن مسعود رضي الله عنه قال وتر الليل كوتر النهار صلاة المغرب ثلاثا
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் கூறுகிறார்கள்;

இரவின் வித்ரு பகலின் வித்ரான மஃரிப் போன்று மூன்றாகும்.

(ஆதாரம்:முஃஜமுஜ்ஜவாயித் லில்ஹைஸமி 2/503,தலைப்பு:باب عدد الوتر ,ஹதீஸ் இலக்கம்:3455)

வித்ரு மூன்று ரக்அத் ஒரே ஸலாமில் தொழுவது

عن سعد بن هشام ان عاشة رضي الله عنها حدثته ان رسول الله ﷺ كان لا يسلم فی ركعتی الوتر

ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அவர்கள் வித்ரின் இரண்டு ரக்அத்திற்கு பிறகு ஸலாம் கொடுக்க மாட்டார்கள்.(மாறாக மூன்று ரக்அத் தொழுது ஸலாம் கொடுப்பார்கள்)

(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/248,தலைப்பு:باب كيف الوتر بثلاث,முவத்தா இமாம் முஹம்மத் 150,151,தலைப்பு:باب السلام فی الوتر,முஸன்னப் இப்னு அபீஷைபா 4/493,494 من كان يوتر بثلاث او اكثر ,ஹதீஸ் இலக்கம்:6912,ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/197,தலைப்பு:باب الوتر )

عن عاشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ لا يسلم فی الركعتين الاوليين من الوتر

ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரின் முதல் இரு ரக்அத்திலே ஸலாம் கொடுக்க மாட்டார்கள்.
(ஆதாரம்: அல்முஸ்தத்ரக் லில்ஹாகிம் 1/607,பாடம்:كتاب الوتر ,ஹதீஸ் இலக்கம்:1180)

عبد الله بن مسعود قال: أرسلت أمي ليلة لتبيت عند النبي صلى الله عليه وسلم فتنظر كيف يوتر فباتت عند النبي فصلى ما شاء الله أن يصلي حتى إذا كان آخر الليل وأراد الوتر قرأ: بسبح اسم ربك الأعلى " . سورة الأعلى . في الركعة الأولى وقرأ في الثانية: " قل يا أيها الكافرون " . الكافرون 1. ثم قعد، ثم قام ولم يفصل بينهما بالسلام ثم قرأ ب " قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد " . سورة الإخلاص 1. حتى إذا فرغ كبر ثم قنت فدعا بما شاء الله أن يدعو

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் எவ்வாறு வித்ரு தொழுகிறார்கள்? (அறிவதற்கு) எனது தாயை நபி ஸல்லல்லாஹு அவர்களின் வீட்டிற்கு இரவு கழிப்பதற்கு அனுப்பிவைத்தேன்.

அல்லாஹ் நாடியளவிற்கு தொழுதார்கள்.இரவின் கடைசிபகுதியில் வித்ரு தொழ நாடினார்கள்.முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா' இரண்டாவது ரக்அத்தில் 'குல்யாஅய்யுஹல் காபிரூன்' ஓதினார்கள்.பிறகு இருப்பில் அமர்ந்தார்கள்.பிறகு ஸலாம் கொடுக்காமல் எழுந்தார்கள்.பிறகு மூன்றாவது ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு அஹத்' ஓதினார்கள்.அதனை நிறைவு செய்து தக்பீர் கூறினார்கள்.பிறகு துஆ குனூத் அல்லாஹ் நாடியளவு ஓதினார்கள்.பிறகு தக்பீர் கூறினார்கள்.ருகூஉ செய்தார்கள்.

(ஆதாரம்:அல்இஸ்தீஆப் லிஇப்னு அப்துல் பர் பக்கம்:934,எண்:742)

வித்ரின் இரண்டாவது ரக்அத்தில் தஷஹ்ஹுத்

வித்ரு இரவுத்தொழுகையாகும்.மற்ற தொழுயைப் போன்று இதில்  இரண்டாவது ரக்அத்தில் தஷஹ்ஹுத் உண்டு.இரண்டு ரக்அத்திற்கு பிறகு தஷஹ்ஹுத் உண்டு என்பது ஹதீஸ்களின் மூலம் நிரூபணமாகிறது.

كان يقول فی كل ركعتين التحية

ஹஜ்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் ஒவ்வொரு இரு ரக்அத்திலும் அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) உண்டு.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/194,தலைப்பு:باب ماجاء يجمع صفة الصلوة و ما يفتح به و يختم به முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக் 2/134,தலைப்பு:باب من نسي التشهد ஹதீஸ் இலக்கம்:3086,முஸன்னப் இப்னு அபீ ஷைபா 3/47 قدر كم يقعد فی الركعتين الاوليين ஹதீஸ் இலக்கம்:3040)

عن عبد الله بن مسعود رضي الله عنه قال كنا لا ندري ما نقول فی كل ركعتين غير ان نسبح و نكبر و نحمد ربنا و ان محمدا ﷺ علم فواتيح الخير و خواتمه فقال اذا قعدتم فی كل ركعتين فقولوا التحيات لله 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

இரண்டு ரக்அத்திற்கு பிறகு அமர்வில் என்ன ஓதவேண்டும்
என்பதை நாங்கள் அறியவில்லை.எனினும் தஸ்பீஹ், தக்பீர் கூறிக்கொண்டிருந்தோம்.மேலும் ரப்பை புகழ்ந்தோம்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை நலவுகள்  கற்றுக்கொடுப்பட்டவர்கள் என கூறிக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் இரண்டாவது ரக்அத்தில் அமரும் பொழுது அத்தஹிய்யாத் ஓதுங்கள்

(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/174,كيف التشهد الاول)

عن الفضل بن عباس رضي الله عنه قال قال رسول الله ﷺ الصلوة مثنی مثنی تشهد فی ركعتين

ஃபள்ல் இப்னு அப்பாஸ் ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் தொழுகை இரண்டு இரண்டாகும்.ஒவ்வொரு இரு ரக்அத்திலும் தஷஹ்ஹுத் உண்டு.(ஆதாரம் ஜாமிஉத்திர்மிதி 1/87,தலைப்பு: باب ماجاء فی التخشع فی الصلوة அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 8/26,ஹதீஸ் இலக்கம்:15154)

 குனூத் துஆ

ஹதீஸ் நூல்களில் குனூத் துஆ வார்த்தைகள் மாற்றுத்துடன் பலவிதங்களில் வந்துள்ளது.
அதில் உள்ளடங்கிய

اَللّهُمَّ اِنَّأ نَسْتَعِيْنُكَ و نَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ وَنَشْكُرُكَ وَلاَنَكْفُرُكَ وَنَخْلُعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اَلّلهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعي وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشي عَذَابَكَ اِنَّ عَذَابَكَ الْجِدَّ بِالْجِدَّ بِااْكُفَّارِ مُلْحِقٌ

யா அல்லாஹ் நிச்சயமாக நாங்கள் உன்னிடத்தில் உதவி தேடுகிறோம்.மேலும் உன்னிடத்தில் பாவமன்னிப்பு தேடுகிறோம்.மேலும் உன்னைக் கொண்டு ஈமான் கொள்கிறோம்.உன்னைக் கொண்டு நம்பிக்கை வைக்கிறோம்.உன்மீது நல்லவற்றை புகழ்கிறோம்.மேலும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.மேலும் உனக்கு மாறு செய்யமாட்டோம்.உனக்கு மாறு செய்கிறவர்களை  விலகி கொள்கிறோம்.விட்டுவிடுகிறோம்.யா அல்லாஹ் உன்னையே வணங்குகிறோம்.மேலும் உனக்காக தொழுகிறோம்.ஸஜ்தா செய்கிறோம்.மேலும் உன்பால் ஓடி வருகிறோம்.உன்னுடைய கருணையை ஆதரவு வைக்கிறோம்.விரண்டோடி வருகிறோம்.உன் அருள் மீது நம்பிக்கை வைக்கிறோம்.உன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம்.நிச்சயமாக உன்னுடைய தண்டனையானது காபிர்களையே சூழ்வதாகும்.

(ஆதாரம்:ஸுனன் தஹாவி 1/177,தலைப்பு:باب القنوت فی الصلوة الفجر و غيرها கிதாபுத்துஆ லித்தப்ரானி பக்கம்:237,முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக் 3/31,தலைப்பு:باب القنوت ஹதீஸ் இலக்கம்:4984,அல்ஹாவி அல்கபீர் லில்மாவர்தி 2/355,முஸன்னப் இப்னு அபிஷைபா 4/518,فی قنوت الوتر من الدعاء ஹதீஸ் இலக்கம்:6965,அஷ்ஷரஹுல் கபீர் லி அப்தில் கரீமி ராஃபியி 4/250,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 2/210,211)

 குனூத் துஆ
ருகூவிற்கு முன்பாக

قال عاصم بن سليمان الاحول رحمةالله عليه
سالت انس بن مالك رضي الله عنه عن القنوت فقال قد كان القنوت قلت قبل الركوع او بعده قال فان فلانا اخبرنی عنك قلت بعد الركوع فقال كذب انما قنت رسول الله ﷺ بعد الركوع شهرا

ஹஜ்ரத் ஆஸிம் இப்னு ஸுலைமானுல் அஹ்வல் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் நான் அனஸ் இப்னு மாலிக் ரளி அவர்களிடத்தில் குனூத் குறித்து கேட்டேன்.அவர்கள் கூறினார்கள் குனூத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்தது. பிறகு நான் கேட்டேன் ருகூவிற்கு முன்பாக அல்லது அதற்கு பிறகா அன்னார் கூறினார்கள் ருகூவிற்கு முன்பாக இன்ன நபர் ருகூவிற்கு பிறகு குனூத் என்கிறார் என்று கேட்டேன்.அன்னார் கூறினார்கள் அவர் கூறியது பொய்யாகும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிற்கு பிறகு ஒரு மாதகாலம் மட்டும் தான் ஓதினார்கள்.

(ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1/136,தலைப்பு:باب القنوت قبل الركوع و بعده ஸஹீஹ் முஸ்லிம் 1/237,தலைப்பு:باب استحباب القنوت فی جميع الصلوات )


عن ابي بن كعب رضي الله عنه ان رسول الله ﷺ كان يوتر بثلاث ركعات ......و يقنت قبل الركوع

உபை இப்னு கஃப் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று ரக்அத் வித்ரு தொழுதார்கள்.குனூத் ருகூவிற்கு முன்பாக ஓதினார்கள்.

(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/248,اختلاف الفاظ الناقلين لخبر ابی بن كعب ஸுனன் அபூதாவூத் 1/209,தலைப்பு:باب القنوت فی الوتر

عن عبد الله رضي الله عنه قال قنت رسول الله ﷺ فی الوتر قبل الركعة

அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்؛ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிற்கு முன்பாக வித்ரில் குனூத் ஓதுவார்கள்.

(ஆதாரம்:
ஸுனன் தாரகுத்னி பக்கம்:287,
ஹதீஸ் இலக்கம்:1647, ما يقرء فی ركعات الوتر و القنوت فيه, முஸன்னப் இப்னு அபீஷைபா 4/521,522 فی القنوت قبل الركوع او بعده ஹதீஸ் இலக்கம்:6984)

عن الاسود رحمةالله عليه ان عمربن الخطاب رضي الله عنه قنت فی الوتر قبل الركوع .....وفی رواية .....بعد القراءة قبل الركوع

அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் (ரளி)
அவர்கள் ருகூவிற்கு முன்பாக குனூத் ஓதினார்கள். மற்றொரு அறிவிப்பில் வருகிறது ருகூவிற்கு முன்பாக கிராஅத்திற்கு பிறகு (ஆதாரம் கியாமுல்லைல் லில்மர்வஜி பக்கம்:228,முஸன்னப் இப்னு அபீஷைபா 4/520,فی القنوت قبل الركوع او بعده ஹதீஸ் இலக்கம்:6972)

குனூத்திற்கு முன்பாக கையை உயர்த்துதல்

قال ابوعثمان كان عمر رضي الله عنه يرفع يديه فی القنوت

ஹஜ்ரத் அபூஉஸ்மான் அவர்கள் கறுகிறார்கள் ஹஜ்ரத் உமர் (ரளி) அவர்கள் குனூத்தில் தனது இருகைகளையும் உயர்த்தினார்கள்.

(ஆதாரம்: ஜுஸ்உ ரஃப்யில் யதைன் லில்புகாரி பக்கம்:146,ஹதீஸ் இலக்கம்:146,கியாமுல் லைல் லில்மர்வஜி பக்கம்:230,தலைப்பு:باب رفع الايدی عند القنوت அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 2/212,தலைப்பு باب رفع اليدين فی القنوت )

عن ابن مسعود رضي الله عنه انه كان يقرء فی اخر ركعة من الوتر قل هو الله احد ثم يرفع يديه فيقنت قبل الركعة


இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்؛ வித்ரின் ரக்அத்தின் இறுதியில் குல்ஹுவல்லாஹு அஹத் ஓதுவார்கள்.பிறகு இரு கைகளையும் உயர்த்துவார்கள்.ருகூவிற்கு முன்பாக குனூத் ஓதுவார்கள்.

(ஆதாரம்:ஜுஸ்உ ரஃப்உல் யதைன் லில்புகாரி பக்கம்:146,ஹதீஸ் இலக்கம்:163,முஸ்னத் இப்னுல் ஜஃத் பக்கம்: 332 ஹதீஸ் இலக்கம்:2277,முஸன்னப் இப்னு அபூஷைபா 4/531,فی رفع اليدين فی قنوت الوتر ஹதீஸ் இலக்கம்:7027,7028)

كان ابوهريرة رضي الله عنه يرفع يديه فی قنوته فی شهر رمضان

ஹஜ்ரத் அபூஹுரைரா ரளி அவர்கள் ரமளான் மாதத்தில் குனூத்தில் இருகைகளையும் உயர்த்துவார்கள்.

(ஆதாரம்:கியாமுல் லைல் லில்மர்வஜி பக்கம்:230,தலைப்பு:باب رفع الايدی عند القنوت அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 3/41,தலைப்பு:باب رفع اليدين فی فی القنوت முக்தஸர் கிதாபுல் வித்ர் லில்முக்ரீஜி 139,தலைப்பு:باب رفع الايدی عند القنوت )

Tuesday, March 12, 2019

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை

ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர்:7


தொழுகைக்கு பிறகு துஆ செய்வது


عن أبي أمامة  قال:  «قيل لرسول الله ﷺ: أي الدعاء أسمع؟ قال: جوف الليل الآخر، ودبر الصلوات المكتوبات


ஹஜ்ரத் அபூஉமாமா (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது எந்த துஆ அதிகமாக ஏற்கப்படும்? அண்ணலார் கூறினார்கள்; இரவின் இறுதியிலும், பர்ளு தொழுகைகளுக்கு பிறகும் (கேட்கப்படும் துஆ ஏற்கப்படும்)

(ஆதாரம்: ஜாமிஉத்திர்மிதி 2/187,தலைப்பு:باب بلا ترجمة ابواب الدعاء ஸுனனுல் குப்ரானி லின் நஸாயி 6/32,مايستحب من الدعاء دبر الصلوات المكتوبات ஹதீஸ் இலக்கம்:9936,அமலு வலைலா லின் நஸாயி பக்கம்:186,ஹதீஸ் இலக்கம் 108)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அனஸ் இப்னு மாலிக் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

الدعاء مخ العبادة

பிரார்த்தனை வணக்கங்களின் மூளையாகும். (சாராம்சமாகும்)

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 2/175,ابواب الدعوات தலைப்பு இலக்கம்:2 அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 2/255,ஹதீஸ் இலக்கம்:3196,ஜாமிஉல்அஹாதீஸ் லிஸ்ஸுயூத்தி 13/2,ஹதீஸ் இலக்கம்:12413)

துஆவின் போது கைகளை உயர்த்துதல்


عن انس رضي الله عنه قال : " إن الله يستحي أن يبسط العبد إليه يديه فيهما خيرا فيردهما خائبتين "

ஹஜ்ரத் அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மக்களே! உங்களின் இறைவன் உயிருள்ளவன்.சங்கையானவன். உங்களில் ஒருவர் அவனிடத்தில் இருகரங்களையும் ஏந்திய பிறகு அது இரண்டையும் வெறுங்கையாக ஆக்குவதை அல்லாஹ் வெட்கப்படுகிறான்.(ஆதாரம்:முஸ்னத் அபூயஃலா 7/142,ஹதீஸ் இலக்கம்:4108)

இதே கருத்தில் ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி (ரளி) அவர்களிடமிருந்து வந்துள்ளது.
(ஆதாரம்:ஸுனன் இப்னு மாஜா 1/275,தலைப்பு باب رفع اليدين فی الدعاء ,ஜாமிஉத்திர்மிதி 2/196,ابواب الدعوات باب بلا ترجمة ,ஸஹீஹ் இப்னு ஹிப்பான் பக்கம்:343,ذكر استحابة الدعاء ஹதீஸ் இலக்கம்:880)


عن انس رضي الله عنه قال رايت رسول الله ﷺ يرفع يديه فی الدعاء حتی يری بياض ابطيه

அனஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பார்த்தேன்.அண்ணலார் அவர்கள் துஆவில் இருகரங்களையும் உயர்த்தினார்கள்.அப்போது அவரின் அக்குளின் வெண்மை வெளிப்பட்டது.
(ஆதாரம்:அல்ஜம்உ பைன ஸ்ஸஹீஹைன் 2/437,ஹதீஸ் இலக்கம்:3943,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 3/357,தலைப்பு:باب رفع اليدين فی دعاء الاستسقاء ஸஹீஹ் இப்னு ஹிப்பான் பக்கம்:342,ذكر الاباحة للمرء ان يرفع يديه ஹதீஸ் இலக்கம்:877)

قال كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه

உமர் இப்னுல் கத்தாப் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருகரங்களையும் துஆவில் உயர்த்தி  (துஆ நிறைவு செய்து) தனது முகத்தில் இரண்டு கைகளால் தடவும் வரை (உயர்த்திய) இரண்டு கரங்களை விடுவதில்லை.

(ஜாமிஉத்திர்மிதி 2/176,தலைப்பு:باب ما جاء فی رفع الايدی عند الدعاء ,அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 5/197,ஹதீஸ் இலக்கம்:7053,முஸ்னத் பஜ்ஜார் 1/243,ஹதீஸ் இலக்கம்:129)

عن السائب بن يزيد عن ابيه ان النبيﷺ كان اذا دعا فرفع يديه مسح وجهه بيديه

ஹஜ்ரத் ஸாயிப் இப்னு யஜீத் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்; 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆவில் இருகரங்களையும் உயர்த்துவார்கள்.(இறுதியில்) அதனை தமது முகத்தில் தடவுவார்கள்.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/216,தலைப்பு:باب الدعاء அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 9/273,ஹதீஸ் இலக்கம்:18088)

தொழுகைக்கு பிறகு கைகளை உயர்த்தி துஆ செய்வது


وعن الفضل بن عباس - رضي الله عنهما - ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( الصلاة مثنى مثنى ، تشهد في ركعتين ، وتخشع وتضرع وتمسكن ، ثم تقنع يديك - يقول : ترفعهما - إلى ربك مستقبلا ببطونهما وجهك ، وتقول يا رب ! يا رب ! ومن لم يفعل ذلك فهو كذا وكذا )


ஹஜ்ரத் பள்ல் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; தொழுகை இரண்டிரண்டாகும்.
ஒவ்வொரு 
இரு ரக்அத்திலும் தஷஹ்ஹுத்தில் அமர்வது உண்டு.அடக்கம், இயலாமை, ஏழ்மையை வெளிப்படுத்துதல்.உனது இரு உள்ளங்கைகளும் முகத்தின் பக்கம் முன்னோக்கியவாறு அதனை ரப்பின் பக்கம் உயர்த்துவீராக! மேலும் கூறுவீராக! இறைவா! இறைவா! இறைவா! இதன்பேரில் அமல்செய்யவில்லையானால் அவரின் தொழுகையானது இவ்வாறே (குறையுள்ளது முழுமைபெறவில்லை) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/87,தலைப்பு:باب ما جاء فی التخشع فی الصلوة அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 8/26,ஹதீஸ் இலக்கம்:15154)

عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم رفع يده بعد ما سلم وهو مستقبل القبلة، فقال : اللهم خلص الوليد بن الوليد،


ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸலாம் கொடுத்த பிறகு கிப்லாவின் பக்கம் முன்னோக்கி கரங்களை உயர்த்தி துஆ செய்தார்கள் யா அல்லாஹ்! வலீத் இப்னு வலீதிற்கு ஈடேற்றம் அளிப்பாயாக!

(ஆதாரம் தப்ஸீர் இப்னு அபூஹாதம் 3/123,ஹதீஸ் இலக்கம்:5906,لا يستطعون حيلة என்ற வசனத்தின் கீழ் தப்ஸீர் இப்னு கஸீர் பக்கம்:522,فاولئك عسی الله ان يعفو عنهم என்ற வசனத்தின் கீழ்)


عن محمد بن ابي يحيی قال رايت  عبد الله بن الزبير رضي الله عنه أن رجلاً رفع يديه بالدعاء قبل أن ينتهي من صلاته ، فلما فرغ قال له عبد الله : إن النبي صلى الله عليه وسلم لم يكن يرفع يديه بالدعاء إلا بعد أن يفرغ من صلاته

ஹஜ்ரத் முஹம்மத் இப்னு அபூயஹ்யா கூறுகிறார்கள்;
ஒரு மனிதர் தொழுகையை நிறைவு செய்வதற்கு முன்பாக கரங்களை உயர்த்தியதை அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரளி) அவர்கள் பார்த்தார்கள்.அவர் தொழுகையை முடித்த பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளி  கூறினார்கள்; 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை நிறைவு செய்வதற்கு முன்பாக கரங்களை உயர்த்தி துஆ கேட்கமாட்டார்கள்.(தொழுகையை நிறைவு செய்த பிறகு கரங்களை உயர்த்தி துஆ கேட்பார்கள்)

(ஆதாரம்:அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 11/22,ஹதீஸ் இலக்கம்:90,அல்அஹாதீஸுல் முஹ்தார் லில்முக்தஸி 9/336,ஹதீஸ் இலக்கம்:303)


 ஆண்கள் பெண்களின் தொழுகைக்கு மத்தியில் வித்தியாசம்

இஸ்லாமிய மார்க்கத்தில் சட்டங்கள் அனைத்தும் ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும்தான்.தொழுகை, நோன்பு,ஜகாத்,ஹஜ் போன்ற அனைத்து சட்டங்களிலும் இருவருக்கும் விதிவிலக்கு இல்லை.எனினும்,பெண்ணியம் மற்றும் பர்தா அனைத்து சந்தர்ப்பங்களிலும் கவனிக்கப்படும்.வணக்கங்களில் பெண்களுக்கு முழுமையான பர்தா பெறப்படுமோ அதனை தான் தேர்ந்தெடுக்கப்படும்.


ஈமானுக்கு பிறகு மிகப்பெரும் வணக்கம் தொழுகையாகும்.இதில் உள்ள சட்டங்களில் சிலதில் இருவரும் சரிசமமாக அமல் செய்வதுடன் சில நிலைகளில் இருவருக்கும் தெளிவான வித்தியாசம் உண்டு.

عن وائل بن حجر قال : قال لي رسول الله - صلى الله عليه وسلم - : " يا وائل بن حجر إذا صليت فاجعل يديك حذاء أذنيك ، والمرأة تجعل يديها حذاء ثدييها " .

ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் வருகை தந்தேன்.அண்ணலார் கூறினார்கள்; வாயில் இப்னு ஹுஜ்ர் தொழும் போது காதுக்கு நேராக கைகளை உயர்த்துவீராக! பெண்,கைகளை மார்பிற்கு நேராக ஆக்கிகொள்ளட்டும்!
(ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 9/144,ஹதீஸ் இலக்கம்:17497,அல்மஜ்மஉஜ்ஜவாயித் லில்ஹைஸமி 2/272,தலைப்பு:باب رفع اليدين ஹதீஸ் இலக்கம்:2594,ஜாமிஉல் ஹதீஸ் லிஸ்ஸுயூத்தி 23/439,ஹதீஸ் இலக்கம்:26377)



عن يزيد بن أبي حبيب ، أن رسول الله صلى الله عليه وسلم مر على امرأتين تصليان فقال :  إذا سجدتما فضمَّا بعض اللحم إلى الأرض ؛ فإن المرأة ليست في ذلك كالرجل


யஜீத் இப்னு ஹபீப் (ரஹ்) அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருந்த இரு பெண்களை கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.அண்ணலார் கூறினார்கள் நீங்கள் ஸஜ்தா செய்யும் பொழுது உடலின் ஒரு பகுதியை பூமியுடன் இணைத்துகொள்ளுங்கள். ஏனெனில் பெண் 
(தொழுகையில்) ஆணைப் போன்று அல்ல.

(ஆதாரம்:மராஸீல் அபூதாவூத் பக்கம்:28,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 2/223,தலைப்பு: باب ما يستحب للمراة الخஜாமிஉல் அஹாதீஸ் லிஸ்ஸுயூத்தி 3/233,ஹதீஸ் இலக்கம்:2110)

عن أبي سعيد الخدري صاحب رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم  أنه كان يأمر الرجال أن يتجافوا في سجودهم ، ويأمر النساء ينخفضن في سجودهن ، وكان يأمر الرجال أن يفرشوا اليسرى وينصبوا اليمني في التشهد ، ويأمر النساء أن يتربعن

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழரான அபூஸயீதுல் குத்ரி (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  தொழுகையில் ஸஜ்தாவில் தொடைகளை (வயிற்றை விட்டும்) விலக்கிவையுங்கள் 
என ஆண்களுக்கு கட்டளையிட்டார்கள்.தொடைகளை (வயிற்றுடன்) சேர்த்துவைக்கும்படி பெண்களுக்கு கட்டளையிட்டார்கள்.இருப்பில் இடதுகாலை விரித்து வலது காலை நட்டுவைக்கும்படி ஆண்களுக்கு உத்தரவிட்டார்கள்.(இருப்பில்) சம்மணமிட்டு அமரும்படி பெண்களுக்கு உத்தரவிட்டார்கள்.

(ஆதாரம் அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 2/222,223,தலைப்பு:باب ما يستحب للمراة ,அத்தப்வீபுல் மவ்ளூயி லில் அஹாதீஸ் பக்கம்:2639)

عن عبد الله بن عمر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا جلست المرأة في الصلاة وضعت فخذها على فخذها الأخرى وإذا سجدت ألصقت بطنها في فخذيها كأستر ما يكون لها وإن الله تعالى ينظر إليها ويقول يا ملائكتي أشهدكم أني قد غفرت لها


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக 
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் பெண்கள் தொழும் போது தொடையை மற்றொரு தொடையுடன் (ஒட்டியவாறு) வைக்கவேண்டும்.ஸஜ்தாவில் வயிற்றை தொடையுடன் ஒட்டவேண்டும்.இதுதான் அவர்களுக்கு மிகவும் மறைப்பாகும்.அல்லாஹ் அவர்களை பார்த்தவாறு கூறுகிறான் எனது மலக்குகளே அவர்களின் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன்.

(ஆதாரம் அல்காமில் லிஇப்னு அதி 2/501,இலக்கம்:399,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 2/223,தலைப்பு:باب ما يستحب للمراة الخ ஜாமிஉல் அஹாதீஸ் லிஸுயூத்தி 3/43,ஹதீஸ் இலக்கம்:1759)


عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة الحائض إلا بخمار

ஆயிஷா ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் பருவம் எய்திய பெண்ணின் தொழுகை முக்காட்டு துணியின்றி ஏற்கப்படாது.

(ஆதாரம் ஜாமிஉத்திர்மிதி 1/86,தலைப்பு:باب لا تقبل صلوة الحائض الا بخمار ஸுனன் அபூதாவூத் 1/101 தலைப்பு:باب المراة تصلی بغير خمار )


قال علي رضي الله عنه إذا سجدت المرأة فلتضم فخذيها

அலி ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்;
பெண் ஸஜ்தாவின் போது தனது தொடையை ஒட்டிக்கொள்வாள் (ஆதாரம்: அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹபகீ 2/222,தலைப்பு: باب ما يستحب للمراة الخ, முஸன்னப் அபூஷைபா 2/504,ஹதீஸ் இலக்கம்:2793, المراة كيف تكون فی سجودها முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக் 3/50 தலைப்பு:باب تكبير المراة بيدها الخ  ஹதீஸ் இலக்கம்:5086)


عن ابن عباس رضي الله عنه انه سئل عن صلوة المراة فقال تجتمع و تحتفز

இப்னு அப்பாஸ் ரளி அவர்களிடத்தில் பெண்ணிண் தொழுகையை குறித்து கேட்கப்பட்டது.அன்னார் அவர்கள் கூறினார்கள்; நன்றாக ஒட்டியவாறு உடலை சுருக்கி தொழுகவேண்டும்.

(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீஷைபா 2/505, தலைப்பு: باب المراة كيف تكون فی سجودها ஹதீஸ் இலக்கம்:2794)

Monday, March 4, 2019

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை


ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர்:6


தஷஹ்ஹுத்திலே பார்வைகள் ஆட்காட்டி விரலை நோக்கி இருக்க வேண்டும்


ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையை பார்த்தார்கள்.கூறினார்கள்

لا يجاوز بصره اشارته
அன்னாரின் பார்வை ஆட்காட்டி விரலை கடக்கவில்லை.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/149,தலைப்பு:باب الاشارة فی التشهد ,சுனன் நஸாயி 1/173,தலைப்பு:باب موضع البصر فی التشهد)

தஷஹ்ஹுத் மெதுவாக ஓதுவது


عن عبد الله بن مسعود رضي الله عنه قال من السنة ان يخفي التشهد

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; தஷஹ்ஹுத் மெதுவாக ஓதுவது சுன்னத்தாகும்.

(ஆதாரம்:சுனன் அபூதாவூத் 1/149,தலைப்பு:باب اخفاء التشهد , 1/173, ஜாமிஉத்திர்மிதி 1/65, தலைப்பு:باب ما جاء انه يخفی التشهد )

முதல் இருப்பிலிருந்து எழும் போது தக்பீர் கூறியவாறு எழுவது


عن مطرف قال صليت انا و عمران بن حصين صلوة خلف علي بن ابی طالب رضي الله عنه فكان اذا سجد كبَّرَ و اذا نهض من الركعتين

ஹஜ்ரத் முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; நான் மற்றும் இம்ரான் இப்னு ஹுஸைன் அவர்ளும், ஹஜ்ரத் அலி இப்னு அபூதாலிப் (ரளி) அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதோம்.அன்னார் ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூறினார்கள் தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறினார்கள்.மேலும், இரண்டு ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி 1/114,தலைப்பு:باب يكبر و ينهض من السجدتين )

மூன்றாவது ரக்அத்தின் ஆரம்பத்திலே கையை உயர்த்துதல் கூடாது


عن ابن عمر رضي الله عنه قال كان رسول الله ﷺ اذا دخل فی الصلوة رفع يديه نحو صدره و اذا رفع راسه من الركوع ولا يفعل بعد ذلك

ஹஜ்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது இரு கைகளையும் நெஞ்சு வரை உயர்த்துவார்கள்.அதற்கு பிறகு ருகூவிலிருந்து எழும்போது செய்ய மாட்டார்கள்.
(கையை உயர்த்தமாட்டார்கள்)

(ஆதாரம்:அந்நாஸிஹ் வல் மன்ஸுஹ் லி இப்னு ஷாஹைன் பக்கம்:153,தலைப்பு:باب يقرا فی الاخريين بام الكتاب ,ஸஹீஹ் முஸ்லிம் 1/185,தலைப்பு:باب القراءة فی الظهر و العصر )

பர்ளு தொழுகையின் கடைசி இரு ரக்அத்திலும் சூரா பாத்திஹா ஓதுவது



عن ابي قتادة رضي الله عنه ان النبيﷺ كان يقرء فی الظهر فی الاوليين بام الكتاب و سورتين وفی الركعتين الاخريين بام الكتاب

அபூகதாதா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; லுஹர் தொழுகையின் முதல் இருரக்அத்தில் சூரா பாத்திஹா, துணை சூராக்கள் ஓதினார்கள்.கடைசி இருரக்அத்தில் பாத்திஹா மட்டும் ஓதினார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/107,தலைப்பு:باب يقرء فی الاخريين بام الكتاب ,ஸஹீஹ் முஸ்லிம் 1/185,தலைப்பு:باب القراءة فی الظهر و العصر )


கடைசி இருப்பு


عن عبد الله بن مسعود رضي الله قال كنا اذا صلينا خلف النبي ﷺ ...........فقال ان الله هو السلام فاذا صلی احدكم فليقل  التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النبي وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ِ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் நாங்கள் நின்று தொழுதோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ் ஸலாமாக இருக்கிறான்.உங்களில் ஒருவர் தொழுதால் அவர் தஷஹ்ஹுத்தில் அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத் ஓதட்டும்!

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/115,
தலைப்பு:باب التشهد فی الاخرة,
ஸஹீஹ் முஸ்லிம் 1/173,
தலைப்பு:باب التشهد فی الصلوة )


عن عبد الله بن مسعود رضي الله قال علمنی رسول الله ﷺ التشهد فی وسط الصلاة وفی اٰخرها

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; தொழுகையின் ஆரம்பத்தில் அதனின் இறுதியில் தஷஹ்ஹுத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள்.

(ஆதாரம் :முஸ்னத் அஹ்மத் 4/238,ஹதீஸ் இலக்கம்:4382)


தவர்ருக் (தஷஹ்ஹுத்தில் பித்தட்டின் ஓரத்தில் அமர்வது) செய்யாமல் இருப்பது


சுன்னத்தான அமர்வு வலது காலை நட்டி வைத்து  இடது காலை விரித்து வைப்பது

عن عبد الله بن عمر رضي الله و قال انما سنة الصلوة ان تنصب رجلك اليمنی و تثني اليسری

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; தொழுகையில் சுன்னத்தானது வலது காலை நட்டிவைத்து இடது காலை விரித்து வைப்பது.


(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 1/114,தலைப்பு:باب سنة الجلوس فی التشهد ,ஸுனன் நஸாயி 1/173, தலைப்பு:باب كيف الجلوس للتشهد الاول )


عن عائشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ يستفتح الصلوة بالتكبير و القراءة بالحمد لله رب العالمين ............. و كان يفرش رجله اليسری و ينصب رجله اليمنی

ஹஜ்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை தக்பீரை கொண்டும்,கிராஅத்தை அல்ஹம்துலில்லாஹ் ரப்பில் ஆலமீனை கொண்டும் ஆரம்பித்தார்கள். தஷஹ்ஹுத்தில் வலது காலை நட்டிவைத்து இடது காலை விரித்து வைத்தார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 1/194, தலைப்பு:باب ما يجمع صفة الصلوة و ما يفتح به و يختم به )

தரூஷ் ஷரீஃப் ஓதுவது


عن فضالة بن عبيد رضي الله عنه قال سمع رسول الله ﷺ رجلا يدعو فی الصلوة لم يحمد الله و لم يصل علی النبي ﷺ فقال رسول اللهﷺ عجلت ايها المصلی ثم علمهم رسول الله ﷺ فسمع رسول الله ﷺ رجلا يصلی فمجد الله و حمده و صلی علی النبي ﷺ فقال رسول الله ﷺ ادع تجب و سل تعط

ஹஜ்ரத் ஃபுலாலதுப்னு உபைத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;
ஒரு மனிதர் தொழுகையில் அல்லாஹ்வை புகழவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதவில்லை.இதனை பார்த்த
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை விரைப்படுத்துகிறீர்கள். பிறகு  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை மக்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள். (முதலில் அல்லாஹ்வை புகழ்வது பிறகு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்பதை) பிறகு வேறொரு மனிதர் தொழுது கொண்டு இருந்தார்.அல்லாஹ்வை துதித்துக்கொண்டும்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது தரூத் ஓதிக்கொண்டும் இருந்தார்.இதனை கேட்ட அண்ணலார் அவர்கள் கூறினார்கள்; "நீர் துஆ செய்வீராக! ஏற்கப்படும்.வேண்டுவீராக! கொடுக்கப்படும்."

(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/189,தலைப்புباب التحميد و الصلوة علی النبي ﷺ فی الصلوة )

தரூத் ஷரீஃபின் வார்த்தைகள்


سالنا رسول الله ﷺ فقلنا يا رسول الله ﷺ كيف الصلوة عليكم اهل البيت ؟ فان الله قد علمنا كيف نسلم عليك قال قولوا اللهم صل علی محمد و علی ال محمد كما صليت علی ابراهيم و علی ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علی محمد و علی ال محمد كما باركت علی ابراهيم و علی ال ابراهيم انك حميد مجيد

ஹஜ்ரத் கஃப் இப்னு உஜ்ரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டோம்
எப்படி உங்களின் மீதும் குடும்பத்தார் மீதும் ஸலவாத் சொல்வது? அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை ஓதுங்கள் என கூறினார்கள்  اللهم صل علی محمد و علی ال محمد كما صليت علی ابراهيم و علی ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علی محمد و علی ال محمد كما باركت علی ابراهيم و علی ال ابراهيم انك حميد مجيد

(பொருள்: இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன் அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக!)

( ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/477,தலைப்பு:باب يزفون النسلان فی المشی )


தஷஹ்ஹுத்திற்கு பிறகு  விரும்பிய துஆ


عن عبد الله بن مسعود رضي الله عنه قال كنا اذا صلينا خلف النبي ﷺ فقال ان الله هو السلام فاذا صلی احدكم فليقل التحيات لله .......... ان محمدا عبده و رسوله ثم ليتخير من الدعاء اعجبه اليه فيدعو

ஹஜ்ரத் அப்துல்லாஹ்
இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நாங்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் ஸலாமாக இருக்கிறான்.உங்களில் ஒருவர் தொழுதால் அவர் அத்தஹிய்யாத் ஓதட்டும்! பிறகு அவர் விரும்புகிற துஆவை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/115, தலைப்பு:باب ما يتخير من الدعاء بعد التشهد و ليس بواجب ,ஸஹீஹ் முஸ்லிம் 1/173,தலைப்பு:باب التشهد فی الصلوة )


துஆவின் வார்த்தைகள்


அல்லாஹுதஆலா குர்ஆனில் இப்ராஹீம் (அலை) அவர்களின் துஆவை கூறிக்காட்டுகிறான்

رب اجعلنی مقيم الصلوة و من ذريتی ربنا و تقبل دعاء ربنا اغفر لی و لوالدي و للمؤمنين يوم يقوم الحساب

(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”
(சூரா இப்ராஹீம் 41:40)


عن ابی بكر الصديق رضي الله عنه انه قال لرسول الله ﷺ علمنی دعاء ادعو به فی صلاتی قال قل اللهم انی ظلمت نفسي ظلما كثيرا و لا يغفر الذنوب الا انت فاغفرلی مغفرة من عندك و ارحمنیْ انك انت الغفور الرحيم


ஹஜ்ரத் அபூபக்கர் (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில், தொழுகையில் ஓதும் படியான
துஆவை எனக்கு கற்றுக்கொடுக்கும்படி கூறினேன்.அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை ஓதும்படி கூறினார்கள்

"அல்லாஹும்ம இன்னீ ழலம்து நஃப்ஸி ழுல்மன் கஸீரா வ லா யஃபிரு த்துனூப இல்லா அன்த ஃபஃபிர்லி மஃபிரதம் மின் இன்திக வர்ஹம்னி இன்னக அன்தல் ஃஙபூருர் ரஹீம்"

பொருள்: யா அல்லாஹ்!
நான் என்னின் மீது அதிகமான அநியாயம் இழைத்துவிட்டேன்.எனது பாவத்தை உன்னை தவிர மன்னிப்பவர் இல்லை.
எனவே என் பாவத்தை
எனக்கு கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ மன்னிப்பவனாக, கிருபையாளனாக இருக்கிறாய்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/115,தலைப்பு:باب الدعاء قبل السلام, ஸஹீஹ் முஸ்லிம் 1/347,باب الدعوات و التعوذ)


இமாமை முந்தக்கூடாது


عن انس رضي الله عنه قال صلی بنا رسول الله ﷺ ذات يوم فلما قضی الصلوة اقبل علينا بوجهه فقال يايها الناس انی امامكم فلا تسبقوني بالركوع ولا بالسجود ولا بالقيام ولا بالانصراف

ஹஜ்ரத் அனஸ் (ரளி) அறிவிக்கிறார்கள் ஒரு நாள் எங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுக வைத்தார்கள்.
தொழுகையை முடித்த பிறகு எங்களை முன்னோக்கியவாறு கூறினார்கள்; மக்களே!
"நான் உங்களின் இமாமாக இருக்கிறேன்.எனவே நீங்கள் ருகூவில்,ஸுஜுதில், நிலை நிற்றலில்,தொழுகையை முடிப்பதில் என்னை முந்திவிடவேண்டாம்!"

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/180,தலைப்பு:باب تحريم سبق الامام بركوع او سجود و نحوهما )

தொழுகையை ஸலாத்தை கொண்டு நிறைவு செய்வது


عن عائشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ يستفتح الصلاة بالتكبير ....... وكان يختم الصلاة بالتسليم

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை தக்பீரை கொண்டு ஆரம்பிப்பார்கள்....மேலும் தொழுகையை ஸலாமை கொண்டு முடிப்பார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/195,தலைப்பு:باب ما يجمع صفة الصلوة و ما يفتتح به ويختم به ,சுனன் அபூதாவூத்  1/121,தலைப்பு:باب من لم يجهر ببسم الله الرحمن الرحيم )

ஸலாமின் வார்த்தைகள்


عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي ﷺ انه كان يسلم عن يمينه و عن يساره السلام عليكم و رحمة الله السلام عليكم و رحمة الله

ஹஜ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள்  அறிவிக்கிறார்கள்; அன்னார் அவர்கள் வலது புறம்,இடது புறம் ஸலாம் கொடுத்தார்கள்.
'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்'


(ஆதாரம் :ஜாமிஉத்திர்மிதி 1/65,தலைப்பு:باب ما جاء فی التسليم فی الصلوة,ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/190,தலைப்பு:باب السلام فی الصلوة كيف هو )


ஸலாமின் முறை


عن عبد الله رضي الله عنه قال رايت رسول الله ﷺ يكبر فی كل خفض و رفع و قيام و قعود و يسلم عن يمينه و عن شماله السلام عليكم و رحمة الله السلام عليكم و رحمة الله حتی يُریٰ بياض خده و رايت ابابكر رضي الله عنه و عمر رضي الله عنه ما يفعلان ذلك

அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுவதை நான் பார்த்தேன்.தாழ்த்துதல், உயர்த்துதல்,நிற்றல்,அமர்தல் அனைத்து நிலைகளிலும் தக்பீர் கூறுவார்கள்.வலது புறம்,இடது புறம் திரும்பி ஸலாம் கொடுப்பார்கள். 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' அப்பொழுது அன்னாரின் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும்.மேலும் இதையே அபூபக்கர் (ரளி) அவர்களும் உமர் (ரளி) அவர்களும் செய்தார்கள்.

(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/194,باب كيف السلام علی اليمين)

عن عامربن سعد عن ابيه قال كنت اری رسول الله ﷺ يسلم عن يمينه و عن يساره حتی اری بياض خده

ஹஜ்ரத் ஆமிர் இப்னு ஸஃத்
(ரளி) அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்; நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்தேன்.அண்ணலார் அவர்கள் வலது புறம் இடதுபுறம் ஸலாம் கொடுத்தார்கள்.அப்பொழுது அண்ணலாரின் கன்னத்தின் வெண்மையை நான் பார்த்தேன்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/216, தலைப்பு: باب السلام التحليل من الصلوة عند فراغها و كيفيته)

முக்ததிகள் (இமாமை பின்தொடர்பவர்கள்) இமாமின் ஸலாமுடன் ஸலாம் கொடுப்பது


عن عتبان بن مالك رضي الله عنه قال صلينا مع رسول الله ﷺ فسلمنا حين سلم

ஹஜ்ரத் இத்பான் இப்னு மாலிக் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் தொழுதோம்.அண்ணலார் அவர்கள் ஸலாம் கொடுத்த பொழுது நாங்களும் ஸலாம் கொடுத்தோம்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/116,தலைப்பு:باب يسلم حين يسلم الامام )

كان ابن عمر رضي الله عنه يستحب اذا سلم الامام ان يسلم من خلفه

ஹஜ்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள் இமாம் ஸலாம் கொடுக்கும் பொழுது அவருக்கு பின்னால் இருப்பவரும் ஸலாம் கொடுப்பதை விரும்பினார்கள்.


சப்தமிட்டு ஓதும் தொழுகையில் சப்தமாகவும்,மெதுவாக ஓதும் தொழுகையில் மெதுவாகவும் கிராஅத் ஓதுவது


عن ابي هريرة رضي الله عنه يقول فی كل صلوة يقرا فما اسمعنا رسول الله ﷺ اسمعناكم و ما اخفی عنا اخفينا عنكم

அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் எல்லா தொழுகையிலும்  ஓதப்படவேண்டும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  எங்களுக்கு கேட்கும்விதமாக ஓதியவற்றை உங்களுக்கு கேட்கும் விதமாக ஓதுகிறோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சப்தமின்றி ஓதியதை நாங்களும் சப்தமின்றி ஓதுகிறோம்.

(ஸஹீஹுல் புகாரி 1/106,தலைப்பு:باب القراءة فی الفجر ஸஹீஹ் முஸ்லிம் 1/170,தலைப்பு:باب وجوب قراءة الفاتحة فی كل ركعة )

தொழுகும் போது கண்களை மூடவேண்டாம்


عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله ﷺ اذا قام احدكم فی الصلوة فلا يغمض عينيه


ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் தொழுகைக்கும் நிற்கும் போது அவர் தமது கண்களை மூடவேண்டாம்

(ஆதாரம்:அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 5/247,ஹதீஸ் இலக்கம்:10794,அல்முஃஜமுல் வஸீத் லித்தப்ரானி 1/603,ஹதீஸ் இலக்கம்:2218)

தொழுகையின் அனைத்து நிலைகளிலும் நிதானத்தை மேற்கொள்வது


அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறினார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள்.


اذا قمت الی الصلاة فكبر ثم اقرء ما تيسر معك من القران ثم اركع حتی تطمئن راكعا ثم ارفع حتی تعتدل قائما ثم اسجد حتی تطمئن ساجدا ثم ارفع حتی تطمئن جالسا ثم اسجد حتی تطمئن ساجدا ثم افعل ذلك فی صلوتك كلها

நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/109,தலைப்பு:باب امر النبي ﷺ الذی لا يتم ركوعه بالاعادة ,ஸஹீஹ் முஸ்லிம் 1/170,தலைப்பு:باب وجوب قراءة الفاتحة فی كل ركعة )

இமாம் தொழுகையை நடுத்தரமாக  தொழுவைப்பது


عن ابي هريرة رضي الله عنه ان رسول الله ﷺ قال اذا صلی احدكم للناس فليخفف فان فيهم الضعيف و السقيم و الكبير و اذا صلی احدكم لنفسه فليطول ما شاء


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் மக்களுக்கு தொழுக வைக்கும் போது நிச்சயமாக அவர்களில் பலகீனமானர் நோயாளி வயதானவர் இருப்பபார்கள் எனவே தொழுகையை சுருக்கி கொள்ளட்டும் உங்களில் ஒருவர் தனியாக தொழுதால் விரும்புகிறவரை நீட்டிக்கொள்ளட்டும்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/97,
اذا باب صلی لنفسه فليطول ما شاء, ஸஹீஹ் முஸ்லிம், 1/18தலைப் باب امر الاءمة بتخفيف الصلوة فی تمام الخ )


ஸலாமிற்கு பிறகு

இமாம் முக்ததிகளின் பக்கம் முன்னோக்குதல்

عن سمرة بن جندب رضي الله عنه قال كان النبي ﷺ اذا صلی صلوة اقبل علينا بوجهه

ஹஜ்ரத் ஸமுரா இப்னு ஜுன்துப் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை நிறைவு செய்த பிறகு எங்களின் பக்கம் முன்னோக்குவார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/117,தலைப்பு:باب يستقبل الامام الناس اذا سلم )

இதே தலைப்பில் ஜைத் இப்னு காலித் ஜுஹைனி (ரளி) ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரளி) அவர்களிடமிருந்து அறிவிப்புகள் வந்துள்ளது.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/117,தலைப்பு:باب ايضا)

தொழுகைக்கு பிறகு திக்ருகள் 


ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்களிடமிருந்து வரும் அறிவிப்பு

ان فقراء المهاجرين اتوا رسول الله ﷺ فقالوا قد ذهب اهل الدثور بالدرجات العلی و النعيم المقيم فقال و ما ذاك قالوا يصلون كما نصلی و يصومون كما نصوم و يتصدقون و لا نتصدق و يعتقون ولا نعتق فقال رسول الله ﷺ افلا اعلمكم شيء تدركون به من سبقكم و تسبقون به من بعدكم ولا يكون احد افضل منكم الا من صنع مثل ما صنعتم قالوا بلی يارسول الله ﷺ قال تسبحون و تكبرون و تحمدون فی دبر كل صلوة ثلاثا وثلاثين مرة قال ابو صالح فرجع فقراء المهاجرين الی رسول الله ﷺ فقالوا سمع اخواننا اهل الاموال بما فعلنا ففعلوا مثله فقال رسول الله ﷺ ذلك فضل الله يؤتيه من يشاء


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏழை முஹாஜிர்கள் (சிலர்) வந்து, "செல்வச் சீமான்கள் (மறுமையின்) உயர் பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அது எவ்வாறு?" என்று கேட்டார்கள். அவர்கள், "(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆனால், அவர்கள் தானதர்மங்கள் செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) தானதர்மங்கள் செய்(ய முடி)வதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) அடிமைகளை விடுதலை செய்(ய இயல்)வதில்லை" என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா! (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்தி விட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். உங்களைவிட வேறெவரும் சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது; உங்களைப் போன்று அவர்களும் செயல்படுத்தினால் தவிர" என்று கூறினார்கள். முஹாஜிர்கள், "ஆம் (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அது யாதெனில்) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்) என்றும், "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும், "அல்ஹம்து லில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும் (மூன்றையும் சேர்த்து) முப்பத்து மூன்று முறை கூறுங்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
)அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு அந்த ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து "செல்வச் சீமான்களான எங்கள் சகோதரர்கள் நாங்கள் செய்துவருவதைக் கேள்விப்பட்டு அவ்வாறே அவர்களும் செய்துவருகின்றனர்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது அல்லாஹ்வின் அருட்கொடை. அவன் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறான்" என்று சொன்னார்கள்.


ஹஜ்ரத் கஃப் இப்னு உஜ்ரா (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்


عن كعب بن عجرة عن رسول الله ﷺ قال معقبات لا يخيب قائلهن او فاعلهن ثلاثا و ثلاثين تسبيحة و ثلاثين تحميدة و اربعا و ثلاثين تكبيرة فی دبر كل صلوة

நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு தொழுகையிலும் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ் 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் 34 தடவை அல்ஹம்துலில்லாஹ் கூறிவருபவர் தோல்வியடைய மாட்டார்.

(ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிம் 2/219, தலைப்பு:باب استحباب الذكر بعد الصلوة )

ஹஜ்ரத் ஸவ்பான் ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்


عن ثوبان رضي الله عنه قال كان رسول الله ﷺ اذا انصرف من صلوته استغفر ثلاثا و قال اللهم انت السلام و منك السلام و تباركت ذا الجلال و الاكرام وفی رواية قال ياذالجلال و الاكرام

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்த பிறகு மூன்று தடவை இஸ்திஃபார் செய்வார்கள்.மேலும் اللهم  انت السلام و منك السلام و تباركت ذا الجلال و الاكرام وفی رواية قال ياذالجلال و الاكرام ((அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம் வ மின்கஸ் ஸலாம் வ தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம்)) மற்றொரு அறிவிப்பில் வருகிறது யா தல் ஜலாலி வல் இக்ராம் என்ற துஆவை ஓதுவார்கள்.


ஹஜ்ரத் முஙீரா இப்னு ஷுஅபா (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்


ان النبي ﷺ كان يقول فی دبر كل صلوة مكتوبة لا اله الا الله وحده لا شريك له له الملك و له الحمد و هو علی كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا يقنع ذا الجد منك الجد


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகு இதனை கூறிக்கொண்டு இருந்தார்கள்.

لا اله الا الله وحده لا شريك له له الملك و له الحمد و هو علی كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا يقنع ذا الجد منك الجد

"லா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்க் வ லஹுல் ஹம்த் வ ஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் அல்லாஹும்ம மானிஅ லிமா அஃதய்த வலா முஃதிய லிமா மனஃத வ லா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க ஜத்"

அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை.அவன் தனித்தவன்.அவனுக்கு இணையில்லை.அவனுக்கு ஆட்சி உரித்தானது.அவன் அனைத்து பொருட்களின் மீது சக்திபெற்றவன். யா அல்லாஹ் நீ கொடுத்ததை (யாரும்) தடுக்க முடியாது.நீ தடுத்ததை (யாரும்) கொடுக்க முடியாது.எந்தச் செல்வரின்  செல்வமும் அவருக்கு உன்னிடம்  பயனளிக்காது.(ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1/117,தலைப்பு: باب الذكر بعد الصلوة ,ஸஹீஹ் முஸ்லிம் 1/218,தலைப்பு:باب استحباب الذكر بعد الصلوة )


 مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يَمُوتَ 

அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
இந்த மிம்பரின் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தவாறு கூறியதை நான் கேட்டேன்.ஒவ்வொரு
தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதுகிறாரோ அவர் சொர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர தடையில்லை.
(ஆதாரம்:ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ 2/458,تخصيص اية الكرسي بالذكر ,ஹதீஸ் இலக்கம்:2395,மிஷ்காதுல் மஸாபீஹ் 1/89,باب الذكر بعد الصلاة )