Wednesday, May 6, 2020

Pj மறு ஆய்விற்கு மறுப்பு -நோன்பு திறந்த பிறகு ஓதும் துஆ



நோன்பு திறந்த பிறகு ஓதும் துஆ ஓர் ஆய்வு பகுதி:2 

நோன்பு திறந்த பிறகு ஓதும் தஹபள்ளமஉ வப்தல்லதில் உரூகு வ ஸபதல் அஜ்ரு..... என்ற துஆவை மத்ஹப் மறுப்பாளர்கள் பல வருடங்களாக ஓதி வந்தனர்.இது குறித்து மறுஆய்வு என்ற பெயரில் கட்டுரை எழுதி அந்த துஆவை பலகீனம் என்பதாக காரணத்தை கூறியுள்ளனர்.இது குறித்து நாம் மீண்டும் ஆய்வு செய்து பார்த்தபோது இந்த துஆ பலமானது, ஏற்கத்தக்கது தான் என்பது மீண்டும் உறுதியானது.(இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் கூட அமல்களின் சிறப்புகளில் பலவீனமான ஹதீஸை அமல்செய்யலாம் என்பதுதான் நமது நிலைப்பாடும்,ஹதீஸ்களை வல்லுனர்களின் நிலைப்பாடுமாகும்) அதுமட்டுமின்றி ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூட இந்த துஆ ஏற்கத்தக்கது என்பதாகதான் கூறியுள்ளனர்.
  Pj இந்த துஆவை ஏன் ஏற்றார்? பிறகு ஏன் மறுத்தார்? எனும் காரணத்தை அறிய மறுஆய்வு கட்டுரையை முதலில் பார்ப்போம்.

//தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ

இந்த நிலையில் நோன்பு துறக்கும்போது, தஹபள்ளமவு.. என்று தொடங்கும் துஆவைஓதுவது நபிமொழி என்று நாம் கூறினோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம்,பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம்கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.

எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில்கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள்பதிவு செய்து விட்டுப் பின்வருமாறுகூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரானமர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்துஅறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி,முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்றுகுறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான்பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்றுஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதைவழிமொழிந்தோம்.

இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான்ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்றுஅறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலானஅறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர்விமர்சனம் செய்திருந்தாலும் அதில்பெரும்பாலானவற்றுக்குப் பதிலும்அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம்பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில்அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறுஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும்எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம்நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது.மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான்அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர்தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள்கூறுவது மறு ஆய்வின்போது நமக்குத் தெரிய வருகின்றது.//

நமது பதில்:ஹதீஸ்கலையில் அறியப்படாதவர் என்பதற்கு இரண்டு வகையான வரையறை உண்டு.ஒன்று: ஜஹாலது (அறியப்படாமை) ஐன். அதாவது ஒருவரது இருப்பு பற்றிய தகவல் இன்மை. இது அவரிடமிருந்து இருவர் அறிவிக்கும் பட்சத்தில் நீங்கிவிடும். இரண்டாவது வகை: ஒருவரது நம்பகத்தன்மை பற்றிய அறியாமை. நடுநிலையான அவர்காலத்து இமாம் ஒருவர் அவரது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினால் அது நீங்கவிடும். 

மர்வான் இப்னு ஸாலிம் அவர்களிடமிருந்து இருவர் அறிவித்துள்ளனர்.

مروان بن سالم المقفع 
روى عن عبد الله بن الخطاب 
روى عنه الحسين بن واقد المروزي ،عزرة بن ثابت الانصاري 
(ஆதாரம்:தஹ்தீபுல் கமால் பாகம்:27/பக்கம்:390)

மர்வான் இப்னு ஸாலிம் அவர்களிடமிருந்து ஹுஸைன் இப்னு வாகித்,அஜ்ரா இப்னு ஜாபித் அல்அன்சாரி அறிவித்துள்ளனர்.

ஹுஸைன் இப்னு வாகித் குறித்து இமாம் ஹாபிழ் இப்னுல் ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ثقة له اوهام பலமானவர் தடுமாற்றம் உள்ளவர் என நற்சான்று அளித்துள்ளார்.
(ஆதாரம்:தக்ரீபுத்தஹ்தீப், பக்கம்:251)

அஜ்ரா இப்னு ஸாபித் குறித்து இமாம் ஹாபிழ் இப்னுல் ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ثقة ثابت பலமானவர், உறுதியானவர் என்பதாக நற்சான்று அளித்தார்.(ஆதாரம்:தக்ரீபுத்தஹ்தீப், பக்கம்:676)

இருவரும் பலமானவர்கள் என்பது தெளிவாகிறது.எனவே மர்வான் இப்னு ஸாலிம் அவர்கள் அறியப்படாமை ஐன்னில் உள்ளவர் இல்லை.

மர்வான் இப்னு ஸாலிம் அவர்கள் குறித்து ஹாபிள் இப்னுல் ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் "مقبول "(ஏற்கத்தக்கவர்) என்பதாக கூறியுள்ளார் (ஆதாரம்:தக்ரீபுத்தஹ்தீப் பக்கம்:931)

கேள்வியும் பதிலும்:
 தக்ரீபுத்தஹ்தீபின் முன்னுரையில் மக்பூலின் வரைவிலக்கணம் இவ்வாறு உள்ளது.

"மக்பூல்' (ஏற்கப்படுபவர்) என்ற சொல்லை எந்தக் கருத்தில் பயன்படுத்தினார் என்பதையும் அவரே விளக்கியுள்ளார். ஒருவர் குறைந்த எண்ணிக்கையிலான ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். இவரைப் பற்றி இரண்டு விதமாக முடிவு செய்ய வேண்டும். அதாவது இவர் அறிவிக்கும் ஹதீஸைப் போன்று மற்றவர்களும் அறிவித்திருந்தால் அப்போது அவர் மக்பூல் (ஏற்கப்படுபவர்) எனக் குறிப்பிடப்படுவார். அவ்வாறு வேறு யாரும் அறிவிக்காவிட்டால் அவர் பலவீனமானவராவார்" (ஏகத்துவம், ஜனவரி -2006)
எனவே இந்த ஹதீஸ் இதனை தவிர வேறு வழியில் இல்லை.எனவே பலகீனமானதுதான்.

பதில்:மக்பூலின் வரைவிலக்கணம் குறித்து ஹாபிள் இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் எழுதியிருப்பது உண்மைதான்.எனினும்,ஆய்வு செய்து பார்க்கும்போது வரைவிலக்கணம் பல ஹதீஸ்களுக்கு பொருந்தவில்லை.குறிப்பாக pj அவர்கள் ஏற்கும் இரு ஹதீஸ்களுக்கும் கூட பொருந்தவில்லை என்பதுடன் எதிராகவும் உள்ளது.

1)முஸ்னத் அஹ்மதில் வரும் நெஞ்சில் கைகட்டும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பது பீஜே அவர்களின் வாதம் .இதில் உள்ள அறிவிப்பாளரில் ஒருவர் கபீஸா .

قبيصة بن هلب مقبول من الثالثة 
(தக்ரீபுத்தஹ்தீப், பக்கம்:798)

நெஞ்சில் கைகட்டுவதற்கு இதனை தவிர வேறு வழியில் ஹதீஸ் இல்லை.

2)முஸ்லிமில் வரும் ஹதீஸ் ஒட்டகக்கறி சாப்பிட்ட பிறகு உளு செய்தல் .இதன் அறிவிப்பாளர் தொடரில் ஒருவர் ஜஃபர் இப்னு அபிஸவ்ர்.

 جعفر بن ابي ثور مقبول من الثالثة 
(ஆதாரம்:தக்ரீபுத்தஹ்தீப், பக்கம்:198)

இந்த ஹதீஸ் வேறு வழியில் வரவில்லை.எனவே நோன்பு திறந்த பிறகு துஆ ஓதும் ஹதீஸ் பலகீனமானது என்றால் நெஞ்சில் கைகட்டும் ஹதீஸ்,ஒட்டகக்கறி சாப்பிட்ட பிறகு உளு செய்தல் எனும் இரு ஹதீஸ்களும் பலவீனமானது என கூறத் தயாரா?

கேள்வியும்,பதிலும்

கேள்வி:
கபீஸா "மக்பூல்" என்பதாக ஹாபிழ் இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியிருந்தாலும்,இவரைக் குறித்து இஜ்லி அவர்கள் பலமானவர் என்பதாக நற்சான்று அளித்துள்ளார்.அதே போன்று ஜஃபர் இப்னு அபிஸவ்ர் அவர்களைக் குறித்து மக்பூல் என்பதாக ஹாபிழ் இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியிருந்தாலும்,இவர் ஹதீஸை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.எனவே இரு ஹதீஸ்களும் பலமானதுதான்.ஆனால், 
மர்வான் இப்னு ஸாலிம் குறித்து எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை.எனவே நோன்பு திறந்த பிறகு துஆ ஓதுதல் சம்பந்தமான ஹதீஸ் பலகீனமானதுதான்.

பதில்:நோன்பு திறந்த பிறகு ஓதும் துஆவில் வரும் அறிவிப்பாளர் மர்வான் இப்னு ஸாலிம் அவர்களின் அறிவிப்பை இமாம் நஸாயி (ரஹ்) அவர்களும்,இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்களும் ஆதாரம் எடுத்துள்ளனர்.இதுவே அவர் நம்பகமானவர் என்பதற்கு பெரும் சான்றாகும்.இமாம் நஸாயி (ரஹ்) அவர்கள் அறிவிப்பாளர் விஷயத்தில் கடும்போக்கு கொண்டவர்.எனினும்,மர்வான் இப்னு ஸாலிம் அவர்களை ஆதாரம் எடுத்துள்ளார்.இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்களும் ஜர்ஹு   வ தஃதீலில் (நிறை,குறை எடை போடும் துறை) திறன் பெற்றவர். (எனினும் வேறு அறிஞர்கள் தக்க காரணத்துடன் விமர்சனம் செய்திருந்தால் அது தனியானதொரு விஷயம்)

இதற்கு சான்று pj அவர்கள் வேறு சட்டத்தில் இதனை அங்கீகரித்துள்ளார்.

பாங்கு பின்பு ஸலவாத் ஓதலாம் என்பது பீஜே அவர்களின் நிலைப்பாடு.முஸ்லிம் ஹதீஸில் இது குறித்து ஹதீஸ் வந்துள்ளது.ஒருசாரார் இதனை பலவீனம் என்பதாக வாதிடுகின்றனர்.இதற்கு மறுப்பளித்து ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது.அதனின் இணையதள முகவரி

https://www.onlinepj.in/index.php/articles/articles/bangkup-pin-salavath

(இதனை முழுமையாக வாசித்து மனதில் நன்கு பதிய வைக்கவேண்டும்)

ஆய்வுக் கட்டுரையில் வந்துள்ள இரு செய்திகள் 


// تهذيب التهذيب - ابن حجر - (ج 1 / ص 76) 152 -س النسائي أحمد بن نفيل السكوني الكوفي روى عن حفص بن غياث وعنه النسائي وقال لا بأس به قال المزي ذكره أبن عساكر ولم أقف على روايته عنه وقال الذهبي مجهول قلت بل هو معروف يكفيه رواية النسائي عنه



அஹ்மத் பின் நுஃபைல் யாரென அறியப்படாதவர் என்று தஹபீ கூறுகிறார். இல்லை அவர் நம்பகமானவர் தான். அவர் வழியாக நஸாயீ அறிவித்திருப்பதே போதுமானதாகும் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.


تلخيص الحبير - ابن حجر - (ج 3 / ص 5) وزعم عبد الحق أن عبد الله بن عصمة ضعيف جدا ولم يتعقبه بن القطان بل نقل عن بن حزم أنه قال هو مجهول وهو جرح مردود فقد روى عنه ثلاثة واحتج به النسائي

அப்துல்லாஹ் பின் அஸமா என்பவர் யாரென அறியப்படாதவர் என்று அப்துல் ஹக் கூறுகிறார். அது நிராகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் வழியாக மூன்று பேர் அறிவித்துள்ளனர். மேலும் நஸாயீ அவர்கள் இவர் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.//

இவ்வாறே மர்வான் இப்னு ஸாலிம் அவர்களை,இமாம் நஸாயி (ரஹ்),இமாம் அபூதாவூத் (ரஹ்) இருவரும் ஆதாரம் எடுத்திருப்பது போதுமானதாகும்.எனவே நோன்பு திறந்த பிறகு ஓதும் துஆ தஹபள்ளமவு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதாக அறியமுடிகிறது.(அல்லாஹ் மிக அறிந்தவன்)






Saturday, May 2, 2020

நோன்பு திறக்கும் போது ஓதும் ஆதாரப்பூர்வமான துஆ 1-2


நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ ஓர் ஆய்வு பகுதி- 1தொடர்:2



ஹதீஸ்கலை வல்லுநர்களிடத்தில் துஆ முஸ்தஹப்பு:

1)இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் ஷுஅபுல் ஈமான்,தஃவாதுல் கபீர்,ஃபளாயிலுல் அவ்காத் ஸுனனுல் குப்ரா,ஸுனனுஸ்ஸுஃரா போன்ற நூல்களில் இந்த துஆவை கொண்டு வந்துள்ளார்.பைஹகி (ரஹ்) அவர்களின் வழமையானது ஏற்கத்தகாத அறிவிப்புகளில் மெளனத்தை கடைப்பிடிக்க மாட்டார்.இது குறித்து அன்னார் தனது வழிமுறையை தலாயிலுன்நுபுவ்வத் நூலில் பக்கம்:47 இல் எழுதியுள்ளார்
وعادتي- في كتبي المصنّفة في الأصول والفروع- الاقتصار من الأخبار على ما يصح منها دون ما لا يصح، أو التمييز بين ما يصح منها وما لا يصح، ليكون الناظر فيها من أهل السنة على بصيرة مما يقع الاعتماد عليه، لا يجد من زاغ قلبه من أهل البدع عن قبول الأخبار مغمزا فيما اعتمد عليه أهل السنة من الآثار

எனினும்,இந்த சட்டமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் 100 சதவீதம் பொருந்தவில்லை.ஆனால், நோன்பு திறக்கும் துஆவை அவர்கள் முஸ்தஹப் என்பதாக நிரூவியுள்ளார்.இதே போன்று அஸ்ஸுனனுல் குப்ரா 4/403 باب ما يقول اذا افطر என்ற தலைப்பில் இரு ஹதீஸ்களை கொண்டு வந்துள்ளார்.ஒன்று ذهب الظما மற்றொன்று اللهم لك صمت (அல்லாஹும்ம லக ஸும்து) அஸ்ஸுனனுஸ்ஸுஃரா நூலை குப்ராவிற்கு பிறகு எழுதியதால் ஹதீஸ்களில் மிக பேணுதலை கடைப்பிடித்து எழுதினார்.இதில் 2/11 பக்கத்தில் இரண்டு ஹதீஸ்களை பதிவுசெய்து முஸ்தஹப் என்ற   (باب ما يستحب أن يفطر عليه وما يقول) தலைப்பில் கொண்டு வந்துள்ளார்.இவ்வாறே பளாயிலுல் அவ்காத் நூலில் பாகம்:1/300 ஆம் பக்கத்தில் முஸ்தஹப் என்ற (باب استحباب الدعاء عند الفطر) தலைப்பில் கொண்டு வந்துள்ளார்.

2)இமாம் பஙவி (ரஹ்) அவர்கள், [மஸாபீஹுஸ்ஸுன்னா பாகம்:2, பக்கம்:46] இல் நோன்பு பாடத்தில் இரண்டு துஆவை பதிவுசெய்துள்ளார்.[மஸாபீஹுஸ்ஸுன்னாவின் முகத்தமாவில் 1/110] இல் தனது வழிமுறையை கூறுகிறார்:

وأعني بـ (الحِسان) ما أورده أبو داودوالترمذي وغيرهما من الأئمة في تصانيفهم رحمهم اللَّه وأكثرها صحاح بنقل العدل عن العدل غير أنها لم تبلغ غاية شرط الشيخين في علو الدرجة من صحة الإسناد إذ أكثر الأحكام ثبوتها بطريق حسن۔ وما كان فيها من ضعيف أو غريب أشرت إليه وأعرضت عن ذكر ما كان منكرًا أو موضوعًا‘‘۔

முன்கர்(நிராகரிக்கப்பட்டது) இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை புறக்கணித்துவிடுவார்.
பலகீனமான ஹதீஸ்களை சுட்டிக்காட்டுவார்.நோன்பு திறக்கும் துஆவின் அறிவிப்பில் விமர்சனம் செய்யாமல் மெளனத்தை கடைப்பிடித்துள்ளார்.இதே போன்று பிரபல்யமான அவரது நூல் [ஷரஹுஸ்ஸுன்னா 6/265] இல் باب ما يقول عند الفطر என்ற தலைப்பில் இரண்டு துஆக்களின் முழுமையான அறிவிப்பாளர் தொடர்களை கொண்டு வந்துள்ளார்.மேலும் மற்றொரு நூல் [தஹ்தீபு ஃபில் ஃபிக்ஹில் இமாமிஷ் ஷாபியி 3/183] இல் தெளிவாக முஸ்தஹப் என்பதை கூறியுள்ளார்.و يستحب أن يقول 

3)ஷைகு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் 
ஷைகுல் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் [குன்னியத்துத்தாலிபீன் நூலில் பக்கம்:111] ல் நோன்பு திறக்கும் துஆவில் அல்லாஹும்ம லக ஸும்து.... கொண்டு வந்துள்ளார்.

4) இப்னு குதாமா (ரஹ்) அவர்கள்
இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் முங்னியில் இந்த துஆவை பதிவு செய்யவில்லை.எனினும் மற்றொரு நூலான [அல்ஹாதி அவ் உம்ததில் ஹாஜிம் ஃபிஜ்ஜவாயிதி அலா முஹ்தஸரில் ஹர்கி பக்கம்:172] ல் முஸ்தஹப் என்பதை கூறியுள்ளார்.மேலும் மற்றொரு நூல் [தஸ்னீஃபுல் முக்னியி ஃபி பிக்ஹில் இமாமி அஹ்மத் இப்னு ஹன்பல் ஷைபானி 104,105] பக்கத்தில் இதனை முஸ்தஹப் என்பதாக பின்வரும் தலைப்பில் பதிவு செய்துள்ளார்.

ويستحب تعجيل الإِفطار وتأخير السحور، وأن يفطر على التمر فإِن لم يجد فعلى الماء. وأن يقول عند فطره: اللهم لك صمت وبك ........

(முஸ்தஹப்பான காரியங்கள்:நோன்பு திறப்பதை விரைவுப்படுத்துவது,ஸஹரை பிற்படுத்துவது பேரிச்சம் பழத்தில் நோன்பு திறப்பது அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது,நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ அல்லாஹும்ம லக ஸும்து ......)

5) ஹாபிள் ளியாஉல் மக்தஸி (ரஹ்) 
அன்னாரின் நூல் [கிதாபுஸ்ஸுனன் வல்அஹ்காம் அனில் முஸ்தபா 
பாகம்:3/பக்கம்:435] இல் باب ما يقال عند الافطار و فضل الدعاء عنده என்ற தலைப்பில் இந்த துஆவை (அல்லாஹும்ம லக ஸும்து...) கொண்டு வந்துள்ளார்.இதனை குறித்து விமர்சனம் செய்யாமல் மெளனத்தை கடைப்பிடித்துள்ளார்.இந்நூலில் அன்னாரின் வழிமுறை பலகீனமான,ஏற்கத்தகாத அறிவிப்புகளில் மெளனமாக இருக்கமாட்டார்.இது சம்பந்தமான நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் சம்பந்தப்பட்ட செய்தி பலகீனமானது என்பதை சுட்டிக்காண்பித்துள்ளார்.எனினும் அபூதாவூத் அறிவிப்பு குறித்து மெளனமாக இருந்துள்ளார்.

6)இமாம் முஜத்திதீன் இப்னு தைய்மிய்யா (ரஹ்) 
அன்னார் குறித்து இமாம் தஹபி (ரஹ்) அவர்கள், இமாம்,ஷைகு,அல்லாமா,அக்கால ஃபகீஹ் நற்சான்று அளித்துள்ளார்.அன்னாரின் பிரபல்யமான நூல் [முன்தகல் அஹ்பார்] அல்லாமா ஷவ்கானி அவர்கள் இதற்கு பிரபல்யமான விரிவுரை [ஷரஹ் நைலுல் அவ்தார்] எழுதியுள்ளார்.அதில் 1/494ஆம் பக்கத்தில் اللهم لك صمت அல்லாஹும்ம லக சும்து....எடுத்தெழுதியுள்ளார்.

7)அல் இஜ்ஜு இப்னு அப்துஸ்ஸலாம் (ரஹ்) அவர்கள்
அன்னார் உலமாக்களின் அரசர் என போற்றப்படுபவர்.[மகாஸிதுஸ் ஸவ்ம்] எனும் நூலின் 20ஆம் பக்கத்தில் நோன்பின் ஒழுக்கங்களில் இந்த துஆவை பதிவுசெய்துள்ளார்.

8)இமாம் நவவி (ரஹ்) அவர்கள் 
அன்னார் [அல்மஜ்மூஃ ஷர்ஹுல் முஹத்தப் 6/408] இல் ஷாபிகளின் பெரும்பாலான அறிஞர்களிடமிருந்து இந்த துஆ முஸ்தஹப் என்பதை நிறுவியுள்ளார்.இறுதியில் அன்னார் கூறும் வார்த்தை  يستحب நோன்பாளி துஆ ஓதுவதும்,நோன்பு திறக்கும் போது அதனைக் கொண்டு திறப்பதும் முஸ்தஹப்பாகும்.அந்த ஹதீஸைக் கொண்டு முஸ்தஹப் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை.

9)ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் அன்னாரின் நூல் ஷர்ஹு உம்ததில் ஃபிக்ஹ்ஹில் நோன்பு என்ற பாடத்தில் 513 ஆம் பக்கத்தில் அனைத்து துஆக்களையும் எடுத்தெழுதிய பிறகு முஸ்தஹப் என்பதை கொண்டு வந்துள்ளார்.
و يستحب له أن يدعو عند فطره 

10)ஹாபிள் இப்னு கைய்யும் (ரஹ்) அவர்கள்
அன்னார் ஜாதுல் மஆத் நூல் 2/49இல் فصل فى هديه صلى الله عليه وسلم فى الفطر எனும் தலைப்பில் ஹதீஸ்களை எழுதியிருப்பதுடன் பலகீனம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும் அபூதாவூத் நூலில் வரும் அறிவிப்பை குறித்து விமர்சிக்கவில்லை.

11) இமாம் இப்னு கஸீர் (ரஹ்) 
அன்னார் ஷீராஜி (ரஹ்) அவர்களின் நூல் கிதாபுத்தன்பீஹ்ஹிற்கு  தஹ்ரீஜ் (ஒரு நூலின் அறிவிப்புகளின் தரவுகளை தேடி எடுப்பது) செய்துள்ளார்.அதில் அன்னார் எழுதியிருப்பது:و يستحب أن يدعو على الإفطار அல்லாஹும்ம லக சும்து ...நோன்பு திறக்கும் நேரத்தில்  பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் (இந்த) துஆவை ஓதுவது முஸ்தஹப்பாகும்.தாரகுத்னி (ரஹ்) அவர்கள்,இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் அறிவிப்பு,இது போன்றவை சரியானதல்ல என்பதாக அறிவித்துள்ளார்.
 (ஆதாரம்:இர்ஷாதுல் ஃபகீஹ் இலா மஃரிபதி அதில்லதித்  தன்பீஹ் 1/289) 
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் முன்னுரையில் தனது வழிமுறையை விளக்கியுள்ளார்.அல்லாஹும்ம லக ஸும்து முர்ஸலாக வருவது ஆதாரப்பூர்வமானது.


ஹம்பலி பேரறிஞர்களிடம் முஸ்தஹப்:

1)காளி முஹம்மது அபூயஃலா இப்னுல் ஃபரா ஹன்பலி (ரஹ்) அவர்களிடமிருந்து ஷைகுல் இஸ்லாம் அவர்கள் "ஷர்ஹு உம்தா" நூலில் கிதாபுஸ்ஸவ்ம் 1/513 இல் முஸ்தஹப் என்பதை எடுத்துக் கூறியுள்ளார்.

2)அபுல்கத்தாப் கலூதானி (ரஹ்) அவர்கள் "ஹிதாயா அலா மத்ஹபில் இமாம் அஹ்மத்" நூலில் 1/161 இல் முஸ்தஹப் என்பதாக கூறியுள்ளார்.

3)யூசுஃப் இப்னு அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் (இப்னு ஜவ்ஜி ரஹ் அவர்களின் மகனார்) "அல்மத்ஹபில் அஹ்மத் ஃபி மத்ஹபில் இமாம் அஹ்மத்" பக்கம்:54 இல் முஸ்தஹப் என்பதை கூறியுள்ளார்.

4)ஹாபிள் இப்னுல் ஜவ்ஜி (ரஹ்) அவர்கள் "தப்ஸிரா"  நூலில் 2/75 இல் முஸ்தஹப் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

5)அலி இப்னு ஸுலைமான் முர்தாவி (ரஹ்) அவர்கள் "அல்இன்ஷாஃப் ஃபி மஃரிஃபதிர் ராஜிஹ் மினல் கிலாஃப்" நூலில் 3/332 இல் முஸ்தஹப் என்பதாக எழுதியுள்ளார்.

6)மர்யி இப்னு யூசுப் அல்கர்மி அல்மக்திஸி (ரஹ்) அவர்கள் "தலீலுத்தாலிப் லி நைலில் மதாலிப்"  நூலில் 1/93 இல் முஸ்தஹப் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

7) அப்துல் காதிர் தஃங்லிபி ஷைபானி (ரஹ்) அவர்கள் "நைலுல் மஆரிப் பிஷர்ஹி தலீலித் தாலிப்"  1/275 

8)முஸ்தபா ரஹீபானி திமிஷ்கி ரஹீபானி (ரஹ்) அவர்கள் "மதாலிபு ஊலன் னுஹா ஃபி ஷர்ஹி ஙாயதில் முன்தஹா" 2/207

9)இப்னு ளுவய்யான் இப்ராஹிம் இப்னு முஹம்மது இப்னு ஸாலிம் (ரஹ்) அவர்கள் "மனாருஸ்ஸபீல் ஃபி ஷர்ஹித்தலீல்" 1/221 


ஷாபியி பேரறிஞர்களிடம் முஸ்தஹப்: 

1) அபூபக்கர் இஸ்ஹாக் ஸீராஜி (ரஹ்) அவர்கள் (அல் மத்ஹபு ஃபி பிக்ஹில் இமாமுஷ்ஷாபியி 2/623)

2)அர்ரூயானி (ரஹ்) அவர்கள் (பஹ்ருல் மத்ஹப் ஃபீ ஃபுரூயில் மத்ஹபிஷ்ஷாபியி 3/271)

3)அபுஹாமிதில் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள் (அல்வஸீத் ஃபில் மத்ஹபி 2/536)

4)யஹ்யல் இம்ரானில் யமனிஷ் ஷாபியி (ரஹ்) அவர்கள் (அல்பயான் ஃபி மத்ஹபில் இமாமிஷ் ஷாபியி 3/359)

5)அப்துல்கரீம் ராபியி கஜ்வீனி (ரஹ்) அவர்கள் (ஃபத்ஹுல் அஜீஜ் ஃபி ஷர்ஹில் வஜீஜ் வஷ்ஷர்ஹில் கபீர் 6/425)

6)தகீயுத்தீன் ஸுப்கி (ரஹ்) அவர்கள் (அல்இப்திஹாஜ் ஃபி ஷர்ஹில் மின்ஹாஜ் 226)

7)கமாலுத்தீன் தமீரி (ரஹ்) அவர்கள் (அந்நஜ்முல் வஹ்ஹாஜ் ஃபி ஷர்ஹில் மின்ஹாஜ் 3/324)

8)ஜமாலுத்தீன் மஹல்லி (ரஹ்) அவர்கள் (கன்ஜுர்ராஙிபீன் ஸர்ஹு மின்ஹாஜித்தாலிபீன் 1/421,422)

9)இப்னுல் ஹஜர் ஹைதமி (ரஹ்) அவர்கள் (துஹ்ஃபதுல் முஹ்தாஜ் ஃபி ஷர்ஹில் மின்ஹாஜ் 3/425)

10)இப்னு அல்லான் (ரஹ்) அவர்கள் (அல்ஃபுதூஹாதுர் ரப்பானிய்யா ஷர்ஹுல் அத்காரின் நவாவிய்யா 4/234,235)

முக்கிய குறிப்பு:

ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸ்கள் பலவீனமாக இருந்தாலும் தாரளமாக அமல்செய்யலாம் என்பதுதான் ஹதீஸ் கலையின் விதியாகும்.

يحكم للحديث بالصحة إذا تلقاه الناس بالقبول وإن لم يكن له إسنداد صحيح. (التدريب 29)

"ஒரு நபி மொழியை அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டு விட்டால் அதற்கு சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லையென்றாலும் அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று தீர்மானிக்கப்படும்" (தத்ரீப் -29) எனவே நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ சம்பந்தமான அல்லாஹும்ம லக சும்து ஆதாரப்பூர்வமானது என்பதை தெளிவாக புரியமுடிகிறது.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

நன்றி:https://nomaniqbal-alhanafi.blogspot.com/2017/06/blog-post.html?m=1