ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர் :3
இமாம் 'வலல்லாள்ளீன்' கூறும் போது பின்பற்றி தொழுபவர்,
ஆமீன் கூறவேண்டும்.
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فأنصتوا وإذا قال ( غير المغضوب عليهم ولا الضالين ) فقولوا آمين
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இமாம் 'வலல்லாள்ளீன்' கூறினால் மற்றொரு அறிவிப்பில் ஓதுபவர் 'வலல்லாள்ளீன்' கூறினால்,நீங்கள் ஆமீன் கூறுங்கள்.(ஸஹீஹ் புகாரி)
عن أبي هريرة رضي الله عنه
أن رسول الله صلى الله عليه وسلم قال: (إذا قال الإمام: {غير المغضوب عليهم ولا الضالين}. فقالوا آمين،
அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; இமாம் ஆமீன் கூறினால்,நீங்களும் ஆமீன் கூறுங்கள்.(ஸஹீஹ் புகாரி)
இமாம்,பின்தொடர்பவர் ,தனித்து தொழுபவர் ஆமீன் மெதுவாக சொல்வது
عن وائل بن حجر رضي الله عنه قال : كان رسول الله صلى الله عليه وسلم : إذا قرأ ( وَلَا الضَّالِّينَ ) ، قال : آمين ، وخفض بها صوته
வாயில் இப்னு ஹுஜ்ர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதேன்.அண்ணலார் 'வலல்ளாள்ளீன்' கூறும் பொழுது ஆமீன் என்பதை மெதுவாக கூறினார்கள்.
(முஸ்னத் அபூதாவூத் தயாலிஸி,முஸ்னத் அஹ்மத்,அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி)
عن أبي وائل قال : كان عمر وعلى رضى الله عنهما لا يجهران ( بسم الله الرحمن الرحيم ) ولا بالتعوذ ، ولا بالتأمين
அபூவாயில் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உமர் (ரளி), அலி (ரளி) இருவரும் பிஸ்மில்லாஹ்,அஊது,ஆமீன் சப்தமிட்டு ஓதமாட்டார்கள்.
(ஷர்ஹு மஆனில் ஆஸார்)
خمس يخفين : سبحانك اللهم وبحمدك ، والتعوذ ، و بسم الله الرحمن الرحيم ، وآمين ، واللهم ربنا لك الحمد "
ஹஜ்ரத் இப்ராஹிம் நகயி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ஐந்து காரியங்களை மெதுவாக கூறவேண்டும்.
ஸுப்கானல்லாஹும்ம,அஊது,
பிஸ்மில்லாஹ்,ஆமீன்,
அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து(ஆதாரம்:முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்)
ருகூஉ செய்வது
وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
அல்லாஹ் அருளுகிறான்:ருகூஉ செய்பவர்களுடன் சேர்ந்து ருகூஉ செய்யுங்கள்.(பகரா)
عن أبي هريرة - رضي الله عنه قال : " إذا قمت إلى الصلاة فكبر ، ثم اقرأ ما تيسر معك من القرآن ، ثم اركع حتى تطمئن راكعا
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருக்கு தொழுகையை கற்றுக்கொடுத்தவாறு கூறினார்கள்:தொழுகைக்கு நின்றால்,தக்பீர் கூறுங்கள்.பிறகு குர்ஆனில் உம்மால் முடிந்தளவு ஓதுங்கள். பிறகு நிதானமாக ருகூஉ செய்யுங்கள் (ஆதாரம்:ஸஹுஹுல் புகாரி,முஸ்லிம்)
தக்பீர் கூறியவாறு ருகூஉ செய்வது
يَقُولُ : " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ ، يُكَبِّرُ حِينَ يَقُومُ ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ
அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது நின்ற நிலையில் தக்பீர் கூறுவார்கள்.பிறகு ருகூவிற்கு செல்லும் போது தக்பீர் கூறுவார்கள் (ஆதாரம்:புகாரி,முஸ்லிம்)
ருகூஉ செய்யும் முறை
يا بني إذا ركعت فضع كفيك على ركبتيك ، وأفرج بين أصابعك ، وارفع يديك عن جنبيك
அனஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள் :நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்;மகனே நீர் ருகூஉ செய்யும் போது உனது இரு உள்ளங்கைகளையும் உனது இரு மூட்டுக்கலின் மீது வைத்துவிடு. மேலும்,உனது விரல்களை விரித்து வைத்துவிடு.உனது விலாப்புறத்தை விட்டும்,உனது இருகைகளையும் உயர்த்திக் கொள். (ஆதாரம் :முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி,அல்முஃஜமுஸ்ஸஙீர் லித்தப்ரானி)
إن رسول الله صلى الله عليه وسلم ركع فوضع يديه على ركبتيه كأنه قابض عليهما ووتر يديه فنحاهما عن جنبيه
அபூஹுமைத் (ரளி) அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூஉ செய்யும் போது இரு கைகளையும் முட்டுக்கலின் மீது வைப்பார்கள்.இரண்டையும் அழுத்தமாக பிடித்ததை போன்று.மேலும் இருகைகளையும் விரித்துவைத்திருப்பார்கள்.விலாப்புறத்தை விட்டு விலகி வைப்பார்கள்.
: " فَإِذَا رَكَعْتَ ، فَضَعْ رَاحَتَيْكَ عَلَى رُكْبَتَيْكَ ، ثُمَّ فَرِّجْ بَيْنَ أَصَابِعِكَ ، ثُمَّ أَمْكُثْ حَتَّى يَأْخُذَ كُلُّ عُضْوٍ مَأْخَذَهُ
மற்றோர் அறிவிப்பில்
உமர் (ரளி) அவர்கள் கூறினார்கள்:ருகூஉ செய்யும் போது உனது இரு மூட்டுக்களின் மீது உள்ளங்களை வைத்துக் கொள்.பிறகு உனது விரல்களை விரித்து வைத்து ஒவ்வொரு உறுப்பும் அதனின் இடத்தை அடையும் வரை நிதானித்து இரு. (ஆதாரம்:திர்மிதி,ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
ருகூவில் தஸ்பீஹ்
عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ ، يَقُولُ : لَمَّا نَزَلَتْ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ " ، فَلَمَّا نَزَلَتْ سَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى قَالَ : " اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ " .
உக்பதுப்னு ஆமிர் (ரளி) அவர்கள் கூறினார்கள்:இறைவசனம் இறங்கிய பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;அதனை ருகூவில் ஓதுங்கள் பிறகு இறைவசனம் இறங்கிய பொழுது அதனை ருகூவில் ஓதுங்கள் என்றார்கள்.(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத்,ஸுனன் இப்னுமாஜா)
فكان يقول في ركوعه : سبحان ربي العظيم وفي سجوده سبحان ربي الأعلى
ஹுதைஃபா ரளி அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதேன்.அண்ணலார் அவர்கள் ருகூவில் ஸுப்ஹான ரப்பியல் அளீம் ஓதுவார்.ஸஜ்தாவில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா ஓதுவார்.(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத்,ஜாமிஉத்திர்மிதி)
ருகூவின் தஸ்பீஹ்,தஸ்பீஹின் எண்ணிக்கை
روي عن ابن مسعود رضي الله عنه : أن النبي صلى الله عليه وسلم قال { إذا ركع أحدكم فقال : سبحان ربي العظيم ثلاثا فقد تم ركوعه
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்;உங்களில் ஒருவர் ருகூஉ செய்யும் பொழுது அவரின் ருகூவில் ஸுப்ஹான ரப்பியல் அளீம் மூன்று கூறுவதால் அவரின் ருகூவானது முழுமை பெற்றுவிட்டது.இது குறைந்த பட்சமாகும்.(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி)
இமாம் தஸ்பீஹ், முக்ததி (பின்பற்றுபவர்) ஹம்து சொல்வது
أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد
அபூஹுரைரா ரளி அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்;இமாம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று சொல்லும் போது நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து' கூறுங்கள் (ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம்,ஸஹீஹுல் புகாரி)
தனியாக தொழுபவர் இரண்டும் (ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்,ரப்பனா லகல்) கூறுவது
عن أبي هريرة رضي الله عنه قال { كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ، ثم يكبر حين يركع ، [ ص: 244 ] ثم يقول : سمع الله لمن حمده ، حين يرفع صلبه من الركعة ، ثم يقول وهو قائم : ربنا ولك الحمد
அபூஹுரைரா அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் நிலை நிற்கும் போது தக்பீர் கூறுவார்கள்.ருகூஉ செய்யும் போது தக்பீர் கூறுவார்கள்.பிறகு ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' கூறுவார்கள்.பிறகு நிலைக்கு வந்த பிறகு ரப்பனா லகல் ஹம்து' கூறுவார்கள்
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி)
நிலை நிற்றல் (கவ்மா)
ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعتدل قائما
ஹஜ்ரத் அபூஹுரைரா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருக்கு தொழுகையை கற்றுக் கொடுத்தவாறு நவின்றார்கள்;ருகூஉ செய்யுங்கள் நிதானமாக செய்யுங்கள் பிறகு நிதானமாக (ருகூவிலிருந்து) நிலையில் எழுந்திருங்கள் (ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி,ஸஹீஹ் முஸ்லிம்)
நிலைநிற்றல் (கவ்மா) முறை
وإذا رفع رأسه استوى قائما ، حتى يعود كل فقار إلى مكانه
அபூஹுமைத் ஸாயிதி ரளி அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தி நேராக நிலைக்கு திரும்புவார்கள்.ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்தை அடையும் வரை.(ஆதாரம்:புகாரி)
وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما
ஆயிஷா ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையை குறித்து விளக்கியவாறு கூறுகிறார்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்காதவரை ஸஜ்தா செய்வதில்லை.(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம்)
நிலை நிற்றலில் (கவ்மாவில்) ஓதும் துஆ
قال كنا يوما نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده قال رجل وراءه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه
ரிஃபாஅதுப்னு ராபியி ஜுரகி அவர்கள் கூறுகிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் நின்று தொழுது கொண்டிருந்தேன்.எப்பொழுது அண்ணலார் தலையை உயர்த்தினார்களோ, 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' கூறினார்கள்.ஒருவர் அவருக்கு பின்னால் 'ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரா தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று ஓதினார்.(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி,அபூதாவூத்)
ருகூவிற்கு செல்லும் போது எழும் போது கையை உயர்த்துவது கூடாது
قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ هُمْ فِي صَلاَتِهِمْ خَاشِعُونَ
அல்லாஹுதஆலா கூறுகிறான் திட்டமாக முஃமீன்கள் வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருப்பார்கள்.
مخبتون متواضعون لا يلتفتون يميناً ولا شمالاً ولا يرفعون أيديهم في الصلاة
இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் இந்த வசனத்தின் விரிவுரையில் கூறுகிறார்கள்: உள்ளச்சம் என்பதை கொண்டு கருத்து அடக்கம்,இயலாமை உடன் நிற்பதாகும்.வலது,இடது பார்க்க கூடாது.கைகளை தொழுகையில் உயர்த்த மாட்டார்கள்.
(தப்ஸீர் இப்னு அப்பாஸ்)
خاشعون الذين لايرفعون ايديهم فى الصلوة الافى التكبيرة الاولى
இமாம் ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் இந்த வசனத்தின் விரிவுரையில் கூறுகிறார்கள்:உள்ளச்சம் மிக்கவர்கள் என்பதன் கருத்து தக்பீர் தஹ்ரீமா தவிர தொழுகையில் கை உயர்த்த மாட்டார்கள்.
عبد الله بن مسعود ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة قال
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் கூறுகிறார்கள்:நான் உங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையை அறிவிக்க வேண்டாமா? அறிவிப்பாளர் கூறுகிறார்;இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் (தொழுகைக்கு) நின்றார்கள். முதல் தடவை இரு கைகளை உயர்த்தினார்கள்.பிறகு கைகளை உயர்த்தவில்லை.(ஆதாரம்:ஸுனன் நஸாயி,அபூதாவூத்,திர்மிதி)
فقال : صليت خلف رسول الله صلى الله عليه وسلم وخلف أبي بكر وعمر فلم يرفعوا أيديهم إلا في التكبيرة التي تفتتح بها الصلاة
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,அபூபக்கர் ரளி, உமர் ரளி அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதுள்ளேன்.அனைவரும் தொழுகையின் ஆரம்பத்திலே தவிர கையை உயர்த்தவில்லை.(ஆதாரம்:முஃஜமு ஷைக் லி அபிபக்கர் இஸ்மாயீலி,முஸ்னத் அபி யஃலா அல்மூஸிலி)
عن علي رضي الله عنه قال كان رسول الله ﷺ اذا قام الی الصلوة المكتوبة كبر و رفع يديه حذو منكبيه و فی رواية انه كان يرفع يديه فی اوّلِ الصَلاَةِ ثُمَّ لا يعود
அலி ரளி அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையான தொழுகைகளுக்கு நிற்கும் போது,தக்பீர் கூறியவாறு இரு கைகளையும் தோள்புஜத்திற்கு நேராக உயர்த்துவார்கள். மற்றொரு அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் தவிர கையை உயர்த்த மாட்டார்கள் என்று வந்துள்ளது.(ஆதாரம்:முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்,கிதாபுல் இலல் லித்தாரகுத்னி)
قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة رفع يديه حتیٰ يحاذي منكبيه لا يعود برفعهما حتیٰ يسلم من صلوته
பராஇப்னு ஆஜிப் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது,இரு கைகளையும் தோள்புஜத்திற்கு நேராக இருக்கும் அளவிற்கு உயர்த்துவார்கள்.தொழுகைக்கு ஸலாம் கொடுக்கும் வரை இரு கைகளையும் (பிறகு) உயர்த்தமாட்டார்கள். (ஆதாரம்:முஸ்னத் அபீஹனீஃபா பி ரிவாயதி அபி நயீம்,ஸுனன் அபூதாவூத்)
عن ابن عمر قال رايت رسول الله اذا افتتح الصلوة رفع يديه حذو منكبيه واذا اراد ان يركع وبعد ما يرفع رأسه من الركوع فلايرفع ولا بين السجدتين
இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பார்த்தேன்.அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது இரு கைகளை உயர்த்துவார்கள்.ருகூவிற்கு செல்லும் போது,எழும் போதும்
இரு ஸஜ்தாவிற்கு மத்தியில் கைகளை உயர்த்த மாட்டார்கள்.(ஆதாரம்:முஸ்னத் அல்ஹுமைதி,முஸ்னத் அபி அவானா)
كنا مع رسول الله صلي الله عليه وسلم بمكة نرفع ايدينا في بدء الصلوة وفي داخل الصلوة عند الركوع فلما هاجر النبي صلي الله عليه وسلم الي المدينة ترك رفع يدين في داخل الصلوة عند الركوع وثبت علي رفع يدين في بدء الصلوة ۔۔۔ توفي
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் மக்காவில் இருந்த போது,தொழுகையின் ஆரம்பத்திலும்,ருகூஉ செய்யும் போதும் இரு கைகளை உயர்த்தி கொண்டு இருந்தோம்.அன்னார் அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்த வந்த பிறகு ருகூவில் கைகளை உயத்துவதை விட்டுவிட்டார்கள்.தொழுகையின் ஆரம்பத்தில் கைகளை உயர்த்துவதை மட்டும் கடைப்பிடித்தார்கள்.(ஆதாரம்:அஹ்பாருல் ஃபுகஹா வல் முஹத்திஸீன் லில்கீரவானி)
தக்பீர் கூறியவாறு ஸஜ்தா செய்வது
أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
அல்லாஹுதஆலா கூறுகிறான்:ஈமான் கொண்டவர்களே! ருகூஉ செய்யுங்கள்.ஸுஜுது செய்யுங்கள்.உங்களின் இறைவனை வணங்குங்கள்.நன்மை செய்யுங்கள்.நீங்கள் வெற்றிபெறுவீர்கள்.(ஹஜ்)
عن ابي هريرة قال كان رسول الله صلي الله اذا قام الي الصلوة ، يُكَبِّرُ حِينَ يَقُومُ ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ...........ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا
அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது, நிற்கும் நிலையில் தக்பீர் கூறுவார்கள்.பிறகு ஸஜ்தாவிற்கு குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம்)
أن أبا هريرة كان يكبر في كل صلاة من المكتوبة وغيرها في رمضان وغيره.................. ثم يكبر حين يسجد
அபூஸலமா அப்துர் ரஹ்மான் அவர்கள் அறிவிக்கிறார்கள்:அபூஹுரைரா (ரளி) அவர்கள் கடமையான, கடமையில்லாத தொழுகையில் ரமளான்,ரமளான் அல்லாத தொழுகையில் தக்பீர் கூறுவார்கள்.பிறகு தக்பீர் கூறியவாறு ஸஜ்தா செய்வார்கள்.(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)