ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர்:15
பாங்கு
பற்றிய விளக்கம்
நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும், மக்களை எவ்வாறு பள்ளிக்கு அழைக்கலாம் என்று ஆலோசனை செய்கிறார்கள். அப்போது மாறி, மாறி பல கருத்துகளை ஸஹாபாக்கள் சொன்னார்கள். அதில் ஒருவர் ஒவ்வொரு வக்துக்கும் நாம் உயர்ந்த மலையின் மீது நெருப்பை மூட்டி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று கூறினார். அது நெருப்பு வணங்கிகளான மஜூஸ்களின் வணக்கமாகும் என்று நபியவர்கள் அதை வேண்டாம் என்றார்கள்.
மற்றொருவர் ஒவ்வொரு வக்துக்கும் மணி அடிக்கலாம் என்றார். அது நஸராக்களின் வணக்கம். வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.மற்றொருவர் ஒவ்வொரு வக்துக்கும் சங்கு ஊதி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்றார்.இது முஷ்ரிக்குகளுடைய வணக்கம் வேண்டாம் என்று நபியவர்கள் கூறி விட்டு. இன்ஷா அல்லாஹ் நாளை முடிவெடுப்போம் என்று அனைவரும் சென்று விடுகிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்களின் கனவிலும், அதே போல உமர் (ரலி) அவர்களின் கனவிலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி பாங்குடைய முறைகளை கற்றுக் கொடுக்கிறார்கள். அன்றிலிருந்து நாம் சொல்லும் இந்த பாங்கு கடமையாக்கப்பட்டது. பின் வரக் கூடிய ஹதீஸில் காணலாம்.
ان ابن عمر كان يقول كان المسلمون حين قدموا المدينة يجتمعون فيتحينون الصلاة ليس ينادى لها فتكلموا يوما في ذلك، فقال بعضهم اتخذوا ناقوسا مثل ناقوس النصارى، وقال بعضهم بل بوقا مثل قرن اليهود، فقال عمر أولا تبعثون رجلا ينادي بالصلاة، فقال رسول الله ﷺ: يا بلال قم فناد بالصلاة
“அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்பு விடுப்பதெற்கென யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி தொழுகை(க்கு வரவேண்டிய) நேரத்தை முடிவு செய்துகொள்வார்கள். ஒரு நாள் இதுதொடர்பாக அவர்கள் கலந்து பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்கள் மணி அடிப்பதைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர், யூதர்கள் கொம்பூதுவதைப் போன்று கொம்பூதுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை நீங்கள் நியமிக்கக் கூடாதா? என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்! என்று சொன்னார்கள். (ஆதாரம்:
இகாமத்தின் வார்த்தைகள்
பாங்கில் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் இகாமத்திலும் கூறவேண்டும்.எனினும் இகாமத்தில் حي علی الفلاح விற்கு பிறகு قد قامت الصلوة என்பதை இரண்டு தடவை அதிகப்படியாக கூறவேண்டும்.
ان ابن محيريز .....سمع ابا محذورة رضي الله عنه يقول علمني رسول الله ﷺ الاقامة سبع عشرة كلمة
இப்னு முஹைரீஜ் ரஹ்மதுல்லாஹி அவர்கள் அபூமஹ்தூரா (ரளி) அவர்களிடமிருந்து கேட்டதை அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு இகாமத்தின் பதினேழு கலிமாக்களை கற்றுக்கொடுத்தார்கள் என கூறினார்கள்.
(ஆதாரம்:ஷர்ஹுமஆனில் ஆஸார் 1/102,தலைப்பு:باب الاقامة كيف هی)
اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ
أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ
أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ
حَيَّ عَلَى الصَّلاةِ ، حَيَّ عَلَى الصَّلاةِ
حَيَّ عَلَى الْفَلاحِ ، حَيَّ عَلَى الْفَلاحِ
قَدْ قَامَتْ الصَّلاةُ ، قَدْ قَامَتْ الصَّلاةُ
اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ
لا إِلَهَ إِلا اللَّهُ
இப்னு மாஜா முஸன்னப் இப்னு அபிஷைபாவில் இகாமத்தின் 17 கலிமாக்கள் கூறப்பட்டுள்ளது.
(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபிஷைபா 2/312,313 ما جاء فی الاذان و الاقامة كيف هو ஹதீஸ் இலக்கம்:2132,ஸுனன் இப்னு மாஜா 1/52,தலைப்பு:باب الترجيع فی الاذان )
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரளி) அவர்களின் அறிவிப்பில் வானவர்கள் பாங்கு இகாமத்தை கற்றுக்கொடுத்தது கூறப்படுகிறது.அதனின் சில தொடர்களில் வரும் வாசகங்கள்
ثم أمهل هنية ثم قام فقال مثلها إلا أنه قال زاد بعد ما قال حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة
பாங்கை கூறிய பிறகு வானவர்கள் சிறிது நேரம் தாமதித்து பிறகு எழுந்து நின்றனர்.பாங்கை போன்று கலிமாக்களை கூறினர். எனினும் இகாமத்தில் حي علی الفلاح பிறகு قد قامت الصلوة قد قامت الصلوة என அதிகமாக கூறினர்.
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/82,தலைப்பு:باب كيف الاذان,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 1/391,தலைப்பு:باب استقبال القبلة بالاذان و الاقامة,அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 8/447,ஹதீஸ் இலக்கம்:16691,ஜாமிஉல்மஸானீத் 1/299,301)
عن عبيد مولى سلمة بن الاكوع أن سلمة بن الاكوع رضي الله عنه كان يثنى الإقامة
ஹள்ரத் உபைத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்; ஹள்ரத் ஸலமா இப்னு அக்வஃ ரளி அவர்கள் இகாமத்தின் கலிமாக்களை இரண்டிரண்டாக கூறுவார்கள்.
(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீஷைபா 2/320,من كان يشفع الاقامة و يری ان يثنيها ஹதீஸ் இலக்கம்:2150,ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/102 தலைப்பு:باب الاقامة كيف هی )
عن الأسود بن يزيد عن بلالٍ أنه كان يثني الأذان و يثني الإقامة . (طحاوى شريف : 1/ 81، كتاب الصلاة باب الأذان كيف هو؟)
பிலால் (ரளி) அவர்களின் அறிவிப்பிலும் இகாமத் இரண்டிரண்டாக என வந்துள்ளது.
(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/101 தலைப்பு:باب الاقامة كيف هی முஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் 1/346,தலைப்பு:باب بدء الاذان ஹதீஸ் 1794)
பஜ்ர் பாங்கில் الصلوة خير من النوم சேர்ப்பது
أنه قال: يا رسول الله! علمني الأذان فذكر الحديث، وفيه بعد ذكر حي على الفلاح، "فإن كان صلاة الصبح، قلت: الصلاة خير من النوم، الصلاة خير من النوم
ஹள்ரத் அபூமஹ்தூரா (ரளி) அவர்களின் அறிவிப்பில் வருகிறது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது الصلوة خير من النوم الصلوة خير من النوم கூறுங்கள்
(ஆதாரம்:ஸுனனு அபூதாவூத் 1/79,தலைப்பு:باب كيف الاذان அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 1/422,தலைப்பு:باب التثويب فی اذان الصبح)
عن انس رضي الله عنه قال : « من السنة إذا قال المؤذن في أذان الفجر حي على الفلاح ، قال : الصلاة خير من النوم
அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஅத்தின் பஜ்ர் பாங்கில் حي علی الفلاح சொல்லும் போது الصلوة خير من النوم, الصلوة خير من النوم சொல்ல வேண்டும் இது சுன்னத்தாகும்.
(ஆதாரம்:அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 1/423,தலைப்பு:باب التثويب فی اذان الصبح ஸஹீஹ் இப்னு குஜைமா 1/233,தலைப்பு:باب التثويب فی اذان الصبح ஹதீஸ் இலக்கம்:386)
பாங்கு,இகாமத் முறை
عن جابر - رضي الله عنه - ، أن رسول الله صلى الله عليه وسلم قال لبلال : إذا أذنت فترسل ، وإذا أقمت فاحدر
ஹள்ரத் ஜாபிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிலால் (ரளி) அவர்களுக்கு கூறினார்கள் பாங்கு சொல்லும் போது நிறுத்தி நிறுத்தி கூறுங்கள் இகாமத் சொல்லும் போது விரைவாக கூறுங்கள்
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/48, தலைப்பு:باب ما جاء فى الترسل فى الاذان ,முஸ்னத் அஹ்மத் இப்னு ஹுமைத் பக்கம்:310, ஹதீஸ் இலக்கம்:1008,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 1/428, தலைப்பு:باب ترسيل الاذان و حذم الاقامة )
عن عمار بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أمر بلالاً أن يجعل إصبعيه في أذنيه و قال إنه ارفع لصوتك
ஹள்ரத் அம்மார் இப்னு ஸஃத் ரளி
அவர்கள் நபிஸல்ல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிலால் (ரளி) அவர்களுக்கு காதில் விரலை வைத்து பாங்கு கூறும்படி ஏவினார்கள்.நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் இந்த செயலானது உனது சப்தத்தை உயர்த்தும்.
(ஆதாரம்:ஸுனன் இப்னுமாஜா 1/52, தலைப்பு:باب السنة فى الاذان)
பாங்குக்கு பதில் சொல்வது
عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " إذا قال المؤذن: الله أكبر الله أكبر، فقال أحدكم: الله أكبر الله أكبر، ثم قال: أشهد أن لا إله إلا الله قال: أشهد أن لا إله إلا الله، ثم قال: أشهد أن محمداً رسول الله قال: أشهد أن محمداً رسول الله، ثم قال: حي على الصلاة قال: لا حول ولا قوة إلا بالله، ثم قال حي على الفلاح قال: لا حول ولا قوة إلا بالله، ثم قال: الله أكبر الله أكبر قال: الله أكبر الله أكبر، ثم قال: لا إله إلا الله، قال: لا إله إلا الله من قلبه دخل الجنة
இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் :ஸஹீஹ் முஸ்லிம் 1/167 , தலைப்பு:باب استحباب القول مثل قول المؤذن لمن سمعه ,ஸுனன் அபூதாவூத் 1/85, தலைப்பு:باب ما يقول اذا سمع المؤذن ,ஸஹீஹ் இப்னு குஜைமா 1/248 தலைப்பு:باب ذكر فضيلة هذا القول عند سماع الاذان ஹதீஸ் இலக்கம்:417, ஸஹீஹ் இப்னு ஹிப்பான் பக்கம்:535, ذكر إيجاب دخول الجنة ..... ஹதீஸ் இலக்கம்:1685)
عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء: اللهم رب هذه الدعوة التامة، والصلاة القائمة، آت محمدًا الوسيلة والفضيلة، وابعثه مقامًا محمودًا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை கூறுகிறார்கள்;
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம (த்)தி ஆ( த்) தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்
பொருள்:
(முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!’) என்று யார் பாங்கோசை யைக் கேட்ட பின் கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/86,தலைப்பு:باب الدعاء عند النداء ஸுனன் அபூதாவூத் 1/85,தலைப்பு:باب ما جاء فی الدعاء ,ஜாமிஉத்திர்மிதி 1/51 தலைப்பு:باب منه اي ما يقول اذا اذن المؤذن)
ஸுனன் குப்ரா பைஹகீ, மற்ற நூலிலும் انك لا تخلف الميعاد
(நிச்சயமாக வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டாய்) வார்த்தைகளில் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் வந்துள்ளது.
(நிச்சயமாக வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டாய்) வார்த்தைகளில் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் வந்துள்ளது.
(ஆதாரம்:அஸ்ஸுனனுல்குப்ரா 1/410,தலைப்பு:باب ما يقول اذا فرغ من ذلك கிதாபுத் தஃவாதுல் கபீர் லில்பைஹகீ 1/34,இஹ்யா உலூமுத்தீன் லில்கஜ்ஜாலி 1/182,பாடம்:كتاب اسرار الصلوة الباب الاول )