ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர்:13
தொழுகையின் நேரங்கள்
பஜ்ர் தொழுகையின் நேரம்
وقت صلوة الصبح من طلوع الفجر ما لم تطلع الشمس
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரளி) அவர்கள் அறிவித்தது;
பஜ்ர் தொழுகையின் நேரம் சுப்ஹ் ஸாதிக்கிலிருந்து சூரியன் உதயமாகும் வரையிலாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/223,தலைப்பு:باب اوقات الصلوات الخمس)
عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ انّ للصلوة اوّلا و اخرا ........ و انَّ اول وقت الفجر حين يطلع الفجر و اِنّ اٰخر وقتها حين تطلع الشمس
ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்தது;
நிச்சயமாக தொழுகைக்கு ஆரம்ப நேரமும் இறுதிநேரமும் உண்டு.பஜ்ரு உதயமாகும் போது பஜ்ரின் ஆரம்ப நேரமாகும்.சூரியன் உதயமாகும் வரை அதனின் இறுதிநேரமாகும் என நபி ஸல்லல்லாஹு நவின்றார்கள்.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/39,40 ابواب الصلوة ,முஸ்னத் அஹ்மத் 7/28,ஹதீஸ் இலக்கம்:7172)
லுஹர் தொழுகை நேரம்
عن عبد الله بن عمرۥ رضي الله عنه انَّ رسول الله ﷺ قال وقت الظهر اذا زالت الشمس و كان ظل الرجل كطوله مالم تحضر العصر
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரளி) அறிவித்தது; சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனின் உயரத்திற்கு சமமாகி அஸர் நேரம் ஆகாத வரையில் லுஹர் தொழுகையின் நேரமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/223,தலைப்பு:باب اوقات الصلوات الخمس)
عن عبد الله بن رافع مولی ام سلمة رضي الله عنه زوج النبي ﷺ انه سال اباهريرة عن وقت الصلوة فقال ابوهريرة رضي الله عنه انا اخبرك صلّ الظهر اذا كان ظلك مثلك و العصر اذا كان ظلك مثليك
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு ராபிஃ அவர்கள், உம்முல் முஃமினீன் உம்மு ஸலமா (ரளி) அவர்களின் அடிமை.அவர்கள் ஹள்ரத் அபூஹுரைரா ரளி அவர்களிடத்தில் தொழுகையின் நேரம் குறித்து கேட்டபோது அதற்கு அபூஹுரைரா (ரளி) அவர்கள், உனக்கு இதனை குறித்து அறிவிக்கிறேன் என்றார்கள்
உனது நிழல் உன்னை போன்று ஆகும் போது லுஹர் தொழுவாயாக! உனது நிழல் உன்னை போன்று இருமடங்காகும் போது அஸர் தொழுவாயாக. (ஆதாரம் முவத்தா இமாம் மாலிக் 5,6 وقوت الصلوة)
லுஹர் தொழுகையின் நேரம் ஜவாலுக்கு பிறகு ஆரம்பித்து நிழல் (مثلين) இருமடங்காகும் வரை நீடிக்கிறது.
அசர் தொழுகையின் நேரம்
லுஹர் தொழுகையின் நேரம் முடிந்த உடன் அஸர் நேரமாகிவிடும்.சூரியன் மறையும் வரை நீடிக்கும்.
عن ابي هريرة رضي الله عنه ان رسول الله ﷺ قال من ادرك ركعة من العصر قبل ان تغرب الشمس فقد ادرك العصر
ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் சூரியன் மறைவதற்கு முன் அஸர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அஸரை அடைந்து கொண்டார்.
(ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1/82, தலைப்பு:باب من ادرك من الصلاة ركعة ,ஸஹீஹ் முஸ்லிம் 1/221,தலைப்பு:باب من ادرك ركعة من الصلوة فقد ادرك تلك الصلوة )
மஃரிப் தொழுகையின் நேரம்
عن عبد الله بن عمرۥ بن العاص رضي الله عنه ان رسول الله ﷺ قال وقت المغرب ما لم يغب الشفق
மஃரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறையாத வரையாகும்.
عن سلمة ابن الاكوع رضي الله عنه ان رسول الله ﷺ كان يصلی المغرب اذا غربت الشمس و تَوَارت بالحجاب
ஹள்ரத் ஸலமதுப்னுல் அக்வஃ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியன் திரையில் (அடிவானில்) மறையும் போது மஃரிப் தொழுவார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/228,தலைப்பு:باب بيان اول وقت المغرب عند غروب الشمس. ,ஸஹீஹுல் புகாரி 1/79,தலைப்பு:باب وقت المغرب )
ஹள்ரத் ஜாபிர் (ரளி) அவர்களின் நீண்ட ஹதீஸில்
اذن للعشاء حين اذهب بياض النهار و هو
الشفق
اذن للعشاء حين اذهب بياض النهار و هو
الشفق
பகலின் வெண்மை செல்லப்படும் நேரத்தில் பாங்கு சொல்வர்.அது செம்மேகமாக இருக்கும்.
(ஆதாரம்: அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 5/122,ஹதீஸ் இலக்கம்:6787,மஜ்மஉஜ்ஜவாயித் லில்ஹைஸமி 2/42,தலைப்பு:باب بيان الوقت ஹதீஸ் இலக்கம்:1686)
ஹள்ரத் அபூமஸ்ஊத் (ரளி) அவர்களின் அறிவிப்பில் ஜிப்ரயீல் அலை அவர்கள் தொழுகை நடத்தியதாக வருகிறது.அதில் يالمغرب حين تسقط الشمس و يصلی العشاء حين يسود الافق
மஃரிப் தொழுகை சூரியன் மறைந்த போது தொழுகை நடத்தினார்கள்.இஷா தொழுகை அடிவானம் கருத்த போது தொழுகை நடத்தினார்கள்.
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/63,தலைப்பு:باب فی المواقيت ,ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 492,ذكر بان المصطفی لم يسفر بصلوة الغداء ஹதீஸ் இலக்கம்:1494)
முக்கிய குறிப்பு:(1) மேற்கூறிய ஹதீஸ்களிலிருந்து மஃரிப் தொழுகை சூரியன் மறைந்ததிலிருந்து ஆரம்பமாகிறது.வெண்மையான செம்மேகம் முடியும் வரை இருக்கும் என்பதை அறியமுடிகிறது.
(2) செம்மேகம் என்பது இரண்டு வகையாக உள்ளது.
1) செம்மேகம் 2)செம்மேகம் வெண்மை
செம்மேகம்:சூரியன் மறைந்த பிறகு மேற்கில் சிவப்பு தோன்றும்.
செம்மேகம் வெண்மை:செம்மேகத்திற்கு பிறகு அடிவானில் தென்படும் வெண்மையாகும்.
செம்மேக வெண்மை என்பதை மேற்கூறிய ஹதீஸ்
حين يسود الأفق
(அடிவானம் கருத்துவிடும் போது) அடிவானம் கருப்பது வெண்மைக்கு பிறகுதான் தோன்றும்.
حين يسود الأفق
(அடிவானம் கருத்துவிடும் போது) அடிவானம் கருப்பது வெண்மைக்கு பிறகுதான் தோன்றும்.
இஷா தொழுகை நேரம்
இஷாவின் நேரம் வெண்மையான செம்மேகம் மறைந்ததிலிருந்து ஆரம்பமாகி பஜ்ர் உதயாகும் வரையில் இருக்கும்.
ஜிப்ரயீல் அலை அவர்கள் இமாமத் நடத்திய ஹதீஸில் வரும்
صلی بي
العشاء حين غاب الشفق
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் செம்மேகம் மறைந்த போது எனக்கு தொழுகை நடத்தினார்கள்.
صلی بي
العشاء حين غاب الشفق
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் செம்மேகம் மறைந்த போது எனக்கு தொழுகை நடத்தினார்கள்.
عن عبيد بن جريج انه قال لابی هريرة رضي الله عنه ما افراط صلوة العشاء قال طلوع الفجر
ஹள்ரத் உபைத் இப்னு ஜுரைஜ் அவர்களின் அறிவிப்பு அவர்கள் ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்களிடத்தில் கேட்டார்கள் இஷாவின் கடைசி நேரம் எது? அவர்கள் பஜ்ரு உதயமாகும் வரை கூறினார்கள்.
(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/118,தலைப்பு:باب فی الموقيت )
முஸ்தஹப்பான நேரங்கள்
பஜ்ரின் முஸ்தஹப்பான நேரம்
عن رافع بن خديج رضي الله عنه قال سمعت رسول الله ﷺ يقول اسفروا بالفجر فانه اعظم لاجر
ராபிஃ இப்னு கதீஜ் (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டதை அறிவிக்கிறார்கள்;
பஜ்ர் நன்றாக வெண்மையில் தொழுங்கள். ஏனெனில் அதனின் நன்மை பெரியது.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/40,தலைப்பு: باب ما جاء فی الاسفار بالفجر ,ஸுனன் அபூதாவூத் 1/67,தலைப்பு:باب فی وقت الصبح,ஸுனன் நஸாயி 1/94,தலைப்பு:باب الاسفار )
முக்கிய குறிப்பு:இமாம் முஹத்திஸ் ஜமாலுத்தீன் முஹம்மத் அபூமுஹம்மத் அப்துல்லாஹ் இப்னு யூசுப் ஜயீலயி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் இந்த கருத்தில் ஹள்ரத் ராபிஃ இப்னு கதீஜ்,ஹள்ரத் பிலால்,ஹள்ரத் அனஸ்,ஹள்ரத் கதாதா இப்னு நுஃமான்,ஹள்ரத் இப்னு மஸ்ஊத் ஹள்ரத் அபூஹுரைரா,ஹள்ரத் ஹவாஉல் அன்சாரி ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரிமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
(ஆதாரம்:நஸபுர்ராயா லிஜ்ஜயீலயீ 1/304)
عن رافع بن خديج رضي الله عنه قال قال رسول الله ﷺ لبلال اسفر بصلوة الصبح حتی ير القوم مواقع نبلهم
ராபிஃ இப்னு கதீஜ் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலால் (ரளி) அவர்களிடத்தில் கூறினார்கள் மக்கள் தங்களின் அம்புக்குறியை பார்க்கும் அளவிற்கு பஜ்ர் தொழுகையை நன்றாக வெளிச்சத்தில் தொழுங்கள்.
(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் அபூதாவூத் தயாலிஸி 1/511,ஹதீஸ்:1001,அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 3/151,ஹதீஸ்:4288)
லுஹர் தொழுகையின் முஸ்தஹப்பான நேரம்
வெயில் காலத்தில் லுஹர் தொழுகையின் சுன்னத்தான நேரம்
عن ابي سعيد رضي الله عنه قال قال رسول الله ابردوا فان شدة الحر من فيح جهنم
அபூஸயீத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
வெப்பம் கடுமையாகும் போது லுஹரை தாமப்படுத்துங்கள் ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/77,தலைப்பு:باب الابراد بالظهر فی شدة الحر )
عن ابي هريرة رضي الله عن النبي ﷺ انه قال اذا اشتد الحر فابردوا بالصلوة فانّ شدة الحر من فيح جهنم
ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
வெப்பம் கடுமையாகும் போது லுஹரை தாமப்படுத்துங்கள் ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/77,தலைப்பு:باب الابراد بالظهر فی شدة الحر ,ஸுனன் அபூதாவூத் 1/64,தலைப்பு:باب فی وقت صلوة الظهر ,ஸஹீஹ் முஸ்லிம் 1/224,தலைப்பு:باب استحباب الابراد بالظّهر ,ஸுனன் நஸாயி 1/87,الابراد بالظهر ,ஜாமிஉத்திர்மிதி 1/40, தலைப்பு:باب ما جاء فی تاخير الظهر فی شدة الحر, ஸுனன் இப்னுமாஜா 1/49,தலைப்பு:باب الابراد بالظهر فی شدة الحر )
குளிர் காலத்தில் லுஹரின் முஸ்தஹப்பான நேரம்
عن انس بن مالك رضي الله عنه كان رسول الله صلی الله عليه وسلم اذا كان الحر ابرد بالصلوة واذا كان البرد عجّل
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெயில் காலத்தில் தொழுகையை தாமதப்படுவார்கள்.குளிரில் விரைவுப்படுத்துவார்கள் என அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/87,தலைப்பு:باب تعجيل الظهر فی البرد ,ஸஹீஹுல் புகாரி 1/124,தலைப்பு:باب اذا اشتد الحر يوم الجمعة)
அஸரின் முஸ்தஹப்பான நேரம்
عن ام سلمة رضي الله عنه قالت كان رسول الله ﷺ اشدّ تعجيلا للظهر منكم و انتم اشدّ تعجيلا للعصر منه
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகையை உங்களை விட விரைவாக தொழுது கொண்டிருந்தார்கள்.நீங்கள் அன்னாரை விட விரைவாக தொழுது கொண்டுள்ளீர்கள் என உம்மு ஸலமா (ரளி) அவர்கள் என கூறினார்கள்.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/42,தலைப்பு:باب ما جاء تاخير صلوة العصر ,முஸ்னத் அஹ்மத் 18/266,ஹதீஸ் இலக்கம்:26526)
عن علي بن شيبان رضي الله عنه قال قدمنا علی رسول الله ﷺ المدينة فكان يؤخر العصر دامت الشمس بيضاء نقية
நாங்கள் நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் மதீனாவிற்கு வந்த போது அன்னார் அவர்கள் அஸர் தொழுகையை சூரியன் வெண்மையாக,தெளிவாகும் அளவிற்கு பிற்படுத்தி தொழுது வந்தார்கள் என அலி இப்னு ஷைபான் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/65,தலைப்பு:باب فی وقت صلوة العصر,ஸுனன் இப்னுமாஜா 1/46,பாடம்:كتاب الصلوة தலைப்புகள்:ابواب مواقيت الصلوة )
عن عبد الله بن عمرۥ رضي الله عنه انّ النبي ﷺ قال..... فاذا صليتم العصر فانه وقت الی ان تصفرّ الشمس
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அஸர் தொழும் போது சூரியன் மஞ்சணிக்கும் நேரம் (முன்பு) வரை (தாமதப்படுத்துங்கள்)
(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/222,தலைப்பு:باب اوقات الصلوات الخمس )
இந்த ஹதீஸ்களின் மூலம் அஸரை பிற்படுத்தி தொழவேண்டும் என தெரிகிறது.எனினும் சூரியன் மஞ்சணிக்கும் அளவிற்கு பிற்படுத்துவது சரியல்ல.
மஃரிப் தொழுகையின் முஸ்தஹப்பான நேரம்
சூரியன் மறைந்தவுடன் தாமதமின்றி தொழுவது முஸ்தஹப்பாகும்.
عن سلمة رضي الله عنهما قال كنا نصلی مع النبي ﷺ المغرب اذا تورات بالحجاب
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மஃரிப் தொழுகையை சூரியன் மறைந்த பிறகு தொழுதோம் என ஸலமா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/79,தலைப்பு:باب وقت المغرب )
عن ابي ايوب رضي الله عنه قال قال النبي ﷺ لا تزال امتی بخير او قال علی الفطرة ما لم يؤخروا المغرب الی ان تشتبك النجوم
அபூஅய்யூப் (ரளி) அவர்கள் அறிவித்தது; மக்கள் மஃரிப் தொழுகையை நட்சத்திரங்கள் தோன்றும் அளவிற்கு தாமதப்படுத்தாத வரையில்
எனது உம்மத் நலவு அல்லது இயல்பின் மீது இருந்து கொண்டே இருப்பார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்,ஸுனன் அபூதாவூத் 1/66,தலைப்பு:باب فی وقت المغرب ஸுனன் இப்னுமாஜா 1/50,தலைப்பு:باب وقت صلوة المغرب)
இஷா தொழுகையின் முஸ்தஹப்பான நேரம்
இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரை பிற்படுத்துவது விரும்பத்தக்கது.
عن ابی هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ لولا ان اشق علی امتی لامرتهم ان يؤخروا العشاء الی ثلث الليل او نصفه
ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிப்பதாவது;
எனது உம்மத்தினருக்கு கடினம் என்ற பயம் இல்லாமல் இருந்திருந்தால் இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி அல்லது இரவின் பாதி வரை பிற்படுத்துவதை கட்டளையிட்டிருப்பேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/42,தலைப்பு:باب ما جاء فی تاخير العشاء الاخرة )
و لا يبالی بتاخير العشاء الی ثلث الليل ثم قال الی شطر الليل
இஷாவை இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை இருக்கும் வரை அல்லது இரவின் பாதி வரை தாமதப்படுத்துவதை பற்றிப் பொருட்படுத்தமாட்டார்கள் என ஹள்ரத் அபூபர்ஜா (ரளி) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/77,தலைப்பு:باب وقت الظهر عند الزوال )