உளுவிற்கு நிய்யத் அவசியமில்லை என்பது ஹனபி மத்ஹபின் நிலைப்பாடாகும்.இதனை குறித்து விமர்சிக்கப்படுகிறது.நிய்யத் அவசியம் என்பது ஒன்றுபட்ட கருத்து என்பது போல் சித்தரிக்கப்படுகிறது.எனினும், இந்த மஸ்அலா கருத்துவேறுபாடு கொண்டது.ஆனாலும் நிய்யத் அவசியமில்லை என்பதுதான் ஹனபி மத்ஹபில் முன்னுரிமை தரப்படும் கருத்தாக உள்ளது.
Difa e aslaf
மத்ஹபுகளின் அவசியம்,ஹனஃபி தொழுகை முறை,ஹிதாயா நூல்
Thursday, November 10, 2022
உளூவில் நிய்யத் அவசியமா? தொடர் 1
Saturday, January 15, 2022
மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்
தக்லீதிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதில்கள்
தொடர்:22
முன்னால் தக்லீத் குறித்த எதார்த்த நிலையை தெளிவாக விளக்கிவிட்டோம்.குர்ஆன்,சுன்னாவில் அது குறித்த ஆதாரங்களை அதனின் பலதரப்பட்ட படித்தரங்களை அதற்குரிய சட்டங்களை திறந்த மனதோடு வாசித்துப் பார்த்தால் ஏராளமான சந்தேகங்கள் நீங்கிவிடும்.எனினும்,சில குற்றச்சாட்டுகளுக்கு குறிப்பாக பதில் அளிக்கும் தேவை உள்ளது.ஏனெனில் பெரும்பாலானவர்களின் உள்ளங்களில் அதனால் தடுமாற்றங்கள் ஏற்படுகிறது.அல்லது பொதுவாக மத்ஹப் மறுப்பாளர்களால் குற்றச்சாட்டு திரும்ப திரும்ப முன்வைக்கப்படுகிறது. முதல் குற்றச்சாட்டு:குர்ஆனில் அல்லாஹ் தக்லீதை பழித்துரைத்து கூறுகிறான்وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?நமது பதில்: இதற்கு பதில் மிகத் தெளிவானது.அல்லாஹ் தக்லீதை குறித்து பழித்துரைப்பது ஈமானிய விஷயங்களுடன் சம்பந்தப்பட்டது.இந்த வசனத்தில் மார்க்கத்தின் அடிப்படையான கொள்கைகள் கூறப்பட்டுள்ளது.இணைவைப்பாளர்கள் தவ்ஹீத்,ரிஸாலத் (தூதுத்துவம்)ஆகிரத் (மறுமை) போன்ற கொள்கைகளில் சத்தியத்தை ஏற்காமல் எங்களின் மூதாதையர்களை எந்த வழியில் நடக்க கண்டோமோ,அந்த வழியில் நடக்கிறோம் என்பதாக கூறினார்கள்.அதாவது அவர்களின் தக்லீத் தீனின் அடிப்படை அம்சங்களில் உள்ளது.இதில் தக்லீத் செய்வது நம்மிடத்திலும் கூடாது.தீர்க்கமான விஷயங்களில்,இறைநம்பிக்கை அம்சங்களில் நம்மிடத்திலும் தக்லீத் செய்வதற்கு வேலை இல்லை என்பதாக தலைப்பின் ஆரம்பத்தில் தெளிவுப்படுத்தி விட்டோம்.அடுத்து,அல்லாஹ் மூதாதையர்களை தக்லீத் செய்வதை பழித்து கூறுவதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறான்.ஒன்று,.....وما أنزل الله அல்லாஹ் அருளியதை தெளிவாக புறக்கணித்து தங்களின் மூதாதையர்களின் செயல்களை அதற்கு எதிரில் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.ஆனால் நாம் அல்லாஹ் அருளியதை புறக்கணிப்பதில்லை.மாறாக,அதனின் விளக்கத்திற்காக முஜ்தஹிதின்(ஆய்வாளரின்) கூற்றுக்களை நம்பிக்கை கொள்கிறோம்.முஜ்தஹிதின் கூற்றுக்களை தனியானதொரு ஆதாரமாக ஏற்பதில்லை.அல்லாமா நுஜைம் (ரஹ்) அவர்கள் தக்லீதின் வரைவிலக்கணத்தை கூறுகிறார்கள்:التقليد العمل بقول من ليس قوله إحدى الحجج بلا حجة منهاதக்லீத் என்பது இமாமின் சொல் ஷரீஅத்தின் அடிப்படையான ஆதாரங்களில் உள்ளதல்ல.அதன் பேரில் ஆதாரத்தை கேட்காமல் அமல் செய்வதாகும்.(ஆதாரம்:தய்ஸீருத்தஹ்ரீர் 4/246,شرح المنار لابن نجيم 2/37)இரண்டாவது, மூதாதையர்கள் அறியாதவர்களாக,நேர்வழியான பாதையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.ஆனால்,நான்கு இமாம்களும் நேர்வழியில் அறிவில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை மத்ஹப் மறுப்பாளர்களும் ஏற்கிறார்கள்.எனவே நமது தக்லீதை காபிர்களின் தக்லீதுடன் பொருத்துவது மிகப்பெரும் அநீதியாகும்.இரண்டாவது குற்றச்சாட்டு:اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ ۚ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَஅவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.(9:31)நமது பதில்: முஜ்தஹிதீன்கள் ஆய்வாளர்கள் ஷரீஅத்தை உருவாக்கியவர்கள் இல்லை.மாறாக,ஷரீஅத்தின் சட்டங்களை விளக்கி கூறுபவர்கள் என்பதாகத்தான் நாம் நம்புகிறோம்.அதுமட்டுமின்றி
அவர்களின் விளக்கங்களை நம்பிக்கை வைத்து குர்ஆன்,சுன்னாவை தான் பின்பற்றுகிறோம்.குர்ஆன்,சுன்னாவை விட இமாம்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என்பதாக அபாண்டத்தை, பழியை சுமத்துகின்றனர். 1)மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களில் தக்லீத் இல்லை.2)ஷரீஅத்தின் சட்டங்களில் பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருப்பதில் தக்லீத் இல்லை.3)குர்ஆன்,சுன்னாவில் உள்ள ஆதாரங்கள் மற்றும் அர்த்தங்கள் தீர்க்கமான, தெள்ளத் தெளிவாக இருந்து அதற்கு எதிரான ஆதாரமும் இல்லாத போது அதில் நாம் கருத்துவேறுபாடு கொள்வதில்லை.உதாரணமாகوَالْمُطَلَّقٰتُ يَتَرَ بَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ தலாக் கூறப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலம் (குர்உ) பொறுத்திருக்க வேண்டும்.(2:228)மற்றோரு வசனம்:
لِّـلَّذِيْنَ يُؤْلُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍۚ فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌதங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.(2:226)இவ்விரு வசனங்களையும் பார்த்தால் முதல் வசனத்தில் மாதவிடாய் காலம் (குர்உ) என்றும்,மற்றோரு வசனத்தில் நான்கு மாதங்கள் என்றும் வந்துள்ளன.இவ்விரண்டு வசனங்களிலும் முறையே 'மூன்று' 'நான்கு' என்று வந்துள்ள சொற்களில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. அவை ஒரே கருத்தைக் கொடுக்கக்கூடிய திட்டவட்டமான இரண்டு சொற்களேயாகும்.ஆனால், முதலாவது வசனத்தில் உள்ள 'குர்உ' என்ற சொல்லையும் இரண்டாவது வசனத்திலுள்ள 'அஷ்ஹுர்' (மாதங்கள்) என்ற சொல்லையும் ஆராய்ந்தால் குர்உ என்ற சொல் பல கருத்துகளைக் கொடுக்கக் கூடியதாகவும் அஷ்ஹுர் என்ற சொல் மாதங்கள் என்ற ஒரே கருத்தையே கொடுப்பதையும் நாம் புரியலாம்.இங்கு இமாம்களுக்கு மத்தியில் மூன்று,நான்கு,மாதங்கள் போன்ற வார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை.ஏனெனில் இந்த வார்த்தைகளில் பல அர்த்தங்களுக்கு இடமில்லை.ஆனால் குர்உ எனும் வார்த்தைக்கு மாதவிடாய்,மாதவிடாயிலிருந்து தூய்மையாகுதல் எனும் இரண்டு விதமான அர்த்தம் உண்டு.இதனால் இமாம்களுக்கு மத்தியில் இயல்பாக கருத்துவேறுபாடு ஏற்படுகிறது.4)தக்லீத் என்பது குர்ஆன்,சுன்னாவில் பலதரப்பட்ட கருத்துக்களுக்கு வாய்ப்புள்ள போது ஒரு பொருளை குறிப்பாக்குவதற்காக தனது சிந்தனையை பயன்படுத்தாமல் ஆய்வாளரின் புரிதலை ஏற்பதாகும்.5)முஜ்தஹித்களை (ஆய்வாளர்களை)தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாக நம்பிக்கை கொள்ளவில்லை.அதுமட்டுமின்றி அவர்களிடத்திலும் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை உறுதியாக நம்புகிறோம்.6)ஒரு متبحر عالم (ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞர்)அவருக்கு முஜ்தஹிதின் (ஆய்வாளரின்) ஏதேனும் கூற்று ஸஹீஹான, தெளிவான ஹதீஸிற்கு மாற்றமாக இருந்து அதற்கு எதிராக முரண்பாடும் இல்லையெனில் அவர் முஜ்தஹிதின் கூற்றை விட்டு விட்டு ஹதீஸின் பேரில் அமல் செய்வது அவசியமாகும்.ஆக நம்மிடத்தில் தக்லீத் செய்வதில் இத்தனை அம்சங்கள் இருந்தும் வழிகேடு எனவும், இமாம்களை அல்லாஹ்விற்கு நிகராக்கிவிட்டார்கள் எனவும் வாதிட்டால் முழு உலகில் வழிகேட்டை,இணைவைப்பை விட்டும் ஒருவரும் தப்பிக்க முடியாது.மத்ஹப் மறுப்பாளர்கள் கூட நடைமுறையில் தக்லீத் செய்துதான் வருகின்றனர்.அவர்கள் ஒவ்வொருவரும் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் போது முஜ்தஹித்களாக (ஆய்வாளர்களால்) பிறக்கவில்லை.மேலும் ஒவ்வொருவரும் அறிஞராகவும் இல்லை.அறிஞராக இருந்தாலும் அனைத்து மஸ்அலாவிலும், சந்தர்ப்பங்களிலும் குர்ஆன்,சுன்னாவை முழுமையாக அணுகுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.அறிஞர்களாக இல்லாதவர் அவர்களின் உலமாக்களிடத்தில் கேட்டு தக்லீத் செய்கிறார்கள்.இந்த நோக்கத்திற்காக மத்ஹப் மறுப்பாளர்களின் அறிஞர்கள் தங்களது ஆய்வுகளை,தீர்ப்புகளை நூல் வடிவில் வெளியிட்டுள்ளனர்.தீர்ப்புகளில் ஆதாரங்கள் இருந்தாலும், சாமானியன் அவர்கள் கூறிய ஆதாரம் சரியானதா? இல்லையா? என்பதை எப்படி புரிவான்? எனவே மத்ஹப் மறுப்பாளர்களும் அவர்களின் அறிஞர்களின் புரிதலை நம்பிக்கை கொண்டு செயல்படுகின்றனர்.இதற்கு பெயர்தான் தக்லீத்.
Sunday, January 9, 2022
மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்
தக்லீதின் படித்தரங்கள்
தொடர்:21
மூன்றாவது:மத்ஹபில் முஜ்தஹித் (المجتهد فى المذهب )
Friday, January 7, 2022
மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்
தக்லீதின் படித்தரங்கள்
தொடர்:20
Tuesday, December 28, 2021
மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்
தக்லீதின் படித்தரங்கள்
தொடர்:19
Friday, December 17, 2021
மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்
இமாம்கள் தங்களை பின்பற்றுவதை தடுத்தார்களா?தொடர்:18
இமாம்கள் குறிப்பாக கூறியுள்ளார்கள்:சரியான ஹதீஸ்கள் தான் எனது வழிமுறை
இந்த வாதங்கள் அனைத்தும் பொய்யானதும் அசத்தியமானதுமாகும்.எதார்த்தம் என்னவெனில் முஜ்தஹித்களான இமாம்கள், தங்களை தக்லீத் செய்வதை தடுத்தது முஜ்தஹித்களை தான்.ஏனெனில் அவர்கள் குர்ஆன்,ஹதீஸை நேரடியாக அணுகி ஆய்வு செய்யும் திறமை பெற்றிருந்தார்கள்.மாறாக, ஆய்வு செய்யும் திறன் இல்லாதவர்களை தடுக்கவில்லை.
ஏராளமான நூல்களை நான்கு இமாம்களும், அவர்களின் மாணவர்களும் ஏன் எழுதவேண்டும்? அனைத்து ஆய்வுரீதியான கிளைசட்டங்களை தொகுத்து ஏன் ஒன்றுசேர்க்க வேண்டும்? பர்ளு,வாஜிப்,சுன்னத்,நபில்,
முஸ்தஹப் போன்ற ஏராளமான மஸாயில்களை தொகுக்க வேண்டும்.ஏனெனில் பின்னால் வருபவர்கள் எளிதாக குர்ஆன்,சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்பதற்காகும்.இமாம்கள், தங்களை தக்லீத் செய்வதை அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக தடுத்திருந்தால்,இமாம்களிடத்தில் பொதுமக்கள் மார்க்க சட்டத்தை கேட்கும்போது நீங்களே ஆய்வு செய்துகொள்ளுங்கள் என கூறியிருக்கவேண்டும்.ஆனால்,
அவர்களின் வாழ்வில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மஸாயில்களை குறித்து கேட்கும்போது, ஆதாரங்களை கூறாமல் சட்டத்தை மட்டும் கூறிய ஏராளமான நிகழ்வுகள் உண்டு.எனவே இமாம்கள் தக்லீதை தடுத்தது எல்லோருக்கும் பொதுவான சட்டம் அல்ல.
இமாம் அபியூசுப் (ரஹ்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்:
لأن على العامى الاقتداء بالفقهاء لعدم الاهتداء فى حقه إلى معرفة الأحاديث
மார்க்க விற்பன்னர்களை, (புகஹாக்களை) பின்பற்றுவது சாமானிய மக்களின் மீது கடமையாகும்.ஏனெனில் அவர்களுக்கு ஹதீஸ்கள் குறித்து ஞானத்தை பெற்றுக்கொள்ளும் சரியான வழிமுறையை அடையும் தகுதி இல்லை.(ஆதாரம்:ஹிதாயா 1/226,தலைப்பு:ما يوجب القضاء و الكفارة)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களிடமிருந்து அல்லாமா இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்கள் எடுத்தெழுதுகிறார்கள்: இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள்,அபூஉபைதா (ரஹ்) அவர்கள்,அபூஸவ்ர் (ரஹ்) அவர்கள்,முஸ்அப் (ரஹ்) போன்றவர்கள் சட்டங்களை தெரிந்துகொள்வதற்கு (இமாம்களை) அணுகும்படி கூறினார்கள்.தனது தோழர்களில் அபூதாவூத் (ரஹ்),உஸ்மான் இப்னு ஸயீத் (ரஹ்),இப்ராஹிம் ஹர்பி (ரஹ்), அபூபக்கர் அஸ்ரம் (ரஹ்),அபூஜுர்ஆ (ரஹ்),அபூஹாதம் (ரஹ்), முஸ்லிம் (ரஹ்) போன்றவர்களை (பிறரை) தக்லீத் செய்வதிலிருந்து தடுத்தார்கள்.அசலான குர்ஆன்,சுன்னாவின் பக்கம் திரும்புவது கடமை என்பதாக அவர்களிடத்தில் கூறினார்கள்.(பதாவா இப்னு தைய்மிய்யா 2/24)
இமாம்கள்,தக்லீத் செய்யக்கூடாது என்பதாக யாரை தடுத்துள்ளார்கள்? என்பதை புரிய முடிகிறது.ஹதீஸ்கலை வல்லுநர்களாக,புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்களாக இருப்போரை தான் தடுத்துள்ளார்கள்.ஆய்வுத்திறன் இல்லாதவர்கள் இமாமை அணுகி மார்க்க சட்டங்களை குறித்து கேட்டு அமல் செய்வது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அனைவரையும் தக்லீதை விட்டு தடுக்கவில்லை என்பதற்கு மற்றொரு சான்று
அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களும்,
ஸஹாபாக்கள்,தாபியீன்களின் கருத்துவேறுபாடுகளும் ஒன்று சேர்க்கப்பட்ட நூல்கள் இருந்தாலும் விரும்பியபடி அமல்செய்வது,நாடுவதை அமல்செய்வது கூடாது.ஆதலால் எவரின் சொல்லை எடுக்க விரும்பினால்,சரியானதை அமல்செய்வதற்கு மார்க்க அறிஞர்களை அணுகி தெரிந்து கொள்ளும் வரை அதனை அமல்செய்வது கூடாது.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன்)
கண்ணியத்திற்குரிய பேரறிஞர் அபுல் ஹஸன் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடத்தில்,இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்;அபுல் ஹஸன்!எந்த மஸ்அலாவில் உம்முடைய கருத்தில் எந்த ஒரு இமாமும் இல்லையெனில் அதில் எப்போதும் விவாதிப்பதை தவிர்த்துக்கொள்! (ஆதாரம்:மனாகிபுல் இமாம் அஹ்மத் பக்கம்:871,ஸியரு அஃலாமின் நுபலா 11/692)
இக்காலத்தின் குழப்பங்களில் மிகவும் அபாயகரமான குழப்பம் இஸ்லாமியர்களில் சாமானியர்களை குறிப்பாக இளைஞர்களை வார்த்தை ஜாலங்களால்,கவர்ச்சியான வாதங்களால்,தவறான ஊசலாட்டங்களால் அவர்களின் உள்ளத்தில் மத்ஹபுகளுக்கு எதிரான சிந்தனையை திணித்து,அவைகளை விட்டுவிடுவதை வலியுறுத்துவது.இதன்பிறகு அப்பாவி மக்கள் மனம்போன போக்கில் வாழ்வை கழிப்பார்கள். எந்த ஒரு திறமையான முஜ்தஹிதை (ஆய்வாளரை) பின்பற்றும் தேவையில்லை.அதுமட்டுமின்றி முன்னோர்களை தக்லீத் செய்வது,பின்தொடர்வது குற்றம் பாவம் என்பதாக சித்தரிப்பார்கள்.மார்க்கத்தை குறித்து அறியாதவரும் கூட இமாம்களின் குர்ஆன்,ஹதீஸின் விளக்கத்தை ஏற்பதில்லை.ஆனால்,அவர்களின் இயக்கத்தின் தலைவர்களின் விளக்கத்தை,ஆய்வை வஹியாக கருதி கண்மூடித்தனமாக தலைமீது வைத்து கொண்டாடி வருகின்றனர்.இதனையே நேர்வழி என்பதாக கருதி வருகின்றனர்.இதனை நாம் கண்கூடாக கண்டுவருகிறோம்.
ஆக,இமாம்களின் கூற்றுக்களை நுனிப்புல் போல் மேய்கின்றனர் அல்லது திட்டமிட்டு திரித்து கூறிகின்றனர்.
அடுத்து, சரியான ஹதீஸ்களே எனது வழிமுறை எனும் இமாம்களின் கூற்றுகளின் உண்மையான விளக்கத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது நூலான கிதாபுல் மஜ்மூஃவின் முன்னுரையில் இதற்கு பதில் தருகிறார்கள்.
هذا الذي قاله الشافعى ليس معناه أن كل واحد رأى حديثًا صحيحًا قال: هذا مذهب الشافعي، وعمل بظاهره وإنما هذا فيمن له رتبة الاجتهاد في المذهب
இமாம் ஷாபியி (ரஹ்) அவர்கள் கூறிய "ஸஹீஹான ஹதீஸ் எனது வழிமுறை" என்பதற்குரிய விளக்கத்தை இவ்வாறு புரிந்து கொள்ளக்கூடாது.அதாவது "ஒவ்வொரு நபரும் ஸஹீஹான ஹதீஸை பார்த்தால் இதுதான் ஷாபியி ரஹ் அவர்களின் வழிமுறை என்பதாக எண்ணி அமல் செய்வது"(கூடாது).மாறாக, இமாமின் சொல்லின் சரியான கருத்து "மத்ஹபில் ஆய்வு செய்யும் திறன்பெற்றவருக்கு உரிய வழிகாட்டுதலாகும்".
இமாம்களின் இந்த சொல்லை பொதுவாக அறிவித்தால் பெரும் அழிவில்தான் கொண்டு சேர்க்கும்.இதற்கு ஏராளமான சான்றுகளை கூறமுடியும்.உதாரணத்திற்கு சில ஹதீஸ்களை மட்டும் பார்ப்போம்.
1)ரமளானில் இரத்தம் குத்தி எடுத்த மனிதரை கடந்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சென்ற போது கூறினார்கள்;
افطر الحاكم و المحجوم
இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜ் (ரலி),திர்மிதி ,அபூதாவூத் போன்ற ஹதீஸ்களில் வருகிறது.
இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும் பார்த்து சாமானியர் அமல் செய்தால் என்ன விளைவு ஏற்படும்?
2)இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا مَطَرٍ»
இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் பயம், மலை இல்லாமலும் லுஹர், அசருக்கிடையிலும், மக்Gரிப், இஷாக்கிடையிலும் சேர்த்து தொழுதுள்ளார்கள்.’ (முஸ்லிம்)
இந்த ஹதீஸின் வெளிப்படையான கருத்தை முன்வைத்து தக்க காரணமின்றி தொழுகையை ஜம்உ செய்ய ஆரம்பித்தால் என்ன விளைவு ஏற்படும்?
3)அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا وضوء الا من صوت او ريح
உங்களிலொருவர் சத்தத்தையோ, வாடையோ உணராத வரை உளு (செய்யும் அவசியம்) இல்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.(ஆதாரம்:திர்மிதி)
வெளிப்படையான ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸின் பேரில் அமல்செய்தால் என்ன விளைவு ஏற்படும்?
4)புகாரியில் வரும் ஹதீஸ்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை' என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்' என்றார்கள்.(ஹதீஸ் இலக்கம்:2057)
வெளிப்படையான இந்த ஹதீஸின் பேரில் அமல்செய்தால் என்ன விளைவு ஏற்படும்?
ஆகவே,"ஸஹீஹான ஹதீஸ்கள் எமது வழிமுறை" எனும் இமாம்களின் சொல்லை பொதுவாக புரிந்து கொள்வது கூடாது.
Friday, December 10, 2021
மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்
மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில் தொடர்:17
கேள்வி:ஸஹாபாக்கள் காலத்தில் தனிநபரை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படவில்லை.பிறகு எப்படி நமது காலத்தில் கடமையாகும்?
பதில்