ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர்:16
தொழுகைகளின் ரக்அத்துகளின் எண்ணிக்கை
பர்ளு தொழுகையின் ரக்அத்துகளின் எண்ணிக்கை:
பஜ்ரு தொழுகையின் ரக்அத் 2
லுஹர் தொழுகையின் ரக்அத் 4
அஸர் தொழுகையின் ரக்அத் 4
மஃரிப் தொழுகையின் ரக்அத் 3
இஷா தொழுகையின் ரக்அத் 4
மேற்கூறிய பர்ளு தொழுகையின் எண்ணிக்கை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் முதற்கொண்டு இப்பொழுது வரை உம்மத்தின் தொன்று தொட்டு நடைமுறையாக உள்ளது.அதுமட்டுமின்றி ஹதீஸ் நூல்களிலும் விரிவாக வந்துள்ளது.
عن أبي مسعود قال : أتى جبريل - عليه السلام - النبي - صلى الله عليه وسلم - فقال : قم فصل . وذلك دلوك الشمس حين مالت الشمس ، فقام فصلى الظهر أربعا ، ثم أتاه حين كان ظله مثله فقال : قم فصل . فصلى العصر أربعا ، ثم أتاه حين غربت الشمس فقال : قم فصل . فصلى المغرب ثلاثا ، ثم أتاه حين غاب الشفق فقال : قم فصل فصلى العشاء الآخرة أربعا ، ثم أتاه حين برق الفجر فقال : قم فصل . فصلى الصبح ركعتين ، ثم أتاه من الغد في الظهير حين صار ظل كل شيء مثله فقال : قم فصل . فصلى الظهر أربعا ، ثم أتاه حين صار ظله مثليه فقال : قم فصل . فصلى العصر أربعا ، ثم أتاه الوقت بالأمس حين غربت الشمس فقال : قم فصل . فصلى المغرب ثلاثا ، ثم أتاه بعد أن غاب الشفق وأظلم فقال : قم فصل فصلى العشاء الآخرة أربعا . ثم أتاه حين أسفر الفجر فقال : قم فصل . فصلى الصبح ركعتين
அபூமஸ்ஊத் அன்சாரி (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்தார்கள்.எழுந்து நின்று தொழுவீராக! என்று கூறினார்கள்.அது சூரியன் உச்சிசாயும் நேரமாக இருந்தது.சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்று லுஹர் தொழுதார்கள்.பிறகு அன்னாரிடத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.அது நிழலானது ஒரு மடங்காக இருந்தது.எழுந்து நின்று தொழுவீராக! என்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஸரின் நான்கு ரக்அத் தொழுதார்கள்.பிறகு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் சூரியன் மறைந்த பொழுது வந்தார்கள்.எழுந்து நின்று தொழுவீராக! என்றார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஃரிப் மூன்று ரக்அத் தொழுதார்கள்.பிறகு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் செம்மேகம் மறைந்த பிறகு வந்தார்கள்.எழுந்து நின்று தொழுவீராக! என்றார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷாவின் நான்கு ரக்அத் தொழுதார்கள்.பிறகு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பஜ்ரு உதயமான பொழுது வந்தார்கள்.எழுந்து நின்று தொழுவீராக! என்றார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ரின் இரு ரக்அத்துகள் தொழுதார்கள்.
(ஆதாரம் முஸ்னத் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ் 1/223,தலைப்பு باب المواقيت அல் முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 7/129,130. ஹதீஸ் இலக்கம்:14143, அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 1/361, தலைப்பு:باب عدد ركعات الصلوات الخمس )
பன்னிரெண்டு ரக்அத்துகள் வலியுறுத்தப்பட்ட சுன்னத்
عن أم حبيبةَ أمِّ المؤمنين رضي الله عنها قالت: سمعتُ رسول الله صلى الله عليه وسلم يقول: ((مَن صلَّى اثنتَي عشرةَ ركعةً في يومٍ وليلةٍ؛ بُنِي له بهن بيتٌ في الجنة))
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு நாளையின் பகலிலும் இரவிலுமாக பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படும். நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/94,தலைப்பு:باب ما جاء فی من صلی فی يوم و ليلة ثنتی عشرة ركعة ,ஸஹீஹ் முஸ்லிம் தலைப்பு باب فضل السنن الراتبة قبل)
பஜ்ரின் ரக்அத்துகள்
பர்ளு 2,சுன்னத் 2
சுன்னத் 2 (வலியுறுத்தப்பட்டது)
عن عائشة رضي الله عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد منه تعاهدا على ركعتي الفجر
ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரகஅத்துக்களாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா [ரலி]
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/156,باب تعاهد ركعتی الفجر,ஸஹீஹ் முஸ்லிம் 1/251,தலைப்பு: باب استحباب ركعتی الفجر و الحث عليها )
وعن أبي هريرة لا تدعو ا ركعتي الفجر ولو طردتكم الخيل
உங்களை குதிரை(எதிரிபடையினர்) நெருக்கினாலும் பஜ்ரின் இரண்டு ரக்அத்துகளை விட்டுவிடாதீர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்.
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/186,தலைப்பு:باب فی تخفيفهما ركعتی الفجر ,ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/209,தலைப்பு:باب القراءة فی ركعتی الفجر )
லுஹரின் ரக்அத்துகள்
முன்சுன்னத் 4 [வலியுறுத்தப்பட்டது] , பர்ளு 4,பின்சுன்னத் 2 [வலியுறுத்தப்பட்டது] ,நபில் 2
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَ ركَعَتَيْنِ قبل الغداة
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன்னுள்ள நான்கு ரக்அத்களை மற்றும் பஜ்ருக்கு முன்னுள்ள இரண்டு ரக்அத்துகளையும் விடவேமாட்டார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/157 தலைப்பு:باب الركعتين قبل الظهر )
وعن أُمِّ حَبِيبَةَ رَضِيَ اللَّه عَنها قَالَتْ: قالَ رسولُ اللَّهِ ﷺ: منْ حَافظَ عَلى أَرْبَعِ ركعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَأَرْبعٍ بَعْدَهَا، حَرَّمهُ اللَّه عَلَى النَّارَ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது லுஹருக்கு முன்னால் நான்கும், பின்னால் நான்கும் பேணி தொழுதால் அவரது உடலை அல்லாஹ் நரகிற்கு ஹராமாக்கி விடுவான் என உம்முஹபீபா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்:அஹ்மத்:26764)
குறிப்பு:நான்கு ரக்அத் என்பது இரு ரக்அத் சுன்னத் [வலியுறுத்தப்பட்டது] இரு ரக்அத் நபிலாகும்.
அஸரின் ரக்அத்துகள்
பர்ளு 4 ரக்அத்துகள், முன்சுன்னத் 4 [வலியுறுத்தப்படவில்லை]
عن ابن عمر رضي الله عنه عن النبي صلی الله عليه
وسلم رحِم اللهُ امرأً صلَّى قبْلَ العصرِ أربعًا
நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் நவின்றதாக இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அஸருக்கு முன்பாக நான்கு ரக்அத் தொழுபவர் மீது அல்லாஹ் அருள்புரிவானாக!
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/98,தலைப்பு:باب ما جاء فی الاربع قبل العصر )
மஃரிப் ரக்அத்துகள்
பர்ளு 3,பின்சுன்னத் 2 [வலியுறுத்தப்பட்டது] , நபில் 2
عن ابن عمر رضی الله عنه قال: مَن ركع بعد المغرب أربع ركعات كان كالْمُعَقِّب غَزوة بعد غزوة
இப்னு உமர் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:
மஃரிபிற்கு பிறகு நான்கு ரக்அத் தொழுபவர் (அல்லாஹ்வின் பாதையில்) தொடர்ந்து போர் செய்பவரை போன்றாகும்.
(ஆதாரம்:முஸன்னிப் அப்துர்ரஜ்ஜாக் 2/415, தலைப்பு:باب الصلوة فيما بين المغرب و العشاء ஹதீஸ் இலக்கம்:4740)
عن أبي معمر عبدالله بن سخبرة قال: كانوا يستحبون أربع
ركعات بعد المغرب
அபூமஃமர் அப்துல்லாஹ் இப்னு ஸஹ்பராஹ் கூறுகிறார்கள்:மஃரிபிற்கு பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவதை ஸஹாபாக்கள் விரும்பினார்கள்.
(ஆதாரம்:முக்தஸர் கியாமுல்லைல் லில்மர்வஜி 85,தலைப்பு:باب يصلی بين المغرب و العشاء اربع ركعات )
இஷா ரக்அத்துகள்
இஷா முன்சுன்னத் 4 [வலியுறுத்தப்படவில்லை], பர்ளு 4,பின்சுன்னத்
2 [ வலியுறுத்தப்பட்டது] ,நபில் 2,வித்ரு 3,நபில் 2
عن سعيد بن جبير رحمه الله: كانوا يستحبون أربع ركعات قبل العشاء الآخرة
ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் இஷாவிற்கு முன்பாக நான்கு ரக்அத்துகள் தொழுவதை ஸஹாபாக்கள் விரும்பினார்கள்.
(ஆதாரம்:முக்தஸர் கியாமுல்லைல் லில்மர்வஜி 85,தலைப்பு:باب يصلی بين المغرب و العشاء اربع ركعات )
زرارة بن أوفى أن عائشة رضي الله عنها سئلت عن صلاة رسول الله صلى الله عليه وسلم في جوف الليل فقالت كان يصلي العشاء في جماعة ثم يرجع إلى أهله فيركع أربع ركعات ثم يأوي إلى فراشه
ஜராரதுப்னு அவ்ஃபா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆயிஷா (ரளி) அவர்களிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரவின் மத்தியில் தொழுகையை பற்றி கேட்கப்பட்டது.ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷா தொழுகை ஜமாஅத்துடன் தொழுவார்கள்.பிறகு வீட்டிற்கு திரும்பி நான்கு ரக்அத் தொழுது விட்டு விரிப்பின் பக்கம் ஒதுங்குவார்கள்.
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/197,தலைப்பு:باب فی صلوة الليل )
عائشة رضي الله عنها أنها سئلت : بِأَيِّ شَيْءٍ كَانَ يُوتِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فقَالَتْ : (كَانَ يَقْرَأُ فِي الْأُولَى بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ، وَفِي الثَّانِيَةِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ، وَفِي الثَّالِثَةِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَالْمُعَوِّذَتَيْنِ)
ஆயிஷா (ரளி) அவர்களிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரு தொழுகையில் என்ன ஓதிகொண்டிருந்தார்கள் என கேட்கப்பட்டது? அதற்கு ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்: முதல் ரக்அத்தில் "ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அஃலா" இரண்டாவது ரக்அத்தில் "குல் யா அய்யுஹல் காபிரூன்" மூன்றாவது ரக்அத்தில் "குல் ஹுவல்லாஹு அஹத்" மற்றும் "முஅவ்விததைன்" (குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ்) ஓதுவார்கள் (ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி)
عن ابی سلمة رحمة الله قال سالت عاءشة عن صلوة رسول الله كان يصلي ثلاث عشرة ثمانيا ثم يوتر ثم
يصلي ركعتين وهو جالس
அபூஸலமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆயிஷா (ரளி) அவர்களிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (இரவு) தொழுகையை குறித்து நான் கேட்டேன்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதின்மூன்று ரக்அத்துகளை தொழுவார்கள்.எட்டு ரக்அத்துகள் (இரவுத்தொழுகை) பிறகு வித்ரு தொழுவார்கள். பிறகு அமர்ந்தவாறு இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/254,தலைப்பு:باب صلوة الليل و عدد ركعات النبي صلی الله فی الليل ,ஸஹீஹுல் புகாரி 1/155,தலைப்பு:باب المداومة علی ركعتی الفجر )
عن ام سلمة أن النبي ﷺ كان يصلي ركعتين بعد الوتر
உம்முஸலமா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரு தொழுகைக்கு பிறகு இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/108,தலைப்பு:باب ماجاء لا وتران فی ليلة ,ஸுனன் இப்னு மாஜா 1/83, தலைப்பு:باب ما جاء فی الركعتين بعد الوتر جالسا )