Tuesday, December 28, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 தக்லீதின் படித்தரங்கள்

தொடர்:19


நான்கு மத்ஹபுகளில் ஒன்றை மட்டும் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதை முன்னால் சென்ற ஆய்வின் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் தெளிவாக புரிந்திருப்போம்.அடுத்து தக்லீத் குறித்து அவசியமான ஒரு தலைப்பை இனி பார்ப்போம்.தக்லீத் செய்பவர்களை கவனித்து தக்லீதில் பலதரப்பட்ட நிலைகள் உள்ளது.அவைகளின் நிலைகளுக்கு ஏற்ப சட்டங்களும் மாறுபடும்.மாறுபட்ட நிலைகளின் வித்தியாசத்தை புரியாமல்தான் மத்ஹபுகள் குறித்து தடுமாற்றமும்,குழப்பங்களும் உருவாகுகிறது.இதனால் அத்தகைய நிலைகள் குறித்து சிறிது விரிவாக அறிவோம்.

முதலாவது:பொதுமக்களின் (சாமானியன்) தக்லீத் (تقليد العوام ) 
இது தக்லீதின் முதல் நிலை பொதுமக்கள் யார்? 
1) அரபி மொழி,இஸ்லாமிய கல்விகள் குறித்து முற்றிலும் ஞானமில்லாதவர்கள்.அவர்கள் மற்ற துறைகளில் திறமையானவர்களாக இருந்தாலும் சரி.
2)அரபி மொழியை அறிந்தவர்கள்.அரபி நூல்களை புரியமுடியும்.எனினும்,தப்ஸீர்,
ஹதீஸ்,பிக்ஹ் இவைகளுடன் தொடர்புடைய மார்க்க கல்விகளை முறையாக ஆசிரியர்களிடம் கற்காதவர்கள்.
3)மார்க்க கல்வியை ஆசிரியர்களிடமிருந்து ஓரளவிற்கு கற்றிருப்பார்கள்.எனினும் தப்ஸீர்,ஹதீஸ்,பிக்ஹ் போன்றவைகளின் அடிப்படைகளை திறம்பட கற்காதவர்கள்.
இந்த மூன்று சாரார்களும் தக்லீத் விஷயத்தில் பொதுமக்கள் தான்.இவர்களுக்கு தக்லீத் செய்வதை தவிர வேறு வழியில்லை.ஏனெனில் நேரடியாக குர்ஆன்,ஹதீஸை அணுகி ஆய்வு செய்யும் திறனோ,தகுதியோ இல்லை.மேலும் முரண்பட்ட ஆதாரங்களுக்கு மத்தியில் இணைக்கத்தை உருவாக்குதல் அல்லது ஒரு கருத்தை மட்டும் முன்னுரிமை அளித்து தீர்ப்பளிக்கும் திறமையும் இல்லை.ஆதலால் பொதுமக்கள் மார்க்க சட்டங்களில் ஏதேனும் முஜ்தஹிதைதான் (ஆய்வாளரை) சார்ந்திருக்க வேண்டும்.
அல்லாமா கத்தாபி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:
و أما يسوغ له التقليد فهو العامي الذي لا يعرف طرق الأحكام الشرعية فيجوز له أن يقلد عالما و يعمل بقوله ......ولأنه ليس من أهل الاجتهاد فكان فرضه التقليد كتقليد الاعمى فى القبلة فإنه لما لم يكن معه آلة الاجتهاد كان عليه تقليد البصير فيها 

ஷரீஅத் சட்டங்களின் வழிமுறைகளை அறியாத சாமானியர் ஏதேனும் அறிஞரை தக்லீத் செய்து அவரின் சொல்லை அமல் செய்வது கூடும்........(குர்ஆன்,சுன்னாவில் அதற்குரிய ஆதாரங்களை எழுதிய பிறகு) ஏனெனில் சாமானியருக்கு ஆய்வுத்திறன் இல்லை.அதாவது பார்வை இழந்தவர் கிப்லாவின் விஷயத்தில் பார்வை உள்ளவரை பின்பற்றுவதை போன்று சாமானியரும் (அறிஞரை) பின்பற்றுவது கடைமையாகும்.
ஏனெனில் அவர் கிப்லாவை சுயமாக அறிவதற்கு ஆற்றல் இல்லை.எனவே பார்வை உள்ளவரை தான் தக்லீத் செய்யவேண்டும்.(ஆதாரம்:அல்ஃபகீஹ் வல் முத்தஃபக்காஹ் லில் கதீபுல் பஃதாதி பக்கம்:68)

இந்த நிலையில் உள்ள முகல்லித் (இமாமை பின்பற்றுபவர்) ஆதாரங்கள் குறித்து தடுமாறுவதற்கு அல்லது எந்த முஜ்தஹிதின் ஆதாரங்கள் வலுவானதாக உள்ளது என்பதை ஆராய்வதற்கு வேலை இல்லை.எனவே அவர் ஒரு அறிஞரை குறிப்பாக்கி அனைத்து செயல்களிலும் அவரின் சொல்லை நம்பிக்கை கொள்ளவேண்டும்.எதார்த்தம் என்னவெனில் எதேனும் ஹதீஸ் அவரின் இமாமின் வழிமுறைக்கு மாற்றமாக இருந்தாலும் இமாமின் வழிமுறையை பின்பற்றுவது தான் கடமையாகும்.அந்த ஹதீஸின் சரியான கருத்து எனக்கு புரியவில்லை.(அல்லது) இமாமிடத்தில் அதற்கு எதிரான வலுவான ஆதாரம் உள்ளது என்பதாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.இமாமின் வழிமுறையை ஏற்கவேண்டும்.ஹதீஸிற்கு மாற்றுவிளக்கம் கொடுக்க வேண்டும் என்பதாக கூறுவது வெளிப்படையில் ஆச்சரியமாக இருக்கலாம்.ஆனால், நிதர்சனம் இதுதான்.ஏனெனில் சாமனியருக்கு இதனை தவிர வேறு வழியில்லை.ஏதேனும் ஹதீஸ் இமாமின் வழிமுறைக்கு மாற்றமாக இருந்தால் அவரின் வழிமுறையை விட்டுவிடலாம் என்பதாக இந்த நபருக்கு விருப்பம் அளித்தால் இதனின் முடிவானது குழப்பத்தில்,வழிகேட்டில் தள்ளிவிடும்.ஏனெனில் குர்ஆன்,சுன்னாவிலிருந்து மஸாயில்களை ஆய்ந்து அறிவது ஆழமான விசாலமான துறையாகும்.வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் ஒவ்வொரு நபரும் தேர்ச்சி பெறமுடியாது.சில சமயங்களில் வெளிப்படையான ஹதீஸின் வார்த்தைகளிலிருந்து ஒரு கருத்தை புரியமுடியும்.எனினும்,குர்ஆன்,சுன்னாவின் மற்ற ஆதாரங்களின் ஒளியில் வேறு கருத்தை புரியமுடியும்.இப்போது சாமனியர் ஹதீஸின் வெளிப்படையை மட்டும் பார்த்து அமல் செய்ய ஆரம்பித்தால் வழிகேடு உருவாகிவிடும்.இதனை உறுதிப்படுத்தும் நிகழ்வை மெளலானா மெளலவி தகி உஸ்மான் ஹள்ரத் தாமத் பரகாதுஹும் அவர்கள் "தக்லீத் கீ ஷரயீ ஹைய்ஸிய்யத்" நூலில் பதிவு செய்துள்ளார்கள்.நூல்களை வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர் இருந்தார்.அதிலும் குறிப்பாக ஹதீஸ்களை வாசிப்பதில் ஆர்வம் உடையவர்.அத்துடன் அவரின் சிந்தனை "நான் ஹனபி எனினும் ஏதேனும் ஹதீஸ் ஹனபி மத்ஹபிற்கு மாற்றமாக இருந்தால் அதனை விட்டுவிடுவேன்".ஒரு சமயம் எனக்கு முன்னிலையில் ஒரு நபருக்கு கூறினார்:காற்று வெளியேறி வாடை உணரும் வரை அல்லது சப்தம் கேட்கும் வரை உளு முறியாது.அப்பாவித்தனத்தால் தவறான புரிதலில் அகப்பட்டுள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.பிறகு அவருக்கு புரியவைக்க முயற்சித்தேன்.ஆனால் அவர் திர்மிதியில் உள்ளது என்பதாக பிடிவாதமாக இருந்தார்.இறுதியில் இது குறித்த அனைத்து ஹதீஸ்களையும் கூறி விரிவாக விளக்கினேன்.உண்மைநிலையை தெளிவுப்படுத்தினேன்.அப்போது கூறினார்.நீண்டகாலமாக இதன்படி அமல்செய்து வருகிறேன்.எத்தனை தொழுகைகளை இது போன்று தொழுதேன் என்பது எனக்கு நினைவில்லை.அடிப்படையில் இவரின் தவறுதலான புரிதல் ஜாமிஉத்திர்மிதியில் வரும் ஹதீஸை சுயமாக ஆய்வு செய்ததின் விளைவு.
لا وضوء الا من صوت او ريح 
வாடை (உணர்ந்தால்) அல்லது சப்தம் கேட்டாலே தவிர உளூ இல்லை.(ஆதாரம்:திர்மிதி) இதனுடன் திர்மிதியில் இந்த ஹதீஸையும் அவர் படித்துள்ளார்.
اذا كان أحدكم فى المسجد فوجد ريحا بين اليتيه فلا يخرج حتى يسمع صوتا أو يجد ريحا 
உங்களில் ஒருவர் மஸ்ஜிதில் இருக்கும்போது அவரது பித்தட்டுகளுக்கு மத்தியில் (காற்று பிரியும்) சப்தம் கேட்காதவரை அல்லது வாடையை உணராதவரை (உளூ செய்வதற்கு) வெளியேற வேண்டாம்.
இந்த ஹதீஸின் வெளிப்படையான வார்த்தைகளை கவனித்து உளூ முறிவதற்கு  அடிப்படை (காற்று பிரிந்து) வாடை வருதல் அல்லது சப்தம் கேட்குதல்  என்பதாக தவறுதலாக புரிந்து கொண்டார்.எனினும்,அனைத்து புகஹாக்களும் ஒன்றுப்பட்டுள்ளனர்.இந்த ஹதீஸின் கருத்து இதுவல்ல.மாறாக உண்மையென்னவெனில் உளூ முறிந்துவிட்டதாக தடுமாற்றமும்,ஊசலாட்டமும் கொண்டவர்கள் குறித்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகும்.இதனை ஹதீஸின் பல்வேறு அறிவிப்புகளை, வாசகங்களை ஒன்றுதிரட்டிதான் இதற்குரிய தீர்வை கூறமுடியும்.வெறும் குர்ஆன்,ஹதீஸின் மொழிப்பெயர்ப்பை மட்டும் சாமானியர் படித்தால் வழிகேட்டிலும்,தவறான புரிதலிலும் அகப்பட்டு விடுவார்.இதேபோன்றுதான் எதேனும் ஹதீஸ் தனது இமாமின் வழிமுறைக்கு மாற்றமாக இருப்பதைக் கண்டு இமாமின் வழிமுறையை விட ஆரம்பித்தால் அவரும் வழிகேட்டில் அகப்பட்டுக்கொள்வார்.இதற்கு ஏராளமான ஆதாரங்களை கூறமுடியும்.எனினும் சுருக்கமாக கூறிவிட்டோம்.

இதனை குறித்து எளிதாக புரிவதற்கு ஓர் உதாரணம்
உலகில் எதேனும் நபர் ஒரு சட்டத்தை அறிய விரும்பினால் அந்த நாட்டின் சட்டத்தை கற்ற திறமையான நபரை அணுகுவார்கள்.மாறாக நேரடியாக சட்டநூல்களை ஆராய்வதற்கு முயற்சிக்க மாட்டார்கள்.
சட்டவியல் அறிஞர் எதேனும் சட்டத்தை கூறினால் அதனை நம்பி ஏற்று அமல்செய்வது கடமையாகும்.பிறகு எதார்த்தமாக சட்டநூல் கையில் கிடைத்தது.அதில் உள்ள வாசகம் அறிஞரின் கருத்திற்கு எதிராக இருந்தாலும் அவரின் கருத்தை நிராகரிக்கமாட்டார்.மாறாக,அவர் கூறியபடி செயல்படுவார்.மேலும் சட்டநூல்களை முறையாக கற்கவில்லை என்பதால் இதனை தம்மால் சரியாக புரியமுடியவில்லை என்பதாகத்தான் உறுதியாக எண்ணுவார்.அதுமட்டுமின்றி இந்த துறையில் திறமை, விசாலமான ஞானம் தேவை.இந்த உதாரணம் சட்டநூல்களை விட குர்ஆன்,சுன்னாவிற்கு மிகவும் பொருத்தமானது.ஷரீஅத்தின் சட்டங்களை சுயமாக ஆராய்ந்து அமல்செய்வதற்கு மிகப்பெரிய திறமை அவசியமாகும்.எனவேதான் நமது புகஹாக்கள் பொதுமக்கள் நேரடியாக குர்ஆன், ஹதீஸின் சட்டங்களை அறிவதற்கு பதிலாக முஜ்தஹித்களை தக்லீத் செய்யவேண்டும் என்பதாக கூறுகின்றனர்.இதனால்தான் சாமானியருக்கு எதேனும் முஃப்தி தவறான தீர்ப்பளித்தால் அதனின் குற்றம் தீர்ப்பு அளித்தவருக்கு மட்டும் தான்.சாமானியர் தங்கடவாதியாக கருதப்படுவார்.ஆனால் அவர் எதேனும் ஹதீஸை பார்த்து அதனின் கருத்தை தவறாக புரிந்து அமல்செய்தால் குற்றவாளியாக கருதப்படுவார்.ஆகவே பொதுமக்கள் மீது தக்லீத் செய்வதுதான் கடமையாகும்.

Friday, December 17, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 இமாம்கள் தங்களை பின்பற்றுவதை தடுத்தார்களா?தொடர்:18  


இமாம்கள் குறிப்பாக கூறியுள்ளார்கள்:சரியான ஹதீஸ்கள் தான் எனது வழிமுறை 

இந்த வாதங்கள் அனைத்தும் பொய்யானதும் அசத்தியமானதுமாகும்.எதார்த்தம் என்னவெனில் முஜ்தஹித்களான இமாம்கள், தங்களை தக்லீத் செய்வதை தடுத்தது முஜ்தஹித்களை தான்.ஏனெனில் அவர்கள் குர்ஆன்,ஹதீஸை நேரடியாக  அணுகி ஆய்வு செய்யும் திறமை பெற்றிருந்தார்கள்.மாறாக, ஆய்வு செய்யும் திறன் இல்லாதவர்களை தடுக்கவில்லை.

ஏராளமான நூல்களை நான்கு இமாம்களும், அவர்களின் மாணவர்களும் ஏன் எழுதவேண்டும்? அனைத்து ஆய்வுரீதியான கிளைசட்டங்களை தொகுத்து ஏன் ஒன்றுசேர்க்க வேண்டும்? பர்ளு,வாஜிப்,சுன்னத்,நபில்,

முஸ்தஹப் போன்ற ஏராளமான மஸாயில்களை தொகுக்க வேண்டும்.ஏனெனில் பின்னால் வருபவர்கள் எளிதாக குர்ஆன்,சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்பதற்காகும்.இமாம்கள், தங்களை தக்லீத் செய்வதை அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக தடுத்திருந்தால்,இமாம்களிடத்தில் பொதுமக்கள் மார்க்க சட்டத்தை கேட்கும்போது நீங்களே ஆய்வு செய்துகொள்ளுங்கள் என கூறியிருக்கவேண்டும்.ஆனால்,

அவர்களின் வாழ்வில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மஸாயில்களை குறித்து கேட்கும்போது, ஆதாரங்களை கூறாமல் சட்டத்தை மட்டும் கூறிய ஏராளமான நிகழ்வுகள் உண்டு.எனவே இமாம்கள் தக்லீதை தடுத்தது எல்லோருக்கும் பொதுவான சட்டம் அல்ல.

இமாம் அபியூசுப் (ரஹ்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்:

لأن على العامى الاقتداء بالفقهاء لعدم الاهتداء فى حقه إلى معرفة الأحاديث 

மார்க்க விற்பன்னர்களை, (புகஹாக்களை) பின்பற்றுவது சாமானிய மக்களின் மீது கடமையாகும்.ஏனெனில் அவர்களுக்கு ஹதீஸ்கள் குறித்து ஞானத்தை பெற்றுக்கொள்ளும் சரியான வழிமுறையை அடையும் தகுதி இல்லை.(ஆதாரம்:ஹிதாயா 1/226,தலைப்பு:ما يوجب القضاء و الكفارة)

 இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களிடமிருந்து  அல்லாமா இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்கள் எடுத்தெழுதுகிறார்கள்:  இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள்,அபூஉபைதா (ரஹ்) அவர்கள்,அபூஸவ்ர் (ரஹ்) அவர்கள்,முஸ்அப் (ரஹ்) போன்றவர்கள் சட்டங்களை தெரிந்துகொள்வதற்கு (இமாம்களை) அணுகும்படி கூறினார்கள்.தனது தோழர்களில் அபூதாவூத் (ரஹ்),உஸ்மான் இப்னு ஸயீத் (ரஹ்),இப்ராஹிம் ஹர்பி (ரஹ்), அபூபக்கர் அஸ்ரம் (ரஹ்),அபூஜுர்ஆ (ரஹ்),அபூஹாதம் (ரஹ்), முஸ்லிம் (ரஹ்) போன்றவர்களை (பிறரை) தக்லீத் செய்வதிலிருந்து தடுத்தார்கள்.அசலான குர்ஆன்,சுன்னாவின் பக்கம் திரும்புவது கடமை என்பதாக அவர்களிடத்தில் கூறினார்கள்.(பதாவா இப்னு தைய்மிய்யா 2/24) 

 இமாம்கள்,தக்லீத் செய்யக்கூடாது என்பதாக  யாரை தடுத்துள்ளார்கள்? என்பதை புரிய முடிகிறது.ஹதீஸ்கலை வல்லுநர்களாக,புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்களாக இருப்போரை தான் தடுத்துள்ளார்கள்.ஆய்வுத்திறன் இல்லாதவர்கள் இமாமை அணுகி மார்க்க சட்டங்களை குறித்து கேட்டு அமல் செய்வது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அனைவரையும்  தக்லீதை விட்டு தடுக்கவில்லை என்பதற்கு மற்றொரு சான்று

அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களும்,

ஸஹாபாக்கள்,தாபியீன்களின் கருத்துவேறுபாடுகளும் ஒன்று சேர்க்கப்பட்ட நூல்கள் இருந்தாலும் விரும்பியபடி அமல்செய்வது,நாடுவதை அமல்செய்வது கூடாது.ஆதலால் எவரின் சொல்லை எடுக்க விரும்பினால்,சரியானதை அமல்செய்வதற்கு மார்க்க அறிஞர்களை அணுகி தெரிந்து கொள்ளும் வரை அதனை அமல்செய்வது கூடாது.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன்)

கண்ணியத்திற்குரிய பேரறிஞர் அபுல் ஹஸன் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடத்தில்,இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்;அபுல் ஹஸன்!எந்த மஸ்அலாவில் உம்முடைய கருத்தில் எந்த ஒரு இமாமும் இல்லையெனில் அதில் எப்போதும் விவாதிப்பதை தவிர்த்துக்கொள்! (ஆதாரம்:மனாகிபுல் இமாம் அஹ்மத் பக்கம்:871,ஸியரு அஃலாமின் நுபலா 11/692)

இக்காலத்தின் குழப்பங்களில் மிகவும் அபாயகரமான குழப்பம் இஸ்லாமியர்களில் சாமானியர்களை குறிப்பாக இளைஞர்களை வார்த்தை ஜாலங்களால்,கவர்ச்சியான வாதங்களால்,தவறான ஊசலாட்டங்களால் அவர்களின் உள்ளத்தில் மத்ஹபுகளுக்கு எதிரான சிந்தனையை திணித்து,அவைகளை விட்டுவிடுவதை வலியுறுத்துவது.இதன்பிறகு அப்பாவி மக்கள் மனம்போன போக்கில் வாழ்வை கழிப்பார்கள். எந்த ஒரு திறமையான முஜ்தஹிதை (ஆய்வாளரை) பின்பற்றும் தேவையில்லை.அதுமட்டுமின்றி  முன்னோர்களை தக்லீத் செய்வது,பின்தொடர்வது குற்றம் பாவம் என்பதாக சித்தரிப்பார்கள்.மார்க்கத்தை குறித்து அறியாதவரும் கூட இமாம்களின் குர்ஆன்,ஹதீஸின் விளக்கத்தை ஏற்பதில்லை.ஆனால்,அவர்களின் இயக்கத்தின் தலைவர்களின் விளக்கத்தை,ஆய்வை வஹியாக கருதி கண்மூடித்தனமாக தலைமீது வைத்து கொண்டாடி வருகின்றனர்.இதனையே நேர்வழி என்பதாக கருதி வருகின்றனர்.இதனை நாம் கண்கூடாக கண்டுவருகிறோம்.

ஆக,இமாம்களின் கூற்றுக்களை நுனிப்புல் போல் மேய்கின்றனர் அல்லது திட்டமிட்டு திரித்து கூறிகின்றனர்.

அடுத்து, சரியான ஹதீஸ்களே எனது வழிமுறை எனும் இமாம்களின் கூற்றுகளின் உண்மையான விளக்கத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது நூலான கிதாபுல் மஜ்மூஃவின் முன்னுரையில் இதற்கு பதில் தருகிறார்கள்.

هذا الذي قاله الشافعى ليس معناه أن كل واحد رأى حديثًا صحيحًا قال: هذا مذهب الشافعي، وعمل بظاهره وإنما هذا فيمن له رتبة الاجتهاد في المذهب

இமாம் ஷாபியி (ரஹ்) அவர்கள் கூறிய "ஸஹீஹான ஹதீஸ் எனது வழிமுறை" என்பதற்குரிய விளக்கத்தை இவ்வாறு புரிந்து கொள்ளக்கூடாது.அதாவது "ஒவ்வொரு நபரும் ஸஹீஹான ஹதீஸை பார்த்தால் இதுதான் ஷாபியி ரஹ் அவர்களின் வழிமுறை என்பதாக எண்ணி அமல் செய்வது"(கூடாது).மாறாக, இமாமின் சொல்லின் சரியான கருத்து "மத்ஹபில் ஆய்வு செய்யும் திறன்பெற்றவருக்கு உரிய வழிகாட்டுதலாகும்".

     இமாம்களின் இந்த சொல்லை பொதுவாக அறிவித்தால் பெரும் அழிவில்தான் கொண்டு சேர்க்கும்.இதற்கு ஏராளமான சான்றுகளை கூறமுடியும்.உதாரணத்திற்கு சில ஹதீஸ்களை மட்டும் பார்ப்போம்.

1)ரமளானில் இரத்தம் குத்தி எடுத்த மனிதரை கடந்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சென்ற போது கூறினார்கள்;

افطر الحاكم و المحجوم 

இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜ் (ரலி),திர்மிதி ,அபூதாவூத் போன்ற ஹதீஸ்களில் வருகிறது.

இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும் பார்த்து சாமானியர் அமல் செய்தால் என்ன விளைவு ஏற்படும்?

2)இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் 

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا مَطَرٍ»

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் பயம், மலை இல்லாமலும் லுஹர், அசருக்கிடையிலும், மக்Gரிப், இஷாக்கிடையிலும் சேர்த்து தொழுதுள்ளார்கள்.’  (முஸ்லிம்)

இந்த ஹதீஸின் வெளிப்படையான கருத்தை முன்வைத்து தக்க காரணமின்றி தொழுகையை ஜம்உ செய்ய ஆரம்பித்தால் என்ன விளைவு ஏற்படும்?

3)அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் 

عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا وضوء الا من صوت او ريح 

உங்களிலொருவர் சத்தத்தையோ, வாடையோ உணராத வரை உளு (செய்யும் அவசியம்) இல்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.(ஆதாரம்:திர்மிதி)

வெளிப்படையான ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸின் பேரில் அமல்செய்தால் என்ன விளைவு ஏற்படும்?

4)புகாரியில் வரும் ஹதீஸ்

 ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

'இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை' என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்' என்றார்கள்.(ஹதீஸ் இலக்கம்:2057)

வெளிப்படையான இந்த ஹதீஸின் பேரில் அமல்செய்தால் என்ன விளைவு ஏற்படும்? 

ஆகவே,"ஸஹீஹான ஹதீஸ்கள் எமது வழிமுறை" எனும் இமாம்களின் சொல்லை பொதுவாக புரிந்து கொள்வது கூடாது.

Friday, December 10, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில் தொடர்:17

கேள்வி:ஸஹாபாக்கள் காலத்தில்  தனிநபரை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படவில்லை.பிறகு எப்படி நமது காலத்தில் கடமையாகும்? 

பதில்


1)ஸஹாபாக்கள்,தாபியீன்களின் காலத்தில் பரவலாக நேர்மை இருந்தது.பெருமானாரின் சகவாசம், நெருக்கமான காலம் எனும் பரக்கத்தால் ஷரீஅத்தின் சட்டங்களில் மனோஇச்சைக்கு வழியில்லை.இதனால்தான் அவர்களின் காலத்தில் இரண்டுவிதமான தக்லீதிற்கும் அனுமதியிருந்தது.பிறகு மனோஇச்சை வீறுகொண்டு எழும் அச்சத்தால் தக்லீத் ஷஹ்ஸி (தனிநபரை பின்பற்றுதல்) மட்டும் குறிப்பாக்கப்பட்டது.

2)ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் "அல்இன்ஸாஃப் ஃபி பயானி ஸபபில் இஹ்திலாஃப்" நூலில் நடுநிலையாக அழகிய பதிலை தருகிறார்கள்.
  வாஜிப் (கடமை)இரண்டு விதமாக உள்ளது.ஒன்று,அசலில் வாஜிப் (واجب لذاته) என்று சொல்லப்படும்.மற்றொன்று,(வாஜிப் லிஙைரிஹி)வேறு காரணத்தால் வாஜிப் 
முதலாவது பெருமானாரின் காலத்தில் கடமையாக இருந்தது.அதற்குப் பிறகு அவைகளில் சிறிதும் அதிகப்படுத்தப்படாது.ஆனால்,இரண்டாவது பெருமானாரின் காலத்தில் கடமையாக இல்லை.அவைகளில் அதிகப்படியாக சேர்க்க முடியும்.இதில் நோக்கமானது வாஜிபை அமல் செய்வதற்காகும்.உதாரணமாக, நபியின் காலத்தில் ஹதீஸ்களை பாதுகாப்பது கடமையாக இருந்தது.ஆனால் எழுதுவது வாஜிபாக இல்லை.ஏனெனில் ஹதீஸை பாதுகாக்கும் கடமை மனப்பாடத்தின் மூலமே நிறைவேறிவிடும்.எனினும்,மனனசக்தி குறைந்த போது ஹதீஸை பாதுகாப்பதற்கு எழுதி வைப்பதை தவிர வேறு வழியில்லை.எனவே,பிறகு எழுதிவைப்பது வாஜிபாகிவிட்டது.இதேபோன்றுதான் ஸஹாபாக்கள்,தாபியீன்களின் காலத்தில் முஜ்தஹித்களை பின்பற்றும் தக்லீத் முத்லக் (பொதுவான தக்லீத்)அனுமதி இருந்தது.எனினும்,இதன்பேரில் ஆபத்து ஏற்படுவதை அஞ்சி,நமது காலத்தில் தக்லீத் ஷஹ்ஸி மட்டும் கடமையாகிவிட்டது.
  இதற்கு தெளிவான முன்னுதாரணம் உண்டு.ஹள்ரத் உஸ்மான் (ரளி) அவர்களின் காலம் வரை குர்ஆனின் பல்வேறு எழுத்துவடிவம் இருந்தது.இதனால் உஸ்மான் (ரளி) காலத்தில் கடுமையான குழப்பம் உருவானது.இதன் வாயிலை அடைப்பதற்கு முழு உம்மத்திற்கும் ஒரே எழுத்து வடிவை கட்டாயமாக்கினார்கள்.மற்ற எழுத்துமுறையில் எழுதுவதை கூடாது என உத்தரவிட்டார்கள்.இதன்பேரில் முழுஉம்மத்தும் ஒன்றுபட்டனர்.வாஜிபாக இல்லாதது ஏன் வாஜிபானது என ஒருவரும் குற்றச்சாட்டவில்லை? இது போன்று தான் பெரும் குழப்பத்தின் வாயிலை அடைப்பதற்கு தக்லீத் ஷஹ்ஸி மட்டும் கடமையாகிவிட்டது.(ஆதாரம்:தர்ஸே திர்மிதி, பக்கம்:121)

மற்றோரு உதாரணம் واجب بالذات (அசலில் வாஜிப்) இதற்கு ஆதாரம் தேவையாகும்.ஆனால் واجب بالغير (வேறு காரணத்தால் வாஜிப்) இதற்கு ஆதாரம் தேவையில்லை.தொழுகையில் பாத்திஹா சூரா ஓதுவது வாஜிப்.அதற்கு ஆதாரம் உண்டு.தொழுகையில் பாத்திஹா ஓதவில்லையானால் தொழுகை குறையுடையது.எனினும்,அதனை மனனம் செய்வதற்கு குறியீடுகள் (ஜேர்,ஜஃபர்,பேஷ்) தேவை.இவைகள் இல்லையெனில் பாத்திஹா சூரா எல்லோராலும் ஓதமுடியாது.எனவே குறியீடுகள் واجب بالغير (வேறுகாரணத்தால் கடமையானது) எனினும் இதற்கு ஆதாரம் இல்லை.இவ்வாறுதான் தக்லீத் ஷஹ்ஸி (தனிநபரை பின்பற்றுவது) கடமையாகிவிட்டது.

Thursday, December 2, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 

குற்றச்சாட்டுகளும் பதில்களும்/தொடர்:16

சந்தேகமும் நிவர்த்தியும் 


தக்லீத் முத்லக் (பொதுவான தக்லீத்) தக்லீத் ஷஹ்ஷி (தனிநபரை பின்பற்றுதல்) இரண்டும் கூடும் எனும் போது நமது காலத்தில் ஏன் தக்லீத் முத்லக்  கைவிடப்பட்டது?

மனோஇச்சையின் விளைவுகளை குறித்து குர்ஆன்,ஹதீஸின் ஒளியில் 

وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰـكِنَّهٗۤ اَخْلَدَ اِلَى الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰٮهُ‌ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْـكَلْبِ‌ ۚ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَث ‌ؕ ذٰ لِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏
7:176. நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.

 اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً  ؕ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ‌ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏
45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?

 اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُيِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ‏
47:14. எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா?

وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا‏
இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.

وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْن 
(இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.

وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَ عَنْۢ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَ‌ؕ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّصِيْبَهُمْ بِبَـعْضِ ذُنُوْبِهِمْ‌ؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ‏
5:49. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.

ثُمَّ جَعَلْنٰكَ عَلٰى شَرِيْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏
45:18. இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.

يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌۢ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ‏
38:26. (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.

عَنْ أَبِي مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم "لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ"
நான் கொண்டு வந்த மார்க்கத்தை அவனது மனோஇச்சை பின்பற்றப்படாதவரை உங்களில் ஒருவரும் முஃமீனாக முடியாது என்பதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:அல்அர்பஊன் அந்நவவி)

قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ، وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ
5436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம்)


மனிதனை ஷைத்தான் வழிகெடுக்க ஏந்திய மிகப்பெரிய ஆயுதம் மனோஇச்சைகள் தான்.அதன்பேரில் ஈடுபடசெய்து,அவனது உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி அவனை அடிமையாக்கிவிடுகிறான்.எனவே இதன் மூலம் மனோஇச்சையானது பெரும் வழிகேடு என்பதை புரிய முடிகிறது.சில சமயங்களில் மனிதனை இறைநிராகரிப்பில் தள்ளிவிடும்.மனோஇச்சை இரண்டு நிலைகளில் உள்ளது.ஒன்று,மனிதன் பாவத்தை பாவமாக,தவறை தவறாக புரிந்துள்ளான்.எனினும்,மனோஇச்சையின் தாக்கத்தால் அகப்பட்டு பாவத்தில் ஈடுபடுகிறான்.இந்த செயலானது குற்றம் என்பதில் சந்தேகமில்லை.எனினும்,தவ்பாவின் மூலம் பாவமன்னிப்பு பெற்று வாழ்வை சீர்திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு.இதற்கு நேர்மாறாக மனோஇச்சையின் மற்றொரு நிலை,அடியான் அதற்கு அடிமையாகி,ஹலாலை ஹராமாக்கி,ஹராமை ஹலாலாக்கி,ஷரீஅத்தின் வரம்பை மீறிவிடுகிறான்.தீனை,மார்க்கத்தை விளையாட்டுப் பொருளாக ஆக்கிவிடுகிறான்.இந்த நிலையானது முதல்நிலையை விட ஆபத்தும், அபாயமும்,நாசமும் நிறைந்து இருக்கிறது.எந்த செயல் அடியானை இத்தகைய நிலைக்கு அழைத்துச் செல்வதற்கு பாதையை அமைத்து தருகிறதோ அதனை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.இதனால் தான் புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்கள்,மக்களிடத்தில் மார்க்க உணர்வு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.பேணிக்கை, இறையச்சம் விரைவாக சென்றுக்கொண்டுள்ளது.இந்த சமயத்தில் தக்லீத் முத்லகின் வாசலை திறந்தால் மக்கள் அறிந்துகொண்டு உணர்வற்று மனோஇச்சையில் அகப்பட்டுக்கொள்வார்கள் என எண்ணினார்கள்.
உதாரணமாக,குளிர்காலமாக உள்ளது.ஒருவன் உளு செய்கிறான்.இரத்தம் வருகிறது.இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறிந்துவிடும்.ஷாபியி (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறியாது.அப்போது ஷாபியி மத்ஹபை தக்லீத் செய்து மீண்டும் உளு செய்யாமல் இருப்பார்.சிறிதுநேரம் கழித்து பெண்ணை தொடுகிறான்.ஷாபியி (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறிந்துவிடும்.அபூஹனீபா (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறியாது.இப்போது அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மத்ஹபை தக்லீத் செய்து மீண்டும் உளு செய்யாமல் இருக்கிறான்.ஆக, இவ்வாறு ஒவ்வொரு மத்ஹபையும் எடுத்து அவனுக்கு எளிதாக,லேசாக இருப்பதை அமல் செய்து, சிரமம் உள்ளதை விட்டுவிட்டு செல்ல ஆரம்பித்தால் அவனிடத்தில் மனோஇச்சைதான் எஞ்சியிருக்கும்.மார்க்கம் அல்ல.வெளிப்படையான விஷயம் ஷரீஅத்தின் சட்டங்கள் அவனுக்கு விளையாட்டுப்பொருட்களாக மாறிவிடும்.இன்னும் மனோஇச்சையின் பேரில் எல்லை மீற ஆரம்பித்துவிடுவான்.ஏனெனில் பெரும்பாலும் முஜ்தஹி(ஆய்வாளர்)த்திடத்தில் சில நேரங்களில் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும்.அதனை எடுத்து அமல்செய்யும் போது நிச்சயம் அவனை மனோஇச்சை இறைநிராகரிப்பில் தள்ளிவிடும்.உதாரணமாக,ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அவர்களிடத்தில் இசைகூடும்.ஹள்ரத் காஸிம் இப்னு முஹம்மத் அவர்களிடத்தில் நிழலற்ற உருவப்படங்கள் கூடும்.இமாம் அஃமஷ் அவரிடத்தில் நோன்பு சூரிய உதயத்திலிருந்து ஆரம்பமாகும்.ஹள்ரத் அதா இப்னு அபீரபாஹ் அவரிடத்தில் ஈத்,ஜும்ஆ நாளில் வந்தால் அன்றைய நாள் ஜும்ஆ,லுஹர் இரண்டும் நீங்கிவிடும்.அஸர் வரை எந்த ஒரு தொழுகையும் கடமையில்லை.தாவூத் ளாஹிரி,இப்னு ஹஜ்ம் அவர்களிடத்தில் எந்தப் பெண்ணை நிக்காஹ் செய்ய விருப்பம் உள்ளதோ அந்தப் பெண்ணை நிர்வாணமாக பார்ப்பது கூடும்.இப்னு ஸஹ்னூன் மாலிகி அவர்களிடத்தில் மனைவியின் பின்துவாரத்தில் புணர்வது கூடும்.ஸயீத் இப்னு முஸய்யிப் அவரிடத்தில் முத்தலாக் கொடுத்த பெண்ணை மீண்டும் முதல் கணவன் திருமணம் செய்ய வேறொருவன் நிக்காஹ் செய்தால் போதுமானது.உடலுறவு கொள்வது நிபந்தனையில்லை.சுருக்கம் என்னவென்றால்,இவைகள் புரியவைப்பதற்கு சில உதாரணங்களாகும்.இல்லையெனில் இது போன்ற ஏராளமான கருத்துக்கள் பிக்ஹ்,ஹதீஸ் நூல்களில் உள்ளது.இப்படிப்பட்ட விஷயங்களை ஒன்றுதிரட்டி மார்க்கமாக அமைத்து தக்லீத் செய்தால் அதனின் தலைவன் ஷைத்தானும்,மனோஇச்சையாக தான் இருக்கமுடியும். இது போன்ற மனோஇச்சைகள் மார்க்கத்தை 
விளையாட்டுப் பொருளாக்கிவிடும்.எனவே தான் முற்கால அறிஞர்கள் (ஸலஃபுகள்) கூறுகிறார்கள்:من أخذ بنوادر العلماء خرج من الاسلام அறிஞர்களின் தனிப்பட்ட மஸாயில்களை எடுத்து நடப்பவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்.
ஷைகுல் இஸ்லாம் இப்னுதைமியா (ரஹ்) அவர்கள் கூட (தக்லீத் ஷக்ஸி) தனிநபரை பின்பற்றுவதை வாஜிப் என்பதாக கூறவில்லை.இருப்பினும்,தனது மனோஇச்சைக்கு வழிப்பட்டு ஒரு சமயம் ஒரு மத்ஹபை,மற்றொரு சமயம் வேறொரு மத்ஹபை ஏற்பது ஒன்றுப்பட்ட உம்மத்தின் பேரில் அனுமதியில்லை என்கிறார்.
فى وقت يقلدون من يفسد النكاح و فى وقت يقلدون من يصححه بحسب الغرض و الهوى و مثل هذا إلا يجوز باتفاق الائمة 
சில சமயங்களில் நிகாஹ் கூடாது எனும் இமாமை,மக்கள் பின்பற்றுகிறார்கள்.சிலசமயங்களில் நிகாஹ் கூடும் எனும் இமாமை பின்பற்றுகிறார்கள்.அதனை சரியானது என்பவர் முழுக்க சுயநலம்,மனோ இச்சையில் தான் உள்ளார்.இது போன்று செயல்படுவது ஒன்றுபட்ட அறிஞர்களின் கருத்தின்படி கூடாது.(ஆதாரம்:ஃபதாவா இப்னு தைமிய்யா பாகம்:2,பக்கம்:240)

எனவேதான்,தக்லீத் முத்லக்கை (பொதுவாக பின்பற்றுவதை) அனுமதி அளித்தால் இதுபோன்ற மனோஇச்சையை பின்பற்றும் அபாயங்கள் நிறைந்துள்ளது.இதனால்தான் உலமாக்கள் நான்காம் நூற்றாண்டில் தக்லீத் ஷஹ்ஸியை (தனிநபரை பின்பற்றுவதை) கட்டாயமாக்கினார்கள்.

Sunday, September 26, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/தொடர்:15


நான்கு மத்ஹபுகளை மட்டும் ஏன் பின்பற்றுகிறோம்


 தனிநபரை தக்லீதை(பின்பற்றுவது)குறித்து முன்னால் பாரத்தோம். இப்போது மற்றொரு கேள்வி எழுகிறது? ஏதேனும் ஒரு இமாமை குறிப்பாக பின்பற்றுவது கட்டாயம் என்றாலும் நான்கு இமாம்களை மட்டும் பின்பற்றுவதன் குறிப்பான அம்சம் என்ன? நமது உம்மத்தில் எத்தனையோ முஜ்தஹித்கள் வாழ்ந்துள்ளார்கள் உதாரணமாக ஸுப்யான் ஸவ்ரி (ரஹ்),அவ்ஜாயி (ரஹ்), இப்னு முபாரக் (ரஹ்), இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ் (ரஹ்),இமாம் புகாரி (ரஹ்) இப்னு அபிலைலா (ரஹ்) இப்னு ஷப்ரமா (ரஹ்),ஹஸன் இப்னு ஸாலிஹ் போன்றவர்கள் முஜ்தஹித் (ஆய்வாளர்)களாக இருந்துள்ளார்கள்.அவர்களில் யாரையும் ஏன் தக்லீத் செய்யவில்லை? 

  நமது பதில்:
  நான்கு இமாம்களை தவிர மற்ற இமாம்களின் பிக்ஹ் சட்டங்கள் நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை என்பதால் அவர்களை தக்லீத் செய்யவில்லை.நான்கு இமாம்களின் மத்ஹபுகளின் பிக்ஹ் சட்டங்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டதைப் போன்று இருந்திருந்தால் சந்தேகமின்றி அவர்களில் யாரை வேண்டுமானாலும் தக்லீத் செய்யலாம்.ஆனால்,அவர்களின் மத்ஹபுகளின் விரிவான நூல்கள் இல்லை.அவர்களை பின்பற்றும் உலமாக்களும் இல்லை.இதனால் இப்போது அவர்களை தக்லீத் செய்வதற்கு எந்த ஒரு வழியும் இல்லை.

பிரபல்யமான முஹத்திஸ் ஹதீஸ்கலை(வல்லுநர்) அல்லாமா அப்துர்ரஊஃப் மனாவி (ரஹ்) அவர்கள்,ஹாபிள் தஹபி (ரஹ்) அவர்களிடமிருந்து எடுத்து சொல்கிறார்கள்: 
و يجب علينا أن نعتقد أن الأئمة الأربعة و السفيانين و الاوزاعى و داؤد الظاهرى و اسحاق بن راهويه و سائر الأئمة على هدى.....و على غير المجتهدين أن يقلد مذهبا معينا ......لكن لا يجوز تقليد الصحابة و كذا التابعين كما قاله أمام الحرمين من كل من لم بدون مذهبه فيمتنع تقليد غير الاربعة فى القضاء و الإفتاء لأن المذاهب الأربعة انتشرت تحررت حتى ظهر تقييد مطلقها و تخصيص ما عليها بخلاف غيرهم للانقراض اتباعهم و قد نقل الامام الرازى رحمه الله تعالى إجماع المحققين على منع العوام من تقليد أعيان الصحابة و اكابرهم 
நான்கு இமாம்கள்,இரு ஸுப்யான்கள்(ரஹ்), (ஸுப்யான் ஸவ்ரி,ஸுப்யான் இப்னு உயைனா),இமாம் அவ்ஜாயி(ரஹ்),தாவூத் ளாஹிரி (ரஹ்),இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ் (ரஹ்)போன்ற அனைத்து இமாம்களும் நேர்வழியில் இருக்கிறார்கள் என்பதை நம்பிக்கை கொள்வது நம்மீது அவசியமாகும்.....முஜ்தஹிதாக
(ஆய்வாளராக) இல்லாதவர் மீது ஏதேனும் குறிப்பான மத்ஹபை பின்பற்றுவது கடமையாகும். இமாமுல் ஹரைமைன் சொல்லின் படி மத்ஹப் நூல்கள் தொகுக்கப்படாத,கோர்வை செய்யப்படாத ஸஹாபாக்கள்,தாபியீன்கள்,மற்ற இமாம்களை தக்லீத் செய்வது அனுமதியில்லை.எனவே ஃபத்வாக்களில் நான்கு மத்ஹபுகளை தவிர வேறு யாரையும் தக்லீத் செய்வது கூடாது.ஏனெனில் நான்கு மத்ஹபுகளின் பிக்ஹ் நூல்கள் தொகுக்கப்பட்டு பரவலாகி விட்டது.அவைகளின் பொதுவான வார்த்தைகள் வரையறுக்கப்பட்டு,பொதுப்படையான வார்த்தைகள் குறிப்பாக்கப்பட்டு தெளிவாகி விட்டது.இதற்கு நேர்மாறாக மற்ற மத்ஹபுகளை பின்பற்றுபவர்கள் வாழ்ந்து சென்றுவிட்டனர்.இமாம் ராஜி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிரபல்யமான ஸஹாபாக்களை,இமாம்களை தக்லீத் செய்வதிலிருந்து,பொது மக்களை தடுக்கவேண்டும் என்பது உறுதிமிக்க ஆய்வாளர்களின் ஒன்றுப்பட்ட கருத்தாகிவிட்டது.

(ஆதாரம்:ஃபைளுல் கதீர் ஷர்ஹு ஜாமிஉஸ்ஸஙீர் வில் மனாவி (ரஹ்)1/210)

இது குறித்து அல்லாமா நவவி (ரஹ்) அவர்களின் தெளிவான விளக்கத்தை பார்ப்போம் 

وليس له التمذهب بمذهب أحد من أئمة الصحابة وغيرهم من الأولين، وإن كانوا أعلم وأعلى درجة ممن بعدهم؛ لأنهم لم يتفرغوا لتدوين العلم وضبط أصوله وفروعه، وليس لأحد منهم مذهب مهذب محرر مقرر، وإنما قام بذلك من جاء بعدهم من الأئمة الناخلين لمذاهب الصحابة والتابعين، القائمين بتمهيد أحكام الوقائع قبل وقوعها، الناهضين بإيضاح أصولها وفروعها، كمالك وأبي حنيفة وغيره
ஸஹாபாக்கள்,முதல் நூற்றாண்டின் இமாம்களின் அந்தஸ்தை கவனிக்கும் போது, பிறகு வாழ்ந்த முஜ்தஹித்களை (ஆய்வாளர்களை)விட மிகவும் உயர்ந்தவர்கள்.ஆனால், அவர்களின் மார்க்க ஞானம்,அதனின் அடிப்படைகள், கிளைச் சட்டங்கள் நூல் வடிவில் தொகுக்கப்படும்,கோர்வை செய்யப்படும் வாய்ப்பு அவர்களுக்கு அமையவில்லை.இதனால் எவருக்கும் அவர்களின் பிக்ஹ் மத்ஹப் சட்டங்களை பின்பற்றுவதற்கு அனுமதியில்லை.ஏனெனில் அவர்களின் வழிமுறை தொகுக்கப்படவில்லை.எழுதப்பட்டு நூல் வடிவிலும் இல்லை.அசலில் பிக்ஹ் சட்டங்களை தொகுக்கும் வேலையானது ஸஹாபாக்கள்,
தாபியீன்களின் மத்ஹபில் இருந்த தலைசிறந்த உலமாக்கள் தான்.மேலும் அவர்கள் நவீன பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை நிகழ்வதற்கு முன்பாக அதற்குரிய சட்டங்களை தொகுத்தனர்.தங்களின் மத்ஹபுகளின் அடிப்படைகள்,கிளைச்சட்டங்களை தெளிவுப்படுத்திவிட்டனர்.
இமாம் மாலிக் (ரஹ்),இமாம் அபூஹனீபா (ரஹ்) போன்றோர் (ஆதாரம்:அல்மஜ்மூஃ ஷர்ஹுல் முஹத்தப் லின்நவவி 1/91)

இந்த தலைப்பில் ஏராளமான உலமாக்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
எனினும் சுருக்கமாக இரண்டு மிகப்பெரும் அறிஞர்களின் கருத்துக்களை எடுத்துக்கூற விரும்புகிறோம்.

இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் தனது பத்வா நூலில் எழுதியுள்ளார்:

ليس في الكتاب والسنة فرق في الأئمة المجتهدين بين شخص وشخص . فمالك والليث بن سعد والأوزاعي والثوري : هؤلاء أئمة في زمانهم وتقليد كل منهم كتقليد الآخر ; لا يقول مسلم إنه يجوز تقليد هذا دون هذا ولكن من منع من تقليد أحد هؤلاء في زماننا فإنما يمنعه لأحد شيئين . 

( أحدهما اعتقاده أنه لم يبق من يعرف مذاهبهم وتقليد الميت فيه نزاع مشهور . فمن منعه قال هؤلاء موتى ومن سوغه قال لا بد أن يكون في الأحياء من يعرف قول الميت . 

و ( الثاني أن يقول : الإجماع اليوم قد انعقد على خلاف هذا القول.............. 

وأما إذا كان القول الذي يقول به هؤلاء الأئمة أو غيرهم قد قال به بعض العلماء الباقية مذاهبهم فلا ريب أن قوله مؤيد بموافقة هؤلاء ويعتضد به  

குர்ஆன்,சுன்னாவை கவனிக்கும் போது முஜ்தஹித்(ஆய்வாளர்)களான இமாம்களுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை.இமாம் மாலிக்(ரஹ்),லைஸ்(ரஹ்),
அவ்ஜாயி(ரஹ்),ஸுப்யான் ஸவ்ரி (ரஹ்)போன்றவர்கள் அக்காலத்தின் தலைசிறந்த இமாம்களாக திகழ்ந்தார்கள்.ஒரு இமாமை தக்லீத் செய்வதும் மற்றொரு இமாமை தக்லீத் செய்வதும் சரிசமமானது.இவரின் (முஜ்தஹிதின்) தக்லீத் கூடும்.மற்றொருவரின் (முஜ்தஹிதின்) தக்லீத் கூடாது என்பதாக எந்த முஸ்லிமும் கூறமுடியாது.ஆனால் மார்க்க அறிஞர்கள்,சிலரின் தக்லீதை (மத்ஹபை)தடுத்தது இரண்டு விஷயங்களில் ஏதேனும் ஒன்றின் காரணமாகும்.
  முதல் விஷயம்:
அந்த இமாம்களின் மத்ஹபுகளை முழுமையாக அறிந்தவர்கள் இல்லை.மேலும் மரணித்த இமாமை தக்லீத் செய்வதில் கருத்துவேறுபாடு பிரபல்யமாக உள்ளது.அதாவது,தக்லீதை தடுப்பவர்களின் வாதம்,அந்த இமாம் இறந்துவிட்டார்.(ஆதலால் அவரை தக்லீத் செய்ய முடியாது) மரணித்த இமாமை தக்லீத் செய்பவர்களின் வாதம்,அந்த இமாம்கள் மரணித்த போதும் அவரின் மத்ஹபை முழுமையாக அறிந்த உலமாக்கள் வாழ்கிறார்கள்.(ஆதலால் இமாமை தக்லீத் செய்ய முடியும்)

இரண்டாவது விஷயம்:
எந்த இமாம்களின் மத்ஹபுகள் நிலைக்கவில்லையோ அவர்களின் கூற்றுகளை (மத்ஹபுகளை) பின்பற்றுவது கூடாது என்பதாக ஒன்றுபட்ட கருத்து உருவாகிவிட்டது....... எனினும்,சென்று விட்ட இமாம்களின் சொல்லானது,நிலைத்திருக்கும் மத்ஹபுகளின் சொல்லுக்கு ஏற்ப இருந்தால்,சந்தேகமின்றி நிலைத்திருக்கும் மத்ஹபுகளின் கருத்துக்களுக்கு அவைகள் வலுவூட்டும் தாகவும்,உறுதிப்படுத்துவதாகவும் அமையும்.
(ஆதாரம்:அல்ஃபதாவல் குப்ரா லி இப்னி தைய்மிய்யா,2/ 446,فيمن صلى خلف الصف منفردا )

அடுத்து ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் இந்த தலைப்பில் தனியானதொரு பாடத்தை எழுதியுள்ளார்கள்.
(باب تأكيد الأخذ بهذه المذاهب الأربعة و التشديد فى تركها و الخروج منها)
[நான்கு மத்ஹபுகளை தேர்ந்தெடுப்பதை வலியுறுத்துவது.அதனை விட்டுவிடுவதும், வெளியேறுவதும்  தடை]
اعلم أن فى الأخذ بهذه المذاهب الأربعة مصلحة عظيمة و فى الأعراض عنها كلها مفسدة كبيرة و نحن نبين ذلك بوجوه 
நான்கு மத்ஹபுகளை தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரும் நுட்பம் அடங்கியுள்ளது.அவைகள் அனைத்தையும் புறக்கணிப்பதில் மிகப்பெரும் கெடுதிகள் உள்ளது.நாம் இதனை பல காரணங்களின் மூலம் தெளிவுப்படுத்துகிறோம் என்பதாக ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அதனை சுருக்கமாக பார்ப்போம்.

1)ஷரீஅத்தை புரிவதில் முன்னோர்களான இமாம்களின் கருத்தை ஏற்பதானது உம்மத்தின் ஒன்றுபட்ட கருத்தின்படி பொருத்தமானது.எனினும், முன்னோர்களின் சொற்களை ஏற்பதானது,அவைகளின் ஆதாரங்கள் உறுதிமிக்க அறிவிப்பாளர் தொடருடன் நம்மை அடைந்திருக்க வேண்டும்.அல்லது பிரபல்யமான நூல்களில் தொகுக்கப்பட்டு இருக்கவேண்டும்.மேலும் அவர்களின் சொற்களை ஏற்பதில் பிறகு வாழ்ந்த உலமாக்கள் அதனை தெளிவுப்படுத்தி,
விளக்கி சேவைசெய்து இருப்பது அவசியமாகும்.அவர்களின் சொற்களில் பலவிதமான அர்த்தம் இருப்பதற்கு வாய்ப்பு இருந்தால், முன்னுரிமை கொடுக்கும் அர்த்தத்தை குறிப்பாக்கவேண்டும்.மேலும் சில சமயங்களில் ஏதேனும் முஜ்தஹிதின் சொல் வெளிப்படையில் பொதுவாக இருக்கும்.எனினும்,அதில் குறிப்பான அர்த்தம் நாடப்படும்.இதனை அந்த மத்ஹபின் திறமையான உலமாக்கள் புரிந்துகொள்வார்கள்.இதனால் அந்த மத்ஹபின் அறிஞர்கள்,அந்த நிலைகளை தெளிவுப்படுத்தி,அதனின் சட்டங்களின் காரணிகளையும் விளக்கியிருப்பார்கள்.ஒரு முஜ்தஹிதின் மத்ஹபில் இதுபோன்ற சேவை இல்லையெனில் அதன் மீது நம்பிக்கை வைப்பது சரியில்லை.இதுபோன்ற தன்மைகள் நமது காலத்தில் நான்கு மத்ஹபுகளை தவிர வேறு மத்ஹபில் பெறப்படவில்லை.இதிலிருந்து இமாமிய்யா,ஜைதிய்யா மட்டும் விதிவிலக்காகும்.எனினும், அவர்கள் பித்வாதிகளாக (ரவாபிள்கள்) இருக்கிறார்கள்.இதனால் அவர்களின் சொல்லை ஏற்பது சரியில்லை.

2)நான்கு மத்ஹபுகளை பேணுவதின் மற்றொரு காரணம் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
اتبعوا السواد الأعظم 
"பெரும் கூட்டத்தைப் பின்பற்றுங்கள்" 

நான்கு மத்ஹபுகளை தவிர மற்ற மத்ஹபுகள் வழக்கொழிந்து விட்டது.எனவே இப்போது நான்கு மத்ஹபுகளை பின்பற்றுவதுதான் ஏற்றமானது.
இதனை விட்டு வெளியேறுவது பெரும் கூட்டத்திற்கு எதிரானது.

3)நான்கு மத்ஹபுகளுக்கு வெளியே உள்ள முஜ்தஹிதின் சொல்லின் பேரில் பத்வா அளிக்கும் அனுமதி கொடுத்தால், மனோஇச்சைகளை பின்பற்றும் தீய உலமாக்கள்,தங்களது ஏதேனும் பத்வாவை பிரபல்யமான முஜ்தஹிதின் பக்கம் இணைத்து விடுவார்.இந்த விஷயம் இன்னாரிடமிருந்து உறுதியாகி உள்ளது என கூறிவிடுவார்.எனவேதான் எந்த இமாமின் சொற்களை ஆராய்வதில்,விளக்குவதில் பெரும்பாலான உலமாக்கள் ஈடுபட்டு இருக்கிறார்களோ, அவரின் மத்ஹபை அமல்செய்வதில் இந்த அபாயம் இல்லை.ஆனால்,ஒரு முஜ்தஹிதின் விஷயத்தில் இது போன்ற சூழ்நிலை இல்லையெனில் அங்கு அபாயம் உண்டு.(அதாவது அந்த முஜ்தஹிதின் கருத்திற்கு தவறான விளக்கத்தை கூறி மனோ இச்சைக்கு ஏற்ப முடிவுகளை தீய உலமாக்கள் எடுத்துவிடுவார்கள்)
(ஆதாரம்:இக்துல் ஜீத் பக்கம்:31,33)

Sunday, August 29, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/தொடர்:14



கருத்து வேறுபாடுகளும் மத்ஹபுகளும் பகுதி:2 

கருத்துவேறுபாடுகள் என்பது மார்க்கத்தில் அனுதிக்கப்பட்ட ஒன்றாகும்.இதனால்தான் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏராளமான கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளது.ஒரே மஸ்அலாவில் மாறுப்பட்ட தீர்ப்புகள் தரப்பட்டுள்ளது.இதனால் ஒருவர் மற்றொருவரை விமர்சனம் செய்யவில்லை.கண்டிக்கவில்லை.
இதனை குறித்து விரிவாக இனி பார்ப்போம்! 

ஆதாரம்:1 

21:78 وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَـرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِ‌ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْن ‏ . 

இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம். 

21:79 فَفَهَّمْنٰهَا سُلَيْمٰنَ‌‌ۚ وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًا‌ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ‌ ؕ وَكُنَّا فٰعِلِيْنَ‏ 
 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம். இந்த வசனத்தின் பின்னணியில் வரும் நிகழ்வு

 وقال حماد بن سلمة ، عن علي بن زيد ، حدثنا خليفة ، عن ابن عباس قال : فحكم داود بالغنم لأصحاب الحرث ، فخرج الرعاء معهم الكلاب ، فقال لهم سليمان : كيف قضى بينكم؟ فأخبروه ، فقال : لو وليت أمركم لقضيت بغير هذا! فأخبر بذلك داود ، فدعاه فقال : كيف تقضي بينهم؟ قال أدفع الغنم إلى صاحب الحرث ، فيكون له أولادها وألبانها وسلاؤها ومنافعها ويبذر أصحاب الغنم لأهل الحرث مثل حرثهم ، فإذا بلغ الحرث الذي كان عليه أخذ أصحاب الحرث الحرث وردوا الغنم إلى أصحابها 
ஒருநாள் தாவூத் நபியின் அரசவைக்கு ஒரு புதிய பிரச்சனை வந்தது. ஒரு கூட்டத்தினர் விவசாயிகள். மற்றொரு கூட்டத்தினர் ஆடு மேய்ப்பவர்கள். விவசாயிகள் விவசாயம் செய்து பயிர் நன்றாக வளர்ந்திருந்தது. பார்க்கப் பசுமையாக இருந்தது. இந்நிலையில் இடையர்களின் ஆடுகள் அந்த விவசாய நிலங்களை மேய்ந்து அழித்துவிட்டன. இந்த முறைப்பாட்டுடன் இரு தரப்பாரும் தாவூத் நபியின் அரசவைக்கு வந்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பயிர்களாகும். இடையர்களின் வாழ்வாதாரம் ஆடுகளாகும். அவர்களின் வாழ்வாதாரத்தை இவர்களின் வாழ்வாதாரம் அழித்துள்ளது. எனவே “இடையர்கள் தங்களது ஆடுகளை விவசாயிகளிடம் கொடுத்துவிட வேண்டும். ஆடு விவசாயிகளுக்குரியது” என்று தீர்ப்புக் கூறினார்கள். இந்தத் தீர்ப்பு இடையர்களுக்கு பெரும் இடியாக இருந்தது. அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக அடிபட்டுவிட்டதை உணர்ந்தார்கள். இதனை அறிந்த சுலைமான் நபி, “இதற்கு நான் தீர்ப்புக் கூறி இருந்தால் எனது தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும்” என்று கூறினார்கள். தாவூத் நபி, “அந்தத் தீர்ப்பு என்ன? ” என்று கேட்டார்கள். சுலைமான் நபியின் தீர்ப்பு இப்படி இருந்தது. “இடையர்கள் தமது ஆடுகளை விவசாயிகளிடம் கொடுக்க வேண்டும், விவசாயிகள் தமது விளை நிலத்தை இடையர்களிடம் கொடுக்க வேண்டும். இடையர்கள் பயிரிட்டு அதைப் பாதுகாக்க வேண்டும். பயிர்களை ஆடுகள் உண்ணும் போது இருந்த அளவுக்கு வரும்வரை நீர் பாய்ச்சிப் பயிரைப் பாதுகாக்க வேண்டும். பின்னர் விவசாய நிலத்தை விவசாயிகளிடம் கையளிக்க வேண்டும். அதுவரை விவசாயிகள் இவர்களது ஆடுகளைப் பராமரிக்க வேண்டும். விவசாயிகளைப் பொறுத்தவரை இவர்கள் ஆடுகளைப் பராமரிப்பது என்பது மேலதிக வேலை. அத்துடன் அவர்களின் அறுவடையும் இவர்களின் ஆடுகள் உண்டதனால் தாமதமாகும். எனவே இதற்குப் பகரமாக தாம் பராமரிக்கும் காலப் பகுதியில் அந்த ஆடுகளிடமிருந்து அவர்கள் பால் கறந்து கொள்வார்கள். இடையர்கள் விவசாய நிலத்தை விவசாயிகளிடம் கையளித்த பின்னர் விவசாயிகள் ஆடுகளை இடையர்களிடம் கையளிக்க வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார். இந்தத் தீர்ப்பை இருதரப்பும் மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொண்டனர்.தாவூத் மற்றும் சுலைமான் இருவருக்கும் அல்லாஹ் ஞானத்தைக் கொடுத்ததாகவும் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை சுலைமானுக்கு அல்லாஹ்வே புரிய வைத்ததாகவும் கூறுகின்றான்.(ஆதாரம்:தப்ஸீர் இப்னு கஸீர்) இரு நபிமார்களின் தீர்ப்புகள் வெளிப்படையில் ஒன்று மற்றொன்றுக்கு எதிரானது.எனினும் இருவரை குறித்தும் அல்லாஹ் கூறுகிறான் وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًا‌ மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; எனவே இரு நபிமார்களும் ஒரே மஸ்அலாவில் மாறுப்பட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.இவ்வாறுதான் மத்ஹப் அறிஞர்களுக்கு மத்தியிலும் அவர்களின் ஆய்விற்கு ஏற்ப கருத்துவேறுபாடுகள் ஏற்படுகிறது. 
ஆதாரம்:2 

وقال كانت امرأتان معهما ابناهما جاء الذئب فذهب بابن إحداهما فقالت صاحبتها إنما ذهب بابنك وقالت الأخرى إنما ذهب بابنك فتحاكمتا إلى داود فقضى به للكبرى فخرجتا على سليمان بن داود فأخبرتاه فقال ائتوني بالسكين أشقه بينهما فقالت الصغرى لا تفعل يرحمك الله هو ابنها فقضى به للصغرى قال أبو هريرة والله إن سمعت بالسكين إلا يومئذ وما كنا نقول إلا المدية 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் - அலை - அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், 'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது' என்று கூற, மற்றொருத்தி அவளிடம், 'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது' என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான்(அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், 'என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்' என்று கூறினார்கள். அப்போது இளையவள், 'அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்' என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் 'அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது' என்று தீர்ப்பளித்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்று தான் (கத்திக்கு) 'சிக்கீன்' என்னும் சொல்லைச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) 'முத்யா என்னும் சொல்லைத் தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம்' என்று கூறுகிறார்கள்.(ஆதாரம்:புகாரி,ஹதீஸ் எண்:3427) இரு நபிமார்கள் ஒரே நிகழ்வில் அளித்த தீர்ப்பு ஒன்று மற்றொன்றுக்கு எதிராக உள்ளது என்பதை புரிய முடிகிறது.நபிமார்களின் ஆய்வில் கருத்துவேறுபாடு ஏற்படும் போது இமாம்களின் ஆய்வில் கருத்துவேறுபாடு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். 
ஆதாரம்:3 
قال سمعت أبا هريرة يقول قال رسول الله صلى الله عليه وسلم احتج آدم وموسى فقال موسى يا آدم أنت أبونا خيبتنا وأخرجتنا من الجنة فقال له آدم أنت موسى اصطفاك الله بكلامه وخط لك بيده أتلومني على أمر قدره الله علي قبل أن يخلقني بأربعين سنة فقال النبي صلى الله عليه وسلم فحج آدم موسى فحج آدم موسى 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து, உங்களுக்குள் தனது உயிரை ஊதி, தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து, உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச்செய்த ஆதம் நீங்கள்தானே! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்றல்களான) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்துவிட்டீர்கள்" என்று கூறினார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளை தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூசா நீர்தானே! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர்?" என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்" என்று பதிலளித்தார்கள். "அதில், ஆதம் தம் இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே, அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா?" என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், "ஆம்" என்றார்கள். "அவ்வாறாயின், என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எதை நான் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கிவிட்டானோ அதைச் செய்ததற்காக என்னை நீங்கள் பழிக்கிறீரா?" என்று ஆதம் (அலை) அவர்கள் கேட்டார்கள். (இந்தக் கேள்வியின் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்:5159) நபிமார்களுக்கு மத்தியில் கூட புரிதலில் இரண்டு கருத்துக்கள் உண்டு என்பதற்கு வலுவான ஆதாரமாக உள்ளது.

 ஆதாரம்:4
 أن النبي ﷺ استأذنه إنسان في التقبيل فأذن له، واستأذنه آخر فلم يأذن له، فإذا الذي أذن له شيخ كبير، والذي لم يؤذن له شاب 
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நோன்பாளி (மனைவியை) முத்தமிடுவது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி (ஸல்) அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) (நூல்: அபூதாவூத்) ஒரே மஸ்அலாவில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மாறுப்பட்ட தீர்ப்பை நிலைகளுக்கு ஏற்ப அளித்துள்ளார்கள் என்பதை புரிய முடிகிறது. 

ஆதாரம்:5
 عن أبي سعيد الخدري قال خرج رجلان في سفر فحضرت الصلاة وليس معهما ماء فتيمما صعيدا طيبا فصليا ثم وجدا الماء في الوقت فأعاد أحدهما الصلاة والوضوء ولم يعد الآخر ثم أتيا رسول الله صلى الله عليه وسلم فذكرا ذلك له فقال للذي لم يعد أصبت السنة وأجزأتك صلاتك وقال للذي توضأ وأعاد لك الأجر مرتين 
ஹள்ரத் அபூஸயீத் குத்ரி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இருதோழர்கள் பிரயாணம் சென்றிருந்தனர்.தொழகை நேரம் வந்தது.உளுசெய்வதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை.இருவரும் தயம்மம் செய்து தொழுதனர்.பிறகு தொழுகை நேரம் இருந்தபோது தண்ணீர் கிடைத்துவிட்டது.ஒருவர் உளுசெய்து,திரும்பவும் தொழுதார்.மற்றொருவர், திரும்பவும் தொழவில்லை.பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து போது நடந்ததை கூறினர்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திரும்ப தொழாத நபரிடத்தில் கூறினார்கள் أصبت السنة و اجزءتك صلوتك சுன்னத்திற்கு ஏற்ப அமல் செய்துள்ளீர்.உனது தொழுகை கூடிவிட்டது. பிறகு உளு செய்து திரும்பவும் தொழுத நபரிடத்தில் கூறினார்கள்لك الاجر مرتين உனக்கு இருகூலிகள் உண்டு.(ஆதாரம்:அபூதாவூத் 1/55,நஸாயி 1,75) இருவரின் அமலும் வெவ்வேறானது.எனினும்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இருவரையும் பாராட்டியுள்ளார்கள்.ஒருவர் சுன்னத்திற்கு ஏற்ப அமல் செய்த போது,அதற்கு எதிரில் மற்றவரின் செயலுக்கு இருமடங்கு கூலி எவ்வாறு கிடைக்கும்? இதைப்போன்று தான்.ஒரு மத்ஹபில் ஒரு செயல் சுன்னத்தாக இருக்கலாம்.மற்றொரு மத்ஹபில் சுன்னத்தாக இல்லாமல் இருக்கலாம்.
 
ஆதாரம்:6
 قال: إني رأيت في الجد رأيا فإن رأيتم أن تتبعوه فقال عثمان إن نتبع رأيك فهو رشد وإن نتبع رأي الشيخ قبلك فنعم ذو الرأي 
ஹள்ரத் உயர் (ரளி) அவர்கள் காயமுற்ற சமயத்தில் கூறினார்கள்:பாட்டனாரின் சொத்தில் பாகப்பிரிவினை குறித்து சிந்தனை தோன்றியுள்ளத.அதனை நீர் ஏற்கலாம்.ஹள்ரத் உஸ்மான் (ரளி) அவர்கள் கூறினார்கள் فقال عثمان أن نتبع رايك فهو رشدو أن نتبع راي الشيخ قبلك فنعم ذو الرأي "உங்களின் கருத்தை ஏற்பது சரியானது.நேர்வழியாகும்.மேலும் நமக்கு முன்னால் சென்றுவிட்ட மூத்தவரின் (அபூபக்கர் ரளி)கருத்தை ஏற்பதும் சரியானது.அவர் சிறந்த ஆய்வாளராக இருந்தார்." (ஆதாரம்:முஸ்தத்ரக்,பாகம்:4,பக்கம்:340) ஒருவரின் ஆய்விலும்,மற்றொருவரின் ஆய்விலும் கருத்துவேறுபாடு ஏற்படலாம் என்பதை புரியமுடிகிறது.இவ்வாறுதான் ஒரே மஸ்அலாவில் ஓர் இமாமின் ஆய்வும்,மற்றொரு இமாமின் ஆய்வும் மாறுபடுகிறது. 

ஆதாரம்:7 
சில சமயங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப சிறந்தது,உயர்ந்தது விடப்படும். 
عن عائشة رضي الله عنها، قالت:" سالت النبي صلى الله عليه وسلم عن الجدر امن البيت؟ , هو قال: نعم، قلت: فما لهم لم يدخلوه في البيت؟ , قال: إن قومك قصرت بهم النفقة، قلت: فما شان بابه مرتفعا؟ , قال: فعل ذلك قومك ليدخلوا من شاءوا ويمنعوا من شاءوا، ولولا ان قومك حديث عهدهم بالجاهلية فاخاف ان تنكر قلوبهم ان ادخل الجدر في البيت، وان الصق بابه بالارض ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, 'இது கஅபாவில் சேர்ந்ததா?' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்!' என்றார்கள். பிறகு நான் 'எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை?' எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!' என்று பதிலளித்தார்கள். நான் 'கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். 'உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்' என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்' என்று பதிலளித்தார்கள்.(ஆதாரம்:புகாரி:1/215, முஸ்லிம்:1/429) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்பாக சமூகத்தின் குழப்பத்தில்,தடுமாற்றத்தில் அகப்படும் ஆபத்தும்,அபாயம் இருந்தது.இதனால் சிறந்த,உயர்ந்தசெயலை கைவிட்டுவிட்டார்கள்.இவ்வாறுதான் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இமாம்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது.

ஆதாரம்:8 
ஒவ்வொரு நபரின் சிந்தனை ஒன்றாக இருக்காது.ஒவ்வொரு நபரின் புரிதலும் மாறுபடும். 
عن ابن عباس - رضي الله عنهما - قال: كان عمر رضي الله عنه يدخلني مع أشياخ بدر، فكأن بعضهم وجد في نفسه، فقال: لم يدخل هذا معنا ولنا أبناء مثله؟! فقال عمر: إنه من حيث علمتم! فدعاني ذات يوم فأدخلني معهم، فما رأيت أنه دعاني يومئذ إلا ليريهم، قال: ما تقولون في قول الله تعالى: ﴿ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ﴾ [النصر: 11]؟ فقال بعضهم: أمرنا نحمد الله ونستغفره إذا نصرنا وفتح علينا. وسكت بعضهم فلم يقل شيئًا. فقال لي: أكذلك تقول يا ابن عباس؟ فقلت: لا. قال: فما تقول؟ قلت: هو أجل رسول الله صلى الله عليه وسلم أعلمه له، قال: ﴿ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ﴾ [النصر: 1]، وذلك علامة أجلك: ﴿ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا ﴾ [النصر: 33] فقال عمر - رضي الله عنه - ما أعلم منها إلا ما تقول இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் உமர்(ரலி) பத்ருப்போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, 'எங்களுக்கு இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இவரை மட்டும் எங்களுடன் ஏன் அமரச்செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால் தான்' என்றார்கள். பின்னர் ஒருநாள் (எங்களை) உமர்(ரலி) (அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியினை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன். (எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர்(ரலி), 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்..' எனும் (திருக்குர்ஆன் 110:1 வது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படுமபோது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்' என்று (அவ்வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தனர். அப்போது உமர்(ரலி) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகிறீர்களா?' எனக் கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். 'அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டதைக்) குறித்து (முன்) அறிவிப்புச் செய்ததாகும். 'இறைவனின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்'.. அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்கமாகும்)' என்று பதிலளித்தேன். அப்போது உமர்(ரலி), 'நீங்கள் கூறுகிற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகிறேன்' என்று கூறினார்கள். (ஆதாரம்:புகாரி:4970)
ஆதாரம்:9
 عن ابن عمر رضي الله عنهما قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال أخبروني بشجرة تشبه أو كالرجل المسلم لا يتحات ورقها ولا ولا ولا تؤتي أكلها كل حين قال ابن عمر فوقع في نفسي أنها النخلة ورأيت أبا بكر وعمر لا يتكلمان فكرهت أن أتكلم فلما لم يقولوا شيئا قال رسول الله صلى الله عليه وسلم هي النخلة فلما قمنا قلت لعمر يا أبتاه والله لقد كان وقع في نفسي أنها النخلة فقال ما منعك أن تكلم قال لم أركم تكلمون فكرهت أن أتكلم أو أقول شيئا قال عمر لأن تكون قلتها أحب إلي من كذا وكذا இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், 'ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்' அல்லது '(அவரைப்) போன்றிருக்கும்' ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. மேலும் இப்படி.. இப்படி.. இப்படியெல்லாம் இராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கும். (அத்தகைய ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்)' என்று கூறினார்கள். அப்போது என் மனத்தில் 'இது பேரிச்ச மரம்தான்' என்று தோன்றியது. அபூ பக்ர், உமர் (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை கண்டேன். எனவே, நான் பேசவிரும்பவில்லை. (அங்கிருந்த) மக்கள் ஒன்றும் சொல்லாமலிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தாமே) 'அது பேரிச்ச மரம்' என்று கூறினார்கள். நாங்கள் (புறப்பட) எழுந்தபோது நான் உமர்(ரலி) அவர்களிடம், 'என் அன்புத் தந்தையே! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனத்தில் அது பேரிச்ச மரம் தான் என்று தோன்றியது' என்றேன். அதற்கு அவர்கள், '(அப்துல்லாஹ்!) நீ ஏன் (மனத்தில் தோன்றியதைக்) கூறாமலிருந்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'நீங்கள் பேசாமலிருப்பதைப் பார்த்தேன். எனவே, நான் பேசவோ எதுவும் சொல்லவோ விரும்பவில்லை' என்று பதிலளித்தேன். உமர்(ரலி), 'நீ அதைச் சொல்லியிருந்தால் அதுவே இன்ன இன்ன(செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமான தாய் இருந்திருக்கும்' என்று கூறினார்கள்.(ஆதாரம்:புகாரி:4698)
ஆதாரம்:10
 عن أبي سعيد الخدري رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم جلس على المِنبر فقال: (إنّ عبداً خيّره الله بين أن يؤتيه من زهرة الدنيا ما شاء، وبين ما عنده، فاختار ما عنده. فبكى أبو بكر وقال: فديناك بآبائنا وأمّهاتنا، فعجبنا له، (ஹதீஸின் சுருக்கம்) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப்பட்டிருந்த போது) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) தெரிவித்தார்கள்: "அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு அலங்காரமான இவ்வுலக வாழ்வு, அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு)வாழ்வு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடமிருப்பதையே தேர்ந்தெடுத்து விட்டார்" என்று கூறினார்கள். இதைக் கேட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் மீண்டும் மீண்டும் அழுதார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி) "தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்" என்று சொன்னார்கள்.நாங்கள் அபூ பக்ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம்.(ஆதாரம்:புகாரி:3904) 
ஆதாரம்:11
لما نزل قوله تعالى: حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ) قَالَ عَدِىُّ بْنُ حَاتِمٍ يَا رَسُولَ اللَّهِ إِنِّى أَجْعَلُ تَحْتَ وِسَادَتِى عِقَالَيْنِ عِقَالاً أَبْيَضَ وَعِقَالاً أَسْوَدَ أَعْرِفُ اللَّيْلَ مِنَ النَّهَارِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم: إِنَّ وِسَادَتَكَ لَعَرِيضٌ إِنَّمَا هُوَ سَوَادُ اللَّيْلِ وَبَيَاضُ النَّهَارِ அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார். 'கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை' என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!' என்று பதிலளித்தார்கள்.(ஆதாரம்:புகாரி,1916) வசனத்தின் அர்த்தத்தைக் குறித்து,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லை குறித்து, ஸஹாபாக்களின் புரிதலில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது இதுபோன்று தான் இமாம்களுக்கு மத்தியிலும் வசனத்தின் பொருள்களை குறிப்பாக்குவதில்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லின் நோக்கத்தை புரிவதில், கருத்துவேறுபாடு ஏற்படும் போது மஸாயில்களிலும் கருத்துவேறுபாடு ஏற்படுவது இயல்பானதுதான்.

Thursday, August 12, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/


மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர்:13

 கருத்து வேறுபாடுகளும்,

மத்ஹபுகளும் பகுதி:1

தக்லீதின் காரணமாக மத்ஹபுகள் உருவானது.மத்ஹபுகள் என்பது கருத்து வேறுபாட்டின் பின்னணியை கொண்டது.மத்ஹப் மறுப்பாளர்கள் தமிழகத்தில் இயக்கத்தை ஆரம்பித்த போது மத்ஹபின் காரணமாக தான் கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது.குர்ஆன்,ஹதீஸ் ஒன்றாக இருக்கும்போது நான்கு மத்ஹபுகள் எப்படி உருவானது? என்பதாக கண்மூடித்தனமாக விமர்சித்தனர்.வரம்பு மீறி எள்ளிநகையாடினர்.ஆனால்,இன்று மத்ஹப் மறுப்பாளர்களுக்கு மத்தியில் ஏராளமான கருத்துவேறுபாடுகள், கடுமையான விமர்சனங்கள் உருவாகிவிட்டது.நான்கு மத்ஹபுகளை களையெடுக்க களத்தில் இறங்கியவர்கள் இன்று பல்வேறு பிரிவுகளாக சிதறிக் கிடக்கின்றனர்.

ஹதீஸ்களில் வெளிப்படையான பொருளை ஏன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எடுப்பதில்லை? அவ்வாறு எடுத்தால் இமாம்களின் பிக்ஹ்,தக்லீதின் தேவை ஏற்படாது.ஓர் இமாம் இவ்வாறு கூறுகிறார்.மற்றொரு இமாம் அதற்கு முரணாக கூறுகிறார்.அதிலும் அர்த்தத்தை விளங்குவதில் குறிப்பாக நான்கு இமாம்களுக்கு மத்தியில் கூட நிலைப்பாடுகள் வேறு வேறாக உள்ளது.சில சமயங்களில் ஓர் இமாம் ஒன்றை ஹலால் என்பதாக கூறுகிறார்.மற்றொரு இமாம் ஹராம் என்பதாக கூறுகிறார் என்பதாக இயல்பாக கேள்வி எழலாம்.இதற்குரிய பதிலை இனி பார்ப்போம்!

முதலில் முன்னோட்டமாக சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.எல்லா சந்தர்ப்பங்களிலும் முரண்படுவது பெருமானாரின் வார்த்தைகளுக்கு மாறுபாடு என்பதாக கருதப்படுமா? அல்லது வார்த்தைகளின் பொருளில் ஏற்படும் முரண்பாடு என்பதாக கருதப்படுமா?ஒருவர் பெருமானாரின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு முரண்படுகிறார்.எனினும்,அதனுள் பொதிந்துள்ள கருத்துக்களை ஆய்வு செய்து பின்பற்றுகிறார்.இது முரண்பாடா? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தது அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஹராம் என்பதாக கருதப்படுமா? அல்லது சிறந்ததற்கு மாற்றமானது என கருதப்படுமா? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அனைத்து கட்டளைகளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பர்ளா?அல்லது விரும்பத்தக்கதா? அறிவுரையா? இது குறித்து ஹதீஸ்களின் ஒளியில் பார்த்தால் கருத்துவேறுபாட்டின் பின்னணியும்,மத்ஹபுகளின் நியாயமும் புரிந்து கொள்ளமுடியும்.

ஆதாரம்:1

عن ابن عمر رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم يوم الأحزاب لا يصلين أحد العصر إلا في بني قريظة فأدرك بعضهم العصر في الطريق فقال بعضهم لا نصلي حتى نأتيها وقال بعضهم بل نصلي لم يرد منا ذلك فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فلم يعنف واحدا منهم

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி(ஸல்) அவர்கள், 'பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டாம்' என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், 'பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்' என்று கூறினர். வேறு சிலர், '(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; ('வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்' என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.(ஆதாரம்:புகாரி,பாகம்:2,பக்கம்:591)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் لا يصلين أحد என்ற வாசகத்தை நன்றாக ஊன்றி கவனியுங்கள்.இதில் உள்ள நூன்  (ن) ஷத்து பெற்று வந்துள்ளது.இதனை அரபி இலக்கணத்தில் நுனே ஸகீலா (نون ثقيلة ) என்று சொல்லப்படும்.இதனின் பொருள் நிச்சயமாக,திண்ணமாக என்ற பொருள் உள்ளது.மேலும் அஹத் (ஒருவரும்) என்ற வார்த்தையானது அனைத்து நபரையும் உள்ளடக்கும் பொருள் உள்ளது.எனவே, ஹதீஸின் நேரடியான அர்த்தம் ஒருவரும் அஸர் தொழுகையை பனூகுரைளாவில் தவிர நிச்சயமாக தொழக்கூடாது.ஆனால் ஸஹாபாக்களில் ஒரு சாரார் பெருமானாரின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு மாற்றம் செய்துள்ளார்கள்.எனினும்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கவில்லை.ஸஹாபாக்களில் ஒரு சாரார் புரிந்த அர்த்தத்தை வெளிப்படையில் நம்மால் சிறிதளவு கூட புரியமுடியவில்லை.ஆனால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டையும் அங்கீகரித்துள்ளார்கள்.

وفي فتح الباري للحافظ ابن حجر: قال السهيلي وغيره: في هذا الحديث من الفقه أنه لا يعاب على من أخذ بظاهر حديث أو آية ولا على من استنبط من النص معنى يخصصه

ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இதனின் விளக்கத்தை எழுதுகிறார்கள்:இமாம் ஸுஹைலி ரஹ்,மற்றவர்களும் கூறுகிறார்கள்;இந்த ஹதீஸில் கிடைக்கும் விளக்கமானது,குர்ஆன் அல்லது ஹதீஸில் வெளிப்படையான பொருளின் பேரில் மக்கள் அமல்செய்தாலும் எந்த ஒரு குற்றமும் இல்லை.மேலும் தெளிவான விஷயத்திலிருந்து ஆய்வுசெய்து குறிப்பான விஷயத்தை புரிவதும் தவறில்லை.(ஆதாரம்:பத்ஹுல் பாரி16/67)

ஆதாரம்:2

عن أنس أن رجلا كان يتهم بأم ولد رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم لعلي اذهب فاضرب عنقه فأتاه علي فإذا هو في ركي يتبرد فيها فقال له علي اخرج فناوله يده فأخرجه فإذا هو مجبوب ليس له ذكر فكف علي عنه ثم أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إنه لمجبوب ما له ذكر

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணுடன் இணைத்து ஒரு மனிதர் அவதூறு சொல்லப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நீங்கள் சென்று அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே அலீ (ரலி) அவர்கள் சென்ற போது, அவர் (சுற்றுச்சுவர் இல்லாத) ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் அலீ (ரலி) அவர்கள், "மேலே வா" என்று தமது கையைக் கொடுத்து அவரை வெளியேற்றினார்கள்.
அப்போது அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவராக, இன உறுப்பே அற்றவராக இருந்தார். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் அவரை(க் கொல்லாமல்) விட்டுவிட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவர்; இன உறுப்பே அற்றவர் ஆவார்" என்று சொன்னார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் பாகம்:2,பக்கம்:368)


ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் அந்நபரை கொல்வதற்குரிய காரணத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை நிறைவேற்றாமல் திரும்பி வந்து,நடந்ததை கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் வருகிறது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: الشاهد يرى مايرى الغائب 
மறைவாக இருப்பவர் பார்க்காததை முன்னால் இருப்பவர் பார்த்துள்ளார்.(ஆதாரம்:அல்பிதாயா வந்நிஹாயா 5/304)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தெளிவான கட்டளை.அதுவும் குற்றவியல் சட்டம்.அதில் எந்தவித இரக்கம்,கருணைக்கு இடமில்லை என்பது அல்லாஹ்வின் உத்தரவு.எனினும்,அலி (ரளி) அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை.மேலும் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், கண்டிப்பதற்கு பதிலாக அவரின் கருத்தை ஆமோதித்தார்கள்.அலி (ரளி) அவர்கள் அண்ணலாரின் வெளிப்படையான கட்டளைக்கு மாறு செய்ததால் ஹதீஸை விட்டவர் அல்லது மாறு செய்தவர் என கூறலாமா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஆதாரம்:3

عن أبي عبد الرحمن السلمي قال خطب علي فقال يا أيها الناس أقيموا الحدود على أرقائكم من أحصن منهم ومن لم يحصن وإن أمة لرسول الله صلى الله عليه وسلم زنت فأمرني أن أجلدها فأتيتها فإذا هي حديثة عهد بنفاس فخشيت إن أنا جلدتها أن أقتلها أو قال تموت فأتيت رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال أحسنت
அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
(ஒரு நாள்) அலீ (ரலி) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! உங்கள் அடிமைகள்மீதும் குற்றவியல் தண்டனையை நிறைவேற்றுங்கள். அவர்கள் திருமணமானவர்களாக இருக்கட்டும்; திருமணமாகாதவர்களாக இருக்கட்டும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப்பெண் ஒருவர் விபச்சாரம் செய்து விட்டார். எனவே, அவருக்குச் சாட்டையடிகள் வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
ஆனால், அவருக்கு அப்போதுதான் மகப்பேறு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினால் (எங்கே) அவரை நான் கொன்றுவிடுவேனோ என அஞ்சினேன். (எனவே, தண்டனையைத் தள்ளிவைத்தேன்.) இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "நீங்கள் செய்தது சரிதான்" என்று அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:முஸ்லிம் பாகம்:2,பக்கம்:71)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வெளிப்படையான கட்டளையில் குறிப்பான விஷயமோ,நிபந்தனையோ இல்லை.எனினும்,ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் புகஹாக்களில் (மார்க்கவிற்பன்னர்) உள்ளவர்.தனது ஆய்வு, விளக்கத்தின் பேரில் புரிந்தார்.அதாவது பெருமானாரின் கட்டளையானது குறிப்பானது,நிபந்தனையின் பேரில் உள்ளது.ஏனெனில் அடிமைப்பெண் மரணித்தது விடக்கூடாது.குழந்தை பிறந்த சமயத்தில் தண்டனை அளிப்பது, அவளின் முடிவு மரணமாக அமைந்துவிடும்.எனவே தண்டனை அளிக்காமல் திரும்பி வந்தார்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அலி (ரளி) கூறியதைக் கேட்டு குற்றவாளி,பாவி என திட்டாமல், அவரின் செயலை நல்லது என்பதாக பாராட்டியுள்ளார்.இதற்கு மாற்றமாக அந்த சமயத்தில் அலி (ரளி)அவர்கள் அந்தப் பெண்ணை சாட்டையால் அடித்து வெளிப்படையான கட்டளையை நிறைவேற்றியிருந்தால்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்திருக்க வாய்ப்புண்டு. இஜ்திஹாத் (ஆய்வு),கியாஸ், (ஒப்பீடு) கிளைசட்டங்களில் சில ஹதீஸ்களின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு மாற்றமாக இருப்பது இந்த ஒரு நிகழ்வின் மூலம் தீர்வு கிடைத்துவிடும்.எனினும்,ஆய்வாளரிடத்தில் ஆய்வுத்திறன்,ஞானம் இருக்கவேண்டும் என்பது மிக அவசியமான ஒன்றாகும்.

ஆதாரம்:4

(ஹதீஸில் சுருக்கமான பகுதி)
عن البراء بن عازب رضي الله عنه قال اعتمر النبي صلى الله عليه وسلم في ذي القعدة فأبى أهل مكة أن يدعوه يدخل مكة حتى قاضاهم على أن يقيم بها ثلاثة أيام فلما كتبوا الكتاب كتبوا هذا ما قاضى عليه محمد رسول الله فقالوا لا نقر بها فلو نعلم أنك رسول الله ما منعناك لكن أنت محمد بن عبد الله قال أنا رسول الله وأنا محمد بن عبد الله ثم قال لعلي امح رسول الله قال لا والله لا أمحوك أبدا
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று எழுதாதீர்கள்' (என்று சொல்லிவிட்டு) முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி), 'நீர் அல்லாஹ்வின் தூதரக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்' என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், 'அதை அழித்து விடுங்கள்' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'நான் அதை (ஒருபோதும்) அழிக்கப் போவதில்லை' என்று கூறிவிட்டார்கள். (ஆதாரம்:புகாரி,பாகம்:1,பக்கம்:372)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அலி (ரளி) அவர்களின் பெயரை சொல்லியே கட்டளையிடுகிறார்கள்."அலியே! இந்த வார்த்தையை அழித்துவிடு"எனினும், அவர்கள் அண்ணலாரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, சத்தியமிட்டு அழிக்கமாட்டேன் என்கிறார்கள்.நேர்மையுடன் கூறுங்கள்.அலி (ரளி) அவர்களின் மீது என்ன தீர்ப்பு கூறுவது?பத்வா கொடுக்கலாமா? கூடாதா? வெளிப்படையில் அவருக்கு எதிராக தீர்ப்பு அளிக்காமல் இருப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.ஏனெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அவரின் பெயரை கூறித் தான் உத்தரவிட்டுள்ளார்.எனினும்,அலி (ரளி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கட்டளையை நிறைவேற்றாமல் பிடிவாதமாக உறுதியுடன் இருந்துள்ளார்கள்.பிறகு அவர்களுக்கு எதிராக எப்படி தீர்ப்பளிக்காமல் இருப்பது? (அல்லாஹ் பாதுகாப்பானாக)
இந்நிகழ்வின் எதார்த்தம் என்னவெனில் குரைஷியரின் ஆதாரவாளர்களுக்கு மத்தியில் ஹள்ரத் அலி ரளி அவர்கள் வெளிப்படையில் மறுத்தது, ஒழுக்கம்,பெருமானாரின் மீது கொண்ட அளவற்ற, எல்லையற்ற நேசமுமாகும். இதனால் தான் பெருமானாரின் திருப்பெயரை அழிப்பதற்கு மனம் வரவில்லை.எனினும்,பெருமானாரின் வெளிப்படையான வார்த்தையை கவனியுங்கள்  நேசம்,பிரியம் என்பதற்கு சிறிய அடையாளம் கூட ஹதீஸில் இல்லை.ஒட்டுமொத்த சமுதாயம்,  அலி (ரளி) அவர்கள் ஹதீஸை மறுப்பவர் ஹதீஸிற்கு மாற்றம் செய்பவர் என்பதாக விமர்சிக்கவில்லை.

ஆதாரம்:5

عبد الله بن عمرو رضي الله عنهما بلغ النبي صلى الله عليه وسلم أني أسرد الصوم وأصلي الليل فإما أرسل إلي وإما لقيته فقال ألم أخبر أنك تصوم ولا تفطر وتصلي فصم وأفطر وقم ونم فإن لعينك عليك حظا وإن لنفسك وأهلك عليك حظا قال إني لأقوى لذلك قال فصم صيام داود عليه السلام قال وكيف قال كان يصوم يوما ويفطر يوما ولا يفر إذا لاقى قال من لي بهذه يا نبي الله قال عطاء لا أدري كيف ذكر صيام الأبد قال النبي صلى الله عليه وسلم لا صام من صام الأبد مرتين

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 
நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா? நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி(ஸல்) அவர்கள் 'நீர் விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதைவிட்டுவிடவும் செய்வீராக! (இரவில் எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உமக்கும் உம்முடைய குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன!' என்று கூறினார்கள். நான், 'இதற்கு எனக்கு சக்தி உள்ளது!' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் 'நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக!' என்றார்கள். 'அது எவ்வாறு?' என்று கேட்டேன். 'தாவூத் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள்விட்டுவிடுவார்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்!' என்றேன். 
'காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். என்றாலும் 'காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்!' என்று நபி(ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது!)' என்று அதா(ரஹ்) கூறினார்.(ஆதாரம்:புகாரி,பாகம்:1,பக்கம்:265)


இந்த தெளிவான ஆதாரப்பூர்வமான அறிவிப்பின் மூலம் தொடர்படியாக நோன்பு வைப்பது தடை என புரியமுடிகிறது.ஆனால்,உம்மத்தில் காலமெல்லாம் நோன்பு வைத்த பெரியோர்கள் இருந்துள்ளனர்.ஹள்ரத் இமாம் ஷுஅபா இப்னுல் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள்,
ஹள்ரத் இமாம் வகீஃ இப்னுல் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இவர்கள் அனைவரும் ஹதீஸ்களை வல்லுனர்கள்.இது போன்ற ஏராளமான உதாரணங்களை கூறமுடியும்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவரின் நோன்பாகாது என்பதாக பெருமானாரின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு மாற்றமாக ஹதீஸ்கலை வல்லுனர்கள் நடந்துள்ளார்கள்.இப்போது அனைவரையும் ஹதீஸிற்கு மாற்றம் செய்தார்கள் என்பதாக கூறலாமா? அல்லது பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கம், நமது உம்மத்தின் மீது எளியதையும், பிரியத்தையும் நாடி நோன்பு நோற்பதை தடுத்துள்ளார்கள் என்பதாக கூறலாமா?  இதில் எவை பொருத்தமாக இருக்கும்? 

ஆதாரம்:6

நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இயற்கை மரபுகளை விளக்கியவாறு கூறினார்கள்: نتف الابط அக்குல் முடியை பிடிங்குவது.(ஆதாரம்:புகாரி,பாகம்:2, பக்கம் 875)

அரபி மொழியில் نتف (நத்ஃப்) என்பதற்கு முடிகளை பிடிங்குதல் என்பது பொருளாகும்.ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் அக்குல் முடியை சிரைத்தல் (حلق الابط) என்பது வரவில்லை.எனினும், பெருமானாரின் உம்மத் இதன்படி அமல் செய்யவில்லை.அதுமட்டுமின்றி மத்ஹப் மறுப்பாளர்கள் கூட அமல் செய்யமுடியவில்லை.ஹதீஸின்படி அமல்செய்ய வேண்டும் என வாதிடுபவர்கள் முடியை பிடிங்குதலை அமல் செய்யவில்லை.இப்போது அனைவரும் ஹதீஸை புறக்கணித்து விட்டார்களா?

இமாம் நவவி (ரஹ்) அவர்கள்,இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள் இதனின் விளக்கவுரையில் எழுதியுள்ளார்கள்:

والله أعلم أما نتف الإبط فسنة بالاتفاق والأفضل فيه النتف لمن قوى عليه ويحصل أيضا بالحلق وبالنورة وحكى عن يونس ابن عبد الأعلى قال دخلت على الشافعي رحمه الله وعنده المزين يحلق إبطه فقال الشافعي علمت أن السنة النتف ولكن لا أقوى على الوجع

சக்தியுள்ளவர் அக்குல் முடியை பிடிங்குவது ஒன்றுபட்ட கருத்தின்படி சுன்னத்தும், சிறந்ததுமாகும்.சிரைப்பது,மழிப்பதால் நோக்கம் நிறைவேறிவிடும்.யூனுஸ் இப்னு அப்துல் அஃலா அவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது;நான் ஷாபி (ரஹ்) அவர்களிடத்தில் சென்றிருந்தேன்.அப்போது நாவிதன் அவரின் அக்குல்முடியை சவரக்கத்தியால் தூய்மை செய்து கொண்டிருந்தார்.ஹள்ரத் இமாம் ஷாபியி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;முடியை பிடிங்குவது தான் சுன்னத் என்பதை அறிகிறேன்.எனினும் சிரமத்தை பொறுத்துக்கொள்ள இயலவில்லை.(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம்,1/129, நைலுல்அவ்தார் 2/124)

பெருமானாரின் ஹதீஸில்,ஆற்றல் உள்ளவருக்கு அக்குல் முடியை பிடிங்குவது சுன்னத் என்பதாக குறிப்பான விஷயம் இல்லை.எனினும், ஹதீஸின் விளக்கவுரையாளர்கள் ஹதீஸின் அர்த்தத்தில் நிபந்தனையை இணைத்துள்ளனர்.எனவே முழு உம்மத்தும் ஹதீஸின் வெளிப்படையான வார்த்தையின் பேரில் அமல்செய்யவில்லை என்பதால் ஹதீஸை விட்டவர்களா?மறுத்தவர்களா? இந்த ஹதீஸின் உண்மையான விஷயத்தை ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஆய்வு செய்து கூறுகிறார்கள்; எவ்வாறு செய்தாலும் சரி முடியை அகற்றுவது தான் அசலான நோக்கமாகும்.

ஆதாரம்:7

فعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :  لا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمْ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ , فَإِنْ كَانَ لا بُدَّ فَاعِلا فَلْيَقُلْ : اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي , وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!" என்று கேட்கட்டும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:புகாரி,பாகம்:2,பக்கம்:847)

இந்த ஹதீஸில் சிரமம் (ضر) என்ற வார்த்தை பொதுவாக வந்துள்ளது.எனவே உலக காரியங்கள்,தீனுடைய காரியங்கள் அனைத்தும் உள்ளடங்கும்.மரணத்தை ஆசைப்படக்கூடாது என்பதாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.எனினும்,ஹதீஸ் விரிவுரையாளர்கள், சிரமம் என்பதை உலகாரியங்கள் என்பதாக குறிப்பாக கருதுகிறார்கள்.
ஹாபிள் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ஹள்ரத் அலி (ரளி) அவர்களின் காலத்தில் உள்நாட்டு விவகாரங்களில் சிக்கல் உருவானது, குழப்பங்கள் பெருகியது,கிரிமினல் குற்றங்கள் மலிந்தது,இவர் இப்படிக் கூறினார் இவ்வாறு கூறப்பட்டது (என நினைத்ததையெல்லாம் பரப்பினர்) இது போன்ற சூழ்நிலையினால் மரணத்தை அன்னார் ஆசைப்பட்டார்கள்.

இது போன்று இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் மரணத்தை ஆதரவு வைத்தார்கள் لما اشتد عليه الحال و لقي من مخالفيه الأهوال அன்னாருக்கு நெருக்கடி ஏற்பட்டு, எதிரிகளின் மூலம் சிரமங்கள் வந்தபோது மரணத்தை ஆசைப்பட்டார்கள்.

மரணத்தை ஆசைப்படுவதை தடுத்ததின் நோக்கம்
والمراد بالضر ههنا ما يخص العبد فى بدنه من مرض و نحوه لا فى دينه ........الخ 
(ஆதாரம்:அல்பிதாயாவந்நிஹாயா பாகம்:1,பக்கம்:219)

சிரமத்தினால் (மரணத்தை ஆசைப்பக்கூடாது) என்பது மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் துன்பம் நோய் போன்றவைகளால்தான்.
தீனின் சிரமம் நோக்கம் இல்லை.(நாம் வாழ்வதில் தீனில் பாதிப்பு ஏற்படுவதை பயந்து மரணத்தை ஆசைப்படுவது தவறில்லை)

  தீன்,துன்யா சிரமம் என்பதாக ஹதீஸ் பிரித்து கூறவில்லை.ஹதீஸில் சிரமம் என்பது பொதுவாக கருதப்படுமானால் அலி (ரளி) அவர்கள்,புகாரி (ரஹ்)  போன்றவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கு மாற்றமாக செயல்பட்ட தோற்றம் தென்படுகிறது.பிரித்துக்காட்டும் காரணம் ஹதீஸ்களில் தேடினால் ஒருபோதும் கிடைக்காது.எனினும் ஹதீஸ் விரிவுரையாளர்கள்,உம்மத்தின் புகஹாக்கள் எனும் மாரக்க விற்பன்னர்கள் இதனை ஆய்வின்படி புரிந்துள்ளனர்.

ஆதாரம்:8

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்களின் அறிவிப்பு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அவரிடத்தில் எத்தனை நாட்களில் நீர் குர்ஆனை ஓதிமுடிப்பீர்? எனக்கேட்டார்கள்.அவர் கூறினார்; ஒவ்வொரு இரவிலும் குர்ஆனை ஓதி முடிப்பேன்.பிறகு அண்ணலார் கூறினார்கள்;اقرا فى كل سبع ليال مرة வாரத்தில் ஒருமுறை குர்ஆனை ஓதிமுடிப்பீராக என்றார்கள்.(ஆதாரம்:புகாரி,2/755)

மற்றோர் அறிவிப்பில் வருகிறதுفاقرا فى سبع ولا تزد على ذلك வாரத்தில் ஒருமுறை குர்ஆனை ஓதிமுடிப்பீராக!அதனைவிட அதிகப்படுத்தாதீர்!(ஆதாரம்:புகாரி,2/756)

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் பல்வேறுபட்ட அறிவிப்புகளை குறித்து கூறுகிறார்கள்;
قال بعضهم فى ثلاث وفى خمس و أكثرهن على سبع 
மூன்று நாட்கள் என்பதாக சிலரும், ஐந்து நாட்கள் என்பதாக சிலரும், ஏழு நாட்கள் என்பதாக அதிகமானவர்கள் (ஒரு முறை குர்ஆனை ஓதி முடிப்பதாக) கூறுகிறார்கள்.(ஆதாரம்:புகாரி 2/756)

ஹள்ரத் உஸ்மான் (ரளி) அவர்கள்,ஹள்ரத் தமீமுத்தாரி (ரளி) அவர்கள், ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரளி) அவர்கள் ஓர் இரவில் குர்ஆனை முழுமையாக ஓதிமுடிப்பவர்களாக இருந்துள்ளார்கள்.

இமாம்களில் ஹள்ரத் ஷாபியி (ரஹ்) அவர்கள் ரமலானில் அறுபது முறை குர்ஆனை ஓதி முடிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளார்கள்.(ஆதாரம்:தத்கிரதுல் ஹுஃப்பாள் 1/329)

இமாம் வகீஃ இப்னுல் ஜர்ராஹ் (ரஹ்)அவர்கள் ஓர் இரவில் குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்.(ஆதாரம்:பக்தாத் 13/470)

யஹ்யா இப்னு ஸயீதுல் காத்தான் (ரஹ்) அவர்கள் இருபத்துநான்கு மணிநேரத்தில் ஒருதடவை குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்.
(ஆதாரம்:பக்தாத் 14/141)

இமாம்கள் ஹதீஸிற்கு மாறுசெய்தார்கள் என்பதாக கூறவேண்டும்.(அல்லாஹ் பாதுகாப்பானாக) ஹதீஸின் வெளிப்படையான கருத்தைப் பார்த்தால் அவ்வாறு தான் புரியமுடியும்.எனினும்,பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கம் உம்மத்தின் மீதுள்ள கருணை பரிவு இரக்கத்தின் வெளிப்பாடாகும்.மாறாக,ஹராம் என்பதன் பேரில் தடுக்கவில்லை என்பதாக அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.இவ்வாறு புரிவதுதான் பொருத்தமானதாகும்.

ஆதாரம்:9

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றை தடுத்திருப்பார்கள் அதனின் தரம் என்ன? என்பதில் விளக்கம் இருக்காது.அதாவது தடை என்பது ஹராமா? அல்லது சிறந்ததற்கு மாற்றமா? ஆனால், ஆய்வாளர்கள் தங்களது மார்க்க ஞானத்திற்கு ஏற்ப,விளக்கத்திற்கு ஏற்ப தீர்ப்பளிப்பார்கள்.

نهينا عن اتباع الجنا ئز ولم يعزم علينا 
உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.(ஆதாரம்:புகாரி,பாகம்:1,பக்கம்:70)

மற்றோர் அறிவிப்பில் வருகிறது.

كنا ننهى عن اتباع الجنائز ولم يعزم علينا

உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டுகொண்டிருந்தோம்.
ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.(ஆதாரம்:முஸ்லிம்,பாகம்:1, பக்கம்:304)

ஹள்ரத் இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இதனின் விரிவுரையில் எழுதுகிறார்கள்:
معناه نهانا رسول الله صلى الله عليه وسلم عن ذلك نهى كراهة تنزيه لا نهى عزيمة و تحريم 
(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம் பாகம்:1,பக்கம்:304)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,எங்களை ஜனாஸாவில் பின்தொடர்வதை தடுத்தார்கள் என்பதின் விளக்கமானது;மக்ரூஹ் தன்ஜீஹ் (அனுமதிக்கு நெருக்கமானது) என்பதாகும்.மக்ரூஹ் தஹ்ரீம் (ஹராமிற்கு நெருக்கமானது), வலியுறுத்தி தடுக்கவில்லை.

ஹள்ரத் உம்மு அதிய்யா (ரளி) அவர்கள் தனது ஆய்வுத்திறன்,மார்க்க அறிவின் மூலம் பெருமானாரின் தடையின் சட்டத்தை கூறியுள்ளார்கள்.இந்த தடை ஹராம் என்பதல்ல.மாறாக சிறந்ததற்கு மாற்றமானது.எனினும் ஹதீஸில் பொதுவாக தடைமட்டும் தான் வருகிறது.அதில் பிரித்தறியும் வித்தியாசமில்லை.

இறுதியாக,ஹதீஸ்களின் வெளிப்படையான வார்த்தையை மட்டும் அமல் செய்பவர்களின் ஓர் உதாரணத்தை மட்டும் கூறி இந்த தலைப்பை நிறைவுசெய்கிறோம்.

جابر، عن رسول الله صلى الله عليه وسلم؛ أنه نهى أن يبال في الماء الراكد
ஜாபிர் (ரளி) அவர்கள்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை அறிவிக்கிறார்கள்:தேங்கிய தண்ணீரில் சிறுநீர் கழிப்பதை தடுத்தார்கள்.(ஆதாரம்: முஸ்லிம்,பாகம்:1,பக்கம்:138)

அனைத்து ஆய்வுத்திறன் மிகுந்த புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்கள்,ஹதீஸ்கலை வல்லுனர்களிடத்தில் இந்த ஹதீஸின் கருத்தானது;தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்பட்டதைப் போன்று மலம் கழிப்பதும் தடுக்கப்பட்டதாகும்.தடைசெய்யப்பட்ட விலங்குகளின் சிறுநீரின் சட்டமும் அவ்வாறுதான்.சிறுநீர் வழிந்தோடி தண்ணீரில் சென்றுவிடும் எனில்,அருகில் நின்று சிறுநீர் கழிப்பது கூடாது.ஏதேனும் கோப்பையில் சிறுநீர் கழித்து நீரில் ஊற்றினாலும்  தடையாகும்.ஏனெனில் அனைத்து நிலைகளிலும் தண்ணீர் அசுத்தமாகிவிடும்.எனினும்,பிரபல்யானவர் தாவூத் இப்னு அலி ளாஹிரி போன்றவர்களிடத்தில் வெளிப்படையான வார்த்தையில் அகப்பட்டு இதற்கு எதிரான கண்ணோட்டத்தை எடுத்துள்ளனர்.

இமாம் நவவி ஷாபியி (ரஹ்) அவர்கள் எழுதிகிறார்கள்:

حكي عن داود بن علي الظاهري أن النهى مختص ببول الانسان بنفسه وأن الغائط ليس كالبول وكذا إذا بال في اناء ثم صبه في الماء أو بال بقرب الماء وهذا الذي ذهب إليه خلاف اجماع  العلماء وهو أقبح ما نقل عنه في الجمود على الظاهر والله أعلم

தாவூத் இப்னு ளாஹிரிடமிருந்து சொல்லப்படுகிறது;தடையானது மனிதனின் சிறுநீருடன் குறிப்பானது.மலம் சிறுநீரின் சட்டத்தில் நுழையாது.இதே போன்று ஒருவர் பாத்திரத்தில் சிறுநீர் பிடித்து ஊற்றினால்,தண்ணீருக்கு அருகில் சிறுநீர் கழித்து வழிந்தோடி தண்ணீரில் சென்றாலும் பிரச்சனையில்லை.தாவூத் ளாஹிரியின் இந்த வழிமுறை இஜ்மாவிற்கு (ஒன்றுப்பட்டது) எதிரானது.
(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம்,பாகம்:1, பக்கம்:138)

இதே போன்று தான் நாய்,கழுதை மற்றவைகளின் சிறுநீரும் தேங்கிய தண்ணீரை அசுத்தமாக்காது என்பதாகவும் கூறுகின்றனர்.
  வெளிப்படையான வார்த்தைகளை எடுத்து மிகப்பெரிய தவற்றை செய்துள்ளனர்.ஷரீஅத்தின் உயிரோட்டத்தை எவ்விதமாக தகர்த்துள்ளனர் என்பதை இதன்மூலம் புரியமுடிகிறது.