மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில் தொடர்:17
கேள்வி:ஸஹாபாக்கள் காலத்தில் தனிநபரை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படவில்லை.பிறகு எப்படி நமது காலத்தில் கடமையாகும்?
பதில்
1)ஸஹாபாக்கள்,தாபியீன்களின் காலத்தில் பரவலாக நேர்மை இருந்தது.பெருமானாரின் சகவாசம், நெருக்கமான காலம் எனும் பரக்கத்தால் ஷரீஅத்தின் சட்டங்களில் மனோஇச்சைக்கு வழியில்லை.இதனால்தான் அவர்களின் காலத்தில் இரண்டுவிதமான தக்லீதிற்கும் அனுமதியிருந்தது.பிறகு மனோஇச்சை வீறுகொண்டு எழும் அச்சத்தால் தக்லீத் ஷஹ்ஸி (தனிநபரை பின்பற்றுதல்) மட்டும் குறிப்பாக்கப்பட்டது.
2)ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் "அல்இன்ஸாஃப் ஃபி பயானி ஸபபில் இஹ்திலாஃப்" நூலில் நடுநிலையாக அழகிய பதிலை தருகிறார்கள்.
வாஜிப் (கடமை)இரண்டு விதமாக உள்ளது.ஒன்று,அசலில் வாஜிப் (واجب لذاته) என்று சொல்லப்படும்.மற்றொன்று,(வாஜிப் லிஙைரிஹி)வேறு காரணத்தால் வாஜிப்
முதலாவது பெருமானாரின் காலத்தில் கடமையாக இருந்தது.அதற்குப் பிறகு அவைகளில் சிறிதும் அதிகப்படுத்தப்படாது.ஆனால்,இரண் டாவது பெருமானாரின் காலத்தில் கடமையாக இல்லை.அவைகளில் அதிகப்படியாக சேர்க்க முடியும்.இதில் நோக்கமானது வாஜிபை அமல் செய்வதற்காகும்.உதாரணமாக, நபியின் காலத்தில் ஹதீஸ்களை பாதுகாப்பது கடமையாக இருந்தது.ஆனால் எழுதுவது வாஜிபாக இல்லை.ஏனெனில் ஹதீஸை பாதுகாக்கும் கடமை மனப்பாடத்தின் மூலமே நிறைவேறிவிடும்.எனினும்,மனனசக் தி குறைந்த போது ஹதீஸை பாதுகாப்பதற்கு எழுதி வைப்பதை தவிர வேறு வழியில்லை.எனவே,பிறகு எழுதிவைப்பது வாஜிபாகிவிட்டது.இதேபோன்றுதான் ஸஹாபாக்கள்,தாபியீன்களின் காலத்தில் முஜ்தஹித்களை பின்பற்றும் தக்லீத் முத்லக் (பொதுவான தக்லீத்)அனுமதி இருந்தது.எனினும்,இதன்பேரில் ஆபத்து ஏற்படுவதை அஞ்சி,நமது காலத்தில் தக்லீத் ஷஹ்ஸி மட்டும் கடமையாகிவிட்டது.
இதற்கு தெளிவான முன்னுதாரணம் உண்டு.ஹள்ரத் உஸ்மான் (ரளி) அவர்களின் காலம் வரை குர்ஆனின் பல்வேறு எழுத்துவடிவம் இருந்தது.இதனால் உஸ்மான் (ரளி) காலத்தில் கடுமையான குழப்பம் உருவானது.இதன் வாயிலை அடைப்பதற்கு முழு உம்மத்திற்கும் ஒரே எழுத்து வடிவை கட்டாயமாக்கினார்கள்.மற்ற எழுத்துமுறையில் எழுதுவதை கூடாது என உத்தரவிட்டார்கள்.இதன்பேரில் முழுஉம்மத்தும் ஒன்றுபட்டனர்.வாஜிபாக இல்லாதது ஏன் வாஜிபானது என ஒருவரும் குற்றச்சாட்டவில்லை? இது போன்று தான் பெரும் குழப்பத்தின் வாயிலை அடைப்பதற்கு தக்லீத் ஷஹ்ஸி மட்டும் கடமையாகிவிட்டது.(ஆதாரம்:தர்ஸே திர்மிதி, பக்கம்:121)
மற்றோரு உதாரணம் واجب بالذات (அசலில் வாஜிப்) இதற்கு ஆதாரம் தேவையாகும்.ஆனால் واجب بالغير (வேறு காரணத்தால் வாஜிப்) இதற்கு ஆதாரம் தேவையில்லை.தொழுகையில் பாத்திஹா சூரா ஓதுவது வாஜிப்.அதற்கு ஆதாரம் உண்டு.தொழுகையில் பாத்திஹா ஓதவில்லையானால் தொழுகை குறையுடையது.எனினும்,அதனை மனனம் செய்வதற்கு குறியீடுகள் (ஜேர்,ஜஃபர்,பேஷ்) தேவை.இவைகள் இல்லையெனில் பாத்திஹா சூரா எல்லோராலும் ஓதமுடியாது.எனவே குறியீடுகள் واجب بالغير (வேறுகாரணத்தால் கடமையானது) எனினும் இதற்கு ஆதாரம் இல்லை.இவ்வாறுதான் தக்லீத் ஷஹ்ஸி (தனிநபரை பின்பற்றுவது) கடமையாகிவிட்டது.
No comments:
Post a Comment