குற்றச்சாட்டுகளும் பதில்களும்/தொடர்:16
சந்தேகமும் நிவர்த்தியும்
தக்லீத் முத்லக் (பொதுவான தக்லீத்) தக்லீத் ஷஹ்ஷி (தனிநபரை பின்பற்றுதல்) இரண்டும் கூடும் எனும் போது நமது காலத்தில் ஏன் தக்லீத் முத்லக் கைவிடப்பட்டது?
மனோஇச்சையின் விளைவுகளை குறித்து குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰـكِنَّهٗۤ اَخْلَدَ اِلَى الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰٮهُ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْـكَلْبِ ۚ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَث ؕ ذٰ لِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
7:176. நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً ؕ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ
45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُيِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ
47:14. எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா?
وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا
இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.
وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْن
(இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَ عَنْۢ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَؕ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّصِيْبَهُمْ بِبَـعْضِ ذُنُوْبِهِمْؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ
5:49. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
ثُمَّ جَعَلْنٰكَ عَلٰى شَرِيْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ
45:18. இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ ؕ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌۢ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ
38:26. (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.
عَنْ أَبِي مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم "لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ"
நான் கொண்டு வந்த மார்க்கத்தை அவனது மனோஇச்சை பின்பற்றப்படாதவரை உங்களில் ஒருவரும் முஃமீனாக முடியாது என்பதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:அல் அர்பஊன் அந்நவவி)
قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ، وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ
5436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம்)
மனிதனை ஷைத்தான் வழிகெடுக்க ஏந்திய மிகப்பெரிய ஆயுதம் மனோஇச்சைகள் தான்.அதன்பேரில் ஈடுபடசெய்து,அவனது உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி அவனை அடிமையாக்கிவிடுகிறான்.எனவே இதன் மூலம் மனோஇச்சையானது பெரும் வழிகேடு என்பதை புரிய முடிகிறது.சில சமயங்களில் மனிதனை இறைநிராகரிப்பில் தள்ளிவிடும்.மனோஇச்சை இரண்டு நிலைகளில் உள்ளது.ஒன்று,மனிதன் பாவத்தை பாவமாக,தவறை தவறாக புரிந்துள்ளான்.எனினும்,மனோஇச் சையின் தாக்கத்தால் அகப்பட்டு பாவத்தில் ஈடுபடுகிறான்.இந்த செயலானது குற்றம் என்பதில் சந்தேகமில்லை.எனினும்,தவ்பாவின் மூலம் பாவமன்னிப்பு பெற்று வாழ்வை சீர்திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு.இதற்கு நேர்மாறாக மனோஇச்சையின் மற்றொரு நிலை,அடியான் அதற்கு அடிமையாகி,ஹலாலை ஹராமாக்கி,ஹராமை ஹலாலாக்கி,ஷரீஅத்தின் வரம்பை மீறிவிடுகிறான்.தீனை,மார்க்கத் தை விளையாட்டுப் பொருளாக ஆக்கிவிடுகிறான்.இந்த நிலையானது முதல்நிலையை விட ஆபத்தும், அபாயமும்,நாசமும் நிறைந்து இருக்கிறது.எந்த செயல் அடியானை இத்தகைய நிலைக்கு அழைத்துச் செல்வதற்கு பாதையை அமைத்து தருகிறதோ அதனை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.இதனால் தான் புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்கள்,மக்களிடத்தில் மார்க்க உணர்வு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.பேணிக்கை, இறையச்சம் விரைவாக சென்றுக்கொண்டுள்ளது.இந்த சமயத்தில் தக்லீத் முத்லகின் வாசலை திறந்தால் மக்கள் அறிந்துகொண்டு உணர்வற்று மனோஇச்சையில் அகப்பட்டுக்கொள்வார்கள் என எண்ணினார்கள்.
உதாரணமாக,குளிர்காலமாக உள்ளது.ஒருவன் உளு செய்கிறான்.இரத்தம் வருகிறது.இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறிந்துவிடும்.ஷாபியி (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறியாது.அப்போது ஷாபியி மத்ஹபை தக்லீத் செய்து மீண்டும் உளு செய்யாமல் இருப்பார்.சிறிதுநேரம் கழித்து பெண்ணை தொடுகிறான்.ஷாபியி (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறிந்துவிடும்.அபூஹனீபா (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறியாது.இப்போது அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மத்ஹபை தக்லீத் செய்து மீண்டும் உளு செய்யாமல் இருக்கிறான்.ஆக, இவ்வாறு ஒவ்வொரு மத்ஹபையும் எடுத்து அவனுக்கு எளிதாக,லேசாக இருப்பதை அமல் செய்து, சிரமம் உள்ளதை விட்டுவிட்டு செல்ல ஆரம்பித்தால் அவனிடத்தில் மனோஇச்சைதான் எஞ்சியிருக்கும்.மார்க்கம் அல்ல.வெளிப்படையான விஷயம் ஷரீஅத்தின் சட்டங்கள் அவனுக்கு விளையாட்டுப்பொருட்களாக மாறிவிடும்.இன்னும் மனோஇச்சையின் பேரில் எல்லை மீற ஆரம்பித்துவிடுவான்.ஏனெனில் பெரும்பாலும் முஜ்தஹி(ஆய்வாளர்)த்திடத்தில் சில நேரங்களில் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும்.அதனை எடுத்து அமல்செய்யும் போது நிச்சயம் அவனை மனோஇச்சை இறைநிராகரிப்பில் தள்ளிவிடும்.உதாரணமாக,ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அவர்களிடத்தில் இசைகூடும்.ஹள்ரத் காஸிம் இப்னு முஹம்மத் அவர்களிடத்தில் நிழலற்ற உருவப்படங்கள் கூடும்.இமாம் அஃமஷ் அவரிடத்தில் நோன்பு சூரிய உதயத்திலிருந்து ஆரம்பமாகும்.ஹள்ரத் அதா இப்னு அபீரபாஹ் அவரிடத்தில் ஈத்,ஜும்ஆ நாளில் வந்தால் அன்றைய நாள் ஜும்ஆ,லுஹர் இரண்டும் நீங்கிவிடும்.அஸர் வரை எந்த ஒரு தொழுகையும் கடமையில்லை.தாவூத் ளாஹிரி,இப்னு ஹஜ்ம் அவர்களிடத்தில் எந்தப் பெண்ணை நிக்காஹ் செய்ய விருப்பம் உள்ளதோ அந்தப் பெண்ணை நிர்வாணமாக பார்ப்பது கூடும்.இப்னு ஸஹ்னூன் மாலிகி அவர்களிடத்தில் மனைவியின் பின்துவாரத்தில் புணர்வது கூடும்.ஸயீத் இப்னு முஸய்யிப் அவரிடத்தில் முத்தலாக் கொடுத்த பெண்ணை மீண்டும் முதல் கணவன் திருமணம் செய்ய வேறொருவன் நிக்காஹ் செய்தால் போதுமானது.உடலுறவு கொள்வது நிபந்தனையில்லை.சுருக்கம் என்னவென்றால்,இவைகள் புரியவைப்பதற்கு சில உதாரணங்களாகும்.இல்லையெனில் இது போன்ற ஏராளமான கருத்துக்கள் பிக்ஹ்,ஹதீஸ் நூல்களில் உள்ளது.இப்படிப்பட்ட விஷயங்களை ஒன்றுதிரட்டி மார்க்கமாக அமைத்து தக்லீத் செய்தால் அதனின் தலைவன் ஷைத்தானும்,மனோஇச்சையாக தான் இருக்கமுடியும். இது போன்ற மனோஇச்சைகள் மார்க்கத்தை
விளையாட்டுப் பொருளாக்கிவிடும்.எனவே தான் முற்கால அறிஞர்கள் (ஸலஃபுகள்) கூறுகிறார்கள்:من أخذ بنوادر العلماء خرج من الاسلام அறிஞர்களின் தனிப்பட்ட மஸாயில்களை எடுத்து நடப்பவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்.
ஷைகுல் இஸ்லாம் இப்னுதைமியா (ரஹ்) அவர்கள் கூட (தக்லீத் ஷக்ஸி) தனிநபரை பின்பற்றுவதை வாஜிப் என்பதாக கூறவில்லை.இருப்பினும்,தனது மனோஇச்சைக்கு வழிப்பட்டு ஒரு சமயம் ஒரு மத்ஹபை,மற்றொரு சமயம் வேறொரு மத்ஹபை ஏற்பது ஒன்றுப்பட்ட உம்மத்தின் பேரில் அனுமதியில்லை என்கிறார்.
فى وقت يقلدون من يفسد النكاح و فى وقت يقلدون من يصححه بحسب الغرض و الهوى و مثل هذا إلا يجوز باتفاق الائمة
சில சமயங்களில் நிகாஹ் கூடாது எனும் இமாமை,மக்கள் பின்பற்றுகிறார்கள்.சிலசமயங்களி ல் நிகாஹ் கூடும் எனும் இமாமை பின்பற்றுகிறார்கள்.அதனை சரியானது என்பவர் முழுக்க சுயநலம்,மனோ இச்சையில் தான் உள்ளார்.இது போன்று செயல்படுவது ஒன்றுபட்ட அறிஞர்களின் கருத்தின்படி கூடாது.(ஆதாரம்:ஃபதாவா இப்னு தைமிய்யா பாகம்:2,பக்கம்:240)
எனவேதான்,தக்லீத் முத்லக்கை (பொதுவாக பின்பற்றுவதை) அனுமதி அளித்தால் இதுபோன்ற மனோஇச்சையை பின்பற்றும் அபாயங்கள் நிறைந்துள்ளது.இதனால்தான் உலமாக்கள் நான்காம் நூற்றாண்டில் தக்லீத் ஷஹ்ஸியை (தனிநபரை பின்பற்றுவதை) கட்டாயமாக்கினார்கள்.
No comments:
Post a Comment