நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ ஓர் ஆய்வு பகுதி- 1தொடர்:1
حدثنا مسدد حدثنا هشيم عن حصين عن معاذبن زهرة كان النبي صلى الله عليه وسلم إذا أفطر قال اللهم لك صمت و على رزقك أفطرت
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு திறக்கும் அல்லாஹும்ம லக சும்து ....... என்ற துஆவை ஓதிவந்தார்கள்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு திறக்கும் அல்லாஹும்ம லக சும்து ....... என்ற துஆவை ஓதிவந்தார்கள்
(ஆதாரம்:அஜ்ஜுஹ்த்,வர்ரகாயிக்1/495,கிதாபுத்துஆ 1/237,அஸ்ஸுனன் அபூதாவூத் 3/148,அல்முஸன்னப் இப்னு அபூஷைபா 6/329,அஸ்ஸுனுல் குப்ரா 8/534,ஷர்ஹுஸ்ஸுன்னா 6/265)
மேற்சொன்ன அறிவிப்புகளின் அடிப்படையான அறிவிப்பாளர் ஹள்ரத் முஆத் இப்னு ஜஹ்ரா தாபியி.இந்த அறிவிப்பிற்கு துணைசான்றாக பல அறிவிப்புகள் வந்துள்ளது.அவைகள் குறித்து மிகவும் விமர்சனம் உள்ளது.எனினும் ஒரு முர்ஸலான அறிவிப்பு ஆதாரப்பூர்வமானது.
قال أخبرنا الفضل بن دكين قال حدثنا شريك عن حصين عن هلال بن يساف عن الربيع بن خثيم أنه كان يقول اللهم لك صمت و على رزقك أفطرت
இமாம் ரபீஃ இப்னு குஸைம் (ரஹ்) அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தை அடைந்தவர்.எனினும், அண்ணலாரை சந்திக்கவில்லை.இவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களின் மூத்த மாணவர்களில் உள்ளவர்.
இமாம் ஷகீக் இப்னு ஸலமா அபூவாயில் (ரஹ்)அவர்களும் (ஹிஜ்ரி 80) பெருமானாரின் காலத்தை அடைந்தவர்தான்.எனினும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இமாம் ஷகீக் இப்னு ஸலமா அபூவாயில் (ரஹ்)அவர்களும் (ஹிஜ்ரி 80) பெருமானாரின் காலத்தை அடைந்தவர்தான்.எனினும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்னு மயீன் அவர்கள் ஷகீக் இப்னு ஸலமா அபூவாயில் கூறியதை,குறித்து கூறுகிறார்:انت اكبر أو الربيع بن خثيم قال أنا اكبر سنا و هو أكبر منى عقلا நீர் பெரியவரா?அல்லது ரபீஃஇப்னு குஸைமா? நான் அவரை விட வயதில் மூத்தவன்.என்னை விட அவர் அறிவில் பெரியவர்.
இமாம் தஹபி (ரஹ்) அவர்கள்,
ரபீஃ இப்னு குஸைம் (ரஹ்) அவர்கள் குறித்து கூறுகிறார்:இமாம்,முன்மாதிரி,
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தை அடையவில்லை.
அன்னாரிடமிருந்து முர்ஸலாக அறிவித்துள்ளார்.ஷஅபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:அவரை விட மார்க்க ஞானம் அதிகமான பெற்றவரை,சகிப்புத்தன்மை மிகுந்தவரை,அப்துல்லாஹ்வின் தோழர்களில் அவரை விட உலகத்தை விட்டு மிக ஒதுங்கிய வரை பார்க்கவில்லை.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளி அவர்கள் கூறுகிறார்கள்:
يا أبا يزيد لو راك رسول الله صلى الله عليه وسلم لاحبك و ما رايتك الا ذكرت المخبتين
அபூயஜீத் உம்மை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்திருந்தால் நேசம் கொண்டிருப்பார்.பணிவு மிக்கவர்களை நான் நினைவுகூர்ந்தவனாக
தவிர உம்மை பார்க்கவில்லை.
(ஆதாரம்:ஸியரு இஃலாமின் நுபலா)
இவ்வளவு பெரிய தாபியி இந்த துஆவை ஓதியுள்ளார்.இவர் கூஃபாவை சேர்ந்தவர்.கூபாவாசிகள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பால் இணைப்பதில் கூடுதல் குறைவு ஏற்படாமல் இருப்பதற்காக
ஹாபிள் இப்னுல் முலக்கின் (ரஹ்) அவர்கள் "துஹ்பதுல் முஹ்தாஜ் இலா அதில்லதில் மின்ஹாஜ் லின்நவவி" (2/96) எழுதியுள்ளார்:رواه أبو داود و لم يضعفه و هو مرسل அபூதாவூத் (ரஹ்) அவர்கள் முர்ஸலான ஹதீஸை பலகீனமாக்கவில்லை.
இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் ஒரு ஹதீஸை பதிவு செய்து அதனை குறித்து விமர்சிக்கவில்லையெனில் அன்னாரிடத்தில் அது ஏற்கத்தக்கது இதனையும் இப்னுல் முலக்கின் எடுத்து கூறியுள்ளார்.மேலும் இப்னுல் முலக்கின் அவர்களே இந்த அறிவிப்பாளர் தொடரை ஹஸனான முர்ஸல் என்கிறார்.(ஆதாரம்:பத்ருல் முனீர் தஹ்ரீஜு ஷர்ஹில் கபீர் 5/558)
இதுபோன்று ஷைகுல் இஸ்லாம் ஜக்கரிய்யா அன்சாரி (ரஹ்) அவர்கள் "பத்ஹுல் வஹ்ஹாப் ஷர்ஹு மின்ஹாஜுத்துல்லாப்" 1/122 நூலில் முர்ஸலான இந்த தொடரை ஏற்கத்தக்கது என்கிறார்.
ஹாபிள் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் "ஹிதாயதுர்ரிவாயா இலா தஹ்ரீஜ் அஹாதீஸில் மஸாபீஹ் வல் மிஷ்காத்" (2/323) நூலில் ஸுனன் அபூதாவூதின் ஆதாரத்தை குறிப்பிட்டு விட்டு விமர்சிக்காமல் அமைதியை கடைப்பிடித்துள்ளார்.இதன்மூலம் அவரிடத்திலும் ஏற்கத்தகுந்தது என்பதற்கு அடையாளமாகும்.
நூலின் முன்னுரையில்(1/57) குறிப்பிட்டுள்ளார்:
منهج الحكم على الأحاديث فالتزمت فى هذا التخريج أن أبين حال كل حديث من الفصل الثاني من كونه صحيحا أو ضعيفا أو منكرا أو موضوعا و ما سكت عن بيانه فهو حسن
منهج الحكم على الأحاديث فالتزمت فى هذا التخريج أن أبين حال كل حديث من الفصل الثاني من كونه صحيحا أو ضعيفا أو منكرا أو موضوعا و ما سكت عن بيانه فهو حسن
(சுருக்கமான விஷயம்) ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் குறித்த (விமர்சிக்காமல்) அமைதியாக இருப்பது அது ஹஸன் என்பதாகும்.
இப்னு ஹஜர் ஹைதமி ரஹ் அவர்கள் "துஹ்பதுல் முஹ்தாஜ் ஃபிஷர்ஹில் மின்ஹாஜ்ஜில்" (3/425) குறிப்பிட்டுள்ளார்:ولا يضر ارساله لانه على الفضائل அமல்களின் சிறப்புகளில் ஹதீஸ் முர்ஸலாக இருப்பதில் பிரச்சனையில்லை.
முர்ஸலான ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதற்கு அறிஞர்களின் சான்றுகள்:
1)۱۔ ’’(وَاحْتَجَّ) الْإِمَامُ (مَالِكٌ) هُوَ ابْنُ أَنَسٍ فِي الْمَشْهُورِ عَنْهُ وَ (كَذَا) الْإِمَامُ أَبُو حَنِيفَةَ (النُّعْمَانُ) بْنُ ثَابِتٍ (وَتَابِعُوهُمَا) الْمُقَلِّدُونَ لَهُمَا، وَالْمُرَادُ الْجُمْهُورُ مِنَ الطَّائِفَتَيْنِ، بَلْ وَجَمَاعَةٌ مِنَ الْمُحَدِّثِينَ، وَالْإِمَامُ أَحْمَدُ فِي رِوَايَةٍ حَكَاهَا النَّوَوِيُّ وَابْنُ الْقَيِّمِ وَابْنُ كَثِيرٍ وَغَيْرُهُمْ۔ وَحَكَاهُ النَّوَوِيُّ فِي شَرْحِ الْمُهَذَّبِ عَنْ كَثِيرِينَ مِنَ الْفُقَهَاءِ أَوْ أَكْثَرِهِمْ‘‘۔’’
மாலிக் (ரஹ்) அவர்களும்,இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களும் அதனை ஆதாரம் எடுத்துள்ளனர்.(இதில்)முகல்லித்களும் இருவரையும் பின்தொடர்ந்துள்ளனர்.இதன் விளக்கம் என்னவெனில் இரு சாராரின் பெரும்பான்மையானவர்கள் மேலும் ஹதீஸ் கலை வல்லுனர்களின் ஒரு ஜமாஅத்தினரும்,ஒரு அறிவிப்பின்படி இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களும் இதனை ஆதாரமாக கருதுகின்றனர்.இதனை இமாம் நவவி (ரஹ்) அவர்கள், இமாம்
இப்னுல் கய்யும் (ரஹ்) அவர்கள்,இப்னு கஸீர் (ரஹ்) போன்றவர்கள் எடுத்துச் சொல்லியுள்ளனர்.மேலும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ஷர்ஹுல் முஹத்திபில் அதிகமான புகஹாக்களிடமிருந்து இதனை எடுத்துக்கூறியுள்ளார்.
(ஆதாரம்:ஃபத்ஹுல் முஙீஸ் ஃபி ஷர்ஹி அல்ஃபிய்யதில் ஹதீஸ் :246)
2) இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் தனது ரிஸாலாவில் கூறியுள்ளார்:
وَأَمَّا الْمَرَاسِيلُ فَقَدْ كَانَ أَكْثَرُ الْعُلَمَاءِ يَحْتَجُّونَ بِهَا فِيمَا مَضَى، مِثْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكٍ، وَالْأَوْزَاعِيّ حَتَّى جَاءَ الشَّافِعِيؒ فَتكلم فِي ذَلِك، وَتَابعه علىہ أَحْمد بن حَنْبَل وَغَيره
முர்ஸலான அறிவிப்புகளை முன்சென்ற அறிஞர்களில் அதிகமானவர்கள் ஆதாரம் எடுத்துள்ளனர்.உதாரணமாக ஸுப்யான் ஸவ்ரி (ரஹ்) அவர்கள்,மாலிக் (ரஹ்) அவர்கள்,அவ்ஜாயி (ரஹ்) அவர்கள்.ஷாபியி (ரஹ்) அவர்கள் தான் முதன்முதலாக இதனை (ஆதாரம் எடுப்பது) குறித்து விமர்சனம் செய்தார்.இமாம் அஹ்மத் (ரஹ்) போன்றவர்கள் இதனைதான் பின்பற்றினர்.
(ஆதாரம்:ஃபத்ஹுல் முஙீஸ் ஃபி ஷர்ஹி அல்ஃபிய்யதில் ஹதீஸ் :246)
الْمَرَاسِيلُ حُجَّۃَ مُطْلِقاً، فَقَدْ نُقِلَ عَنْ مَالِكٌ، وَأَبِی حَنِيفَةَ، وَأَحْمَدُ فِي رِوَايَةٍ حَكَاهَا النَّوَوِيُّ، وَابْنُ الْقَيِّمِ، وَابْنُ كَثِيرٍ وَغَيْرُهُمْ۔ وَحَكَاهُ النَّوَوِيُّ أیضاً فِي شَرْحِ الْمُهَذَّبِ عَنْ كَثِيرِينَ مِنَ الْفُقَهَاءِ أَوْ أَكْثَرِهِمْ
3) முர்ஸலான ஹதீஸ் பொதுவாக ஆதாரப்பூர்வமானது.இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்,இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் ஒரு அறிவிப்பின்படி இவ்வாறு கூறப்படுகிறது.இதனை இமாம் நவவி (ரஹ்) அவர்கள், இமாம்
இப்னுல் கய்யும் (ரஹ்) அவர்கள்,இப்னு கஸீர் (ரஹ்) போன்றவர்கள் எடுத்துச் சொல்லியுள்ளனர்.இதனை தவிர ஷர்ஹு முஹத்திபில் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் அதிகமான புகஹாக்களிடம் (ஆதாரப்பூர்வமானது) என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.(ஆதாரம்:அல்மராஸில் மஅஸானித் லில் இமாம் அபூதாவூத் 27)
ஹாபிள் இப்னு ரஜப் ஹன்பலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
وَاحْتَجَّ بالْمَرَاسِيلُ أَبُوحَنِيفَةَ وَأصْحَاْبَہ، وَمَالِكٍ وَأصْحَاْبَہ، وَکَذَا الشَّافِعِي وَأَحْمَدُ وَأصْحَاْبَہما
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களும்,அவரின் தோழர்களும்,இமாம் மாலிக் (ரஹ்) அவரின் தோழர்களும்,இவ்வாறே இமாம் ஷாபியி (ரஹ்) இமாம் அஹ்மத் (ரஹ்) இருவரின் தோழர்களும் முர்ஸல் ஹதீஸை ஆதாரம் எடுத்துள்ளனர்.(ஆதாரம்:அல்மராஸில் மஅஸானித் லில் இமாம் அபூதாவூத் 39)
அதிகமான தாபியீன்கள் முர்ஸல் ஆதாரப்பூர்வமானது என்கின்றனர்.
அல்லாமா இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
وَقَالَ ابْنُ جَرِيرٍ: وَأَجْمَعَ التَّابِعُونَ بِأَسْرِهِمْ عَلَى قَبُولِ الْمُرْسَلِ، وَلَمْ يَأْتِ عَنْهُمْ إِنْكَارُهُ، وَلَا عَنْ أَحَدٍ مِنَ الْأَئِمَّةِ بَعْدَهُمْ إِلَى رَأْسِ الْمِائَتَيْنِ۔ قَالَ ابْنُ عَبْدِ الْبَرِّ: كَأَنَّهُ يَعْنِي أَنَّ الشَّافِعِيَّ أَوَّلُ مَنْ رَدَّهُ‘
தாபியீன்கள் அனைவரும் முர்ஸலை ஏற்பதில் ஒன்றுப்பட்டுள்ளனர்.அவர்கள் அதனை நிராகரிக்கவில்லை.அவர்களுக்கு பிறகு இரண்டாம் நூற்றாண்டின் இறுதிவரை இமாம்களில் ஒருவரும் அதனை நிராகரிக்கவில்லை.இப்னு அப்துல்பர் கூறுகிறார்:முதன்மதலாக அதனை நிராகரித்தவர் இமாம் ஷாபியி (ரஹ்) அவர்கள் என்பதை கூறுவதைப் போன்று உள்ளது.(ஆதாரம்:தத்ரீபுர்ராவி பக்கம்:223)
இமாம் ஷாபியி (ரஹ்) அவர்களும் கூட முர்ஸலான ஹதீஸை நிபந்தனைகளின் பேரில் ஏற்கிறார்கள்.
ومذهب مالك وأبى حنيفة وأحمد وأكثر الفقهاء أنه يحتج به ومذهب الشافعى أنه اذا انضم إلى المرسل ما يعضده احتج به وذلك بأن يروى أيضا مسندا أو مرسلا من جهة أخرى أو يعمل به بعض الصحابة أو أكثر العلماء
மாலிக் (ரஹ்) அவர்கள்,இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள்,இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள்,அதிகமான புகஹாக்களின் வழிமுறை முர்ஸலை ஆதாரம் கொள்ளலாம்.ஷாபியி (ரஹ்) அவர்களின் வழிமுறையானது அதனை வலுவூட்டும் காரணி கிடைத்தால் ஆதாரப்பூர்வமானது.உதாரணமாக வேறு அறிவிப்பில் முழுமையான அறிவிப்பாளர் தொடரில் வந்தால் அல்லது மற்றொரு வழியில் முர்ஸலாக வந்தால் அல்லது அதனைக் கொண்டு ஸஹாபாக்கள் அல்லது அதிகமான அறிஞர்கள் அமல்செய்தால் அதனை ஏற்கலாம்.(ஆதாரம்:முகத்தமா நவவி 1/29)
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
اماالمراسیل قدتنازع الناس فی قبولھاوردّھاواصحّ الاقوال ان منھاالمقبول والمردودمنھاالموقوف فمن علم من حالہ افہ لایرسل الاعن ثقہ قبل مرسلہ ومن عرف انہ یرسل عن الثقۃوغیرالثقۃ کان ارسالہ روایۃ عن من لایعرف حالہ فھذاموقوف وماکان من المراسیل مخالفاً لمارواہ الثقات کان مردوداً واذاکان المرسل من وجھین کل من الراویین اخذالعلم عن شیوخ اٰخرفھٰذا یدل علیٰ صدقہ فان مثل ذٰلک لایتصورفی العادۃ تماثل الخطأفیہ وتعمدالکذب“
முர்ஸலை ஏற்பதில்,மறுப்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.சரியான கருத்தானது அதனை ஏற்பது,மறுப்பது, நிறுத்தி வைப்பது அனைத்து வகைகளும் உண்டு.அவர் நம்பகமானவரிடமிருந்து தான் அறிவிப்பார் என்றால் அது ஏற்கப்படும்.நம்பகமானவர்,
நம்பகமில்லாதவர் அனைவரிடமிருந்தும் அறிவிப்பார் மேலும் எவரிடமிருந்து அதனை அறிவிக்கிறாரோ அவரின் நிலை தெரியாத போது அவ்வகை முர்ஸல் நிறுத்தி வைக்கப்படும்.முர்ஸலான அறிவிப்புகள் பலமான அறிவிப்புகளுக்கு மாற்றமாக இருந்தால் மறுக்கப்படும்.முர்ஸல் இருவழிகளில் வந்துள்ளது.ஒன்று வேறொரு ஆசிரியரிடமிருந்து வந்தது உண்மை என்பதைதான் அறிவிக்கும்.ஏனெனில் பொதுவாக இதில் தவறு, வேண்டுமென்று பொய் சொல்வதாக எண்ணப்படாது.(ஆதாரம்:மின்ஹாஜுஸ்ஸுன்னா 4/117)
ஆய்வாளர் அல்லாமா ஜாஹிதுல் கவ்ஸர் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:
والاحتجاج بالمرسل کان سنۃ متوارثۃ جرت علیہ الامۃ فی القرون الفاضلۃ حتیٰ قال ابن جریرؒردالمرسل مطلقاًبدعۃ حدثت فی رأس المأتین۔ کماذکرہ الباجیؒ فی اصولہ وابن عبدالبرؒ فی التمھیدوابن رجبؒ فی شرح علل الترمذی
முர்ஸலான ஹதீஸை ஆதாரமாக எடுக்கும் வழிமுறையானது பொற்கால நூற்றாண்டில் உம்மத்தின் நடைமுறையில் இருந்துள்ள சுன்னத்தான செயல்முறையாகும்.
இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பொதுவாக முர்ஸலை நிராகரிப்பது பித்அத்தாகும்.இரண்டாவது நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்தது.இதனையே பாஜி (ரஹ்) அவர்கள் தனது உசூலிலும்,இப்னு அப்துல்பர் தம்ஹீதிலும்,இப்னு ரஜப் ஃபி ஷரஹி இலலித் திர்மிதியிலும் கூறியுள்ளனர்.(ஆதாரம்:தஃனீபுல் கதீப் 152)
முக்கிய குறிப்பு:சில ஹதீஸ்கலை வல்லுனர்களிடம் முர்ஸலான ஹதீஸ் ஆதாரமில்லை என்பது நமக்கு எதிரான ஆதாரமில்லை.முஜ்தஹித்களான இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள், இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்,இமாம் ஷாபியி (ரஹ்) போன்றவர்கள் ஆதாரம் எடுத்திருக்கும் போது மற்றவர்களின் கருத்தை நாம் பொருத்தமாட்டோம். அல்லாஹ்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முர்ஸலான ஹதீஸ் ஏற்புடையதில்லை என்பதாக கூறியிருந்தாலோ அல்லது முர்ஸலான இந்த ஹதீஸிற்கு எதிரான தெளிவான,முரண்பாடற்ற,ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருந்தால் இமாம்களின் கருத்தை விட்டுவிடலாம்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)










