ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர் :5
தக்பீர் கூறியவாறு இரண்டாவது ரக்அத்திற்கு எழுவது
عن ابی هريرة رضي الله عنه قال ....... و كان النبي ﷺ اذا ركع و اذا رفع راسه يكبر و اذا قام من السجدين قال الله اكبر
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிற்கு செல்லும் போதும் தலையை உயர்த்தும் போது தக்பீர் கூறுவார்கள்.இரு ஸஜ்தாவிலிருந்து எழும் போதும் தக்பீர் கூறுவார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/109, தலைப்பு:باب ما يقول الامام و من خلفه اذا رفع راسه من الركوع )
இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து எழும் போது அமராமல் எழுவது (جلسة الاستراحة அமர்ந்து எழுவது கூடாது)
عن ابی هريرة رضي الله عنه قال كان النبي ﷺ ينهض فی الصلوة علی صدور قدميه
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் உட்காராமல் நேரடியாக எழுவார்கள்.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/64,தலைப்பு:باب كيف النهوض من السجود )
عن عبد الرحمن بن يزيد قال رمقت عبد الله بن مسعود رضي الله عنه فی الصلوة فرايته ينهض و لا يجلس قال ينهض علی صدور قدميه فی الركعة الاولی و الثالثة
அப்துர் ரஹ்மான் இப்னு யஜீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்களை தொழுகையில் உற்று நோக்கி பார்த்தேன்.(ஸஜ்தாவிலிருந்து எழும் போது) உட்காரமாட்டார்கள்.முதல் ரக்அத்திலும் மூன்றாவது ரக்அத்திலும் ஸஜ்தாவிலிருந்து எழும் போது உட்காரமல் நேரடியாக எழுவார்கள்.
(ஆதாரம்:முஸன்னப் அப்துர் ரஜ்ஜாக் 2/117,தலைப்பு:باب كيف النهوض من السجدة الاخرة ,ஹதீஸ் இலக்கம்:2971)
عن الشعبي ان عمر و عليا رضي الله عنه و اصحاب رسول الله ﷺ كانوا ينهضون فی الصلوة علی صدور اقدامهم
ஹஜ்ரத் ஷஅபி ரஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள் ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் உமர் (ரளி) அவர்கள் மற்றுமுள்ள ஸஹாபாக்கள் தொழுகையில் (உட்காராமல்) நேரடியாக எழுவார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீ ஷைபா 3/330 من كان ينهض علی صدور قدميه ஹதீஸ் இலக்கம்:4004)
வயது முதிர்வின் காரணமாக அல்லது பலகீனத்தின் காரணமாக உட்கார்ந்து எழுவது
عن ابي امامة رضي الله عنه ان رسول الله ﷺ كان يوتر بتسع فلما بدَّن و كثر لحمه اوتر بسبع و صلی ركعتين و هو جالس
ஹஜ்ரத் அபூஉமாமா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்பது ரக்அத் வித்ரு தொழுது கொண்டு இருந்தார்கள்.(மூன்று ரக்அத் வித்ரு, ஆறு ரக்அத் நபில்) அன்னாரின் உடல் கனமாகி சதை அதிகரித்த போது ஏழு ரக்அத் வித்ரு தொழுதார்கள். (மூன்று ரக்அத் வித்ரு,நான்கு ரக்அத் நபில்) மேலும் இரண்டு ரக்அத் அமர்ந்து தொழுதார்கள்.
(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/204,தலைப்பு:باب الوتر )
عن ايوب عن ابی قلابة رحمة الله قال جاءنا مالك بن الحويرث رضي الله عنه فی مسجدنا فقال اني اصلی بكم و ما اريد الصلوة اصلی كيف رايت النبي ﷺ يصلی فقلت لابي قلابة كيف كان يصلي قال مثل شيخنا هذا و كان الشيخ يجلس اذا رفع راسه من السجود قبل ان ينهض فی الركعة الاولی
ஹஜ்ரத் அய்யூப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; ஹஜ்ரத் மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரளி) அவர்கள் எங்களின் இந்த மஸ்ஜிதிற்கு வருகை தந்தார்கள்.நான் உங்களுக்கு முன்னால் தொழுது காட்டுகிறேன் என்றார்கள்.எனது நோக்கம் தொழுவது இல்லை.மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுததை போன்று நான் (உங்களுக்கு காட்டுவதற்காக) தொழுகிறேன்.அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி தொழுதார்கள்? என கேட்டேன்.அவர்கள் கூறினார்கள்: இந்த நமது ஷைகை போன்று.ஷைக் (பழக்கம்) முதல் ரக்அத்திலே ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போது எழுவதற்கு முன்பாக அமர்வார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/93,باب من صلی بالناس و هو يريد الا ان يعلمهم صلوة النبي صلی الله عليه وسلم )
இரண்டு ரக்அத்திற்கு மத்தியில் கையை உயர்த்துதல் இல்லை
ولا يفعل ذلك حين يسجد ولا حين يرفع راسه من السجود
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தா செய்யும் போது ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போது கையை உயர்த்த மாட்டார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/102,باب الی اين يرفع)
குறிப்பு:(1) இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது தொழுகையாளி இரண்டாவது மற்றும் நான்காவது ரக்அத்திலிருந்து ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போது கைகளை உயர்த்த மாட்டார்கள்.
குறிப்பு:(2) மேற்சொன்ன அறிவிப்பின் ஆரம்பத்தில் ருகூவின் கைகளை உயர்த்துதல் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனை மறுக்கும் ஆதாரம் ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளி அவர்களின் வேறு அறிவிப்புகளின் மூலம் நிரூபணமாகிவிட்டது.இதனை குறித்து நமது முந்திய தொடர்களில் தெளிவுப்படுத்திவிட்டோம்.
இரண்டாவது ரக்அத்தில் பாத்திஹா சூராவை பிஸ்மில்லாஹ் வுடன் ஆரம்பிப்பது
عن ابن عمر رضي الله عنه انه كان لايدع بسم الله الرحمن الرحيم قبل السورة و بعدها اذا قرا بسورة اخری فی الصلوة
ஹஜ்ரத் இப்னு உமர் (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது
தொழுகையில் பாத்திஹா சூராவிற்கு முன்பாகவும் துணை சூராவிற்கு பிறகும் பிஸ்மில்லாஹ் விடமாட்டார்கள்.
(ஆதாரம்:பத்ஹுல் பாரி லி இப்னு ஹஜர் 2/288)
முதல் ரக்அத்தானது இரண்டாவது ரக்அத்தை விட நீளமாக இருக்க வேண்டும்.
عن ابي قتادة رضي الله عنه قال كان النبي ﷺ يقرء فی الركعتين الاوليين من صلوة الظهر بفاتحة الكتاب و سورتین يطول فی الاولی و يقصر فی الثانية و يسمع الاية احيانا و كان يقرء فی العصر بفاتحة الكتاب و سورتين و كان يطول فی الاولی و كان يطول فی الركعة الاولی من صلوة الصبح يقصر فی الثانية
ஹஜ்ரத் அபூகதாதா (ரளி)
அவர்கள் கூறுகிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரு ரக்அத்திலும் சூரா பாத்திஹா இரண்டு துணை சூரா ஓதினார்கள்.முதல் ரக்அத்தானது நீண்டு இருந்தது.இரண்டாவது ரக்அத் (முதல் ரக்அத்தை விட) குறைந்திருந்தது.சில சமயங்களில் ஆயத்தை (சப்தமாக ஓதி) கேட்க வைத்தார்கள்.அஸர் தொழுகையில் பாத்திஹா,இரு துணை சூராக்கள் ஓதுவார்கள்.முதல் ரக்அத் நீளமாக இருக்கும்.பஜ்ர் தொழுகையின் முதல் ரக்அத் நீளமாகவும், இரண்டாவது ரக்அத் சுருக்கமாக ஓதிக்கொண்டிருந்தார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/105,தலைப்பு:باب القراءة فی الظهر ,ஸஹீஹ் முஸ்லிம் 1/185 தலைப்பு:باب القراءة فی الظهر و العصر )
ஒவ்வொரு இருரக்அத்தில் அமர்வது
عن عاءشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ يستفتح الصلوة بالتكبير و القراءة بالحمد لله رب العالمين ...............وكان يقول فی كل ركعتين التحية
ஹஜ்ரத் ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் தொழுகையை தக்பீருடனும்,கிராஅத்தை அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீனிலிருந்தும் ஆரம்பிப்பார்கள்.மேலும் கூறினார்கள்.ஒவ்வொரு இரு ரக்அத்திலும் தஷஹ்ஹுத் (அமர்வு) உண்டு.
(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/194,தலைப்பு:باب ما يجمع صفة الصلوة و ما يفتح به و يختم به , முஸன்னப் அப்துர் ரஜ்ஜாக் 2/134,தலைப்பு:باب من نسي التشهد ஹதீஸ் இலக்கம்:3086,முஸன்னப் இப்னு அபூஷைபா 3/47,قدر كم يقعد فی الركعتين الاوليين ஹதீஸ் இலக்கம்:3040)
முதல் முதல் இருப்பின் முறை
إنما سنة الصلاة أن تنصب رجلك اليمنى وتثني رجلك اليسرى
அப்துல்லாஹ் இப்னு உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் தொழுகையின் சுன்னத் வலது காலை நட்டி இடது காலை விரித்து வைப்பது.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/114,தலைப்பு:باب سنة الجلوس فی التشهد)
ஹஜ்ரத் அபூஹுமைத் அஸ்ஸாயிதி ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையை குறித்து கூறுகிறார்கள்
فاذا جلس فی الركعتين جلس علی رجله اليسری و نصب اليمنی
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டாவது ரக்அத்திற்கு பிறகு அமரும் போது இடது காலின் மீது அமர்வார்கள்.வலது காலை நட்டிவைப்பார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/114, தலைப்பு:باب سنة الجلوس فی التشهد )
عن عاءشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ يستفتح الصلوة بالتكبير .......وكان يفرش رجله اليسری و ينصب رجله اليمنی
ஹஜ்ரத் ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீருடன் தொழுகையை ஆரம்பித்தார்கள்.தஷஹ்ஹுத்தில் இடது காலை விரித்து வைப்பார்கள்.வலது காலை நட்டுவைப்பார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/195,தலைப்பு:باب ما يجمع صفة الصلوة وما يفتح به و يختم به )
முதல் இருப்பில் தஷஹ்ஹுத் மட்டும் ஓதுதல்
علمنا رسول الله أن نقول إذا جلسنا في الركعتين التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
علمنا رسول الله أن نقول إذا جلسنا في الركعتين التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் கூறுகிறார்கள் இரண்டாவது ரக்அத்தில் அமர்வில் எங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை ஓதுவார்கள் التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النبي وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ِ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹி ஸ்ஸாலிஹீன் அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹ்
(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/174,தலைப்பு:باب كيف التشهد الاولی ,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 2/148, தலைப்பு:باب الصلوة علی النبي ﷺ فی التشهد )
عن عبد الله بن مسعود رضي الله عنه قال علمني رسول الله ﷺ التشهد فی وسط الصلوة و فی اخرها ................التحيات و الصلوات و الطيبات .............. قال ثم ان كان فی وسط الصلوة نهض حين يفرغ من تشهده
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு தஷஹ்ஹுத்தை தொழுகைக்கு நடுவிலும் இறுதியிலும் கற்றுக்கொடுத்தார்கள்........மேலும் கூறினார்கள் தொழுகையின் நடுவில் (இரண்டாவது ரக்அத்தின் அமர்வு) இருந்தால் தஷஹ்ஹுத் ஓதி முடித்த பிறகு எழுந்து நிற்பார்கள்.
(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் 4/238,ஹதீஸ் இலக்கம்:4382)
عن الحسن انه كان يقول لا يزيد فی الركعتين الاوليين علی التشهد
ஹஸன் ரஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள் தொழுபவர் முதல் இருரக்அத்தில் தஷஹ்ஹுத்தை விட அதிகமாக ஓதமாட்டார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீஷைபா 3/47, قدر كم يقعد فی الركعتين الاوليين ஹதீஸ் இலக்கம்:3038)
தஷஹ்ஹுத் வார்த்தைகள்
عن عبد الله بن مسعود رضي الله عنه قال كنا اذا صلينا خلف النبي ﷺ........... فقال ان الله هو السلام فاذا صلی احدكم فليقل التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النبي وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ِ......... أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்னால் நின்று தொழுது கொண்டிருந்த போது அப்பொழுது அண்ணலார் கூறினார் அல்லாஹ் சாந்தி அளிப்பவன் உங்களில் ஒருவர் தொழும் போது (இதனை) சொல்லட்டும்
அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹி ஸ்ஸாலிஹீன் அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹ்
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/115,தலைப்பு:باب التشهد فی الاخرة ,ஸஹீஹ் முஸ்லிம் 1/173, தலைப்பு:باب التشهد فی الصلوة )
தஷஹ்ஹுத்தில் விரல்களை சமிக்ஞை செய்வது
اصنع كما كان رسول الله ﷺ يصنع قلت و كيف كان رسول الله ﷺ يصنع قال كان اذا جلس فی الصلوة وضع كفه اليمنی علی فخذه اليمنی و قبض اصابعه كلها التی تلی الابهام و وضع كفه اليسری علی فخذه اليسری
அலி இப்னு அப்துர்ரஹ்மான் கூறுகிறார்கள் நான் தொழுகையில் கற்களுடன் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அப்துல்லாஹ் இப்னு உமர் ரளி அவர்கள் என்னை பார்த்தார்கள்.மேலும் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை போன்று நீர் செய்வாயாக
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி செய்தார்கள் என கேட்டேன்.அதற்கு கூறினார்கள் தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்து அவரது வலது கையை அவரின் வலது தொடையில் வைத்து அவரின் அனைத்து விரல்களையும் மூடியவாறு ஆள்காட்டி விரலால் சமிக்ஞை செய்வார்கள்.அவரது இடது கை அவரின் இடது தொடையின் மீது வைத்திருப்பார்.(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/216,
தலைப்பு: باب صفة الجلوس فی الصلوة و كيفيته و وضع اليدين ,ஸுனன் அபூதாவூத்1/149, தலைப்பு: باب الاشارة فی التشهد )
சமிக்கையின் முறை
عن عبد الله بن الزبير رضي الله عنه ان النبيﷺ كان اذا قعد فی التشهد وضع يده اليسری علی ركبته اليسری و وضع يده اليمنی علی ركبتيه اليمنی و عقد ثلاثا و خمسين و اشار بالسبابة
இப்னு உமர் (ரலி -) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும் வலக் கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சிறு விரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து) சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/216,தலைப்பு:باب صفة الجلوس فی الصلاة )
சமிக்ஞையின் போது விரல்களை அசைக்க கூடாது
عن عبد الله بن الزبير رضي الله عنه ان النبي ﷺ كان يشير باصبعه اذا دعا و لا يحركها
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆவின் போது (தஷஹ்ஹுத்தில்) ஆட்காட்டி விரலால் சமிக்ஞை செய்வார்கள்.அதனை அசைத்து கொண்டிருக்க மாட்டார்கள்.
(சுனுன் நஸாயி 1/187,باب بسط اليسرى على الركبة ،சுனனு அபூதாவூத் 1/149,தலைப்பு:باب الاشارة فی التشهد)
(சுனுன் நஸாயி 1/187,باب بسط اليسرى على الركبة ،சுனனு அபூதாவூத் 1/149,தலைப்பு:باب الاشارة فی التشهد)
ஆட்காட்டி விரலை தொழுகையின் இறுதி வரை விரித்து வைத்திருப்பது
عن عاصم بن كليب عن ابيه عن جده قال دخلت علی النبي ﷺ و هو يصلی و قد وضع يده اليسری علی فخذه و وضع يده اليمنی علی فخذه اليمنی و قبض اصابعه و بسط السبابة و هو يقول يا يقلب القلوب ثبت قلبی علی دينك
ஹஜ்ரத் ஆஸிம் இப்னு குலைப் ரளி அவர்கள் தனது தந்தையிடமிருந்தும் அவர் தனது தந்தை ஷிஹாப் இப்னு மஜ்னூனிடமிருந்து அறிவிக்கிறார்கள் ஷிஹாப் இப்னு மஜ்னூன் அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திற்கு சென்றேன்.அண்ணலார் அவர்கள் தொழுது கொண்டு இருதார்கள்.(இருப்பில்) தனது வலது கையை வலது தொடையின் மீது இடது கையை இடது தொடையின் மீது வைத்திருந்தார்கள்.மேலும் விரல்களை வளையமிட்டார்கள்.மேலும் ஆட்காட்டி விரலை விரித்து வைத்தார்கள்.மேலும்
يا يقلب القلوب ثبت قلبی علی دينك
يا يقلب القلوب ثبت قلبی علی دينك
(உள்ளங்களை புரட்டுபவனே! எனது உள்ளத்தை தீனின் மீது
நிலைப்படுத்துவாயாக!)
என்ற துஆ ஓதினார்கள்.
(ஆதாரம் ஜாமிஉத்திர்மிதி 2/199,தலைப்பு:ابواب الدعوات باب بلا ترجمة )