Wednesday, February 6, 2019

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை


ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர் :4



ஸஜ்தா செய்யும் போது முதலில் முட்டுக்காலை பிறகு கையை, நெற்றியை பூமியில் வைப்பது


عن وال بن حجر رضي الله عنه ان رسول الله كان يضع ركبتيه قبل يديه اذا سجد

ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் ரளி அவர்களிடமிருந்து வந்துள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தா செய்யும் போது இரு கைகளை  வைப்பதற்கு முன்னால் இரு முட்டுக்கால்களை வைப்பார்கள்.

(ஸஹீஹ் இப்னு ஹுஜைமா,பாகம்:1 பக்கம்:342,தலைப்பு:باب البدء بوضع الركبتين علی الارض قبل اليدين ,ஹதீஸின் இலக்கம்:626)



عن انس رضي الله قال رايت رسول الله ﷺ كبر فحاذی بابهاميه اذنيه ثم ركع حتی استقر كل مفصل منه و انحط بالتكبير حتی سبقت ركبتاه يديه

அனஸ் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்தேன்.அன்னார் தக்பீர் கூறினார்.தனது இரு பெருவிரல்களையும் காது நேராக உயர்த்தினார்கள்.பிறகு ருகூஉ செய்தார்கள். ஒவ்வொரு மூட்டும் அதனின் இடத்தை அடையும் வரை.பிறகு தக்பீர் கூறியவாறு குனிந்தார்கள் அவரது கையானது முட்டிங்காலை முந்தியது.

(அல்முஸ்தத்ரக் லில்ஹாகிம்,பாகம்:1 பக்கம்:3,49,தலைப்பு:باب التامين  ஹதீஸ் இலக்கம்:822)

ஸஜ்தா ஏழு உறுப்புக்களின் மீது செய்ய வேண்டும்.

عن ابن عباس رضي الله عنه قال امر النبي ﷺ ان يسجد علی سبعة اعضاء ولا يكف شعرا و لا ثوبا الجبهة و اليدين و الركبتين والرجلين

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு ஏழு உறுப்புகள் மீது ஸஜ்தா செய்யும் படி  ஏவப்பட்டது.ஆடையை,முடியை தடுக்க கூடாது.(உறுப்புகள்) நெற்றி,இருகைகள்,இருமூட்டுக்கள் இருகால்கள்

(ஸஹீஹுல் புகாரி பாகம்:1 பக்கம்:112,தலைப்பு:باب السجود علی سبعة اعظم ,ஸஹீஹ் முஸ்லிம்,பாகம்:1 பக்கம்:193,தலைப்பு:باب اعضاء السجود والنهي عن كف الشعر)

ஸஜ்தாவின் தஸ்பீஹின் எண்ணிக்கை

عن ابن مسعود رضي الله عنه ان النبي ﷺ قال اذا سجد فقال فی سجوده سبحن ربي الاعلی ثلاث مرات فقد تمَّ سجوده و ذالك ادناه

ஹஜ்ரத்  அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.ஸஜ்தா செய்யும் போது ஸஜ்தாவில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா மூன்று தடவை கூறினால் அவரின் ஸஜ்தா முழுமை பெற்றுவிடும்.இது குறைந்தபட்சமாகும்.

(ஜாமிஉத்திர்மிதி,பாகம்:1 பக்கம்:60, தலைப்பு:باب ما جاء فی التسبيح فی الركوع و السجود ,சுனன் இப்னு மாஜா,
பாகம்:1 பக்கம்:63,தலைப்பு:باب التسبيح فی الركوع و السجود )

தக்பீர் கூறியவாறு ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்துதல்

عن ابی هريرة رضي الله عنه قال كان رسول الله ﷺ اذا قام الی الصلوة يكبر حين يقوم ......ثم يكبر حين يهوي ساجدا ثم يكبِّر حين يرفع راسه

அபூஹுரைரா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது தக்பீர் கூறுவார்கள்.பிறகு ஸஜ்தாவிற்கு குனியும் போது தக்பீர் கூறுவார்கள்.பிறகு ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் பொழுது தக்பீர் கூறுவார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் பாகம்:1 பக்கம்:169,தலைப்பு:باب اثبات التكبير فی كل خفض و رفع فی الصلوة )

ஸஜ்தாவிற்கு மத்தியில் அமர்வது

ஹஜ்ரத் அபூஹுரைரா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருக்கு தொழுகையை கற்றுக்கொடுத்தவாறு கூறினார்கள் ثم اسجد حتی تطمئنَّ ساجدا ثمَّ ارفع حتی تطمئنَّ جالسا பிறகு ஸஜ்தா செய்யுங்கள் நிதானமாக ஸஜ்தா செய்யுங்கள் பிறகு தலையை உயர்த்தி நிதானமாக அமருங்கள்

(ஸஹீஹுல் புகாரி,பாகம்:1 பக்கம்:109,باب امر النبي ﷺ الذي لا يتم ركوعه بالاعادة ,ஸஹீஹ் முஸ்லிம்,பாகம்:1 பக்கம்:170,باب وجوب قراءة الفاتحة كل ركعة )

அமர்வில் ஓதும் துஆ

عن ابن عباس قال كان رسول الله يقول بين السجدتين فی صلوة الليل رب اغفر لی و ارحمنی و ارزقنی و ارفعنی و مثله عن علي

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவுத்தொழுகையில் இரு ஸஜ்தாவிற்கு மத்தியில் இந்த துஆவை ஓதுவார்கள் رب اغفر لی و ارحمنی و ارزقنی و ارفعنی

(ஸுனன் இப்னு மாஜா 1/64,باب ما يقول بين السجدتين ,முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக் 2/123,باب القول بين السجدتين ஹதீஸ் இலக்கம்:3014)

தக்பீர் கூறியவாறு அடுத்த ஸஜ்தா செய்வது

عن ابی هريرة رضي الله عنه قال كان رسول الله ﷺ اذا قام الی الصلوة يكبر حين يقوم ......ثم يكبر حين يهوي ساجدا ثم يكبِّر حين يرفع راسه ثُمَّ يكبِّرُ حين يسجد

அபூஹுரைரா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது தக்பீர் கூறுவார்கள்.பிறகு ஸஜ்தாவிற்கு குனியும் போது தக்பீர் கூறுவார்கள்.பிறகு ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் பொழுது தக்பீர் கூறுவார்கள்.பிறகு அடுத்த ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூறுவார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் பாகம்:1 பக்கம்:169,தலைப்பு:باب اثبات التكبير فی كل خفض و رفع فی الصلوة )

ஸஜ்தாவில் முகத்தை கைகளுக்கு மத்தியில் வைப்பது

 وائل بن حجر رضي الله قال صليت خلف رسول الله فكان اذا سجد وضع وجهه بين كفيه

ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் தொழுதேன்.அண்ணலார் ஸஜ்தா செய்யும் போது இரு உள்ளங்கைகளுக்கு மத்தியில் வைப்பார்கள்.

(ஷர்ஹு மஆனில் ஆஸார்,பாகம்:1 பக்கம்:182,தலைப்பு:باب وضع اليدين فی السجود اين ينبغی ان يكون )

ஸஜ்தாவில் கையின் விரல்களை சேர்த்து வைப்பது

عن وائل بن حجر رضي الله عنه ان النبي ﷺ كان اذا سجد ضم اصابعه

வாயில் இப்னு ஹுஜ்ர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தா செய்யும் போது தனது விரல்களை ஒன்று சேர்த்து வைப்பார்கள்.

(ஸஹீஹ் இப்னு குஜைமா,பாகம்:1 பக்கம்:347,தலைப்பு:باب ضم اصابع اليدين فی السجود ,ஹதீஸ் இலக்கம்:642,ஸஹீஹ் இப்னு ஹிப்பான்,ذكر ما يستحب للمصلی ضم الاصابع فی السجود  பக்கம்:593)

கைவிரல்கள் கிப்லாவை முன்னோக்கி இருப்பது

قال ابوحميد الساعدي رضي الله عنه انا كنت احفظكم لصلاة رسول الله ﷺ رايته اذا كبر جعل يديه حذاء منكبيه................ فاذا سجد وضع يديه غير مفترش ولا قابضهما و استقبل باطراف اصابعه القبلة

ஹஜ்ரத் அபூஹுமைத் ஸாயித் ரளி அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையை உங்களை விட அறிந்துள்ளேன்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பார்த்தேன்.அண்ணலார் தக்பீர் கூறும் போது இரு கைகளையும் தோள்புஜத்திற்கு நேராக தூக்குவார்கள்.   பிறகு ஸஜ்தா செய்யும் போது தனது இருகைகளையும் விரித்தோ, சேர்த்தோ இல்லாமல் (நடுத்தரமாக) பூமியில் வைப்பார்கள்.மேலும் விரல்கள் கிப்லாவை முன்னோக்கியவாறு அமைந்திருக்கும்.

(ஸஹீஹ் இப்னு குஜைமா,பாகம்:1 பக்கம்:347,தலைப்பு:باب استقبال اطراف اصابع اليدين من القبلة فی السجود ஹதீஸ் இலக்கம்:643)

عن حفص بن عاصم قال صليت الی جنب ابن عمر رضي الله عنه ففرجت بين اصابعی حين سجدت فقال يا ابن اخي اضمم اصابعك اذا سجدت و استقبل القبلة و استقبل بالكفين القبلة فانهما يسجدان مع الوجه

ஹஜ்ரத் ஹஃப்ஸ் இப்னு ஆஸிம் ரஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.நான் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளி அவர்களுக்கு அருகில் நின்று தொழுதேன்.நான் ஸஜ்தா செய்யும் போது எனது விரல்களை விரித்து வைத்தேன்.இப்னு உமர் ரளி அவர்கள் கூறினார்கள் எனது சகோதரனின் மகனே ஸஜ்தா செய்யும் போது உமது விரல்களை சேர்த்து கிப்லாவின் பக்கம் முன்னோக்கு இரு உள்ளங்கைகளையும் கிப்லாவின் பக்கம் முன்னோக்கி வை ஏனெனில் இரண்டும் முகத்துடன் ஸஜ்தா செய்கிறது.

(முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்,பாகம்:2 பக்கம்:112,தலைப்பு:باب السجود ஹதீஸ் இலக்கம்:2938)

(ஸஜ்தாவின் போது) கால்களுடன் பாதங்களை  இணைப்பது அல்லது கால்களை விட்டும் பாதங்களை விரித்து வைப்பது


عن عاءشة رضي الله عنها زوج النبي ﷺ قالت فقدتُّ رسول الله ﷺ و كان معی علی فراشي فوجدته ساجدا راصََّا عقبيه مستقبلا باطراف اصابعه القبلة

ஹஜ்ரத் ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பெற்றுக்கொள்ளவில்லை.
என்னுடன் விரிப்பில் இருந்திருந்தார்கள்.பிறகு அண்ணலாரின் இரு பாதங்களும் இணைந்தவாறு ஸஜ்தா செய்த நிலையில் பெற்றுக்கொண்டேன்.விரல்கள் கிப்லாவை முன்னோக்கியவாறு இருந்தன.

(ஸஹீஹ் இப்னு குஜைமா,பாகம்:1 பக்கம்:351,தலைப்பு:باب الضم العقبين فی السجود,ஹதீஸ் இலக்கம்:654,ஸஹீஹ் இப்னு ஹிப்பான் பக்கம்:595,தலைப்பு:باب ذكر ما يستحب للمصلی ان يتعوذ برضاء الله ,ஹதீஸ் இலக்கம்:1932)

மற்றொரு அறிவிப்பில்

عن البراء رضي الله عنه كان صلی الله عليه و سلم اذا ركع بسط ظهره و اذا سجد وجه اصابعه قبل القبلة فتفاج يعنی وسع بين رجليه

பரா இப்னு ஆஜிப் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூஉ செய்யும் போது அவரது  முதுகை நேராக வைப்பார்கள்.ஸுஜுது செய்யும் போது அவரது விரல்களை கிப்லாவின் முன்னோக்கும் விதமாக வைப்பார்கள்.(ஸஜ்தாவின் போது) இரு கால்களை விரித்து வைப்பார்கள்.

(அல்முஹத்தப் ஃபி இக்திஸாரி ஸுனனில் குப்ரா ஹதீஸ் இலக்கம்:2414)

கால்களின் விரல்கள் கிப்லாவை முன்னோக்குதல்

 الساعدي رضي الله عنه انا كنت احفظكم لصلاة رسول الله ﷺ رايته اذا كبر جعل يديه حذاء منكبيه................ فاذا سجد وضع يديه غير مفترش ولا قابضهما و استقبل باطراف اصابعه القبلة

ஹஜ்ரத் அபூஹுமைத் ஸாயித் ரளி அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையை உங்களை விட அறிந்துள்ளேன்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பார்த்தேன்.அண்ணலார் தக்பீர் கூறும் போது இரு கைகளையும் தோள்புஜத்திற்கு நேராக தூக்குவார்கள்.   பிறகு ஸஜ்தா செய்யும் போது தனது இருகைகளையும் விரித்தோ, சேர்த்தோ இல்லாமல் (நடுத்தரமாக) பூமியில் வைப்பார்கள்.மேலும் விரல்கள் கிப்லாவை முன்னோக்கியவாறு அமைந்திருக்கும்.

(ஸஹீஹ் இப்னு குஜைமா,பாகம்:1 பக்கம்:347,தலைப்பு:باب استقبال اطراف اصابع اليدين من القبلة فی السجود ஹதீஸ் இலக்கம்:643)

(ஸஜ்தாவில்) முழங்கை விலாப்புறத்தை விட்டு தனித்திருப்பது


عن عبد الله بن مالك ابن بحينة ان النبي ﷺ  كان اذا صلی فرج بين يديه حتی يبدو و بياض ابطيه وفی رواية و يجافی عن جنبيه

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மாலிக் இப்னு புஹைனா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகும் போது விலாப்புறத்தை விட்டும் விலக்கி வைப்பார்கள்.அப்போது அன்னாரின் அக்குளின் வெண்மை வெளிப்படும்.

(ஸஹீஹுல் புகாரி باب يبدى ضبعيه و يجافى فى السجود 1/112,ஸஹீஹ் இப்னு குஜைமா باب التجافى فى السجود ஹதீஸ் இலக்கம்:648)

மற்றொரு அறிவிப்பில் அவரது விலாப்புறத்தை விட்டு விலக்கி வைப்பார்கள்.

முழங்கை பூமியின் மீது விரிக்க கூடாது

عن البراء ابن عازب رضي الله عنه اذا سجدت فضع كفيك و ارفع مرفقيك

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக  ஹஜ்ரத் பராஇப்னு ஆஜிப் ரளி அவர்கள் கூறுகிறார்கள்
நீர் ஸஜ்தா செய்யும் பொழுது உமது கைகளை (பூமியில்) வை உமது முழங்கையை உயர்த்தி விடு (தரையோடு வைக்காதே)

(ஸஹீஹ் முஸ்லிம் 1/194 باب الاعتدال فی السجود و وضع الكفين علی الارض )

عن انس ابن مالك رضي الله عنه عن النبي صلی الله عليه و سلم قال اعتدلوا فی السجود ولا يبسط احدكم ذراعيه انبساط الكلب
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக அனஸ் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் ஸஜ்தாவில் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.உங்களில் எவரும் முழங்கையை நாய் விரிப்பதை போன்று விரிக்காதீர்கள்.

(ஸஹீஹுல் புகாரி 1/113,தலைப்பு:لا يفترش ذراعيه فی (السجود

பித்தட்டை உயர்த்தி ஸஜ்தா செய்வது

عن ابی اسحاق قال وصف لنا البراء رضي الله عنه السجود فوضع يديه بالارض و رفع عجيزته و قال هكذا رايت رسول الله ﷺ يفعل

எங்களுக்கு ஸஜ்தா செய்யும் வழிமுறையை பரா இப்னு ஆஜிப் ரளி அவர்கள் கற்றுக்கொடுத்தார் என்பதாக அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறுகிறார்கள்.அன்னார் பூமியில் இருகைகளையும் வைத்தார்.மேலும் அவரது பித்தட்டை உயர்த்தினார்.பிறகு கூறினார் இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்.

(ஸுனன் நஸாயி 1/166,باب صفة السجود ஸுனன் அபூதாவூத் 1/137,باب صفة السجود )

ஸஜ்தாவிற்கு செல்லும் போது எழும் போது கைகளை உயர்த்தாதீர்


عن عبد الله ابن عمر رضي الله عنه ان رسول الله ﷺ كان يرفع يديه حذو منكبيه اذا افتتح الصلوة........ و كان لا يفعل ذلك فی السجود ....... و فی رواية و لا يفعل ذلك حين يسجد ولا حين يرفع راسه من السجود وفی رواية ولا يرفعهما بين السجدتين

அப்துல்லாஹ் இப்னு உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது இருகைகளையும் தோள்புஜம் வரை உயர்த்துவார்கள்.மேலும் ஸஜ்தாவில் இவ்வாறு செய்யமாட்டார்கள்.மற்றோர் அறிவிப்பில் ஸஜ்தாவிற்கு செல்லும் போதும் ஸஜ்தாவிலிருந்து எழும் போது தலையை உயர்த்த மாட்டார்கள்.வேறு அறிவிப்பில் இரு ஸஜ்தாவிற்கு மத்தியில் கையை உயர்த்த மாட்டார்கள்.

(ஸஹீஹுல் புகாரி 1/102,باب رفع اليدين فی التكبيرة الاولی مع الافتتاح سواء غيره ,صحيح مسلم 1/168,باب استحباب رفع اليدين حذو المنكبين مع تكبيرة الاحرام )


عن عبد الله ابن عمر رضي الله عنه قال رايت رسول الله ﷺ اذا افتتح الصلوة رفع يديه حتی يحاذي بهما و قال بعضهم حذو منكبيه واذا اراد ان يركع و بعد ما يرفع راسه من الركوع لا يرفعهما و قال بعضهم ولا يرفع بين السجدتين

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பார்த்தேன்.தொழுகையை ஆரம்பிக்கும் போது கையை உயர்த்தினார்கள்.ருகூவிற்கு செல்லும் போது எழும் போது கையை உயர்த்தவில்லை.ஸஜ்தாவிற்கு மத்தியில் கையை உயர்த்தவில்லை.

(ஸஹீஹ் அபூ அவானா 1/334,தலைப்பு:رفع اليدين فی افتتاح الصلوة,ஹதீஸ் இலக்கம்:1251)

No comments:

Post a Comment