Wednesday, July 22, 2020

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?

தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? (ஓர் ஆய்வு தொடர்:2)


பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி கேட்டால் அனுமதி தரவேண்டும் எனும் ஹதீஸ் குறித்து முஜ்தஹித்கள் ஆய்வாளர்கள் முற்கால அறிஞர்களின் நிலைப்பாடு

1)இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

هذا شبهه من احاديث الباب ظاهر في انها لا تمنع المسجد لكن بشروط ذكرها العلماء مأخوذة من الأحاديث وهو ان لا تكون متطيبة ولا متزينة ولا ذات خلاخل يسمع صوتها ولا ثياب فاخرة ولا مختلطة بالرجال ولا شابة ونحوها ممن يفتن بها وان لا يكون في الطريق مايخاف به مفسدة ونحوها وهذا النهي عن منعهن من الخروج محمول على كراهة التنزیه

இந்த ஹதீஸ் மற்றும் அதனின் தலைப்புடன் தொடர்புடைய மற்ற ஹதீஸ்களின் வெளிப்படையான கருத்தானது பெண்களை பொதுவாக பள்ளிவாசலுக்கு செல்வதை விட்டும் தடுப்பது கூடாது.எனினும்,உலமாக்கள் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்கள்.அவைகள் ஹதீஸிருந்து எடுக்கப்பட்டவை.நிபந்தனைகள் (பெண்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது) நறுமணம் பூசுவது கூடாது.அலங்காரம் செய்வது கூடாது.நேர்த்தியான ஆடை அணிந்திருப்பது கூடாது.கவர்ந்து இழுக்கும் வசிகரிக்கும் கவர்ச்சி இருக்க கூடாது.(பாதைகளில்) ஆண்களுடன் கலக்காமல் இருப்பது.கன்னிப்பெண்ணாக இருக்கக்கூடாது.கன்னிப்பெண்களை போன்று குழப்பம் ஏற்படும் அபாயம் இல்லாமல் இருக்கவேண்டும்.(பள்ளிவாசலுக்கு செல்லும் பாதை) குழப்பம், பிரச்சினைகளை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்.பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுப்பது சம்பந்தமான ஹதீஸில் உள்ள தடையானது மக்ரூஹ் தன்ஜீஹ் (லேசான மக்ரூஹ்) என்பதாக கருதப்படும்.இந்த நிபந்தனைகளை பேணி பெண் வருவதை தடுப்பது மக்ரூஹ் தன்ஜீஹாகும்.(ஆதாரம்:
ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் லிந்நவவி 4/161,162)

2)இமாம் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுயூத்தி (ரஹ்) அவர்களும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுவதை எடுத்தெழுதியுள்ளார்கள்.
(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம் லிஸ்ஸுயூத்தி 2/156)

3)இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

وقرن فی بيوتكن أى الزمن فلا تخرجن لغير حاجة و من الحوائج الشرعية الصلاة في المسجد بشرطه كما قال رسول الله والعالم: لاتمنعو اماء الله مساجد الله وليخرجن وهن تفلات وفي رواية وبيوتهن خير لهن

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் மற்றும் முஸ்லிம் பெண்மணிகளுக்கு அல்லாஹ்வின் கட்டளையானது வீட்டில் தங்கியிருக்க வேண்டும். தேவையின்றி வெளியேறுவது கூடாது.நிபந்தனைகளை பேணி பள்ளிவாசலுக்கு செல்வது  ஷரீஅத்தின் தேவைகளில்
உள்ளது.ஏனெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுக்காதீர்.அவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியேறினால் ஆடை கந்தலாக இருக்கவேண்டும்.மற்றோர் அறிவிப்பில் தொழுகையை வீட்டில் நிறைவேற்றுவது சிறந்தது.(ஆதாரம்:தப்ஸீர் இப்னு கஸீர் 6/363)

எனவே இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களும் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு நிபந்தனைகள் உண்டு என்கிறார்கள்.

4)இமாம் இராகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
 فيه ان الزوج مأمور أن لا 
يمنعها من المساجد اذا استأذنته و لكن بالشروط۔

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு அனுமதி கேட்டால் அவர்களை தடுக்காதீர்கள் என்பதாக கணவனுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.எனினும், நிபந்தனைகள் உண்டு.(ஆதாரம்:தர்ஹுத்தஸ்ரிப் ஃபி ஷர்ஹித்தக்ரீப் 2/315) 

இமாம் அவர்கள் மேற்சொன்ன நிபந்தனைகளையே பட்டியலிட்டுள்ளார்கள்.

5)இமாம் காளி இயாள் மாலிகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

خروج النساء للمساجد مباح لهن، ولكن على شروط كماجاء الحديث وقاله العلماء: الايخرجن متطيبات، ولامتزينات ولا مزاحمات للرجال وان يكون ذلک) بالليل، ومنع من ذلك الشابة منهن التی تخش فتنته

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு.எனினும், ஹதீஸ்களில் வந்துள்ளதைப் போன்று நிபந்தனைகளும் உண்டு.உலமாக்கள் கூறுகிறார்கள்:நறுமணம் பூசிய நிலையில்,அலங்கரித்த நிலையில், ஆண்களுடன் கலப்பு ஏற்படும் நிலையில் ,இரவு நேரத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வது கூடாது.மேலும் குழப்பம் ஏற்படும் அபாயம் உள்ள வாலிப பெண்கள்(பள்ளிவாசலுக்கு செல்வதை விட்டும்) தடுக்கப்பட்டுள்ளனர். (ஆதாரம்:அல்இக்மால் லில்காளி இயாள் 2/353)

6)ஹாபிள் அபூ ஃபதஹ் இப்னு தகீகுல் ஈத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

الحديث عام في النساء ولكن الفقهاء قد خصوه بشروط

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பெண்கள் விஷயத்தில் பொதுவாக உள்ளது.எனினும்,புகஹாக்கள் நிபந்தனைகளை விதித்து குறிப்பாக்கியுள்ளனர். (ஆதாரம்:இக்ஹாமுல் அஹ்காம் 1/179)

பிறகு ஹாபிழ் அவர்கள் விரிவாக நிபந்தனைகளை கூறி அவைகளை ஹதீஸ்களின் மூலம் நிரூபித்துள்ளார்கள்.

7)ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்,ஹாபிள் இப்னு தகீகுல் ஈதின் (ரஹ்) சொல்லிலிருந்து ஆதாரம் எடுத்து அதனை வலியுறுத்தி விரிவாக விளக்குகிறார்:(அரபி வாசகம் சுருக்கம்)

قال بن دقيق العيد ي هذا الحديث عام في النساء الا ان الفقهاء خصوه بشروط منها: ان لاتتطيب وهو في بعض

الروايات وليخرجن تفلات. . قال ويلحق بالطيب مافی معناه لان سبب المنع منه ما فيه من تحریک داعية الشهوة

کحسن الملبس والحلي الذي يظهر والزينة الفاخرة و كذا الاختلاط بالرجال. . . و قدوردفي بعض طرق هذا الحديث

وغیره مايدل على أن صلاة المرأة في بيتها افضل من صلاتها في المسجد وذلك في رواية حبيب بن ابی ثابت عن بن عمر بلفظ

لا تمنعوا نساؤكم المساجد وبيوتهن خير لهن۔ (اخر جه داود وصححه بن خزيمة)...... ووجه كون صلاتها في الأخفاء

افضل تحقق الأمن فيه من الفتنة ويتأكد ذلک بعد وجودما احدث النساء من التبرج والزينة ومن ثم قالت عائشة رضي الله عنها  ماقالت

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பெண்கள் விஷயத்தில் பொதுவாக உள்ளது.எனினும்,புகஹாக்கள் நிபந்தனைகளை விதித்து குறிப்பாக்கியுள்ளனர். அவைகளில் பள்ளிவாசலுக்கு வரும் பெண் நறுமணம் பூசுவது கூடாது.இந்த நிபந்தனை சில ஹதீஸ்களில் (கந்தல் ஆடையுடன் வெளியேறுதல்) வார்த்தைகளுடன் வந்துள்ளது.இந்த சட்டமானது நறுமணத்தை போன்று இச்சையை தூண்டும் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.ஏனெனில் (வீட்டிலிருந்து வெளியேறும் சமயம்) நறுமணம் உபயோகப்படுத்துவதால்  இச்சையின் உணர்வுகள் 
உருவாகும் என்பதுதான்
தடுக்கப்பட்ட இரகசியமாகும்.(எனவே நறுமணத்தை போன்று இச்சையை உண்டாக்கும் ஒவ்வொன்றும் தடுக்கப்பட்டுள்ளது) அழகான ஆடை,பெருமையும்,
அலங்காரத்தையும் வெளிப்படுத்தும் ஆபரணங்கள்,ஆண்களுடன் கலப்பு ஏற்படுவது (அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது)

பிறகு ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:இந்த ஹதீஸின் சில அறிவிப்பாளர்களின் தொடர்களில்,இவை அல்லாத மற்ற ஹதீஸ்களில் வந்துள்ள வார்த்தைகளின் மூலம் பெண் தனது வீட்டில் தொழுகையை நிறைவேற்றுவது பள்ளிவாசலில் நிறைவேற்றுவதை விட சிறந்தது.பொருத்தமானது.
எவ்வாறெனில் இப்னு உமர் (ரளி) அவர்களின் அறிவிப்பு;நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்காதீர்.எனினும்,வீடு அவர்களுக்கு மிக சிறந்தது.இந்த ஹதீஸை இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இமாம் இப்னு குஜைமா (ரஹ்) அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்கிறார்கள்.

பெண்கள் பர்தாவிற்குள் முழுமையாக மறைந்திருக்கும் நிலையில் தொழுவது சிறந்தது என்பதன் காரணம் இந்த சமயத்தில் பித்னாக்களிலிருந்து (நீங்கி) முழுமையான பாதுகாப்பும் மனநிம்மதியும் கிடைக்கும்.

மேலும் கூறுகிறார்கள்:(நிபந்தனைகளை பேணாத சமயத்தில்) பெண்களின் அலங்காரம், கவர்ச்சி,ஆண்களுடன் கலப்பது போன்ற சீர்கேடுகள் உண்டான பிறகு பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றுவதற்கு பதிலாக வீட்டிலே தொழுகையை நிறைவேற்றும் சட்டம் வலுப்பெறுகிறது.(எனவேதான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நிபந்தனைகளை பேணாமல் இருந்தால் பள்ளிவாசலுக்கு வரும் அனுமதி இல்லை)

 மேலும் கூறுகிறார்கள்:பெண்கள் நிபந்தனைகளை பேணுவதில் குறைப்பாட்டின் சீர்கேட்டின் காரணமாக பள்ளிவாசலுக்கு வரும் சட்டம் மாறிவிட்டது.இதனைதான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்.(ஆதாரம்:பத்ஹுல் பாரி 2/349)

தெளிவு:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,பெண்களை பள்ளிவாசலுக்கு நிபந்தனைகளின் பேரில் தான் அனுமதி அளித்தார்கள் என்பதை இமாம்களின் ஆய்வுகளின் மூலம் புரியமுடிகிறது.அண்ணலாரின் காலத்தில் பெண்கள் முழுமையான பர்தா, நறுமணம் பூசாமல்,கந்தல் ஆடையுடன் அலங்காரமின்றி, ஆண்களுடன் கலக்காமல் வந்துள்ளனர்.

பெண்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் நிபந்தனைகளை முழுமையாக பேணி இந்த காலத்தில் வர முடியுமா? என்பதை அறிவுள்ளவர்கள் எதார்த்தத்தை உணரமுடியும்.நபி ஸல்லல்லாஹூ அவர்கள் பொற்காலமாக கூறிய 
ஸஹாபாக்களின் காலத்தில் பெண்கள் நிபந்தனைகளை பேணுவதில் குறை ஏற்படுத்தினார்கள் எனும் போது இன்றைய நவநாகரீக காலத்தில் பெண்கள் நிபந்தனைகள் பேணமுடியுமா? என்பதை உள்ளம் தொட்டு கூறுங்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

 


 

Tuesday, July 7, 2020

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?

தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? (ஓர் ஆய்வு தொடர்:1)

பெண்கள் வீட்டில் தொழுவது மஸ்ஜிதில் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு சிறந்தது

அபூநயீம் இஸ்பஹானி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

حدثنا إحمد بن ابراهيم بن يوسف ثنا عبد الله بن محمد بن سلام ثنا إسحاق بن راهويه أنا بقية بن الوليد حدثني أبو عبد السلام حدثني نافع عن ابن عمر عن رسول الله صلى الله عليه وسلم قال صلوة المرأة وحدها تفضل صلتها فى الجميع خمس و عشرين درجة 

இப்னு உமர் (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அறிவிக்கிறார்கள்:பெண் (தனது வீட்டில்) தனியாக தொழுவது (ஆண்களுடன்) ஜமாஅத்தாக தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு சிறந்தது.
(ஆதாரம்:தாரீஹ் அபூநயீம் ,2/19)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் குறித்து ஓர் ஆய்வு 

1)அபூநயீம்:
பிரபல்யமானவர்,பலமானவர்,
ஹதீஸ்கலை வல்லுநர்,ஹதீஸ் துறையில் ஹாபிழ் (ஆதாரம்:கிதாபுஸ்ஸிகாத் லில்காஸிம் 1/365,366)

2)இமாம் அஹ்மத் இப்னு இப்ராஹிம் இப்னு யூசுப்:ஹதீஸ்கலை வல்லுநர்,இமாம் 
(ஆதாரம்:ஸியரு அஃலாமின் நுபலா 16/28) மேலும் ளியாவுத்தீன் மக்திஸி அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.மேலும் அவரின் அறிவிப்பை ஆதாரப்பூர்வமானது என சான்றளித்துள்ளார்கள்.
(ஆதாரம்:அல்அஹாதீஸுல் முஹ்தாரா 8/277)

3)அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு ஸலாம் : இமாம் அபூநயீம் இமாம் அபூஷைக்,அப்துல்லாஹ் அவர்களை ஷைக் என்பதாக நற்சான்று அளித்துள்ளனர்.(ஆதாரம்:லிஸானுல் மீஜான் 4/589) ஷைக் என்பது ஹதீஸ் துறையில் நற்சான்றாக கருதப்படுகிறது.(ஆதாரம்:இஸ்திலாஹாதுல் முஹத்திஸீன் 17)

முக்கிய குறிப்பு :அபூநயீம் அபூஷைக்,அப்துல்லாஹ்வின் விஷயத்தில் ஷைக் என்பதுடன் فيه لين (அவரிடத்தில் பலகீனம் உள்ளது) என்பதாகவும் கூறியுள்ளனர்.எனினும் இந்த வார்த்தை ஹதீஸ் துறையில் மிகவும் லேசான விமர்சனமாகும்.

4)இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்:புகாரி,முஸ்லிம் நூல்களின் அறிவிப்பாளர்,பலமானவர்,ஹதீஸ் துறையில் ஹாபிழ்,முஜ்தஹித் (ஆய்வாளர்) (ஆதாரம்:தக்ரீபுத்தஹ்தீப் 332)

5)பகிய்யா இப்னுல் வலீத் அஷ்ஷாமி புகாரி,முஸ்லிம் நூல்களின் அறிவிப்பாளர்,அன்னார் (سماع) கேட்டேன் போன்ற வார்த்தைகளுக்கு கொண்டு அறிவித்தால் ஏற்கலாம்.(ஆதாரம்:அல்காஷிஃப் 619)
இந்த ஹதீஸை அவ்வாறு தான் அறிவித்துள்ளார்.


6)அபூஅப்துஸ்ஸலாம்:ஹாபிள் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் லிஸானுல் மீஜான் 9/115,116 இல் எழுதியுள்ளார்:و قد ذكره ابن ابى حاتم عن أبيه مجهول இப்னு அபூஹாதிம் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்:அபூ அப்துல்லாஹ் அறியப்படாதவர்.எனினும்,இப்னு அபூஹாதிம் அவர்கள் அல்ஜர்ஹு வத்தஃதீல் 4/403 இல் முழுமையான பெயர் ஸாலிஹ் இப்னு ருஸ்தும் அபூ அப்துஸ்ஸலாம் திமிஷ்கி என்பதாக குறிப்பிட்டுள்ளார்.


ஹாபிழ் இப்னுல்ஹஜர் (ரஹ்) அவர்கள் தஹ்தீபுத்தஹ்தீப் 4/391 இல் அறியப்படாதவர் என்பதற்கு பதிலளித்து இப்னு ஹிப்பான்,இப்னு ஷாஹீன் பலமானவர் என்பதாக கூறியதை எடுத்துக்காட்டியுள்ளார்.

பெருமானாரின் ஹதீஸிற்கு ஏற்ப தொழுகைக்கு பள்ளிவாசல் செல்லும் பெண்களை தடுப்பது கூடும்

حدثنا أبو بكر بن أبي شيبة ثنا زيد بن الحباب عن بن لهيعة ثنا عبد الحميد بن المنذر الساعدي عن أبيه عن  جدته أم حميد قالت قلت يا رسول الله يمنعنا أزواجنا أن نصلي معك ونحب الصلاة معك فقال رسول الله صلى الله عليه وسلم صلاتكن في حجركن أفضل من صلاتكن في دوركن وصلاتكن في دوركن أفضل من صلاتكن في الجماعة

உம்மு ஹுமைத் (ரளி) அவர்கள் 
யா ரசூலுல்லாஹ்! உங்களுடன் தொழுவதை விரும்புகிறேன்.(எனது) கணவர் உங்களுடன் தொழுவதை தடுக்கிறார் என கூறினார்கள்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உமது வீட்டில் உள்அறையில் தொழுவது வீட்டின் பொதுவில் தொழுவதை விட சிறந்தது.வீட்டின் பொதுவில் தொழுவது (ஆண்களின்) ஜமாஅத்துடன் தொழுவதை விட சிறந்தது.
(ஆதாரம்:அல்ஆஹாத் வல் மஸானி ஹதீஸ் இலக்கம்:3379)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் குறித்து ஓர் ஆய்வு 

1)இமாம் அபூபக்கர் இப்னு அபூஆஸிம்:பலமானவர்,ஹாபிழ் (ஆதாரம்:தாரீஹுல் இஸ்லாம் 6/684)

2)இமாம் அபூபக்கர் இப்னு அபூஷைபா:பலமானவர் (ஆதாரம்:தக்ரீப் 3375)

3)ஜைத் இப்னுல் ஹபாப்: உண்மையாளர் (ஆதாரம்:தக்ரீப் 2124)

4)அப்துல்லாஹ் இப்னு லஹீயா: இவர் மீது விமர்சனம் உள்ளது.எனினும் இவருடன் இரு துணை சான்றுகள் உள்ளது.இதனை பின்னால் பார்ப்போம்.

5)அப்துல் ஹுமைத் இப்னுல் முன்திர் அஸ்ஸாயிதி 

6) முன்திர் 
இமாம் பைஹகி ரஹ் அவர்கள் இவர்களின் அறிவிப்பை ஆதாரப்பூர்வமானது என்பதாக கூறியுள்ளார்கள்.

7)உம்மு ஹுமைத்: அபூஹுமைதிஸ்ஸாயிதி அவர்களின் மனைவி 

இந்த ஹதீஸும் ஏற்கத்தக்கது.மேலும் இந்த ஹதீஸிற்கு துணைசான்றுகளும் உண்டு.

துணை சான்று (1):

حدثنا عقبة بن مكرم ثنا عبد الله بن حرب الليثى ثنا محمد بن نعمان ثنا يحيى بن العلاء ثنا اسيد الساعدي عن سعيد بن المنذر عن ام حميد عن النبي صلى الله عليه وسلم ....... 
(ஆதாரம்:அல்ஆஹாத் வல் மஸானி ஹதீஸ் இலக்கம்:3380)

துணை சான்று (2):

أخبرنا أبو الحسن علي بن محمد بن عبدالله بن بشران العدل ببغداد انبا ابو الحسن علي بن محمد بن احمد المصري ثنا يحيى بن عثمان بن صالح ثنا إبراهيم بن مروان ابو بكر ثنا عبد المؤمن بن عبد الله الكناني عن عبدالحميد بن المنذر بن أبي حميدالساعدي عن أبيه عن  جدته أم حميد قالت قلت يا رسول الله يمنعنا أزواجنا أن نصلي معك ونحب الصلاة معك......


இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை பதிவு செய்து விட்டு பின்வருமாறு கூறுகிறார்கள்:

تابعه أيضا ابن لهيعة عن عبد الحميد و فيه دلالة على الأمر بأن لا يمنعن أمر ندب و استحباب لا أمر فرض و إيجاب و هو قول العامة من أهل العلم 


 இப்னு லஹீயா அவர்கள் அப்துல் முஃமின் இப்னு அப்துல்லாஹ்விற்கு துணைசான்றாக உள்ளார்.மேலும் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்கவேண்டாம் என்பதாக கூறியது விரும்பத்தக்கது,

அனுமதிக்கப்பட்டது என்பது தான்.மாறாக (தடுக்கவேண்டாம் என்பது) கட்டளையோ,வலியுறுத்தியோ இல்லை.இதுதான் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.(ஆதாரம்:அஸ்ஸுனனுல் குப்ரா ஹதீஸ் இலக்கம்:5371)

இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸிலிருந்து ஆதாரம் மட்டும் எடுக்கவில்லை.மாறாக அதற்கு விளக்கமும் தருகிறார்கள்.அதாவது பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்காதீர் என்பதாக கூறியது அனுமதி,விரும்பத்தக்கது என்பதின் காரணமாகும்.மாறாக தடுக்க கூடாது என்பது கடமையோ,கட்டாயமோ இல்லை.ஏனெனில் ஸஹாபாக்கள் தங்கள் மனைவிமார்களை பள்ளிக்கு செல்வதை தடுத்த விஷயம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரிந்த போதும் அதன்பேரில்  ஸஹாபாக்களை கண்டிக்கவில்லை.
அத்துடன் வீட்டில் தொழுவதை தான் பெண்களுக்கு சிறப்பித்துக் கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அலங்காரத்துடன் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை கண்டித்தார்கள்

حدثنا أبو بكر بن أبي شيبة وعلي بن محمد قالا حدثنا عبيد الله بن موسى عن موسى بن عبيدة عن داود بن مدرك عن عروة بن الزبير عن عائشة قالت بينما رسول الله صلى الله عليه وسلم جالس في المسجد إذ دخلت امرأة من مزينة ترفل في زينة لها في المسجد فقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس انهوا نساءكم عن لبس الزينة والتبختر في المسجد فإن بني إسرائيل لم يلعنوا حتى لبس نساؤهم الزينة وتبخترن في المساجد


ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த போது முஜீனா கபீலாவை சேர்ந்த பெண் அலங்காரமான ஆடையுடன் நுழைந்தாள்.(மிடுக்குடன் நடந்து வருவதை பார்த்து) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:மக்களே! பெண்கள் மஸ்ஜிதில் அலங்காரமான ஆடையுடன்,பெருமை நிறைந்த ஆடையுடன் வருவதை தடுங்கள்.பனுஇஸ்ராயீல்கள் சபிக்கப்பட்டது அவர்களின் பெண்கள் அலங்காரமான ஆடையை (அணிந்து வெளிவர) ஆரம்பித்தனர்.மஸ்ஜிதிற்கு பெருமையுடன் வர ஆரம்பித்தனர்.(ஆதாரம்:இப்னுமாஜா ,ஹதீஸ் இலக்கம்:4001)


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் குறித்து ஆய்வு

1) இமாம் இப்னு மாஜா : பிரபல்யமான அறிஞர்,இமாம்,பலமானவர், ஹாபிழ் (ஆதாரம்:தாரீகுல் இஸ்லாம்,6/625,626)

2) இமாம் அபூபக்கர் இப்னுஅபூ ஷைபா : பிரபல்யமான இமாம்,பலமானவர்,ஹாபிள், ஹதீஸ் நூல்களை எழுதியவர் (ஆதாரம்:தக்ரீப் ,3575)

இதே போன்று இமாம் இப்னு மாஜாவின் மற்றொரு ஆசிரியர் இமாம் அலி இப்னு முஹம்மத் தனாபிஸி (ஆதாரம்:தக்ரீப் ,4791)


3) உபைதுல்லாஹ் இப்னு

மூஸா  அபூ முஹ்தார்:பலமானவர் (ஆதாரம்:தக்ரீப் ,4376)

4)மூஸா இப்னு உபைதாவின் விஷயத்தில் ஹதீஸ்கலை வல்லுநர்களிடத்தில் கருத்துவேறுபாடுகள் உள்ளது.
இமாம் இஜ்லி,இமாம் வகீஃ,இப்னு ஸஃது போன்ற அறிஞர்கள் பலமானவர் என்பதாக கூறியுள்ளனர்.அஹ்மத் இப்னு ஹன்பல்:எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்.இமாம் அபூதாவூத்: அவரின் ஹதீஸ்கள் சரியானது.எனினும் உபைதுல்லாஹ் இப்னு தீனாரிடமிருந்து அறிவிப்பை சரியில்லை.(இந்த அறிவிப்பை உபைதுல்லாஹ் இப்னு தீனாரிடமிருந்து அறிவிக்கவில்லை) (ஆதாரம்:இக்மால் தஹ்தீபுல் கமால் 12/28,தஹ்தீபுத்தஹ்தீப்)

சில ஹதீஸ்கலை வல்லுனர்கள் இவரைக் குறித்து விமர்சித்துள்ளனர்.எனினும்,
அறிவிப்பில் அவரின் மீதுள்ள விமர்சனம் நிராகரிக்கப்பட்டது.ஏனெனில் இந்த ஹதீஸிற்கு மற்றொரு துணைச்சான்றாக ஜைத் இப்னுல் ஹபாப்   உள்ளார்.மேலும் இந்த ஹதீஸிற்கு வலுவூட்டும் முர்ஸலான ஹதீஸ் உண்டு.எனவே மூஸா இப்னு உபைதா அவர்களின் மீதுள்ள விமர்சனம் வீணானது.இந்த அறிவிப்பானது துணைச்சான்றின் மூலம் பலம் பெற்று ஏற்கத்தக்க தரத்தை அடைகிறது.

5)தாவூத் இப்னு முத்ரிக்:(மக்பூல்) ஏற்கத்தக்கவர்.ஏனெனில் இவரிடமிருந்து இருவர் அறிவித்துள்ளனர்.
a) இமாம் அபூபக்கர் இப்னு அபூஷைபா:பலமானவர்,
ஹதீஸ்கலை வல்லுநர்,ஹதீஸ்களில் ஹாபிழ் (ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா பக்கம்:337 பாகம்:7)
b)ஜைது இப்னுல் ஹபாப்  :முஸ்லிம் நூலின் அறிவிப்பாளர்.(ஆதாரம்:அல்காமில் 166/4)


6)இமாம் உர்வா இப்னு ஜுபைர்:பலமானவர்..(ஆதாரம்:தக்ரீப் 4561)


7)ஆயிஷா ரளி அன்ஹா அவர்கள் ஸஹாபி 

இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கது தான்.மேலும் துணைசான்றுகளும் உண்டு.

துணைசான்று (1):

இமாம் இப்னு அதி (ரஹ்)  அவர்கள் அறிவிக்கிறார்கள்; 

ثنا إسحاق بن أحمد بن جعفر الكاغدي ثنا أبو سعيد الأشج ثنا زيد بن الحباب عن داود بن مدرك عن عروة عن عائشة ان رسول الله صلى الله عليه وسلم مر بامرأة من مزينة ترتفل في زينة لها في المسجد فقال: [إنما لعن بنو إسرائيل حيث زينوا نساءهم وتبخترن في المساجد 

(ஆதாரம்:அல்காமில் லிஇப்னு அதி பாகம்:4, பக்கம்: இமாம்ம166)

இந்த அறிவிப்பில் ஜைத் இப்னு ஹபாப் அவர்கள் மூஸா இப்னு உபைதா அவர்களுக்கு துணை ஆதாரமாக உள்ளார்.

துணை சான்று (2):

இந்த அறிவிப்பு முர்ஸலாக இமாம் அவ்ஜாயி ரஹ் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ابو شعيب قال
: حدثني يحيى، ثنا الأوزاعی، قال: بصر رسول الله صلى الله عليه وسلم بامرأة متزينة قدلبست زينتها وهي الناس انهوا نساء کم عن الزينةو التبخترفي المساجد. انمالعنت بنو اسرائيل حيث لبست نساءهم الزينة ۔ تبخترن فى المساجد 

ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் குறித்து ஆய்வு 

1)இமாம் ஷுஐப் ஹர்ரானி:இமாம்,ஹதீஸ்கலை வல்லுநர்,பலமானவர்.

2)யஹ்யா என்பது யஹ்யா இப்னு அப்துல்லாஹ் இப்னு ளஹ்ஹாக் பாப்லுத்தி : இமாம் இப்னு அதி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:يحي البابلتي عن الأوزاعي احاديث صالحة யஹ்யா அவர்கள் அவ்ஜாயிடமிருந்து அறிவிப்பு சரியானது.(ஆதாரம்:அல்காமில் லி இப்னு அதி 9/120)

3)இமாம் அவ்ஜாயி (ரஹ்): பிரபல்யமான அறிஞர்,பலமானவர்,ஃபகீஹ், மேன்மை மிக்கவர்.(ஆதாரம்:தக்ரீப்:3967)

எனவே முர்ஸலான அறிவிப்பாளர் தொடரும் ஆதாரப்பூர்வமானது.ஆதலால்

அறிஞர் முன்திரி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பை (விமர்சிக்காமல்)மெளனத்தை கடைப்பிடித்துள்ளார்கள்.(ஆதாரம்:அத்தர்ஙீப் வ த்தர்ஹீப் 3/25)

பெண்கள்  பள்ளிவாசலுக்கு வருவதற்குரிய நிபந்தனைகள்

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? கூடாதா? என்கிற ஆய்வில் மத்ஹப் மறுப்பாளர்கள் அறியாமையில்,ஞானமின்றி இக்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு தாரளமாக வரலாம் என வாதிடுகின்றனர்.உங்களின் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதி கேட்டால் தடை செய்யாதீர்கள் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை முன்வைக்கின்றனர்.

பதில்:கைசேதம் என்னவெனில் மத்ஹப் மறுப்பாளர்கள் அரைகுறையாக ஹதீஸ்களை முன்வைக்கிறார்கள்.ஆனால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களை பள்ளிவாசலுக்கு வரும்படி அனுமதி அளித்து சில நிபந்தனைகளை பேணும்படி வலியுறுத்தினார்கள்.அவைகளை பேணாமல் சென்றால் தடுக்கும் படி ஸஹாபாக்களுக்கு உத்தரவிட்டார்கள்.எனினும், மத்ஹப் மறுப்பாளர்கள் அவைகளை கூறுவதில்லை.

1) பர்தா பேணுவது
இமாம் புகாரி (ரஹ்) அறிவிக்கிறார்கள்:

يَحْيَى بْنُ بُكَيْرٍ ، قَالَ 
 : أَخْبَرَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، قَالَ : أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ ، قَالَتْ :  كُنَّ نِسَاءُ  المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ  مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ  الغَلَسِ

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. 
(ஆதாரம்:புகாரி, ஹதீஸ் எண்:578)

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும்போது முழுமையாக பர்தாவை பேணி வரவேண்டும் என்பது இந்த ஹதீஸிலிருந்து புரியமுடிகிறது.

2) நறுமணம் பூசுவதை தவிர்ப்பது

 حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يحيى بن سعيد القطان عن محمد بن عجلان حدثني بكير بن عبد الله بن الأشج عن بسر بن سعيد عن زينب امرأة عبد الله قالت قال لنا رسول الله صلى الله عليه وسلم إذا شهدت إحداكن المسجد فلا تمس طيبا

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது;
நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.(ஆதாரம்: முஸ்லிம் ஹதீஸ் இலக்கம்:569)


حدثنا یحیی بن يحيى، و اسحاق بن ابراهيم قال اسحاق ابراهيم قال يحيى: اخبرنا عبد الله بن محمد بن عبداللهبن ابی فروق عن یزیدبن خصيفة عن بسر بن سعيد، عن ابي هريرة ك قال: قال رسول الله الله علم : ايما امرأة اصابت بخورأفلاتشهد معنا العشاء الآخرة



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம்:570)


 مرت بابی هریرة امرأة وريحها تعصف فقال لها: الی این تریدین یا امة الجبار قالت: الى المسجد، قال: تطيبت؟ قالت: نعم، قال فارجع فاعتسلی، فانی سمعت رسول الله المعيقول: لا يقبل الله من امراة صلاة خرجت الى المسجد وريحها تعصف حتى ترجع فتغتسل


மூஸா இப்னு யஸார் அவர்கள் கூறுகிறார்கள்:அபூஹுரைரா (ரளி) அவர்களின் அருகில் ஒரு பெண்மணி கடந்து சென்றாள்.அவளின் ஆடையில் நறுமணம் கமழ்ந்தது.ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் கேட்டார்கள்: அடக்கியாளும் அல்லாஹ்வின் அடிமையே! எங்கு செல்கிறாய்? அதற்கு பெண்மணி பள்ளிவாசலுக்கு செல்கிறேன் என கூறினாள்.அன்னார்,நறுமணம் பூசியுள்ளாயா? என வினவினார்."ஆம்" என அவள் கூறினாள்.அன்னார் கூறினார்;திரும்பி சென்று ஆடையை கழுவி விடுவாயாக! "எந்தப் பெண்மணி ஆடையில் நறுமணம் கமழும் நிலையில் பள்ளிவாசலுக்கு வந்தால் திரும்பி சென்று குளிக்கும் வரை அல்லாஹ் அவளின் தொழுகையை ஏற்க மாட்டான்" என்பதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு குஜைமா ஹதீஸ் இலக்கம் :1682)

இமாம் இப்னு குஜைமா ஸஹீஹ் என்கிறார். இமாம் முன்திரி (ரஹ்) அறிவிப்பாளர் தொடர் முத்தஸிலாகவும், (சங்கிலி தொடர் விடுபடாமல்) அறிவிப்பாளர்கள் பலமானவர்களாக உள்ளார்கள்.(ஆதாரம்:அத்தர்ஙீப் 
வ த்தர்ஹீப் 3/94)

இந்த அறிவிப்பு வார்த்தைகள், அறிவிப்பாளர்கள் மாற்றத்துடன் அபூதாவூத் 4/74,முஸ்னதுல் ஹுமைதி 1001 உள்ளது.

முக்கிய குறிப்பு: இமாம் அபூஹாதம் கூறுகிறார்:மூஸா இப்னு யஸார் அவர்கள்,அபூஹுரைரா (ரளி) அவர்களை அடையவில்லை.எனவே இந்த அறிவிப்பு முர்ஸல் (அறிவிப்பாளர் விடுபட்டது) எனினும்,அலாயி (ரஹ்) அவர்கள் ذاك سمع من أبي هريرة அவர் அபூஹுரைரா (ரளி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளார்.(ஆதாரம்:ஜாமிஉத்தஹ்ஸீல் ஃபீ அஹ்காமில் மராஸீல் ,289) மேலும் முன்திரி (ரஹ்) அவர்களும் அறிவிப்பாளர் தொடர் முத்தஸிலாக (சங்கிலி தொடர் விடுபடாமல்) உள்ளது என்கிறார்கள்.


3) கந்தல் ஆடையில் செல்வது  


حدثنا موسی بن اسماعیل، حدثنا حماد عن محمد بن عمرو عن ابی سلمة عن ابي هريرة ان رسول الله الله عنه قال :لا تمنعوا  اماءالله  مساجدالله و لكن ليخر جن وهن تفلات

அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் அடிமைகளான பெண்கள் மஸ்ஜிதிற்கு செல்வதை தடுக்காதீர்கள்.எனினும்,அவர்கள் (அலங்காரம் இல்லாமல்) கந்தல் ஆடையில் செல்லட்டும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.(ஆதாரம்:சுனன் அபூதாவூத்,ஹதீஸ் இலக்கம்:565,இப்னுல் ஜாரூத் ,இப்னு குஜைமா ,இப்னு ஹிப்பான்,இமாம் பஙவி,இப்னுல் முலக்கின் போன்ற அறிஞர்கள் ஆதாரப்பூர்வமானது என்கிறார்கள்.(ஆதாரம்:அல்முன்தகா லிஇப்னுல் ஜாரூத் 332)

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லும் போது கந்தல் ஆடையில் செல்ல வேண்டும் என்பதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை இதன்மூலம் அறியமுடிகிறது.

  இதே போன்று இந்த அறிவிப்பானது வார்த்தைகள் மாற்றத்துடன் பின்வரும் ஸஹாபாக்களின் வாயிலாக வந்துள்ளது.
1)இப்னு உமர் (ரளி) (ஆதாரம்:ஹதீஸுஸ்ஸிராஜி,
ஹதீஸ் இலக்கம்: 251)

2)ஜைத் இப்னு ஹாலிதுல் ஜுஹனி (ஆதாரம்:ஸஹீஹ் இப்னு ஹிப்பான்,ஹதீஸ் இலக்கம்:2211)

இப்னு ஹிப்பான் அவர்கள் ஸஹீஹ் என்பதாக கூறியுள்ளார்.இமாம் ஹைஸமி அவர்கள் ஹஸன் என கூறியுள்ளார்கள்.(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித்,
ஹதீஸ் இலக்கம்:2098)

3)ஆயிஷா (ரளி) (ஆதாரம்:முஸ்னத் அஹ்மத்,ஹதீஸ் இலக்கம்:24,406)

முக்கிய குறிப்பு:ஹதீஸில் வரும் வாசகம் تفلات இதனின் ஒருமை تفل என்பதாகும்.இதனின் பொருள்:துர்வாடை வீசுவது என்கிறார்கள்.(ஆதாரம்:அல்ஃபாயிகு ஃபி ஙரீபில் ஹதீஸ்,பாகம்:1, பக்கம்:151) இதனை தான் வஹீதுஜ்ஜமான் கூறுகிறார்.(ஆதாரம்:லுஙாதுல் ஹதீஸ் அரபி உர்து பக்கம்:16) சில மார்க்க அறிஞர்களிடத்தில் பெண்கள் நறுமணம் பூசாமல் வருவது என்பதாக பொருள் கூறுகின்றனர்.எனினும்,கந்தலான துர்வாடையில் வருவது என்பதுதான் பொருத்தமானது.இதற்கு வலுவூட்டும் விதமாக மற்றொரு ஹதீஸில் வரும் வாசகம்:ليخرجن تفلات عليهن خلقات شعثات بغير دهن பெண்கள்,துர்வாடையுடன் கந்தலான ஆடை அணிந்து,தலைக்கு எண்ணெய் பூசாமல் வரவேண்டும்.(ஆதாரம்:முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக் ஹதீஸ் இலக்கம்:5108) இதனின் அறிவிப்பாளர் தொடரில் லைஸ் இப்னு அபூ ஸுலைம் குறித்து அதிகமான அறிஞர்கள் நற்சான்று தந்துள்ளனர்.சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.எனவே இந்த ஹதீஸ் ஹஸன் (ஏற்கத்தக்கது) எனும் தரத்தை அடைந்துள்ளது.

4)ஆண்களுடன் கலக்காமல் இருப்பது 

قالت كان رسول الله والمعلم إذا سلم قام النساء حين يقضی تسليمه ویمکث هو في مقامه يسير قبل ان يقوم، قال:نری - والله اعلم ان ذلک کان لکی بنصرف النساء قبل ان یدرکهن أحد من الرجال 

உம்முஸலமா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள். 
ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன்னால் பெண்கள் திரும்பிச் செல்வதற்காகவே இப்படி நபி(ஸல்) செய்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன் என ஸுஹ்ரி கூறுகிறார்.(ஆதாரம்: புகாரி,ஹதீஸ் இலக்கம்:870)

5) அலங்காரத்தை விட்டுவிடுவது 


حدثنا أبو بكر بن أبي شيبة وعلي بن محمد قالا حدثنا عبيد الله بن موسى عن موسى بن عبيدة عن داود بن مدرك عن عروة بن الزبير عن عائشة قالت بينما رسول الله صلى الله عليه وسلم جالس في المسجد إذ دخلت امرأة من مزينة ترفل في زينة لها في المسجد فقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس انهوا نساءكم عن لبس الزينة والتبختر في المسجد فإن بني إسرائيل لم يلعنوا حتى لبس نساؤهم الزينة وتبخترن في المساجد


ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த போது முஜீனா கபீலாவை சேர்ந்த பெண் அலங்காரமான ஆடையுடன் நுழைந்தாள்.(மிடுக்குடன் நடந்து வருவதை பார்த்து) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:மக்களே! பெண்கள் மஸ்ஜிதில் அலங்காரமான ஆடையுடன்,பெருமை நிறைந்த ஆடையுடன் வருவதை தடுங்கள்.பனுஇஸ்ராயீல்கள் சபிக்கப்பட்டது அவர்களின் பெண்கள் அலங்காரமான ஆடையை (அணிந்து வெளிவர) ஆரம்பித்தனர்.மஸ்ஜிதிற்கு பெருமையுடன் வர ஆரம்பித்தனர்.(ஆதாரம்:இப்னுமாஜா ,ஹதீஸ் இலக்கம்:4001)

6)பெண்கள் பள்ளிவாசலுக்கு இஷா,பஜ்ரு தொழுகைக்கு மட்டும் வருவது

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பஜ்ர்,இஷா தொழுகைக்கு மட்டும் செல்வதற்கு அனுமதி இருந்தது.ஆனால்,இன்று மத்ஹப் மறுப்பாளர்கள் ஐந்து நேர தொழுகைக்கும் பெண்கள் வருவதற்கு என்பதாக வாதிடுகின்றனர்.ஆனால் பொற்கால நூற்றாண்டுகளில் இந்த நடைமுறை இருந்தது இல்லை.ஆனால்,இன்றோ குழப்பங்களும்,கெடுதிகளும் நிறைந்துள்ள காலமாகும்.ஐந்து நேர தொழுகைகளுக்கும் செல்லலாம் என்பதற்கு என்பதற்கு ஓர் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருந்தால் நிரூபியுங்கள்.லுஹர்,அஸர்,மஃரிப் தொழுகைகளில் பெண்கள் கலந்து கொண்டார்கள் என்பதை காண்பியுங்கள்.இமாம் புகாரி ரஹ் அவர்கள் خروج النساء إلى المساجد بالليل و الغلس (இரவிலும் இருட்டிலும் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வது) என்ற தலைப்பில் வரும் ஹதீஸ்
عن ابن عمر رضي الله عنه  عن النبي صلى الله عليه وسلم قال إذا استاذنكم النساء من الخروج إلى المسجد
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களிடம், பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.(ஆதாரம்:புகாரி:865)

عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا النساء من الخروج إلى المسجد بالليل 
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:இரவில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை தடுக்க வேண்டாம் என இப்னு உமர் ரளி அவர்கள் அறிவித்தார்.(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம்1/183, அபூதாவூத் பக்கம்:89,திர்மிதி 1/127,அஸ்ஸுனனுல் குப்ரா பைஹகி 4/320)

عن ابن عمر رضي الله عنه قال كانت امرأة تشهد لعمر  صلاة الصبح و العشاء فى الجماعة فى المسجد قيل لها لم تخرجين و قد تعلمين أن عمر رضي الله عنه يكره ذلك و يغار .......

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார்.
(ஆதாரம்:புகாரி 1/123,முஸன்னப் இப்னு அபீஷைபா 2/383,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 4/320)
ஆகவே பெண்கள்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஐந்து நேர தொழுகைக்கும் வரவில்லை.இஷா,பஜ்ரு தொழுகைக்கு மட்டும் வந்துள்ளார்கள் என்பதை முன்னால் உள்ள அறிவிப்புகளிலிருந்து புரியமுடிகிறது.

7)தனியானதொரு வாயிலில் நுழைவது

عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو تركنا هذا الباب للنساء قال نافع فلم يدخل منه ابن عمر حتى مات 
இந்த வாயிலை பெண்களுக்கு நாம் விடுவது (மிகவும் நல்லது) என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.நாஃபிஉ கூறுகிறார்:இப்னு உமர் ரளி அவர்கள் தனது மரணம் வரை அந்த வாயிலில் நுழையவில்லை.(ஆதாரம்:66,84)

عن ابن عمر رضي الله عنه قال إن عمربن الخطاب كان ينهى أن يدخل من باب النساء 
ஹள்ரத் உமர் ரளி அவர்கள், பெண்களின் வாயிலில் வருவதை தடுத்துக் கொண்டிருந்தார்கள்.(ஆதாரம்:சுனன் அபூதாவூத் பக்கம்:67)

ஆக சுருக்கம் என்னவெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விதித்த நிபந்தனைகளை பெண்கள் பேணி நடக்கும் போது,பள்ளிவாசலுக்கு செல்வதற்கு அனுமதி கொடுக்கவேண்டும்.ஆனால், எதார்த்தம் என்னவெனில் வீட்டுப்பெண்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் இந்த நிபந்தனைகளை பேணி செல்வது முடியுமா? நடுநிலையான வாசகர்கள் திறந்த மனதுடன் சிந்தித்துப் பாருங்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)