Friday, December 25, 2020

மத்ஹபுகளின் அவசியம்-குர்ஆன்,சுன்னா ஒளியில்

மத்ஹபுகளின் அவசியம் தொடர்:2

அல்லாமா அப்துல் ஙனி 
நாபிலிஸி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

الأمر المتفق عليه المعلوم من الدين بالضرورة لا يحتاج إلى التقليد فيه لأحد الأربعة كفرضية الصلوة و الصوم و الزكوة والحج و نحوها و حرمة الزنا و اللواطة و شرب الخمر و القتل و السرقة و الغضب و ما أشبه ذلك و الأمر المختلف فيه هو الذي يحتاج إلى التقليد فيه 


மார்க்கத்தில் உறுதிமிக்க சட்டங்களில் நான்கு அறிஞர்களை பின்பற்றுவது அவசியமில்லை.உதாரணமாக தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ் போன்ற கடமையான காரியங்களிலும் விபச்சாரம்,
மதுஅருந்துவது, ஓரினச்சேர்க்கை,கொலை,
கொள்ளை,திருட்டு போன்ற மார்க்கம் தடுத்த காரியங்களிலும் (தக்லீத்) இல்லை.தக்லீத் என்பது மார்க்கத்தில் கருத்துவேறுபாடுகள் கொண்ட சட்டங்களில் தான் அவசியமாகும்.

(ஆதாரம்:குலாஸதுத்தஹ்கீக் ஃபி ஹுக்மித் தக்லீத் வ த்தல்ஃபீக்)

அல்லாமா பக்தாதி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்

واما الأحكام الشرعية فضربان : أحدهما يعلم ضرورة من دين الرسول كالصلوات الخمس والزكوات ، وصوم شهر رمضان ، والحج ، وتحريم الزنا وشرب الخمر ، وما أشبه ذلك . فهذا لا يجوز التقليد فيه لأن الناس كلهم يشتركون في ادراكه والعلم به فلا معنى للتقليد فيه

وضرب آخر لا يعلم إلا بالنظر والاستدلال كفروع العبادات ، والمعاملات ، والفروج ، والمناكحات ، وغير ذلك من الأحكام ، فهذا يسوغ فيه التقليد بدليل قول الله تعالى : ( { فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون } ) [53] ولأنا لو منعنا التقليد  في هذه المسائل التي هي من فروع الدين لاحتاج كل أحد أن يتعلم ذلك ، وفي إيجاب ذلك قطع عن المعائش ، وهلاك الحرث والماشية فوجب أن يسقط

ஷரீஅத்தின் சட்டங்கள் இருவகைப்படும் ஒன்று தீர்க்கமான உறுதியான 
சட்டங்கள் ஐந்து நேர தொழுகைகள்,ஜகாத்,ரமளான் நோன்பு,ஹஜ் போன்றவைகளிலும் மார்க்கம் தடுத்த காரியங்களான விபச்சாரம் மது அருந்துவது போன்றவைகளில் தக்லீத் என்பது அறவே கிடையாது.மற்றொன்று இதனை அறிவது புரிவது ஆய்வின்றி முடியாது.வணக்கங்கள்,வியாபார சட்டங்கள்,திருமண சட்டங்கள் போன்ற கிளைச்சட்டங்களில் தக்லீத் என்பது சரியானது.ஏனெனில் அல்லாஹுத்தஆலா கூறுகிறான் فاسئلوا أهل الذكر إن كنتم لا تعلمون மார்க்கத்தின் கிளை சட்டங்களில் தக்லீத் செய்வதை தடுத்தால் ஒவ்வொருவரும் அறிந்து அமல் செய்ய வேண்டும் என்பதை அவசியமாக்கினால் வாழ்வின் அவசியத்தேவைகள் அனைத்தும் வீணாகிவிடும்.விளைநிலங்கள்,வாழ்வாதாரங்கள் அழிந்து போகும்.எனவே ஒவ்வொருவரும் ஆராய்ந்து பின்பற்றுவது கட்டளையிடவில்லை.

(ஆதாரம்:அல்ஃபகீஹ் வல் முத்தஃபகா லில்கதீப் பஃதாதி 2/67,68)

முஜ்தஹித்களான இமாம்களின் சொல்லானது அல்லாஹ்வின் சொல்லிற்கு நிகரானது அல்லது ஷரீஅத்தை உருவாக்கியவர்கள் என்பதாக ஒரு போதும் முகல்லித்கள் (இமாமை பின்பற்றுபவர்கள்) எண்ணவில்லை.இமாம்களை தக்லீத் செய்வதன் அசலான நோக்கம் குர்ஆன்,சுன்னாவை பின்பற்றவேண்டும் என்பதுதான்.அவர்கள் குர்ஆன்,சுன்னாவின் நோக்கத்தை, புரிதலை விளக்கி தரும் விரிவுரையாளர்கள் என்பதாகதான் கருதப்பட்டு அமல் செய்யப்படுகிறது.இதனால்தான் குர்ஆன்,சுன்னாவின் உறுதிமிக்க, தீர்க்கமான சட்டங்களில் இமாம்களை தக்லீத் அவசியமில்லை என்பதை நம்புகிறோம்.


இதற்கு மிகப்பெரிய ஆதாரம் 

  எத்தனையோ சட்டங்களில் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் தீர்ப்புக்களை எடுக்காமல் அவர்களின் மாணவர்களான இமாம் அபியூசுப் (ரஹ்) இமாம் முஹம்மத் (ரஹ்) அவர்களின் தீர்ப்புகளை எடுத்து அமல்செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி நிர்பந்தமான சூழ்நிலைகளில் மற்ற மத்ஹபுகளை பின்பற்றுவதற்கும் அனுமதியுள்ளது.

இதற்கு நேர்மாற்றமாக மத்ஹபுகள் கூடாது.குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிரானது, கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்,என்பதாக நம்மை விமர்சிக்கும் மத்ஹப் மறுப்பாளர்கள் அவர்களின் இயக்கத்தின் ஆய்வுகள்,கருத்துக்களை தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிறிது கூட மாற்று கருத்தின்றி அமல்செய்கிறார்கள்.இதற்கு ஏராளனமான உதாரணங்களை கூறமுடியும்.

இரண்டு உதாரணங்கள் மட்டும் புரிந்து கொள்வதற்கு போதுமானது.

உதாரணம்:(1) நோன்பு திறக்கும் போது 'அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து' என்ற துஆ பலகீனமானது என்பதாக கூறி 'தஹபள்ளமவு' என்ற துஆ ஓத வேண்டும் என்று கூறினர்.
இதனை நடைமுறைப்படுத்தினர்.
பல ஆண்டுகள் கழிந்த பிறகு இதனையும் பலவீனம் என்பதாக கூறி நிலைப்பாட்டை மாற்றிவிட்டனர்.அதற்கு கூறும் காரணத்தைப் பாருங்கள்!

//தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ

இந்த நிலையில் நோன்பு துறக்கும்போது, தஹபள்ளமவு.. என்று தொடங்கும் துஆவைஓதுவது நபிமொழி என்று நாம் கூறினோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம்,பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம்கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.

எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில்கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள்பதிவு செய்து விட்டுப் பின்வருமாறுகூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரானமர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்துஅறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி,முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்றுகுறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான்பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்றுஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதைவழிமொழிந்தோம்.

இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான்ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்றுஅறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலானஅறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர்விமர்சனம் செய்திருந்தாலும் அதில்பெரும்பாலானவற்றுக்குப் பதிலும்அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம்பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில்அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.
ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறுஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம்நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது.மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான்அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள்கூறுவது மறு ஆய்வின்போது நமக்குத் தெரிய வருகின்றது.//

இந்த துஆவை ஏறத்தாழ இருபது வருடங்களாக அனைவரும்  அமல்செய்து வந்தனர்.
அவர்களின் இயக்கத்தின் தலைவர் மறுஆய்வில் பலவீனமானது என்பதை அறிவித்தவுடன் அனைவரும் பலவீனம் என்பதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதில் நமது கேள்வி என்னவெனில் 

      மத்ஹப் மறுப்பாளர்கள் அனைவரும் ஆய்வு செய்து பின்பற்றுகிறோம் என்றால் இவர்களின் தலைவரின் மறு ஆய்விற்கு முன்பாக ஒருவரேனும் பலவீனமானது என்பதாக ஆய்வு செய்து கூறியிருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.எனவே
உண்மையான விஷயம் அனைவரும் கண்மூடித்தனமாக தலைவரின் வாதத்தை ஏற்றனர்.பிறகு கண்மூடித்தனமாக மறுஆய்வையும் ஏற்றுள்ளனர் என்பதை தெள்ளத்தெளிவாக புரியமுடிகிறது.

இரண்டாவது உதாரணம்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணையத்தில் வரும் செய்தி 

//இந்தச் செய்தியில் முஹம்மது பின் அஜ்லான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.

அத்தஹிய்யாத்தில் விரலசைப்பது கூடாது என்று வரும் ஹதீஸில் இவர்தான் இடம் பெற்றுள்ளார்.

நாம் அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைக்க வேண்டும் என்று ஸஹீஹான ஹதீஸ் அடிப்படையில் நடைமுறைப்படுத்துகின்றோம்.

விரலசைக்க வேண்டும் என்று கூறும் போது மாற்றுக் கருத்துடையவர்கள் ”விரலசைக்கக் கூடாது ”என்ற கருத்தில் வரும் ஹதீஸை முன்வைத்தார்கள்.

அப்போது பிஜே அவர்கள் கூறிய பதிலை தருகின்றோம்

விரல் அசைக்க கூடாது என்ற ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பின்வரும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

1. அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)
2. ஆமிர் பின் அப்தில்லாஹ்
3. முஹம்மது பின் அஜ்லான்
4. ஸியாத்
5. இப்னு ஜுரைஜ்
6. ஹஜ்ஜாஜ்
7. அய்யூப் பின் முஹம்மது
இதில் மேலிருந்து மூன்றாவதாக முஹம்மது பின் அஜ்லான் என்ற நபர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் ஹாகிம் உட்பட பலர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களை தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை.

எனவே பலவீனமான இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு விரலசைப்பதற்கு ஆதாரமாக உள்ள பலமான ஹதீஸைத் தட்ட முடியாது.


”விரல் அசைக்கக் கூடாது ” என்று வரும் ஹதீஸில் எந்த முஹம்மத் பின் அஜ்லான் இடம் பெற்றுள்ளாரோ அவர்தான் இந்தச் செய்தியிலும் இடம் பெற்றுள்ளார்.

இதன் காரணத்தினால் முஹம்மத் பின் அஜ்லான் என்பவரைப் பற்றிய விமர்சனம் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களுக்கு மத்தியில் மிகப்பிரபலமானதாகும்.

இப்படி உள்ளங்கை நெல்லிக்கனி போல் இப்னு அஜ்லான் பற்றிய குறை நன்கு அறியப்பட்டிருந்தும் அவர் இடம்பெறும் அறிவிப்பை ஸஹீஹ் என்று கூறி இமாம்களின் மீது பழிபோட்டு பிஜே தப்பிக்க பார்க்கிறார்.//


இதனின் முழுமையான LINK:

முஹம்மது இப்னு அஜ்லான் குறித்து பீஜேவின் புதிய நிலைப்பாட்டை அறிய பின்வரும் link பார்வையிடவும்


முஹம்மத் இப்னு அஜ்லான் நம்பகமானவர் ஆதாரம் கொள்ளத்தக்கவர் என்பதுதான் பீஜேவின் புதிய நிலைப்பாடு 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சொல்வதையும்,பீஜே சொல்வதையும் நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது விமர்சனம்:

   பீஜே தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தவரை அவரின் நிலைப்பாடுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் முழுமையான நிலைப்பாடு.அவர் கூறுவதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு வேதவாக்காகும்.இப்போது இருவரும் பிரிந்த பிறகு கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளது.நிலைப்பாடு மாறிவிட்டது.

நமது வாதம் என்னவெனில் தவ்ஹீத் ஜமாஅத் தோன்றிய நாளிலிருந்து இது நாள் வரை பீஜேவின் கருத்தைத்தான் கண்மூடித்தனமாக பின்பற்றியுள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.மத்ஹப்வாதிகள்
இமாம்களை,  அல்லாஹ் ரசூலின் இடத்தில் வைத்துவிட்டார்கள், என்பதாக காழ்ப்புணர்ச்சியுடன், கண்மூடித்தனமாக விமர்சித்தனர்.ஆனால்,
உண்மை என்னவெனில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் பீஜேவை அல்லாஹ்,ரசூலின் இடத்தில் வைத்திருந்தனர் என்பதை உறுதியாக விளங்கமுடிகிறது.
ஏனெனில் எத்தனையோ ஷரீஅத்தின் சட்டங்களில் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கருத்து விடப்பட்டு அவர்களின் மாணவர்களின் ஆய்வின் பேரில் தீர்ப்பளிக்கப்பட்டு அமல்செய்யப்படுகிறது.

எந்த குற்றச்சாட்டை நம்மின் மீது அவதூறாக வீசினார்களோ அது அவர்களின் பக்கமே திரும்பியுள்ளது.(அல்லாஹ் போதுமானவன்)

இதில் மிகப்பெரிய வேடிக்கை! நம்மை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் என்பதாக விமர்சிப்பதுதான்.

Thursday, November 5, 2020

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?

தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? 
(ஓர் ஆய்வு தொடர்:6) 


பெண்கள்(பள்ளிவாசலுடன் ஒப்பிடும்போது)வீட்டில் தொழுவது மிக சிறந்தது

ஆதாரம்:(1)

இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عن النبي صلى الله عليه و سلم قال : صلاة المرأة في بيتها افضل من صلاتها في حجرتها وصلاتها في مخدعها افضل من صلاتها في بيتها 

ஒரு பெண் அவளுடைய (பொது) 
அறையில் தொழுவதை விட அவளுடைய (தனி)  வீட்டில் தொழுவது  சிறந்ததாகும்.  மேலும் அவளுடைய(தனி) வீட்டில் தொழுவதை விட அவளுடைய (தனி)அறையில் தொழுவது சிறந்ததாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:முஸ்தத்ரகுல் ஹாகிம் மஅ தல்ஹீஸி லித்தஹபி 1/328,ஹதீஸ் இலக்கம்:757,இமாம் ஹாகிம் (ரஹ்),இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்கிறார்கள்.)

 மேற்படி  ஹதீஸில் பெண்களின் சிறந்த பள்ளிவாசல்  அவர்களின் வீடு என்றும்,அதிலும்  அவ்வீட்டிலுள்ள அவளின் தனி அறை என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது மிக கவனிக்கத்தக்க விஷயமாகும்.

ஆதாரம்:(2)

உம்முல் முஃமீன் உம்மு ஸலமா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

 قالت قال رسول الله صلی الله عليه و سلم صلاة المرأة في بيتها خير من صلاتها في حجرتها وصلاتها في حجرتها خير من صلاتها فدارها وصلاتها في دارها خير من صلاتهافی مسجد قومه 

பெண் தனது வீட்டின் (தனியான) சிறிய அறையில் தொழுவது வீட்டின் பெரிய அறையில் தொழுவதை விட சிறந்தது.வீட்டின் பெரிய அறையில் தொழுவது வீட்டின் உள்முற்றத்தில் தொழுவதை விட சிறந்தது.உள்முற்றத்தில் தொழுவது பள்ளியில் தொழுவதை விட சிறந்தது என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி ,தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/135,இமாம் முன்திரி ரஹ் அவர்கள் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் என்கிறார்கள்.)

ஆதாரம்:(3)

இதே அறிவிப்பு வார்த்தை மாற்றங்களுடன் ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم صلاة المرأة في بيتها  خير من صلاتها فى حجرتها  فيحجرتها خير من صلاتها في دارها وصلاتها فى دارها خير من صلاتها فى ماوراءذلک 

பெண் தனி வீட்டில் தொழுவது தனியறையில் தொழுவதை விட சிறந்தது.தனியறையில் தொழுவது வீட்டின் பொதுவில் தொழுவதை விட சிறந்தது.வீட்டின் பொதுவில் தொழுவது அதற்கு பின்னால்(திண்ணை,பள்ளிவாசலில்) தொழுவதை விட சிறந்ததது என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:அத்தம்ஹீத் லி இப்னு அப்துல்பர் 23/401)


ஆதாரம்:(4)

இப்னு உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:

قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا نساءكم المساجد و بيوتهن خير لهن 

பெண்களை பள்ளிவாசலை விட்டு தடுக்காதீர்.எனினும், அவர்களின் வீடுதான் (தொழுவதற்கு) மிகச்சிறந்தது என  நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:முஸ்தத்ரகுல் ஹாகிம் மஅ தல்ஹீஸி லித்தஹபி 1/327,ஹதீஸ் இலக்கம்:755,இமாம் தஹபி ரஹ் இமாம் ஹாகிம் ரஹ் அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்கிறார்கள்.)


ஆதாரம்:(5)

மற்றோர் அறிவிப்பில் வருகிறது

انهالاتكون اقرب الى الله منها فی قعر بیتها

பெண் தனது வீட்டின் ஆழமான ஓரப்பகுதியில் இருக்கும் போது அல்லாஹ்விற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறாள் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

(ஆதாரம்:அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி ,இமாம் முன்திரி ரஹ் அவர்கள்,இமாம் ஹைஸமி ரஹ் அவர்கள் இதனின் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் என்பதாக கூறுகிறார்கள்.அத்தர்ஙீப் வத்தர்ஹுப் 1/141,முஃஜமுஜ்ஜவாயித் ஹதீஸ் இலக்கம்:7671)

ஆதாரம்:(6)

عن النبي صلى الله عليه وسلم قال ان احب صلاة تصليها المرأة الى الله في اشد مكان في بيتهاظلمة

அல்லாஹ்விடம் மிகவும் பிரியமான பெண்மணி இருளான அறையில் தொழுபவள் (அதாவது முழுமையாக மறைக்கும் விதமாக ஆழமான ஓரப்பகுதியில் தொழுபவள்) என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

(ஆதாரம்:இப்னு குஜைமா ஹதீஸ் இலக்கம்:1691,இதனை இப்னு குஜைமா (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்கிறார்.இந்த அறிவிப்பு மவ்கூபாகவும் வந்துள்ளது.இதனின் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.இமாம் ஜைனுத்தீன் மனாவி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பை ஹஸன் (ஏற்கத்தகுந்த) தரத்தில் உள்ளது என்கிறார்.இமாம் முன்திரி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பை குறித்து மெளனமாக இருக்கிறார்கள்.
(ஆதாரம்:முஃஜமுஜ்ஜவாயித் 2115,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் 1/136,அத்தய்ஸீர் லில்மனாவி 2/352)

தெளிவான விளக்கம்:

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்வான வழிகாட்டுதல்கள் நமக்கு மிக தெளிவாக உள்ளது.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களை பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதி அளித்ததுடன் பெண்கள் வீட்டில் தொழுவது சிறந்தது என்பதைதான் ஆர்வப்படுத்தினார்கள்.ஏனெனில் வீட்டில் தொழுவது பள்ளியில் தொழுவதை விட பலமடங்கு சிறந்தது.இதனைதான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறினார்கள்.மேலும் வீட்டில் தொழுவது அந்தஸ்தில் உயர்ந்தது என்பது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை  இந்த ஆய்வின் ஆரம்பத்தில் கூறியுள்ளோம்.இதனையும் புரியவேண்டும்.பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது பர்ளு,வாஜிபு, சுன்னத் இல்லை.மாறாக நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் உம்மு ஹுமைத் (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பின்னால் ஜமாஅத்தாக தொழுவதை விரும்பினார்கள்.எனினும்,
அண்ணலாரின் வழிகாட்டுதலுக்கு பிறகு மரணம் வரை வீட்டிலே தொழுதார்கள்.

"انها جاءت النبي صلى الله عليه وسلم  فقالت : يارسول لاني أحب الصلاة
معک قال : قد علمت انك تحبين الصلاة معی، و صلاتك فی بیتك خیرلك من صلاتك فی حجرتك و صلاتك فی حجرتك خیر من صلاتك في دارك وصلاتك فی دارك خير من صلاتك في مسجد قومك صلاتك فى مسجد قومك خير من صلاتك فى مسجدي " لقيت الله عزوجل
قال فامرت فبنی لهامسجد فى اقصی شئ من بيتها و اظلمه فكانت تصلي فيه حتی 

‘அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரளி)  அவர்களின் மனைவி உம்மு ஹுமைத்  (ரளி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம்  வந்து; அல்லாஹ்வின் தூதர்அவர்களே!  நிச்சயமாக நான் உங்களுடன் தொழுவதற்கு பிரியப்படுகிறேன் .என்றுகூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்;நிச்சயமாக நீங்கள் என்னுடன்  தொழுவதற்கு பிரியப்படுகிறீர்கள்  என்பதை நான்அறிந்துள்ளேன்.  எனினும் என்னுடைய பள்ளியில்நீங்கள் தொழுவதை விட உங்களுடைய சமுதாயத்தின் பள்ளியில் நீங்கள் தொழுவது உங்களுக்கு சிறந்ததாகும்.  மேலும் உங்களுடைய சமுதாயத்தின் பள்ளியில் நீங்கள் தொழுவதை விடஉங்களுடைய (பொது) வீட்டில் நீங்கள் தொழுவதுஉங்களுக்கு  சிறந்ததாகும். மேலும் உங்களுடைய (பொது) வீட்டில் நீங்கள் தொழுவதை விடஉங்களுடைய அறையில் நீங்கள்  தொழுவது சிறந்ததாகும்.  உங்களுடைய அறையில் நீங்கள் தொழுவதை விட உங்களுடைய (தனி)  வீட்டில் நீங்கள் தொழுவது  உங்களுக்கு சிறந்ததாகும் என்று கூறினார்கள்.  எனவே உம்மு ஹுமைத் (ரளி)அவர்கள்  (அவரது வீட்டில் தொழுவதற்கென தனி இடம் கட்டுவதற்கு) உத்தரவிட்டார்கள்.  எனவே அவரது வீட்டின் மிக  ஓரப்பகுதியில், இன்னும் மிக இருளான பகுதியில் அவர்களுக் கென்று தொழுமிடம் கட்டப்பட்டது.  அல்லாஹ்வை சந்திக்கும் வரை அப்பெண்மணி அதில் தான் தொழக்கூடியவர்களாக  இருந்தார்கள்.

(ஆதாரம்:அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு  ஸுவைத்(ரளி), நூல் : அஹ்மது 27090, இப்னு ஹுசைமா1689, இப்னு ஹிப்பான் 2217)

இமாம் இப்னு குஜைமா (ரஹ்) அவர்களின் தீர்ப்பு 

صلاتها فى مسجد قومها على صلاتها فى مسجد النبي صلى الله عليه وسلم 

பெண் தனது மஹல்லா பள்ளியில் தொழுவது மஸ்ஜிது நபவியில் தொழுவதை விட சிறந்தது.

கேள்வியும் பதிலும்:
மஸ்ஜித் ஹராம்,மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட சிறந்தது என்பதாக வேறு ஹதீஸ்களில் வந்துள்ளது.எனவே பெண்களுக்கு எது சிறந்தது?

பதில்:இப்னு குஜைமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:எனது பள்ளியில் (மஸ்ஜிதுந் நபவி) நிறைவேற்றப்படும் தொழுகை மற்ற பள்ளிகளின் 1000 தொழுகைகளை விட சிறந்தது என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இங்கு அண்ணலார் அவர்கள்  கூறுவது ஆண்களை குறித்தாகும்.பெண்களுக்குரியது இல்லை.

விளக்கம்: பெண்கள் வீட்டில் தொழுவது மஸ்ஜிதுந்நபவியில் தொழுவதை விட சிறந்தது.அதிகமான நன்மைக்குரியதாக இருக்கும் போது குழப்பமான காலகட்டத்தில் பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்? மேலும் பெண்கள் பள்ளிக்கு வந்துதான் தொழகவேண்டும் என்பதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவும் பிறப்பக்கவில்லை.இதற்கு நேர்மாறாக பெண்களை வீட்டில் தொழும்படிதான் அண்ணலார் அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.

முக்கிய குறிப்பு:உம்மு ஹுமைத் (ரளி) அவர்களின் நிகழ்வை மற்றோரு அறிவிப்பில் வரும் வாசகத்தை ஊன்றி கவனித்தால் நன்றாக புரியமுடியும்.(இந்த அறிவிப்பை ஆரம்பத்தில் பார்த்துள்ளோம்)
يمنعنا أزواجنا أن نصلي معك .............
எமது கணவர் உங்களுடன் ஜமாஅத்தாக தொழுவதை தடுக்கிறார்.எனினும்,நிச்சயமாக நான் உங்களுடன் தொழுவதற்கு பிரியப்படுகிறேன் என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹுமைத் அவர்களின் கணவரை எச்சரிப்பதற்கு, கண்டிப்பதற்கு பதிலாக அந்தப் பெண்மணியை வீட்டில் தொழும்படி அறிவுறுத்துகிறார்கள்.பெண்களை பள்ளிவாசலை விட்டு தடுப்பது தடையில்லை என்பதை தான் அண்ணலாரின் மெளனம் எடுத்துக்காட்டுகிறது.

குறுக்கு கேள்வி 

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு எளிமையான திருமணத்தில் பரக்கத் இருப்பதாக ஹதீஸில் வருகிறது.எனவே எளிமையான திருமணம் செய்வது சிறப்பு.சிறந்ததை நோக்கித்தான் பயணிக்க வேண்டும்.நாம் சிறந்த செயலை செய்யவேண்டியதாக இருக்கவேண்டும்.எனினும் ஆடம்பரமாக செய்வது ஹராமில்லை.அதனை தடுக்கமுடியாது.எனினும்,சிறந்ததை எடுத்து நடக்கவேண்டும்.(இது குறித்த link:https://youtu.be/9Spe6wFBzqg)

எளிய திருமணத்தின் அளவுகோல் வீட்டில் திருமணம் நடப்பது.எனவே வீட்டில் திருமணம் நடந்தால் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பேச்சாளர்களும் வருவார்கள்.நிக்காஹ் பதிவுபத்திரமும் தரப்படும்.ஆனால் மண்டபத்தில்  நிக்காஹ் நடந்தால் பதிவுபத்திரம் மட்டும் தரப்படும்.பேச்சாளர்கள் வரமாட்டார்கள்.
(நாம் இது குறித்து படித்துள்ளோம்.எனினும்,
தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.இன்ஷா அல்லாஹ் கிடைத்தால் அதனை இணைக்கிறோம்)

நமது வாதம்:பெண்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி உண்டு.எனினும் சிறந்தது இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
பிறகு ஏன் அதனை ஆர்வமூட்டுவதில்லை?வலியுறுத்துவதில்லை? எளிய திருமணம் சிறந்தது என்பதற்கு மேடை போட்டு முழங்குபவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது சிறந்தது என்பதற்கு மேடை போட்டு ஏன் முழங்குவதில்லை? சிறந்த செயலை செய்யவேண்டும்.சிறந்ததை நோக்கிதான் பயணிக்க வேண்டும் என்பதாக வாதிடுபவர்கள் எளிய திருமணத்தில் ஒரு நிலைப்பாடு.பெண்கள் பள்ளிக்கு செல்வதில் மற்றோரு நிலைப்பாடு ஏன்? 

விமர்சனமும் தெளிவும் 

பெண்கள் ஷாப்பிங் மால்,கடைவீதி,மதரஸா, ஸ்கூல் போன்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.இதனை குறித்து ஏன் விமர்சிப்பதில்லை?இது குறித்து ஏன் பத்வா கொடுக்கவில்லை?அங்கு பெண்களுக்கு குழப்பம் நடப்பது கண்களுக்கு தெரியவில்லையா? ஆனால் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வது மட்டும் கண்களுக்கு தெரிகிறதா? பள்ளிவாசலுக்கு செல்வதை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்?

தெளிவு: பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை தடுக்கிறோம் எனில் அவர்கள் வீடுகளில் தொழமுடியும்.மேலும் அவர்களுக்கு வீட்டில் தொழுவது பள்ளியில் தொழுவதை விட சிறந்தது.ஆனால், பெண்கள் மதரஸா, பள்ளிக்கூடம் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு.ஏனெனில் உலக அல்லது மார்க்க கல்வியை வீட்டில் இருந்து கற்பது சிரமம்.எனவே தேவையைக் கருதி மதரஸா அல்லது பள்ளிக்கூடம் செல்வதற்கு அனுமதி உண்டு.எனினும்,பெண்களுக்கு கல்விக்கு தனியானதொரு ஏற்பாடு இருக்கவேண்டும்.ஆக, பெண்கள் எந்த வேலையை வீட்டில் செய்ய இயலுமோ அதனை அங்குதான் செய்யவேண்டும்.அதற்காக வெளியே செல்வது தடையாகும்.எனினும்,வீட்டில் செய்ய இயலாத வேலை அல்லது தேவையான காரியத்திற்கு வீட்டை விட்டு வெளியேறுவது கூடும்.










Saturday, September 5, 2020

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?

தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? (ஓர் ஆய்வு தொடர்:5) 

 பெண்கள் பள்ளிவாசல் செல்வது கூடாது என்பது குறித்து ஸஹாபாக்கள்,இமாம்களின் வழிகாட்டுதல்கள் 

 1)ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்: 

لوادرک رسول الله صلى الله عليه وسلم ما احدث النساء لمنعهن كما منعت نساء بنی اسرائیل 
 
ஆயிஷா (ரலி) அறிவித்தார். பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். இதனை அறிவித்த உம்ராவிடம் 'பனு இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டிருந்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'ஆம்' என்றார் என்று யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார்கள்.(ஆதாரம்:புகாரி, ஹதீஸ் இலக்கம்:869) 

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பதிவு செய்த மற்றோரு ஹதீஸ்

 حدثنا الحكم، حدثناعبد الرحمن بن ابی الرجال فقال ابی: یذکرہ عن أمه عن عائشة عن النبی ل قال لاتمنعوا اماء الله مساجد الله وليخرجن تفلات: قالت عائشة:ولورأى حالهن اليوم منعهن 
 
ஆயிஷா  (ரளி) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் அடிமையான பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுக்காதீர்.வீட்டிலிருந்து (துர்வாடையான) கந்தல் ஆடையில் வெளியே வரட்டும்.பிறகு ஆயிஷா ரளி அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இன்றைய சூழ்நிலையை பார்த்திருந்தால் பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுத்திருப்பார்கள்.(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத்,ஹதீஸ் இலக்கம்:24406) 

2)ஹள்ரத் உமர் (ரளி) ,ஹள்ரத் ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரளி) பெண்கள், பள்ளிவாசல் செல்வதை விரும்பவில்லை.இது குறித்து நிகழ்வை முன்னால் விரிவாக பார்த்தோம். 

3)அப்துர்ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

 قفال: كان الرجال و النساء في بني إسرائيل يصلون جميعا، فكانت المرأة إذاكان لها الخليل تلبس القالبين تطول بهما لخليلها فالقی الله عليها الحيض فكان ابن مسعود يقول: أخروهن حيث اخرهن الله 

 பனூஇஸ்ராயிலின் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து தொழுவார்கள்.எதேனும் பெண்ணிற்கு காதலன் இருந்தால் கட்டையான செருப்பை (உயரமான செருப்பை) அணிவாள்.அவனை பார்ப்பதற்கு உயரமாக தெரிவதற்காக.(இந்த முறையற்ற செயலால்) அவர்கள் மீது ஹைள் விதிக்கப்பட்டது.(ஹைளின் காலம் நீண்டு விட்டது) மேலும் அந்த சூழ்நிலையில் பள்ளிவாசலுக்கு வருவது தடுக்கப்பட்டது.பிறகு இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் வெளியாக்கிய விதத்தில் நீங்களும் அவர்களை வெளியாக்குங்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு குஜைமா ஹதீஸ் இலக்கம்:1700) 

 இந்த மவ்கூபான (நபித்தோழரின் கூற்று) அறிவிப்பை இமாம் இப்னு குஜைமா (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்கிறார்கள்.இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்று கூறுகிறார்.இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள் ஸஹீஹைனின் அறிவிப்பாளர் தொடர் என்கிறார்.(ஆதாரம்:பத்ஹுல்பாரி,2/350,மஜ்மஉஜ்ஜவாயித் 2120) 

 இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களின் மிக தெளிவான வாசகம் "எந்த இடத்தில் (பள்ளிவாசலில்) பெண்களை அல்லாஹ் வெளியாக்கினானோ அவ்விதமாக (அல்லாஹ்வை பின்பற்றி) நீங்களும் அங்கிருந்து பெண்களை வெளியாக்குங்கள்." 

 இது மட்டுமின்றி மற்றோர் அறிவிப்பை ஹள்ரத் அபூஅம்ர் ஷைபானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 
 رايت ابن مسعود يحصب النساء يخرجهن من المسجد يوم الجمعة. 

 ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் ஜும்ஆ நாளில் பள்ளிவாசலுக்கு வந்த பெண்களை கற்களால் அடித்து விரட்டியதை நான் பார்த்தேன்.(ஆதாரம்:முஸ்னத் இப்னுல் ஜஃத்,467) 
 
இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள்,இமாம் பூசிரி (ரஹ்) அவர்கள் பலமான அறிவிப்பாளர்கள் என்கிறார்கள்.இமாம் இப்னு ஹஜர் ரஹ்) அவர்கள்,இமாம் முன்திரி ரஹ் அவர்கள் அறிவிப்பாளர் தொடர் குறித்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்கள்.(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் :2119,இத்ஹாபுல் ஹியரா அல்முஹிர்ரா லில்பூசிரி :1515,அல்மதாலிபுல் ஆலியா 4/653 ஹதீஸ் இலக்கம்:685,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் 1/146,516) 

4)அபூஅப்துர்ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) 

ابن عمر رضي الله تعالى عنهما يقوم يحصب النساء يوم الجمعة يخرجهن من المسجد 

 இப்னு உமர் (ரளி) அவர்கள் ஜும்ஆ நாளில் நின்றுக்கொண்டு பள்ளிவாசலுக்கு வரும் பெண்களை பொடிக்கற்களால் அடித்து விரட்டுவார்கள்.(ஆதாரம்:உம்ததுல் காரி 6/158) இதனின் அறிவிப்பாளர் தொடர் இல்லை.எனினும்,இதனை வலுப்படுத்தும் ஆதாரப்பூர்வமான மற்றோரு அறிவிப்பு 
 
இமாம் நாபிஃ அவர்கள் அறிவிக்கிறார்கள்:عن كان ابن عمر أنه كان لا يخرج نساءه في العيدين 

இப்னு உமர் (ரளி) அவர்கள் தமது குடும்ப பெண்களை ஈத் தொழுகைக்கு அனுப்பமாட்டார்கள்.(ஆதாரம் இப்னுஅபூஷைபா :5845) 

 மற்றோர் அறிவிப்பு كان عبد الله بن عمر يخرج إلى العيدين في استطاع من أهله 

ஈத்தொழுகைக்கு தனது குடும்ப பெண்களில் சாத்தியம் இருப்பவர்களை அனுப்புவார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா :5837) 

 இதனைக் கொண்டு கருத்து வயோதிக பெண்களை அனுப்புவார்கள்.ஏனெனில் அவர்களின் மூலம் குழப்பம் ஏற்படுவது அரிதாகும்.எனவே இப்னு உமர் (ரளி) அவர்களிடத்திலும் வாலிப பெண்கள்,அழகான பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வது சரியில்லை. 5) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரளி)

"عن عبد الله بن عباس ان امراة سئلته عن الصلاة في المسجد يوم الجمعة فقال : صلاتك في مخدعك أفضل من صلاتك فى بيتك وصلاتك في بيتك أفضل من صلاتك فی حجرتك صلاتك في حجرتك أفضل من صلاتك في مسجد قومك

 ஒரு பெண்மணி ஜும்ஆ தொழுகையை பள்ளிவாசலில் தொழுவது குறித்து கேட்டார்.இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அனுமதி கொடுப்பதற்கு பதிலாக கூறினார்:உனது வீட்டின் உள்அறையில் தொழுவது வீட்டின் பொதுஅறையில் தொழுவதை விட சிறந்தது.வீட்டின் பொதுஅறையில் தொழுவது வீட்டின் பொதுவெளியில் தொழுவதை விட சிறந்தது.வீட்டின் பொதுவெளியில் தொழுவது உனது சமூகத்தின் பள்ளிவாசலில் தொழுவதை விட சிறந்தது.(ஆதாரம்:முஸன்னப் இப்னுஅபூஷைபா:7697) 

6)இமாம் அப்துர்ரஹ்மான் இப்னு காஸிம் (ரஹ்) 

 قال كان القاسم شيء على العواتق لا يدعهن يخرجن في الفطر والأضحی 

 இமாம் காஸிம் இப்னு முஹம்மது இப்னு அபூபக்கர் சித்திக் (ரஹ்) அவர்கள் வாலிபபெண்கள் விஷயத்தில் கடுமையை கடைப்பிடிப்பார்கள்.அவர்களை ஈதுல்பித்ர்,ஈதுல்அள்ஹா வெளியேற அனுப்பமாட்டார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா :584) 

7)இமாம் இப்ராஹீம் நகயி (ரஹ்) 

 قال كره للشابة أن تخرج إلى العيدين 

வாலிப பெண்கள் ஈத் தொழுகைக்கு செல்வது மக்ரூஹ். (வெறுக்கத்தக்கது) (ஆதாரம்:முஸன்னிப் இப்னு அபூஷைபா:5848) 

 மற்றோர் அறிவிப்பில் இமாம் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

إبراهيم، قال: كان لإبراهيم ثلاث نسوة فلم يكن يدعهن يخرجن إلى جمعة ولا جماعة 

இப்ராஹீம் நகயி (ரஹ்)அவர்களுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்.அவர்களில் யாரையும் ஜும்ஆ தொழுகை,ஜமாஅத் தொழுகைக்கு அனுப்பமாட்டார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா:7703) 

8)இமாம் இப்னு ஜுரைஜ் (ரஹ்)

இமாம் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: عطاء قال: قلت له: أيحق على النساءإذاسمعن الأذان أن يجبن کماهو حق عل الرجال قال: لا لعمري 

நான் அதா இப்னு அபூரிபாஹ் அவர்களிடத்தில் கேட்டேன்.ஆண்கள் பாங்கு சப்தத்தை கேட்டால் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு உரிமை உண்டு.பெண்களுக்கும் இந்த உரிமை உண்டா? அதா (ரஹ்) அவர்கள்,சத்தியமிட்டு அவர்களுக்கு உரிமை இல்லை என கூறினார்கள்.(ஆதாரம்:முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக்:5106) 

9)இமாம் ஸுப்யான் ஸவ்ரி (ரஹ்) 

 "عن سفيان الثوري: أنه كره اليوم الخروج للنساء إلى العيد“  
இமாம் ஸுப்யான் ஸவ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:இந்த காலத்தில் பெண்கள் ஈத் தொழுகைக்கு செல்வது மக்ரூஹ் (ஆதாரம்:சுனன் திர்மிதி:540) 

10)இமாம் ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ்)

عن أبيه أنه كان لا يدع امرأة من أهله تخرج إلى فطر ولا إلى أضحى » 

 இமாம் உர்வா (ரஹ்) அவர்கள் தன் வீட்டின் பெண்களை ஈதுல் பித்ர்,ஈதுல் அள்ஹா செல்வதற்கு அனுமதி தரமாட்டார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா:5846) 

11)இமாம் இப்ராஹீம் நகயி (ரஹ்)

قال:كان لعلقمة امرأة قد خلت فى السن تخرج إلى العيدين 

இமாம் அல்கமா (ரஹ்) அவர்களின் மனைவி வயோதிகம் அடைந்த பிறகு தான் ஈத் தொழுகைக்கு சென்றார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா :540) 

முக்கிய குறிப்பு:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வபாத்திற்கு பிறகு ஸஹாபாக்கள், வாலிபபெண்களை பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்வதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்பதாக ஓர் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடரும் கூட நிரூபணமாகவில்லை.

Friday, August 21, 2020

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?


தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? (ஓர் ஆய்வு தொடர்:4)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்பதான் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை ஸஹாபாக்கள் தடுத்தார்கள்

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்பதான் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை ஸஹாபாக்கள் தடுத்தார்கள்.ஏனெனில் பெண்கள், பள்ளிவாசலுக்கு வருவதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிபந்தனைகள் விதித்து பேணும்படி வலியுறுத்தினார்கள்.
அவைகளுக்கு மாற்றமாக நடக்கும் போது பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுப்பதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.இது குறித்த ஹதீஸ்களை இனி பார்ப்போம்.(அதனை ஆரம்பத்திலும் கூறியுள்ளோம்.)

ஹதீஸ் எண்:(1)

حدثنا أبو بكر بن أبي شيبة وعلي بن محمد قالا حدثنا عبيد الله بن موسى عن موسى بن عبيدة عن داود بن مدرك عن عروة بن الزبير عن عائشة قالت بينما رسول الله صلى الله عليه وسلم جالس في المسجد إذ دخلت امرأة من مزينة ترفل في زينة لها في المسجد فقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس انهوا نساءكم عن لبس الزينة والتبختر في المسجد فإن بني إسرائيل لم يلعنوا حتى لبس نساؤهم الزينة وتبخترن في المساجد

ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த போது முஜீனா கபீலாவை சேர்ந்த பெண் அலங்காரமான ஆடையுடன் நுழைந்தாள்.(மிடுக்குடன் நடந்து வருவதை பார்த்து) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:மக்களே! பெண்கள் மஸ்ஜிதில் அலங்காரமான ஆடையுடன்,பெருமை நிறைந்த ஆடையுடன் வருவதை தடுங்கள்.பனுஇஸ்ராயீல்கள் சபிக்கப்பட்டது அவர்களின் பெண்கள் அலங்காரமான ஆடையை (அணிந்து வெளிவர) ஆரம்பித்தனர்.மஸ்ஜிதிற்கு பெருமையுடன் வர ஆரம்பித்தனர்.(ஆதாரம்:இப்னுமாஜா ,ஹதீஸ் இலக்கம்:4001)

பெண்கள் அலங்காரத்துடன் வரும்போது தடுக்கும் படி உத்தரவிடப்பட்டதை இந்த ஹதீஸிலிருந்து புரியமுடிகிறது.

ஹதீஸ் எண்:(2)

حدثنا یحیی بن يحيى، و اسحاق بن ابراهيم قال اسحاق ابراهيم قال يحيى: اخبرنا عبد الله بن محمد بن عبداللهبن ابی فروق عن یزیدبن خصيفة عن بسر بن سعيد، عن ابي هريرة ك قال: قال رسول الله الله علم : ايما امرأة اصابت بخورأفلاتشهد معنا العشاء الآخرة


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம்:570)

 مرت بابی هریرة امرأة وريحها تعصف فقال لها: الی این تریدین یا امة الجبار قالت: الى المسجد، قال: تطيبت؟ قالت: نعم، قال فارجع فاعتسلی، فانی سمعت رسول الله المعيقول: لا يقبل الله من امراة صلاة خرجت الى المسجد وريحها تعصف حتى ترجع فتغتسل

மூஸா இப்னு யஸார் அவர்கள் கூறுகிறார்கள்:அபூஹுரைரா (ரளி) அவர்களின் அருகில் ஒரு பெண்மணி கடந்து சென்றாள்.அவளின் ஆடையில் நறுமணம் கமழ்ந்தது.ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் கேட்டார்கள்: அடக்கியாளும் அல்லாஹ்வின் அடிமையே! எங்கு செல்கிறாய்? அதற்கு பெண்மணி பள்ளிவாசலுக்கு செல்கிறேன் என கூறினாள்.அன்னார்,நறுமணம் பூசியுள்ளாயா? என வினவினார்."ஆம்" என அவள் கூறினாள்.அன்னார் கூறினார்;திரும்பி சென்று ஆடையை கழுவி விடுவாயாக! "எந்தப் பெண்மணி ஆடையில் நறுமணம் கமழும் நிலையில் பள்ளிவாசலுக்கு வந்தால் திரும்பி சென்று குளிக்கும் வரை அல்லாஹ் அவளின் தொழுகையை ஏற்க மாட்டான்" என்பதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு குஜைமா ஹதீஸ் இலக்கம் :1682)

ஹதீஸ் எண்:(3)

لوادرک رسول الله صلى الله عليه وسلم  ما احدث النساء لمنعهن كما منعت نساء بنی اسرائیل


ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். 
இதனை அறிவித்த உம்ராவிடம் 'பனு இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டிருந்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'ஆம்' என்றார் என்று யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார்கள்.(ஆதாரம்:புகாரி,
ஹதீஸ் இலக்கம்:869)

மத்ஹப் மறுப்பாளர்கள் இது ஆயிஷா (ரளி) அவர்களின் தனிப்பட்ட கருத்து என்பதாக வாதிடுகின்றனர்.இதற்கு எதிராக
ஆயிஷா (ரளி) அவர்கள் கூறியதை குறித்து ஹதீஸ்கலை வல்லுநர்களின் விளக்கங்களை இனி பார்ப்போம்!

1) இமாம் ஹாபிள் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

تشير عائشة رضي الله عنه  الی النبی صلى الله عليه وسلم   كان يرخص في بعض مايرخص فيه حيث لم يكن في زمنه فساد ثم يطر الفساد ويحدث بعده فلو أدرک ماحدث بعده لما استمر على الرخصة بل نهی عنه، فانما یامر بالصلاح، وينهى عن الفساد

ஆயிஷா (ரளி) அவர்கள் சுட்டி காட்டியது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சில விஷயங்களை அனுமதியளித்தார்கள்.ஏனெனில் அப்போது குழப்பங்கள் பரவலாக இல்லை.நபியின் காலத்திற்கு பிறகு குழப்பங்கள் பரவலானது.எனவே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னால் நடைபெறும் குழப்பங்களை பார்த்திருந்தால் (பெருமானாரின் நிபந்தனைகளில் குறை ஏற்படுத்தி குழப்பம் ஏற்படுதல்) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதியில் நிலைத்திருக்க மாட்டார்கள்.(அதாவது பெண்களை பள்ளிவாசலுக்கு வருவதை விட்டும் தடுத்திருப்பார்கள்) ஏனெனில் அண்ணலார் அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.தீமையை தடுப்பார்கள்.
(ஆதாரம்:பத்ஹுல் பாரி லி இப்னு ரஜப் 8/41)

 நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விதித்த நிபந்தனைகளில் பெண்கள் குறை ஏற்படுத்தினால் அவர்களை,
ஸஹாபாக்கள் பள்ளிவாசலை விட்டும் தடுக்கவேண்டும்.பிறகு பெண்கள் அலங்காரம், கவர்ச்சியான வழிமுறையில் நடந்து கொண்டதைக் கண்டு இதனை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் பார்த்திருந்தால் தடைசெய்திருப்பார்கள் எனும் கருத்தில் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்.

2)ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

افضل تحقق الأمن فيه من الفتنة ويتأكد ذلک بعد وجودما احدث النساء من التبرج والزينة ومن ثم قالت عائشة رضي الله عنها  ماقالت


(நிபந்தனைகளை பேணாத சமயத்தில்) பெண்களின் அலங்காரம், கவர்ச்சி,ஆண்களுடன் கலப்பது போன்ற சீர்கேடுகள் உண்டான பிறகு பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றுவதற்கு பதிலாக வீட்டிலே தொழுகையை நிறைவேற்றும் சட்டம் வலுப்பெறுகிறது.(எனவேதான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நிபந்தனைகளை பேணாமல் இருந்தால் பள்ளிவாசலுக்கு வரும் அனுமதி இல்லை)

 மேலும் கூறுகிறார்கள்:பெண்கள் நிபந்தனைகளை பேணுவதில் குறைப்பாட்டின் சீர்கேட்டின் காரணமாக பள்ளிவாசலுக்கு வரும் சட்டம் மாறிவிட்டது.இதனைதான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்.(ஆதாரம்:பத்ஹுல் பாரி 2/349)

3)இப்னுல் ஜவ்ஜி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

انما اشارت عائشة بما احدث النساء من الزينة و ال لباس و الطيب و نحو ذلك  مما يخاف منه الفتنة

ஆயிஷா (ரளி) அவர்கள் சுட்டிகாட்டுவதானது பெண்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாபாத்திற்கு பிறகு அலங்காரம்,ஆடை, நறுமணம் போன்ற குழப்பத்தை (தூண்டும்) அஞ்சும் நிலையை உண்டாக்கினார்கள்.
(ஆதாரம்:கஷ்ஃபுல் முஷ்கில் லி இப்னுல் ஜவ்ஜி 4/36)

4)ஹாபிள் இப்னு தகீகுல்ஈத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அலங்காரத்தின் புதுப்புது வழிமுறைகளை பெண்கள் உருவாக்கியதை ஆயிஷா (ரளி) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அதனை தடுக்கவும் செய்கிறார்கள்.(ஆதாரம்:இஹ்காமுல் அஹ்காம் 1/197)

5)பத்ருத்தீன் அய்னி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

قوله ما احدث النساء في محل النصب على انه مفعول ادرک أی ما احدثت من الزينة و الطيب و حسن الثياب و نحوه 

ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் (நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாபாத்திற்கு பிறகு) தனது காலத்தில் பெண்களின் புதுப்புது நடைமுறைகளை கூறியதின் (நோக்கம்) அலங்காரம், கவர்ச்சி (வெளிப்படுத்துதல்)நறுமணம் (பூசுதல்),அழகான ஆடைகள் (அணிதல்) போன்றவைகளை (வீட்டிற்கு) வெளியே பயன்படுத்துவதாகும்.(ஆதாரம்:உம்ததுல் காரி 6/158)

இதன் காரணமாக சில முஹத்திஸீன்கள் ஆயிஷா (ரளி) அவர்களின் சொல்லின் 
காரணமாக கூறுவது பெண்களிடத்தில் சீர்கேடுகள் உருவாகிவிட்டால் (அதாவது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்த நிபந்தனைகளுக்கு மாற்றம் செய்தால்) பள்ளிவாசல் வருவது சரியில்லை.

6)இமாம் இப்னு பத்தால் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

أما حديث عائشة ففيه دليل لا ينبغی ان یخرجن الى المساجد اذا حدث في الناس الفساد 

ஆயிஷா (ரளி) அவர்களின் வழிகாட்டுதலில் பெறப்படும் ஆதாரம், எப்போது பெண்களிடத்தில் சீர்கேடுகள் உருவாகுமோ (நிபந்தனைகளில் குறைபாடுகள் ஏற்பட்டு குழப்பங்கள் தோன்றுமோ) அதன்பிறகு பள்ளிவாசல் செல்வது சரியில்லை.(ஆதாரம்:ஷர்ஹு புகாரி லி இப்னு பத்தால் 2/471)

7)இமாம் இராகி (ரஹ்) அவர்களும் இமாம் இப்னு பத்தால் அவர்களின் கருத்தையே எடுத்தெழுதியுள்ளார்கள்.(ஆதாரம்:தர்ஹுத்தரீப் ஃபி ஷர்ஹித் தக்ரீப் 2/315)

8)இமாம் கிர்மானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

فيه دليل انه لا ينبغي للنساء أن يخرجن الى المساجداذا حدث في الناس الفساد

ஆயிஷா ரளி அவர்களின் கூற்றின்படி உள்ள ஆதாரம் பெண்களிடத்தில் சீர்கேடுகள் உருவானால் பிறகு பள்ளிவாசல் வருவது சரியில்லை.(ஆதாரம்:அல்கவாகிபுத் தராரி 
5/209)

முக்கிய குறிப்பு:சில முஹத்திஸீன்கள் ஆயிஷா (ரளி) அவர்களின் சொல்லின் மூலம் கன்னிப்பெண்கள்,அழகான பெண்கள் போன்ற குறிப்பானவர்களை ஆதாரம் எடுத்துள்ளனர்.ஏனெனில் அதிகமான கன்னிப்பெண்கள்,அழகான பெண்கள் ஆடை, நறுமணம், அலங்காரம் போன்றவைகளை விதவிதமாக உபயோகிப்பார்கள்.இவர்களின் காரணமாக தான் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்த நிபந்தனைகள் பெரும்பாலும் வீணாகிவிடுகிறது.மேலும் இவர்களின் மூலம்தான் குழப்பங்கள் பெருகுகிறது.

9) இமாம் இப்னுல் முலக்கின் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

أما اليوم فلانخر الشابة ذات الهيئة، ولهذا قالت عائشة منال : لو رأى رسول الله والله ما أحدث النساء بعده لمنعهن

எனினும், கன்னிப்பெண்கள்,அழகான பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது.இதனால் தான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்:பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். (ஆதாரம்:அத்தவ்ளீஹ் லி இப்னுல் முலக்கீன் 5/51)

10)இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

أجابوا عن اخراج ذوات الخدور المخبأ بان المفسدة في ذلك الزمن كانت مامونة بخلاف اليوم ولهذاصح

عائشة رضي الله عنها لو  رأى رسول الله صلى الله عليه وسلم   ما احدث النساء لمنعهن المساجد كما منعت نساء بنی اسرائيل۔“

கன்னிப்பெண்கள்,பர்தாவில் இருக்கவேண்டிய பெண்கள் பள்ளிவாசல் செல்வது குறித்து வந்துள்ள அறிவிப்பிற்கு தரும் தோழர்களின் பதில் அந்த காலத்தில் (நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) சீர்கேடுகள் பரவலாக நீங்கி பாதுகாப்பு இருந்தது.இதற்கு நேர்மாற்றமாக இன்று (சீர்கேடுகளின் காலம்) இதனால்தான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்வமான அறிவிப்பு பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். (ஆதாரம்:ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் லின்நவவி 6/178)

சுருக்கம் என்னவெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு  விதித்த நிபந்தனைகளை அன்னாரின் காலத்திற்கு பிறகு அவர்கள் குறைபாடுகளை ஏற்படுத்தினார்கள்.
அலட்சியப்போக்குடன் செயல்பட்டார்கள் இதனை தான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள் என்பதை அனைத்து கருத்துக்களிலிருந்தும் புரியமுடிகிறது.

  பெண்கள்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்த நிபந்தனைகளில் குறைபாடுகளை உண்டாக்கினால் அவர்களை பள்ளிவாசலை விட்டும் தடுக்கும்படி ஸஹாபாக்களுக்கு அண்ணலார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இது குறித்து ஹதீஸ்களை முன்னால் கூறிவிட்டோம்.எனவேதான் முஹத்திஸீன்கள் ஆயிஷா (ரளி) அவர்களின் சரியான நோக்கத்தை புரிந்துள்ளனர்.ஆனால் மத்ஹப் மறுப்பாளர்கள் கண்மூடித்தனமாக ஆயிஷா (ரளி) அவர்களின் சொந்த கருத்து, தனிப்பட்ட கருத்து என்பதாக வாதிடுவது நிராகரிக்கப்பட்டது.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


حدثنا الحكم، حدثناعبد الرحمن بن ابی الرجال فقال ابی: یذکرہ عن أمه عن عائشة عن النبی ل قال

لاتمنعوا اماء الله مساجد الله وليخرجن تفلات: قالت عائشة:ولورأى حالهن اليوم منعهن

ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் அடிமையான பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுக்காதீர்.வீட்டிலிருந்து (துர்வாடையான) கந்தல் ஆடையில் வெளியே வரட்டும்.பிறகு ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இன்றைய சூழ்நிலையை பார்த்திருந்தால் பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுத்திருப்பார்கள்.(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத்,ஹதீஸ் இலக்கம்:24406)

 நபியின் வபாத்திற்கு பிறகு பெண்கள், பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விதித்த நிபந்தனைகளுக்கு மாற்றம் செய்தனர்.இதனைக் குறித்துதான்  ஹழ்ரத் ஆயிஷா ரளி அவர்கள்
கூறுகிறார்கள் என்பதை புரிய முடிகிறது.

  பெண்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நிபந்தனைகளை மீறினர்.ஸஹாபாக்கள் அதனைக் கண்டித்தனர்.ஒரு காலகட்டம் வரை சகித்துக்கொண்டனர்.பிறகு வீட்டில் தொழுவதை அவர்களுக்கு ஏவினார்.







Wednesday, August 5, 2020

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?

தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? (ஓர் ஆய்வு தொடர்:3)


ஹள்ரத் உமர் (ரளி),ஹள்ரத் ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரளி) அவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை விரும்பவில்லை.
ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் வருகிறது.உமர் (ரளி),ஹள்ரத் ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரளி) அவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை விரும்பவில்லை.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

حدثنا يوسف بن موسی، حدثنا أبو الاسامه حدثنا عبيد الله بن عمر عن نافع عن ابن عمر لإقال: كانت امرأة لعمر وقال الله مساجد الله تشهد صلاة الصبح و العشاء في الجماعة في المسجد فقيل لها: لم تخرجين وقد تعلمین ان عمریره ذلک ویغار قالت: وما يمنعه قول رسول الله صلى الله عليه وسلم :لا تمنعوا اماء الله مساجد الله

உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார்.(ஆதாரம்:புகாரி, ஹதீஸ் இலக்கம்:900)

முக்கிய குறிப்பு:முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக்கில் (5111) இல் உள்ளது.இமாம் ஜுஹ்ரி (ரஹ்) அவர்களிடமிருந்து முர்ஸலான அறிவிப்பில் வருகிறது.அந்தப் பெண்மணி உமர் (ரளி) அவர்களின் மனைவி ஆதிகா பின்த் ஜைத் (ரளி) 
  ஹள்ரத் உமர் (ரளி)நிலைமைகள்  மாறியதும்,குழப்பத்தின் அச்சத்தால் இரவில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை விரும்பவில்லை.இதன் விபரம் அறிவிப்புகளில் தெளிவாக உள்ளது.எனினும்,ஹள்ரத் உமர் (ரளி) அவர்களின் மனைவி ஆதிகா (ரளி) அவர்களின்
 கருத்து பள்ளிவாசலுக்கு செல்வதில் அச்சம் எனும் நிலையை அடையவில்லை.எனவே அவர்களின் ஆய்வின்படி நம்பிக்கை வைத்து ஜமாஅத்தில் கலந்து கொண்டார்கள்.எனினும், எப்போது பள்ளிவாசலுக்கு செல்வது பொருத்தமில்லை என்பதை உணர்ந்தாரோ பள்ளிவாசலுக்கு செல்வதை கைவிட்டார்கள்.

ஹதீஸ்துறையின் இமாம்கள் விரிவாக இந்நிகழ்வை எழுதியுள்ளார்கள்.

  ஆதிகா (ரளி) அவர்கள் பிரபல்யமான ஸஹாபிய பெண்மணி.(ஸயீத் இப்னு ஜைத் சுவனவாசி என சுபச் செய்தி கூறப்பட்டவரின் சகோதரி) ஆரம்பமாக அபூபக்கர் (ரளி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரளி) அவர்களை நிகாஹ் செய்திருந்தார்.பிறகு அப்துல்லாஹ் (ரளி) அவர்களின் ஷஹாதத்திற்கு பிறகு ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள், அவர்களுக்கு திருமணத் தூது அனுப்பினார்.அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு மூன்று நிபந்தனைகளை உமர் (ரளி) அவர்களிடம் முன்வைத்தார்கள்.

1) அடிக்க கூடாது
2)நல்ல செயல் செய்வதை தடுப்பது கூடாது
3)பள்ளிவாசலுக்கு சென்று பஜ்ர்,இஷா தொழுவதை தடுக்க கூடாது.

ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் அதனை ஏற்றார்கள்.ஆதிகா 
(ரளி) அவர்கள் உமர் (ரளி) அவர்களின் ஷஹாதத் (வீரமரணம்) வரை அன்னாரின் திருமண பந்தத்தில் இருந்தார்கள்.ஹள்ரத் உமர் (ரளி) அவர்களுக்கு பிறகு ஹள்ரத் ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரளி) (சுவனவாசி எனும் சுபசெய்தி கூறப்பட்டவர்) அவர்களை அதே நிபந்தனையின் பேரில் திருமணம் செய்தார்கள்.ஆதிகா (ரளி) அவர்கள் வழமைக்கு ஏற்ப பள்ளிவாசலுக்கு சென்று தொழுதார்கள்.இதனை ஜுபைர் (ரளி) அவர்கள் விரும்பவில்லை.இதனால் ஆதிகா (ரளி) என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார்கள்.(நிபந்தனைக்கு மாற்றம் செய்து தடுக்க விரும்புகிறீர்களா?)ஜுபைர் (ரளி) அவர்கள் அமைதியாக இருந்தார்.

  ஒரு தடவை இஷா தொழுகைக்கு 
ஆத்திகா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதிற்குச் செல்லும்போது, வழியில் ஓரிடத்தில் ஹஜ்ரத் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உட்கார்ந்து கொண்டு அவர்களைச் சீண்டினார்கள்.கணவராக இருந்ததால் அவ்வாறு சீண்டியது அவர்களுக்கு ஆகுமானதாக சீண்டி அவர் முடியவில்லை இருந்தது. எனினும், இருளின் காரணமாகச் யார்? என்பதை அவர்கள் கண்டுகொள்ள முடியவில்லை.

ஆனால், அன்று முதல் அவ்வம்மையார் மஸ்ஜிதுக்குச் செல்வதை விட்டுவிட்டார்கள். பிறகு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நீ ஏன் இப்பொழுதெல்லாம் மஸ்ஜிதுக்கு தொழச் செல்வதில்லை என வினவியதற்கு, இப்பொழுது காலம் கெட்டு விட்டது என அவர்கள் பதிலளித்தார்கள்.(சுருக்கமான கருத்து) (ஆதாரம்:அத்தம்ஹீத் லி இப்னு அப்துல் பர் 23/404-407)

اخبرنا احمد بن عبدالله بن محمد و احمد بن سعيد بن بشر قالا: حدثنا مسلمة بن القاسم قال حدثنا احمد بن عیسی المقرى المعروف بابن الوشا، قال حدثنا محمد بن ابراهيم بن زیاد مولی بن هاشم قال: حدثنا ابراهيم بن عبدالله الهروی قال حدثنا هشيم بن بشير ، قال حدثنا رجل من اهل المدينة يقال له محمد بن مجبر عن زید بن اسلم وعبدالرحمن بن القاسم عن ابيه

இந்த நிகழ்வின் அறிவிப்பாளர்கள் தொடர் குறித்து ஓர் ஆய்வு

1) ஹாபிள் இப்னு அப்துல்பர் : பிரபல்யமானவர்,இமாம்,
பலமானவர்,ஹாபிள் (ஆதாரம்:ஸியரு அஃலாமின் நுபலா ,8/153)

2)இமாம் அபூஉமர் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு அல்பாஜி:பலமானவர்  என்பதாக இமாம் குத்லூபஙா அவர்கள் கூறியுள்ளார்.(ஆதாரம்:கிதாபுஸ்ஸிகாத் வில் காஸிம் ,1/382

இதே போன்று இப்னு அப்துல்பர் அவர்கள்,இமாம் இப்னுல் பாஜி அவர்களின் துணைச்சான்றை கூறியவாறு இந்த அறிவிப்பை முஹத்திஸ் அஹ்மத் இப்னு ஸயீத் இப்னு புஷ்ரிடமிருந்து கேட்டதாக கூறுகிறார்.முஹத்திஸ் அஹ்மத் இப்னு ஸயீத் இப்னு புஷ்ர் அவர்கள் ஹஸன் (ஏற்கத்தக்க) தரத்தில் உள்ள அறிவிப்பாளர் என்பதாக விரிவாக தாரீகுல் இஸ்லாம் 8/710 நற்சான்று தரப்பட்டுள்ளது.

3)இமாம் முஸ்லிமா இப்னு காஸிம்:பலமானவர்.எனினும், இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் பலகீனமானவர் என்கிறார்கள்.ஆனால்,இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் அதற்கு மறுப்பளித்து இமாம் முஸ்லிமா பெரும் உயர்வு மிக்கவர்,விரோதிகள் தான் அன்னாரை அல்லாஹூவை அவனது படைப்பினங்களோடு ஒப்பாக்குபவர் (தஷ்பீஹ்-تشبيه எனும் பிரிவை சேர்ந்தவர்) என்பதாக பழிசுமத்திவிட்டனர்.
இமாம் இப்னு ஹஜ்ம் (ரஹ்) கூறுகிறார்:ஹதீஸ்களை அதிகமாக செவிமடுத்தவர்,அதிகமான ஹதீஸ்களை மனனம் செய்தவர்,அதிகமான அறிவிப்புகளை அறிந்தவர்,மார்க்க ஞானத்தில் விசாலமானவர்.(ஆதாரம்:லிஸானுல் மீஜான் 2/43) மேலும் இமாம் அபூ அப்துல்லாஹ் இப்னு அபூநஸ்ருல் ஹுமைதி:உந்துலுஸின் முஹத்திஸ்,அபூஜஃபருல் ழப்யி:உந்துலுஸின் முஹத்திஸ் (ஆதாரம்:ஜத்வதுல் முக்தபஸ், பக்கம்:346, புங்யதுல் முல்தமிஸ், பக்கம்:463)


4) அஹ்மத் இப்னு ஈஸா அல்முகிர்ரி அவர்கள் இப்னு அல்வஷா என்ற பெயரில் பிரபல்யம்.அன்னாரிடமிருந்து இருவர் அறிவித்துள்ளனர்.

a) இமாம் இப்னு அதி (ரஹ்) :பிரபல்யமான இமாம்,ஜர்ஹு 
வ த்தஃதீலின் (அறிவிப்பாளர்களின் நிறை,குறை எடை போடும்) இமாம் 

b)ஹாபிள் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் அபுல்ஹுஸைன் அர்ராஜி :பலமானவர் (ஆதாரம்:தாரீகுல் இஸ்லாம் 7/857)

அஹ்மத் இப்னு ஈஸா அல்முகிர்ரி அவர்களிடமிருந்து இரு பலமானவர்கள் அறிவித்துள்ளனர்.எனவே மக்பூல் (ஏற்கத்தக்கவர்) எனும் தரத்தை அடைந்தவர்.

இமாம் முஸ்லிம் இப்னுல் காஸிம்:

كتبت عنه حديثا كثير و كان جامعا للعلم وكان اصحاب الحديث يختلفون فيه فبعضهم يوثقه وبعضهم يضعفه

நான் அன்னாரிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை எழுதியுள்ளேன்.மார்க்க கல்வியை திரட்டியவர்.அன்னார் குறித்து ஹதீஸ்கலை வல்லுனர்களிடத்தில் இருவித கருத்துக்கள் உண்டு.சில அறிஞர்கள் பலமானவர் என்பதாகவும்,சில அறிஞர்கள் பலவீனமானவர் என்பதாகவும் அறிவித்துள்ளனர்.(ஆதாரம்:லிஸானுல் மீஜான் 1/571)

5)இமாம் முஹம்மது இப்ராஹீம் இப்னு ஜியாத்:பலமானவர்.(ஆதாரம்:கிதாபுஸ்ஸிகாத் லில்காஸிம் 8/101)

6)இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் அல்ஹரவி:பலமானவர்.(ஆதாரம்:இக்மாலு தஹ்தீபில் கமால்,1/229)

7)ஹுஸைன் இப்னு பஷீர்:புகாரி,முஸ்லிம் நூல்களின் அறிவிப்பாளர்,பலமானவர்,உறுதியானவர் (தக்ரீப்:7312)

8)முஹம்மது இப்னு அப்துர்ரஹ்மான் அல்முஜ்பிர்:

a)இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள்:பலமானவர் (ஆதாரம்:அல்முன்தஹப் மினல் இலலி லில்ஹிலாலி ,86)

b)இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்கள்:பலமானவர்.அவரின் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானவது.

c)இமாம் தஹபி (ரஹ்) அவர்கள்:இவரின் அறிவிப்பை ஸஹீஹைன் நிபந்தனையின் படி உள்ளது என்பதை ஏற்கிறார்.(ஆதாரம்:அல்முஸ்தத்ரக் 1/323,741)

d)இமாம் ஹுஷைம் இப்னு பஷீர் அவர்கள்,முஹம்மது இப்னு அப்துர்ரஹ்மான் அல்முஜ்பிர் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.இமாம் ஹுஷைம் அவர்கள் பலமானவரிடமிருந்து தான் அறிவிப்பவர்.(ஆதாரம்:இத்ஹாஃபுன் 2/)122,84)

முஹம்மது இப்னுல்முஜ்பிர்  அவரின் மீது விமர்சனமும் உண்டு.எனினும் அனைத்தும் தெளிவானது இல்லை.அத்துடன் மூடலாக உள்ளது.இப்னு மயீன் (ரஹ்) அவர்கள்: ليس بشيء (ஒன்றுமில்லாதவர்) இது தெளிவான விமர்சனம் இல்லை.இமாம் நஸாயி (ரஹ்) அவர்கள்:  விடப்பட்டனர் (متروك) ,இமாம் ஃபல்லாஸ் (ரஹ்) அவர்கள்:பலவீனமானவர்.
இவ்விரு விமர்சனமும் மூடலாக உள்ளது.

9)இமாம் ஜைத் இப்னு அஸ்லம்:பலமானவர்.(ஆதாரம்:தக்ரீப்:2117) 
இவ்வாறே இமாம் ஜைத் இப்னு அஸ்லம் அவர்களுக்கு ஒரு துணை சான்றாக இமாம் அப்துர்ரஹ்மான் இப்னுல் காஸிம் உள்ளவர்.அவர் ஸஹீஹைனின் அறிவிப்பாளர்,பலமானவர்,
வலுவானவர்,மேன்மையானவர்.(ஆதாரம்:தக்ரீப் 3981)

10)அஸ்லம் பிரபல்யமான மஹ்ளரமி,பலமானவர்.
(ஆதாரம்: தக்ரீப்,406)

ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள்,ஹள்ரத் ஜுபைர் (ரளி) அவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை விரும்பவில்லை.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு பெண்களிடத்தில் ஏற்படும் சீர்கேடுகள்,குறைபாடுகளை முன்பே உணர்ந்திருந்தனர் என்பதை அனைத்து அறிவிப்புகளிலிருந்தும் தெளிவாக புரியமுடிகிறது.



Wednesday, July 22, 2020

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?

தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? (ஓர் ஆய்வு தொடர்:2)


பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி கேட்டால் அனுமதி தரவேண்டும் எனும் ஹதீஸ் குறித்து முஜ்தஹித்கள் ஆய்வாளர்கள் முற்கால அறிஞர்களின் நிலைப்பாடு

1)இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

هذا شبهه من احاديث الباب ظاهر في انها لا تمنع المسجد لكن بشروط ذكرها العلماء مأخوذة من الأحاديث وهو ان لا تكون متطيبة ولا متزينة ولا ذات خلاخل يسمع صوتها ولا ثياب فاخرة ولا مختلطة بالرجال ولا شابة ونحوها ممن يفتن بها وان لا يكون في الطريق مايخاف به مفسدة ونحوها وهذا النهي عن منعهن من الخروج محمول على كراهة التنزیه

இந்த ஹதீஸ் மற்றும் அதனின் தலைப்புடன் தொடர்புடைய மற்ற ஹதீஸ்களின் வெளிப்படையான கருத்தானது பெண்களை பொதுவாக பள்ளிவாசலுக்கு செல்வதை விட்டும் தடுப்பது கூடாது.எனினும்,உலமாக்கள் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்கள்.அவைகள் ஹதீஸிருந்து எடுக்கப்பட்டவை.நிபந்தனைகள் (பெண்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது) நறுமணம் பூசுவது கூடாது.அலங்காரம் செய்வது கூடாது.நேர்த்தியான ஆடை அணிந்திருப்பது கூடாது.கவர்ந்து இழுக்கும் வசிகரிக்கும் கவர்ச்சி இருக்க கூடாது.(பாதைகளில்) ஆண்களுடன் கலக்காமல் இருப்பது.கன்னிப்பெண்ணாக இருக்கக்கூடாது.கன்னிப்பெண்களை போன்று குழப்பம் ஏற்படும் அபாயம் இல்லாமல் இருக்கவேண்டும்.(பள்ளிவாசலுக்கு செல்லும் பாதை) குழப்பம், பிரச்சினைகளை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்.பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுப்பது சம்பந்தமான ஹதீஸில் உள்ள தடையானது மக்ரூஹ் தன்ஜீஹ் (லேசான மக்ரூஹ்) என்பதாக கருதப்படும்.இந்த நிபந்தனைகளை பேணி பெண் வருவதை தடுப்பது மக்ரூஹ் தன்ஜீஹாகும்.(ஆதாரம்:
ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் லிந்நவவி 4/161,162)

2)இமாம் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுயூத்தி (ரஹ்) அவர்களும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுவதை எடுத்தெழுதியுள்ளார்கள்.
(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம் லிஸ்ஸுயூத்தி 2/156)

3)இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

وقرن فی بيوتكن أى الزمن فلا تخرجن لغير حاجة و من الحوائج الشرعية الصلاة في المسجد بشرطه كما قال رسول الله والعالم: لاتمنعو اماء الله مساجد الله وليخرجن وهن تفلات وفي رواية وبيوتهن خير لهن

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் மற்றும் முஸ்லிம் பெண்மணிகளுக்கு அல்லாஹ்வின் கட்டளையானது வீட்டில் தங்கியிருக்க வேண்டும். தேவையின்றி வெளியேறுவது கூடாது.நிபந்தனைகளை பேணி பள்ளிவாசலுக்கு செல்வது  ஷரீஅத்தின் தேவைகளில்
உள்ளது.ஏனெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுக்காதீர்.அவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியேறினால் ஆடை கந்தலாக இருக்கவேண்டும்.மற்றோர் அறிவிப்பில் தொழுகையை வீட்டில் நிறைவேற்றுவது சிறந்தது.(ஆதாரம்:தப்ஸீர் இப்னு கஸீர் 6/363)

எனவே இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களும் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு நிபந்தனைகள் உண்டு என்கிறார்கள்.

4)இமாம் இராகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
 فيه ان الزوج مأمور أن لا 
يمنعها من المساجد اذا استأذنته و لكن بالشروط۔

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு அனுமதி கேட்டால் அவர்களை தடுக்காதீர்கள் என்பதாக கணவனுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.எனினும், நிபந்தனைகள் உண்டு.(ஆதாரம்:தர்ஹுத்தஸ்ரிப் ஃபி ஷர்ஹித்தக்ரீப் 2/315) 

இமாம் அவர்கள் மேற்சொன்ன நிபந்தனைகளையே பட்டியலிட்டுள்ளார்கள்.

5)இமாம் காளி இயாள் மாலிகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

خروج النساء للمساجد مباح لهن، ولكن على شروط كماجاء الحديث وقاله العلماء: الايخرجن متطيبات، ولامتزينات ولا مزاحمات للرجال وان يكون ذلک) بالليل، ومنع من ذلك الشابة منهن التی تخش فتنته

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு.எனினும், ஹதீஸ்களில் வந்துள்ளதைப் போன்று நிபந்தனைகளும் உண்டு.உலமாக்கள் கூறுகிறார்கள்:நறுமணம் பூசிய நிலையில்,அலங்கரித்த நிலையில், ஆண்களுடன் கலப்பு ஏற்படும் நிலையில் ,இரவு நேரத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வது கூடாது.மேலும் குழப்பம் ஏற்படும் அபாயம் உள்ள வாலிப பெண்கள்(பள்ளிவாசலுக்கு செல்வதை விட்டும்) தடுக்கப்பட்டுள்ளனர். (ஆதாரம்:அல்இக்மால் லில்காளி இயாள் 2/353)

6)ஹாபிள் அபூ ஃபதஹ் இப்னு தகீகுல் ஈத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

الحديث عام في النساء ولكن الفقهاء قد خصوه بشروط

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பெண்கள் விஷயத்தில் பொதுவாக உள்ளது.எனினும்,புகஹாக்கள் நிபந்தனைகளை விதித்து குறிப்பாக்கியுள்ளனர். (ஆதாரம்:இக்ஹாமுல் அஹ்காம் 1/179)

பிறகு ஹாபிழ் அவர்கள் விரிவாக நிபந்தனைகளை கூறி அவைகளை ஹதீஸ்களின் மூலம் நிரூபித்துள்ளார்கள்.

7)ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்,ஹாபிள் இப்னு தகீகுல் ஈதின் (ரஹ்) சொல்லிலிருந்து ஆதாரம் எடுத்து அதனை வலியுறுத்தி விரிவாக விளக்குகிறார்:(அரபி வாசகம் சுருக்கம்)

قال بن دقيق العيد ي هذا الحديث عام في النساء الا ان الفقهاء خصوه بشروط منها: ان لاتتطيب وهو في بعض

الروايات وليخرجن تفلات. . قال ويلحق بالطيب مافی معناه لان سبب المنع منه ما فيه من تحریک داعية الشهوة

کحسن الملبس والحلي الذي يظهر والزينة الفاخرة و كذا الاختلاط بالرجال. . . و قدوردفي بعض طرق هذا الحديث

وغیره مايدل على أن صلاة المرأة في بيتها افضل من صلاتها في المسجد وذلك في رواية حبيب بن ابی ثابت عن بن عمر بلفظ

لا تمنعوا نساؤكم المساجد وبيوتهن خير لهن۔ (اخر جه داود وصححه بن خزيمة)...... ووجه كون صلاتها في الأخفاء

افضل تحقق الأمن فيه من الفتنة ويتأكد ذلک بعد وجودما احدث النساء من التبرج والزينة ومن ثم قالت عائشة رضي الله عنها  ماقالت

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பெண்கள் விஷயத்தில் பொதுவாக உள்ளது.எனினும்,புகஹாக்கள் நிபந்தனைகளை விதித்து குறிப்பாக்கியுள்ளனர். அவைகளில் பள்ளிவாசலுக்கு வரும் பெண் நறுமணம் பூசுவது கூடாது.இந்த நிபந்தனை சில ஹதீஸ்களில் (கந்தல் ஆடையுடன் வெளியேறுதல்) வார்த்தைகளுடன் வந்துள்ளது.இந்த சட்டமானது நறுமணத்தை போன்று இச்சையை தூண்டும் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.ஏனெனில் (வீட்டிலிருந்து வெளியேறும் சமயம்) நறுமணம் உபயோகப்படுத்துவதால்  இச்சையின் உணர்வுகள் 
உருவாகும் என்பதுதான்
தடுக்கப்பட்ட இரகசியமாகும்.(எனவே நறுமணத்தை போன்று இச்சையை உண்டாக்கும் ஒவ்வொன்றும் தடுக்கப்பட்டுள்ளது) அழகான ஆடை,பெருமையும்,
அலங்காரத்தையும் வெளிப்படுத்தும் ஆபரணங்கள்,ஆண்களுடன் கலப்பு ஏற்படுவது (அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது)

பிறகு ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:இந்த ஹதீஸின் சில அறிவிப்பாளர்களின் தொடர்களில்,இவை அல்லாத மற்ற ஹதீஸ்களில் வந்துள்ள வார்த்தைகளின் மூலம் பெண் தனது வீட்டில் தொழுகையை நிறைவேற்றுவது பள்ளிவாசலில் நிறைவேற்றுவதை விட சிறந்தது.பொருத்தமானது.
எவ்வாறெனில் இப்னு உமர் (ரளி) அவர்களின் அறிவிப்பு;நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்காதீர்.எனினும்,வீடு அவர்களுக்கு மிக சிறந்தது.இந்த ஹதீஸை இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இமாம் இப்னு குஜைமா (ரஹ்) அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்கிறார்கள்.

பெண்கள் பர்தாவிற்குள் முழுமையாக மறைந்திருக்கும் நிலையில் தொழுவது சிறந்தது என்பதன் காரணம் இந்த சமயத்தில் பித்னாக்களிலிருந்து (நீங்கி) முழுமையான பாதுகாப்பும் மனநிம்மதியும் கிடைக்கும்.

மேலும் கூறுகிறார்கள்:(நிபந்தனைகளை பேணாத சமயத்தில்) பெண்களின் அலங்காரம், கவர்ச்சி,ஆண்களுடன் கலப்பது போன்ற சீர்கேடுகள் உண்டான பிறகு பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றுவதற்கு பதிலாக வீட்டிலே தொழுகையை நிறைவேற்றும் சட்டம் வலுப்பெறுகிறது.(எனவேதான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நிபந்தனைகளை பேணாமல் இருந்தால் பள்ளிவாசலுக்கு வரும் அனுமதி இல்லை)

 மேலும் கூறுகிறார்கள்:பெண்கள் நிபந்தனைகளை பேணுவதில் குறைப்பாட்டின் சீர்கேட்டின் காரணமாக பள்ளிவாசலுக்கு வரும் சட்டம் மாறிவிட்டது.இதனைதான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்.(ஆதாரம்:பத்ஹுல் பாரி 2/349)

தெளிவு:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,பெண்களை பள்ளிவாசலுக்கு நிபந்தனைகளின் பேரில் தான் அனுமதி அளித்தார்கள் என்பதை இமாம்களின் ஆய்வுகளின் மூலம் புரியமுடிகிறது.அண்ணலாரின் காலத்தில் பெண்கள் முழுமையான பர்தா, நறுமணம் பூசாமல்,கந்தல் ஆடையுடன் அலங்காரமின்றி, ஆண்களுடன் கலக்காமல் வந்துள்ளனர்.

பெண்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் நிபந்தனைகளை முழுமையாக பேணி இந்த காலத்தில் வர முடியுமா? என்பதை அறிவுள்ளவர்கள் எதார்த்தத்தை உணரமுடியும்.நபி ஸல்லல்லாஹூ அவர்கள் பொற்காலமாக கூறிய 
ஸஹாபாக்களின் காலத்தில் பெண்கள் நிபந்தனைகளை பேணுவதில் குறை ஏற்படுத்தினார்கள் எனும் போது இன்றைய நவநாகரீக காலத்தில் பெண்கள் நிபந்தனைகள் பேணமுடியுமா? என்பதை உள்ளம் தொட்டு கூறுங்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)