தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? (ஓர் ஆய்வு தொடர்:3)
ஹள்ரத் உமர் (ரளி),ஹள்ரத் ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரளி) அவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை விரும்பவில்லை.
ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் வருகிறது.உமர் (ரளி),ஹள்ரத் ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரளி) அவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை விரும்பவில்லை.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
حدثنا يوسف بن موسی، حدثنا أبو الاسامه حدثنا عبيد الله بن عمر عن نافع عن ابن عمر لإقال: كانت امرأة لعمر وقال الله مساجد الله تشهد صلاة الصبح و العشاء في الجماعة في المسجد فقيل لها: لم تخرجين وقد تعلمین ان عمریره ذلک ویغار قالت: وما يمنعه قول رسول الله صلى الله عليه وسلم :لا تمنعوا اماء الله مساجد الله
உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார்.(ஆதாரம்:புகாரி, ஹதீஸ் இலக்கம்:900)
முக்கிய குறிப்பு:முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக்கில் (5111) இல் உள்ளது.இமாம் ஜுஹ்ரி (ரஹ்) அவர்களிடமிருந்து முர்ஸலான அறிவிப்பில் வருகிறது.அந்தப் பெண்மணி உமர் (ரளி) அவர்களின் மனைவி ஆதிகா பின்த் ஜைத் (ரளி)
ஹள்ரத் உமர் (ரளி)நிலைமைகள் மாறியதும்,குழப்பத்தின் அச்சத்தால் இரவில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை விரும்பவில்லை.இதன் விபரம் அறிவிப்புகளில் தெளிவாக உள்ளது.எனினும்,ஹள்ரத் உமர் (ரளி) அவர்களின் மனைவி ஆதிகா (ரளி) அவர்களின்
கருத்து பள்ளிவாசலுக்கு செல்வதில் அச்சம் எனும் நிலையை அடையவில்லை.எனவே அவர்களின் ஆய்வின்படி நம்பிக்கை வைத்து ஜமாஅத்தில் கலந்து கொண்டார்கள்.எனினும், எப்போது பள்ளிவாசலுக்கு செல்வது பொருத்தமில்லை என்பதை உணர்ந்தாரோ பள்ளிவாசலுக்கு செல்வதை கைவிட்டார்கள்.
ஹதீஸ்துறையின் இமாம்கள் விரிவாக இந்நிகழ்வை எழுதியுள்ளார்கள்.
ஆதிகா (ரளி) அவர்கள் பிரபல்யமான ஸஹாபிய பெண்மணி.(ஸயீத் இப்னு ஜைத் சுவனவாசி என சுபச் செய்தி கூறப்பட்டவரின் சகோதரி) ஆரம்பமாக அபூபக்கர் (ரளி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரளி) அவர்களை நிகாஹ் செய்திருந்தார்.பிறகு அப்துல்லாஹ் (ரளி) அவர்களின் ஷஹாதத்திற்கு பிறகு ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள், அவர்களுக்கு திருமணத் தூது அனுப்பினார்.அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு மூன்று நிபந்தனைகளை உமர் (ரளி) அவர்களிடம் முன்வைத்தார்கள்.
1) அடிக்க கூடாது
2)நல்ல செயல் செய்வதை தடுப்பது கூடாது
3)பள்ளிவாசலுக்கு சென்று பஜ்ர்,இஷா தொழுவதை தடுக்க கூடாது.
ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் அதனை ஏற்றார்கள்.ஆதிகா
(ரளி) அவர்கள் உமர் (ரளி) அவர்களின் ஷஹாதத் (வீரமரணம்) வரை அன்னாரின் திருமண பந்தத்தில் இருந்தார்கள்.ஹள்ரத் உமர் (ரளி) அவர்களுக்கு பிறகு ஹள்ரத் ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரளி) (சுவனவாசி எனும் சுபசெய்தி கூறப்பட்டவர்) அவர்களை அதே நிபந்தனையின் பேரில் திருமணம் செய்தார்கள்.ஆதிகா (ரளி) அவர்கள் வழமைக்கு ஏற்ப பள்ளிவாசலுக்கு சென்று தொழுதார்கள்.இதனை ஜுபைர் (ரளி) அவர்கள் விரும்பவில்லை.இதனால் ஆதிகா (ரளி) என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார்கள்.(நிபந்தனைக்கு மாற்றம் செய்து தடுக்க விரும்புகிறீர்களா?)ஜுபைர் (ரளி) அவர்கள் அமைதியாக இருந்தார்.
ஒரு தடவை இஷா தொழுகைக்கு
ஆத்திகா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதிற்குச் செல்லும்போது, வழியில் ஓரிடத்தில் ஹஜ்ரத் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உட்கார்ந்து கொண்டு அவர்களைச் சீண்டினார்கள்.கணவராக இருந்ததால் அவ்வாறு சீண்டியது அவர்களுக்கு ஆகுமானதாக சீண்டி அவர் முடியவில்லை இருந்தது. எனினும், இருளின் காரணமாகச் யார்? என்பதை அவர்கள் கண்டுகொள்ள முடியவில்லை.
ஆனால், அன்று முதல் அவ்வம்மையார் மஸ்ஜிதுக்குச் செல்வதை விட்டுவிட்டார்கள். பிறகு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நீ ஏன் இப்பொழுதெல்லாம் மஸ்ஜிதுக்கு தொழச் செல்வதில்லை என வினவியதற்கு, இப்பொழுது காலம் கெட்டு விட்டது என அவர்கள் பதிலளித்தார்கள்.(சுருக்கமான கருத்து) (ஆதாரம்:அத்தம்ஹீத் லி இப்னு அப்துல் பர் 23/404-407)
اخبرنا احمد بن عبدالله بن محمد و احمد بن سعيد بن بشر قالا: حدثنا مسلمة بن القاسم قال حدثنا احمد بن عیسی المقرى المعروف بابن الوشا، قال حدثنا محمد بن ابراهيم بن زیاد مولی بن هاشم قال: حدثنا ابراهيم بن عبدالله الهروی قال حدثنا هشيم بن بشير ، قال حدثنا رجل من اهل المدينة يقال له محمد بن مجبر عن زید بن اسلم وعبدالرحمن بن القاسم عن ابيه
இந்த நிகழ்வின் அறிவிப்பாளர்கள் தொடர் குறித்து ஓர் ஆய்வு
1) ஹாபிள் இப்னு அப்துல்பர் : பிரபல்யமானவர்,இமாம்,
பலமானவர்,ஹாபிள் (ஆதாரம்:ஸியரு அஃலாமின் நுபலா ,8/153)
2)இமாம் அபூஉமர் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு அல்பாஜி:பலமானவர் என்பதாக இமாம் குத்லூபஙா அவர்கள் கூறியுள்ளார்.(ஆதாரம்:கிதாபுஸ் ஸிகாத் வில் காஸிம் ,1/382
இதே போன்று இப்னு அப்துல்பர் அவர்கள்,இமாம் இப்னுல் பாஜி அவர்களின் துணைச்சான்றை கூறியவாறு இந்த அறிவிப்பை முஹத்திஸ் அஹ்மத் இப்னு ஸயீத் இப்னு புஷ்ரிடமிருந்து கேட்டதாக கூறுகிறார்.முஹத்திஸ் அஹ்மத் இப்னு ஸயீத் இப்னு புஷ்ர் அவர்கள் ஹஸன் (ஏற்கத்தக்க) தரத்தில் உள்ள அறிவிப்பாளர் என்பதாக விரிவாக தாரீகுல் இஸ்லாம் 8/710 நற்சான்று தரப்பட்டுள்ளது.
3)இமாம் முஸ்லிமா இப்னு காஸிம்:பலமானவர்.எனினும், இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் பலகீனமானவர் என்கிறார்கள்.ஆனால்,இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் அதற்கு மறுப்பளித்து இமாம் முஸ்லிமா பெரும் உயர்வு மிக்கவர்,விரோதிகள் தான் அன்னாரை அல்லாஹூவை அவனது படைப்பினங்களோடு ஒப்பாக்குபவர் (தஷ்பீஹ்-تشبيه எனும் பிரிவை சேர்ந்தவர்) என்பதாக பழிசுமத்திவிட்டனர்.
இமாம் இப்னு ஹஜ்ம் (ரஹ்) கூறுகிறார்:ஹதீஸ்களை அதிகமாக செவிமடுத்தவர்,அதிகமான ஹதீஸ்களை மனனம் செய்தவர்,அதிகமான அறிவிப்புகளை அறிந்தவர்,மார்க்க ஞானத்தில் விசாலமானவர்.(ஆதாரம்:லிஸானுல் மீஜான் 2/43) மேலும் இமாம் அபூ அப்துல்லாஹ் இப்னு அபூநஸ்ருல் ஹுமைதி:உந்துலுஸின் முஹத்திஸ்,அபூஜஃபருல் ழப்யி:உந்துலுஸின் முஹத்திஸ் (ஆதாரம்:ஜத்வதுல் முக்தபஸ், பக்கம்:346, புங்யதுல் முல்தமிஸ், பக்கம்:463)
4) அஹ்மத் இப்னு ஈஸா அல்முகிர்ரி அவர்கள் இப்னு அல்வஷா என்ற பெயரில் பிரபல்யம்.அன்னாரிடமிருந்து இருவர் அறிவித்துள்ளனர்.
a) இமாம் இப்னு அதி (ரஹ்) :பிரபல்யமான இமாம்,ஜர்ஹு
வ த்தஃதீலின் (அறிவிப்பாளர்களின் நிறை,குறை எடை போடும்) இமாம்
b)ஹாபிள் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் அபுல்ஹுஸைன் அர்ராஜி :பலமானவர் (ஆதாரம்:தாரீகுல் இஸ்லாம் 7/857)
அஹ்மத் இப்னு ஈஸா அல்முகிர்ரி அவர்களிடமிருந்து இரு பலமானவர்கள் அறிவித்துள்ளனர்.எனவே மக்பூல் (ஏற்கத்தக்கவர்) எனும் தரத்தை அடைந்தவர்.
இமாம் முஸ்லிம் இப்னுல் காஸிம்:
كتبت عنه حديثا كثير و كان جامعا للعلم وكان اصحاب الحديث يختلفون فيه فبعضهم يوثقه وبعضهم يضعفه
நான் அன்னாரிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை எழுதியுள்ளேன்.மார்க்க கல்வியை திரட்டியவர்.அன்னார் குறித்து ஹதீஸ்கலை வல்லுனர்களிடத்தில் இருவித கருத்துக்கள் உண்டு.சில அறிஞர்கள் பலமானவர் என்பதாகவும்,சில அறிஞர்கள் பலவீனமானவர் என்பதாகவும் அறிவித்துள்ளனர்.(ஆதாரம்:லிஸானு ல் மீஜான் 1/571)
5)இமாம் முஹம்மது இப்ராஹீம் இப்னு ஜியாத்:பலமானவர்.(ஆதாரம்:கிதாபு ஸ்ஸிகாத் லில்காஸிம் 8/101)
6)இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் அல்ஹரவி:பலமானவர்.(ஆதாரம்:இக்மா லு தஹ்தீபில் கமால்,1/229)
7)ஹுஸைன் இப்னு பஷீர்:புகாரி,முஸ்லிம் நூல்களின் அறிவிப்பாளர்,பலமானவர்,உறுதியா னவர் (தக்ரீப்:7312)
8)முஹம்மது இப்னு அப்துர்ரஹ்மான் அல்முஜ்பிர்:
a)இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள்:பலமானவர் (ஆதாரம்:அல்முன்தஹப் மினல் இலலி லில்ஹிலாலி ,86)
b)இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்கள்:பலமானவர்.அவரின் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானவது.
c)இமாம் தஹபி (ரஹ்) அவர்கள்:இவரின் அறிவிப்பை ஸஹீஹைன் நிபந்தனையின் படி உள்ளது என்பதை ஏற்கிறார்.(ஆதாரம்:அல்முஸ்தத் ரக் 1/323,741)
d)இமாம் ஹுஷைம் இப்னு பஷீர் அவர்கள்,முஹம்மது இப்னு அப்துர்ரஹ்மான் அல்முஜ்பிர் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.இமாம் ஹுஷைம் அவர்கள் பலமானவரிடமிருந்து தான் அறிவிப்பவர்.(ஆதாரம்:இத்ஹாஃபுன் 2/)122,84)
முஹம்மது இப்னுல்முஜ்பிர் அவரின் மீது விமர்சனமும் உண்டு.எனினும் அனைத்தும் தெளிவானது இல்லை.அத்துடன் மூடலாக உள்ளது.இப்னு மயீன் (ரஹ்) அவர்கள்: ليس بشيء (ஒன்றுமில்லாதவர்) இது தெளிவான விமர்சனம் இல்லை.இமாம் நஸாயி (ரஹ்) அவர்கள்: விடப்பட்டனர் (متروك) ,இமாம் ஃபல்லாஸ் (ரஹ்) அவர்கள்:பலவீனமானவர்.
இவ்விரு விமர்சனமும் மூடலாக உள்ளது.
9)இமாம் ஜைத் இப்னு அஸ்லம்:பலமானவர்.(ஆதாரம்:தக்ரீ ப்:2117)
இவ்வாறே இமாம் ஜைத் இப்னு அஸ்லம் அவர்களுக்கு ஒரு துணை சான்றாக இமாம் அப்துர்ரஹ்மான் இப்னுல் காஸிம் உள்ளவர்.அவர் ஸஹீஹைனின் அறிவிப்பாளர்,பலமானவர்,
வலுவானவர்,மேன்மையானவர்.(ஆதாரம் :தக்ரீப் 3981)
10)அஸ்லம் பிரபல்யமான மஹ்ளரமி,பலமானவர்.
(ஆதாரம்: தக்ரீப்,406)
ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள்,ஹள்ரத் ஜுபைர் (ரளி) அவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை விரும்பவில்லை.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு பெண்களிடத்தில் ஏற்படும் சீர்கேடுகள்,குறைபாடுகளை முன்பே உணர்ந்திருந்தனர் என்பதை அனைத்து அறிவிப்புகளிலிருந்தும் தெளிவாக புரியமுடிகிறது.
No comments:
Post a Comment