தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? (ஓர் ஆய்வு தொடர்:4)
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்பதான் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை ஸஹாபாக்கள் தடுத்தார்கள்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்பதான் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை ஸஹாபாக்கள் தடுத்தார்கள்.ஏனெனில் பெண்கள், பள்ளிவாசலுக்கு வருவதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிபந்தனைகள் விதித்து பேணும்படி வலியுறுத்தினார்கள்.
அவைகளுக்கு மாற்றமாக நடக்கும் போது பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுப்பதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.இது குறித்த ஹதீஸ்களை இனி பார்ப்போம்.(அதனை ஆரம்பத்திலும் கூறியுள்ளோம்.)
ஹதீஸ் எண்:(1)
حدثنا أبو بكر بن أبي شيبة وعلي بن محمد قالا حدثنا عبيد الله بن موسى عن موسى بن عبيدة عن داود بن مدرك عن عروة بن الزبير عن عائشة قالت بينما رسول الله صلى الله عليه وسلم جالس في المسجد إذ دخلت امرأة من مزينة ترفل في زينة لها في المسجد فقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس انهوا نساءكم عن لبس الزينة والتبختر في المسجد فإن بني إسرائيل لم يلعنوا حتى لبس نساؤهم الزينة وتبخترن في المساجد
ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த போது முஜீனா கபீலாவை சேர்ந்த பெண் அலங்காரமான ஆடையுடன் நுழைந்தாள்.(மிடுக்குடன் நடந்து வருவதை பார்த்து) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:மக்களே! பெண்கள் மஸ்ஜிதில் அலங்காரமான ஆடையுடன்,பெருமை நிறைந்த ஆடையுடன் வருவதை தடுங்கள்.பனுஇஸ்ராயீல்கள் சபிக்கப்பட்டது அவர்களின் பெண்கள் அலங்காரமான ஆடையை (அணிந்து வெளிவர) ஆரம்பித்தனர்.மஸ்ஜிதிற்கு பெருமையுடன் வர ஆரம்பித்தனர்.(ஆதாரம்:இப்னுமாஜா ,ஹதீஸ் இலக்கம்:4001)
பெண்கள் அலங்காரத்துடன் வரும்போது தடுக்கும் படி உத்தரவிடப்பட்டதை இந்த ஹதீஸிலிருந்து புரியமுடிகிறது.
ஹதீஸ் எண்:(2)
حدثنا یحیی بن يحيى، و اسحاق بن ابراهيم قال اسحاق ابراهيم قال يحيى: اخبرنا عبد الله بن محمد بن عبداللهبن ابی فروق عن یزیدبن خصيفة عن بسر بن سعيد، عن ابي هريرة ك قال: قال رسول الله الله علم : ايما امرأة اصابت بخورأفلاتشهد معنا العشاء الآخرة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம்:570)
مرت بابی هریرة امرأة وريحها تعصف فقال لها: الی این تریدین یا امة الجبار قالت: الى المسجد، قال: تطيبت؟ قالت: نعم، قال فارجع فاعتسلی، فانی سمعت رسول الله المعيقول: لا يقبل الله من امراة صلاة خرجت الى المسجد وريحها تعصف حتى ترجع فتغتسل
மூஸா இப்னு யஸார் அவர்கள் கூறுகிறார்கள்:அபூஹுரைரா (ரளி) அவர்களின் அருகில் ஒரு பெண்மணி கடந்து சென்றாள்.அவளின் ஆடையில் நறுமணம் கமழ்ந்தது.ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் கேட்டார்கள்: அடக்கியாளும் அல்லாஹ்வின் அடிமையே! எங்கு செல்கிறாய்? அதற்கு பெண்மணி பள்ளிவாசலுக்கு செல்கிறேன் என கூறினாள்.அன்னார்,நறுமணம் பூசியுள்ளாயா? என வினவினார்."ஆம்" என அவள் கூறினாள்.அன்னார் கூறினார்;திரும்பி சென்று ஆடையை கழுவி விடுவாயாக! "எந்தப் பெண்மணி ஆடையில் நறுமணம் கமழும் நிலையில் பள்ளிவாசலுக்கு வந்தால் திரும்பி சென்று குளிக்கும் வரை அல்லாஹ் அவளின் தொழுகையை ஏற்க மாட்டான்" என்பதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு குஜைமா ஹதீஸ் இலக்கம் :1682)
ஹதீஸ் எண்:(3)
لوادرک رسول الله صلى الله عليه وسلم ما احدث النساء لمنعهن كما منعت نساء بنی اسرائیل
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள்.
இதனை அறிவித்த உம்ராவிடம் 'பனு இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டிருந்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'ஆம்' என்றார் என்று யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார்கள்.(ஆதாரம்:புகாரி,
ஹதீஸ் இலக்கம்:869)
மத்ஹப் மறுப்பாளர்கள் இது ஆயிஷா (ரளி) அவர்களின் தனிப்பட்ட கருத்து என்பதாக வாதிடுகின்றனர்.இதற்கு எதிராக
ஆயிஷா (ரளி) அவர்கள் கூறியதை குறித்து ஹதீஸ்கலை வல்லுநர்களின் விளக்கங்களை இனி பார்ப்போம்!
1) இமாம் ஹாபிள் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
تشير عائشة رضي الله عنه الی النبی صلى الله عليه وسلم كان يرخص في بعض مايرخص فيه حيث لم يكن في زمنه فساد ثم يطر الفساد ويحدث بعده فلو أدرک ماحدث بعده لما استمر على الرخصة بل نهی عنه، فانما یامر بالصلاح، وينهى عن الفساد
ஆயிஷா (ரளி) அவர்கள் சுட்டி காட்டியது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சில விஷயங்களை அனுமதியளித்தார்கள்.ஏனெனில் அப்போது குழப்பங்கள் பரவலாக இல்லை.நபியின் காலத்திற்கு பிறகு குழப்பங்கள் பரவலானது.எனவே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னால் நடைபெறும் குழப்பங்களை பார்த்திருந்தால் (பெருமானாரின் நிபந்தனைகளில் குறை ஏற்படுத்தி குழப்பம் ஏற்படுதல்) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதியில் நிலைத்திருக்க மாட்டார்கள்.(அதாவது பெண்களை பள்ளிவாசலுக்கு வருவதை விட்டும் தடுத்திருப்பார்கள்) ஏனெனில் அண்ணலார் அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.தீமையை தடுப்பார்கள்.
(ஆதாரம்:பத்ஹுல் பாரி லி இப்னு ரஜப் 8/41)
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விதித்த நிபந்தனைகளில் பெண்கள் குறை ஏற்படுத்தினால் அவர்களை,
ஸஹாபாக்கள் பள்ளிவாசலை விட்டும் தடுக்கவேண்டும்.பிறகு பெண்கள் அலங்காரம், கவர்ச்சியான வழிமுறையில் நடந்து கொண்டதைக் கண்டு இதனை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் பார்த்திருந்தால் தடைசெய்திருப்பார்கள் எனும் கருத்தில் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்.
2)ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
افضل تحقق الأمن فيه من الفتنة ويتأكد ذلک بعد وجودما احدث النساء من التبرج والزينة ومن ثم قالت عائشة رضي الله عنها ماقالت
(நிபந்தனைகளை பேணாத சமயத்தில்) பெண்களின் அலங்காரம், கவர்ச்சி,ஆண்களுடன் கலப்பது போன்ற சீர்கேடுகள் உண்டான பிறகு பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றுவதற்கு பதிலாக வீட்டிலே தொழுகையை நிறைவேற்றும் சட்டம் வலுப்பெறுகிறது.(எனவேதான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நிபந்தனைகளை பேணாமல் இருந்தால் பள்ளிவாசலுக்கு வரும் அனுமதி இல்லை)
மேலும் கூறுகிறார்கள்:பெண்கள் நிபந்தனைகளை பேணுவதில் குறைப்பாட்டின் சீர்கேட்டின் காரணமாக பள்ளிவாசலுக்கு வரும் சட்டம் மாறிவிட்டது.இதனைதான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்.(ஆதாரம்:பத்ஹுல் பாரி 2/349)
3)இப்னுல் ஜவ்ஜி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
انما اشارت عائشة بما احدث النساء من الزينة و ال لباس و الطيب و نحو ذلك مما يخاف منه الفتنة
ஆயிஷா (ரளி) அவர்கள் சுட்டிகாட்டுவதானது பெண்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாபாத்திற்கு பிறகு அலங்காரம்,ஆடை, நறுமணம் போன்ற குழப்பத்தை (தூண்டும்) அஞ்சும் நிலையை உண்டாக்கினார்கள்.
(ஆதாரம்:கஷ்ஃபுல் முஷ்கில் லி இப்னுல் ஜவ்ஜி 4/36)
4)ஹாபிள் இப்னு தகீகுல்ஈத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அலங்காரத்தின் புதுப்புது வழிமுறைகளை பெண்கள் உருவாக்கியதை ஆயிஷா (ரளி) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அதனை தடுக்கவும் செய்கிறார்கள்.(ஆதாரம்:இஹ்காமு ல் அஹ்காம் 1/197)
5)பத்ருத்தீன் அய்னி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
قوله ما احدث النساء في محل النصب على انه مفعول ادرک أی ما احدثت من الزينة و الطيب و حسن الثياب و نحوه
ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் (நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாபாத்திற்கு பிறகு) தனது காலத்தில் பெண்களின் புதுப்புது நடைமுறைகளை கூறியதின் (நோக்கம்) அலங்காரம், கவர்ச்சி (வெளிப்படுத்துதல்)நறுமணம் (பூசுதல்),அழகான ஆடைகள் (அணிதல்) போன்றவைகளை (வீட்டிற்கு) வெளியே பயன்படுத்துவதாகும்.(ஆதாரம்:உம் ததுல் காரி 6/158)
இதன் காரணமாக சில முஹத்திஸீன்கள் ஆயிஷா (ரளி) அவர்களின் சொல்லின்
காரணமாக கூறுவது பெண்களிடத்தில் சீர்கேடுகள் உருவாகிவிட்டால் (அதாவது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்த நிபந்தனைகளுக்கு மாற்றம் செய்தால்) பள்ளிவாசல் வருவது சரியில்லை.
6)இமாம் இப்னு பத்தால் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
أما حديث عائشة ففيه دليل لا ينبغی ان یخرجن الى المساجد اذا حدث في الناس الفساد
ஆயிஷா (ரளி) அவர்களின் வழிகாட்டுதலில் பெறப்படும் ஆதாரம், எப்போது பெண்களிடத்தில் சீர்கேடுகள் உருவாகுமோ (நிபந்தனைகளில் குறைபாடுகள் ஏற்பட்டு குழப்பங்கள் தோன்றுமோ) அதன்பிறகு பள்ளிவாசல் செல்வது சரியில்லை.(ஆதாரம்:ஷர்ஹு புகாரி லி இப்னு பத்தால் 2/471)
7)இமாம் இராகி (ரஹ்) அவர்களும் இமாம் இப்னு பத்தால் அவர்களின் கருத்தையே எடுத்தெழுதியுள்ளார்கள்.(ஆதாரம் :தர்ஹுத்தரீப் ஃபி ஷர்ஹித் தக்ரீப் 2/315)
8)இமாம் கிர்மானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
فيه دليل انه لا ينبغي للنساء أن يخرجن الى المساجداذا حدث في الناس الفساد
ஆயிஷா ரளி அவர்களின் கூற்றின்படி உள்ள ஆதாரம் பெண்களிடத்தில் சீர்கேடுகள் உருவானால் பிறகு பள்ளிவாசல் வருவது சரியில்லை.(ஆதாரம்:அல்கவாகிபுத் தராரி
5/209)
முக்கிய குறிப்பு:சில முஹத்திஸீன்கள் ஆயிஷா (ரளி) அவர்களின் சொல்லின் மூலம் கன்னிப்பெண்கள்,அழகான பெண்கள் போன்ற குறிப்பானவர்களை ஆதாரம் எடுத்துள்ளனர்.ஏனெனில் அதிகமான கன்னிப்பெண்கள்,அழகான பெண்கள் ஆடை, நறுமணம், அலங்காரம் போன்றவைகளை விதவிதமாக உபயோகிப்பார்கள்.இவர்களின் காரணமாக தான் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்த நிபந்தனைகள் பெரும்பாலும் வீணாகிவிடுகிறது.மேலும் இவர்களின் மூலம்தான் குழப்பங்கள் பெருகுகிறது.
9) இமாம் இப்னுல் முலக்கின் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
أما اليوم فلانخر الشابة ذات الهيئة، ولهذا قالت عائشة منال : لو رأى رسول الله والله ما أحدث النساء بعده لمنعهن
எனினும், கன்னிப்பெண்கள்,அழகான பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது.இதனால் தான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்:பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். (ஆதாரம்:அத்தவ்ளீஹ் லி இப்னுல் முலக்கீன் 5/51)
10)இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
أجابوا عن اخراج ذوات الخدور المخبأ بان المفسدة في ذلك الزمن كانت مامونة بخلاف اليوم ولهذاصح
عائشة رضي الله عنها لو رأى رسول الله صلى الله عليه وسلم ما احدث النساء لمنعهن المساجد كما منعت نساء بنی اسرائيل۔“
கன்னிப்பெண்கள்,பர்தாவில் இருக்கவேண்டிய பெண்கள் பள்ளிவாசல் செல்வது குறித்து வந்துள்ள அறிவிப்பிற்கு தரும் தோழர்களின் பதில் அந்த காலத்தில் (நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) சீர்கேடுகள் பரவலாக நீங்கி பாதுகாப்பு இருந்தது.இதற்கு நேர்மாற்றமாக இன்று (சீர்கேடுகளின் காலம்) இதனால்தான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்வமான அறிவிப்பு பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். (ஆதாரம்:ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் லின்நவவி 6/178)
சுருக்கம் என்னவெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு விதித்த நிபந்தனைகளை அன்னாரின் காலத்திற்கு பிறகு அவர்கள் குறைபாடுகளை ஏற்படுத்தினார்கள்.
அலட்சியப்போக்குடன் செயல்பட்டார்கள் இதனை தான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள் என்பதை அனைத்து கருத்துக்களிலிருந்தும் புரியமுடிகிறது.
பெண்கள்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்த நிபந்தனைகளில் குறைபாடுகளை உண்டாக்கினால் அவர்களை பள்ளிவாசலை விட்டும் தடுக்கும்படி ஸஹாபாக்களுக்கு அண்ணலார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இது குறித்து ஹதீஸ்களை முன்னால் கூறிவிட்டோம்.எனவேதான் முஹத்திஸீன்கள் ஆயிஷா (ரளி) அவர்களின் சரியான நோக்கத்தை புரிந்துள்ளனர்.ஆனால் மத்ஹப் மறுப்பாளர்கள் கண்மூடித்தனமாக ஆயிஷா (ரளி) அவர்களின் சொந்த கருத்து, தனிப்பட்ட கருத்து என்பதாக வாதிடுவது நிராகரிக்கப்பட்டது.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
حدثنا الحكم، حدثناعبد الرحمن بن ابی الرجال فقال ابی: یذکرہ عن أمه عن عائشة عن النبی ل قال
لاتمنعوا اماء الله مساجد الله وليخرجن تفلات: قالت عائشة:ولورأى حالهن اليوم منعهن
ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் அடிமையான பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுக்காதீர்.வீட்டிலிருந்து (துர்வாடையான) கந்தல் ஆடையில் வெளியே வரட்டும்.பிறகு ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இன்றைய சூழ்நிலையை பார்த்திருந்தால் பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுத்திருப்பார்கள்.(ஆதாரம்:மு ஸ்னத் அஹ்மத்,ஹதீஸ் இலக்கம்:24406)
நபியின் வபாத்திற்கு பிறகு பெண்கள், பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விதித்த நிபந்தனைகளுக்கு மாற்றம் செய்தனர்.இதனைக் குறித்துதான் ஹழ்ரத் ஆயிஷா ரளி அவர்கள்
கூறுகிறார்கள் என்பதை புரிய முடிகிறது.
பெண்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நிபந்தனைகளை மீறினர்.ஸஹாபாக்கள் அதனைக் கண்டித்தனர்.ஒரு காலகட்டம் வரை சகித்துக்கொண்டனர்.பிறகு வீட்டில் தொழுவதை அவர்களுக்கு ஏவினார்.
No comments:
Post a Comment