தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? (ஓர் ஆய்வு தொடர்:2)
பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி கேட்டால் அனுமதி தரவேண்டும் எனும் ஹதீஸ் குறித்து முஜ்தஹித்கள் ஆய்வாளர்கள் முற்கால அறிஞர்களின் நிலைப்பாடு
1)இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
هذا شبهه من احاديث الباب ظاهر في انها لا تمنع المسجد لكن بشروط ذكرها العلماء مأخوذة من الأحاديث وهو ان لا تكون متطيبة ولا متزينة ولا ذات خلاخل يسمع صوتها ولا ثياب فاخرة ولا مختلطة بالرجال ولا شابة ونحوها ممن يفتن بها وان لا يكون في الطريق مايخاف به مفسدة ونحوها وهذا النهي عن منعهن من الخروج محمول على كراهة التنزیه
இந்த ஹதீஸ் மற்றும் அதனின் தலைப்புடன் தொடர்புடைய மற்ற ஹதீஸ்களின் வெளிப்படையான கருத்தானது பெண்களை பொதுவாக பள்ளிவாசலுக்கு செல்வதை விட்டும் தடுப்பது கூடாது.எனினும்,உலமாக்கள் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்கள்.அவைகள் ஹதீஸிருந்து எடுக்கப்பட்டவை.நிபந்தனைகள் (பெண்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது) நறுமணம் பூசுவது கூடாது.அலங்காரம் செய்வது கூடாது.நேர்த்தியான ஆடை அணிந்திருப்பது கூடாது.கவர்ந்து இழுக்கும் வசிகரிக்கும் கவர்ச்சி இருக்க கூடாது.(பாதைகளில்) ஆண்களுடன் கலக்காமல் இருப்பது.கன்னிப்பெண்ணாக இருக்கக்கூடாது.கன்னிப்பெண்களை போன்று குழப்பம் ஏற்படும் அபாயம் இல்லாமல் இருக்கவேண்டும்.(பள்ளிவாசலுக்கு செல்லும் பாதை) குழப்பம், பிரச்சினைகளை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்.பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுப்பது சம்பந்தமான ஹதீஸில் உள்ள தடையானது மக்ரூஹ் தன்ஜீஹ் (லேசான மக்ரூஹ்) என்பதாக கருதப்படும்.இந்த நிபந்தனைகளை பேணி பெண் வருவதை தடுப்பது மக்ரூஹ் தன்ஜீஹாகும்.(ஆதாரம்:
ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் லிந்நவவி 4/161,162)
2)இமாம் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுயூத்தி (ரஹ்) அவர்களும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுவதை எடுத்தெழுதியுள்ளார்கள்.
(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம் லிஸ்ஸுயூத்தி 2/156)
3)இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
وقرن فی بيوتكن أى الزمن فلا تخرجن لغير حاجة و من الحوائج الشرعية الصلاة في المسجد بشرطه كما قال رسول الله والعالم: لاتمنعو اماء الله مساجد الله وليخرجن وهن تفلات وفي رواية وبيوتهن خير لهن
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் மற்றும் முஸ்லிம் பெண்மணிகளுக்கு அல்லாஹ்வின் கட்டளையானது வீட்டில் தங்கியிருக்க வேண்டும். தேவையின்றி வெளியேறுவது கூடாது.நிபந்தனைகளை பேணி பள்ளிவாசலுக்கு செல்வது ஷரீஅத்தின் தேவைகளில்
உள்ளது.ஏனெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுக்காதீர்.அவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியேறினால் ஆடை கந்தலாக இருக்கவேண்டும்.மற்றோர் அறிவிப்பில் தொழுகையை வீட்டில் நிறைவேற்றுவது சிறந்தது.(ஆதாரம்:தப்ஸீர் இப்னு கஸீர் 6/363)
எனவே இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களும் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு நிபந்தனைகள் உண்டு என்கிறார்கள்.
4)இமாம் இராகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
فيه ان الزوج مأمور أن لا
يمنعها من المساجد اذا استأذنته و لكن بالشروط۔
பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு அனுமதி கேட்டால் அவர்களை தடுக்காதீர்கள் என்பதாக கணவனுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.எனினும், நிபந்தனைகள் உண்டு.(ஆதாரம்:தர்ஹுத்தஸ்ரிப் ஃபி ஷர்ஹித்தக்ரீப் 2/315)
இமாம் அவர்கள் மேற்சொன்ன நிபந்தனைகளையே பட்டியலிட்டுள்ளார்கள்.
5)இமாம் காளி இயாள் மாலிகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
خروج النساء للمساجد مباح لهن، ولكن على شروط كماجاء الحديث وقاله العلماء: الايخرجن متطيبات، ولامتزينات ولا مزاحمات للرجال وان يكون ذلک) بالليل، ومنع من ذلك الشابة منهن التی تخش فتنته
பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு.எனினும், ஹதீஸ்களில் வந்துள்ளதைப் போன்று நிபந்தனைகளும் உண்டு.உலமாக்கள் கூறுகிறார்கள்:நறுமணம் பூசிய நிலையில்,அலங்கரித்த நிலையில், ஆண்களுடன் கலப்பு ஏற்படும் நிலையில் ,இரவு நேரத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வது கூடாது.மேலும் குழப்பம் ஏற்படும் அபாயம் உள்ள வாலிப பெண்கள்(பள்ளிவாசலுக்கு செல்வதை விட்டும்) தடுக்கப்பட்டுள்ளனர். (ஆதாரம்:அல்இக்மால் லில்காளி இயாள் 2/353)
6)ஹாபிள் அபூ ஃபதஹ் இப்னு தகீகுல் ஈத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
الحديث عام في النساء ولكن الفقهاء قد خصوه بشروط
இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பெண்கள் விஷயத்தில் பொதுவாக உள்ளது.எனினும்,புகஹாக்கள் நிபந்தனைகளை விதித்து குறிப்பாக்கியுள்ளனர். (ஆதாரம்:இக்ஹாமுல் அஹ்காம் 1/179)
பிறகு ஹாபிழ் அவர்கள் விரிவாக நிபந்தனைகளை கூறி அவைகளை ஹதீஸ்களின் மூலம் நிரூபித்துள்ளார்கள்.
7)ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்,ஹாபிள் இப்னு தகீகுல் ஈதின் (ரஹ்) சொல்லிலிருந்து ஆதாரம் எடுத்து அதனை வலியுறுத்தி விரிவாக விளக்குகிறார்:(அரபி வாசகம் சுருக்கம்)
قال بن دقيق العيد ي هذا الحديث عام في النساء الا ان الفقهاء خصوه بشروط منها: ان لاتتطيب وهو في بعض
الروايات وليخرجن تفلات. . قال ويلحق بالطيب مافی معناه لان سبب المنع منه ما فيه من تحریک داعية الشهوة
کحسن الملبس والحلي الذي يظهر والزينة الفاخرة و كذا الاختلاط بالرجال. . . و قدوردفي بعض طرق هذا الحديث
وغیره مايدل على أن صلاة المرأة في بيتها افضل من صلاتها في المسجد وذلك في رواية حبيب بن ابی ثابت عن بن عمر بلفظ
لا تمنعوا نساؤكم المساجد وبيوتهن خير لهن۔ (اخر جه داود وصححه بن خزيمة)...... ووجه كون صلاتها في الأخفاء
افضل تحقق الأمن فيه من الفتنة ويتأكد ذلک بعد وجودما احدث النساء من التبرج والزينة ومن ثم قالت عائشة رضي الله عنها ماقالت
இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பெண்கள் விஷயத்தில் பொதுவாக உள்ளது.எனினும்,புகஹாக்கள் நிபந்தனைகளை விதித்து குறிப்பாக்கியுள்ளனர். அவைகளில் பள்ளிவாசலுக்கு வரும் பெண் நறுமணம் பூசுவது கூடாது.இந்த நிபந்தனை சில ஹதீஸ்களில் (கந்தல் ஆடையுடன் வெளியேறுதல்) வார்த்தைகளுடன் வந்துள்ளது.இந்த சட்டமானது நறுமணத்தை போன்று இச்சையை தூண்டும் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.ஏனெனில் (வீட்டிலிருந்து வெளியேறும் சமயம்) நறுமணம் உபயோகப்படுத்துவதால் இச்சையின் உணர்வுகள்
உருவாகும் என்பதுதான்
தடுக்கப்பட்ட இரகசியமாகும்.(எனவே நறுமணத்தை போன்று இச்சையை உண்டாக்கும் ஒவ்வொன்றும் தடுக்கப்பட்டுள்ளது) அழகான ஆடை,பெருமையும்,
அலங்காரத்தையும் வெளிப்படுத்தும் ஆபரணங்கள்,ஆண்களுடன் கலப்பு ஏற்படுவது (அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது)
பிறகு ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:இந்த ஹதீஸின் சில அறிவிப்பாளர்களின் தொடர்களில்,இவை அல்லாத மற்ற ஹதீஸ்களில் வந்துள்ள வார்த்தைகளின் மூலம் பெண் தனது வீட்டில் தொழுகையை நிறைவேற்றுவது பள்ளிவாசலில் நிறைவேற்றுவதை விட சிறந்தது.பொருத்தமானது.
எவ்வாறெனில் இப்னு உமர் (ரளி) அவர்களின் அறிவிப்பு;நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்காதீர்.எனினும்,வீடு அவர்களுக்கு மிக சிறந்தது.இந்த ஹதீஸை இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இமாம் இப்னு குஜைமா (ரஹ்) அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்கிறார்கள்.
பெண்கள் பர்தாவிற்குள் முழுமையாக மறைந்திருக்கும் நிலையில் தொழுவது சிறந்தது என்பதன் காரணம் இந்த சமயத்தில் பித்னாக்களிலிருந்து (நீங்கி) முழுமையான பாதுகாப்பும் மனநிம்மதியும் கிடைக்கும்.
மேலும் கூறுகிறார்கள்:(நிபந்தனைகளை பேணாத சமயத்தில்) பெண்களின் அலங்காரம், கவர்ச்சி,ஆண்களுடன் கலப்பது போன்ற சீர்கேடுகள் உண்டான பிறகு பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றுவதற்கு பதிலாக வீட்டிலே தொழுகையை நிறைவேற்றும் சட்டம் வலுப்பெறுகிறது.(எனவேதான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நிபந்தனைகளை பேணாமல் இருந்தால் பள்ளிவாசலுக்கு வரும் அனுமதி இல்லை)
மேலும் கூறுகிறார்கள்:பெண்கள் நிபந்தனைகளை பேணுவதில் குறைப்பாட்டின் சீர்கேட்டின் காரணமாக பள்ளிவாசலுக்கு வரும் சட்டம் மாறிவிட்டது.இதனைதான் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்.(ஆதாரம்:பத்ஹுல் பாரி 2/349)
தெளிவு:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,பெண்களை பள்ளிவாசலுக்கு நிபந்தனைகளின் பேரில் தான் அனுமதி அளித்தார்கள் என்பதை இமாம்களின் ஆய்வுகளின் மூலம் புரியமுடிகிறது.அண்ணலாரின் காலத்தில் பெண்கள் முழுமையான பர்தா, நறுமணம் பூசாமல்,கந்தல் ஆடையுடன் அலங்காரமின்றி, ஆண்களுடன் கலக்காமல் வந்துள்ளனர்.
பெண்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் நிபந்தனைகளை முழுமையாக பேணி இந்த காலத்தில் வர முடியுமா? என்பதை அறிவுள்ளவர்கள் எதார்த்தத்தை உணரமுடியும்.நபி ஸல்லல்லாஹூ அவர்கள் பொற்காலமாக கூறிய
ஸஹாபாக்களின் காலத்தில் பெண்கள் நிபந்தனைகளை பேணுவதில் குறை ஏற்படுத்தினார்கள் எனும் போது இன்றைய நவநாகரீக காலத்தில் பெண்கள் நிபந்தனைகள் பேணமுடியுமா? என்பதை உள்ளம் தொட்டு கூறுங்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
No comments:
Post a Comment