மத்ஹபுகளின் அவசியம் தொடர்:2
அல்லாமா அப்துல் ஙனி
நாபிலிஸி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:
الأمر المتفق عليه المعلوم من الدين بالضرورة لا يحتاج إلى التقليد فيه لأحد الأربعة كفرضية الصلوة و الصوم و الزكوة والحج و نحوها و حرمة الزنا و اللواطة و شرب الخمر و القتل و السرقة و الغضب و ما أشبه ذلك و الأمر المختلف فيه هو الذي يحتاج إلى التقليد فيه
மார்க்கத்தில் உறுதிமிக்க சட்டங்களில் நான்கு அறிஞர்களை பின்பற்றுவது அவசியமில்லை.உதாரணமாக தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ் போன்ற கடமையான காரியங்களிலும் விபச்சாரம்,
மதுஅருந்துவது, ஓரினச்சேர்க்கை,கொலை,
கொள்ளை,திருட்டு போன்ற மார்க்கம் தடுத்த காரியங்களிலும் (தக்லீத்) இல்லை.தக்லீத் என்பது மார்க்கத்தில் கருத்துவேறுபாடுகள் கொண்ட சட்டங்களில் தான் அவசியமாகும்.
(ஆதாரம்:குலாஸதுத்தஹ்கீக் ஃபி ஹுக்மித் தக்லீத் வ த்தல்ஃபீக்)
அல்லாமா பக்தாதி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்
واما الأحكام الشرعية فضربان : أحدهما يعلم ضرورة من دين الرسول كالصلوات الخمس والزكوات ، وصوم شهر رمضان ، والحج ، وتحريم الزنا وشرب الخمر ، وما أشبه ذلك . فهذا لا يجوز التقليد فيه لأن الناس كلهم يشتركون في ادراكه والعلم به فلا معنى للتقليد فيه
وضرب آخر لا يعلم إلا بالنظر والاستدلال كفروع العبادات ، والمعاملات ، والفروج ، والمناكحات ، وغير ذلك من الأحكام ، فهذا يسوغ فيه التقليد بدليل قول الله تعالى : ( { فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون } ) [53] ولأنا لو منعنا التقليد في هذه المسائل التي هي من فروع الدين لاحتاج كل أحد أن يتعلم ذلك ، وفي إيجاب ذلك قطع عن المعائش ، وهلاك الحرث والماشية فوجب أن يسقط
ஷரீஅத்தின் சட்டங்கள் இருவகைப்படும் ஒன்று தீர்க்கமான உறுதியான
சட்டங்கள் ஐந்து நேர தொழுகைகள்,ஜகாத்,ரமளான் நோன்பு,ஹஜ் போன்றவைகளிலும் மார்க்கம் தடுத்த காரியங்களான விபச்சாரம் மது அருந்துவது போன்றவைகளில் தக்லீத் என்பது அறவே கிடையாது.மற்றொன்று இதனை அறிவது புரிவது ஆய்வின்றி முடியாது.வணக்கங்கள்,வியாபார சட்டங்கள்,திருமண சட்டங்கள் போன்ற கிளைச்சட்டங்களில் தக்லீத் என்பது சரியானது.ஏனெனில் அல்லாஹுத்தஆலா கூறுகிறான் فاسئلوا أهل الذكر إن كنتم لا تعلمون மார்க்கத்தின் கிளை சட்டங்களில் தக்லீத் செய்வதை தடுத்தால் ஒவ்வொருவரும் அறிந்து அமல் செய்ய வேண்டும் என்பதை அவசியமாக்கினால் வாழ்வின் அவசியத்தேவைகள் அனைத்தும் வீணாகிவிடும்.விளைநிலங்கள்,வாழ் வாதாரங்கள் அழிந்து போகும்.எனவே ஒவ்வொருவரும் ஆராய்ந்து பின்பற்றுவது கட்டளையிடவில்லை.
(ஆதாரம்:அல்ஃபகீஹ் வல் முத்தஃபகா லில்கதீப் பஃதாதி 2/67,68)
முஜ்தஹித்களான இமாம்களின் சொல்லானது அல்லாஹ்வின் சொல்லிற்கு நிகரானது அல்லது ஷரீஅத்தை உருவாக்கியவர்கள் என்பதாக ஒரு போதும் முகல்லித்கள் (இமாமை பின்பற்றுபவர்கள்) எண்ணவில்லை.இமாம்களை தக்லீத் செய்வதன் அசலான நோக்கம் குர்ஆன்,சுன்னாவை பின்பற்றவேண்டும் என்பதுதான்.அவர்கள் குர்ஆன்,சுன்னாவின் நோக்கத்தை, புரிதலை விளக்கி தரும் விரிவுரையாளர்கள் என்பதாகதான் கருதப்பட்டு அமல் செய்யப்படுகிறது.இதனால்தான் குர்ஆன்,சுன்னாவின் உறுதிமிக்க, தீர்க்கமான சட்டங்களில் இமாம்களை தக்லீத் அவசியமில்லை என்பதை நம்புகிறோம்.
இதற்கு மிகப்பெரிய ஆதாரம்
எத்தனையோ சட்டங்களில் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் தீர்ப்புக்களை எடுக்காமல் அவர்களின் மாணவர்களான இமாம் அபியூசுப் (ரஹ்) இமாம் முஹம்மத் (ரஹ்) அவர்களின் தீர்ப்புகளை எடுத்து அமல்செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி நிர்பந்தமான சூழ்நிலைகளில் மற்ற மத்ஹபுகளை பின்பற்றுவதற்கும் அனுமதியுள்ளது.
இதற்கு நேர்மாற்றமாக மத்ஹபுகள் கூடாது.குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிரானது, கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்,என்பதாக நம்மை விமர்சிக்கும் மத்ஹப் மறுப்பாளர்கள் அவர்களின் இயக்கத்தின் ஆய்வுகள்,கருத்துக்களை தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிறிது கூட மாற்று கருத்தின்றி அமல்செய்கிறார்கள்.இதற்கு ஏராளனமான உதாரணங்களை கூறமுடியும்.
இரண்டு உதாரணங்கள் மட்டும் புரிந்து கொள்வதற்கு போதுமானது.
உதாரணம்:(1) நோன்பு திறக்கும் போது 'அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து' என்ற துஆ பலகீனமானது என்பதாக கூறி 'தஹபள்ளமவு' என்ற துஆ ஓத வேண்டும் என்று கூறினர்.
இதனை நடைமுறைப்படுத்தினர்.
பல ஆண்டுகள் கழிந்த பிறகு இதனையும் பலவீனம் என்பதாக கூறி நிலைப்பாட்டை மாற்றிவிட்டனர்.அதற்கு கூறும் காரணத்தைப் பாருங்கள்!
//தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ
இந்த நிலையில் நோன்பு துறக்கும்போது, தஹபள்ளமவு.. என்று தொடங்கும் துஆவைஓதுவது நபிமொழி என்று நாம் கூறினோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம்,பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம்கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.
எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில்கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள்பதிவு செய்து விட்டுப் பின்வருமாறுகூறுகின்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரானமர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்துஅறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி,முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்றுகுறிப்பிடுகின்றார்.
ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான்பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.
மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்றுஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதைவழிமொழிந்தோம்.
இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான்ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்றுஅறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலானஅறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர்விமர்சனம் செய்திருந்தாலும் அதில்பெரும்பாலானவற்றுக்குப் பதிலும்அளிக்கப்பட்டுள்ளது.
ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம்பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.
மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில்அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.
ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறுஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.
ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம்நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது.மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான்அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள்கூறுவது மறு ஆய்வின்போது நமக்குத் தெரிய வருகின்றது.//
இந்த துஆவை ஏறத்தாழ இருபது வருடங்களாக அனைவரும் அமல்செய்து வந்தனர்.
அவர்களின் இயக்கத்தின் தலைவர் மறுஆய்வில் பலவீனமானது என்பதை அறிவித்தவுடன் அனைவரும் பலவீனம் என்பதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதில் நமது கேள்வி என்னவெனில்
மத்ஹப் மறுப்பாளர்கள் அனைவரும் ஆய்வு செய்து பின்பற்றுகிறோம் என்றால் இவர்களின் தலைவரின் மறு ஆய்விற்கு முன்பாக ஒருவரேனும் பலவீனமானது என்பதாக ஆய்வு செய்து கூறியிருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.எனவே
உண்மையான விஷயம் அனைவரும் கண்மூடித்தனமாக தலைவரின் வாதத்தை ஏற்றனர்.பிறகு கண்மூடித்தனமாக மறுஆய்வையும் ஏற்றுள்ளனர் என்பதை தெள்ளத்தெளிவாக புரியமுடிகிறது.
இரண்டாவது உதாரணம்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணையத்தில் வரும் செய்தி
//இந்தச் செய்தியில் முஹம்மது பின் அஜ்லான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.
அத்தஹிய்யாத்தில் விரலசைப்பது கூடாது என்று வரும் ஹதீஸில் இவர்தான் இடம் பெற்றுள்ளார்.
நாம் அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைக்க வேண்டும் என்று ஸஹீஹான ஹதீஸ் அடிப்படையில் நடைமுறைப்படுத்துகின்றோம்.
விரலசைக்க வேண்டும் என்று கூறும் போது மாற்றுக் கருத்துடையவர்கள் ”விரலசைக்கக் கூடாது ”என்ற கருத்தில் வரும் ஹதீஸை முன்வைத்தார்கள்.
அப்போது பிஜே அவர்கள் கூறிய பதிலை தருகின்றோம்
விரல் அசைக்க கூடாது என்ற ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பின்வரும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
1. அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)
2. ஆமிர் பின் அப்தில்லாஹ்
3. முஹம்மது பின் அஜ்லான்
4. ஸியாத்
5. இப்னு ஜுரைஜ்
6. ஹஜ்ஜாஜ்
7. அய்யூப் பின் முஹம்மது
இதில் மேலிருந்து மூன்றாவதாக முஹம்மது பின் அஜ்லான் என்ற நபர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் ஹாகிம் உட்பட பலர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களை தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை.
எனவே பலவீனமான இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு விரலசைப்பதற்கு ஆதாரமாக உள்ள பலமான ஹதீஸைத் தட்ட முடியாது.
”விரல் அசைக்கக் கூடாது ” என்று வரும் ஹதீஸில் எந்த முஹம்மத் பின் அஜ்லான் இடம் பெற்றுள்ளாரோ அவர்தான் இந்தச் செய்தியிலும் இடம் பெற்றுள்ளார்.
இதன் காரணத்தினால் முஹம்மத் பின் அஜ்லான் என்பவரைப் பற்றிய விமர்சனம் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களுக்கு மத்தியில் மிகப்பிரபலமானதாகும்.
இப்படி உள்ளங்கை நெல்லிக்கனி போல் இப்னு அஜ்லான் பற்றிய குறை நன்கு அறியப்பட்டிருந்தும் அவர் இடம்பெறும் அறிவிப்பை ஸஹீஹ் என்று கூறி இமாம்களின் மீது பழிபோட்டு பிஜே தப்பிக்க பார்க்கிறார்.//
இதனின் முழுமையான LINK:
முஹம்மது இப்னு அஜ்லான் குறித்து பீஜேவின் புதிய நிலைப்பாட்டை அறிய பின்வரும் link பார்வையிடவும்
முஹம்மத் இப்னு அஜ்லான் நம்பகமானவர் ஆதாரம் கொள்ளத்தக்கவர் என்பதுதான் பீஜேவின் புதிய நிலைப்பாடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சொல்வதையும்,பீஜே சொல்வதையும் நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நமது விமர்சனம்:
பீஜே தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தவரை அவரின் நிலைப்பாடுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் முழுமையான நிலைப்பாடு.அவர் கூறுவதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு வேதவாக்காகும்.இப்போது இருவரும் பிரிந்த பிறகு கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளது.நிலைப்பாடு மாறிவிட்டது.
நமது வாதம் என்னவெனில் தவ்ஹீத் ஜமாஅத் தோன்றிய நாளிலிருந்து இது நாள் வரை பீஜேவின் கருத்தைத்தான் கண்மூடித்தனமாக பின்பற்றியுள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.மத்ஹப்வாதிகள்
இமாம்களை, அல்லாஹ் ரசூலின் இடத்தில் வைத்துவிட்டார்கள், என்பதாக காழ்ப்புணர்ச்சியுடன், கண்மூடித்தனமாக விமர்சித்தனர்.ஆனால்,
உண்மை என்னவெனில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் பீஜேவை அல்லாஹ்,ரசூலின் இடத்தில் வைத்திருந்தனர் என்பதை உறுதியாக விளங்கமுடிகிறது.
ஏனெனில் எத்தனையோ ஷரீஅத்தின் சட்டங்களில் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கருத்து விடப்பட்டு அவர்களின் மாணவர்களின் ஆய்வின் பேரில் தீர்ப்பளிக்கப்பட்டு அமல்செய்யப்படுகிறது.
எந்த குற்றச்சாட்டை நம்மின் மீது அவதூறாக வீசினார்களோ அது அவர்களின் பக்கமே திரும்பியுள்ளது.(அல்லாஹ் போதுமானவன்)
இதில் மிகப்பெரிய வேடிக்கை! நம்மை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் என்பதாக விமர்சிப்பதுதான்.
No comments:
Post a Comment