நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ ஓர் ஆய்வு தொடர்:3
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، حَدَّثَنَا إِسْحَاق بْنُ عُبَيْدِ اللَّهِ الْمَدَنِيُّ ، قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي مُلَيْكَةَ ، يَقُولُ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ، يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ لِلصَّائِمِ عِنْدَ فِطْرِهِ لَدَعْوَةً مَا تُرَدُّ " ، قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ، يَقُولُ : إِذَا أَفْطَرَ ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ ، أَنْ تَغْفِرَ لِي
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் செய்யும் துஆ மறுக்கப்படாது என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அபூமுலைகா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரளி) அவர்கள் நோன்பு திறக்கும் போது اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء أن تغفر لي (அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிரஹ்மதிகல்லதி வஸிஅத் குல்ல ஷையின் அன்தஃஙஃபிரலி) எனும் துஆ ஓதுவதை நான் கேட்டேன்.
(ஆதாரம்:இப்னுமாஜா,
முஸ்தத்ரக் ஹாகிம்,ஷுஅபுல் ஈமான்,அத்தர்ஹீப் ஃபீபளாயிலுல் அஃமால் லி இப்னு ஷாஹீன்,அமலுல் யவ்ம் வல்லைலா,கிதாபுத்துஆ லித்தப்ரானி)
மத்ஹப் மறுப்பாளர்கள் இதனை பலகீனம் என்பதாக கூறுகின்றனர்.எனினும் ஆய்வு செய்து பார்க்கும் போது இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கது என்பது உறுதியாகிறது.
மத்ஹப் மறுப்பாளர்கள் பலகீனம் என்பதாக கூறுவதின் காரணம்:
‘நிச்சயமாக நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கின்ற பிரார்த்தனை அழ்ழாஹ்விடத்தில் மறுக்கப்படமாட்டாது என அழ்ழாஹ்வின் தூதர் சொல்ல நான் செவிமடுத்துள்ளேன்.’ (அறிவிப்பவர்: அம்ர் இப்னு ஆஸ் (ரழி), நூற்கள்: இப்னுமாஜா-1753, ஹாகிம்-1535, அல் ஜாமிஉஸ் ஸஈர்-2385, ஷுஅபுல் ஈமான்-3904)
குறித்த இச்செய்தி பலவீனமானதாகும். ஏனெனில், இதன் அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் இடம்பெறும் ‘இஸ்ஹாக்’ என்ற அறிவிப்பாளர் பலவீனமானவராகும். ஆனாலும் கூட இஸ்ஹாக் என்ற பெயரில் மூவர் இருப்பதால் எந்த இஸ்ஹாகை வைத்துத் தீர்மானிப்பது என்பது இங்கே கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும். எனினும், எந்த இஸ்ஹாக் இடம்பெற்றாலும் பரவாயில்லை. காரணம் ஹதீதின் தொடரிலே சந்தேகிக்கப்படுகின்ற அனைத்து இஸ்ஹாக்குகளும் பலவீனமானவர்களாகவே இருக்கின்றனர். எனவே ஒவ்வொரு இஸ்ஹாகையும் பற்றிய விமர்சனங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
//இஸ்ஹாக் பின் உபைதிழ்ழாஹ் அல் மதனி (அபூ முலைகாவின் மகன்): இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் குறித்த இஸ்ஹாக் என்பவர் மதீனாவைச் சேர்ந்த உபைதுழ்ழாஹ் என்பவரின் மகனே எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இவரைப்பற்றி இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) ‘இனங்காணப்படாத ஒரு அறிவிப்பாளர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இவரது தகவலை ஏற்க முடியாது என்பதுதான் ஹதீத் கலை அறிஞர்களின் முடிவாகும்.
இஸ்ஹாக் பின் உபைதிழ்ழாஹ் (அபுல் முஹாஜிர்):
இவரும் இனங்கானப்படாத அறிவிப்பாளர்.
இஸ்ஹாக் பின் அப்திழ்ழாஹ் (இப்னு அபீ பர்வா): இவரும் ஹதீத் கலை அறிஞர்களால் விடப்பட்டவர் (ஓரங்கட்டப்பட்டவர்). இதனை ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.
ஹதீதில் இடம்பெறும் ‘இஸ்ஹாக்’ என்பவர் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட இஸ்ஹாக் என்பதே மிகச்சரியான கருத்தாகும்.//
நமது அழகிய பதில்
இந்த ஹதீஸை பின்வரும் அறிஞர்கள் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) அல்லது ஹஸன் (ஏற்கத்தக்கது) என்பதாக சான்று தந்துள்ளனர்.
1) இமாம் பூசிரி (ரஹ்) அவர்கள் إسناده صحيح இதனின் அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானது.(இஹ்தாபுல் ஹியரா 3/102)
2)இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் هذا حديث حسن இந்த ஹதீஸ் ஹஸன் (அல்புதூஹாதுர் ரப்பானிய்யா 3/342,நதாயிஜுல் அஃப்கார் 5/202)
3)தக்தூர் பஷ்ஷார் அவாத் إسناده حسن அறிவிப்பாளர் தொடர் ஹஸன் என கூறியுள்ளார்.(ஸுனன் இப்னு மாஜா 1753)
4)ஷைகு ஷுஅப் அர்னாவூத் إسناده حسن அறிவிப்பாளர் தொடர் ஹஸன் என கூறியுள்ளார்.(ஸுனன் இப்னு மாஜா 2/639)
5)அப்துல் காதிர் அர்னாவூத் هذا حديث حسن இந்த ஹதீஸ் ஹஸன் என கூறியுள்ளார்.(அல்அத்கார் லிந்நவவி 1/190)
6)ஷைகு அஹ்மத் ஷாகிர் اسناده صحيح அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானது என கூறியுள்ளார்.(உம்ததுஸ் தப்ஸீர் அனில் ஹாபிள் இப்னு கஸீர் 1/225)
7)இப்னுல் முலக்கின் அவர்களிடத்தில் ஹஸன் அல்லது ஸஹீஹ் தரத்தில் உள்ளது.(துஹ்ஃபதுல் முஹ்தாஜ் இலா அதில்லதில் மின்ஹாஜ் 2/97)
8)முஹத்திஸ் அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு அஹ்மத் துவைஷி அவர்கள் "தன்பீஹுல் காரி அலா தக்வியதி மா ளஅஃபஹுல் அல்பானி" எனும் நூலில் இதனை ஆதாரம் எடுத்துள்ளார்.
(தன்பீஹுல் காரி 1/76)
ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரின் தரம் குறித்து சுருக்கமான பார்வை
1)ஹிஷாம் இப்னு அம்மார் நஸீர் உண்மையாளர் (தக்ரீப் 2/268)
2)வலீத் இப்னு முஸ்லிம் குரஷி பலமானவர் (தக்ரீப் 2/289)
3)இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் மதனி (இவரை குறித்து பின்னால் பார்ப்போம்)
4)அப்துல்லாஹ் இப்னு அபீமுலைகா பலமானவர் (தக்ரீப் 1/511)
5)அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் நபித்தோழர்
இதில் மூன்றாவது அறிவிப்பாளர் இஸ்ஹாக் இப்னு உபைதில்லாஹ் யார்? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது.1) இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் 2)இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ் இப்னு அபீ பர்வா 3) இஸ்ஹாக் இப்னு உபைதில்லாஹ் அபுல்முஹாஜிர் என்பதில் குழப்பம் உள்ளது.குறிப்பான நபர் தெளிவாகிவிட்டால் குழப்பம் தீர்ந்துவிடும்.
நம்முடைய ஆய்வின்படி இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் என்பதுதான் சரியானது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள்:
இந்த அறிவிப்பாளர் தொடரின் இரண்டாவது அறிவிப்பாளர்
வலீத் இப்னு முஸ்லிம் இவரிடமிருந்து இருவர் அறிவித்துள்ளனர்.
1)ஹகம் இப்னு மூஸா
(முஃஜமுஷ்ஷுயூஹ்,முஸ்தத்ரக்,
அமலுல்யவ்ம் வலைலா,தைலு தாரிகுல் மதீனதுஸ்ஸலாம்)
2)ஹிஷாம் இப்னு அம்மார்
(ஸுனன் இப்னுமாஜா,ஷுஅபுல் ஈமான்,அத்துஆ லித்தப்ரானி)
1) முஸ்தத்ரக்,தைலு தாரிகுல் மதீனதுஸ்ஸலாம் நூல்களில் ஹகம் இப்னு மூஸா அவர்களின் வழித்தொடரில் இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ் என்பதாக வருகிறது.இதே ஹகம் இப்னு மூஸா அவர்களின் அறிவிப்பு அமலுல்யவ்ம் வலைலா,முஃஜமுஷ்ஷுயூஹ் நூல்களில் இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் என்பதாக வந்துள்ளது.மேலும் ஹிஷாம் இப்னு அம்மாரின் அறிவிப்பிலும் இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் என்பதாகதான் உள்ளது.எனவே இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ் என்பதாக தவறுதலாக கூறப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி ஹகம் இப்னு மூஸா அவர்களின் வழித்தொடரில் இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ் என்பதாக கூறுவதற்கு துணைசான்று இல்லை.ஆனால் ஹகம் இப்னு மூஸா அவர்களே இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் என்பதாக அறிவித்துள்ளார்கள்.
قرأت على أبي محمد عبد العزيز بن أبي نصر البزاز من كتابه، قلت له: أخبركم أبو عبد الله محمد بن رمضان بن عبد الله الجندي، فأقر به، قال: أخبرنا أبو عبد الله محمد بن عبد الباقي الدوري، قال: أخبرنا أبو محمد الحسن ابن علي الجوهري، قال: حدثنا الحسن بن عمر بن حبيش، قال: حدثنا حامد ابن محمد، قال: حدثنا الحكم بن موسى، قال: حدثنا الوليد بن مسلم، قال: حدثني إسحاق بن عبد الله بن أبي فروة،قال: سمعت عبد الله بن أبي مليكة قال: سمعت عبد الله بن عمرو بن العاص يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ((إن للصائم عند إفطاره لدعوةً ما ترد)). قال ابن أبي مليكة: فسمعت عبد الله بن عمرو يقول إذا أفطر: ((اللهم إني أسألك رحمتك التي وسعت كل شيء أن تغفر لي)).[ذيل تاريخ بغداد لابن الدبيثي 1/ 334
2)தைலு தாரிக் பாக்தாத் இப்னு துபைஸி அவர்களின் நூலின் (1/334) அறிவிப்பாளர் தொடரில் ஹஸன் இப்னு உமர் இப்னு ஹுபைஷ் அவர்கள் தனது ஆசிரியர் ஹாமித் இப்னு முஹம்மத் வழித்தொடரிலும்,முஸ்தத்ரகில் முஹம்மது இப்னு அலி இப்னு ஜைத் தொடரிலும் "இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ்" இடம்பெற்றுள்ளார்.எனினும், அமலுல் யவ்ம் வல்லைலா நூலில் இமாம் அபூயஃலாவின் அறிவிப்பிலும்,முஃஜமுஷ்ஷுயூஹ்நூ லில் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸுலைமான் அறிவிப்பிலும் "இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ்" இடம் பெற்றுள்ளார்.ஆனால் இதனுடன் ஒப்பிடும் போது தைலு தாரீக் பாக்தாத்,முஸ்தத்ரக்கின் அறிவிப்பாளர் தொடர் தரம் குறைந்தது.ஏனெனில் ஹாமித் இப்னு முஹம்மத்,முஹம்மது இப்னு அலி இப்னு ஜைத் இருவரை விட
இமாம் அபூயஃலா மற்றும் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸுலைமான் இருவரும் மனனத்திறனில்,ஹதீஸில் தேர்ச்சி பெற்றவர்கள்.
3) தைலு தாரிகி மதீனா இப்னு துபைஸி அவர்களின் நூலின் அறிவிப்புகளை குறித்து ஆய்வு எழுதிய டாக்டர் பஷ்ஷார் அவ்வாத் அவர்கள் இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ்வின் அறிவிப்பை மிகவும் பலவீனமானது என்பதாக சுட்டிகாட்டியிருப்பதுடன் இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ்வின் அறிவிப்பை தான் முன்னுரிமை கொடுத்துள்ளார்.இதே போன்று தப்ரானி இமாமின் கிதாபுத்துஆவின் ஆய்வாளர் டாக்டர் முஹம்மது இப்னு ஸயீத் இப்னு முஹம்மத் ஹஸன் அல்புகாரி அவர்கள் முஸ்தத்ரக் அறிவிப்பாளர் தொடர் குறித்து பின்வருமாறு கூறுகிறார்:قلت هو اسحاق بن عبيد الله المدني و تصحف عند هم الى عبد الله
இஸ்ஹாக் இப்னு உபைதில்லாஹ் என்பது இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ் என்பதாக தவறுதலாக கூறப்பட்டுவிட்டது.
4)ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
هو رجل معروف و إنما تحرف اسم أبيه على الذهبي و جهله هو اسحاق بن عبيد الله بالتصغير
அன்னார் அறியப்பட்டவர்தான்.
தவறுதலான புரிதலின் காரணமாக இமாம் தஹபி (ரஹ்) அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுவிட்டது.அறிவிப்பாளர் இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் தான் (லிஸானுல் மீஜான் 1/53)
அதுமட்டுமின்றி ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தெளிவாக கூறுகிறார்கள்:
و وقع فى روايته مخالفة للقوم فى اسحاق بن عبد الله فرواه الجميع عبيد الله
அதிகமான நபர்கள் இஸ்ஹாக் இப்னு உபைதில்லாஹ் என்பதாக அறிவித்துள்ளனர். சிலர் இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ் என மாற்றமாக அறிவித்து விட்டனர்.
ஹாபிள் இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்களின் தாரீஹ் திமிஷ்க் (8/256), அல்லாமா மிஜ்ஜி (ரஹ்) தஹ்தீபுல் கமால்(2/456) இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் அறிவிப்பாளரின் இந்த அறிவிப்பை குறித்து ஆய்வு செய்ததின் மூலம் அவர்களும் அவரின் பக்கம்தான் சாய்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.மேலும் புகாரி (ரஹ்) அவர்கள் அத்தாரீகுல்கபீர் (1/389) பக்கத்தில் இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் அவர்களை குறித்து سمع ابن أبي مليكة فى الصوم இப்னு அபீமுலைகாவிடமிருந்து கேட்டுள்ளார்.
امام ابن شاهين رحمه الله (المتوفى385)نے کہا:
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَهْزَادَ بْنِ مِهْرَانَ السَّيْرَافِيُّ، بِمِصْرَ، ثنا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، ثنا أَسَدٌ، ثنا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ الْأُمَوِيُّ، مِنْ أَهْلِ الْمَدِينَةِ، حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلصَّائِمِ عِنْدَ فِطْرِهِ دَعْوَةً لَا تُرَدُّ» . قَالَ: وَكَانَ عَبْدُ اللَّهِ يَقُولُ إِذَا أَفْطَرَ: بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ اغْفِرْ لِي[الترغيب في فضائل الأعمال وثواب ذلك لابن شاهين ص: 53]
பதில்:அத்தர்ஹீப் ஃபிபளாயிலுல் அஃமாலின் சில பிரதிகளில் தெளிவாக இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் என்பதாக தெளிவாக உள்ளது.ஷைக் ஸுலைம் இப்னு அப்துல் ஹிலால் தனது பிரதியில் இதனைத்தான் எடுத்தெழுதியுள்ளார்.(அமலுல்யவ் ம் வல்லைலா 549)
மேலும் இந்த அறிவிப்பாளர் தொடரில் அஸத் இப்னு மூஸா அவர்கள் இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ்வின் மாணவர்களில் உள்ளவர்.(தஹ்தீபுல்கமால் 2/486) ஆனால் இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ் இப்னு அபி பர்வாவின் மாணவர்களில் அஸத் இப்னு மூஸா அவர்கள் இல்லை.(தஹ்தீபுல்கமால் 2/447)
இந்த அறிவிப்பில் அஹ்மத் இப்னு பஹ்தாஜ் இப்னு மிஹ்ரான் என்பவர் மீது விமர்சனம் உள்ளது.(லிஸானுல் மீஜான் 1/413,தைலு மீஜானுல் இஃதிலால் 1/28)
இதுமட்டுமின்றி,இப்னு அபிஹாதிம் அல்ஜர்ஹுத்தஃதீல் (2/229),அல்லாமா மிஜ்ஜி தஹ்தீபுல் கமால் (2/486) اسحاق بن عبيد الله بن أبى مليكة و عن يزيد بن رومان مرسلا
இஸ்ஹாக் இப்னு உபைதில்லாஹ் இப்னு அபீமுலைகா,யஜீத் இப்னு ரூமானிடமிருந்து முர்ஸலாக அறிவித்துள்ளார்.இதே விஷயத்தை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அத்தாரீகுல் கபீர் (1/398)
இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் நோன்பில் இப்னு அபிமுலைகாவிடமிருந்து கேட்டுள்ளார்.و يزيد بن رومان مرسلا மேலும் யஜீத் இப்னு ரூமானிடமிருந்து முர்ஸலாக அறிவிப்பவர்.
ஆக,இத்தனை ஆதாரங்களின் மூலம் இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் என்பதுதான் உறுதியாகிறது.
இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் அபுல் முஹாஜிர் மக்ஜுமி யார்?
இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் அபுல் முஹாஜிர் மக்ஜுமி அவர்கள் குறித்து ஹாபிள் இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்:قال ابن عساكر فى تاريخه روى عن أبى مليكة عن ابن عمر ابن العاص رفعه إذا أفطر الصائم يقول و ذكره ابن حبان فى الثقات
இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் (அபுல்முஹாஜிர்) அவர்களை இப்னு ஹிப்பான் ரஹ் அவர்கள் தனது ஸிகாத் நூலில் பதிவு செய்துள்ளார்.
(தஹ்தீபுத்தஹ்தீப் 1/213)
உண்மையென்னவெனில் இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ் அவர்களை மட்டும் தான் இப்னு ஹிப்பான் ஸிகாத் நூலில் (6/48) குறிப்பிட்டுள்ளார்.இஸ்ஹாக் இப்னு உபைதில்லாஹ் அபுல்முஹாஜிர் அவர்கள் குறித்து கூறவில்லை.ஆகவே இஸ்ஹாக் இப்னு உபைதுல்லாஹ்,இஸ்ஹாக் இப்னு உபைதில்லாஹ் அபுல்முஹாஜிர் இருவரும் ஒருவர் தான் தெளிவாகிறது.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ் அவர்களை அறியப்படாதவர் என்பதாக கூறியிருந்தாலும் பிறகு தனது கருத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பது தெளிவாகிறது.
قال اسحاق بن عبيد الله لا يعرف قال الحافظ وقد عرفه غيره و ذكر ابن حبان فى الثقات
இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ் அறியப்படாதவர்.ஹாபிள்(இப்னு ஹஜர்) கூறுகிறார்: மற்றவர்கள் அவரை அறிந்துள்ளனர்.இப்னு ஹிப்பான் அவரை ஸிகாத் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
(நதாயிஜுல் அஃப்கார் 5/203)
No comments:
Post a Comment