Wednesday, January 2, 2019

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை



ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன் ஹதீஸின் ஒளியில்
தொடர் :2


தொப்புளுக்கு கீழே கைகட்டுதல்


ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் (ரளி) கூறுகிறார்கள் :

رايت النبي صلي الله يضع يمينه علي شماله في الصلوة تحت السرة நான் பார்த்தேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் வலது கையை இடது கையின் மீது தொப்புளுக்கு கீழ்  வைத்து கட்டினார்கள்.
(ஆதாரம்:முஸன்னபஃப் இப்னு அபிஷைபா)

عن علي رضي الله من السنة وضع اليمين على الشمال تحت السرة
ஹஜ்ரத் அலி (ரளி) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் தொப்புளுக்கு கீழே   வலது கையை இடது கையின் மீது வைப்பது சுன்னத்திலிருந்து உள்ளதாகும்.(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத், முஸன்னஃப் இப்னு அபி ஷைபா, தாரகுத்னி,சுனன் பைஹகி)

عن أبي هُرَيْرَةَ قال: وَضَعَ الْكَفَّ على الْكَفِّ في الصَّلَاةِ تَحْتَ السُّرَّةِ
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:தொழுகையில் தொப்புளுக்கு கீழ் கையின் மீது கை வைக்கப்படும் (கட்டப்படும்).(ஆதாரம்:அபூதாவூத்)

ஸுப்கானல்லாஹும்ம வபிஹம்திக என்ற ஸனா ஓதுவது

நிலை நிற்கும் போது உமது இறைவனின் புகழைக்கொண்டு தஸ்பீஹ் செய்வீராக! (தூர்)

حدثنا ابن حُميد, قال: ثنا ابن المبارك, عن جُوَيبر, عن الضحاك ( وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ )  قال: إذا قام إلى الصلاة قال: سبحانك اللهمّ وبحمدك, وتبارك اسمك ولا إله غيرك.

ளஹ்ஹாக் தாபியி அவர்கள் வசனத்தின் விரிவுரையில் கூறுகிறார்கள்:தொழுகையில் நிலை நிற்கும் போது سبحانك اللهمّ وبحمدك, وتبارك اسمك ولا إله غيرك. ஓதவேண்டும்.
(ஆதாரம்:ஸுனன் ஸயீத் இப்னு மன்ஸுர்,முஸன்னஃப் இப்னு அபிஷைபா,இப்னு ஜரீர்,இப்னுல் முன்திர்)

قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة بالليل كبر ثم يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك

ஹஜ்ரத் அபூஸயீத் குத்ரி ரளி அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது தக்பீர் கூறுவார்கள்.பிறகு இந்த துஆவை ஓதுவார்கள் (ஆதாரம்:அபூதாவூத்,திர்மிதி,நஸாயி,இப்னுமாஜா,மிஷ்காத்,முஸ்னத் அஹ்மத்)

عَنْ عَبْدَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ صلى الله عليه وسلم كَانَ يَجْهَرُ بِهؤُلاَءِ الْكَلِمَاتِ يَقُولُ: "سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ. تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ. وَلاَ إِلهَ غَيْرُكَ". رواه مسلم.

உமர் ரளி அவர்கள் தொழுகையில் நிலை நிற்கும் போது  இந்த கலிமாக்களை سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ. تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ. وَلاَ إِلهَ غَيْرُكَ"
சப்தமிட்டு ஓதுவார்கள் (ஆதாரம்:முஸ்லிம்)

ஸனாவிற்கு பிறகு அவூது ஓதுவது

குர்ஆன் ஓதும் பொழுது அல்லாஹ்விடம் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுங்கள் (அந்நம்ல்)

قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة بالليل كبر ثم يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
ஹஜ்ரத் அபூஸயீத் குத்ரி (ரளி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு இரவில் நிற்கும் போது தக்பீர் கூறுவார்.பிறகு سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ. تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ. وَلاَ إِلهَ غَيْرُكَ" ஓதுவார்கள்.மேலும்
அவூது பில்லாஹ் ஸமீஉல் அலீமி மினஷ்ஷைதானிர் ரஜீம்.(ஆதாரம்:அபூதாவூத்,திர்மிதி,
நஸாயி,இப்னு மாஜா,முஸ்னத் அஹ்மத்,பைஹகி)



أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
அபூஸயீத் அல்குத்ரி அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராஅத்திற்கு முன்பாக அவூது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம் ஓதுவார்கள் (ஆதாரம்:முஸன்னப் அப்துர் ரஜ்ஜாக்)

பிஸ்மில்லாஹ் ஓதுவது

-قال نعيم المجمر: صليت وراء أبي هريرة فقرأ بسم الله الرحمن الرحيم ثم قرأ بأم القرآن-الحديث وفيه-ويقول إذا سلم: والذي نفسي بيده إني لأشبهكم صلاة برسول الله-صلى الله عليه وسلم
ஹஜ்ரத் நயீம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் அபூஹுரைரா (ரளி) அவர்களுக்கு பின்னால் தொழுதேன்.அன்னார் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓதினார்.பிறகு பாத்திஹா சூரா ஓதினார்.ஸலாம் கொடுத்த பிறகு கூறினார் எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நான் நபி ஸல்லல்லாஹு அவர்கள் தொழுது காட்டியது போன்று தொழுது காட்டினேன்.(ஆதாரம்:நஸாயி)

وعن علي رضي الله عنه كان إذا افتتح السورة في الصلاة يقرأ : بسم الله الرحمن الرحيم
ஹஜ்ரத் அலி (ரளி) அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓதிக்கொண்டு இருந்தார்கள்.(ஆதாரம்:தாரகுத்னி)

அவூது,பிஸ்மில்லா மெதுவாக ஓதுவது

عن أنس بن مالك رضي الله عنه { أن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهما : كانوا يستفتحون الصلاة ب { الحمد لله رب العالمين } } 
ஹஜ்ரத் அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,அபூபக்கர் (ரளி) அவர்கள்,உமர் (ரளி) அவர்கள் தொழுகையை  அல்ஹம்துலில்லாஹ் உடன் தொடங்குவார்கள்.(ஆதாரம்:புகாரி)

وفي رواية " صليت مع أبي بكر وعمر وعثمان ، فلم أسمع أحدا منهم يقرأ بسم الله الرحمن الرحيم "
ஹஜ்ரத் அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,அபூபக்கர் (ரளி) அவர்கள்,உமர் (ரளி) அவர்கள்,உஸ்மான் (ரளி) அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதுள்ளேன்.பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அவர்களில் ஒருவர் ஓதியதையும் நான் செவியுற்றதில்லை.(ஆதாரம்:புகாரி)

இந்த ஹதீஸ்களின் கருத்து என்னவெனில் பிஸ்மில்லா சப்தமிட்டு ஓதவில்லை. மாறாக, மெதுவாக ஓதவேண்டும் என்பதாகும்.

لمسلم { صليت خلف النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان فكانوا يستفتحون ب الحمد لله رب العالمين ، لا يذكرون بسم الله الرحمن الرحيم في أول قراءة ولا في آخرها }
அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்ஹம்துலில்லாஹ் வை கொண்டு கிராஅத்தை அவர்கள் ஆரம்பித்தார்கள்.கிராஅத்தின் ஆரம்பத்தில்,இறுதியில் பிஸ்மில்லாஹ் ஓதமாட்டார்கள்.(ஆதாரம்:முஸ்லிம்)

ஹஜ்ரத் அனஸ் (ரளி) அவர்களின் ஹதீஸானது முஸ்னத் அஹ்மத்,ஸஹீஹ் இப்னு ஹிப்பான், தாரகுத்னியில் வரும் அறிவிப்பு فلم أسمع أحدا منهم يقرأ بسم الله الرحمن الرحيم பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் சப்தமிட்டு ஓதமாட்டார்கள்.

அனஸ் ரளி அவர்களின் மற்றொரு அறிவிப்பு
صليت مع أبي بكر وعمر وعثمان ، فلم أسمع أحدا منهم يقرأ بسم الله الرحمن الرحيم "
அபூபக்கர் (ரளி),உமர் (ரளி) ,உஸ்மான் (ரளி) அவர்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சப்தமாக
ஒருவர் ஓதியதையும் நான் செவியுற்றதில்லை. (ஆதாரம்:நஸாயி,இப்னு ஹிப்பான்,தஹாவி)

عن ابن عبد الله بن مغفل قال سمعني أبي وأنا في الصلاة أقول بسم الله الرحمن الرحيم فقال لي أي بني محدث إياك والحدث قال ولم أر أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم كان أبغض إليه الحدث في الإسلام يعني منه قال وقد صليت مع النبي صلى الله عليه وسلم ومع أبي بكر ومع عمر ومع عثمان فلم أسمع أحدا منهم يقولها فلا تقلها إذا أنت صليت فقل الحمد لله رب العالمين

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு முஙஃப்பல் நான் பிஸ்மில்லாஹ்  (சப்தமிட்டு) சொல்வதை கேட்ட எனது தந்தை கூறினார் மகனே! நூதனத்தை தவிர்ந்து கொள்! மேலும் கூறினார்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் எவரும் பிஸ்மில்லாஹ் சப்தமிட்டு ஓதியதை பார்க்கவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,அபூபக்கர் (ரளி) அவர்கள்,உமர் (ரளி) அவர்கள்,உஸ்மான் (ரளி) அவர்களுக்கு பின்னால் நின்று நான்  தொழுதுள்ளேன்.அவர்களில் ஒருவரும் பிஸ்மில்லாஹ் (சப்தமிட்டு) ஓதியதை செவியுற்றதில்லை.(ஆதாரம்:திர்மிதி,நஸாயி,இப்னு மாஜா,தஹாவி)

இமாம் தொழுகையில் பாத்திஹாவுடன் துணை சூராவும் ஓதுதல்

يقرأ في الأوليين من صلاة الظهر بفاتحة الكتاب وسورتين
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகையில் முதல் இரு ரக்அத்துகளில் பாத்திஹா சூரா,துணை சூரா ஓதினார்கள்.(ஆதாரம்: புகாரி,முஸ்லிம்,மிஷ்காத்)

தனித்தொழுபவர் பாத்திஹா துணை சூரா ஓதுதல்

قال إذا قمت فتوجهت إلى القبلة فكبر ثم اقرأ بأم القرآن وبما شاء الله أن تقرأ
ஹஜ்ரத் ரிஃபாஆ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராமப்புற அரபிக்கு தொழுகையை கற்றுக்கொடுத்தார்கள் நீர்  தொழுகைக்கு நிற்கும் போது கிப்லாவை முன்னோக்கி தக்பீர் கூறு உம்முல் குர்ஆன் (பாத்திஹா) மற்றும் அல்லாஹ் நாடியளவு (துணை சூரா) ஓதுக (ஆதாரம்:அபூதாவூத்)




ثم اقرأ بأم القرآن ثم اقرأ بما شئت
'முஸ்னத் அஹ்மதில்'
வரும் அறிவிப்பு கிப்லாவை முன்னோக்கி, தக்பீர் கூறு! பிறகு உம்முல் குர்ஆன் பாத்திஹா ஓது பிறகு நீ நாடும் அளவு (துணை சூரா) ஓது

பாத்திஹாவிற்கு பிறகு துணை சூரா ஓதுவதற்கு முன்பாக பிஸ்மில்லாஹ் ஓதுவது

عن ابن عمر: أنه كان إذا افتتح الصلاة قرأ: بسم الله الرحمن الرحيم، فإذا فرغ من الحمد قرء بسم الله الرحمن الرحيم
இப்னு உமர் (ரளி) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் பொழுது பிஸ்மில்லாஹ் ஓதுவார்கள்.பாத்திஹா சூரா ஓதி முடித்த பின்பு பிஸ்மில்லாஹ் ஓதுவார்கள்.
(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீஷைபா)

கிராஅத் ஓதும் சமயத்தில் முக்ததி பின்பற்றி தொழுபவர் அமைதியாக இருப்பது

அல்லாஹுதஆலா கூறுகிறான் குர்ஆன் ஓதப்படும் போது செவிதாழ்த்தி கேளுங்கள்; மேலும் மெளனமாக இருங்கள் நீங்கள் அருள்செய்யப்படுவீர்கள்.(அஃராப்)



كان رسول الله صلى الله عليه وسلم إذا قرأ في الصلاة أجابه من وراءه، إذا قال: بسم الله الرحمن الرحيم قالوا مثل ما يقول حتى تنقضي فاتحة الكتاب والسورة فلبث ما شاء الله أن يلبث ثم نزلت
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون فقرء و انصتوا
முஹம்மது இப்னு கஃப் குரளி (ரஹ்) கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் கிராஅத் ஓதும் பொழுது பின்னால் தொழுபவர்களும் அண்ணலாருடன் கிராஅத் ஓதுவார்கள்.அண்ணலார் பிஸ்மில்லாஹ் கூறினால், அவர்களும் அவ்வாறே கூறுவார்கள்.அத்துடன் பாத்திஹா சூரா,துணை சூரா ஓதும் வரை அவர்களும் ஓதுவார்கள்.அல்லாஹ் நாடியவரை இவ்விதமாக நடந்தது.குர்ஆன் ஓதப்பட்டால் என்ற வசனம்  இறங்கியது.பிறகு அண்ணலார் கிராஅத் ஓதுவார்கள்.ஸஹாபாக்கள் மெளனமாக இருந்தார்கள்.
(ஆதாரம்:தப்ஸீர் இப்னு அபி ஹாதிம் ராஜி)



قال العلامة ابن تيمية و قول الجمهور هو الصحيح فان الله سبحانه و تعالي قال و اذا قرا القران فاستمعوا له و انصتوا لعلكم ترحمون قال احمد اجمع الناس علي انها نزلت في الصلوة
அல்லாமா இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பெரும்பான்மையான அறிஞர்களின் சொல் சரியானது.ஏனெனில் அல்லாஹுதஆலா கூறுகிறான்: குர்ஆன் ஓதப்படும் போது செவிதாழ்த்தி கேளுங்கள் மேலும் மெளனமாக இருங்கள் நீங்கள் அருள்செய்யப்படுவீர்கள் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த வசனமானது தொழுகையின் விஷயத்தில் இறங்கியது.
(ஆதாரம்:ஃபதாவா இப்னு தைய்மிய்யா)

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فأنصتوا وإذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين
அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் இமாம் நியமிக்கப்படுவது அவரை பின்பற்றப்படுவதற்குதான்.அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள் அவர் ஓதினால் நீங்கள் மெளனத்தை கடைப்பிடியுங்கள் அவர் கூறினால் நீங்கள் ஆமீன் கூறுங்கள் (ஆதாரம்:ஸுனன் இப்னு மாஜா)

أن رجلا قرأ خلف رسول الله صلى الله ... قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الظهر أو العصر قال قال فاوما اليه رجل فنهاه فابي فلما انصرف قال اتنهاني ان اقرء خلف النبي صلي الله عليه و سلم فتذاكرنا ذلك حتي سمع رسول الله صلي الله فقال النبي صلي الله من صلي خلف امام فان قراءة الامام له قراءة
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் லுஹர் அல்லது அஸர் தொழுதார்.வேறொருவர் கிராஅத் ஓதுவதை நிறுத்தும் படி சைக்கினை செய்தார்.ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை.அவர் தொழுது முடித்த பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் நின்று நான் கிராஅத் ஓதுவதை ஏன் தடுத்தீர்? இந்நிகழ்வு குறித்து நாங்கள் பேசிக்கொண்டோம்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது குறித்து கேள்விப்பட்டு கூறினார்கள் இமாமிற்கு பின்னால் நின்று தொழும் போது இமாமின் கிராஅத் பின்தொடர்பவருக்கு கிராஅத்தாகும்.(கிதாபுல் ஆஸார் லி அபீஹனீஃபா பிரிவாயதில் காளி)

இமாமின் கிராஅத் முக்ததிக்கு  (பின்பற்றி தொழுபவருக்கு) போதுமானது (ஓததேவையில்லை)

من كان له إمام فقراءة الإمام له قراءة

ஜாபிர் ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக கூறுகிறார்கள் இமாமை பின்தொடர்ந்து தொழுபவருக்கு இமாமின் கிராஅத்துதான் (போதுமானதாகும்)
(ஆதாரம்:இத்ஹாஃபுல் கியரதில் முஹிர்ரா)

كان إذا سئل هل يقرأ أحد خلف الإمام قال: إذا صلى أحدكم خلف الإمام فحسبه قراءة الإمام. وإذا صلى وحده فليقرا و كان عبد الله لا يقرا خلف الامام
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்களிடம் கேட்கப்பட்டது இமாமை பின்தொடர்பவருக்கு கிராஅத் உண்டா? அவர்கள் கூறினார்கள்; உங்களில் ஒருவர் இமாமை பின்பற்றி தொழுதால், அவருக்கு இமாமின் கிராஅத் போதுமானது.தனித்து தொழுதால் அவர் கிராஅத் ஓதட்டும்.அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் இமாமின் பின்னால் ஓதமாட்டார்கள்.
(ஆதாரம்:முஅத்தா இமாம் மாலிக்)

   இன்ஷா அல்லாஹ் தொடரும்

No comments:

Post a Comment