ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர்:7
தொழுகைக்கு பிறகு துஆ செய்வது
عن أبي أمامة قال: «قيل لرسول الله ﷺ: أي الدعاء أسمع؟ قال: جوف الليل الآخر، ودبر الصلوات المكتوبات
ஹஜ்ரத் அபூஉமாமா (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது எந்த துஆ அதிகமாக ஏற்கப்படும்? அண்ணலார் கூறினார்கள்; இரவின் இறுதியிலும், பர்ளு தொழுகைகளுக்கு பிறகும் (கேட்கப்படும் துஆ ஏற்கப்படும்)
(ஆதாரம்: ஜாமிஉத்திர்மிதி 2/187,தலைப்பு:باب بلا ترجمة ابواب الدعاء ஸுனனுல் குப்ரானி லின் நஸாயி 6/32,مايستحب من الدعاء دبر الصلوات المكتوبات ஹதீஸ் இலக்கம்:9936,அமலு வலைலா லின் நஸாயி பக்கம்:186,ஹதீஸ் இலக்கம் 108)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அனஸ் இப்னு மாலிக் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
الدعاء مخ العبادة
பிரார்த்தனை வணக்கங்களின் மூளையாகும். (சாராம்சமாகும்)
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 2/175,ابواب الدعوات தலைப்பு இலக்கம்:2 அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 2/255,ஹதீஸ் இலக்கம்:3196,ஜாமிஉல்அஹாதீஸ் லிஸ்ஸுயூத்தி 13/2,ஹதீஸ் இலக்கம்:12413)
துஆவின் போது கைகளை உயர்த்துதல்
عن انس رضي الله عنه قال : " إن الله يستحي أن يبسط العبد إليه يديه فيهما خيرا فيردهما خائبتين "
ஹஜ்ரத் அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மக்களே! உங்களின் இறைவன் உயிருள்ளவன்.சங்கையானவன். உங்களில் ஒருவர் அவனிடத்தில் இருகரங்களையும் ஏந்திய பிறகு அது இரண்டையும் வெறுங்கையாக ஆக்குவதை அல்லாஹ் வெட்கப்படுகிறான்.(ஆதாரம்:முஸ்னத் அபூயஃலா 7/142,ஹதீஸ் இலக்கம்:4108)
இதே கருத்தில் ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி (ரளி) அவர்களிடமிருந்து வந்துள்ளது.
(ஆதாரம்:ஸுனன் இப்னு மாஜா 1/275,தலைப்பு باب رفع اليدين فی الدعاء ,ஜாமிஉத்திர்மிதி 2/196,ابواب الدعوات باب بلا ترجمة ,ஸஹீஹ் இப்னு ஹிப்பான் பக்கம்:343,ذكر استحابة الدعاء ஹதீஸ் இலக்கம்:880)
عن انس رضي الله عنه قال رايت رسول الله ﷺ يرفع يديه فی الدعاء حتی يری بياض ابطيه
அனஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பார்த்தேன்.அண்ணலார் அவர்கள் துஆவில் இருகரங்களையும் உயர்த்தினார்கள்.அப்போது அவரின் அக்குளின் வெண்மை வெளிப்பட்டது.
(ஆதாரம்:அல்ஜம்உ பைன ஸ்ஸஹீஹைன் 2/437,ஹதீஸ் இலக்கம்:3943,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 3/357,தலைப்பு:باب رفع اليدين فی دعاء الاستسقاء ஸஹீஹ் இப்னு ஹிப்பான் பக்கம்:342,ذكر الاباحة للمرء ان يرفع يديه ஹதீஸ் இலக்கம்:877)
قال كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه
உமர் இப்னுல் கத்தாப் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருகரங்களையும் துஆவில் உயர்த்தி (துஆ நிறைவு செய்து) தனது முகத்தில் இரண்டு கைகளால் தடவும் வரை (உயர்த்திய) இரண்டு கரங்களை விடுவதில்லை.
(ஜாமிஉத்திர்மிதி 2/176,தலைப்பு:باب ما جاء فی رفع الايدی عند الدعاء ,அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 5/197,ஹதீஸ் இலக்கம்:7053,முஸ்னத் பஜ்ஜார் 1/243,ஹதீஸ் இலக்கம்:129)
عن السائب بن يزيد عن ابيه ان النبيﷺ كان اذا دعا فرفع يديه مسح وجهه بيديه
ஹஜ்ரத் ஸாயிப் இப்னு யஜீத் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆவில் இருகரங்களையும் உயர்த்துவார்கள்.(இறுதியில்) அதனை தமது முகத்தில் தடவுவார்கள்.
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/216,தலைப்பு:باب الدعاء அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 9/273,ஹதீஸ் இலக்கம்:18088)
தொழுகைக்கு பிறகு கைகளை உயர்த்தி துஆ செய்வது
وعن الفضل بن عباس - رضي الله عنهما - ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( الصلاة مثنى مثنى ، تشهد في ركعتين ، وتخشع وتضرع وتمسكن ، ثم تقنع يديك - يقول : ترفعهما - إلى ربك مستقبلا ببطونهما وجهك ، وتقول يا رب ! يا رب ! ومن لم يفعل ذلك فهو كذا وكذا )
ஹஜ்ரத் பள்ல் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; தொழுகை இரண்டிரண்டாகும்.
ஒவ்வொரு
இரு ரக்அத்திலும் தஷஹ்ஹுத்தில் அமர்வது உண்டு.அடக்கம், இயலாமை, ஏழ்மையை வெளிப்படுத்துதல்.உனது இரு உள்ளங்கைகளும் முகத்தின் பக்கம் முன்னோக்கியவாறு அதனை ரப்பின் பக்கம் உயர்த்துவீராக! மேலும் கூறுவீராக! இறைவா! இறைவா! இறைவா! இதன்பேரில் அமல்செய்யவில்லையானால் அவரின் தொழுகையானது இவ்வாறே (குறையுள்ளது முழுமைபெறவில்லை) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/87,தலைப்பு:باب ما جاء فی التخشع فی الصلوة அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 8/26,ஹதீஸ் இலக்கம்:15154)
عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم رفع يده بعد ما سلم وهو مستقبل القبلة، فقال : اللهم خلص الوليد بن الوليد،
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸலாம் கொடுத்த பிறகு கிப்லாவின் பக்கம் முன்னோக்கி கரங்களை உயர்த்தி துஆ செய்தார்கள் யா அல்லாஹ்! வலீத் இப்னு வலீதிற்கு ஈடேற்றம் அளிப்பாயாக!
(ஆதாரம் தப்ஸீர் இப்னு அபூஹாதம் 3/123,ஹதீஸ் இலக்கம்:5906,لا يستطعون حيلة என்ற வசனத்தின் கீழ் தப்ஸீர் இப்னு கஸீர் பக்கம்:522,فاولئك عسی الله ان يعفو عنهم என்ற வசனத்தின் கீழ்)
عن محمد بن ابي يحيی قال رايت عبد الله بن الزبير رضي الله عنه أن رجلاً رفع يديه بالدعاء قبل أن ينتهي من صلاته ، فلما فرغ قال له عبد الله : إن النبي صلى الله عليه وسلم لم يكن يرفع يديه بالدعاء إلا بعد أن يفرغ من صلاته
ஹஜ்ரத் முஹம்மத் இப்னு அபூயஹ்யா கூறுகிறார்கள்;
ஒரு மனிதர் தொழுகையை நிறைவு செய்வதற்கு முன்பாக கரங்களை உயர்த்தியதை அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரளி) அவர்கள் பார்த்தார்கள்.அவர் தொழுகையை முடித்த பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளி கூறினார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை நிறைவு செய்வதற்கு முன்பாக கரங்களை உயர்த்தி துஆ கேட்கமாட்டார்கள்.(தொழுகையை நிறைவு செய்த பிறகு கரங்களை உயர்த்தி துஆ கேட்பார்கள்)
(ஆதாரம்:அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 11/22,ஹதீஸ் இலக்கம்:90,அல்அஹாதீஸுல் முஹ்தார் லில்முக்தஸி 9/336,ஹதீஸ் இலக்கம்:303)
ஆண்கள் பெண்களின் தொழுகைக்கு மத்தியில் வித்தியாசம்
இஸ்லாமிய மார்க்கத்தில் சட்டங்கள் அனைத்தும் ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும்தான்.தொழுகை, நோன்பு,ஜகாத்,ஹஜ் போன்ற அனைத்து சட்டங்களிலும் இருவருக்கும் விதிவிலக்கு இல்லை.எனினும்,பெண்ணியம் மற்றும் பர்தா அனைத்து சந்தர்ப்பங்களிலும் கவனிக்கப்படும்.வணக்கங்களில் பெண்களுக்கு முழுமையான பர்தா பெறப்படுமோ அதனை தான் தேர்ந்தெடுக்கப்படும்.
ஈமானுக்கு பிறகு மிகப்பெரும் வணக்கம் தொழுகையாகும்.இதில் உள்ள சட்டங்களில் சிலதில் இருவரும் சரிசமமாக அமல் செய்வதுடன் சில நிலைகளில் இருவருக்கும் தெளிவான வித்தியாசம் உண்டு.
عن وائل بن حجر قال : قال لي رسول الله - صلى الله عليه وسلم - : " يا وائل بن حجر إذا صليت فاجعل يديك حذاء أذنيك ، والمرأة تجعل يديها حذاء ثدييها " .
ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் வருகை தந்தேன்.அண்ணலார் கூறினார்கள்; வாயில் இப்னு ஹுஜ்ர் தொழும் போது காதுக்கு நேராக கைகளை உயர்த்துவீராக! பெண்,கைகளை மார்பிற்கு நேராக ஆக்கிகொள்ளட்டும்!
(ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 9/144,ஹதீஸ் இலக்கம்:17497,அல்மஜ்மஉஜ்ஜவாயித் லில்ஹைஸமி 2/272,தலைப்பு:باب رفع اليدين ஹதீஸ் இலக்கம்:2594,ஜாமிஉல் ஹதீஸ் லிஸ்ஸுயூத்தி 23/439,ஹதீஸ் இலக்கம்:26377)
عن يزيد بن أبي حبيب ، أن رسول الله صلى الله عليه وسلم مر على امرأتين تصليان فقال : إذا سجدتما فضمَّا بعض اللحم إلى الأرض ؛ فإن المرأة ليست في ذلك كالرجل
யஜீத் இப்னு ஹபீப் (ரஹ்) அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருந்த இரு பெண்களை கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.அண்ணலார் கூறினார்கள் நீங்கள் ஸஜ்தா செய்யும் பொழுது உடலின் ஒரு பகுதியை பூமியுடன் இணைத்துகொள்ளுங்கள். ஏனெனில் பெண்
(தொழுகையில்) ஆணைப் போன்று அல்ல.
(ஆதாரம்:மராஸீல் அபூதாவூத் பக்கம்:28,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 2/223,தலைப்பு: باب ما يستحب للمراة الخஜாமிஉல் அஹாதீஸ் லிஸ்ஸுயூத்தி 3/233,ஹதீஸ் இலக்கம்:2110)
عن أبي سعيد الخدري صاحب رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يأمر الرجال أن يتجافوا في سجودهم ، ويأمر النساء ينخفضن في سجودهن ، وكان يأمر الرجال أن يفرشوا اليسرى وينصبوا اليمني في التشهد ، ويأمر النساء أن يتربعن
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழரான அபூஸயீதுல் குத்ரி (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸஜ்தாவில் தொடைகளை (வயிற்றை விட்டும்) விலக்கிவையுங்கள்
என ஆண்களுக்கு கட்டளையிட்டார்கள்.தொடைகளை (வயிற்றுடன்) சேர்த்துவைக்கும்படி பெண்களுக்கு கட்டளையிட்டார்கள்.இருப்பில் இடதுகாலை விரித்து வலது காலை நட்டுவைக்கும்படி ஆண்களுக்கு உத்தரவிட்டார்கள்.(இருப்பில்) சம்மணமிட்டு அமரும்படி பெண்களுக்கு உத்தரவிட்டார்கள்.
(ஆதாரம் அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 2/222,223,தலைப்பு:باب ما يستحب للمراة ,அத்தப்வீபுல் மவ்ளூயி லில் அஹாதீஸ் பக்கம்:2639)
عن عبد الله بن عمر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا جلست المرأة في الصلاة وضعت فخذها على فخذها الأخرى وإذا سجدت ألصقت بطنها في فخذيها كأستر ما يكون لها وإن الله تعالى ينظر إليها ويقول يا ملائكتي أشهدكم أني قد غفرت لها
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் பெண்கள் தொழும் போது தொடையை மற்றொரு தொடையுடன் (ஒட்டியவாறு) வைக்கவேண்டும்.ஸஜ்தாவில் வயிற்றை தொடையுடன் ஒட்டவேண்டும்.இதுதான் அவர்களுக்கு மிகவும் மறைப்பாகும்.அல்லாஹ் அவர்களை பார்த்தவாறு கூறுகிறான் எனது மலக்குகளே அவர்களின் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன்.
(ஆதாரம் அல்காமில் லிஇப்னு அதி 2/501,இலக்கம்:399,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 2/223,தலைப்பு:باب ما يستحب للمراة الخ ஜாமிஉல் அஹாதீஸ் லிஸுயூத்தி 3/43,ஹதீஸ் இலக்கம்:1759)
عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة الحائض إلا بخمار
ஆயிஷா ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் பருவம் எய்திய பெண்ணின் தொழுகை முக்காட்டு துணியின்றி ஏற்கப்படாது.
(ஆதாரம் ஜாமிஉத்திர்மிதி 1/86,தலைப்பு:باب لا تقبل صلوة الحائض الا بخمار ஸுனன் அபூதாவூத் 1/101 தலைப்பு:باب المراة تصلی بغير خمار )
قال علي رضي الله عنه إذا سجدت المرأة فلتضم فخذيها
அலி ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்;
பெண் ஸஜ்தாவின் போது தனது தொடையை ஒட்டிக்கொள்வாள் (ஆதாரம்: அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹபகீ 2/222,தலைப்பு: باب ما يستحب للمراة الخ, முஸன்னப் அபூஷைபா 2/504,ஹதீஸ் இலக்கம்:2793, المراة كيف تكون فی سجودها முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக் 3/50 தலைப்பு:باب تكبير المراة بيدها الخ ஹதீஸ் இலக்கம்:5086)
عن ابن عباس رضي الله عنه انه سئل عن صلوة المراة فقال تجتمع و تحتفز
இப்னு அப்பாஸ் ரளி அவர்களிடத்தில் பெண்ணிண் தொழுகையை குறித்து கேட்கப்பட்டது.அன்னார் அவர்கள் கூறினார்கள்; நன்றாக ஒட்டியவாறு உடலை சுருக்கி தொழுகவேண்டும்.
(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீஷைபா 2/505, தலைப்பு: باب المراة كيف تكون فی سجودها ஹதீஸ் இலக்கம்:2794)
No comments:
Post a Comment