ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர்:8
ஸஜ்தா ஸஹ்வு குறித்து விளக்கம்
குறைப்பது அதிகப்படுத்துவதன் பேரில் ஸஜ்தா ஸஹ்வு செய்வது
عن ابن ابی سعيد الخدري رضي الله عنه ان رسول الله ﷺ قال اذا صلی احدكم فلم يدر زاد ام نقص فليسجد سجدتين و هو قاعد
அபூஸயீத் அல்குத்ரி (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்
உங்களில் ஒருவர் தொழுகையில் குறைத்ததோ அல்லது அதிகப்படுத்தியதோ அறியவில்லையானால் (இருப்பில்) அமர்ந்தவாறு இரு ஸஜ்தா செய்யட்டும்!
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/154,தலைப்பு: باب من قال يتم علی اكثر ظنه ஸஹீஹ் முஸ்லிம் 1/211,தலைப்பு:باب النهی عن نشد الضالة فی المسجد )
ஸஜ்தா ஸஹ்வு ஸலாமிற்கு பிறகு
عنِ ابن مسعود رضي الله عنه قال: صلى النبي صلى الله عليه وسلم -قال إبراهيم: لا أدري -زاد أو نقص- فلما سلم قيل له: يا رسول الله، أحدث في الصلاة شيء؟ قال: «وما ذاك»، قالوا: صليت خمسا فسجد سجدتين بعد ما سلم
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்
(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகை ஐந்து ரக்அத் தொழவைத்தார்கள்.(தொழுகைக்கு பிறகு) அண்ணலாரிடத்தில் கேட்கப்பட்டது தொழுகையில் (ரக்அத்துகள்) அதிகமாக்கப்பட்டுள்ளதா? அண்ணலார் அவர்கள் 'என்ன விஷயம்?' என கேட்டார்கள் தாங்கள் ஐந்து ரக்அத் தொழவைத்தீர்கள் என ஒருவர் கூறினார்.எனவே ஸலாத்திற்கு பிறகு இரு ஸஜ்தா செய்தார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/163,தலைப்பு:باب اذا صلی خمسا ஸுனன் நஸாயி 1/185 தலைப்பு:باب ما يفعل من صلی خمسا )
ஸஜ்தா ஸஹ்வில் இரு ஸஜ்தாக்கள்
عن ثوبان رضي الله قال سمعت رسول الله ﷺ يقول فی كل سهو سجدتان بعد ما سلم
"ஸலாமிற்கு பிறகு மறதிக்கு இரு ஸஜ்தாக்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை கேட்டதாக ஸவ்பான் (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்:சுனன் இப்னுமாஜா 1/85, தலைப்பு:باب ماجاء فيمن سجدهما بعد السلام،அபூதாவூத் 1/149,தலைப்பு:باب من قام اثنتين ولم ستشهد )
ஸஜ்தா ஸஹ்விற்கு முன்பாக ஒரு ஸலாம் கொடுப்பது
عن عمران بن حصين رضي الله عنه قال سلم رسول الله ﷺ فی ثلاث ركعات من العصر....... فصلی الركعة التی كان ترك ثم سلم ثم سجد سجدتي السهو ثم سلم
ஹஜ்ரத் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
ஒரு முறை அஸர் தொழுகை மூன்று ரக்அத் தொழுகை நடத்தினார்கள்.(இது குறித்து கூறப்பட்டது) விடுபட்ட ரக்அத்தை தொழுதார்கள்.பிறகு (ஒரு)
ஸலாம் கொடுத்தார்கள்.பிறகு ஸலாமிற்கு பிறகு இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.
(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 1/214,தலைப்பு:باب النهی عن نشد الضالة )
عن الحسن رحمة الله عليه أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم وأبا بكرٍ وعُمرَ كانوا يسلِّمون تسليمةً واحدةً"
ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் (ரளி) அவர்கள் உமர் (ரளி) அவர்கள் ஒரு ஸலாம் கொடுப்பார்கள்.
(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா 3/59,60 தலைப்பு:باب من كان يسلم تسليمة واحدة ஹதீஸ் இலக்கம்:3081)
தஷஹ்ஹுத் ஓதிய பிறகு
ஸஜ்தா ஸஹ்வு
عن أبي عبيدة ، عن عبد الله ، عن النبي - صلى الله عليه وسلم- قال: " إذا كنت في صلاة، فشككت في ثلاث أو أربع، وأكثر ظنك على أربع، تشهدت، ثم سجدت سجدتين، وأنت جالس قبل أن تسلم، ثم تشهدت أيضا ثم تسلم
ஹஜ்ரத் அபூஉபைதா இப்னு அப்துல்லாஹ் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நீர் தொழுகையில் இருக்கும் போது நான்கா? அல்லது மூன்றா? என சந்தேகம் ஏற்பட்டு,மிகைப்பான எண்ணம் நான்கு என தோன்றினால் தஷஹ்ஹுத் ஓதுவீராக! ஸலாமிற்கு முன்பாக அமர்ந்த நிலையில் இரு ஸஜ்தாக்கள் செய்வீராக! பிறகு தஷஹ்ஹுத் ஓதுவீராக! பிறகு ஸலாம் கொடுப்பீராக!
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/154,தலைப்பு:باب من قال يتم علی اكبر ظنه )
வித்ரு தொழுகை
வித்ரு தொழுகை வாஜிப்
عن عبد الله بن عمر رضي الله عنه عن النبي ﷺ قال اجعلوا اخر صلوتكم بالليل وترا
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் வித்ரு தொழுகையை இரவின் கடைசி தொழுகையாக ஆக்கிகொள்ளுங்கள்!
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/136, தலைப்பு: باب ليجعل اخر صلوته وترا கியாமுல்லைல் லில்மர்வஜி பக்கம்:218,முஸன்னப் இப்னு அபீ ஷைபா 4/463, من قال يجعل الرجل اخر صلوته بالليل ஹதீஸ் இலக்கம்:6765)
இந்த ஹதீஸில் اجعلوا என்ற வார்த்தையானது கட்டளை வாக்கியமாக வந்துள்ளது.பிக்ஹின் பிரபல்யமான விதி
الامر للوجوب ما لم تكن قرينة خلافه
ஷரீஅத்தில் கட்டளையாக கூறப்படுபவை வாஜிப் எனும் கடமையாகும்.இதற்கு எதிரான காரணி இல்லாதவரை
(ஆதாரம்:
கவாயிதுல் ஃபிக்ஹ் லிமுஹம்மத் அமீமுல் இஹ்ஸான் பக்கம்:62,அல்அஹ்காமு லில்ஆமிதி 2/165,கஷ்புல் அஸ்ரார் லி அப்தில் அஜீஜ் புகாரி 1/173)
عن ابي ايوب الانصار رضي الله عنه مرفوعا قال الوتر حق او واجب
ஹஜ்ரத் அபூஅய்யூப் அன்ஸாரி (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை அறிவிக்கிறார்கள்;
வித்ரு கடமையாகும்.
(ஆதாரம் முஸ்னத் அபூதாவூத் தயாலிஸி பகுதி 1/314,ஹதீஸ் இலக்கம்:594,ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/204,தலைப்பு: باب الوتر ,ஸுனன் தாரகுத்னி பக்கம்:283,الوتر بخمس او بثلاث او بواحدة الخ ,ஹதீஸ் இலக்கம்:1624)
عن عبد الله بن بريدة عن ابيه قال سمعت رسول الله ﷺ يقول الوتر جق فمن لم يوتر فليس منا الوتر جق فمن لم يوتر فليس منا الوتر جق فمن لم يوتر فليس منا
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு புரைதா (ரளி) அவர்கள் அவரது தந்தையிடம்
அவரின் தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டதை அறிவிக்கிறார்கள்;
வித்ரு என்பது கடமையாகும்.வித்ரு தொழுதாவர் நம்மை சார்ந்தவர் இல்லை.வித்ரு தொழுதாவர் நம்மை சார்ந்தவர் இல்லை.வித்ரு தொழுதாவர் நம்மை சார்ந்தவர் இல்லை.
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/208,தலைப்பு:باب فيمن لم يوتر முஸன்னப் இப்னு அபீஷைபா 4/505,தலைப்பு: باب من قال الوتر واجب عن ابی هريرة ஹதீஸ் இலக்கம்:6932)
عن ابي مريم قال جاء رجل الی علي رضي الله عنه فقال اني سميت و نسيت الوتر حتی طلعت الشمس فقال اذا استيقظت و ذكرت فصل
அபூமர்யம் அவர்கள் அறிவிக்கிறார்கள்; அலி (ரளி) அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்தார்.சூரியன் உதயமாகும் அளவிற்கு வித்ரு தொழுகையை மறந்து தூங்கிவிட்டேன் என்று கூறினார் அதற்கு அன்னார் அவர்கள் கூறினார்கள் விழித்து (வித்ரு) நினைவு வந்தால் தொழவேண்டும்.
(ஆதாரம்: முஸன்னப் இப்னு அபிஷைபா 4/485,باب من قال يوتر و ان اصبح و عليه قضاءه ஹதீஸ் இலக்கம்:6869)
வித்ரு தொழுகை மூன்று ரக்அத்
عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا : " كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ ؟ فَقَالَتْ : مَا كَانَ يَزِيدُ فِي رَمَضَانَ وَلَا فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً ، يُصَلِّي أَرْبَعًا ، فَلَا تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا ، فَلَا تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ، ثُمَّ يُصَلِّي ثَلَاثًا
ஹஜ்ரத் அபூஸலமா இப்னு அப்துர்ரஹ்மான் அவர்கள்
ஆயிஷா (ரளி) அவர்களிடத்தில் கேட்டார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானில் எவ்வாறு தொழுதார்கள்? அதற்கு அன்னை அவர்கள் கூறினார்கள்; ரமலான் ரமலான் அல்லாத காலங்களில் பதினொன்று ரக்அத்தை விட அதிகமாக தொழ நான் பார்த்ததில்லை.முதலில் நான்கு ரக்அத் தொழுவார்கள்.அதனின் நீளத்தையும் அழகையும் கேட்கவேண்டாம்.பிறகு நான்கு ரக்அத் தொழுதார்கள் அதனின் நீளத்தையும் அழகையும் கேட்கவேண்டாம்.பிறகு மூன்று ரக்அத் தொழுதார்கள்.
(ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1/154,தலைப்பு:باب قيام النبي صلی الله عليه و سلم باليل فی رمضان ஸஹீஹ் முஸ்லிம் 1/254,தலைப்புصلوة الليل و عدد ركعة النبي صلی الله عليه وسلم : ஸுனன் நஸாயி 1/248,தலைப்பு:باب كيف الوتر بثلاث)
عن عائشة رضي الله عنه ان النبيﷺ كان يوتر بثلاث يقرا فی اول ركعة بسبح اسم ربك الاعلی و فی الثانية قل يايها الكافرون و فی الثانية قل هو الله احد و المعوذتين
ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று ரக்அத் வித்ரு தொழுது கொண்டிருந்தார்கள்.முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம
ரப்பிகல் அஃலா' இரண்டாவது ரக்அத்தில் 'குல்யாஅய்யுஹல் காஃபிரூன்' மூன்றாவது ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு அஹத் வல் முஅவ்விததைன்' (குல்அவூது பிரப்பில் ஃபலக் குல்அவூது பிரப்பின்னாஸ்) ஓதுவார்கள்.
(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/200,தலைப்பு:باب الوتر ,ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 718, ذكر الاباحة للمرء ان يضم قراءة المعوذتين ஹதீஸ் இலக்கம் :2448,முஸன்னப் அப்துர் ரஜ்ஜாக் 2/404,தலைப்பு:باب ما يقرء فی الوتر الخ ஹதீஸ் இலக்கம்:1257)
عن ابي بن كعب رضي الله عنه ان رسول الله ﷺ كان يوتر بثلاث ركعات كان يقرء فی الاولی بسبح اسم ربك الاعلی و فی الثانية بقل يايها الكافرون و فی الثانية بقل هو الله احد و يقنت قبل الركوع
உபை இப்னு கஃப் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று ரக்அத் வித்ரு தொழுது கொண்டிருந்தார்கள்.முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம
ரப்பிகல் அஃலா' இரண்டாவது ரக்அத்தில் 'குல்யாஅய்யுஹல் காஃபிரூன்' மூன்றாவது ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு அஹத்'
மேலும் ருகூவிற்கு முன்பாக குனூத் ஓதினார்கள்.
(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/248,தலைப்பு:باب ذكر اختلاف الفاظ الناقلين لخبر ابي بن كعب ஸுனன் இப்னு மாஜா 1/82,தலைப்பு :باب ما جاء فی ما يقرء فی الوتر முஸன்னப் இப்னு அபீ ஷைபா 4/514,515, فی الوتر ما يقرء فيه ஹதீஸ் இலக்கம்:6960)
இந்த கருத்தில் வேறு ஹதீஸ்களும் உண்டு.
(1)ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் (ஆதாரம்: ஸுனன் நஸாயி 1/249, ذكر الاختلاف علی ابی اسحاق فی حديث سعيد بن جبير عن ابن عباس ,முஸன்னப் இப்னு அபீஷைபா 4/512, فی الوتر ما يقرء فيه ஹதீஸ் இலக்கம்:6951)
(2)ஹஜ்ரத் இம்ரான் இப்னு ஹஸீன் (ரளி)
(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/204,தலைப்பு:باب الوتر மஜ்மஉஸ்ஸவாயித் 2/505,தலைப்பு:باب ما يقرء فی الوتر ஹதீஸ் இலக்கம்:3468)
(3) ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி)
(ஆதாரம்:மஜ்மஉஸ்ஸவாயித் 2/505,தலைப்பு:ما يقرء فی الوتر ஹதீஸ் இலக்கம்:3466)
(4) ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு ஸப்ரா (ரளி)
( ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் 2/505,தலைப்பு:باب ما يقرء فی الوتر ஹதீஸ் இலக்கம்:3469)
(5) ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அபிஅவ்ஃபா (ரளி) அவர்கள்
(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் 2/501,தலைப்பு:باب عدد الوتر ஹதீஸ் இலக்கம்:3452)
(6)ஹஜ்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஜா ரளி அவர்கள் (ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/205,தலைப்பு: باب الوتر கிதாபுல் ஆஸார் 1/142,தலைப்பு:باب الوتر وما يقرء فيها ,ஹதீஸ் இலக்கம்:122)
இவர்களின் அறிவிப்பில் வித்ரு மூன்று ரக்அத் என்பதாக வந்துள்ளது.
عن ابن عباس رضي الله عنه انه كان يوتر بثلاث بسبح اسم ربك الاعلی و فی الثانية قل يايها الكافرون و فی الثانية قل هو الله احد
இப்னு அப்பாஸ் ரளி அவர்கள் மூன்று ரக்அத் வித்ரு தொதார்கள்.அதில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா' 'குல்யாஅய்யுஹல் காஃபிரூன்'
'குல் ஹுவல்லாஹு அஹத்' ஓதுவார்கள்
(ஆதாரம்: முஸன்னப் இப்னு அபீஷைபா 4/512,فی الوتر وما يقرء فيه ஹதீஸ் இலக்கம்:6950)
عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله ﷺ وتر الليل كوتر النهار صلاة المغرب
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்
(ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்;
இரவின் வித்ரு பகலின் வித்ரான மஃரிபை போன்று(மூன்றாகும்).
(ஆதாரம்:ஸுனன் தாரகுத்னி 285,الوتر كثلاث المغرب ஹதீஸ் இலக்கம்:1637,நஸபுர்ராயா லிஜ்ஜயீலயீ 2/116,باب صلوة الوتر )
عن ابن عمر رضي الله عنه قال قال النبي ﷺ صلوة المغرب وتر النهار فاوتروا صلاة الليل
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரளி அவர்கள் கூறுகிறார்கள்;
மஃரிப் தொழுகை பகலின் வித்ர் (போன்றாகும்) எனவே இரவில் வித்ரு தொழுங்கள்
(ஆதாரம்:முஸன்னப் அப்துர் ரஜ்ஜாக் 2/401,தலைப்பு:باب اخر صلوة الليل ஹதீஸ் இலக்கம்:4688,முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல் 4/420,ஹதீஸ் இலக்கம்:4847)
عن عائشة رضي الله عنها قالت قال رسول الله ﷺ الوتر ثلاث كثلاث المغرب
ஆயிஷா (ரளி) அவர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்;
வித்ரு மஃரிப் தொழுகையை போன்று மூன்றாகும்.
(ஆதாரம்:அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 5/232,ஹதீஸ் இலக்கம்:7170)
عن عبد الله بن مسعود رضي الله عنه قال وتر الليل كوتر النهار صلاة المغرب ثلاثا
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் கூறுகிறார்கள்;
இரவின் வித்ரு பகலின் வித்ரான மஃரிப் போன்று மூன்றாகும்.
(ஆதாரம்:முஃஜமுஜ்ஜவாயித் லில்ஹைஸமி 2/503,தலைப்பு:باب عدد الوتر ,ஹதீஸ் இலக்கம்:3455)
வித்ரு மூன்று ரக்அத் ஒரே ஸலாமில் தொழுவது
عن سعد بن هشام ان عاشة رضي الله عنها حدثته ان رسول الله ﷺ كان لا يسلم فی ركعتی الوتر
ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அவர்கள் வித்ரின் இரண்டு ரக்அத்திற்கு பிறகு ஸலாம் கொடுக்க மாட்டார்கள்.(மாறாக மூன்று ரக்அத் தொழுது ஸலாம் கொடுப்பார்கள்)
(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/248,தலைப்பு:باب كيف الوتر بثلاث,முவத்தா இமாம் முஹம்மத் 150,151,தலைப்பு:باب السلام فی الوتر,முஸன்னப் இப்னு அபீஷைபா 4/493,494 من كان يوتر بثلاث او اكثر ,ஹதீஸ் இலக்கம்:6912,ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/197,தலைப்பு:باب الوتر )
عن عاشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ لا يسلم فی الركعتين الاوليين من الوتر
ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரின் முதல் இரு ரக்அத்திலே ஸலாம் கொடுக்க மாட்டார்கள்.
(ஆதாரம்: அல்முஸ்தத்ரக் லில்ஹாகிம் 1/607,பாடம்:كتاب الوتر ,ஹதீஸ் இலக்கம்:1180)
عبد الله بن مسعود قال: أرسلت أمي ليلة لتبيت عند النبي صلى الله عليه وسلم فتنظر كيف يوتر فباتت عند النبي فصلى ما شاء الله أن يصلي حتى إذا كان آخر الليل وأراد الوتر قرأ: بسبح اسم ربك الأعلى " . سورة الأعلى . في الركعة الأولى وقرأ في الثانية: " قل يا أيها الكافرون " . الكافرون 1. ثم قعد، ثم قام ولم يفصل بينهما بالسلام ثم قرأ ب " قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد " . سورة الإخلاص 1. حتى إذا فرغ كبر ثم قنت فدعا بما شاء الله أن يدعو
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் எவ்வாறு வித்ரு தொழுகிறார்கள்? (அறிவதற்கு) எனது தாயை நபி ஸல்லல்லாஹு அவர்களின் வீட்டிற்கு இரவு கழிப்பதற்கு அனுப்பிவைத்தேன்.
அல்லாஹ் நாடியளவிற்கு தொழுதார்கள்.இரவின் கடைசிபகுதியில் வித்ரு தொழ நாடினார்கள்.முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா' இரண்டாவது ரக்அத்தில் 'குல்யாஅய்யுஹல் காபிரூன்' ஓதினார்கள்.பிறகு இருப்பில் அமர்ந்தார்கள்.பிறகு ஸலாம் கொடுக்காமல் எழுந்தார்கள்.பிறகு மூன்றாவது ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு அஹத்' ஓதினார்கள்.அதனை நிறைவு செய்து தக்பீர் கூறினார்கள்.பிறகு துஆ குனூத் அல்லாஹ் நாடியளவு ஓதினார்கள்.பிறகு தக்பீர் கூறினார்கள்.ருகூஉ செய்தார்கள்.
(ஆதாரம்:அல்இஸ்தீஆப் லிஇப்னு அப்துல் பர் பக்கம்:934,எண்:742)
வித்ரின் இரண்டாவது ரக்அத்தில் தஷஹ்ஹுத்
வித்ரு இரவுத்தொழுகையாகும்.மற்ற தொழுயைப் போன்று இதில் இரண்டாவது ரக்அத்தில் தஷஹ்ஹுத் உண்டு.இரண்டு ரக்அத்திற்கு பிறகு தஷஹ்ஹுத் உண்டு என்பது ஹதீஸ்களின் மூலம் நிரூபணமாகிறது.
كان يقول فی كل ركعتين التحية
ஹஜ்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் ஒவ்வொரு இரு ரக்அத்திலும் அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) உண்டு.
(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/194,தலைப்பு:باب ماجاء يجمع صفة الصلوة و ما يفتح به و يختم به முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக் 2/134,தலைப்பு:باب من نسي التشهد ஹதீஸ் இலக்கம்:3086,முஸன்னப் இப்னு அபீ ஷைபா 3/47 قدر كم يقعد فی الركعتين الاوليين ஹதீஸ் இலக்கம்:3040)
عن عبد الله بن مسعود رضي الله عنه قال كنا لا ندري ما نقول فی كل ركعتين غير ان نسبح و نكبر و نحمد ربنا و ان محمدا ﷺ علم فواتيح الخير و خواتمه فقال اذا قعدتم فی كل ركعتين فقولوا التحيات لله
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
இரண்டு ரக்அத்திற்கு பிறகு அமர்வில் என்ன ஓதவேண்டும்
என்பதை நாங்கள் அறியவில்லை.எனினும் தஸ்பீஹ், தக்பீர் கூறிக்கொண்டிருந்தோம்.மேலும் ரப்பை புகழ்ந்தோம்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை நலவுகள் கற்றுக்கொடுப்பட்டவர்கள் என கூறிக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் இரண்டாவது ரக்அத்தில் அமரும் பொழுது அத்தஹிய்யாத் ஓதுங்கள்
(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/174,كيف التشهد الاول)
عن الفضل بن عباس رضي الله عنه قال قال رسول الله ﷺ الصلوة مثنی مثنی تشهد فی ركعتين
ஃபள்ல் இப்னு அப்பாஸ் ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் தொழுகை இரண்டு இரண்டாகும்.ஒவ்வொரு இரு ரக்அத்திலும் தஷஹ்ஹுத் உண்டு.(ஆதாரம் ஜாமிஉத்திர்மிதி 1/87,தலைப்பு: باب ماجاء فی التخشع فی الصلوة அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 8/26,ஹதீஸ் இலக்கம்:15154)
குனூத் துஆ
ஹதீஸ் நூல்களில் குனூத் துஆ வார்த்தைகள் மாற்றுத்துடன் பலவிதங்களில் வந்துள்ளது.
அதில் உள்ளடங்கிய
اَللّهُمَّ اِنَّأ نَسْتَعِيْنُكَ و نَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ وَنَشْكُرُكَ وَلاَنَكْفُرُكَ وَنَخْلُعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اَلّلهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعي وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشي عَذَابَكَ اِنَّ عَذَابَكَ الْجِدَّ بِالْجِدَّ بِااْكُفَّارِ مُلْحِقٌ
யா அல்லாஹ் நிச்சயமாக நாங்கள் உன்னிடத்தில் உதவி தேடுகிறோம்.மேலும் உன்னிடத்தில் பாவமன்னிப்பு தேடுகிறோம்.மேலும் உன்னைக் கொண்டு ஈமான் கொள்கிறோம்.உன்னைக் கொண்டு நம்பிக்கை வைக்கிறோம்.உன்மீது நல்லவற்றை புகழ்கிறோம்.மேலும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.மேலும் உனக்கு மாறு செய்யமாட்டோம்.உனக்கு மாறு செய்கிறவர்களை விலகி கொள்கிறோம்.விட்டுவிடுகிறோம்.யா அல்லாஹ் உன்னையே வணங்குகிறோம்.மேலும் உனக்காக தொழுகிறோம்.ஸஜ்தா செய்கிறோம்.மேலும் உன்பால் ஓடி வருகிறோம்.உன்னுடைய கருணையை ஆதரவு வைக்கிறோம்.விரண்டோடி வருகிறோம்.உன் அருள் மீது நம்பிக்கை வைக்கிறோம்.உன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம்.நிச்சயமாக உன்னுடைய தண்டனையானது காபிர்களையே சூழ்வதாகும்.
(ஆதாரம்:ஸுனன் தஹாவி 1/177,தலைப்பு:باب القنوت فی الصلوة الفجر و غيرها கிதாபுத்துஆ லித்தப்ரானி பக்கம்:237,முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக் 3/31,தலைப்பு:باب القنوت ஹதீஸ் இலக்கம்:4984,அல்ஹாவி அல்கபீர் லில்மாவர்தி 2/355,முஸன்னப் இப்னு அபிஷைபா 4/518,فی قنوت الوتر من الدعاء ஹதீஸ் இலக்கம்:6965,அஷ்ஷரஹுல் கபீர் லி அப்தில் கரீமி ராஃபியி 4/250,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 2/210,211)
குனூத் துஆ
ருகூவிற்கு முன்பாக
قال عاصم بن سليمان الاحول رحمةالله عليه
سالت انس بن مالك رضي الله عنه عن القنوت فقال قد كان القنوت قلت قبل الركوع او بعده قال فان فلانا اخبرنی عنك قلت بعد الركوع فقال كذب انما قنت رسول الله ﷺ بعد الركوع شهرا
ஹஜ்ரத் ஆஸிம் இப்னு ஸுலைமானுல் அஹ்வல் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் நான் அனஸ் இப்னு மாலிக் ரளி அவர்களிடத்தில் குனூத் குறித்து கேட்டேன்.அவர்கள் கூறினார்கள் குனூத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்தது. பிறகு நான் கேட்டேன் ருகூவிற்கு முன்பாக அல்லது அதற்கு பிறகா அன்னார் கூறினார்கள் ருகூவிற்கு முன்பாக இன்ன நபர் ருகூவிற்கு பிறகு குனூத் என்கிறார் என்று கேட்டேன்.அன்னார் கூறினார்கள் அவர் கூறியது பொய்யாகும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிற்கு பிறகு ஒரு மாதகாலம் மட்டும் தான் ஓதினார்கள்.
(ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1/136,தலைப்பு:باب القنوت قبل الركوع و بعده ஸஹீஹ் முஸ்லிம் 1/237,தலைப்பு:باب استحباب القنوت فی جميع الصلوات )
عن ابي بن كعب رضي الله عنه ان رسول الله ﷺ كان يوتر بثلاث ركعات ......و يقنت قبل الركوع
உபை இப்னு கஃப் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று ரக்அத் வித்ரு தொழுதார்கள்.குனூத் ருகூவிற்கு முன்பாக ஓதினார்கள்.
(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/248,اختلاف الفاظ الناقلين لخبر ابی بن كعب ஸுனன் அபூதாவூத் 1/209,தலைப்பு:باب القنوت فی الوتر
عن عبد الله رضي الله عنه قال قنت رسول الله ﷺ فی الوتر قبل الركعة
அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்؛ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிற்கு முன்பாக வித்ரில் குனூத் ஓதுவார்கள்.
(ஆதாரம்:
ஸுனன் தாரகுத்னி பக்கம்:287,
ஹதீஸ் இலக்கம்:1647, ما يقرء فی ركعات الوتر و القنوت فيه, முஸன்னப் இப்னு அபீஷைபா 4/521,522 فی القنوت قبل الركوع او بعده ஹதீஸ் இலக்கம்:6984)
عن الاسود رحمةالله عليه ان عمربن الخطاب رضي الله عنه قنت فی الوتر قبل الركوع .....وفی رواية .....بعد القراءة قبل الركوع
அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் (ரளி)
அவர்கள் ருகூவிற்கு முன்பாக குனூத் ஓதினார்கள். மற்றொரு அறிவிப்பில் வருகிறது ருகூவிற்கு முன்பாக கிராஅத்திற்கு பிறகு (ஆதாரம் கியாமுல்லைல் லில்மர்வஜி பக்கம்:228,முஸன்னப் இப்னு அபீஷைபா 4/520,فی القنوت قبل الركوع او بعده ஹதீஸ் இலக்கம்:6972)
குனூத்திற்கு முன்பாக கையை உயர்த்துதல்
قال ابوعثمان كان عمر رضي الله عنه يرفع يديه فی القنوت
ஹஜ்ரத் அபூஉஸ்மான் அவர்கள் கறுகிறார்கள் ஹஜ்ரத் உமர் (ரளி) அவர்கள் குனூத்தில் தனது இருகைகளையும் உயர்த்தினார்கள்.
(ஆதாரம்: ஜுஸ்உ ரஃப்யில் யதைன் லில்புகாரி பக்கம்:146,ஹதீஸ் இலக்கம்:146,கியாமுல் லைல் லில்மர்வஜி பக்கம்:230,தலைப்பு:باب رفع الايدی عند القنوت அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 2/212,தலைப்பு باب رفع اليدين فی القنوت )
عن ابن مسعود رضي الله عنه انه كان يقرء فی اخر ركعة من الوتر قل هو الله احد ثم يرفع يديه فيقنت قبل الركعة
இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்؛ வித்ரின் ரக்அத்தின் இறுதியில் குல்ஹுவல்லாஹு அஹத் ஓதுவார்கள்.பிறகு இரு கைகளையும் உயர்த்துவார்கள்.ருகூவிற்கு முன்பாக குனூத் ஓதுவார்கள்.
(ஆதாரம்:ஜுஸ்உ ரஃப்உல் யதைன் லில்புகாரி பக்கம்:146,ஹதீஸ் இலக்கம்:163,முஸ்னத் இப்னுல் ஜஃத் பக்கம்: 332 ஹதீஸ் இலக்கம்:2277,முஸன்னப் இப்னு அபூஷைபா 4/531,فی رفع اليدين فی قنوت الوتر ஹதீஸ் இலக்கம்:7027,7028)
كان ابوهريرة رضي الله عنه يرفع يديه فی قنوته فی شهر رمضان
ஹஜ்ரத் அபூஹுரைரா ரளி அவர்கள் ரமளான் மாதத்தில் குனூத்தில் இருகைகளையும் உயர்த்துவார்கள்.
(ஆதாரம்:கியாமுல் லைல் லில்மர்வஜி பக்கம்:230,தலைப்பு:باب رفع الايدی عند القنوت அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 3/41,தலைப்பு:باب رفع اليدين فی فی القنوت முக்தஸர் கிதாபுல் வித்ர் லில்முக்ரீஜி 139,தலைப்பு:باب رفع الايدی عند القنوت )
No comments:
Post a Comment