Sunday, April 7, 2019

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை

   
ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்

தொடர்:9



 ஜும்ஆ தொழுகை

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுவது கட்டாய கடமையாகும்.நோயாளி,பயணி, பெண்கள்,குழந்தை,அடிமை பைத்தியம் இவர்களை தவிர அனைவரின் மீதும் ஜும்ஆவில் கலந்து கொள்வது அவசியமாகும்.
கலந்துகொள்ளவில்லையெனில் பெரும் பாவமாகும்.

وعن جابر رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال : " من كان يؤمن بالله واليوم الآخر ، فعليه الجمعة يوم الجمعة ، إلا مريض ، أو مسافر ، أو امرأة ، أو صبي ، أو مملوك . فمن استغنى بلهو أو تجارة استغنى الله عنه ، والله غني حميد "

ஜாபிர் (ரளி) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை அறிவிக்கிறார்கள்;

அல்லாஹ்வை கொண்டு மறுமை நாளைக் கொண்டு ஈமான் கொண்டவர் மீது வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை கடமையாகும்.எனினும்,நோயாளி அல்லது பயணி அல்லது பெண் அல்லது சிறுவர்  அல்லது அடிமை  (ஜும்ஆ கடமையில்லை) வீண்வேடிக்கை,வேலையில் ஈடுபட்டு அதனை மறந்திருப்பாரோ அவரைவிட்டு  அல்லாஹ் கவனத்தை திருப்பிவிடுவான்.அல்லாஹ் தேவையற்றவன் மிக புகழுக்குரியவன்.

(ஆதாரம் ஸுனன் தாரகுத்னி பக்கம்:273,தலைப்பு:باب من تجب عليه الجمعة ஹதீஸ் எண்:1560,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 3/184,தலைப்பு:باب من لا تلزمه الجمعة )

عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِقَوْمٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلًا يُصَلِّي بِالنَّاسِ ثُمَّ أُحَرِّقَ عَلَى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ بُيُوتَهُمْ

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ஜும்ஆவை விட்டு பின்தங்கியவர்கள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "ஒரு மனிதர் 
மக்களுக்கு தொழவைக்கும்படி ஏவி விட்டு  ஜும்ஆவை விட்டு பின்தங்கியவர்களையும் அவர்களின் வீடுகளையும் எரித்து விடும்படி 
என் மனம் நாடுகிறது".

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம், ஹதீஸ் இலக்கம்:1049
தலைப்பு:بَاب فَضْلِ صَلَاةِ الْجَمَاعَةِ وَبَيَانِ التَّشْدِيدِ )

ஜும்ஆவின் ஒழுக்கங்கள்

عن عبد الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا أراد أحدكم أن يأتي الجمعة فليغتسل

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அறிவிக்கிறார்கள்; 
உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுகைக்கு  வரும்போது குளித்துவரட்டும்! 

(ஸஹீஹ் முஸ்லிம் 1/279 பாடம்:ஜும்ஆ)


وَعَنْ سَمُرَةَ قالَ: قالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ تَوَضَّأَ يَوْمَ الجُمُعَةِ فَبِها وَنِعْمَتْ، وَمَن اغتسلَ فالغُسْل أفضَل

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸமுரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

ஜும்ஆ நாளில் உளு செய்தவருக்கு அது நல்லது.  குளித்தவருக்கு மிக சிறந்ததாகும்.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/57,தலைப்பு:باب فی الرخصة فی ترك الغسل يوم الجمعة ஸுனன் திர்மிதி 1/111,தலைப்பு:باب ما جاء فی الوضوء يوم الجمعة)

இந்த ஹதீஸ் ஏழு ஸஹாபாக்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1)ஸமூரா இப்னு ஜுன்துப் (ரளி) அவர்கள்

2)ஹஜ்ரத் அனஸ் (ரளி) அவர்கள்

3)ஹஜ்ரத் அபூஸயீத் குத்ரி (ரளி) அவர்கள்

4)ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள்

5)ஹஜ்ரத் ஜாபிர் (ரளி) அவர்கள்

6)ஹஜ்ரத் அப்துர்ரஹ்மான் ஸமுரா (ரளி)

7)ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரளி)


وعن أَبي عبدِالله سَلْمان الفارِسي  قَالَ: قَالَ رَسُولُ الله ﷺ: لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الجُمُعة وَيَتَطهّرُ مَا اسْتَطاعَ منْ طُهر وَيدَّهنُ منْ دُهْنِهِ أوْ يَمسُّ مِنْ طِيب بَيْته ثُمَّ يَخْرُجُ فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنينْ ثُمَّ يُصَلّي ما كُتِبَ له ُ ثُمَّ يُنْصِتُ إذَا تَكَلَّمَ الإمامُ إِلاَّ غُفِرَ لهُ مَا بَيْنَهُ وَبَيَن الجمُعَةِ الأُخْرَى

ஹஜ்ரத் ஸல்மான்  பார்ஸி (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அறிவிக்கிறார்கள்;

ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்ற வரை தூய்மையை பேணி எண்ணெய்யைத் தேய்த்து அல்லது தம் வீட்டில் உள்ள  நறுமணம் பூசி பிறகு ஜும்ஆ தொழுகைக்கு வெளியேறி (மஸ்ஜிதில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இருவருக்கு மத்தியில் பிரிவை உண்டாக்காமல் தமக்கு  விதிக்கப்பட்டுள்ளதை தொழுதுவிட்டு, இமாம் குத்பா ஓதும் பொழுது அமைதிகாத்து இருந்தால் அந்த  ஜும்ஆவிற்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/121,தலைப்பு:باب الدهن )


عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم في جمعة من الجمع يا معشر المسلمين إن هذا يوم جعله الله عيدًا فاغتسلوا وعليكم بالسواك


அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆவில் கூறினார்கள்  முஸ்லிம் சமுதாயமே! இன்றைய தினத்தை அல்லாஹ் உங்களுக்கு ஈத் பெருநாளாக ஆக்கியுள்ளான்.எனவே குளித்து கொள்ளுங்கள், மிஸ்வாக்கை கடைபிடியுங்கள்.

(ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 11/97 அல் முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 2/325,ஹதீஸ் எண்:3433)

ஜும்ஆவில் இரு பாங்கு

ஜும்ஆ நாளில் இரு பாங்கு சொல்லப்படுகிறது.மக்கள் பள்ளிக்கு வந்து நிதானமாக சுன்னத்தான தொழுகையை நிறைவேற்றும் அளவிற்கு 
முதல் பாங்கு,பயானுக்கு முன்பாக கூறப்படவேண்டும்.இரண்டாவது பாங்கு அரபி குத்பாவிற்கு முன்பாக கொடுக்கப்படவேண்டும்.

السائب بن يزيد قال كان النداء يوم الجمعة أوله إذا جلس الإمام على المنبر على عهد النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر رضي الله عنهما فلما كان عثمان رضي الله عنه وكثر الناس زاد النداء الثالث على الزوراء قال أبو عبد الله الزوراء موضع بالسوق بالمدينة

ஹஜ்ரத் ஸாயிப் இப்னு யஜீத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அபூபக்கர் (ரளி) உமர் (ரளி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது.உஸ்மான் (ரளி) அவர்களின் காலத்தில் மக்கள் பெருகியபோது கடைவீதியில் பாங்கு கொடுக்கும்படி ஆணைபிறப்பித்தார்கள். ஜவ்ரா எனும் இடத்தில் இந்த பாங்கு கொடுக்கப்பட்டது.இதன் பேரில் செயலானது நிரூபணமானது.

(ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1/125,தலைப்பு:باب التاذين عند الخطبة )

ஜும்ஆ தொழுகையின் ரக்அத்துகள்


சுன்னத்:4,பர்ளு:2,
சுன்னத்:4,சுன்னத்:2

صلاة الجمعة  ركعتان وصلاة الفطر وصلوة الأضحى ركعتان و صلوة السفر ركعتان  تمام غير قصر على لسان نبيكم عليه السلام

உமர் (ரளி) அவர்கள் கூறினார்கள்; ஜும்ஆவின் தொழுகை இரண்டு ரக்அத்,ஈத் தொழுகை இரண்டு ரக்அத் ஈத் அள்ஹா இரண்டு ரக்அத் பயணத் தொழுகை இரண்டு ரக்அத் இதில் குறைப்பது என்பது இல்லை முழுமையாக தொழுக வேண்டும்.இதனைதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாவினால் மொழிந்தார்கள்.

(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/209,عدد صلوة الجمعة ஸுனன் இப்னு மாஜா 1/74, தலைப்பு باب تقصير الصلوة فی السفر அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 2/180,ஹதீஸ் இலக்கம்:2943)



عَن عبدِ الله بنِ مسعودٍ أنه كان يصَلّي قبلَ الجُمعةِ أربعاً وبعدَها أربعا

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆவிற்கு முன்பும் பின்பும் நான்கு ரக்அத் தொழுது கொண்டிருந்தார்கள்.

(ஆதாரம்:அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 3/91,ஹதீஸ் எண்:3959,நஸபுர் ராயா லிஜ்ஜயீலயி 2/206)

عن علي رضي الله عنه انه قال من كان مصليا بعد الجمعة فليصل ستا

அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

ஜும்ஆவிற்கு தொழுபவர் ஆறு ரக்அத் தொழட்டும்!

(ஆதாரம் ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/234,தலைப்பு:باب التطوع بعد الجمعة كيف هو )

عن أبي هريرةَ قال: قال رسول الله صلى الله عليه وسلم مَن كانَ مِنكم مصَلّياً بعدَ الجمعةِ فَلْيُصَلّ أربعاً

அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்;

"உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழும் போது அதற்கு பிறகு நான்கு ரக்அத் தொழட்டும்! " என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/288,فی استحباب اربع ركعات)

عن سالم عن ابيه ان النبي ﷺ كان يصلی بعد الجمعة ركعتين 

ஸாலிம் (ரளி) அவர்கள் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆவிற்கு பிறகு இரண்டு ரக்அத் தொழுது கொண்டிருந்தார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/288)

குறிப்பு: ஜும்ஆவிற்கு முன்பாக நான்கு ரக்அத் ஜும்ஆவிற்கு பிறகு ஆறு ரக்அத் இதில் முதலில் நான்கு ரக்அத் பிறகு இரண்டு ரக்அத் ஒட்டுமொத்தமாoக ஆறுரக்அத்தாகும்.

(ஆதாரம்:
ஸஹீஹ் முஸ்லிம் 1/288, استحباب اربع ركعات)

ஜும்ஆ குத்பா

ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் நின்று இரு குத்பா கொடுப்பார்கள்.இரு குத்பாக்களின் நடுவில் சிறிது நேரம் அமர்வார்கள்.

عن ابن عمر رضي الله عنه قال كان النبي ﷺ يخطب خطبتين كان يجلس اذا صعد المنبر حتی يفرغ اراه المؤذن ثم يقوم فيخطب ثم يجلس فلا يتكلم ثم يقوم فيخطب 


ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு குத்பா செய்வார்கள்.மிம்பரில் ஏறிய பிறகு 
முஅத்தின் பாங்கை முடிக்கும் வரை   அமர்ந்திருப்பார்கள்.பிறகு எழுந்து நின்று குத்பா கொடுப்பார்கள்.பிறகு அமர்வார்கள்.பேசமாட்டார்கள்.
பிறகு எழுந்து நின்று குத்பா கொடுப்பார்கள்.

ஜும்ஆ குத்பா அரபி மொழியில்

ஜும்ஆ குத்பா அரபி மொழியில் செய்வது அவசியமாகும்.அரபி மொழியை தவிர வேறு மொழிகளில் குத்பா செய்வது ஹராமிற்கு நெருக்கமானது.இதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு.

يايها الذين امنوا اذا نودي للصلوة من يوم الجمعة فاسعوا الی ذكر الله

ஈமான் கொண்டவர்களே ஜும்ஆ நாளில் தொழுகைக்கு அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பால் விரையுங்கள் (சூரா ஜும்ஆ:9)

தப்ஸீர் கலையின் மேதை அபுல்பரகாத் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் இப்னு மஹ்மூத் அந்நஸபி ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்;

الی ذكر الله اي الی الخطبة عند الجمهور

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் திக்ர் என்பதைக் கொண்டு பெரும்பான்மையான அறிஞர்களின் குத்பா என்பதாகும்.(ஆதாரம்:தப்ஸுர் நஸபி 4/201,சூரா ஜும்ஆ)

இதனை வலுப்படுத்தும் ஹதீஸ்

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ فاذا خرج الامام طووا صحفهم و يستمعون الذكر 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இமாம் (குத்பாவிற்கு) வெளிவரும் போது வானவர்கள் தங்களின் பதிவேட்டினை சுருட்டிவிடுகின்றனர்.கவனத்துடன் கேட்கின்றனர்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/127,தலைப்பு:باب الاستماع الی الخطبة ஸஹீஹ் முஸ்லிம் 1/281 பாடம்:كتاب الجمعة)

குத்பா சுருக்கமாக இருக்க வேண்டும்

عن عمار بن ياسر رضي الله قال امرنا رسول الله باقصار الخطب

அம்மார் இப்னு யாஸர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குத்பா சுருக்கும்படி ஏவினார்கள்.

(ஆதாரம்:அல்முஸ்தத்ரக் லில்ஹாகிம் 1/584,الامر باقصار الخطب ஹதீஸ் எண்:1105)

அரபிமொழியில் ஜும்ஆ குத்பா என்பது நிரந்தரமான அமல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரபிமொழியில் நிரந்தரமாக குத்பா செய்துவந்தார்கள்.எனினும், அந்த நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குத்பாவில் அரபியல்லாதவர்களும் இருந்தனர்.அவர்களுக்கு தீனை எத்திவைக்கும் கடுமையான தேவை இருந்தும் கூட அரபிமொழியில் மட்டும்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்லம் அவர்கள் குத்பா செய்தார்கள்.இதே போன்று குலபாயே ராஷிதீன்கள் மற்ற ஸஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் அரேபிய தீபகற்பத்தை தாண்டி அனைத்து பகுதிகளிலும் பரவியது.மக்களுக்கு அரபிமொழியை  சிறிதும் கூட அறிந்திருக்கவில்லை.எனினும் குத்பா அரபியில்தான் செய்யப்பட்டது.எனவே அரபியில் குத்பா முஸ்லிம் சமூகத்தின் தொன்று தொட்டு காலங்காலமாக நடைமுறையில் உள்ள அமல் என்பது தெளிவாகிறது.ஆகவே குத்பா அரபியில் இருக்கவேண்டும்.


நல்லோர்களான முந்தைய அறிஞர்களின் தீர்ப்புகள்

و يشترط كونها بالعربية
இமாம் யஹ்யா இப்னு ஷரப் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; 
அரபி மொழியில் குத்பா இருப்பது நிபந்தனையாகும்.

(ஆதாரம்:கிதாபுல் அத்கார் லிந்நவவி 148,பாடம்:كتاب حمد الله تعالی )

و هل يشترط ان تكون الخطبة كلها بالعربية وجهان و الصحيح اشتراطه 

இமாம் அபுல்காஸிம் அப்துல்கரீம் இப்னு முஹம்மத் ராஃபியி அவர்கள் கூறுகிறார்கள்; 
குத்பா முழுவதும் அரபியில் இருப்பது நிபந்தனையா? இதில் இரு காரணங்கள் உள்ளது.சரியானது அரபியில் இருப்பது நிபந்தனையாகும்.

(ஆதாரம்:இத்திஹாஃப் ஸாதாத் முதகய்யன் லிஜ்ஜுபைதி 3/368)

من شروطها ما سبق و هو كونها بالعربية 

ஷைகுல் இஸ்லாம் அபூயஹ்யா ஜக்கரிய்யா அன்சாரி அவர்கள் கூறுகிறார்கள்; (ஜும்ஆ தொழுகையின்) நிபந்தனைகளில் அரபியில் குத்பா இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னால் கூறப்பட்டுள்ளது.

(ஆதாரம்:அஸன் மதாலிப் ஃபி ஷரஹி ரவ்ளித்தாலிப் 1/258)

و عربی بودن نیز بجہت عمل مستمر مسلمین در مشارق و مغارب باوجود آنکہ در بیسارے از اقالیم مخاطباں عجمی بودند 

இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் அஹ்மத் இப்னு அப்துர் ரஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; குத்பா அரபியில் இருக்கவேண்டும்.ஏனெனில் கிழக்கு மேற்கு முஸ்லிம்களின் நிரந்தரமான அமலாக உள்ளது.அனைத்து நாடுகளில் அஜமிகள் இருப்பதுடன் அரபியில் குத்பா நடைமுறையில் இருந்தது.

(ஆதாரம்:முஸஃப்பா ஷர்ஹு முஅத்தா 154)


ولا شك فی ان الخطبة بغير العربية خلاف السنة المتوارثة من النبي ﷺ و الصحابة فيكون مكروها تحريما

பிற்கால உலமாக்களில் சிறந்தவர் அல்லாமா அபுல்ஹஸனாத் அப்துல்ஹய் லக்னவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; அரபி அல்லாத மற்ற மொழியில் குத்பா என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் தோழர்களின் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ள சுன்னத்துக்கு மாற்றமானது என்பதில் சந்தேகமில்லை.

(ஆதாரம்:உம்ததுர் ரிஆயா அலா ஷர்ஹில் விகாயா 1/200)



குத்பாவின் போது தொழுவது, பேசுவது தடுக்கப்பட்டது.


عن ابن عمر رضي الله عنه قال سمعت النبي ﷺ يقول اذا دخل احدكم المسجد و الامام علی المنبر فلا صلاة و لا كلام حتی يفرغ الامام


ஹஜ்ரத் இப்னு உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை கேட்டேன் உங்களில் ஒருவர் மஸ்ஜிதில் நுழையும் போது இமாம் மிம்பரில்(குத்பாவிற்கு) இருந்தால் அவர் (குத்பா) முடிக்கும் வரை தொழுவது பேசுவது இல்லை.

(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் லில்ஹைஸமி 2/407,தலைப்பு:باب فيمن يدخل المسجد و الامام يخطب ஹதீஸ் எண்:3120,ஜாமிஉல் அஹாதீஸ் லிஸ்ஸுயூத்தி 3/114,ஹதீஸ் எண்:1879)

فان لم يجد الامام خرج صلی ما بداله و ان وجد الامام قد خرج جلس فاستمع و انصت حتي يقضي الامام جمعته و كلامه


ஹஜ்ரத் நபீஷா அல்ஹுதலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்

இமாம் (குத்பாவிற்கு) வெளியேறவில்லையெனில் தோதுவாக இருந்தால் தொழுது கொள்ளலாம்.இமாம் (குத்பாவிற்கு) வெளியேறிவிட்டால் அவர் அமர்ந்து கொள்ளட்டும்! கவனமாக குத்பாவை செவியேற்கட்டும்! இமாம் குத்பாவை,தொழுகையை நிறைவு செய்யும் வரை அமைதியாக இருக்கட்டும்!

(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் 15/300,ஹதீஸ் எண்:20599,காயதுல் மக்ஸத் ஃபி ஜவாயிதில் முஸ்னத் லில்ஹைஸமி 1/1154,தலைப்பு:باب حقوق الجمعة من الغسل و غيره )

கிராமங்களில் ஜும்ஆ தொழுகை இல்லை


ஜும்ஆ தொழுகைக்கு நகரம் என்பது நிபந்தனையாகும்.கிராமங்களில் ஜும்ஆ இல்லை.இதற்கான ஆதாரங்களை  இனி பார்ப்போம்!

அல்லாஹுதஆலா கூறுகிறான் 

يايها الذين امنوا اذا نودي للصلوة من يوم الجمعة فاسعوا الی ذكر الله و ذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون 


ஈமான் கொண்டவர்களே! ஜும்ஆ நாளில் தொழுகைக்கு அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பால் விரையுங்கள் வியாபாரத்தை விட்டுவிடுங்கள் நீங்கள் அறிந்திருந்தால் உங்களுக்கு மிக சிறந்தது.
(சூரா ஜும்ஆ 9)

இந்த வசனத்தில் ஜும்ஆ பாங்கை கேட்டவுடன் கொடுக்கல், வாங்கல் விட்டுவிடவும் என்பதாக கட்டளையிடப்பட்டுள்ளது.ஜும்ஆ கொடுக்கல் வாங்கல் சூடுபிடிக்கும் இடத்தில் நடக்கும் என்பதானது சுட்டிக்காட்டப்படுகிறது.எதார்த்தம் என்னவெனில் கிராமங்கள் கொடுக்கல் வாங்கல் வியாபாரத்திற்குரிய இடமில்லை.மாறாக வியாபாரமானது பெரும் நகரங்களில் பெரும் ஊர்களில் நடைபெறும்.ஆக ஜும்ஆ கிராமங்களில் இல்லை என்பதை அறியமுடிகிறது.

عن عاشة رضي الله عنها زوج النبيﷺ قالت كان الناس ينتابون الجمعة من منازلهم و العوالی


ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் (மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப்பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங்களிலிருந்தும் மக்கள் ஜும்ஆவிற்கு  முறைவைத்து வந்து கொண்டிருந்தார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/123,தலைப்பு:باب الرخصة ان لم يحضر الجمعة فی المطر )

மதீனாமுனவ்வராவின் மேட்டுப்பகுதிகள் மற்றும் கிராமங்களில் ஜும்ஆ நடைபெறாது.அவ்வாறு இருந்தால் முறைவைத்து வராமல் அனைவரும் ஒட்டுமொத்தமாக வந்திருப்பார்கள்.கிராமங்களில் ஜும்ஆ இல்லை என்பதை இதன் மூலமும் அறியமுடிகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து குபாவில் பதினான்கு அல்லது இருபது நாட்கள் தங்கியிருந்தார்கள்.அந்த நாட்களில் ஜும்ஆ வந்தது.எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அங்கு ஜும்ஆ தொழுததாக அல்லது மற்றவர்களுக்கு கட்டளையிட்டதாக ஹதீஸ்களில் வரவில்லை.எனவே கிராமங்கள் ஜும்ஆ தொழுகைக்கு உரிய இடமில்லை என்பதை அறியமுடிகிறது.

(ஆதாரம்: ملخصا بذل المجهود للشيخ السهارنپور) 2/170)

لا جمعة و لا تشريق الا فی مصر جامع


அலி ரளி அவர்கள் கூறினார்கள்; ஜும்ஆ தொழுகை ஈத் தொழுகை பெரும் நகரங்களில் தவிர கிடையாது.

(ஆதாரம்:அல்முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக் 3/70,தலைப்பு:باب القری الصغار ஹதீஸ் எண்:5189,முஸ்னத் இப்னுல் ஜஃத் பக்கம்:438,ஹதீஸ் எண்:2990,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 3/179,தலைப்பு:باب العدد الذين اذا كانوا فی قرية وجبت عليهم الجمعة )

No comments:

Post a Comment