ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர்:10
ஜனாஸா தொழுகை முறை
ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்
முதல் தக்பீருக்கு பிறகு ஸனா, இரண்டாவது தக்பீருக்கு பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது தரூத் ஓதுவது,மூன்றாவது தக்பீருக்கு பிறகு மரணித்தவருக்கு துஆ செய்வது,நான்கு தக்பீருக்கு பிறகு ஸலாம் கொடுப்பது.
عن ابی هريرة رضي الله ان رسول الله ﷺ نعی النجاشی فی اليوم الذي مات فيه و خرج بهم الی المصلی فصف بهم و كبر عليهم اربع تكبيرات
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நஜ்ஜாஷி மன்னர் மரணித்த செய்தியை தோழர்களுக்கு அறிவிப்பு செய்தார்கள்.பிறகு
சற்று முன்னால் நகர்ந்தார்கள்.மக்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்து நின்றதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.)
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/178,தலைப்பு:باب التكبير علی الجنازة اربعا )
عن الشعبی قال التكبير الاولی علی الميت ثناء علی الله و الثانية صلاة علی النبي ﷺ و الثالثة دعاء للميت و الرابعة تسلي
பிரபல்யமான தாபியீ ஷஃபி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ஜனாஸா தொழுகையில் முதல் தக்பீருக்கு பிறகு ஸனா இரண்டாவது தக்பீருக்கு பிறகு தரூத் ஓதுவது மூன்றாவது தக்பீருக்கு பிறகு மரணித்தவருக்கு துஆ செய்வது நான்காவது தக்பீருக்கு பிறகு ஸலாம் கொடுப்பது.
(ஆதாரம்:முஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் 3/316,தலைப்பு:باب القراءة و الدعاء فی الصلاة علی الميت)
عن ابراهيم النخعی رحمت الله عليه قال الاولی الثناء علی الله و الثانية صلوة علی النبي ﷺ و الثالثة دعاء للميت و الرابعة سلام تسلم
மதிப்பிற்குரிய தாபியி ஹள்ரத் இப்ராஹீம் அந்நகயீ (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்; ஜனாஸா தொழுகையில் முதல் தக்பீருக்கு பிறகு அல்லாஹ்வை புகழ்ந்து ஸனா ஓதுவது, இரண்டாவது தக்பீருக்கு பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது தரூத் ஓதுவது,மூன்றாவது தக்பீருக்கு பிறகு மரணித்தவருக்கு துஆ செய்வது,நான்காவது தக்பீருக்கு பிறகு ஸலாம் கொடுப்பது.
(ஆதாரம்:கிதாபுல் ஆஸார் லி அபிஹனீபா பிரிவாயதில் இமாம் முஹம்மத் பக்கம்:48,தலைப்பு:باب الصلوة علی الجنازة ,இலக்கம்:238)
ஸனா ஓதுவது
عن ابی سعيد رضي الله عنه قال كان رسول الله ﷺ اذا افتتح الصلوة قال سبحنك اللهم و بحمدك و تبارك اسمك و تعالی جدك ولا اله غيرك
அபூஸயீத் குத்ரி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உச்சரிப்பு:அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா, அல்லஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான்.
பொருள் : இறைவா! எங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும் இறந்து விட்டவர்களுக்கும் இங்கு வந்திருப்பவர்களுக்கும் வராதவர்களுக்கும் எங்களில் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக. இறைவா! எங்களில் எவரை நீ உயிர் வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக. மேலும் எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக.
ஆரம்பிக்கும் போது ஸுப்ஹானகல்லாஹும்ம வபிகம்திக(ஸனா)வை இறுதி வரை ஓதுவார்கள்.
(ஆதாரம்:ஸுனனுன்நஸாயீ 1/143,தலைப்பு:باب نوع اخر من الذكر )
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களின் அறிவிப்பில் ஸனாவில் و جل ثناؤك (வ ஜல்ல ஸனாஉக)
ان من احب الكلام الی الله عز وجل ان يقول العبد سبحنك اللهم و بحمدك و تبارك اسمك و تعالی جدك و جل ثناؤك ولا اله غيرك
கருத்து:அல்லாஹ்விடத்தில் மிகவும் விருப்பான சொல்லானது ஓர் அடியான் ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வ தபாரகஸ்முக வ தஆலா ஜத்துக வ ஜல்ல ஸனாஉக வ லா இலாஹ ஙைருக
(ஆதாரம்:முஸ்னதுல் பிர்தவ்ஸ் லிஅபீ ஷுஆஉத் தைலமி 1/214,ஹதீஸ் இலக்க எண்:819)
தரூத் ஷரீஃப் ஓதுவது
ஜனாஸா தொழுபவர் இரண்டாவது தக்பீருக்கு பிறகு தரூத் ஷரீஃப் படிக்கவேண்டும்.தரூத் இப்ராஹீம் மிக சிறந்தது.எனினும் இதனை தவிர வேறு ஓதுவதற்கும் அனுமதி உண்டு.
மரணித்தவருக்கு துஆ செய்வது
மரணித்தவர் பருவ வயது அடைந்தவராக இருந்தால் அவருக்காக ஓதும் துஆ
اللهم اغفر لحينا و ميتنا و شاهدنا و غاءبنا و صغيرنا و كبيرنا و ذكرنا و انثانا اللهم من احييته منا فاحيه علی الاسلام و من توفيته منا فتوفه علی الايمان
அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா, அல்லஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான்.
இறைவா! எங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும் இறந்து விட்டவர்களுக்கும் இங்கு வந்திருப்பவர்களுக்கும் வராதவர்களுக்கும் எங்களில் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!
இறைவா! எங்களில் எவரை நீ உயிர் வாழச் செய்கிறாயோ அவரை
இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக. மேலும் எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/198,தலைப்பு:باب ما يقول فی الصلوة علی الميت ,முஸன்னப் அப்துர் ரஜ்ஜாக் 3/313, தலைப்பு:باب القراءة و الدعاء فی الصلاة علی الميت இலக்கம்:6447)
பருவ வயது அடையாதவராக இருந்தால்
السقط يصلی عليه و يدعی لوالديه بالمغفرة و الرحمة
பருவ வயது அடையாதவருக்கும் ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்படும்.அவனின் பெற்றோர்களுக்கு அருள் பாவமன்னிப்பு வேண்டி துஆ செய்யப்படும்.
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 2/97,தலைப்பு:باب المشي امام الجنازة )
ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் மரணித்த சிறுவருக்கு ஜனாஸா தொழுகையில் செய்த துஆ
اللهم اجعله لنا سلفا و فرطا و دخرا
(ஆதாரம்:அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 4/10,தலைப்பு:باب السقط يغسل و يكفن و يصلی عليه )
இதே போன்று ஹள்ரத் ஹஸன் பஸரி (ரஹ்) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ்களிலும் குறிப்பான துஆ நிர்ணயிக்கப்படவில்லை.நமது முன்னோர்களிடமிருந்தும் பல தரப்பட்ட வார்த்தைகளுடன் வந்துள்ளது.இதனால் புகஹாக்கள் அனைத்து அறிவிப்பையும் ஆராய்ந்து இரத்தின சுருக்கமாக தொகுத்துள்ளார்கள்.
اللهم اجعله لنا فرطا و اجعله لنا اجرا و دخرا و اجعله لنا شافعا و مشفعا
(ஆதாரம்:அல்ஹிதாயா மஅ நஸபிர் ராயா 2/279,பிரிவு:فصل فی الصلاة علی الميت ,அல்முஹீதுல் புர்ஹானீ 2/328,பிரிவு:الثانی و الثلاثون فی الجناءز ,கன்ஜுத்தகாயிக் லிந்நஸஃபி மஅல் பஹ்ரிர் ராயிக் 2/322,பிரிவு:السلطان احق بصلاته )
சிறுமியின் ஜனாஸாவாக இருந்தால்
இந்த துஆவில் اِجْعَلْهُ (இஜ்அல்ஹு) என்பதற்கு பதிலாக اِجْعَلْهَا (இஜ்அல்ஹா) என்றும் شَافِعََا وَ مُشَفَّعََا என்பதற்கு பதிலாக شَافِعَةََ وَّ مُشَفَّعَةََ என்பதாக ஓதவேண்டும்.
குறிப்பு:ஹதீஸ்களில் பல்வேறு துஆக்கள் வந்துள்ளது.துஆக்கள் மனனம் செய்யவில்லையெனில் விரும்பும் துஆ ஓதலாம் என்பதாக புகஹாக்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
فان كان لا يحسن ياتی باي دعاء شاء
இந்த துஆக்கள் சரியாக ஓத தெரியவில்லையெனில் விரும்பும் துஆ ஓதிக்கொள்ளலாம்.
(ஆதாரம் அல்பதாவல் ஹிந்திய்யா 1/164,தலைப்பு:الصلاة علی الميت )
ஸலாம் கொடுப்பது
و قال رسول الله ﷺ صلوا علی النجاشی سمّاهَا صلوة ليس فيها ركوع ولا سجود ولا يتكلم فيها و فيها تكبير و تسليم
நஜ்ஜாஷி அவர்களுக்காக ஜனாஸா தொழுங்கள் என்றும் அதற்கு தொழுகை
என்பதாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரிட்டார்கள்.
எனினும் அதில் ருகூஉ ஸுஜுது இல்லை. பேசுவதும் கூடாது.
தக்பீரும் ஸலாமும் உண்டு.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/176,தலைப்பு:سنة الصلاة علی الجنازة )
ஹஜ்ரத் இப்ராஹிம் ஹிஜ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அவ்ஃபா (ரளி) அவர்கள் தனது மகனாருக்கு ஜனாஸா தொழவைத்தார்கள்.நான்கு தக்பீர் கூறினார்கள்.பிறகு வலது,இடது புறம் ஸலாம் கொடுத்தார்கள்.
(ஆதாரம்:அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 4/43 தலைப்பு:باب من قال يسلم عن يمينه و عن شماله)
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;
التسليم علی الجنازة مثل التسليم فی الصلوة
ஜனாஸாவின் ஸலாம் மற்ற
தொழுகைகளின் ஸலாத்தை போன்றதாகும்.
(ஆதாரம்:அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 4/43,தலைப்பு:باب من قال يسلم عن يمينه و عن شماله ,தல்ஹீஸுல் ஹபீர் லி இப்னி ஹஜர் 2/124,இலக்கம்:771)
பள்ளிக்குள் ஜனாஸா தொழுகை கூடாது
عن ابی هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ من صلی علی جنازة فی المسجد فلا شیء له
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்
மஸ்ஜிதில் ஜனாஸா தொழுகை தொழுதவருக்கு கூலி இல்லை.
(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 2/98,தலைப்பு:باب الصلاة علی الجنازة فی المسجد,ஸுனன் இப்னுமாஜா 1/109,தலைப்பு:ياب ما جاء فی الصلوة علی الجنازة فی المسجد ,முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக் 3/334, தலைப்பு:باب الصلاة علی الجنازة فی المسجد இலக்கம்:6606)
عن كثير بن عباس رضي الله عنه قال لاعرفن ما صليت علی جنازة فی المسجد
கஸீர் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;
எந்த ஜனாஸா தொழுகையும் மஸ்ஜிதில் தொழப்படவில்லை என்பதை நான் நன்கு அறிவேன்.
(ஆதாரம்:முஸன்னப் அப்துர் ரஜ்ஜாக் 3/344, தலைப்பு:باب الصلوة علی الجنازة فی المسجد இலக்கம்:6607)
ஜனாஸா தொழுகையில் முதல் தக்பீரில் மட்டும் கையை உயர்த்துதல்
عن ابی هريرة رضي الله عنه ان رسول الله صلی الله كبر علی الجنازة فرفع يديه فی اول تكبيرة
ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸா தொழுகைக்காக தக்பீர் கூறினார்கள்.மேலும் தனது கையை முதல் தக்பீரில் உயர்த்தினார்கள்.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/206,தலைப்பு:باب ما جاء فی رفع اليدين علی الجنازة ,ஸுனன் தாரகுத்னி 2/75,பாடம்:كتاب الجنائز தலைப்பு:باب وضع اليمنی علی اليسری )
عن ابن عباس
رضي الله عنه ان رسول الله ﷺ كان يرفع يديه علی الجنازة فی اول تكبير ثم لا يعود
ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸா தொழுகையில் முதல் தக்பீரில் மட்டும் தனது இருகைகளை உயர்த்துவார்கள்.பிறகு உயர்த்தமாட்டார்கள்.
(ஆதாரம்:ஸுனன் தாரகுத்னி 2/75,பாடம்:كتاب الجنائز தலைப்பு:باب وضع اليمنی علی اليسری )
عن موسی ابن دهقان قال رايت ابان بن عثمان يصلی علی الجنازة فكبر اربعا يرفع يديه فی اول التكبيرة
மூஸா இப்னு திஹ்கான் கூறுகிறார்கள் நான் (மதீனாவின் அமீர்) அபான் இப்னு உஸ்மான் அவர்களை பார்த்தேன். அவர் நான்கு தக்பீர் கூறினார்.முதல் தக்பீரில் கைகளை உயர்த்தினார்.
(ஆதாரம்:ஜுஜ்உ ரஃபயில் யதைன் லில்புகாரி பக்கம்:156,இலக்கம்:186)
ஜனாஸா தொழுகையில் மெதுவாக ஓதவேண்டும்
ஹள்ரத் அபூஉமாமா இப்னு ஸஹ்ல் அவர்களிடமிருந்து ஜனாஸா தொழுகையின் சுன்னத்தான வழிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் سرََّا فِی نَفْسِهِ மெதுவாக ஓதினார்கள் என வந்துள்ளது.
(ஆதாரம்:அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ 4/39,தலைப்பு:باب القرائة فی صلاة الجنازة )
عن جابر رضي الله عنه قال ما اباح لنا رسول الله صلی الله عليه و سلم ولا ابابكر و لا عمر رضي الله عنه فی شيء ما اباحوا فی الصلوة علی الميت
ஹஜ்ரத் ஜாபிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூபக்கர் (ரளி) அவர்கள், உமர் (ரளி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் எதையும் நமக்கு நிர்ணயம் செய்யவில்லை.
(ஆதாரம்:ஸுனன் இப்னு மாஜா 1/108,தலைப்பு:باب ما جاء فی الدعاء فی الصلاة علی الجنازة )
இந்த ஹதீஸில் வருகிற வாசகம்; وقفت عليه باح ای جهر فالله اعلم குறித்து
ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் கண்ணோட்டம் எனது ஆய்வின் பேரில் بَاحَ என்பதின் கருத்தானது جَهَرَ என்பதாகும்.
ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,அபூபக்கர் (ரளி) அவர்கள், உமர் (ரளி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் சப்தமாக ஓதவில்லை என்பதை அறியமுடிகிறது.
காயிப் ஜனாஸா இல்லை
ஜனாஸா தொழுகைக்கு மைய்யத்தானது முன்னால் இருப்பது அவசியமாகும்.மைய்யத் முன்னால் இல்லையெனில் காயிப் ஜனாஸா அனுமதியில்லை.இதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் முதற்கொண்டு இதுவரை உம்மத்தின் நடைமுறை ஜனாஸா தொழுகைக்கு மைய்யத் முன்னால் இருக்கவேண்டும்.
இந்த விஷயத்தில் நாம் தெளிவுப்படுத்த வேண்டிய ஒரு விஷயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நஜ்ஜாஷி அவர்களுக்கு ஜனாஸா தொழ வைத்தார்கள் இது குறித்த உண்மை நிலை என்ன? இதற்கு காயிப் ஜனாஸா என்று சொல்லப்படுமா? இல்லையா?
நஜ்ஜாஷி அவர்களின் ஜனாஸா தொழுகை குறித்த அனைத்து அறிவிப்புகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது இது காயிப் ஜனாஸா இல்லை என்பது தான் தெளிவாகிறது.மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்பாக முஃஜிஸா எனும் அற்புதமாக ஹஜ்ரத் நஜ்ஜாஷி அவர்களின் அவர்களின் மைய்யத் காட்டப்பட்டது.ஜனாஸா முன்னால் இருப்பதாக தான் ஸஹாபாக்களும் எண்ணினர்.இது குறித்த அறிவிப்புகளும் ஆய்வாளர்களின் விளக்கங்களும் தரப்படுகிறது.
عن عمران بن حصين رضي الله عنه ان رسول الله ﷺ قال ان اخاكم النجاشي توفي فصلوا عليه قال فصف رسول الله ﷺ و صففنا خلفه فصلی عليه و ما نحسب الجنازة الا موضوعة بين يديه
ஹள்ரத் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
உங்களின் சகோதரர் நஜ்ஜாஷி மரணித்துவிட்டார் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள்.எனவே அவருக்கு ஜனாஸா தொழுங்கள் என்றார்கள்.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னால் நின்றார்கள்.நாங்கள் பின்னால் நின்றோம்.அன்னார்,அவருக்கு தொழவைத்தார்கள்.ஜனாஸா எங்களுக்கு முன்னால் இருப்பதாக தான் எண்ணிணோம்.
(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் 15/98 இலக்கம்:19890)
மற்றோர் அறிவிப்பில் வரும் வாசகம்
و هم لا يظنون الا ان جنازته بين يديه
ஸஹாபாக்கள்,ஜனாஸா முன்னால் இருப்பதாக தான் எண்ணினர்.
(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு ஹிப்பான் பக்கம்:872,தலைப்பு:ذكر البيان بان المصطفی ﷺ نعی الناس النجاشی الخ இலக்கம்:3102, அத்தம்ஹீத் லி இப்னி அப்துல் பர் 3/140, அல்இஸ்தித்கார் லி இப்னி அப்துல் பர் 3/28,பாடம்:كتاب الجنائز)
இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிச்சிறப்பாக ஏசியா நாடு திரையின்றி முன்னால் காட்டப்பட்டது.உதாரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்பாக மூத்தா போரின் முழு தோற்றமும் முன்னால் காட்டப்பட்டது.ஜைத் இப்னு ஹாரிஸா (ரளி) அவர்களிடத்தில் கொடி உள்ளது.அவர் ஷஹீத் இது அல்லாத பல்வேறு விஷயங்களை அப்போது கூறினார்கள்.
(ஆதாரம்:நஸபுர்ராயா 2/292)
இதே போன்று மிஃராஜிலிருந்து திரும்பிய போது மக்காவாசிகள் பைத்துல் முகத்தஸ் குறித்து கேள்விகள் எழுப்பினர்.அப்போது பைதுல் முகத்தஸ் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் காட்டப்பட்டது.அன
ைத்து திரைகளும் அகற்றப்பட்டது.
(ஆதாரம்:அத்தம்ஹீத் 3/138)
ஹள்ரத் முஆவியா இப்னு முஆவியா லைஸி (ரளி) அவர்கள் மரணித்த போது ஜிப்ரயீல் அலை அவர்கள்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து அவருக்கு தொழவைப்பதை தாங்கள் விரும்புகிறீர்களா? என கேட்டார்கள்.அன்னார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆமாம்' என்றார்கள்.அப்போது ஹள்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தனது இறக்கையை பூமியில் அடித்தார்கள்.எனவே ஹள்ரத் முஆவியா (ரளி) அவர்களின் ஜனாஸா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்பாக தோன்றியது.அன்னார் அவருக்கு ஜனாஸா தொழுகவைத்தார்கள்.
(ஆதாரம்: முஸ்னத் அபூயஃலா 7/258)
இதே போன்று தான் ஹள்ரத் நஜ்ஜாஷியின் ஜனாஸாவும் முன்னால் தோன்றியது.
இமாம் இப்னு அப்துல்பர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்;
و الله اعلم ...... رفعت له جنازته كما كشف له عن بيت المقدس حين سالته قريش عن صفته
ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் குரைஷி மக்கள் வினா தொடுத்த போது பைத்துல் முகத்தஸ் முன்னால் காட்டப்பட்டதை போன்று நஜ்ஜாஷியின் ஜனாஸா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் காட்டப்பட்டது.
(ஆதாரம்:அத்தம்ஹீத் லி இப்னி அப்துல் பர் 3/138)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஸஹாபாக்களில் பலர் தூரமான நாடுகளில் மணித்தனர்.ஆனால் அன்னார் அவர்கள் ஒருவருக்கும் காயிப் ஜனாஸா தொழவில்லை.இதே போன்று குலபாயே ராஷிதீன்கள் அவர்களின் காலத்தில் எவருக்கும் காயிப் ஜனாஸா தொழவில்லை என்பதன் மூலம் காயிப் ஜனாஸா சரியில்லை என்பதை புரியமுடிகிறது.
ஹள்ரத் நஜ்ஜாஷி அவர்களுக்கு தொழ வைத்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் உரித்தானது.மார்க்க அறிஞர்களும் இதனை ஏற்கின்றனர்.
(1)இமாம் யூசூப் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு அப்துல் பர்
(ஆதாரம்:அத்தம்ஹீத் லி இப்னி அப்துல் பர் 3/137,138)
(2)அல்லாமா அப்துர் ரஹ்மான் அல்ஜஜீரி
(ஆதாரம்:கிதாபுல் பிக்ஹ் அலல் மதாஹிபுல் அர்பஆ 1/474,தலைப்பு:شروط صلوة الجنازة )
(3)இமாம் அபூஸுலைமான் ஹம்து இப்னு முஹம்மத் இப்னு இப்ராஹீம் அல்கத்தாபி
(ஆதாரம்:முஆலிமுஸ்ஸுனன் லில்கத்தாபி 1/270)
No comments:
Post a Comment