Tuesday, August 10, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/

 

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/ தொடர்:12

ஸஹாபாக்களின் காலத்திற்கு பிறகு தக்லீத் 

மூன்றாவது நூற்றாண்டில் 
தக்லீத் அனுமதிக்கப்பட்டு இருந்திருந்தால் பொற்காலத்தில் அது நிகழ்ந்திருக்க வேண்டும்.நான்கு நூற்றாண்டிற்கு முன்பாக நடைமுறையில் இல்லை.அதன் பிறகு உருவான பித்அத்தாகும்.

பதில்
நாம் இது குறித்து சுருக்கமாக வரலாற்று நூல்களில் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்கின்றோம்.நான்கு நூற்றாண்டிற்கு முன்பாகவும் குறிப்பிட்ட இமாமை,குறிப்பிட்ட மத்ஹபை பின்பற்றும் வழமை இருந்துள்ளது.தலைசிறந்து விளங்கிய ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூட தக்லீத் செய்பவர்களாக இருந்துள்ளனர்.

1)காளி இஸ்மாயில் இப்னு நஸபி கன்தி (ரஹ்) (மரணம்:164) பிக்ஹில் இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களை பின்பற்றுபவர்.மிஸ்ரு தேசத்தின் நீதிபதியாக இருந்தார்.(அல்ஜவாஹிருல் முளீயா 1/16)

2)இமாம் லைஸ் இப்னு ஸஃத் (ரஹ்) (மரணம்:175) அதிகமான மார்க்க ஞானம்,அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவர்.பலமானவர்,
நம்பகமானவராக இருந்தார். (தஹ்தீபுத் தஹ்தீப் 8/461) அக்காலத்தில் மிஸ்ர் தேசத்தின் பெரிய முஃப்தியாக விளங்கினார்.(தஹ்தீபுல் அஸ்மா வல்லுஙாகத் 1/74) நவாப் ஸித்தீக் ஹஸன் கான் எழுதியுள்ளார்:ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்.(இத்ஹாஃப் பக்கம்:237)

3)இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) (மரணம்:181) இமாம், பேரறிஞர்,ஹதீஸ் துறையில் அல்ஹாபிழ்,இஸ்லாத்தின் ஆசான் (தத்கிரதுல் ஹுஃப்பாள் 1/353) 
என்னிடத்தில் உள்ள பிக்ஹ் எனும் மார்க்க ஞானம் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டது.(தாரீக் பக்தாத் 1/355,மனாபிக் முவஃப்பிக் 1/226)
 அல்லாமா அபுல் வலீத் பாஜி மாலிகி கூறுகிறார்:இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் தோழர்களில் முகல்லிதீன்களில் இமாம் இப்னு முபாரக் உள்ளார்.(ஷர்ஹு முஅத்தா 7/300) இமாம் ஸத்ருல் அயிம்மா மக்கி,மெளலா அஹ்மத் இப்னு முஸ்தஃபா (மரணம்:962) எழுதியுள்ளார்:ஹனபி இமாம்களில் ,இமாம் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களும் ஒருவராக இருக்கிறார்கள்.
(மனாகிப் முவஃப்பிக் 2/133,மிஃப்தாஹுஸ்ஸஆதா 2/112)

4) இமாம் வகீஃ இப்னுல் ஜர்ராஹ் (மரணம்:197) இமாம்,ஹதீஸ் துறையில் ஹாபிழ்,பலமானவர் (தத்கிரா 1/282) இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் ஆய்வின்படி தீர்ப்பளித்துக் கொண்டிருந்தார்.
(ஜாமிஉல் பயான்,2/149) 
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் சொல்லின்படி தீர்ப்பளித்தார்கள் (தத்கிரா 1/282,தஹ்தீபுத் தஹ்தீப் 11/127) சுருக்கம் என்னவெனில் இமாம் வகீஃ (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் மாணவராகவும், அன்னாரின் கருத்து,சொல்லைக் கொண்டு தீர்ப்பளிப்பவராகவும் விளங்கினார். 

5) இமாம் யஹ்யா இப்னு ஸஃத் (ரஹ்) (மரணம்:198)அவர்கள் மார்க்க கல்வியில் இமாமாக,ஹதீஸ் துறையில் ஹாபிழ்களின் தலைவராக திகழ்ந்தார்.
(தத்கிரா 1/274) அன்னார் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் சொல்லின் படி தான் தீர்ப்பளித்தார்.(தத்கிரா 1/282,தஹ்தீப் தஹ்தீப் 10/450,அல்ஜவாஹிருல் முளீயா 2/209) 
யஹ்யா இப்னு ஸயீதுனில் கத்தான் (ரஹ்) அவர்களே கூறுகிறார்:அல்லாஹ்வை (அருட்கொடைகளை) பொய்ப் படுத்துவதில்லை.இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கருத்தை விட சிறந்ததை பார்த்ததில்லை.சந்தேகமின்றி அவரிடத்திலிருந்து அதிகமான கருத்துக்களை எடுத்துள்ளேன்.
(தாரீஹ் பக்தாத் 13/354)

6)இமாம் யஹ்யா இப்னு ஜகரிய்யா இப்னு அபூஜாயிதா (ரஹ்) (மரணம்:182) ஹதீஸ் துறையில் ஹாபிழ்,உறுதிமிக்கவர்,வலுவானவர் மார்க்க விற்பன்னராகவும் திகழ்ந்தார்.(தத்கிரா 1/246),அன்னாரும் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களை பின்பற்றுபவராக இருந்தார்.ஹனபி இமாம்களில் ஒருவர்,அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மாணவர்களில் உள்ளவர்.(மிஃப்தாஹுஸ்ஸஆதா 2/119,மனாகிப் கர்தரி  2/206)

7)இமாம் யஹ்யா இப்னு மயீன் (ரஹ்) (மரணம்:233)அறிவிப்பாளர்களை தரம் பிரிக்கும் துறையில் இமாம்,நம்பிக்கையாளர் பலமானவர்.வலுவான இமாம்களில் உள்ளவர்.
(தாரீக் பக்தாத் 14/184)

ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்,அன்னாரை குறித்து எழுதியுள்ளார்:அறிவிப்பாளர்களை தரம் பிரிக்கும் துறையில் இமாம்.இவரின் ஆய்வுதான் ஹதீஸ்களில் பின்பற்றப்படும்.மேலும்  ஹதீஸ் குறித்த ஞானத்தில் படைப்புகள் அனைத்தும் திரும்பும் இடமமாக (அன்னார்) திகழ்ந்தார்.(தஹ்தீபுத்தஹ்தீப் 11/288)

 அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:இமாம் இப்னு மயீன் ஹனபி மத்ஹபை வலுவாக பின்பற்றுபவர்களில் கருதப்படுபவர்.எனினும் ஹதீஸ்கலை வல்லுனராக திகழ்ந்தார்.(அர்ருவாதுஸ்ஸிகாதில் முதகல்லம் ஃபீஹிம் பிமா லா யூஜபு  ரத்துஹும்)

இப்னு மயீன் (ரஹ்) அவர்களே கூறுகிறார்கள்;கிராஅத்தில் என்னிடத்தில் இமாம் ஹம்ஜா (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் பிக்ஹ் நம்பகமானது.அதனின் வரிசையில் மக்களை நான் பார்த்தேன்.
(தாரீக் பக்தாத் 13/347) 
அவர்கள் ஹனபி என்பது உண்மையில் தெளிவான விஷயமாகும்.
(பைஜுல் பாரி 1/169,முகத்தமா நஸபுர்ராயா 43)
மற்றோரு ஆச்சரியமான விஷயம் அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹதீஸ்கலையின் அடிப்படையாக மூன்று பெரியோர்கள் இருந்தனர்.ஹள்ரத் இமாம் யஹ்யா இப்னு ஸயீதுனில் கத்தான் (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் யஹ்யா இப்னு ஜகரிய்யா இப்னு அபூஜாயிதா (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் வகீஃ இப்னு ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் (தத்கிரா 1/327) இமாம் அலி இப்னுல் மதீனி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்;நம் காலத்தின் மார்க்க ஞானம் யஹ்யா இப்னு அபூஜாயிதாவுடன் முடிவுபெற்றது.(அஹ்பார் அபூஹனீபா வ அஸ்ஹாபுஹு,பக்கம்:150) அல்ஹம்துலில்லாஹ் இந்த மூன்று பெரியோர்களும் முகல்லித்கள்தான்.இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களை தான் பின்பற்றினார்கள்.

கலீபா ஜஃபர் இப்னு முஃதஸம் என்கிற அல்முதவக்கில் அலல்லாஹ் (மரணம்:246) 
ஹள்ரத் ஷாபியி (ரஹ்) அவர்களை தக்லீத் செய்த முதல் கலீபாவாக இருந்தார்.அன்னாரின் மத்ஹபை தேர்ந்தெடுத்தார்.
(தாரீகுல் குலஃபா பக்கம்:359)

8)இமாம் அப்துல் ஙப்பார் இப்னு தாவூத் ஹிரானி (ரஹ்)  (மரணம்:204) ஹதீஸின் இல்மில் பலமானவர், உறுதிமிக்கவர்.ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்.(தஹ்தீபுத்தஹ்தீப் 6/366)

9)இமாம் அப்துல் மலிக் இப்னு ஹபீப் (ரஹ்) (மரணம்:239) 
பெரும் பகீஹ்,மாலிக் மத்ஹப் 
(தத்கிரா 2/107)

10)இமாம் இஸ்மாயில் காளி (ரஹ்) (மரணம்:282) அல்ஹாபிழ்,அல்இமாம்,
இஸ்லாத்தின் ஆசான்,ஈராக்கில் மாலிக் மத்ஹபின் தலைமை வகிப்பவர் (ஷைகுல் மாலிகிய்யா பில்ஈராக் தத்கிரா 2/180)

11)இமாம் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் ஹகம் (ரஹ்) (மரணம்:208) இமாம்,ஹாபிள்,உம்மத்தின் இமாம். இப்னு ஹுஜைமா கூறுகிறார்:ஸஹாபாக்கள்,
தாபியீன்களின் சொல்லை அறிந்தவர்களில் 
இப்னு அப்துல் ஹகம் அவர்களை விட வேறு எவரையும் பார்த்ததில்லை.அவர்களும் கூட மாலிக் (ரஹ்) அவர்களின் மாணவர்களில் மிஸ்ர் தேசத்தின் புகஹாக்களில் ஒருவராக இருந்தார்கள்.(தத்கிரா 2/116) மேலும் மாலிக் மத்ஹபில் பிடிப்புள்ளவராக இருந்தார்கள்.
பிக்ஹ் சட்டங்களில் ஷாபியி மற்றும் ஹனபிகளுக்கு எதிராக நூல்கள் எழுதியுள்ளார்கள்.
(அத்தீபாஜில் மத்ஹப் லி இப்னு பர்ஹுன் பக்கம்:232,தத்கிரா 4/115)

12)இமாம் அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹம்மத் அஸ்ரம் (ரஹ்) (மரணம்:260) பெரும் ஹாபிள், பேரறிஞராக இருந்தார்.அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள்,அன்னாரை ஸாஹிபுல் இமாம் அஹ்மத் என்பதாக எழுதியுள்ளார்.(தத்கிரா 2/135) ஹள்ரத் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களை பின்பற்றும் முகல்லித் 

13)இமாமுல் மைமூன் அபுல் ஹஸன் அப்துல் மலிக் இப்னு அப்துல் ஹுமைத் (மரணம்:274) அல்ஹாபிள் அல்ஃபகீஹ்.ஹள்ரத் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களை பின்பற்றும் பெரியோர்களில் இருந்தார்.(தத்கிரா 2/162)
14) இமாம் ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கிர்மானி (மரணம்:280) ஹாபிழ்,பகீஹ் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களை பின்தொடர்பவர்,முகல்லித்தாக இருந்தார்.(தத்கிரா 2/170)

15)இமாம் அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹம்மத் மர்வஜி (ரஹ்) (மரணம்:275) முன்மாதிரி,பகீஹ்.இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களின் மத்ஹபின் மூத்த முகல்லித்.அஹ்மத் இப்னு ஹன்பல் மாணவர்களில் கண்ணியமிக்கவர்.(தத்கிரா 2/185)

16)இமாம் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு இப்ராஹீம் (மரணம்:290)இமாம்,ஹாபிள், பேரறிஞர்,மார்க்க விற்பன்னர் மாலிகி மத்ஹபை சேர்ந்தவர்.(தத்கிரா 2/207)

17)இமாம் மூஸா இப்னு இஸ்ஹாக் காளி (ரஹ்) (மரணம்:297) இமாம்,ஹாபிள்,ஃபகீஹ் ஷாபியி மத்ஹபை சேர்ந்தவர்.
(தத்கிரா 2/216)

18)இமாம் முஹம்மது இப்னு நள்ர் (ரஹ்) (மரணம்:291)ஹாபிள்,ஃபகீஹ்.
ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்.அன்னாரின் அனைத்து கோத்திரமும் ஹனபியாக இருந்தனர்.(தத்கிரா 2/220)

19)ஹள்ரத் இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாயில் புகாரி (ரஹ்) (மரணம்:256)
ஹதீஸில் அமீருல் முஃமினீன்.ஷைகுல் இஸ்லாம்,ஹதீஸில் ஹாபிள்களின் இமாமாக இருந்தார்.(தத்கிரா 2/122) தாஜுத்தீன் அபூநஸ்ர் அப்துல் வஹ்ஹாப் ஸுப்கி ஷாபியி அவர்கள்,அன்னாரை ஷாபியி மத்ஹபில் இணைத்துள்ளார்.(தபகாதுஷ்ஷாபியில் குப்ரா 2/1,19)

20)ஹள்ரத் இமாம் முஹம்மது இப்னு ஷுஐப் அந்நஸாயி (ரஹ்) (மரணம்:302) ஷாபியி மத்ஹபை சேர்ந்தவர்.அல்லாமா கதீப் எழுதியுள்ளார்;کان شافعى المذهب (இக்மால் பக்கம்:627)

21) இமாம்,முஹத்திஸ் அபூஅவானா (ரஹ்) (மரணம்:316) அல்ஹாபிள்,மிகவும் பலமானவர்.ஷாபியி மத்ஹபை சேர்ந்தவர்.அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:ஷாபியின் நூல்களை,மத்ஹபை ஸஃப்ராயீனில் முதலில் கொண்டு சென்றவர்.(தத்கிரா 3/3)

22)இமாம் அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்கிலால் (ரஹ்)(மரணம்:311) ஃபகீஹ், பேரறிஞர்,ஹாபிள்.அல்லாமா தஹபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:அன்னார்,இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களின் ஞானத்தை ஒரு சேர போதிக்கும் ஆசான்,கோர்வை செய்தவர்.(தத்கிரா 3/7)

23)இமாம் தஹாவி (ரஹ்) (மரணம்:321) இமாம்,அல்லாமா,ஹாபிள்,ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்.(தத்கிரா 3/28)

24)இமாம் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு உமர் (மரணம்:306) இமாம், பேரறிஞர்,ஷைகுல் இஸ்லாம்,ஷாபியி மத்ஹபின் முன்மாதிரி (தத்கிரா 3/30) இவர்களின் மூலமாக ஷாபியி மத்ஹப் பரவியது.(பக்கம்:31)

25)இமாம் அபூபக்கர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஜியாத் (மரணம்:324) ஹாபிள்,அல்லாமா,ஷாபியின் பகீஹ்.இமாம் ஹாகிம் 
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்: ஈராக்கில் அக்காலத்தில் ஷாபிகளின் இமாம்,பிக்ஹ் சட்டங்கள்,ஸஹாபாக்களின் கருத்து வேறுபாடுகளை மிக அறிந்தவர்.(தத்கிரா 3/37,38)

26)முஹத்திஸ் முஹம்மது இப்னு யூசுப் (ரஹ்) (மரணம்:330) அல்ஹாபிள்,
பலமானவர்.ஷாபியி வழிமுறையை சேர்ந்தவர்.
(தத்கிரா 3/54)

27)இமாம் அபுல்காஸிம் அம்ர் இப்னுல் ஹஸன் அல்பக்தாதி (ரஹ்) (மரணம்:334) ஹம்பலிகளின் பெரியோர்.(தத்கிரா 3/62)

28)இமாம் அபுல் அப்பாஸ் இப்னு காஸ் (ரஹ்)  (மரணம்:335) ஷாபியின் மூத்தவர்.(தத்கிரா 3/63)

வாசகர்களே! வரலாற்று நூல்களில் மத்ஹபுகளை பின்பற்றும் அறிஞர்களின் நீண்ட பட்டியல் உள்ளது.அனைவரின் பெயரையும் எழுதினால் உறுதியாக வாசிப்பில்  களைப்படைந்து விடுவோம்.எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment