Wednesday, October 16, 2019

தொழுகை தடைசெய்யப்பட்ட நேரங்கள்

ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்


தொடர்:14

தொழுவது தடை செய்யப்பட்ட நேரங்கள்


பஜ்ர், அஸ்ர் தொழுகைக்கு பிறகு

عن ابی سعيد الخدري رضي الله عنه يقول سمعت رسول الله ﷺ يقول لا صلوة بعد الصبح حتی ترتفع الشمس و لا صلوة بعد العصر حتی تغيب الشمس

சுபுஹ் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும், அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்தார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/82,83 தலைப்பு:باب لا تتحری الصلوة قبل غروب الشمس ,ஸஹீஹ் முஸ்லிம் 1/275,தலைப்பு:باب الاوقات التی نهی عن الصلوة فيها )

இதே கருத்தில் ஹள்ரத் உமர் இப்னு கத்தாப்,ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்,ஹள்ரத் அபூஹுரைரா ரளி அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/82,தலைப்பு:باب الصلوة بعد الفجر حتی ترتفع الشمس ,ஸஹீஹ் முஸ்லிம் 1/275,தலைப்பு:باب الاوقات التی نهی عن الصلوة فيها ,ஜாமிஉத்திர்மிதி 1/45,தலைப்பு:باب ماجاء فی كراهية الصلوة بعد العصر )

عن ابی هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ من لم يصل ركعتي الفجر فليصلهما بعد ما تطلع الشمس

யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரகஅத்துகளையும் சூரியன் உதித்தபின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/96,தலைப்பு:باب ماجاء فی اعادتهما بعد طلوع الشمس )

சுப்ஹ் தொழுகைக்கு பிறகு

சுப்ஹ் தொழுகைக்கு பிறகு இரண்டு ரக்அத் முன் சுன்னத்தை  தவிர வேறு எதுவும் தொழக்கூடாது.

عن ابن عمر رضي الله عنه عن حفصة رضي الله عنها قالت كان رسول الله ﷺ اذا طلع الفجر لا يصلی الا ركعتين خفيفتين

ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் உதயமாகிவிட்டால் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) மட்டுமே தொழுவார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/250,و اللفظ له باب استحباب ركعتی الفجر ,ஸஹீஹுல் புகாரி 1/157,தலைப்பு:باب التطوع بعد المكتوبة,ஜாமிஉத்திர்மிதி 1/96,தலைப்பு:باب ما جاء لا صلوة بعد الفجر الا ركعتين )



சூரியன் மறைந்த பிறகு

சூரியன் மறைந்த பிறகு பர்ளுக்கு முன்பாக நபில் தொழுவது தடுக்கப்பட்டது.

عن طاؤس قال سئل ابن عمر رضي الله عنه عن الركعتين قبل المغرب فقال ما رايت احدا علی عهد رسول الله ﷺ يصليهما

தாவூஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்;

இப்னு உமர் ரளி அவர்களிடத்தில் மஃரிப் தொழுகைக்கு முன்பாக இரண்டு ரக்அத்தை குறித்து கேட்கப்பட்டது.அன்னார் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இரண்டு ரக்அத் தொழுத யாரையும் நான் பார்க்கவில்லை.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/189,தலைப்பு:باب الصلوة قبل المغرب ,முஸ்னத் அப்த் இப்னு ஹுமைத் பக்கம்:256,ஹதீஸ் இலக்கம்:804,அல்குனா வல் அஸ்மா லித்தவ்லாபி பக்கம்:463,ஹதீஸ் இலக்கம்:1640)

عن جابر رضي الله عنه قال طفنا فی نساء رسول الله ﷺ فسالناهنّ هل رايتن رسول الله ﷺ يصلی هاتين ركعتين قبل المغرب حين يؤذن المؤذن فقلن لا

ஜாபிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவிகளிடத்தில் வருகை தந்தோம்.மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஃரிப் தொழுகைக்கு முன்பாக முஅத்தின் பாங்கும் சொல்லும் போது  இரண்டு ரக்அத் தொழுதுள்ளார்களா? என்று அவர்களிடத்தில் கேட்டோம்.அவர்கள்  இல்லை என கூறினார்கள்.(ஆதாரம்:முஸ்னதுஷ்ஷாமியீன் லில் இமாமி அத்தப்ரானி 3/212 ஹதீஸ் இலக்கம்:2110)

عن منصور عن ابيه قال ما صلی ابوبكر و عمر و عثمان رضي الله عنه  الركعتين قبل المغرب

மன்சூர் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவித்துள்ளார்கள்; அபூபக்கர் (ரளி) உமர் (ரளி) உஸ்மான் (ரளி) அவர்கள் மஃரிபிற்கு முன்பாக இரண்டு ரக்அத் தொழவில்லை.

(ஆதாரம்:கன்ஜுல்உம்மால் 8/25,المغرب و ما يتعلق ஹதீஸ் இலக்கம்:21809,இஹ்திஹாஃபுல் ஹியரதுல் முஹிர்ரா 2/408,தலைப்பு:باب الصلاة قبل المغرب و بعدها , ஹதீஸ் இலக்கம்:2332,முஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் 2/289,தலைப்பு:باب الركعتين قبل المغرب ஹதீஸ் இலக்கம்:3998)



குத்பா சமயத்தில்

عن سلمان الفارسي رضي الله عنه قال قال النبي ﷺ لايغتسل رجل يوم الجمعة و يتطهر ما استطاع من طهر و يدهن من دهنه او يمس من طيب بيته ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلی ما كتب له ثم ينصت اذا تكلم الامام الا غفر له ما بين و بين الجمعة الاخری

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

'ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.'
என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.


فان لم يجد الامام خرج صلی ما بداله و ان وجد الامام قد خرج جلس فاستمع و انصت حتی يقضي الامام جمعته و كلامه

ஹள்ரத் நபீஷா ஹுதலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; இமாம் குத்பாவிற்கு வெளியேறாமல் இருந்து சந்தர்ப்பம் கிடைத்தால் தொழுது கொள்

ளலாம்.இமாம் குத்பாவிற்கு வெளியேறிவிட்டால் குத்பா,தொழுகையை முடிக்கும் வரை அமர்ந்து கவனத்துடன்,மெளனமாக குத்பாவை கேட்கவேண்டும்.


عن ابن عمر رضي الله عنه قال سمعت النبي ﷺ يقول اذا دخل احدكم المسجد و الامام علی المنبر فلا صلوة ولا كلام حتی يفرغ الامام


இமாம் மிம்பர் மீது இருக்கும் நிலையில் உங்களில் ஒருவர் மஸ்ஜிதில் நுழைந்தால்,
இமாம் (குத்பா) முடிக்கும் வரை தொழுகை,பேச்சும் இல்லை.

சூரியன் உதயமாகுதல்,உச்சியடைதல் மறைதல்

عن عقبة ابن عامر الجهني رضي الله عنه يقول ثلث ساعات كان رسول الله ﷺ ينهانا ان نصلي فيهنّ او ان نقبر فيهنّ موتانا حين تطلع الشمس بازغة حتی ترتفع و حين يقوم قائم الظّيرة حتی تميل الشمس و حين تضيف الشمس للغروب حتی تغرب

மூன்று நேரங்களில் தொழவோ, இறந்தவர்களை அடக்கம் செய்யவோ வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.
1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.
2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை.
3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/276,الاوقات التی نهی عن الصلوة فيها ,ஜாமிஉத்திர்மிதி 1/200,தலைப்பு:باب ما جاء فی كراهية الصلوة علی الجنازة ,அல்ஜம்உ பைனஸ்ஸஹீஹைன் லில்ஹுமைதி 3/351,ஹதீஸ் இலக்கம்:2993)



عن ابی هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ من لم يصل ركعتي الفجر فليصلهما بعد ما تطلع الشمس

யார் ஃபஜ்ருடைய(சுன்னத்) இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரகஅத்துகளையும் சூரியன் உதித்தபின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/96,தலைப்பு:باب ماجاء فی اعادتهما بعد طلوع الشمس )





No comments:

Post a Comment