ஹிதாயா நூல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர் 2
முஜ்தஹிதீன்களின் காலத்திற்கு பிறகு உள்ளவர்கள் குறித்து நமது நிலைப்பாடு:
ஸஹாபாக்கள்,
தாபியீன்கள்,தப்உ தாபியீன்கள்,முஜ்தஹிதீன்களான இமாம்கள் அவர்களுக்கு பிறகு கியாமத் வரை உள்ளவர்கள். முஹத்திஸாக (ஹதீஸ்கலை வல்லுநர்) முபஸ்ஸிராக (திருக்குர்ஆன் விரிவுரையாளர்) புகஹாக்களாக (மார்க்க விற்பன்னர்) வரலாற்று ஆய்வாளராக,ஹனஃபி,ஷாபியி மார்க்க அறிஞராக இருந்தாலும் சரி,அனைவரும் பாவத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை.அவர்களிடம் தவறுகள் நிகழும்.தவறுகள் நிகழ்ந்துள்ளது.அவர்களின் மீது அடிப்படை கோட்பாடுகளின் பேரில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.அவர்களின் கருத்து ஏற்கப்படலாம்.
மறுக்கப்படலாம்.
அவர்களின் நூல்களில் அனைத்து தரங்களில் மார்க்க சட்டங்கள் உண்டு.
நம்மிடத்தில் அதனின் தரங்கள்
(1)குர்ஆன் ஹதீஸில் இருப்பதை எடுத்து அவர்களின் நூல்களில் எழுதியிருந்தால் அதனை ஏற்பது கடமை.ஏனெனில் அவர்கள் அதனை எடுத்து மட்டும்தான்
சொல்கிறார்கள்.அவர்களின் சுயகருத்தில்லை.
(2)அறிஞரின் தீர்ப்பானது வெளிப்படையில் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தால் அதனை நாம் இணைக்க முயற்சி செய்வோம்.முரண்டுபாட்டை நீக்கமுடியவில்லையெனில் அதனை விட்டுவிடுவோம்.குர்ஆன் சுன்னத்தின் பேரில் அமல் செய்வோம்.அவரை காபிர் என தீர்ப்பளிக்கமாட்டோம்.
இழிவுப்படுத்த மாட்டோம்.மார்க்க அறிஞருக்கு செலுத்த வேண்டிய கடமையை பேணுவோம்.
(3)குர்ஆன்,ஹதீஸ்,இஜ்மா,
கியாஸின் மூலம் நிரூபணமாகாத விஷயங்கள் அவர்களின் நூல்களில் உள்ளது.எனினும் அவைகளுக்கு எதிராக இல்லை.அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அடிப்படைகளுக்கும் எதிராகவும் இல்லையெனில் அதனை அமல் செய்யவும் உரிமை உண்டு.மறுக்கவும் உரிமை உண்டு.ஆனாலும் நாம் அதனை ஏற்போம்.
(4)அறிஞரின் கருத்தில் முரண்பாடோ அல்லது ஆட்சேபணையோ இருந்தால் அவரின் இறுதியான சொல்தான் பார்க்கப்படும்.அதனை அறியமுடியவில்லையெனில் விடப்படும்.
(5)மார்க்க அறிஞர் அவரது கருத்தை ஓர் இடத்தில் சுருக்கமாக கூறியுள்ளார்.வேறு இடத்தில் விரிவாக கூறியுள்ளார் எனில் விரிவாக கூறியதுதான் கவனிக்கப்படும்.
(6)அறிஞர் அவரது கைப்பட எழுதியது மற்றும் மல்பூஜாத் எனும் உபதேசங்கள் இவைகளுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றினால் கைப்பட எழுதியதுதான் ஏற்கப்படும்.
(7)அறிஞரின் தீர்ப்புகளில் முரண்பாடு ஏற்பட்டால் அவரின் மத்ஹபின் கருத்திற்கும்,அவரின் இறுதி சொல்லுக்கும் ஏற்ப இருப்பவை அமல் செய்யப்படும்.அவரின் மற்ற தீர்ப்புகள் ஷாத் (அரிதானது) என்பதாக கருத்து கொள்ளப்படும்.
(8)சூபியாக்கள் எனும் ஞானிகளின் கருத்துக்கள் மார்க்கத்தில் ஆதாரமில்லை.புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்கள் குர்ஆன் சுன்னத்திற்கு தந்துள்ள விளக்கத்திற்கு மாற்றமாக இருந்தால் ஏற்கப்படாது.சூபியாக்களின் கருத்துக்கள் குர்ஆன் சுன்னத்திற்கு ஏற்ப இருந்தால் மட்டும்தான் அமல்செய்யப்படும்.
(9)மஸ்லக் எனும் வழித்துறை சேர்ந்த அறிஞர் தனது ஆய்விற்கு ஏற்ப கருத்தை எழுதியுள்ளார் தீர்ப்பளித்துள்ளார்.அதே வழித்துறை சேர்ந்த மற்றொரு அறிஞர் தனது ஆய்விற்கு ஏற்ப மற்றொரு கருத்தை கூறிகிறார். தீர்ப்பு கொடுத்துள்ளார்.
இப்பொழுது இருவரின் கருத்தில், மத்ஹபின் தீர்ப்புக்குரிய சொல், அமலில் உள்ள சொல்லின் பேரில் முடிவுசெய்யப்படும்.மற்றொரு கருத்தானது தவறானது,அரிதானது,
மாற்றப்பட்டது என்று கூறப்படும்.
(10)நம்மிடத்தில் திருக்குர்ஆன் விரிவுரையானது விரிவுரையின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.ஹதீஸின் இல்மானது ஹதீஸின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.பிக்ஹின் இல்மானது பிக்ஹின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.ஹனஃபி பிக்ஹின் இல்மானது ஹனஃபி அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.மற்ற மத்ஹபுகளின் அடிப்படை கோட்பாடுகளை ஹனஃபி மத்ஹபிற்கு பொருத்தி பார்க்க கூடாது.
ஆக,இந்த பத்து அம்சங்களை முன்வைத்து நாம் செயல்பட்டால் நமக்கு மத்தியில் உள்ள அனைத்து கருத்து மோதல்களும் முடிந்துவிடும்.கருத்து வேறுபாடுகள் அல்ல.ஏனெனில் கருத்து வேறுபாடுகள் கியாமத் வரை இருக்கும்.அதுதான் உம்மத்திற்கு அருளுமாகும்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
No comments:
Post a Comment