ஹனஃபி பிக்ஹ் ஹிதாயா நூலும் நமது பதில்களும் தொடர் 5
ஹிதாயா நூலில் உள்ள புரிதல்கள்
ஹிதாயா ஆசிரியர் எழுதியுள்ள ஹதீஸ்களில் பெரும்பாலும் அதனின் கருத்தை எழுதுவது இதற்கு ' ரிவாயத் பில் மஅனா' என்று சொல்லப்படும்.இது தவறொன்றும் இல்லை.மார்க்க அறிஞர்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். ஹதீஸ்கலை நூல்களில் இது குறித்து விரிவான விளக்கங்கள் உண்டு.
(1) அன்னார் ஹதீஸ் நூல்களை முன்னால் வைத்து எழுதவில்லை.இதனால் முழு ஹதீஸை எழுதவில்லை.தேவையான ஹதீஸின் பகுதியை மட்டும் எழுதியிருப்பார்கள்.
(2)அன்னார் பயன்படுத்திய வாக்கியமானது இரு ஹதீஸ்களில் இணைந்திருக்கும்.
(3)அன்னார் ஹதீஸ்களுக்கு முன்னால் قوله عليه السلام இது ஹதீஸில் ஒரு பகுதியை மட்டும் குறிக்கும்.
(4)அன்னார் ஹதீஸ் என்பதாக கூறியிருப்பார்.எனினும்,ஆய்வு செய்து பார்க்கும் பொழுது,ஸஹாபி மற்றும் தாபியின் சொல்லாக உள்ளது.ஹதீஸ் இல்லையென்றாலும் ஸஹாபியின் தாபியின் கூற்றுகளும் ஆதாரம்தான்.முற்றிலும் அடிப்படையே இல்லை என கூறமுடியாது.
(5)ஹதீஸில் இல்லாத வார்த்தையை எழுதியிருப்பார்.எனினும்,அதற்கு நிகரான பொருத்தமான வேறு வார்த்தையை எழுதியிருப்பார்.இதனையும் அடிப்படையே இல்லை என கூறமுடியாது.
(6)அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என கூறியிருப்பார்.ஆனால் தேடிப் பார்த்தால் வேறு ஸஹாபியின் சொல்லாக இருக்கிறது.எனவே இதனையும் அடிப்படையே இல்லை என கூறமுடியாது.
இரண்டாவது குற்றச்சாட்டும் பதிலும்
(2)ஹிதாயா நூலில் ஆபாசமான சட்டங்கள்
இந்த குற்றச்சாட்டும் ஹனஃபி மத்ஹபின் மீதுள்ள குரோதமும் விரோதமும் ஹதீஸின் ஞானம் குறித்த அறியாமை தான் காரணமாகும்.ஹதீஸ் நூல்களில் கடமையான குளிப்பு,தூய்மை, மாதவிடாய்,பிரசவத்தீட்டு குறித்த சட்டங்கள் உண்டு.எனவே
இனிமேல் பிக்ஹ் குறித்து மட்டும் விமர்சிக்காமல் ஹதீஸ் குறித்தும் விமர்சிக்க வேண்டியதுதானே?
மூன்றாவது குற்றச்சாட்டும் பதிலும்
(3)ஹிதாயாவில் கற்பனையான சட்டங்கள்
இந்த குற்றச்சாட்டும் உண்மையை மறுப்பதற்கு நிகராகும்.ஏனெனில் புகஹாக்கள் (மார்க்க விற்பன்னர்கள்) மார்க்க சட்டங்களை ஆய்ந்து,ஆய்வு செய்து கூறியுள்ளனர்.இன்று அது போன்ற நவீன பிரச்சனைகளுக்குரிய தீர்வு தேவைப்படுகிறது.
பிக்ஹ் சட்டம் :கிளியானது ஸஜ்தா வசனத்தை ஓதுகிறது.அதனை கேட்பவர் மீது ஸஜ்தா செய்வது கடமையில்லை.இன்று தொலைக்காட்சியில் ஸஜ்தா வசனத்தை செவியுற்றால் என்ன
சட்டம் என்பதற்குரிய தீர்வு எளிதாக கிடைத்துவிடுகிறது.
மற்றொரு பிக்ஹ் சட்டம்:
இரண்டு பேர் வியாபார ஒப்பந்தம் செய்கிறார்கள்.அவ்விருவருக்கும் மத்தியில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தாலும் அந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும்.இன்று வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் உள்ள பொருளை வாங்கிவிடலாம் என்ற
ஆன்லைன் வர்த்தகத்திற்கு தீர்வு கிடைத்துவிடுகிறது.
நான்காவது குற்றச்சாட்டும் பதிலும்
(4)ஹிதாயாவில் குர்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்கள்
இது பொய்யான வாதமாகும்.இதனை குறித்து தனியானதொரு தலைப்பில் விளக்குவோம்.
ஐந்தாவது குற்றச்சாட்டும் பதிலும்
(5)ஹிதாயா நூலில் அறிவிப்பாளர் தொடர் இல்லை
இது குறித்து அறிய நமது தளத்தின் பின்வரும் லிங்கை பார்வையிடவும்.
https://difaeaslaf.blogspot.com/2018/12/blog-post_9.html?m=1
ஆறாவது குற்றச்சாட்டும் பதிலும்
(6)ஹனஃபி உலமாக்கள் ஹிதாயா ஆசிரியர் மீது குற்றம்சுமத்தியுள்ளனர்
ஹனஃபி உலமாக்கள் அன்னார் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவர் இல்லை என்பதை தான் கூறியுள்ளார்கள்.எனினும்,மத்ஹப் மறுப்பாளர்கள் போன்று பொய்யர் என்பதாக இழிவுப்படுத்தும் விதமாக விமர்சிக்கவில்லை.இழிவுப்படுத்துதல் வேறாகும். விமர்சனம் வேறாகும்.நமது அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.ஆனால் அவர்களோ இழிவுப்படுத்தியுள்ளனர்.

மத்ஹப் மறுப்பாளர்களிடத்தில் நாம் தொடுக்கும் வினாக்கள்
(1) ஹிதாயா ஆசிரியர் மனிதர் எனும் அடிப்படையில் தவறுகள் நிகழ்ந்துள்ளதை பொய் என்பதாக சித்தரிக்கலாமா? முழு நூலையும் நிராகரிப்பது நியாயமா?
(2) இதே போன்று குற்றம் சுமத்தினால் அனைத்து ஹதீஸ் நூல்களையும் நிராகரிக்கவேண்டும் தயாரா? புகாரி,முஸ்லிம் நூல்கள் கூட தப்பிக்க முடியாது.
(3)முஸன்னஃப் இப்னு அபிஷைஃபா,முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்,முஸ்தத்ரக் ஹாகிம்,தப்ரானி கபீர்,தப்ரானி அவ்ஸத்,தப்ரானி ஸஙீர்,முஸ்னத் அஹ்மத்,மஜ்மஉஜ்ஜவாயித்,
கன்ஜுல் உம்மால் போன்ற நூல்களில் பலகீனமான ஹதீஸ்கள் பொய்யான ஹதீஸ்கள் உள்ளதா இல்லையா? ஹனஃபி பிக்ஹ் நூல்களில் மட்டும் விரோதமும் குரோதமும் ஏன்?
(4)இமாம் புகாரி (ரஹ்) அவர்களை குறித்து ஹதீஸ்கலையில் 'முஃமீன்களின் தலைவர் ' என போற்றப்பட்டுள்ளது.எனினும், இமாம் இப்னு அபூஹாதம் ராஜி அவர்கள் 'பயானு ஹத் முஹம்மத் இப்னு இஸ்மாயில் புகாரி ஃபி தாரிகிஹி' என்ற நூலில் புகாரி (ரஹ்) அவர்களின் வரலாற்று நூலில் உள்ள தவறுகளை பட்டியலிட்டுள்ளார்.இந்நூலில் இப்னு அபூஹாதம் ராஜி அவர்கள் அபூஜுர்ஆ ராஜி,அபூஹாதம் ராஜி இருவரின் அனைத்து விமர்சனங்களையும் ஒன்று சேர்த்துள்ளார்.இதனால் நிறை குறை எடைபோடும் துறையில் (ஜர்ஹு தஃதீல்) புகாரி (ரஹ்) அவர்களின் அனைத்து தகவல்களையும் பொய் என கூறி தூக்கி எறியத்தாயாரா?
(5)இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் ஹதீஸ்களை கூறுவார்.இதற்கு 'முஅல்லக்' என்று சொல்லப்படும்.ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் 'பஹ்ஹுல் பாரியில்' முஅல்லக் அனைத்தையும் தேடி எழுதிவிட்டார்களா? இதனால் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் நபியின் மீது இட்டுகட்டியுள்ளார் என கூற தயாரா?
(6)இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் திர்மிதி நூலில் தலைப்பின் கீழ் ஹதீஸ்கள்,ஸஹாபாக்களின் வழிமுறைகள் குறித்து அறிவிப்பாளர் தொடரின்றி கூறியுள்ளார்.அனைத்தையும் அறிவிப்பாளர் தொடருடன் உங்களால் ஒன்று சேர்க்கமுடியுமா? இல்லையெனில் மாநபியின் மீது பொய்யுரைத்த திர்மிதி நூல் ஆசிரியர் என்ற தலைப்பில் மறுப்பளிக்க தயாரா?
(7)பெரும் ஹதீஸ்கலை வல்லுநர்கள் ஹிதாயா நூலில் உள்ள ஹதீஸ்களை பல்வேறு அறிவிப்பாளர்களின் தொடருடன் 1000 ஹதீஸ்களை ஒன்றுதிரட்டிட்யுள்ளனர்.மத்ஹப் மறுப்பாளர்களுக்கு தெரியவில்லையா? கண்கள் குருடாகி விட்டதா?
முக்கிய அறிவிப்பு:ஹிதாயா நூலின் மீது எழுந்த அடிப்படையான வாதத்திற்கு தொடராக மறுப்பளித்தோம்.
அடுத்து ஹனஃபி தொழுகை முறை குறித்து ஆதாரங்களுடன் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பார்ப்போம்! ஹிதாயா நூல் மற்ற பிக்ஹ் நூல்களில் உள்ள குற்றச்சாட்டுகளுக்குரிய பதில்களை தொடராக இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்!
No comments:
Post a Comment