பிக்ஹ் நூல்களில் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் நூல் மதரஸா பாடத்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நூல் ஹிதாயா
ஹிதாயா நூல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர் (1)
(1)ஹிதாயாவில் பொய்யான ஹதீஸ்களும் பலகீனமான ஹதீஸ்களும் உண்டு.இதே போன்று மற்ற பிக்ஹ் நூல்களிலும் உண்டு.
(2)ஹிதாயாவில் கற்பனை சட்டங்கள் இருக்கிறது.
(3)குர்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களும் உண்டு.
(4)ஹிதாயாவில் அறிவிப்பாளர் தொடர்கள் இல்லை.
(5)ஹனஃபி உலமாக்கள் கூட அந்நூலின் ஆசிரியர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
முதல் குற்றச்சாட்டும் பதில்களும்
நமது பதிலை இரண்டு பகுதியாக அளிக்கிறோம்.
முதல் பகுதி:முக்கியமான அடிப்படைகளை எடுத்து கூறுகிறோம்.அதன் மூலம் அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கி தெளிவு பிறந்துவிடும்.
இரண்டாவது பகுதி:குறிப்பாக ஹிதாயாவில் உள்ள ஹதீஸ்களின் சட்டங்கள் குறித்து ஆராய்வோம்.
அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அடிப்படையான ஆதாரங்களின் (குர்ஆன் ஹதீஸ் இஜ்மா கியாஸ்) ஒளியில்
நபிமார்கள் குறித்து நமது கொள்கை:
நமது கொள்கை நிலைப்பாடு முழு மனிதகுலத்தில் நபிமார்கள் மட்டும் பாவங்களுக்கு அப்பாற்ப்பட்டவர்கள்.
பரிசுத்தமானவர்கள்.நபிமார்களை தவிர உலகில் ஒருவரும் பாவத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை.
ஸஹாபாக்கள் குறித்து நமது கண்ணோட்டம்:
அனைத்து ஸஹாபாக்களும் சுவனவாசிகள்.சத்தியத்தின் அளவுகோல்.அவர்களை விமர்சிப்பதற்கு அனுமதியில்லை ஹராமாகும்.நாம் ஸஹாபியின் மீது வீசும் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ளமாட்டோம்.
ஸஹாபாக்கள் வரலாற்றின் சான்று என்பது மட்டும் இல்லை.மாறாக குர்ஆனிய சான்று பெற்றவர்கள்.சஹாபாக்களை விமர்சிப்பவர்கள் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமா அத்தை விட்டு வெளியேறியவர்கள் என்பதாக நாம் கருதுகிறோம். சஹாபாக்களை தக்பீர் செய்பவர்களை காபிர் என்பதாக கருதுகிறோம்.எனினும்,
சஹாபாக்கள் நபிமார்களை போன்று பாவத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தார் குறித்து நமது கொள்கை:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தாரை, சஹாபாக்களை சரிசமமாக நேசிக்கிறோம். இருசாராரின் மீது விரோதம் கொள்வதை வழிகேடு என்பதாக கருதுகிறோம்.
தாபிஈன்கள் தபஉத் தாபிஈன்கள் குறித்து நமது கண்ணோட்டம்:
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, தாபியீன்கள்,தபஉத்தாபியீன்கள் இருவர்களின் காலம் பொற்காலம் என்பதாக கருதுகிறோம். எனவே அவர்கள் சிறந்த காலத்தை பெற்றவர்கள்.எனினும்,அவர்களும் பாவங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாக நாம் நம்பவில்லை. அவர்கள் மீது கூறும் விமர்சனத்தை பொறுத்துக் கொள்வோம்.எனினும்,அவர்கள் மீது அவதூறு சுமத்துவதை, அபாண்டத்தை அள்ளி வீசுவதை, இழிவுபடுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படை கோட்பாடுகள்,மூல விதிகள்,நிறை குறை எடை போடும் துறை (ஜர்ஹு வ தஃதீல்) போன்றவைகளுக்கு ஏற்ப அவர்களின் மீதுள்ள விமர்சனத்தை பொறுத்துக் கொள்வோம்.
முஜ்தஹிதீன்களான (ஆய்வாளர்கள்) இமாம்கள் குறித்து நமது கண்ணோட்டம்:
நான்கு இமாம்கள் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி
அலைஹி,இமாம் மாலிகி ரஹ்மதுல்லாஹி அலைஹி,
இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி,இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி,
நாம் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் ஹனஃபி வழித் துறையைச் சேர்ந்தவர்கள்.
இமாம்களை, அல்லாஹ் ரசூலாக கருதவில்லை.அவர்களின் கலிமாவை படிப்பதில்லை.அவர்களை பாவத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாக கருதவில்லை. அவர்களிடமிருந்து தவறு ஏற்பட முடியும். ஒன்று,தவறு ஏற்பட சாத்தியம் உள்ளது.மற்றொன்று,
தவறு வெளிப்படுவது.தவறு நிகழ வாய்ப்புள்ளது என்பதால் தவறு நிகழ வேண்டும் என்பதும் அவசியம் இல்லை.அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு செய்த சேவைகள் ஏராளம்.அனைவரும் அல்லாஹ்வின் நேசர்கள்.முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்திற்கு செய்த உபகாரங்கள் தாராளம். உம்மத்தின் பெரும் மார்க்க அறிஞர்கள் அவர்களை முஜ்தஹிதீன்கள் எனும் ஆய்வாளர்களாக ஏற்றுள்ளனர். ஆய்வுக்குரிய சட்டங்களில் அவர்களின் ஆய்வுகளை அமல் செய்வதற்கு பெயர் தான் தக்லீத் என்று சொல்லப்படும்.மத்ஹப் மறுப்பாளர்கள் விமர்சிப்பதை போன்று
குருட்டுத்தனமான நம்பிக்கைக்கு பெயர் அல்ல.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
No comments:
Post a Comment