ஹிதாயா நூல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர் 4
ஹிதாயா ஆசிரியருக்கும்
மனிதர் எனும் அடிப்படையில் தவறுகள்,கவனக்குறைவு நிகழ்ந்துள்ளது.தவறுகளுக்கும், தடுமாற்றங்களுக்கும் அப்பாற்ப்பட்டவர் உலகில் யாரும் இருக்க முடியாது.மிகப்பெரும் இமாம்கள், ஹதீஸ்கலை வல்லுநர்கள்,கல்வியின் கடல்,சிகரம்,நினைவாற்றலில் உச்சம் என்று போற்றப்பட்ட அறிஞர்களுக்கும் கூட தவறுகள் தடுமாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் மத்ஹப் மறுப்பாளர்கள்,ஹிதாயா ஆசிரியர் பொய்யாக புனைந்ததாக, இட்டுகட்டியதாக சித்தகரிக்கின்றனர்.வரம்பு மீறி விமர்சிக்கின்றனர்.
குர்ஆன்,ஹதீஸில் விளையாடியவர்கள்,ஹதீஸை புரட்டியவர்கள் வளைத்தவர்கள்
போலி தவ்ஹாதிகள்.இவர்களுக்கு ஹிதாயா நூலை விமர்சிக்க அருகதை உள்ளதா? தகுதி உள்ளதா?
ஹனஃபி மத்ஹபின் சில சட்டங்களுக்கு பலகீனமான ஹதீஸ்களை ஹிதாயா ஆசிரியர் கொண்டு வந்துள்ளார்.எனினும், இதனால் ஹனஃபி மத்ஹபின் சட்டங்கள் தவறாகி விடாது.ஏனெனில் அந்த சட்டங்களுக்கு பலமான ஆதாரங்களும் உண்டு.(இதனை குறித்து பிறகு இன்ஷா அல்லாஹ் விளக்குவோம்!)
ஹிதாயா நூல் ஆசிரியரின் நிர்பந்தத்தை புரிந்து கொண்டால் மார்க்க சட்டங்களில் அன்னார் செய்த சேவைகளும் சாதனைகளும் நமக்கு புரிந்துவிடும்.
ஹிதாயா ஆசிரியரின் நிர்பந்தம்
ஹிதாயா ஆசிரியர் பதிவு செய்துள்ள ஹதீஸ்கள் அதிகமாக ஸுனன் பைஹகி,முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக், முஸன்னஃப் இப்னு அபிஷைஃபா, தப்ரானி கபீர் போன்ற நூல்களில் உள்ளது.இதில் ஹதீஸ் கிரந்தங்கள்
12 பாகங்கள் கொண்டதும் உள்ளது.
24 பாகங்கள் கொண்டதும் உள்ளது.அந்நூல்களில் ஒன்று,
அர்தன் நாட்டில் இருக்கும்.
மற்றொன்று,மிஸ்ர் நாட்டில் இருக்கும்.மற்றொன்று,சவூதி அரேபியாவில் இருக்கும்.
மற்றொன்று,ஈராகில் இருக்கும்.அதுமட்டுமின்றி அனைத்தும் கையெழுத்துப் பிரதிகளாகும்.அதனை வாசிப்பது கூட கடினமான கலையாகும்.அந்த சமயத்தில் அச்சகங்களும் இல்லை.அறிஞர்கள் ஹதீஸ்களை கையால் எழுதி வைத்திருப்பார்கள். அதுமட்டுமின்றி, பெரும் நூல்களை கையால் எழுதுவது சாதாரணமான ஒன்றல்ல.கடும் சவாலான பணியாகும்.அத்துடன் அனைத்து ஹதீஸ் நூல்களும் ஒரே ஆசிரியரிடத்தில் ஒன்று சேர்ந்திருப்பது நடக்க இயலாத ஒன்றாகும்.அதனை தேடுவதும் கடினமானது.இதனால் தான் ஹிதாயா ஆசிரியரால் ஆதாரங்களை குறிப்பிடமுடியவில்லை. பின்ணனியை ஆராயாமல் ஹிதாயா ஆசிரியர் மீது களங்கம் கற்பிக்கின்றனர்.ஆனால் நம் காலத்தில் இணையம் வளர்ச்சியடைந்துவிட்டது.
பைரோத்தில் அச்சிடப்பட்டு அனைத்து நூல்களும் நமக்கு முன்னால் உள்ளது.ஒவ்வொரு ஹதீஸிலும் இலக்கம் உள்ளது.கணினியில் இலக்கத்தை தேடினால் எளிதாக கிடைத்துவிடும்.ஹதீஸின் முதல் பகுதியை எழுதி தேடினால் முழு ஹதீஸும் கிடைத்துவிடும்.இதனையும் தாண்டி தவறுகள் ஏற்பட்டுவிடும் போது ஹிதாயா ஆசிரியருக்கு தவறுகள் ஏற்படுவது இயல்புதானே இதனை பொய்யாக விமர்சிப்பது ஏற்புடையதா? அறிவுடமையா?
மத்ஹப் மறுப்பாளர்களின் நிலை
நோன்பு திறக்கும் போது 'அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து' என்ற துஆ பலகீனமானது என்பதாக கூறி 'தஹபள்ளமவு' என்ற துஆ ஓத வேண்டும் என்று கூறினார்.இதனை நடைமுறைப்படுத்தினர்.
பல ஆண்டுகள் கழிந்த பிறகு இதனையும் பலகீனம் என்பதாக கூறி நிலைப்பாட்டை மாற்றிவிட்டனர்.அதற்கு கூறும் காரணத்தைப் பாருங்கள்!
//தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ
இந்த நிலையில் நோன்பு துறக்கும்போது, தஹபள்ளமவு.. என்று தொடங்கும் துஆவைஓதுவது நபிமொழி என்றுநாம் கூறினோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம்,பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம்கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.
எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில்கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள்பதிவு செய்து விட்டுப் பின்வருமாறுகூறுகின்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரானமர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்துஅறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி,முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்றுகுறிப்பிடுகின்றார்.
ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான்பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.
மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்றுஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதைவழிமொழிந்தோம்.
இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான்ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்றுஅறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலானஅறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர்விமர்சனம் செய்திருந்தாலும் அதில்பெரும்பாலானவற்றுக்குப் பதிலும்அளிக்கப்பட்டுள்ளது.
ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம்பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.
மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில்அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.
ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறுஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும்எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.
ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம்நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது.மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான்அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர்தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள்கூறுவது மறு ஆய்வின்போது நமக்குத் தெரிய வருகின்றது.//
உண்மையில் ஆய்வு செய்பவராக இருந்திருந்தால், புகாரி முஸ்லிம் அறிவிப்பாளரா? என்று தேடிப் பார்த்திருக்க வேண்டும்! தக்லீத் என்பது கண்மூடித்தனமாக பின்பற்றுவது என்பதாக விமர்சிக்கும் தகுதி இவர்களுக்கு உள்ளதா? என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும்!
நெஞ்சில் கைகளை கட்டுவதற்கு 'முஅம்மல் இப்னு இஸ்மாயில்' அறிவிப்பாளர் வரும் செய்தியை ஆதாரம் பிடித்தனர்.பிறகு அதனை பலகீனம் என்று கூறினார்.
பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்று வாதிட்டனர்.பிறகு அதனை பலகீனம் என்பதாக நிலைப்பாட்டை மாற்றினர்.இவ்வாறு நிலைப்பாட்டை மாற்றும் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதற்கு அவர்களின் சமாளிப்பு
(1) மனிதர் அடிப்படையில் தவறுகள் நிகழ்ந்துள்ளது.
(2)அக்காலகட்டத்தில் ஆய்வு செய்வதற்குரிய நூல்கள் கிடைக்கவில்லை.இரண்டும் பொய்யான சமாளிப்புகள்.
(இன்ஷா அல்லாஹ் பிறகு விளக்குவோம்!)
ஹிதாயா ஆசிரியர் அவர்களுக்கும் மனிதர் எனும் அடிப்படையில்
தவறுகள் நிகழாதா?
அறிவியல் முன்னேறிய காலத்தில் இத்துணை தவறுகள் நிகழும்
பொழுது ஹிதாயா ஆசிரியரின் நிர்பந்த நிலையை எண்ணிப் பாருங்கள்! அதனை பொய் என்பதாக சித்தரிக்கும் அருகதை சிறிதும் கூட யாருக்கும் இல்லை.
'மாநபியின் மீது பொய்யுரைக்கும் மத்ஹபுகள்' என்ற தலைப்பில் ஏகத்துவ இதழின் கட்டுரையை குறித்து நமது அனுமானம் "ஹனஃபி,ஷாஃபி உலமாக்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் எடுத்தெழுதியிருப்பார்கள்."
சுயமாக ஆய்வு செய்ததை போன்று படம் காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment