மத்ஹபுகளின் அவசியம் தொடர்:7
மூன்றாவது ஆதாரம்:
ஹதீஸின் ஒளியில் தக்லீத்
மூன்றாவது ஆதாரம்:
அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறினார்கள்:
من أفتى بغير علم كان اثمه على من افتاه
மார்க்க ஞானமின்றி தீர்ப்பளிக்கிறாரோ அதனின் பாவமானது தீர்ப்பளிப்பரின் மீதுதான் உண்டாகும்.(ஆதாரம்: அபூதாவூத்)
இந்த ஹதீஸ் தக்லீத் உண்டு என்பதற்கு மிகப்பெரும் ஆதாரமாகும்.ஏனெனில் மார்க்கத்தில் தக்லீத் அனுமதி இல்லையெனில்,தீர்ப்பின் பேரில் ஆய்வின்றி அமல் செய்வது கூடாது எனில் அனைத்து பாவங்களும் தீர்ப்பளிப்பவரின் மீது ஏன் ஏற்படுகிறது? மார்க்க சட்டம் கேட்பவரின் மீதும் ஏன் குற்றம் உண்டாகவில்லை? தீர்ப்பின் உண்மை நிலையை ஆய்வு செய்யாமல் பின்பற்றியதால் சட்டத்தை கேட்டவரின் மீதும் குற்றம் ஏற்படவேண்டுமல்லவா? எனவே மார்க்க ஞானம் இல்லாதவர்
ஆய்வு செய்வது கடமையில்லை என்பதும், அறிஞர் ஞானமின்றி தீர்ப்பளித்தால் அவர் மீதுதான் குற்றம் உண்டாகும் என்பதை ஹதீஸிலிருந்து புரியமுடிகிறது.
நான்காவது ஆதாரம்:
عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْعُذْرِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَحْمِلُ هَذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُولُهُ يَنْفُونَ عَنْهُ تَحْرِيفَ الْغَالِينَ وَانْتِحَالَ الْمُبْطِلِينَ وَتَأْوِيلَ الْجَاهِلِينَ
ஹள்ரத் இப்ராஹிம் இப்னு அப்துர் ரஹ்மான் உத்ரி (ரளி) அறிவிக்கிறார்கள்:
பின்னால் வரும் நம்பிக்கையானவர்கள் (அறிஞர்கள்) இல்மை சுமப்பவர்கள் மார்க்கத்தில் வரம்புமீறுபவர்களின் தஹ்ரீபை,(திருக்குர்ஆனின் கருத்துக்கு மாற்றமான வேறு அர்த்தம் செய்வது) அசத்தியவாதிகளின் பொய்யான வாதத்தை, அறியாதவர்களின் வலிந்துறையை (மாற்றுவிளக்கங்களை) அகற்றுவார்கள்.
(ஆதாரம் பைஹகி பில் மத்கல்)
இந்த ஹதீஸில் அறியாதவர்களின் மாற்று விளக்கங்களை பழித்து கூறப்பட்டுள்ளது.அதற்கு மறுப்பளிப்பது மார்க்க அறிஞர்களின் கடமையாகும்.எனவே குர்ஆன்,சுன்னாவில் பூரணமான ஞானமும்,ஆழ்ந்த புலமையும் இல்லாதவர் தனது அறிவின் மீது நம்பிக்கை வைத்து மாற்று விளக்கம் தராமல் அறிஞர்களை அணுகவேண்டும்.இதற்கு பெயர்தான் தக்லீத் என்று சொல்லப்படும்.
இங்கு மிகவும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் குர்ஆன்,சுன்னாவிற்கு மாற்று விளக்கம் பாமரன் அளிக்கமாட்டான்.மாறாக ஓரளவிற்கு ஞானம் பெற்றவர்தான் அளிப்பார்.இவரை தான் ஹதீஸில் அறியாதவர் என கூறப்பட்டுள்ளது.இவரின் மாற்று விளக்கத்தை தான் பழித்து கூறப்பட்டுள்ளது.ஆக, குர்ஆன் சுன்னாவின் சட்டங்களை மஸாயில்களை ஆராய்ந்து அறிவதற்கு அரபி மொழி ஞானம் போன்றவைகளில் ஓரளவிற்கு இருப்பது போதுமாகாது.மாறாக, முழுமையான ஆய்வுத்திறன் இருப்பது அவசியமாகும்.
முக்கிய குறிப்பு: (முஜ்தஹித்) ஆய்வாளர் யார்? என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்.
ஐந்தாவது ஆதாரம்:5
ஸஹீஹுல் புகாரியில் அறிவிப்பாளர் தொடர் முஅல்லக் (ஒரு நூலாசிரியர் முழு அறிவிப்பாளர் தொடரையோ, அல்லது சிலரையோ விட்டு விட்டு நபிகள் நாயகம் அவர்களின் சொல் அல்லது செயல் தொடர்புடைய அறிவிக்கும் செய்திகளுக்கு முஅல்லக் எனப்படும்.)
முஸ்லிமில் முழுமையான அறிவிப்பாளர் தொடருடன் வந்துள்ள ஹதீஸ்:
அபூஸயீத் குத்ரி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஸஹாபாக்களில் சிலர் ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வர ஆரம்பித்தார்கள்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,விரைவாக வருவதையும்,முன் ஸப்புகளில் தொழுவதையும் அவர்களுக்கு வலியுறுத்தினார்கள். மேலும் கூறினார்கள்;
ايتموا بي و لياتم بكم من بعدكم
நீங்கள் என்னை (தொழுகையில்) என்னைப் பின்பற்றுங்கள்.உங்களுக்கு பின்னால் வருபவர்கள் உங்களை பின்பற்றவேண்டும்.(ஆதாரம்:ஸஹீஹு ல் புகாரி,1/99, தலைப்பு:باب الرجل ياتم بالامام و ياتم الناس بالماموم )
இதற்கு இரண்டுவிதமான அர்த்தங்கள் உண்டு.
ஒன்று முன் ஸப்புகளில் உள்ளவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றட்டும்.பிந்திய ஸப்புகளில் உள்ளவர்கள் உங்களை பின்பற்றட்டும்.இரண்டாது ஸஹாபாக்கள் விரைவாக (தொழுகைக்கு)வந்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை முறையை நன்றாக கவனிக்கவேண்டும்.ஏனெனில் பின்னால் வரும் சந்ததியினர் ஸஹாபாக்களை தக்லீத் செய்யவேண்டும் என்பதற்காகும்.
ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸின் விரிவுரையில் எழுதியுள்ளார்:
قيل : معناه تعلموا منى أحكام الشريعة وليتعلم منكم التابعون بعدك وكذلك أتباعهم إلى انقراض الدنيا
சில அறிஞர்கள் ஹதீஸிற்கு தரும் விளக்கம் என்னிடத்திலிருந்து ஷரீஅத்தின் சட்டங்களை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களிடமிருந்து தாபியீன்கள் கற்றுக்கொள்ளட்டும்.இவ்வாறே (தாபியீன்களுக்கு) பின்னால் வருபவர்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும்.இவ்வாறே பின்பற்றுதல் உலகமுடிவு நாள்வரை இருக்கும்.(ஆதாரம்:பத்ஹுல்பாரி, 2/171)
முஸ்னத் அஹ்மதில் ஹள்ரத் ஸஹ்ல் இப்னு முஆத் (ரளி) அவர்களின் தந்தையிடமிருந்து வரும் அறிவிப்பு
: أن امرأة أتته فقالت: يا رسول الله، انطلق زوجي غازياً، وكنت أقتدي بصلاته إذا صلى ، وبفعله كله ، فأخيزني بعمل يبلغني عمله حتى يرجع ...
ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திற்கு வந்தாள்.
யா ரசூலுல்லாஹ்! எனது கணவர் ஜிஹாதிற்கு சென்றுள்ளார்.தொழும்போதும்,
அனைத்து காரியங்களிலும் அவரைதான்
பின்தொடர்வேன்.அவரின் அமலின் (ஜிஹாத்) அந்தஸ்தை அடையும் ஓர் அமலை கற்றுத் தாருங்கள் எனக்கேட்டார்.
(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் 3/439)
அந்தப் பெண்மணி தெளிவாக பெருமானாரிடம் கூறியது கணவரை தொழுகையில் மட்டுமின்றி அனைத்து காரியங்களிலும் பின்பற்றுகிறேன்.இதனை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கவில்லை.இதற்கு பெயர்தான் தக்லீத் என்று சொல்லப்படும்.
No comments:
Post a Comment