மத்ஹபுகளின் அவசியம் தொடர்:6
ஹதீஸின் ஒளியில் தக்லீதின் ஆதாரங்கள்
தக்லீத் குறித்து குர்ஆனில் உள்ளதைப் போன்று ஹதீஸ்களிலும் ஏராளமான ஆதாரங்கள் உண்டு.அவற்றில் சிலவற்றை இனி பார்ப்போம்!
முதல் ஆதாரம்:
1) عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
اني لا ادري ما بقي فيكم فاقتدوا للذين من بعدي
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக
ஹள்ரத் ஹுதைஃபா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் உங்களுக்கு மத்தியில் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது எனக்கு தெரியவில்லை? எனக்கு பிறகு அபூபக்கர் (ரளி) உமர் (ரளி) இருவரை பின்பற்றுங்கள்.
(ஆதாரம்:திர்மிதி,இப்னு மாஜா,அஹ்மத்)
இந்த ஹதீஸில் நாம் புரியவேண்டிய முக்கியமான விஷயமானது (اقتداء) பின்பற்றுதல் என்பது நிர்வாக காரியங்களுக்குரியது இல்லை.மாறாக தீனுடைய காரியங்களில் ஒருவரை பின்பற்றுவதாகும்.
அரபிமொழியின் பிரபல்யமான அறிஞர் இப்னு மன்ளூர் அவர்கள் எழுதியுள்ளார்கள்:القدوة و القدوة ما تسنت به ஒருவர் மற்றொருவரின் வழிமுறையை பின்பற்றுவதற்கு சொல்லப்படும்.قدوة: الاسوة இதற்கு முன்மாதிரி என்ற பொருளும் உண்டு.
குர்ஆனிலும் இந்த வார்த்தை தீனுடைய காரியங்களில் நல்லோர்களை பின்பற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
6:90 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ فَبِهُدٰٮهُمُ اقْتَدِهْ ؕ قُلْ لَّاۤ اَسْـٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٰى لِلْعٰلَمِيْنَ
6:90. இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக; “இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்று கூறுவீராக.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மரண நோயில் இருந்த போது
2) يقتدي ابوبكر بصلوة رسول الله و الناس مقتدون بصلوة ابى بكر
அபூபக்கர் (ரளி) அவர்கள் அண்ணலாரின் தொழுகையை பின்பற்றினார்.மக்கள் அபூபக்கர் (ரளி) அவர்களின் தொழுகையை பின்பற்றினார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/99,தலைப்பு:باب الرجل تاتم بالامام)
முஸ்னத் அஹ்மதில் ஹள்ரத் அபூவாயில் (ரஹ்) அவர்களின் வாயிலாக வரும் செய்தி
3) جلست إلى شيبة بن عثمان فقال جلس عمر بن الخطاب رضي الله عنه فى مجلسك هذا فقال لقد هممت أن لا أدع فيها صفراء ولا بيضاء إلا قسمته قلت إن صاحبيك لم يفعلا قال هما المرءان يقتدي بهما
நான் ஷைபா இப்னு உஸ்மான் (ரளி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன்.அவர்கள் கூறினார்கள்;நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த இடத்தில் உமர் (ரளி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.மேலும்
உமர் (ரளி) கூறினார்கள்;கஃபாவின் (திரையில் உள்ள ) தங்கம்,வெள்ளியை மக்கள் அனைவருக்கும் பங்கிட எண்ணுகிறேன்.அதற்கு ஷைஃபா (ரளி) அவர்கள் கூறினார்கள்; இவ்வாறு செய்ய தங்களுக்கு உரிமையில்லை.ஏனெனில் முந்திசென்ற உங்களது
தோழர்கள் (நபி ஸல் அவர்கள், அபூபக்கர் (ரளி) இவ்வாறு செய்யவில்லை அதற்கு உமர் (ரளி) அவர்கள் கூறினார்கள்; உண்மையில் இருவரும் அவ்வாறு இருந்தனர்.அவர்கள் இருவரை பின்பற்றப்படவேண்டும்.
4) முஸ்னத் அஹ்மதில் அனஸ் (ரளி) அவர்களின் வாயிலாக வரும் ஹதீஸ்
"இப்போது உங்களிடம் சுவனவாசியொருவர் வருவார்" என
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சபையில் கூறினார்கள்.அதன் பிறகு
அன்சாரி ஸஹாபி வந்தார்.இரண்டாவது மூன்றாவது நாளும் இவ்வாறே நடந்தது.இதன்பேரில் ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரளி) அவர்கள் அன்சாரி ஸஹாபியின் வீட்டிற்கு சென்றார்கள்.இரவில் (தகுந்த தங்கடத்தை கூறி) தங்குவதற்கு அனுமதி கேட்டார்.ஏனெனில் அன்சாரி ஸஹாபியின் அதிகமான வணக்கத்தை அறியவேண்டும்.
ஸஹாபியும் அனுமதி வழங்கினார்.எனினும் அவர் இரவில் தூங்கும்போது சில திக்ருகளை ஓதிவிட்டு பஜ்ர் வரை உறங்கினார்.அதனை சாதரணமாக கருதி ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளி அவர்கள் அன்சாரி ஸஹாபியிடத்தில் காரணத்தை அறிய கேட்டார்கள் فأردت أن اوى اليك لانظر ما عملك فاقتدى به فلم اراك تعمل كثير عمل
நான் உம்மடத்தில் வந்து தங்கியிருந்து உமது குறிப்பான அமலைக் கொண்டு உம்மைப் பின்பற்ற வேண்டுமென்று நினைத்தேன்.நீர் அதிகமான அமல்கள் செய்ய நான் பார்க்கவில்லை.(ஹதீஸின் சுருக்கமான கருத்து)
அனைத்து ஹதீஸ்களிலும் اقتداء (பின்பற்றுதல்) என்பது தீனுடைய காரியங்களில் ஒருவரை பின்பற்றுவது,பின்தொடர்வதற்கு வந்துள்ளது.இதற்கு பெயர்தான் தக்லீத் என்பதாகும்.
இரண்டாவது ஆதாரம்:
ஸஹீஹுல் புகாரி,முஸ்லிமில் உள்ள ஹதீஸ்
عن عبدالله بن عمرو بن العاص - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((إن الله لا يقبض العلم انتزاعًا ينتزعه من العباد، ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يُبْقِ عالمًا اتَّخذ الناس رؤوسًا جهالاً، فسُئِلوا فأفتوا بغير علم؛ فضلوا وأضلوا))
'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸின் மூலம் மார்க்கத்தில் தீர்ப்பளிப்பது மார்க்க அறிஞர்களின் பணி என்பதை புரியமுடிகிறது.பொதுமக்கள் மார்க்க சட்டங்களை அவர்களிடத்தில் கேட்டு அதன்படி அமல் செய்வது இதற்கு பெயர்தான் தக்லீத் என்பதாகும்.
கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்க அறிஞர்கள் இல்லாத
காலத்தையும்,கல்வி ஞானம் இல்லாதவர்கள் தீர்ப்பளிப்பார்கள் என்பதையும் முன்னறிவிப்பு செய்தார்கள்.இங்கு ஒரு கேள்வி எழுகிறது.அக்காலத்தில் மார்க்க சட்டங்களை அமல் செய்வதற்குரிய வழிமுறை என்ன? முன்சென்ற உலமாக்களை தக்லீத் செய்யவேண்டும்.ஏனெனில் குர்ஆன் சுன்னாவிலிருந்து சட்டங்களை ஆராய்ந்து கூறுபவர் இல்லையெனில் முன்சென்று அறிஞர்களின் நூல்கள்,மாற்று வழிகளின் மூலம் அவர்களை பின்பற்ற வேண்டும்.
No comments:
Post a Comment