மத்ஹபுகளின் அவசியம் தொடர்:5
குர்ஆனின் ஒளியில் தக்லீத்
மூன்றாவது ஆதாரம்:
9:122 وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَآفَّةً ؕ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآٮِٕفَةٌ لِّيَـتَفَقَّهُوْا فِى الدِّيْنِ وَ لِيُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ
9:122. முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.
இந்த வசனத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஜிஹாத் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.மாறாக ஒரு ஜமாஅத் இரவு பகல் மார்க்கத்தை அறிவதற்காக தங்களை அர்ப்பணித்து விடவேண்டும்.ஏனெனில் மார்க்கத்தை கற்காதவர்களுக்கு ஷரீஅத்தின் சட்டங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.அந்த ஜமாஅத்தினர் கூறியதை பொதுமக்கள் அமல்செய்யவேண்டும்.இதே போன்று அல்லாஹ்விற்கு மாறுசெய்வதிலிருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும்.இதற்கு பெயர்தான் தக்லீத்.
இமாம் அபூபக்ர் ஜஸ்ஸாஸ் (ரஹ்) அவர்கள் இந்த வசனத்தை விளக்கியவாறு கூறுகிறார்கள்:
فاوجب الحذر بانذارهم و الزم المنذرين قبول قولهم
அல்லாஹுதஆலா பொதுமக்களுக்கு கடமையாக்கியுள்ளான்.
உலமாக்கள் அவர்களுக்கு
(ஷரீஅத் சட்டங்களை கூறி) அறிவுறுத்தட்டும்.அவர்கள் அல்லாஹ்விற்கு மாறுசெய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ளட்டும்.(ஆதாரம் அஹ்காமுல் குர்ஆன்,262/2)
நான்காவது ஆதாரம்:
16:43 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ
16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).
இந்த வசனத்தில் அடிப்படை கற்றுத் தரப்படுகிறது.எந்த மக்கள் மார்க்க அறிவில்,கலைகளில் போதுமான ஞானம் இல்லையெனில் அதில் திறமை பெற்றவர்களிடம் கேட்டு அமல் செய்யவேண்டும்.
அல்லாமா ஆலூஸி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
و استدل بها أيضا على وجوب المراجعة للعلماء فيما لا يعلم فى الاكليل الجلال .............. السيوطى انه استدل بها على جواز تقليد العام فى الفروع
எதனை குறித்து போதுமான மார்க்க ஞானம் இல்லையோ அதில் உலமாக்களை அணுகவேண்டும் என்பதானது இந்த வசனத்திலிருந்து ஆதாரம் எடுக்கப்படுகிறது.ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்: பொதுமக்கள் கிளைச்சட்டங்களில் தக்லீத் செய்வது அனுமதியாகும்.(ஆதாரம்:ரூஹுல் மஆனி 14/148)
சந்தேகமும் நிவர்த்தியும்
இந்த வசனமானது குறிப்பான சம்பவத்தின் பின்னணி கொண்டது.இணைவைப்பாளர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுவத்தை மறுத்தவாறு கூறினார்கள்; "நம்மிடத்தில் வானவரை தூதராக ஏன் அனுப்பவில்லை?" என்பதாக கேட்டார்கள்.இதற்கு பதிலாக தான் வசனம் அருளப்பட்டது.
அஹ்லுத்திக்ர் என்பது சில முபஸ்ஸிரீன்கள் வேதக்காரர்கள் என்பதாக கூறுகிறார்கள்.சிலரிடத்தில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் முஸ்லிமானவர்கள்.சிலரிடத்தில் அஹ்லுல் குர்ஆன் (முஸ்லிம்கள்) என்பது கருத்தாகும்.எனவே வசனத்தின் முன்பின் கவனிக்கும்போது தக்லீத் என்பதை புரிய முடியவில்லை.
பதில்:இந்த வசனத்தின் கருத்தை சிறிது சிந்தித்தாலே தக்லீத் உண்டு என்பதை அறியமுடியும்.வசனத்தில் "அறிந்தவர் அறியாதவரிடத்தில் கேட்கவேண்டும்" என்பது அடிப்படையான விதி கூறப்படுகிறது.இதற்கு பெயர்தான்
தக்லீத் என்று கூறப்படும்.
விரிவுரை,பிக்ஹ் இன் விதியானது வசனங்களின் சட்டங்கள்,மஸாயில்களிலிருந்து வசனம் இறங்கிய பிண்ணனியில் குறிப்பான நிலைகளுக்குரியது என கருதாமல் பொதுவானது என்பதாக புரியவேண்டும் என்பதை குறித்து முன்னால் விரிவாக,தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான விளக்கம்:ஜமாலி ஹள்ரத் அவர்கள், விவாதத்தில் பீஜே அவர்களிடம் இமாம்களை தக்லீத் செய்வதற்கு இந்த வசனத்தை ஆதாரமாக எடுத்துவைக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி பீஜேவின் மறுப்பிற்கும் பதில் கொடுக்கிறார்கள்.எனினும்,பீஜே இறுதிவரை அதற்கு மறுப்பு கொடுக்கவில்லை.இதற்கான சுட்டியை பார்க்கவும்
மேலும் மார்க்கத்தை விளங்க இமாம்களின் உதவி தேவையா? என்ற விவாதத்தின் மூன்றாம் பாகத்தின் ஆரம்ப நிமிடங்களில்
பீஜே வைக்கும் வாதம்:
குர்ஆனை பெருமானார் தான் விளக்கவேண்டும்.வேறுயாரும் விளக்கமுடியாது.
நமது வாதம்:பீஜே அவர்கள் குர்ஆனுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு எழுதியுள்ளார்.அதுமட்டுமின்றி நிறைய வசனங்களுக்கு விளக்கமும் எழுதியுள்ளார்.எப்படி புரியவேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.குர்ஆனை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தான் விளக்கவேண்டும்.வேறு யாரும் விளக்கமுடியாது என்று கூறிவிட்டு விளக்கவுரை ஏன் எழுதவேண்டும்? பீஜே தன்னையே நபியாக எண்ணிக்கொண்டாரா? ஒவ்வொருவரும் ஆய்வு செய்து விளங்கிக்கொள்ள வேண்டியதுதானே?
எனவே அறியாதவர்கள் அறிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்பதன் மூலம் தக்லீத் என்பது தான் வலுப்பெறுகிறது.
No comments:
Post a Comment