மத்ஹபுகளின் அவசியம்
தொடர்: 8
தொடர்: 8
ஹதீஸின் ஒளியில் தக்லீத்
குறுக்கு கேள்வியும் நமது பதிலும்
ஸஹாபாக்களை பின்பற்றுவதன் அர்த்தமானது பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நிரூபணமான விஷயத்தில்தான்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நிரூபணமாகாத காரியங்களை ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்தியிருந்தாலும் மார்க்கமாகாது.பின்பற்றுதல் என்பது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வந்தது மட்டும்தான்.அண்ணலாரின் சுன்னத்திற்கு தோதுவாக,பொருத்தமாக இருப்பதுதான்.எனவே ஸஹாபாக்கள் மார்க்க ஆதாரமில்லை.எனவே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களில் (اقتداء) பின்பற்றுதல் என்பது தக்லீதை குறிக்காது.
நமது பதில்:
ஸஹாபாக்கள் மார்க்க ஆதாரம் என்பதற்கும் தக்லீத் செய்வதற்கும் வலுவான ஆதாரம்
ஸஹாபாக்கள் மார்க்க ஆதாரம் என்பதற்கும் தக்லீத் செய்வதற்கும் வலுவான ஆதாரம்
عن العرباض بن سارية رضي الله عنه، قال: وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب، وذرفت منها العيون، فقلنا يا رسول الله؛ كأنها موعظة مودع، فأوصِنا، قال: «أوصيكم بتقوى الله والسمع والطاعة، وإن تأمر عليكم عبد، وإنه من يعش منكم فسيرى اختلافاً كثيراً؛ فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، عضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور، فإن كل بدعة ضلالة
நபி (ஸல்) கூறினார்கள்:
நிச்சயமாக எனக்குப் பின்னால் வாழ்பவர்கள் ஏராளமான கருத்து வேறுபாடுகளைக் காண்பர். அப்போது உங்கள் மீது கடமையானது எனது சுன்னத்தையும் நேர்வழி நின்ற கலீஃபாக்களின் சுன்னத்தையும் பற்றிப் பிடிப்பதாகும். அவற்றைக் கடைவாய்ப் பற்களால் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் (மார்க்கத்தில்) நூதன காரியங்களை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள். நிச்சயமாக (மார்க்கத்தில்) புதியவை அனைத்தும் பித்அத்துக்களாகும் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் ஆகும்.
[ஹதீஸின் ஒரு பகுதி]
(ஆதாரம்:அஹ்மத், அபூதாவூது, திர்மிதீ, இப்னு மாஜா)
இந்த ஹதீஸ் பல்வேறு அறிவிப்பாளர்கள் தொடருடன் ஆதாரப்பூர்வமாக வந்துள்ளது.அதில் ஒரு அறிவிப்பாளர் தொடரை மட்டும் ஆய்வு செய்வோம்.
அறிவிப்பாளர் தொடர்
1)அபுல் அப்பாஸ் முஹம்மத் இப்னு யஃகூப்
(தத்கிரதுல் ஹுப்பாள் 73/3)
அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள் பலமானவர் என்பதாக கூறுகிறார்கள்.
2)அப்பாஸ் இப்னு முஹம்மத் தவ்ரி
ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) பலமானவர்,ஹாபிள் என்பதாக கூறுகிறார்கள்.(தக்ரீப் 191)
3)அபூஆஸிம் ளஹ்ஹாக் இப்னு முஹ்லத்
ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் பலமானவர்,வலுவானவர் என்பதாக நற்சான்று தந்துள்ளார்.(தக்ரீப் 179)
4)ஸவ்ர் இப்னு யஜீத்
இப்னு ஸஃத்,அஹ்மத் இப்னு ஸாலிஹ்,யஹ்யா இப்னு ஸயீத், ஈஸா இப்னு யூனுஸ்,வலீத் இப்னு முஸ்லிம், இப்னு மயீன்,முஹம்மத் இப்னு அஃவ்ப், நஸாயி, அபூஹாதிம், இப்னு அதி, இப்னு ஹிப்பான், இஜ்லி,ஸாஜி போன்ற அறிஞர்கள் பலமானவர் என்பதாக நற்சான்று அளித்துள்ளனர்.(தஹ்தீபுத்தஹ்தீ ப் 1/172)
5)ஹாலித் இப்னு ஸஃத்
இஜ்லி,யஃகூப் இப்னு ஷைஃபா, முஹம்மத் இப்னு ஸஃத்,இப்னு கராஷ், நஸாயி,இப்னுஹிப்பான் போன்ற அறிஞர்கள் பலமானவர் என்பதாக சான்று அளித்துள்ளனர்.
(தஹ்தீப் 3/119)
6) அப்துர்ரஹ்மான் இப்னு அம்ர் ஸலமி
ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் ஏற்கத்தக்கவர் என்பதாக கூறியுள்ளார்கள்.(தக்ரீப் 234)
7)ஹழ்ரத் இர்பாள் இப்னு ஸாரியா ஸஹாபி
(தஜ்ரீது அஸ்மாவுஸ்ஸஹாபா லித்தஹபி 1/407)
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எனது வழிமுறையையும்,எனது குலபாயே ராஷிதீன்களின் வழிமுறையையும் பின்பற்றுங்கள் என்பதாக கூறிய வாசகத்தை ஊன்றி கவனித்தால் எதார்த்தம் எளிதாக புரியும்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் மட்டும் மார்க்க ஆதாரமாக இருந்தால் குலபாயே ராஷிதீன்களின் சுன்னத் என்பதை தனித்து ஏன் கூறவேண்டும்?
மது அருந்தியவனுக்கு தண்டனை குறித்து ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நாற்பது கசையடி கொடுத்தார்கள்.ஹள்ரத் அபூபக்கர் ரளி அவர்கள் நாற்பது கசையடி கொடுத்தார்கள்.ஹள்ரத் உமர் ரளி அவர்கள் எண்பது கசையடி கொடுத்தார்கள்.(இதில்) ஒவ்வொன்றும் சுன்னத்து தான்.(ஆதாரம் முஸ்லிம் 2/72)
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்.ஹள்ரத் உமர் (ரளி) அவர்களின் அமலானது வெளிப்படையில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு எதிரானது.எனினும்,அலி (ரளி) அவர்கள் அதனை சுன்னத் என்பதாக கூறுகிறார்கள்.எனவே கலீபாக்களின் சுன்னத்தும் ஆதாரம் என்பதும், நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நிரூபணமாகாத காரியத்தில் அவர்களை பின்பற்றலாம் என்பதை புரிய முடிகிறது.
இரண்டாவது ஆதாரம்:
எனது உம்மத்தினர் 73 பிரிவினராகப் பிரிவார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர ஏனைய அனைவரும் நரகம் செல்வர் என்று கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதரே அவர்கள் (அந்த ஒரு கூட்டம்) யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் நானும் எனது ஸஹாபாக்களும் இருக்கின்ற இந்த கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி)
( நூல்:திர்மிதீ)
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை மட்டும் கூறலாம் ஸஹாபாக்களின் வழிமுறையை தனித்து கூறப்பட்டுள்ளது.
ஸஹாபாக்களையும் பின்பற்றவேண்டும்.அவர்களின் வழிமுறையும் மார்க்க ஆதாரமாக உள்ளது என்பதையும் புரியமுடிகிறது.
சந்தேகமும் நிவர்த்தியும்
இந்த ஹதீஸின் மற்றொரு அறிவிப்பாளர் தொடரில் "நபியவர்கள்,இன்றைய தினம் நானும் எனது ஸஹாபாக்களும் இருக்கின்ற இந்த கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸின் மற்றொரு அறிவிப்பாளர் தொடரில் "நபியவர்கள்,இன்றைய தினம் நானும் எனது ஸஹாபாக்களும் இருக்கின்ற இந்த கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள்.
எனவே ஸஹாபாக்களை பின்பற்றுவதன் அர்த்தமானது பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நிரூபணமான விஷயத்தில்தான்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நிரூபணமாகாத காரியங்களை ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்தியிருந்தாலும் மார்க்கமாகாது என்பதை புரிய முடிகிறதே?
இன்றைய தினம் எனும் வாசகம் உள்ள அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானதா?
என்பதை ஆய்வு செய்துதான் கூறமுடியும்.எனினு ம்,ஒரு வாதத்திற்கு ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அவர்களுக்கும் முழுமையான ஆதாரமாகாது.ஏனெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஓர் அமலில் தெளிவான ஆதாரமில்லை.எனினும்,
ஸஹாபாக்கள் அதனை அமல்செய்துள்ளனர். நாமும் அமல் செய்யலாம் என்பதை தான் இந்த ஹதீஸும் பேசுகிறது.எனவே இதன்பேரில் அமல் செய்ய மத்ஹப் மறுப்பாளர்கள் தயாரா? இந்த ஹதீஸும் அவர்களுக்கு எதிரான ஆதாரமாக உள்ளது.
இதனை எளிதாக புரிந்து கொள்ள ஓர் ஆதாரம்: (இணையத்தில் இருந்து எடுத்த தகவல்)
//ஒரு வருடம் பூர்த்தியாகாதவரை ஜகாத் இல்லை!
அபுதாவூத், பைஹகீ 4\95, 4\137 ஆகிய நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. “ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை” என்ற ஹதீஸை விமர்சித்து,
ஏகத்துவம் கூறுகிறது:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமானவர்கள் இடம் பெறுவதால் இது ஆதாரப்பூர்வமானது என நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றனர். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதைக் கவனித்த அல்பானீ இதிலுள்ள மற்றொரு குறைபாட்டைக் கவனிக்கத் தவறி விட்டார்.
எனவே இதுபற்றி விரிவாக நாம் விளக்கியாக வேண்டும். இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.
1. அலீ
2. ஹாரிஸ் அல் அஃவர் – ஆஸிம் பின் ளமுரா
3. அபூ இஸ்ஹாக்
4. ஸுஹைர்
5. அப்துல்லாஹ் பின் முஹம்மது
(திரும்பவும் எழுதியுள்ளனர்) அதாவது அப்துல்லாஹ் பின் முஹம்மது என்பவர் தனக்கு ஸுஹைர் கூறியதாகத் தெரிவிக்கிறார். ஸுஹைர் என்பவர் தனக்கு அபூ இஸ்ஹாக் கூறியதாகக் குறிப்பிடுகிறார். அபூ இஸ்ஹாக் என்பவர் தனக்கு ஆஸிம், ஹாரிஸ், ஆகிய இருவர் கூறியதாகக் கூறுகிறார். ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவரும் தமக்கு அலீ(ரழி) கூறியதாக குறிப்பிடுகிறார்கள்.
இந்தத் தொடரில் அலீ(ரழி) அவர்களிடம் கேட்ட இருவரில் ஹாரிஸ் என்பவர் பெரும் பொய்யர் என்றாலும் அவர்களிடம் செவியுற்ற மற்றொரு அறிவிப்பாளர் ஆஸிம் பின் ளமுரா என்பவர் ஏற்கத் தக்கவராவார். எனவே இந்த அடிப்படையில் இரு சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாக அமைந்து விடுகின்றது. எனவே இது சரியான அறிவிப்புத்தான் என்று அல்பானி கூறுகிறார்.
ஆனாலும் அலீ(ரழி) அவர்கள் தமது சொந்தக் கூற்றாக இதைக் கூறினார்களா? அல்லது நபி(ஸல்) அவர்கள் கூற்றைத் தெரிவிக்கிறார்களா? இது பற்றி மேற்கண்ட ஹதீஸில் திட்டமாகக் கூறப்படவில்லை.
அலீ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக் கூறுவதாகத்தான் நினைக்கிறேன். என்று ஸுஹைர் என்பவர் யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது . நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அதை அலீ(ரழி) அவர்கள் தெளிவாகக் கூறி இருக்க வேண்டும். ஆனால் ஸுஹைர் என்பவர் யூகமாகக் கூறுவதால் இது நபிமொழியாக ஆகாது.
எனவே இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இக்கூற்று அலீ(ரழி) அவர்களின் சொந்தக்கூற்றே ஆகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது.
ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக். 39,40//
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடந்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது ஒரு வாதத்திற்கு அலி (ரளி) அவர்களின் கூற்று என வைத்துக்கொள்வோம்.அதே சமயத்தில் ஜகாத் கொடுக்க தேவையில்லை என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.மேலும் அலி (ரளி) அவர்களின் கருத்திற்கு எதிரான ஆதாரமும் இல்லை.பீஜேவின் வாதம் ஜகாத் கொடுக்க தேவையில்லை.இப்பொழுது அலி (ரளி) அவர்களின் சொல்லை எடுப்பதா? அல்லது பீஜேவின் சொல்லை எடுப்பதா? எது அறிவார்ந்த செயல்? நிச்சயமாக அலி (ரளி) அவர்களின் சொல்லை எடுத்து அமல் செய்வதுதான் பொருத்தமானது என்பதை உண்மையான முஃமீன் மறுக்கமுடியாது.
No comments:
Post a Comment